Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, satan said:

எவ்வளவு காலத்தின்பின் இது சாத்தியமாகும்? இவ்வளவு அழிவை சந்தித்த பின்னும் திருந்தாத ஜென்மங்கள் விழிப்புணர்வினால் திருந்துங்களா? அதற்குள் எத்தனைஉயிர்கள் அவலமாய் போய்முடிந்துவிடும்? இதுகளை அடக்க இன்னொரு பிரபாகரன் பிறந்து வரவேண்டும். இப்பிடிப்பட்டதுகள் எமது சமுதாயத்தை பிடித்த பீடைகள். பெண்கள் இறப்பதால் இந்தக் காவாலியல்  தப்பவும், பெருகவும் வாய்ப்பாகும். ஒழுங்காய் படித்து வந்ததுகள் இப்பிடிப்பட்ட அசிங்கங்களை செய்யாதுகள். தறுதலையள் உதுகளின்ர  அடுத்த நேர சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் உதுகளை பெத்ததுகள் எப்பிடி தங்களை வருத்தி கனவோடு காத்திருக்க, அதுகளுக்கும் துரோகம் செய்யுதுகள். பெத்த குற்றத்துக்கு தண்டனை.. 

ஏன் நீங்கள் இவ்வாறு ஒரு இயலாத் தன்மையுடன் எதிர்மறையாகவே யோசிக்கிறீர்கள்.

 சமூகங்களில் உள்ள புறநடைகளை - எல்லா சமூகங்களிலும் இது இருக்கின்றது - உரிய மன  நல உத்திகளை பாவித்து சரியான வழிக்கு கொண்டு வரும் நடை முறையில் நம் எல்லோருக்கும் இருக்கும் பங்கினை மறப்பது சரியல்ல.

 இப்போது ஆராயப்படும் இந்த இளவல்கள் , முந்தாநாள் தான் கடும் போர் ஒன்றிலே சிக்கி பல வழிகளிலும் தாக்கமடைந்து , நேற்றிலிருந்து வாழ்வை  மீள கட்டிக் கொண்டிருக்க முனையும் ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் உளநல பாதிப்புகளின் எதிர் வினைகளின் வெளிப்பாடாக தான் என்னால் இதனை அணுகக் கூடியதாக இருக்கின்றது

நாற்பது வருடங்களின் முன்னர் நாம் பல்கலைக் கழகங்களில் இருந்த சமயம் , நிலவரம் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை  என்பது , போரின் தாக்கங்களின் எதிர் வினைகளின்  பங்களிப்பையும் சுட்டி நிற்கின்றது.

 

The Fall (TV series)  பார்த்திருப்பீர்களோ தெரியாது

 இளவயதில் ஆட்கொள்ளப்படும் சம்பவங்கள் , ஒருவரின் மனப் பான்மையை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்து அவரின் நடத்தைகளை கட்டுப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்,,,,,

  • Replies 65
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகமா ? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகமா ? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் பலர் செய்த முறைப்பாடுகளையடுத்து, இது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக் கழக நிர்வாகம் பகிடிவதைக்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையைப் பெற்றோர் மத்தியில் ஊட்டும் வகையிலும் யாழ். பல்கலைக் கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திட்டம் பற்றி பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இன்று 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பகிடி வதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசிமூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறன துன்பியல் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் முகமாகவும் வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக பணிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் கூடவுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாண-பல்கலைக்கழகத-4/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... அபராஜிதன்.
மற்றவர்கள்  தொலைபேசி எடுத்து கேட்கும்  போது, 
அவமானத்தில்... அடுத்த முறை இப்படியான செயல்களை செய்ய மாட்டார்கள்.  

சிறித்தம்பி ஒழுங்கான பிள்ளைகள் இந்த வேலகளை செய்யாதுகள். களிசடைகளுக்கு மானம் சூடு சுரணை எல்லாம் இருக்காது.
ஒரே வழி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆண்மையே இல்லாமல் செய்ய வேண்டும்.ஒரு ஊசி மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பல்கலை அனுபவங்களின் பின்னணியில் மரபாகிபோன ரக்கிங்கை எவ்வகையில் நட்பார்ந்த வரவேற்பாக மாறலாம் என்பது பற்றி எழுதினேன். என் பதிவில் பெரும்பகுதி நீக்கப்பட்டு விட்டதால் மிகுதி பிழையாக அர்த்தம் படுகிறது. ஒரு பதிவை நீக்கினால் முழுமையாக நீக்கஏண்டும். பகுதியை நீக்குவது தப்பான புரிதலுக்கு வழிவகுக்கும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இடப்பெயர்வின்போது ஊர்விட்டு, தொழில் இழந்து, உறவுகளை பறிகொடுத்து தனி மரங்களாய் உதவுவதற்கு யாருமில்லாமல் திரும்ப வந்தபோது இருந்ததையும் கொள்ளையடித்து இராணுவத்தோடு கொட்டமடித்து இருந்த எங்கட கூட்டம். நலிந்து வந்தவர்களுக்கு செய்த கேலி கொஞ்சமல்ல. எவ்வளவு தூரம் எங்கள் மக்கள் மாறிவிட்டார்கள் ஏற்பது கடினமாயிருந்தது. தமிழுக்காகவும், மானத்திற்காகவும் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களும், அதற்காகவே உழைத்து தனிமையில் வறுமையில் வாடுபவர்களும் வாழத் தெரியாதவர்களோ என்று நினைக்க தோன்றுது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, poet said:

 

ராக்கிங் ஒரு மரபாகிப்போனதால்

 

இந்த மரபு எங்கிருந்து வந்தது?

கிரேக்கர்கள்கூட மாணவர்களையும், போர்ப்பயிற்சிக்கு வருபவர்களையும் துன்புறுத்தியும், அவமானப்படுத்தியும் புடம்போட்டிருக்கின்றனர். ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இது மேற்குநாடுகளில் வழக்கொழிந்துபோய்விட்டது. Freshers week இல் மற்றவர்களைத் தெரிந்துகொள்ள ஒன்றாகக் குடிப்பதும் கும்மாளம் போடுவதையும் தவிர வேறு ஒன்றும் மேற்குநாடுகளில் நடப்பதில்லை.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் மட்டும் இந்த வழக்கொழிந்த “மரபை” வக்கிர மனநிலை கொண்டவர்கள் விடாமல் கொண்டு நகர்த்துகின்றார்கள்.

இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களை, புலிகளின் ஆளுகைக்குள்ளும்,  மிக மோசமாக ராக்கிங் என்ற பெயரில் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததை நேரே கண்டிருக்கின்றேன். அவர்கள் நட்பு ரீதியாக எதையும் செய்யவில்லை. மிக வக்கிரமாகவே நடந்துகொண்டார்கள். இப்போது பெண்களையும் படுக்கவரும்படி கேட்கும் அளவிற்கு வந்துள்ளது பாலியல் இச்சையை தீர்க்கவே ராக்கிங் பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. ஸ்மார்ட்போன் உலகில் புதிதாக எதையும் ராக்கிங் கற்றுத் தரப்போவதில்லை. பிறழ்வான படித்த சமூகத்தை உருவாக்குவதைத் தவிர😡

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வலைத்தளங்களின் பரிவர்த்தனைகள் மாணவர்கள் மட்டுமன்றி இளைஞர்களில் அதிகமானவர்களிடம் மற்றும் நடுத்தர வயதினரிடமும் கூட  பாலியல் இச்சைகளை  தூண்டுபவையாகவே இருக்கின்றன. அவை வீட்டு ஹால் தொடங்கி உள்ளங்கையில் இருந்தும் வழிகின்றன. ஆனால் "பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகுது" என்பதுபோல் இவர்களது விளையாட்டு அல்ல வக்கிரம் அநியாயமாக பொம்பிளை பிள்ளைகளின் உயிருக்கு எமனாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. கல்லூரிகளில் பகுடிவதை முற்று முழுதுமாக விலக்கப்பட வேண்டும்.....சம்பந்தப்படடவர்கள் மீது கடுமையான ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.பாவம் ஏழைப்பிள்ளைகள் எவ்வளவோ இன்னல்களுக்கு இடையில் படிக்க வருகின்றார்கள்.படிக்க வந்ததுக்காகவே அவர்களுக்கு பாடை கட்டி அனுப்பக்கூடாது.....!  😗

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இன்னமும் மாறவில்லை..! :innocent:

அப்பொழுது:

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் இரண்டரை மாதங்கள் வரை இந்த பகடிவதையை, தனியாகவோ அல்லது சக முதலாமாண்டு மாணவர்களுடுனோ சீனியர் மாணவக் குழுவினரிடம் அனுபவித்திருக்கிறேன்.

விடுதியில்தான் அதிகம் ராகிங் இருக்கும், அதனால் கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் நேராக விடுதிக்கு திரும்பாமல் முதலாமாண்டு மாணவர்கள் பெரும்பாலும் நகரத்திற்குள் சென்று விடுவோம். இரவு ஒரு மணிக்கு மேல் தான் விடுதிக்கு திரும்புவதுண்டு.

இந்த தந்திரங்களையெல்லாம் கரைத்துக் குடித்த சீனியர்கள், இரவில் மறைந்திருந்து குழுவாக எங்களைப் பிடித்து நள்ளிரவில் கபடி விளையாட சொன்னதும் உண்டு..

"கபடி.. கபடி.." என்பதை 'வேறு மாதிரி' சொல்லி விளையாட வேண்டும்..! அதை இங்கே எழுத இயலாது.

மற்றொரு நாள், மதியம் வரைபட(Eng.Drawing) வகுப்புகள் முடிந்து விடுதி திரும்பும்போது எனது கையில் டி.ஸ்கொயர் (T Square) இருந்தது. வரும் வழியில் ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவரிடம் அகப்பட்டுக்கொண்டேன்..

அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றவர், டி ஸ்கொயரை இடுப்பில் வைத்துக்கொண்டு 'ஒரு மாதிரி' செய்து காட்ட சொன்னார்.. நான் தயங்கி மறுத்துவிடவே கடுப்பாகி அறையிலிருக்கும் சிறிய பரண் மீது ஏற்றிவிட்டார். அவரின் சக சீனியர் மாணவர்களின் கேலியுடன் "கிராமத்திலிருந்து காட்டான் வந்துவிட்டு எதையும் செய்யாமல் உயிரை எடுக்கிறான்" என திட்டுக்களும் வசவுகளும் என்னை நோக்கி வந்தன.

இரவு சாப்பட்டிற்கு 'மெஸ்(Mess) திறக்கும் வரை பரண் மேலேயே குறுகியவாறு இருந்தேன்.. பின்னர் மற்றொரு ஐந்தாம் ஆண்டு படித்த சீனியர் மாணவரின் (மதுரை மாவட்டக்காரர்) உதவியுடன் அங்கிருந்து விடுதலையானேன்..

சிலசமயம் ராகிங் வேடிக்கையாக இருக்கும், பல சமயம் நம் கண்ணீரை வரவழைத்துவிடும்.. (ஆனால் மற்ற கல்லூரிகள் மாதிரி நான் படித்த கல்லூரியில் யாரும் யாரையும் அடித்ததில்லை..!)

தற்பொழுது:

அன்று என்னை ராகிங் செய்த சீனியர் மாணவர்களில் ஒருவரை அபுதாபியில் 40 வருடங்கள் கழித்து சந்தித்தேன். பெட்ரோல் தோண்டியெடுக்கும் எண்ணை கம்பெனியில் பொறியியல் பிரிவின் இயக்குநராக உயர்ந்த பதவியில் பணியாற்றுகிறார்..

"டேய்.. நீ ஹாஸ்டல் ரூம் பரண்மீது ஏறிக்கொண்டு, ஒன்னும் செய்யாமல் எங்களை கடுப்படித்தவன் தானே..? இன்னமும் மாறாமல் அப்படித்தான் இருக்குறையா..?" என 'அன்பாக' விசாரிப்பார். அவருக்கு வயது இப்பொழுது 68.

எங்களின் கல்லூரி விடுதி 'ராகிங் நட்பு' இன்றும் தொடர்கிறது..!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்த மரபு எங்கிருந்து வந்தது?

கிரேக்கர்கள்கூட மாணவர்களையும், போர்ப்பயிற்சிக்கு வருபவர்களையும் துன்புறுத்தியும், அவமானப்படுத்தியும் புடம்போட்டிருக்கின்றனர். ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இது மேற்குநாடுகளில் வழக்கொழிந்துபோய்விட்டது. Freshers week இல் மற்றவர்களைத் தெரிந்துகொள்ள ஒன்றாகக் குடிப்பதும் கும்மாளம் போடுவதையும் தவிர வேறு ஒன்றும் மேற்குநாடுகளில் நடப்பதில்லை.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் மட்டும் இந்த வழக்கொழிந்த “மரபை” வக்கிர மனநிலை கொண்டவர்கள் விடாமல் கொண்டு நகர்த்துகின்றார்கள்.

இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களை, புலிகளின் ஆளுகைக்குள்ளும்,  மிக மோசமாக ராக்கிங் என்ற பெயரில் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததை நேரே கண்டிருக்கின்றேன். அவர்கள் நட்பு ரீதியாக எதையும் செய்யவில்லை. மிக வக்கிரமாகவே நடந்துகொண்டார்கள். இப்போது பெண்களையும் படுக்கவரும்படி கேட்கும் அளவிற்கு வந்துள்ளது பாலியல் இச்சையை தீர்க்கவே ராக்கிங் பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. ஸ்மார்ட்போன் உலகில் புதிதாக எதையும் ராக்கிங் கற்றுத் தரப்போவதில்லை. பிறழ்வான படித்த சமூகத்தை உருவாக்குவதைத் தவிர😡

கிருபன் என்பதிவில்  ஆசிரியர் மாணவர் ஊராரை அணிதிரட்டியும் அவசிய மான வன்முறையையும் பயன்படுத்தி நான் மாணவர் தலைவராக இருந்த காலத்தில் ராக்கிங்கை நட்பார்ந்த வரவேற்பாக்கிய்து பற்றி எழுதியிருந்தேன் . மேற்படி பகுதி யாந் நிர்வாகத்தால் நீக்கபட்டு சிறு பகுதி மட்டும் விட்டு வைக்கபட்டதில் உங்களுக்கு என்மீது தப்பவிப்பிராயம் வந்துவிட்டது. 1976- 1978 களில் யாழ் பல்கலைகளகத்தில் படித்தவர்களை கேழுங்கள். ராக்கிங்கை நட்பான வரவேற்பாக்கும் முயற்ச்சியில் ஆசிரியர் மாணவர்  ஊர்பிரமுகர்களைத் திரட்டி மாணவர் சங்கம் மூலம் வெற்றி பெற்றிருந்தோம். 

4 hours ago, poet said:

என்னுடைய பல்கலை அனுபவங்களின் பின்னணியில் மரபாகிபோன ரக்கிங்கை எவ்வகையில் நட்பார்ந்த வரவேற்பாக மாறலாம் என்பது பற்றி எழுதினேன். என் பதிவில் பெரும்பகுதி நீக்கப்பட்டு விட்டதால் மிகுதி பிழையாக அர்த்தம் படுகிறது. ஒரு பதிவை நீக்கினால் முழுமையாக நீக்கஏண்டும். பகுதியை நீக்குவது தப்பான புரிதலுக்கு வழிவகுக்கும்.

 

1 hour ago, poet said:

கிருபன் என்பதிவில்  ஆசிரியர் மாணவர் ஊராரை அணிதிரட்டியும் அவசிய மான வன்முறையையும் பயன்படுத்தி நான் மாணவர் தலைவராக இருந்த காலத்தில் ராக்கிங்கை நட்பார்ந்த வரவேற்பாக்கிய்து பற்றி எழுதியிருந்தேன் . மேற்படி பகுதி யாந் நிர்வாகத்தால் நீக்கபட்டு சிறு பகுதி மட்டும் விட்டு வைக்கபட்டதில் உங்களுக்கு என்மீது தப்பவிப்பிராயம் வந்துவிட்டது. 1976- 1978 களில் யாழ் பல்கலைகளகத்தில் படித்தவர்களை கேழுங்கள். ராக்கிங்கை நட்பான வரவேற்பாக்கும் முயற்ச்சியில் ஆசிரியர் மாணவர்  ஊர்பிரமுகர்களைத் திரட்டி மாணவர் சங்கம் மூலம் வெற்றி பெற்றிருந்தோம். 

வணக்கம் பொயட்,

உங்கள் கருத்துகளை மட்டுறுத்துநர் எவரும் மட்டுறுத்தவும் இல்லை; எந்தப் பகுதியும் எம்மால் நீக்கப்படவும் இல்லை. ஆனால் நீங்கள் தான் முதலில் இட்ட உங்கள் பதிவினை எடிட் பண்ண வெளிக்கிட்டு, அதை தவறுதலாக அகற்றி விட்டு இந்த கருத்தை பதிந்து இருக்கின்றீர்கள்.

நீங்கள் எடிட் பண்ணிய (அகற்றிய முதல் பதிவை) எம்மால் மீண்டும் பதிய முடியும். அப்படி பதிவதால் இந்த குழப்பம் சரியாகும் என நீங்கள் கருதினால் என்னால் மீண்டும் பதிய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, நிழலி said:

எடிட் பண்ணிய (அகற்றிய முதல் பதிவை) எம்மால் மீண்டும் பதிய முடியும்

😵 😵 😵 😵 😵

ஓகோ அப்பிடியும் ஒரு விசயம் இருக்கோ???

டேய் குமாரசாமி இனிமேல் உசாராய் இரடா 😝

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் நிழலி, மனவேகத்தில் எழுதுவதால் நானே அகற்றியிருக்கக்கூடும். என்ப்பதிவில் பின்வரும் விபரங்கள் இடம் பெற்றிருந்தது.

.

1977 யாழ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபோது நட்பில்லாத வரவேற்பை எல்லை மீறும் ரக்கிங்கை முதல் வருட மாணவர்களையும் ஊராரையும் ஆசிரியர்களையும் திரட்டி எதிர்த்தோம்.  நிராகரித்தேன். தமிழ் முஸ்லிம் மலையக மற்றும் சிங்கள முதல் வருட மாணவர்களையும் நித்தியானந்தன், நிர்மலா போன்ற ஆசிரியர்களையும் ஊரையும் திரட்டி எதிர்த்தேன். என்பாதுகாப்புக்காக முதல் வருட மாணவர்கள் சிலர்  உதாரணத்துக்கு பின்னர் தமிழ் பேராசிரியராக புகழ்பெற்ற  சிவலிங்கராசா போன்றவர்கள்  கத்தியுடன் திரிந்த நாட்க்கள் அவை. ராக்கிங் நடக்கும் போதே மாணவர் சங்க தலைமைக்கு தேர்ந்தெடுக்கபட்டேன். என்னை ஆதரித்த மலைய மாணவர்கள் ராக்கிங் பெயரில் கடத்திச் செல்லப்பட்டு இழிவு படுத்தபட்டபோது நாம்  நானும் இன்று லண்டனில் வாழு அன்றைய பல்கலைக் கழக ஆசிரியர்கள் நித்தியானந்தன் மற்றும் நிர்மலா போன்றவர்களதும் ஊர்மக்களையும் திரட்டி  அவசியமான அளவு மட்டும் வன்முறையை கையில் எடுத்து அவர்களை மீட்டோம். நான் பதவியில் இருந்த் இரண்டரை வருடமும் ராக்கிங்கை நட்பார்ந்த வரவேற்பும் உரையாடலும் நகைச்சுவையும் கொண்டாட்டமுமாக கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றோம்.

எங்கள் அனுபவங்கள் முதல் மற்றும் இரண்டான் மூன்றாம் ஆண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊர் மக்களையும் திரட்டாமல் பல்கலைக் கழகத்துக்கு உள்ளும் வெளியும் இடம்பெறும் வக்கிரமான ரக்கிங்கை நட்பார்ந்த வரவேற்பாக மேம்படுத்த முடியாது என்பது என் அனுபவம். பாதிக்கபட்ட மாணவர்களின் மன்னிப்பை பெறும் பட்ச்சத்தில் குற்றச் செயல்களில் சம்பந்த பட்ட மாணவர்களை திருத்தும் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைபாடாக இருந்தது.

எங்கள் அனுபவங்களும் பயன்படக்கூடும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

ராக்கிங்கை நட்பார்ந்த வரவேற்பும் உரையாடலும் நகைச்சுவையும் கொண்டாட்டமுமாக கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றோம்.

40 வருடங்களின் முன்னர் நட்பார்ந்த வரவேற்பும், உரையாடலும், கொண்டாட்டமுமாக கட்டுப்படுத்தப்பட்ட ராக்கிங் இன்று புதிய ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பங்களைப் பாவித்து பாலியல் வேட்கைகளைத் தீர்க்கும் ஆசையளவில் வந்து நிற்கின்றது.

etiquette தெரியவும், ஆளுமையை வளர்க்கவும்,  பேச்சிலும், தொடர்பாடலிலும் கற்கவேண்டியதைக் கற்கவும் பல வழிகள் உள்ளன. ஆண்கள் பெண்களளுடன் பழகும்தன்மையையே இந்த  ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் வெகுவாக மாறிவிட்டது. எனவே me too movement போன்று ஒரு anti-ragging movement ஐ உருவாக்கி ராக்கிங்கை ஒழிப்பதுதான் சமுகத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் கோத்தபாயவிடம் எடுத்துச் சொன்னால், அவர் உரியமுறையில் சட்டங்களை அல்லது ஏவவேண்டியவர்களை ஏவி சீர் செய்வார்!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உருப்பட பல வழிகளை காட்டுவார் ; அதில் ஒன்று ஸ்மார்ட் போன் உடைந்து போவது ..👍

110620_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி ஒழுங்கான பிள்ளைகள் இந்த வேலகளை செய்யாதுகள். களிசடைகளுக்கு மானம் சூடு சுரணை எல்லாம் இருக்காது.
ஒரே வழி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆண்மையே இல்லாமல் செய்ய வேண்டும்.ஒரு ஊசி மட்டும் தான்.

குமாரசாமி அண்ணை.... ஊசி போட்டு, ஆண்மையை இழக்கச் செய்தாலும்,

"குரங்கு சேட்டையை"...  நிப்பாட்ட முடியாது, என்றே நினைக்கின்றேன். 

அதற்கு.. பிள்ளைகளின் வளர்ப்பில், அவர்களின் பெற்றோரும்... தவறு செய்தவர்களாகின்றார்கள்.    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, poet said:

1976 ஜூன் மாசம் யாழ்பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றேன். நான் சாதி சமுக்க கொடுமைகளுக்கு எதிரான வன்முறையாளனாக பெயர் எடுத்திருந்ததால் என்னை ரக்கிங் பண்ண பலரும் துணியவில்லை. முதுநிலை மாணவர்கள் தனியாக என்னை சந்தித்து, “உங்களை ரக் பண்ண யாருக்கும் துணிவில்லை” என மாணவிகள் தங்களை கேலி செய்வதாக கெஞ்சினார்கள்.  உங்கள் மீசையை வெட்ட அனுமதிக்க வேண்டுமெனவும் பேரம் பேசினர். அதன் அடிப்படையில் என்னை சலூனுக்கு அழைத்துச் சென்று மீசை வெட்டுவதாகவும்   மாலை எனக்கும் நண்பர்களுக்கும் விருந்துவைப்பதாகவும் என்னோடு ஒப்பந்தம் செய்தனர். அடுத்தவாரம்- ரக்கிங் முடிய முன்னமே - நான்  நாம் பல்கலைகழக மாணவர் தலைவனாக தெரிவு செய்யபட்டேன். மீண்டும்ரக்கிங் வன்முறையும் அருவருப்புமாக மோசம்டைய முற்பட்டது. மலையக மாணவர்கள் இழிவு செய்யப் பட்டனர். இதனால் ஓரிருநாள் மிக திட்டமிட்ட  எதிர் வன்முறைமூலம் வன்முறையாளர்களைப் பணிய வைக்க நேர்ந்தது.  அதன்பின் மாணவர்களை திரட்டி நிர்வாகத்தினதும் ஊரவர்களதும் உதவியுடன் ராக்கிங்கை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தேன். நான் மாணவர் தலைவராக இருந்த 1976, 1977, 1978 காலப்பகுதியில் ராக்கிங் நட்ப்புரீதியான விழையாட்டும் வரவேற்ப்புமாக கட்டுப்பட்டுக்குள் இருந்தது. முன்னணி மாணவர்கள், நிவாகம், ஊர்த் தலைவர்களை அணி திரட்டாமால் வெறும் குற்ற நடவடிக்கையாக ராக்கிங்கை கையாளுவது சிரமம். என் காலத்தில் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த யாழ்கழ உறுப்பினர்களின் கருத்தை வரவேற்க்கிறேன். 

ஜெயபாலன் அண்ணா....  உங்களின் மலரும் நினைவுகளுக்கு, நன்றி.
யாழ். பல்கலைக் கழக்கத்திற்கு  முன் உள்ள.... குமாரசாமி வீதியில் உள்ள மக்கள்,
உதவிக்கு வந்ததை... நான் சிறுவனாக இருந்த போது,  நேரில் கண்டேன். 
அது, மறக்க முடியாத சம்பவம். :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

------நீங்கள் எடிட் பண்ணிய (அகற்றிய முதல் பதிவை) எம்மால் மீண்டும் பதிய முடியும். அப்படி பதிவதால் இந்த குழப்பம் சரியாகும் என நீங்கள் கருதினால் என்னால் மீண்டும் பதிய முடியும்.

 

2 hours ago, குமாரசாமி said:

😵 😵 😵 😵 😵

ஓகோ அப்பிடியும் ஒரு விசயம் இருக்கோ???

டேய் குமாரசாமி இனிமேல் உசாராய் இரடா 😝

வெள்ளிக்கிழமை...  உண்மையை கூறிய,  நிழலிக்கு  நன்றி. :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில் மட்டும் இந்த வழக்கொழிந்த “மரபை” வக்கிர மனநிலை கொண்டவர்கள் விடாமல் கொண்டு நகர்த்துகின்றார்கள்.

கிருபனின் மிகச்சரியான கருத்து. ரக்கிங் பகிடி வதை முற்றாக இலங்கையில் இருந்து ஒழிக்கபட வேண்டும் எப்போது புதிய மாணவிகள் வருவார்கள் தங்கள் பாலியல் அசிங்கங்களை  புதிய மாணவர்களிடம் தங்களது வக்கிரகங்களை ரக்கிங் என்று நிறைவேற்றலாம் என்று பல மாணவர்கள் காத்துகிடக்கிறார்கள்.🥵

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் தமிழர் பகுதியில் இவைகள் இப்போது நடப்பது சகஜமே புலம்பெயர்தேசங்களில் வாழும் எமது உறவுகள் இவைகளை ஜஸ்ற் லைக் தற் எனுமாப்போல் கடந்து போய்விடவேண்டும் முள்ளிவாய்க்காலுக்குப் பினிப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அதைவிட இப்போதெல்லாம் வீடுகளில் மூன்று நாலு வயதுப்பிள்ளைகளையே பெற்றார் பராமரிப்பதில்லை ஸ்கூட்டியில் ஏத்திக்கொண்டுபோய் கின்ரர்கார்டனில் விட்டுட்டு பெற்றொர் தங்கட அலுவலைப்பார்க்கப்போய்விடுவினம் நான் அறிய தாய்ம் தகப்பனும் ஆசிரியர்கள் வீட்டில மூன்று நாலு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம்சொல்லிக்கொடுக்க நேரமில்லை ஆட்டோவில ஏத்திக்கொண்டுபோய் ரியூசனுக்கு விடுவினம் இப்போது புரிகிறதா சின்ன வயதிலிருந்தே வீட்டுக்கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறியதுகள் அக்கா தங்கச்சி என்றும் பாராதுகள். நீங்கள் என்னடாவென்றால் அக்கா அம்மா என உறவுமுறைகளைச் சொல்லி கருத்து எழுதுகிறியள்

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கின்றது அதில் எனக்கு மிகவும் சந்தோசமே. எதிர்காலத்தில் இன்னமும் மோசமாக நடக்க கண்டிக்கதிர்காமக் கந்தனை வேண்டுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Elugnajiru said:

இலங்கைத்தீவில் தமிழர் பகுதியில் இவைகள் இப்போது நடப்பது சகஜமே புலம்பெயர்தேசங்களில் வாழும் எமது உறவுகள் இவைகளை ஜஸ்ற் லைக் தற் எனுமாப்போல் கடந்து போய்விடவேண்டும் முள்ளிவாய்க்காலுக்குப் பினிப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அதைவிட இப்போதெல்லாம் வீடுகளில் மூன்று நாலு வயதுப்பிள்ளைகளையே பெற்றார் பராமரிப்பதில்லை ஸ்கூட்டியில் ஏத்திக்கொண்டுபோய் கின்ரர்கார்டனில் விட்டுட்டு பெற்றொர் தங்கட அலுவலைப்பார்க்கப்போய்விடுவினம் நான் அறிய தாய்ம் தகப்பனும் ஆசிரியர்கள் வீட்டில மூன்று நாலு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம்சொல்லிக்கொடுக்க நேரமில்லை ஆட்டோவில ஏத்திக்கொண்டுபோய் ரியூசனுக்கு விடுவினம் இப்போது புரிகிறதா சின்ன வயதிலிருந்தே வீட்டுக்கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறியதுகள் அக்கா தங்கச்சி என்றும் பாராதுகள். நீங்கள் என்னடாவென்றால் அக்கா அம்மா என உறவுமுறைகளைச் சொல்லி கருத்து எழுதுகிறியள்

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கின்றது அதில் எனக்கு மிகவும் சந்தோசமே. எதிர்காலத்தில் இன்னமும் மோசமாக நடக்க கண்டிக்கதிர்காமக் கந்தனை வேண்டுகிறேன் 

வெளிநாடுகளில்...இருந்து, உறவினர்கள்  அனுப்பும்... பணமும்,
அவர்களை... தறிகெட்டு, திரிய வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய புதிய மாணவன், நாளை பழைய மாணவன் ஆகிறான்.
பழைய மாணவன் தன் பங்குக்கு, தான் அனுபவித்ததை "மரபாக" நினைத்துக்கொண்டு அதே சுழட்சியில்  சிக்குகிறான்.  இது தனி மனித ஒழுக்கம் போல ஒவ்வொருவரு மாணவ மாணவியும் சிந்தித்து, உணர்ந்து  மனம் மாறினாலேயே தீர்க்கப்படலாம்.
 
போலீஸ் மூலம் தண்டனை கொடுத்து மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது கேள்விக்குறியே?
பள்ளிப் படிப்பில் கூட "பகிடி வதை" பற்றிய உளவியல் தாக்கங்கள், சம்பவங்கள், பற்றிய கருத்தாடல்கள், அறிவூட்டல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்.
கல்வி முறை, சமூக கருத்தாடல்கள், புரிதல் இல்லாமை போன்ற வெற்றிடங்கள் இன்னும் நிரவப்படாமல் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தலைவர்கள்! எப்படி சமுதாயத்துக்கு போதிக்கப்போகிறார்கள்?  என்பதற்கான ஒத்திகை  தனக்கு பின்னால் இருக்கும் காவாலிகளையும், அவர்கள் எப்படி தங்களுக்குப்பின்னால் தங்கள் லீலைகளை முன்கொண்டு செல்வார்கள் என்பதையும் கோடிட்டு காட்டுகிறான். பாவம் இதுகளை பெத்ததுகள் யார் காலில் விழுந்து அவமானப்படப் போகுதுகளோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

 

அச்சத்தின் காரணமாக வெருட்டி பாக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஏராளன் said:

அச்சத்தின் காரணமாக வெருட்டி பாக்கினம்.

அப்படி இல்லை ஏராளன். இது குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.