Jump to content

பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் - பிரதமர் ரணில் கவலை


Recommended Posts

“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.''

முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் நேற்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி - நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் - இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.

இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” - என்றார்.

https://youtu.be/NY6aA6pLJRs

https://youtu.be/6rTBSPGBkKk

https://www.tamilwin.com/community/01/226783?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுற மாதிரி அழுறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடாவடியில் ஈடுபடும் பேரினவாத பிக்குகளுக்கு கடிவாளம் பூட்டவும்!

 

imageproxy.jpg

ஜனாதிபதியிடம் வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து
'' அன்பையும், அஹிம்சையையும் போதித்து தர்மத்தின் வழியில் வாழ
வேண்டிய பௌத்த துறவிகளில் ஒரு சிலர் காவி உடையை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்திக்கொண்டு  அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை விதைத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல நாட்டில் சட்டம், ஒழுங்கையும் மதித்து செயற்படாமல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அரங்கேறிய அடாவடி சம்பவம் மற்றுமொரு சாட்சியாகும்.’’

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி, முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்ஆலய வளாகப் பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வேலுகுமார் எம்.பி.  இன்று (24.09.2019) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பௌத்த மதமும் அதன் கோட்பாடுகளும் மற்றும் புத்த பெருமானின் தர்ம சிந்தனைகளும் உலக நீதிக்கு வழிகாட்டுகின்றன. மனித சமுகத்தையும் நல்வழிப்படுத்துகின்றன. இதன்காரணமாகவே ஏனைய மதத்தவர்களும் பௌத்த சமயத்தை மதித்து செயற்படுகின்றனர்.

ஆனால் ‘காவி’ உடை அணிந்து கொண்டு புத்தரின் பெயரில் ஒரு சில பௌத்த துறவிகள் அதர்ம வழியில் செயற்பட்டு ஏனைய மதத்தவர்களை அடக்கி ஆளவே தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். புத்த பெருமான் இருந்திருந்தால் இத்தகைய பேரினவாத பிக்குகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்படும் சம்பவங்களைக்கண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பார்.  அந்தளவுக்கு சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுத்து – நீதிமன்ற கட்டளைகளையும் மதிக்காமல் அடாவடியில் ஈடுபட்டு நாட்டில் காட்டாட்சியை ஏற்படுத்த களம் அமைத்துவருகின்றனர்.

பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்வதற்கான முயற்சியை மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுத்திருந்தால் சிலவேளே விட்டுக்கொடுப்புகளைகூட சம்பந்தப்பட்ட தரப்புகள் செய்திருக்கலாம். ஆனால், சண்டித்தனம் காண்பித்து, மக்களை மிரட்டி பௌத்த மேலாதிக்கத்தை முல்லை மண்ணில் விதைக்க இனவாத பிக்குகள் முற்பட்டதாலேயே சட்டத்தின் பாதுகாப்பை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்படி ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்றும், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரேயுள்ள  இராணுவ முகாமுக்குப் பின்புறமாக, கடற்கரைப் பகுதியில் நீதிமன்றம் அடையாளப்படுத்தும் இடத்திலேயே சடலத்தை எரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் அதனை அப்பட்டமாகமீறும் வகையில் ஆலயத்துக்கு அருகேயுள்ள கேணி அமைந்துள்ள இடத்தில் பிக்குவின் உடலை எரிப்பதற்கு ஞானசார தேரர் தலைமையிலான பேரினவாத இனவாத கும்பல் நடவடிக்கை எடுத்திருந்தது. அதுமட்டுமல்ல சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தியுள்ளனர். பௌத்த பிக்குகளின் இந்த செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதுடன் சட்டத்தின் பிடிக்குள் இருந்தும் தப்பவேகூடாது. அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிப்போம்.

பௌத்த பிக்குகள் என்ற போர்வையில் சிலர் தொடர்ச்சியாக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை குழப்பி மத முறுகலை ஏற்படுத்த முயற்சித்துவருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டமும் தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக செயற்பட்டாலும் அரசியல் தலையீடுகள் காரணமாக தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இதனால் சட்டம் அனைவருக்கும் சமனானது என்ற நீதிக்கோட்பாடும் மீறப்படுகின்றது.

குறிப்பாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். வெளியில் வந்த பின்னர் அவர் தற்போது என்ன செய்கின்றார்? மீண்டும் பழைய வழியிலேயே பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனவே, பௌத்த மதத்தை மதிக்கும் உண்மையான அரச தலைவன் என்றால் பௌத்த தர்மத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இனியாவது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.  பேரினவாதிகளுக்கு கடிவாளம் பூட்ட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையை மீண்டும் இருண்ட யுகம் சூழ்ந்துக்கொள்ளும் நிலைமையே உருவாகும்.

அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால், ஏனைய மதங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு மதத்தை ஆக்கிரமித்து - அழித்துதான் பௌத்த மதத்தை நிலைநாட்ட வேண்டும் என புத்தரும் கூறவில்லை. எனவே, இனவாத பிக்குகள் எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர். இதன் பின்னணி என்ன? இவர்களை இயக்கும் சக்திகள் எவை? என்பன கண்டறியப்படவேண்டும்.  '' என்றார்.

https://www.madawalaenews.com/2019/09/blog-post_838.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, போல் said:

இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.''

ஒரு நாட்டின் பிரதமர் கையில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு இப்படி கைவிரிப்பதை விட பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகள் என்பற்கு இதுவொன்றே போதும்.

நீதிமன்ற உத்தரவை மீறியோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலீசை என்னவென்பது.

இதுக்காகவே தலைவர் பிரபாகரன் போலிசுக்கான உடுப்பையே மாற்றினார்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

நீதிமன்ற உத்தரவை மீறியோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலீசை என்னவென்பது.

அனைவரையும் தூக்கிலிட வேண்டும்!

Link to comment
Share on other sites

சார் வெட்கி தலை குனிய நீங்கள் மணப்பெண்  கிடையாது. நாட்டின் பிரதமர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

சார் வெட்கி தலை குனிய நீங்கள் மணப்பெண்  கிடையாது. நாட்டின் பிரதமர்

இலங்கையில் ரெண்டும் ஒண்டுதான் 😂

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

இலங்கையில் ரெண்டும் ஒண்டுதான் 😂

இலங்கையில் மட்டுமல்ல. வீட்டிலும் அதே நிலை தான் திருமணத்தின் போது வெட்கி தலை குனிந்து நிண்டவ தான் இப்ப எங்க வீட்டில் பிரதமர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த பிக்குகளை சிங்கள் அரசாலோ, நீதித்துறையாலோ அல்லது முப்படைகளாலோ கட்டுப்படுத்த முடியாதென்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

அதேபோல, தமிழருக்காகப் பேசவேண்டிய தேவை பிராந்தியப் பிணந்திண்ணிப் பேய்க்கோ அல்லது சர்வதேச அடாவடிக்காரனுக்கோ இல்லையென்பதும் உறுதி.

அப்படியானால், தமிழர் முன்னாலிருக்கும் தீர்வென்ன? வெறுமனே எமது தாயகம் சிறிது சிறிதாக சிங்களப் பிசாசுகளால் காவுகொள்ளப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதானா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

பெளத்த பிக்குகளை சிங்கள் அரசாலோ, நீதித்துறையாலோ அல்லது முப்படைகளாலோ கட்டுப்படுத்த முடியாதென்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

அதேபோல, தமிழருக்காகப் பேசவேண்டிய தேவை பிராந்தியப் பிணந்திண்ணிப் பேய்க்கோ அல்லது சர்வதேச அடாவடிக்காரனுக்கோ இல்லையென்பதும் உறுதி.

அப்படியானால், தமிழர் முன்னாலிருக்கும் தீர்வென்ன? வெறுமனே எமது தாயகம் சிறிது சிறிதாக சிங்களப் பிசாசுகளால் காவுகொள்ளப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதானா? 

நல்வரவு ரகு அண்ணை ....
எமக்கிருக்கும் தீர்வு மற்றவனை கோர்த்து விட்டு நாம் தப்பிப்பிழைப்பது , முஸ்லிம்கள் செய்த அதே அரசியல் 
இனியில்லை என்னுமளவு மொள்ளமாரித்தனம் தான் ஆனால் வேறு தெரிவில்லை. இருப்பையாவது தக்க வைக்க வேண்டுமல்லவா. ஹிந்தியாவோ அவர்களின் proxy அரசியல்வாதிகளான கூத்தமைப்போ ஏதாவது பிடுங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது இல்லாத பாதைக்கு குருடன் வழிகாட்டுவது போல , 
14 RSS பிரிவுகள்  இலங்கையில் பலமுடன் இயங்கியும் நீராவியடி  லார்ட் கணேஷிற்கு  துணையாக யாரும் இல்லை. 
மறவன் புலவு சச்சி பிக்குகள் என்றால் காற்சட்டையிலேயே சுச்சி போய்விடுவார். கிறீஸ்தவர்களுடன் மட்டும் முட்டி மோதுவார்கள் 

Link to comment
Share on other sites

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

14 RSS பிரிவுகள்  இலங்கையில் பலமுடன் இயங்கியும் நீராவியடி  லார்ட் கணேஷிற்கு  துணையாக யாரும் இல்லை. 

RSS என்பது தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான பிரிவு.

மச்ச புராணம், பாகவத புராணம் போன்றவற்றில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக வட இந்தியர்கள் சேர்த்து விட்டார்கள். 

தவிர சிங்களவர்களை ஆரியர்கள் என்ற நிலையில் தான் பார்ப்பார்கள்.

எனவே சிங்கள பௌத்தர்களுடன் பிரச்சினைக்கு போக மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இலங்கையில் மட்டுமல்ல. வீட்டிலும் அதே நிலை தான் திருமணத்தின் போது வெட்கி தலை குனிந்து நிண்டவ தான் இப்ப எங்க வீட்டில் பிரதமர். 

எங்கள் வீட்டில் ஜனாதிபதி, பிரதமநீதியரசர், சபாநாயகர், முப்படைகளின் தளபதியும் அவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இலங்கையில் மட்டுமல்ல. வீட்டிலும் அதே நிலை தான் திருமணத்தின் போது வெட்கி தலை குனிந்து நிண்டவ தான் இப்ப எங்க வீட்டில் பிரதமர். 

வீட்டுக்குவீடு
வாசல்படி.
விட்டுத் தள்ளுங்க.
சமாளிப்போம்.

8 minutes ago, goshan_che said:

எங்கள் வீட்டில் ஜனாதிபதி, பிரதமநீதியரசர், சபாநாயகர், முப்படைகளின் தளபதியும் அவரே.

ஓகோ
அந்த தாக்கம் தான் இங்கே எதிரொலிக்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டனின் விதி 😂

1 hour ago, ஈழப்பிரியன் said:

வீட்டுக்குவீடு
வாசல்படி.
விட்டுத் தள்ளுங்க.
சமாளிப்போம்.

ஓகோ
அந்த தாக்கம் தான் இங்கே எதிரொலிக்குதோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எங்கள் வீட்டில் ஜனாதிபதி, பிரதமநீதியரசர், சபாநாயகர், முப்படைகளின் தளபதியும் அவரே

ஓ அப்போ நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்று சொல்றீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அப்போ நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்று சொல்றீங்க.

சர்வ வல்லமை பொருந்திய, அதி மேதகு என்பதை விட்டுவிட்டீர்கள். பரவாயில்லை 😂

Link to comment
Share on other sites

On 9/24/2019 at 4:05 PM, ஈழப்பிரியன் said:

ஒரு நாட்டின் பிரதமர் கையில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு இப்படி கைவிரிப்பதை விட பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகள் என்பற்கு இதுவொன்றே போதும்.

நீதிமன்ற உத்தரவை மீறியோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலீசை என்னவென்பது.

இதுக்காகவே தலைவர் பிரபாகரன் போலிசுக்கான உடுப்பையே மாற்றினார்.

பிரதமருக்கே இந்த நிலையென்றால் மக்களால் என்ன செய்யமுடியும்...?? எதிர்காலத்தில் பல தமிழ் பிரபாகரன்களை மட்டுமல்ல சிங்களப் பிரபாகரன்களையும் உருவாக்கும் முயற்சியில் பிக்குகள் ஈடுபட்டுள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.