Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TRANCE - தன் நினைவிழந்த நிலை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டிரான்ஸ்" என்னும் சொல் எனக்கு புதிதாய் இருந்தது   ...கூகுளில் போய்த் தான் தன்னிலை மறந்த நிலை என்று தெரிந்து கொண்டேன்.

"வைரஸ்" நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்...இன்றைய கால கட்டத்திற்கு ஏத்த படம் 
 
  • Replies 58
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த லோக்த்தில இவளவும் நடக்குதா😆

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜென்ட்டில் மேன் [தெலுங்கு]  திரும்ப முனை  படத்தை தமிழில் டப் பண்ணி விட்டு இருக்கிறார்கள் ....சுப்பர் படம்...நேரம் இருந்தால் பாருங்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் 
https://en.wikipedia.org/wiki/Gentleman_(2016_film)

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:35, zuma said:

அல்லுலோயா கூட்டத்தை துகில் உரித்து காட்டும் நல்ல மலையாள படம் , ஆனால் வாணிப ரீதியாக எதிர் பார்த்தளவு வெற்றி பெறவில்லை.
 அல்லுலோயா கூட்டம் மாத்திரம் ஊரை ஏமாற்ர  மாதிரி இங்கை சிலர் குத்தி முறியினம்.
இவர்களுக்கும், காவிக் கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அல்லேலூயாக் கூட்டம் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இந்த உத்தியைக் கையாழுகிறார்கள். இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்குப் பரிச்சயமான  நித்தியானந்தா, சாய்பாபா, மற்றும் இன்னோரன்ன குழுக்கள் (Cult) எல்லாமே இதே உத்தியைத்தான் கையாழுகிறார்கள். 

இது காலம் காலமாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

அல்லேலூயாக் சபைகளுக்கும் இவர்களுக்குமுள்ள வேறுபாடு என்னவெனில், இவர்கள் வருமானத்தில் 10% காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று எழுதாத சட்டமாக வைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அதை வற்புறுத்திப் பெறுவதில்லை. மக்கள் தாமாக கொடுக்க வைக்கப்படுகிறார்கள். 🤥

நாம்தான் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஜென்ட்டில் மேன் [தெலுங்கு]  திரும்ப முனை  படத்தை தமிழில் டப் பண்ணி விட்டு இருக்கிறார்கள் ....சுப்பர் படம்...நேரம் இருந்தால் பாருங்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் 
https://en.wikipedia.org/wiki/Gentleman_(2016_film)

Andhadhun (2018) படம் பார்த்தேன் மிக அருமையான திரில்லர் !!

Trance படமும் பார்த்தேன். பகத்தின்  அற்புதமான நடிப்பு. நஸ்ரியவை இந்த ரோலில் எதிர்பார்க்கவில்லை?

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2020 at 10:22, ரதி said:

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

வணக்கம் சகோதரி
வழமையில் படம்கள் பார்ப்பது மிகவும் குறைவு.நீங்கள் எழுதியபடியால் மகளுக்கும் சொல்லி அவர்களும் இருந்து பார்த்தார்கள்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
        யாழில் இப்படியான தகவல்களும் தருகிறார்களா என்று மிகவும் ஆச்சரியப்பட்டா.
தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சகோதரி
வழமையில் படம்கள் பார்ப்பது மிகவும் குறைவு.நீங்கள் எழுதியபடியால் மகளுக்கும் சொல்லி அவர்களும் இருந்து பார்த்தார்கள்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
        யாழில் இப்படியான தகவல்களும் தருகிறார்களா என்று மிகவும் ஆச்சரியப்பட்டா.
தகவலுக்கு நன்றி.

நானும் பார்த்தேன் மத்திய கிழக்கில் இருக்கும் போது பல மொழிகள் படத்தைப்பார்ப்பதுண்டு இலங்கையில் சாத்தியம் இல்லை இருந்தும் தனிய இருந்து பார்த்தேன் வீட்டில பேச்சு எல்லாம் முடிஞ்சி இப்ப மலையாளப்படம்    நண்பர்கள்ட சொல்ல சகிலா படமா என்று கேட்பானுகள் என்று நினச்சி சொல்லல 

உன்மையில் பகத் பாசில் பின்னி பிணைந்து பிடல் எடுத்துள்ளார் அபாரமான நடிப்பு  

இன்று மர்டானி 2 கிந்திப்படத்தை பார்க்க டவுன்லோட் பண்ணியிருக்கேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:42, Maruthankerny said:

பாடுவதும் ஆடுவதும் மனதுக்கு மிகவும் தேவையான ஒன்று 
எங்களுடைய பெண்கள் பாவம் இது எதுவுமே இல்லாமல் போலி காலச்சாரம் எனும் 
மாயைக்குள் கட்டுண்டு ஆண்களுக்கும்  பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதிலேயே முழு ஆயுளையும் 
கழிக்கிறார்கள் ..... ஆதலால் உண்மையிலே எமது பெண்கள் இப்படி நித்தியானந்தா ஜக்கி போன்றவர்களின் மடங்களுக்கு சென்று  ஆறுதலடைய வேண்டு அவர்கள் அவர்களாக ... அவர்களுக்கு என்றும் கொஞ்சம் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

இங்கு அமெரிக்காவில் அழிந்துபோன ஓசோவின் ஆச்சிரமங்கள் 
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட தொடங்குகிறது  
போர்லாண்டிலும்   டெக்ஸாஸில்  சொல்ல கூடிய அளவில் ஓரளவு இயங்குகிறது 
அவர்களுடன் தொடர்பை பேணிக்கொண்டு இருக்கிறேன் .. இந்த கோடை விடுமுறைக்கு 
போர்ட்லான்ட் செல்வது என்று இருந்தேன் இந்த கொரோனா வைரஸால் போக முடியாது என்று எண்ணுகிறேன் 
நீங்களும் தேடி பாருங்கள் ஒரு வித்தியாசமான பயணம்.

On 7/4/2020 at 22:39, Maruthankerny said:

ஏன் சிற்பிகளும் ஓவியர்களும் பெண்ணை நிர்வாணமாகவே சிலையும் ஓவியமும் வடிக்கிறார்கள்?
அடையாளங்களை அகற்றினால்தான் ஒரு "பெண்"ணை காணமுடியும் 

அதுபோல தன்னிலை மறந்தால் .........

நண்பர் மருத்தங்கேணிக்கு மிக மிக நன்றி,

நானறிந்த எல்லா சமயங்களிலும் இந்து சமயம் போல அழகானதும் இனிமையானதுமான சமயம் வேறேதுமில்லை. எனது வாழ்வில் பங்கு கொண்ட மூன்று சமயங்களுள் இந்து சமயமும் ஒன்றாக இருந்தது ஒரு மகிழ்ச்சியான, இனிமையான அனுபவம்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜென்ட்டில் மேன் [தெலுங்கு]  திரும்ப முனை  படத்தை தமிழில் டப் பண்ணி விட்டு இருக்கிறார்கள் ....சுப்பர் படம்...நேரம் இருந்தால் பாருங்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் 
https://en.wikipedia.org/wiki/Gentleman_(2016_film)

நன்றி ரதி, இந்தப்படம் இதுவரை பார்க்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

Andhadhun (2018) படம் பார்த்தேன் மிக அருமையான திரில்லர் !!

Trance படமும் பார்த்தேன். பகத்தின்  அற்புதமான நடிப்பு. நஸ்ரியவை இந்த ரோலில் எதிர்பார்க்கவில்லை?

நானும் நஸ்ரியாவை அந்த கரெக்டரில் எதிர் பார்க்கவில்லை ...சிகரெட் பிடிக்கும் சீன்களில் எல்லாம் கஷ்டப்படுகிறார்...பகத் பாசிலின் மனைவி என்பதால் அந்த படத்தில் நடித்தாரோ தெரியவில்லை 

11 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சகோதரி
வழமையில் படம்கள் பார்ப்பது மிகவும் குறைவு.நீங்கள் எழுதியபடியால் மகளுக்கும் சொல்லி அவர்களும் இருந்து பார்த்தார்கள்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
        யாழில் இப்படியான தகவல்களும் தருகிறார்களா என்று மிகவும் ஆச்சரியப்பட்டா.
தகவலுக்கு நன்றி.

நன்றி அண்ணா ...பார்த்த நல்ல படங்களை இதில் பகிர்ந்தால் மற்றவர்களும், தங்களுக்கு பிடித்தால் பாத்துப் பயன் பெறட்டும் 

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் பார்த்தேன் மத்திய கிழக்கில் இருக்கும் போது பல மொழிகள் படத்தைப்பார்ப்பதுண்டு இலங்கையில் சாத்தியம் இல்லை இருந்தும் தனிய இருந்து பார்த்தேன் வீட்டில பேச்சு எல்லாம் முடிஞ்சி இப்ப மலையாளப்படம்    நண்பர்கள்ட சொல்ல சகிலா படமா என்று கேட்பானுகள் என்று நினச்சி சொல்லல 

உன்மையில் பகத் பாசில் பின்னி பிணைந்து பிடல் எடுத்துள்ளார் அபாரமான நடிப்பு  

இன்று மர்டானி 2 கிந்திப்படத்தை பார்க்க டவுன்லோட் பண்ணியிருக்கேன் 

நல்ல படங்கள் இருந்தால் பகிருங்கள் 

10 hours ago, உடையார் said:

நன்றி ரதி, இந்தப்படம் இதுவரை பார்க்கவில்லை

கட்டாயம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் "ரணா" சுப்பர் ஹான்சம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

நானும் நஸ்ரியாவை அந்த கரெக்டரில் எதிர் பார்க்கவில்லை ...சிகரெட் பிடிக்கும் சீன்களில் எல்லாம் கஷ்டப்படுகிறார்...பகத் பாசிலின் மனைவி என்பதால் அந்த படத்தில் நடித்தாரோ தெரியவில்லை 

நன்றி அண்ணா ...பார்த்த நல்ல படங்களை இதில் பகிர்ந்தால் மற்றவர்களும், தங்களுக்கு பிடித்தால் பாத்துப் பயன் பெறட்டும் 

நல்ல படங்கள் இருந்தால் பகிருங்கள் 

கட்டாயம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் "ரணா" சுப்பர் ஹான்சம் 😄

ரதி பார்த்துமுடித்துவிட்டேன். நல்ல படம், ஆமாம் ரணா சுப்பர்😄, Nani யின் படங்களை விரும்பி பார்ப்பேன்,  இதை தவறவிட்டுவிட்டேன். ஆஹா கல்யாணம், ஜாமீன்...பார்க்க கூடிய படங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 17:07, ரதி said:

நல்ல படங்கள் இருந்தால் பகிருங்கள் 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பது இந்தப்படம்  The Behind enemy Line 

Owen Wilson Editorial Stock Photo - Stock Image | Shutterstock

Lock down ல இங்க வந்து சிக்கி விட்டன் அக்கா  , புத்தகம், படம் எதிலுமே மனசு போகுதில்ல  அடுத்து என்ன என யோசித்து கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை பார்க்க வேண்டிய படம்

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு திரில்லர் படம் விருப்பம் என்றால் இந்த படத்தை பாருங்கள் ...சுப்பர் படம் ...ஆங்கில சப் டைட்டிலோடு கூடிய கொப்பி கிடைக்கவில்லை....ஆனால் படம் விளங்குது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎04‎-‎2020 at 15:24, அபராஜிதன் said:

Lock down ல இங்க வந்து சிக்கி விட்டன் அக்கா  , புத்தகம், படம் எதிலுமே மனசு போகுதில்ல  அடுத்து என்ன என யோசித்து கொண்டிருக்கிறேன்.

திருமணம் முடிந்து விட்டதா?...ஊரில் தான் இருக்கிறீர்கள். தோட்ட வேலை செய்யலாம் தானே !...படிச்சால் அதெல்லாம் செய்யக் கூடாது என்று இருக்கா 🙂இல்லைத் தானே
 
  • கருத்துக்கள உறவுகள்

Naan Ee என்ற படம் 2012 வந்தது என்றாலும் நல்ல படமென்று எனது நண்பர் சொன்னார்.
எனக்கு இன்னமும் நேரம் கிடைக்கவில்லை.
யாரும் தவற விட்டிருந்தா பாருங்கள்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து ஆஸ்கார் விருதுகளை வென்ற இப்படத்தை பாருங்கள்.. "சேவிங் ப்ரைவேட் ரியான்"

இரண்டாம் உலகப் போரின் போது, நான்கு ஆண் பிள்ளைகளின் தாயார் ஒருவர் தன் மூன்று புதல்வர்களையும் கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுது தற்செயலாக இந்த தகவலை இராணுவ மேலிடம் கண்டறிகின்றது. ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (ரியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.

இந்தப் பணிக்கு கேப்டன் மில்லர் (Tom Hanks) தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கேப்டன் மில்லர் தலைமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் ரியானை, கேப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேட விழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா (Omaha Beach) கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில், எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.

ரியானை சந்தித்தார்களா..? இல்லையா..? என்பதும் எத்தனை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள்..??? என்பதுமே மிகுதிக் கதை.

MV5BMzIyNDk3NjI5NF5BMl5BanBnXkFtZTcwNjE4NzgwMw@@._V1_SX1549_CR001549999_AL_.jpg?fit=1549,999&ssl=1&w=800  maxresdefault.jpg

ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்'கின் (Steven Spielberg) மற்றொரு அருமையான படம், பிரைம் வீடியோவில் இருக்கிறது.முதல் இருபது நிமிடங்களில் நடக்கும் போர் காட்சிகள் மிகுந்த செலவில் சிறப்பாக படமெடுக்கப்பட்டுள்ளது.

யூடுயூபில் முழு காணொளி கிடைக்கிறது.. (இதை யாழ் களத்தில் இணைக்கலாமா..? என தெரியவில்லை..!  :innocent:)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பதில் பிரச்சனை இல்லையே வன்னியர். உரிமம் உள்ளவர்கள், லோக்கடவுன் காரணமாக, மனுமுவர்ந்து மக்களுக்கு பார்க்க, கூகுள் மூலமாக வசதி செய்துள்ளனர்.

Andrew Lloyds Webber எனும் ஆங்கிலேயர் ரஹ்மானை வைத்து பம்பாய் ட்ரீம்ஸ் என்னும் மியூசிக்கல் ஷோ ஒன்றினை எடுத்தவர்.

அவரும் கூட, இந்த லோக்கடவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்கள் பார்க்கும் வண்ணம் தனது மேடை நாடக காணொளி பதிவுகளை யூடியூபில் ஏத்தி ஒவொரு வெள்ளி அன்றும் ஒவொரு வித நாடங்களை பார்க்க வசதி செய்துள்ளார்.

24 மணிநேரம் மட்டும், பிரித்தானியாவில் மட்டும் தெரியுமாறு உள்ளது.

Edited by Nathamuni

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2020 at 19:49, தனிக்காட்டு ராஜா said:

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பது இந்தப்படம்  The Behind enemy Line 

Owen Wilson Editorial Stock Photo - Stock Image | Shutterstock

இதில் 4 படங்கள் உண்டு. எந்த ஆண்டு வந்த படம் நல்லது. அநேகமாக தொடர் படங்கள் முதலாவது படத்தை போல் நன்றாக இருப்பதில்லை.

நேற்று கீதா கோவிந்தம் (2018) தமிழ் (ஒரிஜினல் தெலுங்கு)  டப்பிங் படம் பார்த்தேன், நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னதான் இந்த படத்தில் கதையுள்ளது. 

இது ஒரு மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கதை. இப்படியான பாஸ்டர்கள் இருக்கின்றார்களா? இதை ஒரளவுக்கே உண்மை எனலாம். எல்லமே இப்பொழுது ஒரு வியாபரமாக போய்விட்டது என்பது உண்மை. Kennath Copeland, Joel Osteen,   Creflo Dollar, போன்றவர்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு புதிய விடயமாக இருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இயேசு தன்னுடைய போதனைகளில் உண்மையாக ஒரு போதகர் எப்படியிருக்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். அது ஒர் உண்மையான விசுவாசிக்கு போதும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, colomban said:

அப்படி என்னதான் இந்த படத்தில் கதையுள்ளது. 

இது ஒரு மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கதை. இப்படியான பாஸ்டர்கள் இருக்கின்றார்களா? இதை ஒரளவுக்கே உண்மை எனலாம். எல்லமே இப்பொழுது ஒரு வியாபரமாக போய்விட்டது என்பது உண்மை. Kennath Copeland, Joel Osteen,   Creflo Dollar, போன்றவர்களை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு புதிய விடயமாக இருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இயேசு தன்னுடைய போதனைகளில் உண்மையாக ஒரு போதகர் எப்படியிருக்க நீங்கள் இந்த  படம் பார்த்தினீங்களோ 
வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். அது ஒர் உண்மையான விசுவாசிக்கு போதும்

நீங்கள் இந்த  படம் பார்த்தினீங்களோ ?
 
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

நீங்கள் இந்த  படம் பார்த்தினீங்களோ ?
 
ஆம் போன வெள்ளிக்கிழமை பார்த்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.