Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

பாடல் வரிகள் எந்த தளங்களில் இருந்து எடுக்கிறீர்கள்?

2 hours ago, ஈழப்பிரியன் said:

 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

வயது போனாப்பிறகு எல்லாம் கஸ்டம் எண்டு சொன்னாலும் சனத்துக்கு விளங்குதேயில்லை...😁

 

  • Replies 130
  • Views 75.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ..

  • கருத்துக்கள உறவுகள்

படம்: வா இந்தப் பக்கம் (1981)
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி

ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ..

உண்மையில் என் மயில் ஆடுமுன்...ஆடுமுன்
பொன் மழைக்காலம் போய்விடும்...போகட்டும்
ஆசை ஆறி விட நேர்ந்திடும்..நேருமோ
ராத்திரி அலைகள் ஓயட்டும்..ஓயுமோ
மூத்தவர் தலைகள் சாயட்டும்..சாயுமோ
தீபத்தின் விழிகள் மூடட்டும்..மூடுமோ
ஆடை கொடு..ஆளை விடு
தேகம் தொடு..போதும் விடு
தாகம் ஊறுதே
வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

ஆனந்த தாகம்...

கன்னியின் மேனி வேர்க்குதே...ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே...அட ராமா
பேசும் ஓசையொன்று கேட்குதே...கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே...தூண்டாதே
அணைகளை வெள்ளம் தாண்டாதே... தாண்டாதே
ஆசை நாகம் வந்து தீண்டுதே..தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது...தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே

ஆனந்த தாகம்...லாலால லாலா..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
லாலால லாலா லாலலா..
நாணம் தோற்குமே..லாலா லாலலா..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
ஆஆ ஆஅஆ..நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
லாலா லாலலா...

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

கவனம்! தேடித் திறக்கும்போது கவனமாகத் திறக்கவேண்டும். கண்டதையும் திறக்கமுயன்றால்  சிலது கணனியின் செயற்பாடுகளையே குழப்பிவிடும்...... அனுபவம். 😲 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கவனம்! தேடித் திறக்கும்போது கவனமாகத் திறக்கவேண்டும். கண்டதையும் திறக்கமுயன்றால்  சிலது கணனியின் செயற்பாடுகளையே குழப்பிவிடும்...... அனுபவம். 😲 

எவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.  விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள  முடியும்.
பலான விடயங்களை தேடும் போது  ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது  மறைத்து விடுங்கள்.  இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்;   கப்ப அழைப்பு கூட வரும்.  ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள்.
un-freeze   பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில்  கொல்ல வேண்டியிருக்கும்.
அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில்  தான் எவ்வளவு பிரச்சனைகள் ….

 

Edited by சாமானியன்
spelling

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இதழே இதழே தேன் வேண்டும் 
இடையே இடையே கனி வேண்டும் 
இது போல் எல்லாம் வேண்டும் 
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும்  
.
ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி 
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி 

ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் 

தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி 
.
(இதழே இதழே )
.
நீராடும் துறை என்று நீ இருக்க 
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க 
தீராத தாகங்கள் தீர்த்து விடு 
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு 
.
(இதழே இதழே )
.
கல்யாண காலத்தில் பல கனவு 
கை கூடும் நேரம் தன் முதல் இரவு 
நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு 
ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு 

Please help me...

(இதழே இதழே ) 

10 hours ago, ஈழப்பிரியன் said:

 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

சில தளங்களில் copy பண்ண முடிவதில்லை தான். கைபேசியில் இது இன்னும் கடினமாக இருக்கலாம்.

வேறு தளங்களில் அல்லது உங்கள் கணினியில் முயற்சித்துப் பார்த்தீர்களா அண்ணா?

 

90களின் இளைஞர்களின் காதல் தேசிய கீதம்:

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வு

காற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமா

உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்

காதல் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே

'உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காமமே' என்று வந்திருந்தால்..... அது நடைமுறைக்கு முரன்பாடில்லாத யதார்த்தமாக இருக்கும்போல் தோன்றுகிறது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.🙏🙏🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா…
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா…

இளமை இது எங்கும் வயது
இரு விழியும் தூங்காது..
இனிமை சுகம் வாங்கும் மனது
இனியும் இது தாங்காது…
இளமேனி வாடுதே தனலாகவே… (ஹா… )
இளங்காற்று வீசுதே அனலாகவே
பதில் இல்லையோ தர…னா…ன…ன..னா…
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா…

அருவி என ஆசை எழுந்து
அணைக்கும் சுகம் பார்க்காதோ…
உருகும் மனம் உன்னை நினைந்து
உணர்வுகளை சேர்க்காதோ…
உனக்காகவே ஏங்குதே ஒரு பூவுடல்..
உறவாடும் இன்பமோ திருப்பாற்கடல்
பதில் இல்லையோ தர..னா..ன…ன..னா…
பொன்மேனி உருகுதே என் ஆசை…(ஹா ) …பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… 

 

 

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தழுவாத கைகள்(1986)
இசை :
இளையராஜா
பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி

வரிகள்: கங்கை அமரன்

தொட்டுப் பாரு குத்தமில்ல
ஜாதி.. முல்லை..
சின்ன.. புள்ள..
காமன்.. தொல்லை..
காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
தொட்டுப் பாரு குத்தமில்ல..

பலகாரமும் சூடாறுது
பரிமாறவா.. பசியாகுது
பலகாரமும் சூடாறுது
பரிமாறவா.. பசியாகுது
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சுவிடு இலைய கண்ணே
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சுவிடு இலைய கண்ணே
இது போதுமா வேணுமா
உன் பசி ஆறுமா
வேணும் வேணும் வேகம் தீராதம்மா

தொட்டுப் பாரு.. ஹக்..ஹ குத்தமில்ல

நடு ராத்திரி பயமாகுது
துணையாக வா குளிராகுது
நடு ராத்திரி பயமாகுது
துணையாக வா குளிராகுது
விறு விறுன்னு இறங்குதய்யா
விளைஞ்ச மனம் கிறங்குதய்யா
விறு விறுன்னு இறங்குதய்யா
விளைஞ்ச மனம் கிறங்குதய்யா
விளையாட வா கூடவா
வேடிக்கை காட்டவா
ஆத்தா ஆத்தா
பாத்தா போதாதய்யா..

தொட்டுப் பாரு
ஹ்..ஹா
குத்தமில்ல
ஜாதி முல்லை சின்ன புள்ள
காமன் தொல்லை
காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
தொட்டுப் பாரு குத்தமில்ல..

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. காமினி.. ஓ காமினி- பாடல் 7.54ல் தொடங்கி 11.15ல் முடிகிறது.. 

படம்: Rang Rasiya 2014

பாடியவர்: Sonu Nigam 

Do you remember our first meeting.That first rain of the creation [the universe] . You were the earth, thirsty for eras, and clouds of love had you all covered,

On your heated up body,

The cloud-messengers that rained, were all mine.. 

O kamini .. O kamini...

[Kaamini can be a name as well, but I've used the meaning of the word here.]

In the temple of your body, my heart got lost.The sleeping dream awoke.. 

Your eyes are looters,

I have lost my mind,

In one stretch, you create hundreds of waves (in me) O maiden, make my luck, O loving woman..

Your body is the mirror of maya [or illusion]. I dedicate this rainbow to you..

Come, O enemy, I want to cover myself with you,

The way the earth covers itself with the blue sky,

We'd meet, this was decided,

ever since there was no shine in the stars.[i.e. ever since the beginning of time.] Don't think what the morality says,

Come, flow in my streams..O kamini...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஓ.. காமினி.. ஓ காமினி- பாடல் 7.54ல் தொடங்கி 11.15ல் முடிகிறது.. 

படம்: Rang Rasiya 2014

இந்த படம் ஓவியர் ராஜா ரவி வர்மாவை பற்றியது.. ஓவியர்களின் வாழ்க்கையில் வர்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும், காதல், காம ரசனைகளுக்கும் குறைவு இருக்காது. இந்த பாடலுக்கு தமிழிலில் வரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகையால் ஆங்கிலத்தில் வந்த மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன் ..

Sonu Nigamன்  “ஓ காமினி” குரல் உங்களை கற்பனை உலகத்திற்கு அழைத்து செல்லும்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2019 at 1:28 AM, ஈழப்பிரியன் said:

அகஸ்தியன் பாடல் வரிகளை எங்கே இருந்து எடுக்கிறீர்கள்.

நான் ஓரிரு தளங்களில் முயன்றேன் காப்பி பண்ண முடியவில்லை.

ஈழப்பிரியன், இந்த பாடல் வரிகள் கூகிளில் இருக்கவில்லை. you tube இல் பாடல் வரிகளை எடுத்தேன். இந்த திரியை ஆரம்பித்ததிற்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2019 at 5:58 PM, ஈழப்பிரியன் said:

 

நீங்கள் எழுதியது போலவே செய்து பார்த்தேன்.முழு பாட்டும் தமிழில் வருகிறது.ஆனாலும் காப்பி பண்ண முடிவதில்லை.

அவ்வளவு பெரிய தில்லாலங்கடி .. வேலை எல்லாம் இல்லை தோழர்..

முதலில் பாட்டு வரும் பக்கத்தை திறந்து  file save as போட்டு கணனியில் சேமித்துவிடுங்கள் . அவ்வாறு சேமிக்கும் போது கூடவே .js பைல்களும் சேர்ந்து இறங்கும்.. அதில் copy  என இருந்தால்

$('body').bind('cut copy paste', function (e) { e.preventDefault(); }); //Disable mouse right click $("body").on("contextmenu",function(e){ return false; }); });{≠=மாற்ற வேண்டும்

என இருப்பதை return true; என மாற்றி விட்டு save செய்யுங்கள் ; இப்போது வேலை செய்யும்..☺️

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவ்வளவு பெரிய தில்லாலங்கடி .. வேலை எல்லாம் இல்லை தோழர்..

முதலில் பாட்டு வரும் பக்கத்தை திறந்து  file save as போட்டு கணனியில் சேமித்துவிடுங்கள் . அவ்வாறு சேமிக்கும் போது கூடவே .js பைல்களும் சேர்ந்து இறங்கும்.. அதில் copy  என இருந்தால்

$('body').bind('cut copy paste', function (e) { e.preventDefault(); }); //Disable mouse right click $("body").on("contextmenu",function(e){ return false; }); });{≠=மாற்ற வேண்டும்

என இருப்பதை return true; என மாற்றி விட்டு save செய்யுங்கள் ; இப்போது வேலை செய்யும்..☺️

 

நன்றி புரட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது


கனவு ஏன் வந்தது?
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ


பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது


மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது...
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் வரிகளை இணைக்கும் அனைவருக்கும் மிக மிக நன்றிகள்...
பாட்டின் வரிகளை இரண்டுக்கு ...மூன்றுமுறை வாசிக்கும் போது பல பல ...பாலான கற்பனைகள் எழுவதை தவிர்க்க முடியவவில்லை அதே போல வரிகளில் உள்ள கவி நயம் அருமை... 👌👍

"மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது"

.......

காமன் தொல்லை தாங்கவில்லை மாமா
தொட்டுப் பாரு குத்தமில்ல..

பலகாரமும் சூடாறுது
பரிமாறவா.. பசியாகுது
பலகாரமும் சூடாறுது
பரிமாறவா.. பசியாகுது
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சுவிடு இலைய கண்ணே
விருந்திருக்கு எனக்கு முன்னே
விரிச்சுவிடு இலைய கண்ணே
இது போதுமா வேணுமா
உன் பசி ஆறுமா
வேணும் வேணும் வேகம் தீராதம்மா

.......

நீராடும் துறை என்று நீ இருக்க 
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க 
தீராத தாகங்கள் தீர்த்து விடு 
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு 

கல்யாண காலத்தில் பல கனவு 
கை கூடும் நேரம் தன் முதல் இரவு 
நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு 
ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா

Movie Adimai Penn Music K. V. Mahadevan
Year 1969 Lyrics Pulamaipithan
Singers P. Susheela, S. P. Balasubramaniam
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர
புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
(ஆயிரம்)

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ
(ஆயிரம்)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
(ஆயிரம்)

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ
(ஆயிரம்)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ
(ஆயிரம்)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

 
படம் : மதனமாளிகை
குரல் : ஜேசுதாஸ், P.சுசீலா
இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்
நடிகர்கள் : சிவகுமார், அல்கா


ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது - அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..

(ஏரியிலே)

மாலையிலே வரும் மன்னனுக்கென்றே
மன்மத ஆராதனை - அந்த
மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..
மங்கல நீராடுது..
ஆ..ஆ..

(ஏரியிலே)

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே

கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும் ?😋

காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்

(ஏரியிலே)

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

(ஏரியிலே)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து. 

ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..அ.. ஏய்... 

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக...
என் பாவாடப் பூவில் நான் காம்பாக.
காம்பாக,வந்தேன் வீம்பாகஹ்,உன் வீட்டில் இன் நேரம் ஆள் இல்லையே.. ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே..ஹ் அடி செவ்வாழையே,ஏ ஏ ஏ ஏ எஹ்..
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே,குலை ரெண்டு தள்ளாதோ,
வா முல்லையே..... 

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட.. 
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ?
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ?
நழுவாதோ?வண்டு தழுவாதோ?ஒ..
நீர் சொட்ட நின்றாலே,ஜலதோஷம் தான்..
நீ இங்கு போடாதே,பகல் வேஷம் தான்...
இளம் பூஞ்சோலையே.....ஏ.....அ.. ஏய்...
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ?
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான். 

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து..
தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து..
ஏ...தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து. 
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட....
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து. 

ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..அ.. ஏய்... 

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக...
என் பாவாடப் பூவில் நான் காம்பாக.
காம்பாக,வந்தேன் வீம்பாகஹ்,உன் வீட்டில் இன் நேரம் ஆள் இல்லையே.. ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே..ஹ் அடி செவ்வாழையே,ஏ ஏ ஏ ஏ எஹ்..
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே,குலை ரெண்டு தள்ளாதோ,
வா முல்லையே..... 

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட.. 
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ?
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ?
நழுவாதோ?வண்டு தழுவாதோ?ஒ..
நீர் சொட்ட நின்றாலே,ஜலதோஷம் தான்..
நீ இங்கு போடாதே,பகல் வேஷம் தான்...
இளம் பூஞ்சோலையே.....ஏ.....அ.. ஏய்...
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ?
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான். 

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து..
தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து..
ஏ...தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து. 
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட....
 

இந்தாழுக்கு இளமை இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்ற நினைப்பு

தங்கைக்கோர் கீதம் படப்பாடல்

இது ராத்திரி நேரம்...
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்.
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.
ஹா என்னங்க ... ம்ம்ஹும் . என்னங்க.
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.
ஹா என்னங்க ... ம்ம்ஹும் . என்னங்க.
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.
இது ராத்திரி நேரம்...
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்.
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.
ஹா என்னங்க ... ம்ம்ஹும் . என்னங்க.
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.
மாடிப்படியிலே ஏறி இறங்கினேன் காலவலிக்குது
அமுக்குங்க... கால அமுக்குங்க...
ஹா... பத்து பாத்திரம் தேச்சி கழுவினேன் கைய வலிக்குது
சொடுக்குங்க கைய சொடுக்குங்க...
சொன்னதை செய்றேண்டீ... சொன்னதை செய்றேண்டீ...
என்னையும் பாரேண்டீ... என்னையும் பாரேண்டீ.
ஹா. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க
ஹா. ஐஸ் வைக்கிறீங்க நீங்க நைஸ் பண்ணுறீங்க
இது ராத்திரி நேரம்...
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்.
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.
ஹா என்னங்க ...(ஆ.) ம்ம்ஹும் . என்னங்க. (ம்ம்.ஹும்)
ஹா தள்ளுங்க...(ம்ம்...) கொஞ்சம் தள்ளுங்க.
பொழுது சாய்ஞ்சா காலபிடிப்பதும்
பொழுது விடிஞ்சா கழுத்த நெறிப்பதும்
ஆண் ஜாதி. உங்க ஆண் ஜாதி...
படுக்கை அறைதனை சட்டசபை ஆக்கி
தேவையை எல்லாம் அமுலாக்கிக்கொள்ளும்
பெண் ஜாதி... உங்க பெண் ஜாதி...
ஹ. சொல்லுறது வாயால. செய்யுறது ஏதுமில்ல.(ஹேய்.)
சொல்லுறது வாயால. செய்யுறது ஏதுமில்ல.
சும்மா சொல்லலடீ எனக்கு சம்பளம் பத்தல டீ.
அட சும்மா சொல்லல டீ எனக்கு சம்பளம் பத்தல டீ...
இது ராத்திரி நேரம்...
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்.
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.
ஹா என்னங்க ... ம்ம்ஹும் . என்னங்க.
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க.
தூங்குற புள்ளைங்க முழிச்ச தொல்லை
சீக்கிரம் வாயேண்டீ வாடாத முல்லை.
ஆண் பாவம் ... வேண்டாம் பிடிவாதம்.
ஹா. ரெண்டுக்குமேலே வேணாமுன்னு நாடே சொல்லுது
நாடாதீங்க... ம்ம்ஹும்ம்... நாடாவை தொடாதீங்க.
லைட்டை அணைக்கட்டுமா... லைட்டா அணைக்கட்டுமா
லைட்டை அணைக்காதீங்க ... லைட்டா அணைக்காதீங்க
இது ராத்திரி நேரம்...
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மம்மமமா
என் தூக்கத்த காணும்.
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா.
ஹா என்னங்க ...(ஹா.) ம்ம்ஹும் . என்னங்க.(ஹா)
ஹா தள்ளுங்க...(ஹா.) கொஞ்சம் தள்ளுங்க.
ஹா அஹ்ஹாஹா... ஆஹா.ஹா...
அஹ்ஹாஹா... ஆஹ.ஹா...
On 8/22/2019 at 3:58 PM, Sasi_varnam said:

ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன?
இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற என்ற அலசலே இந்த திரிக்கான "உண்மையான" காரணம்.

இப்போதைய காலத்தில் மாற்றமும் புதிய தேடல்களும் இருக்கின்றது.. தேங்காய் மாங்காய் வண்டு செண்டு தண்டு என்று கண்ணில் பட்டதில் எல்லாம் பெண்ணையும் காதலையும் காமத்தையும் உணரும் தன்மைகள் மாறிவிட்டது என்பது எனது அபிப்பிராயம்.  

காதலுக்கு ஒரு பாடல் -  இது சங்க இலக்கிய குறுந்தொகை கலந்த பாடல் . கீழ் உள்ள விளக்கம் பாடல் காணொளியின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது. 

Quote

 

யாய்=தாய்

ஞாய்=தாய்

எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்

செம்புலம்=செம்மண் நிலம்

பெயல்நீர்=மழை "

உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".

 

 

இவ்வாறன பாடல்களை கேட்கும் போது சங்க இலக்கியங்கள் நிறைய பாடல்களில் வரவேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது. 

 

 

 

 

 

Edited by சண்டமாருதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.