Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

     by : Litharsan

R.Sampanthan-1.jpg

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின்மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லின, பல்கலாசார, பன்மைத்துவ சமூகமொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்முகமாக கணிசமானளவு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளின் ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் பெருமளவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் பதிவான விடயங்களாகும்.

எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இப்பேட்டியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும் நடைமுறையை குழப்புவதாகும். அத்தகைய தீய முயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தமிழ் அரசியல் போராட்டம் போன்ற சமத்துவத்திற்கும் நீதிக்குமான ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றின்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர் போராட்டம் தொடங்கியபோது அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது.

ஜனநாயக வழியிலானதும் சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் 70 களின் பிற்பகுதியிலும் 80களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்பட்டிருப்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது. அகிம்சை வழியில் பற்றுறுதி கொண்டிருந்த தமிழ் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.

2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது. நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

நீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் அடிப்படையில் தேசியப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கும் அதன் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றமும் செழிப்பும் ஏற்பட முடியும்.

அத்தகைய தீய முயற்சிகளினால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாமெனவும் பெரும் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றைக் காணும் முயற்சியின்மீது கவனத்தைச் செலுத்துமாறு சிங்களவர், தமிழர் மற்றும் ஏனைய அனைத்து இனத்தவர்கள் ஆகிய அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடாத விடயங்கள்மீது முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக இத்தகையதொரு நிலைப்பாட்டின் பின்னால் ஒன்றுபட்டு நிற்பதிலேயே நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமானதொரு தீர்வினை அடைவதற்கான எமது வலிமை தங்கியுள்ளது என்பதை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பல வழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு ஆளாகியிருந்தனர். ஒரு பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். தமக்கு நிகழ்ந்தவற்றைத் தமிழ் மக்கள் தவிர்க்கமுடியாதவாறு வேதனையோடு நினைவுகூர்வர். எனினும் முக்கிய பிரச்சினை தொடர்பிலான அவர்களது சிந்தனையோட்டத்தை இது சிதறடித்துவிடக் கூடாது.

தேசியப் பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்த சமாதானத்தையும் நிம்மதியையும் முழு நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் வழங்கும். இக்குறிக்கோளை அடைவதற்காக ஒற்றுமையாகப் பாடுபடுவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இனங்களுக்கிடையில்-குழப்/

‘சுமந்திரனின் பதில் நேர்மையானது

சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு அந்த நேர்காணில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும்  நோக்கத்தோடும் அந்த நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் எனவும் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்குவந்த ஜனாதிபதிகளான ஆர் பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ்; பெருமளவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்  சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில்  குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.

இப்பேட்டியின் நோக்கம் சிங்கள, தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும்  நடைமுறையை குழப்புவதாகும்.

அத்தகைய தீயமுயற்சிகளால் மக்கள்  குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

தமிழர் போராட்டம் தொடங்கியபோது, அது  ஜனநாயக ரீதியானதாகவும்  சமாதான வழியிலானதாகவும்  வன்முறையற்றதாகவுமே இருந்தது.

ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 70 களின் பிற்பகுதியிலும், 80 களின்  தொடக்கத்திலும்  தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வுகாணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும்  தோன்றியிருக்காது.

அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும்  ஒப்பந்தங்களையும்;  பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.

2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட  அமைதி வழி தமிழர் போராட்டம்  தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது. 

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன்  அந்தக்கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார்.  

சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். 

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பலவழிகளிலும்  பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்குமுன்னரும் தமிழ் மக்கள்    இன அழிப்புக்கு ஆளாகியிருந்தனர்.

ஒருபெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள்  நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். 

தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும், நிம்மதியையும் தரும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சமநதரனன-பதல-நரமயனத/150-250312

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

     by : Litharsan

R.Sampanthan-1.jpg

1. தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

2. தேசியப் பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்த சமாதானத்தையும் நிம்மதியையும் முழு நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் வழங்கும். இக்குறிக்கோளை அடைவதற்காக ஒற்றுமையாகப் பாடுபடுவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இனங்களுக்கிடையில்-குழப்/

1.   கேட்பவன் கேட்டால் தற்போதுள்ள அதிசிறந்த அறிவாளியான(இங்கு யாழில் ஆரோ சொன்ன தகவற்படி) சுமந்திர மகாத்தயாவுக்கு தமிழரது விடுதலைப் போராட்ட நியாயத்தையும் சனநாயகப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டபோது வரலாற்றின் தன்னியல்பாகத் தோற்றம் கொண்ட ஆயுதப்போராட்டத்தின் நியாதாதிக்கத்தையும் கூறமுடியாமற் போனதோ சம்பந்தரையா? ஐயா ஒட்டமொத்தத் தமிழரையும் கேனைப்பயல்களாக்குகிறாரா அல்லது கேனைப்பயல்கள் என்று நினைக்கின்றாரா?

2. முதலில்  ஏலுமென்றால் உந்தக் கூட்டமைப்பை ஒன்றாக்கப் பாருங்கோ.  ஒற்றுமையென்பது கூடிப்பகிர்வது. கருத்தியல் முரண்களை வெட்டியாடுவதல்ல. தீர்வு தேடுவது. ஓரங்கட்டுவதால் கூட்டமைபபைச் சுருக்கிவிட்டு ஒற்றுமையென்ற முலாமினுள் ஒளியும். தந்திரம். தமிழினத்தின் யே.ஆர். ஆன சமபந்தரையா இன்னும் ஒரு பத்து வருடம் சும்மோட சேர்ந்து தமிழரது அரசியலை நகர்த்தினாரெண்டால் வட-கிழக்கிலை தமிழரென்றொரும் இனம் இருந்ததா என்று கேட்கிற நிலைக்குக் கொண்டேவிட்டாலும் வியப்பில்லை. 

3 hours ago, nunavilan said:

எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இப்பேட்டியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும் நடைமுறையை குழப்புவதாகும். அத்தகைய தீய முயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

சுமந்திரன் அவர்களை, எவ்வாறு சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாதவரை, சம்பந்தன் அவர்கள் அமைப்பின் பேச்சாளாராக வைத்தது அவரின் தவறு. 

யாரை எதற்கு நியமிக்கவேண்டும், எப்பொழுது பதவிகளில் மாற்றங்களை கொண்டுவரல் வேண்டும் என்பன ஒரு அமைப்பின் தலைவரின் கடமை. அதை அவர் செய்யாத;பொழுது அவரை மாற்றவேண்டியது அமைப்பின் நிர்வாகிகளின் கடமை. 

நிர்வாகிகள் மக்கள் ஆணையை சரியாக செய்யாத இடத்தில், மக்கள் வேறு கட்சிகளை / தலைமைகளை நாடுவது / தேடுவது காலத்தின் கட்டாயம்.   

11 minutes ago, ampanai said:

சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். 

சொந்தக்கருத்துக்களை தெரிவிப்பவர்கள் கட்சியை விட்டு விலக்கியபின்னர் தெரிவிக்கவேண்டும். கட்சியில் இருந்து கட்சியின் கருத்துக்களை மட்டுமே கூறவேண்டும். அதை இந்த வல்லவன் தெரிந்தே செய்வதுதான் கொடுமை.  

ஒரு கட்சி சார்பாக இவர் பேட்டியளித்துள்ளார். எனவே, தலைவராக சம்பந்தர் வெளியில் இவ்வாறு கூறினாலும் ( கட்சியின் ஒற்றுமையை பேணவேண்டும் என்பதற்காக ), கட்சிக்குள் இறுக்கமான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும். 

ஆனால், தலைவர் சம்பந்தர் ஐயா அவ்வாறு எடுக்காமல் பலமுறை தவறுகளை செய்து கட்சியை பலவீனமாக்கி உள்ளார். 

இங்கே தவறு கட்சியின் பேச்சாளரிடம் மட்டுமல்ல கட்சியின் தலைவரிடமும் தான் உள்ளது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

அப்பவும் நான் யோசிச்சனான். சுமந்திரன் எல்லாத்தையும் நல்லாய்த்தானே செய்யிறவர். ஏன் இதிலை சறுக்கீட்டார் எண்டு.......சம்பந்தன் சொன்னாப்பிறகுதானே தெரியுது கேள்வி கேட்டவரிலை தான் பிழை.....
சொக்கதங்கங்கள் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

சுமந்திரன் அவர்களை, எவ்வாறு சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாதவரை, சம்பந்தன் அவர்கள் அமைப்பின் பேச்சாளாராக வைத்தது அவரின் தவறு. 

யாரை எதற்கு நியமிக்கவேண்டும், எப்பொழுது பதவிகளில் மாற்றங்களை கொண்டுவரல் வேண்டும் என்பன ஒரு அமைப்பின் தலைவரின் கடமை. அதை அவர் செய்யாத;பொழுது அவரை மாற்றவேண்டியது அமைப்பின் நிர்வாகிகளின் கடமை. 

நிர்வாகிகள் மக்கள் ஆணையை சரியாக செய்யாத இடத்தில், மக்கள் வேறு கட்சிகளை / தலைமைகளை நாடுவ

முழுப் பூசணிக்காயையும் சோத்துக்க புதைக்க இந்த இரண்டு அப்புக்காத்து மட்டும் தான் தெரியும்.பூவின் மேல் நடப்பது இல்லை புரட்சி பிரான்சு புரட்சி ரஸ்சியப் புரட்சி இப்படிப் பல புரட்சிகள் எப்படி நடந்தன என்று தெரிந்தும் நடிக்கிறார்கள்.ஆயுதப் புரட்சி செய்த 
கட்சிக்கு பின் ஜே வி பி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களோடு சேர்ந்து ஊர்வலம் போன போது அவர்களும் ஆயுதம் எடுத்தது தெரியாமல் போனதா.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இதை எழுதி அறிக்கைவிட்டவர் இவரா? அவரா?

சம்மந்தன் தனது வழமையான எடுபிடித் தொழிலை செய்து வருகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிய ஒருங்கமைக்கபட்ட  பேட்டி என்றால் கேள்விகளின் சாராம்சம் முன்கூடியே தெரியபடுத்தப்படும் ..

அப்படியும் குதர்க்கமான கேள்வி என்டா பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ அல்லது சனநாயக நாட்டில் மைக்கை கழற்றி கொடுத்துவிட்டு வெளியே கிளம்பும் வசதியும் உண்டு ..

டிஸ்கி

சுருக்கமாக சொன்னால் பேட்டிக்கு முன்பே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம் ..

hqdefault.jpg

கேள்வியை நீ கேட்கிறாயா ..? அல்லது நான் கேட்கட்டுமா..? 👍

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லாதவராகி நீண்டகாலமாகிவிட்டது. இப்போது அவர், தனக்குத் தானே நம்பிக்கை அற்றவராகிவிட்டார். இல்லாட்டில் சம்பந்தனின் பெயரில் அவரே அறிக்கை விடமாட்டார். 

தமிழீழ விடுதலை புலிகள் ஈழ தமிழர்கள் சனநாயக வழியில் கேட்ட தமிழீழத்தை 2002 இல் முழுமையாக பெற்று கொடுத்ததுடன், தமிழ் அரசியலையும் வெளிப்படையாக தான் செய்திருந்தனர். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று 1976 இல் ஏங்கிய தமிழருக்கு, தமக்கு கிடைத்த வரத்தை காக்கும் திறனற்ற சுயநல குழுவாக ஆகினர் தமிழரசு கட்சி..

"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்.

2004 ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் மேற்குறிப்பிட்டவாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது.

97201535_2286238535004359_8238153723663089664_o.jpg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=Ca1gU-8C5iEAX8RovSU&_nc_ht=scontent-yyz1-1.xx&_nc_tp=7&oh=7847afcfe364c1c5db13c7310116e890&oe=5EE574EC

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தனிமனித தலைமைகளின் தொடர்ச்சியாக சுமந்திரன் வருவதற்கான வாய்ப்புக்கள் என்ன?

வரிசை இப்படி வரும்..

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • சேர் பொன்னம்பலம் அருணாசலம்
  • கணபதி காங்கேசர் பொன்னம்பலம்
  • சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
  • அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
  • வேலுப்பிள்ளை பிரபாகரன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (?)

தமிழ் மக்கள் (அநேகமாக இது இந்திய உபகண்டத்திற்கும் பொருந்தும்) அரசர்களின் தொடர்ச்சியாக அரசியல்தலைமைகளைப் பார்ப்பதால் ஒரு கூட்டுத்தலைமையோ, உட்கட்சி ஜனநாயகம் உள்ள அரசியல் கட்சிகளோவாய்க்க வாய்ப்பில்லை. எனவேதான் ஒரு தலைவர் எப்போதும் தேவைப்படுகின்றார்.  வசீகரமும், ஆளுமையும், செயற்திறனும் இருந்தால் போதும் மக்கள் பின்தொடர. இப்போதைய காலகட்டத்தில் சுமந்திரன் தமிழர்களின்அரசியல் தலைவராக வாய்ப்புள்ளதா? அவர் கிடைத்த வாய்ப்பை இந்தச் செவ்வி மூலம் தவறவிட்டுவிட்டாரா?

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா? எவராவது வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பு உட்பட தெற்கில் வாழும் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அரசியலில் பலத்தைக் காட்டமுடியுமா? 

இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்பட்டிருப்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது. அகிம்சை வழியில் பற்றுறுதி கொண்டிருந்த தமிழ் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.

2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது. நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஐயா! விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருவீர்கள், பூசி மெழுக என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இருந்தாலும் ஒரு வேண்டுகோள், தெரிந்தோ தெரியாமலோ  பிழை நடந்து விட்டது என எண்ணி மன்னிப்பு கேட்டோ,  கேட்காமலோ பதவி விலகுவது அவருக்கு மரியாதை. சுத்து மாத்து பண்ணி உங்களை நிஞாயப் படுத்த வெளிகிட்டால் நாறிப்போய் விடுவீர்கள். எங்களுக்கு சொல்லும் இதே விளக்கத்தை அங்கே சொல்லியிருந்தால், அதுவே துணிவு. அதைவிட்டு இங்கொன்று, அங்கொன்று மாத்திப்பேச வெளிக்கிட்டு, நாங்கள் ராஜ தந்திரிகள் என்று உங்களை நீங்களே தட்டிக்கொள்ளுங்கள். விளைவையும் ஏற்க தயாராகுங்கள். சொல்லில் உறுதி இல்லாத உங்களை நம்பி வாக்குபோட்டதற்கு, நீங்கள்  உங்களையே நிரப்பி சிங்களத்தோடு  வாழ்வது மேல் என்கிற நிலைக்கு எங்களை முட்டாளாக்கி விட்டீர்கள். தமிழர் பிரதி நிதிக்கு தமிழரால் மரண அச்சுறுத்தல் என சிங்களம் பாதுகாப்பு கொடுக்கும் போதே தெரியுது உண்மை முகம். நீங்கள் தமிழருக்காக உழைக்க வில்லை என்பதும். என்றாலும் வைத்தியசாலையில் மூடிக்கொண்டு படுக்காமல், வந்து விளக்கம் தந்ததற்கு நன்றி. அதற்கு வரும் தேர்தலும் ஒரு காரணம். விக்கியர் பதவி விலக வேண்டும். என்று ஓடியோடி பிரச்சாரம் செய்தவரை காலம் எப்படி வளைத்துப் பிடித்து விட்டது பார்த்தீர்களா? இதுதான் ஐயா தர்மம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். 

முன்பொரு தடவை, அனந்தி. ஏதோ கட்சியின் கொள்கைக்கு மாறாக கருத்து சொல்லிவிட்டார் என்று விளக்கம் கேளாமல்  குத்தி முறிந்தீர்களே, நினைவிருக்கா? அப்போ, அவர்மீது இருந்த காழ்ப்புணர்ச்சி உங்களை அப்படி பேச வைத்தது. இப்போ,  பாச உணர்ச்சி இப்பிடி பேசுது. நீங்கள் சரியான தலைமைதானா? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா?

சம்பந்தரின் ஆளுமையில் தமிழர் என்ன நன்மைகளை அடைந்தனர்? இதோ இங்கே, அதோ அங்கே. என்பதைத் தவிர. சுமந்திரனைத்தவிர அரசியல் பேராசை பிடித்த தமிழரின் விடிவுக்கு முட்டுக்கட்டை போடுற,  சிங்களத்திற்கு முண்டு கொடுக்கிற  வேறொருவர் இருக்க மாட்டார் தற்போதைக்கு. என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் கிடைத்த வாய்ப்பை இந்தச் செவ்வி மூலம் தவறவிட்டுவிட்டாரா?

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா? எவராவது வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பு உட்பட தெற்கில் வாழும் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அரசியலில் பலத்தைக் காட்டமுடியுமா? 

இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வராது.

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழரின் தனிமனித தலைமைகளின் தொடர்ச்சியாக சுமந்திரன் வருவதற்கான வாய்ப்புக்கள் என்ன?

வரிசை இப்படி வரும்..

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • சேர் பொன்னம்பலம் அருணாசலம்
  • கணபதி காங்கேசர் பொன்னம்பலம்
  • சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
  • அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
  • வேலுப்பிள்ளை பிரபாகரன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (?)

தமிழ் மக்கள் (அநேகமாக இது இந்திய உபகண்டத்திற்கும் பொருந்தும்) அரசர்களின் தொடர்ச்சியாக அரசியல்தலைமைகளைப் பார்ப்பதால் ஒரு கூட்டுத்தலைமையோ, உட்கட்சி ஜனநாயகம் உள்ள அரசியல் கட்சிகளோவாய்க்க வாய்ப்பில்லை. எனவேதான் ஒரு தலைவர் எப்போதும் தேவைப்படுகின்றார்.  வசீகரமும், ஆளுமையும், செயற்திறனும் இருந்தால் போதும் மக்கள் பின்தொடர. இப்போதைய காலகட்டத்தில் சுமந்திரன் தமிழர்களின்அரசியல் தலைவராக வாய்ப்புள்ளதா? அவர் கிடைத்த வாய்ப்பை இந்தச் செவ்வி மூலம் தவறவிட்டுவிட்டாரா?

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா? எவராவது வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பு உட்பட தெற்கில் வாழும் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அரசியலில் பலத்தைக் காட்டமுடியுமா? 

இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வராது.

ஆழமாக சிந்தித்து எழுதும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர் - நல்ல பதிவு. ஆனால் எனது பார்வையில் இந்த வரிசை வித்தியாசமானது:

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

16 minutes ago, கற்பகதரு said:

இங்கு சில நேரங்களில் கருது எழுதுபவர்கள் ஒரு பக்கத்தைதான் பார்க்கிறார்கள்। அதாவது கத்தியை தீட்டுகிறார்களே  ஒழிய புத்தியை தீட்டுவதில்லை। எந்த ஒரு காரியத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும்। எனவே இதில் செய்தி இப்படி வந்து விட்ட்து என்று அடித்து பிடித்துக்கொண்டு கருது எழுத தேவையில்லை।

என்னைப்பொறுத்தவரையும் பையில் கனம் இல்லாவிடடால் வழியில் பயப்படத்தேவையில்லை। சுமந்திரனும், சம்பந்தரும் அப்படியான நிலையில்தான் இருக்கிறார்கள்। இருந்தாலும், சுமந்திரன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்। 

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடங்களாக மக்களை ஈடு வைத்து  உழைக்கினம். எதை மீட்டார்கள்?  உடமைகளை இழந்து, உறவுகளை பறிகொடுத்து, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று கூட தெரியாமல், அனாதைகளாய்  வீதிகளில் காத்துக்கிடந்து போராடுகிறார்கள் மக்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமில்லை இவர்களுக்கு. தாம் விட்ட தவறுகளுக்கு விளக்கம் சொல்லவே நேரம் காணாது அவர்களுக்கு. முடியாவிட்டால், மக்களுக்கு அறிவித்து விட்டு பதவி விலக வேண்டும். தங்கட ஆயுள் முழுவதும் மக்களை ஏமாற்றுவது என்றே திட்டம் போட்டு செயற்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

ஆழமாக சிந்தித்து எழுதும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர் - நல்ல பதிவு. ஆனால் எனது பார்வையில் இந்த வரிசை வித்தியாசமானது:

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

உங்கள் வரிசை technocrats ஆன கொழும்பு உயர் குழாம் (elite) தமிழர்களின் வரிசையாக இருக்கின்றது! இவர்கள் பொதுசன ஆதரவில் தங்கியிருக்காமல் உயார் குழாம் உறவுகளுடன் அரசியல் மாற்றங்களைச் செய்ய முனைந்தவர்கள். ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்புடன் இருக்கவில்லை. 

இலங்கை முழுவதும் வாழும் தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வை (அதிகாரப் பரவலாக்கம் ஊடாக) பெற்றுத்தரக்கூடிய வலுவுள்ள தலைமை தமிழர்களிடம் இல்லை. இனியும் வருமா என்பதும் சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா? எவராவது வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பு உட்பட தெற்கில் வாழும் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அரசியலில் பலத்தைக் காட்டமுடியுமா? 

இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வராது.

ஆயுத பலம் அரசியல் பலம் ஆளுமை  மிக்க தலைவர்கள் இப்படி எல்லாமே எங்களிடம் இருந்தது ஒரு காலம் சிங்கள தலைமையையோ அந்த மக்களின் mindsetகொஞ்சமும் மாற்ற முடியாது.ஒரு 13 வது சரத்தை கூட முழுமையாக பெற முடியவில்லை .
ஆழமாக ஒரு இன வாதமும் பெரும் தேசியவாதமும் தான் இங்கு ஆட்சி செய்கிறது.தமிழருக்கு இருக்கும் பலம் புலம் பெயர் மக்களும் சர்வதேச ஆதரவும் தான்.இதை மாற்ற வல்ல மாற்றுத் தலைமை அவசியம்.முன்பு படித்த தலைவர்கள் இருந்தாலும் தமிழருக்கான தீர்வை ராயத்தந்திர ரீதியாக பெற்று கொடுக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உங்கள் வரிசை technocrats ஆன கொழும்பு உயர் குழாம் (elite) தமிழர்களின் வரிசையாக இருக்கின்றது! இவர்கள் பொதுசன ஆதரவில் தங்கியிருக்காமல் உயார் குழாம் உறவுகளுடன் அரசியல் மாற்றங்களைச் செய்ய முனைந்தவர்கள். ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்புடன் இருக்கவில்லை. 

மக்களின் ஏகோபித்த விருப்பை பெற்றவர்களால் மக்களுக்கு தேவையன அரசியல்மற்றத்தை த்தரமுடியுமா? எங்கள் வரலாறு இல்லை என்றே சொல்கிறது. இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை. இதற்குள் சிலர் ஆர்ப்பாட்டம், செருப்புமாலை என்று மக்களை ஏவிவிட மக்களும் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பின்னால் போகும் சாத்தியம் அதிகம். இந்த மனித உளவியல் இயற்கையானது. இதை (crowd psychology or social psychology) என்று அழைப்பர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுத்தான் மாற்றங்கள ஏற்படுத்த வேண்டும் என்றால் மக்களை நன்கு கவரக்கூடிய கூடியவர்களே மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம். தமிழ் மக்களை கவரும் சக்திபடைத்த அரசியல்வாதிகள் பலர்  வந்து போனார்கள் ஆனால் மாற்றம் வரவில்லை, ஏன் தெரியுமா? சமயம் பரப்பி பணம் திரட்டும் சுவிசேச திருடர்களும் கள்ளச்சாமியார்களும் போல இந்த அரசிய்வாதிகளும்,  மக்களை கவரும் கலையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் - அரசியல் சட்டத்தில் இந்த அரசியல்வாதிகளுக்கு அறிவு பூச்சயம். அரசியல் சட்டத்தில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மக்களை கவரும் கலையில் அறிவு பூச்சியம். சுமேந்திரனுக்கோ அந்த அறிவு பூச்சியத்துக்கு கீழே.

ஆகவே இதுவரை காலமும் இருந்தது போல முதலில் மக்களை கவரத்தக்கவராக இருக்கட்டும், பிறகு அரசியல் மாற்றத்தை கொண்டுவருகிறாரா என்று பார்க்கலாம் என்று தொடர்ந்தால் எந்த மாற்றமும் வராது.

2 hours ago, கிருபன் said:

இலங்கை முழுவதும் வாழும் தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வை (அதிகாரப் பரவலாக்கம் ஊடாக) பெற்றுத்தரக்கூடிய வலுவுள்ள தலைமை தமிழர்களிடம் இல்லை. இனியும் வருமா என்பதும் சந்தேகமே.

பெருமளவு மக்களை கவரத்தக்கவர்கள் தான் அரசியலில் ஈடுபட்டு அரசியல் தீர்வை கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை தீர்வு தரத்தக்க தலைமை சாத்தியம் இல்லை. மக்களை கவரும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியல் தீர்வை திட்டமிட்டு, ஒப்பந்தம் உருவாக்கி பலரையும் சம்மதிக்க வைத்து அதை நிரந்தரமான தீர்வாக நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை. இவ்வாறான ஆற்றலுள்ளவர்களாலேயே தீர்வை கொண்டுவர முடியும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்கள் தங்கள் ஊடகங்களை முன்னிலைப்படுத்துவதற்காக எக்குத் தப்பான கேள்விகளைத் தான் கேட்பார்கள்...இவர் தான் நிதானமாய் யோசித்து பதில் சொல்லி இருக்க வேணும் 
 
10 hours ago, கிருபன் said:

தமிழரின் தனிமனித தலைமைகளின் தொடர்ச்சியாக சுமந்திரன் வருவதற்கான வாய்ப்புக்கள் என்ன?

வரிசை இப்படி வரும்..

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • சேர் பொன்னம்பலம் அருணாசலம்
  • கணபதி காங்கேசர் பொன்னம்பலம்
  • சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்
  • அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
  • வேலுப்பிள்ளை பிரபாகரன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (?)

தமிழ் மக்கள் (அநேகமாக இது இந்திய உபகண்டத்திற்கும் பொருந்தும்) அரசர்களின் தொடர்ச்சியாக அரசியல்தலைமைகளைப் பார்ப்பதால் ஒரு கூட்டுத்தலைமையோ, உட்கட்சி ஜனநாயகம் உள்ள அரசியல் கட்சிகளோவாய்க்க வாய்ப்பில்லை. எனவேதான் ஒரு தலைவர் எப்போதும் தேவைப்படுகின்றார்.  வசீகரமும், ஆளுமையும், செயற்திறனும் இருந்தால் போதும் மக்கள் பின்தொடர. இப்போதைய காலகட்டத்தில் சுமந்திரன் தமிழர்களின்அரசியல் தலைவராக வாய்ப்புள்ளதா? அவர் கிடைத்த வாய்ப்பை இந்தச் செவ்வி மூலம் தவறவிட்டுவிட்டாரா?

சம்பந்தருக்குப் பின் சுமந்திரனைத் தவிர ஆளுமையுள்ளவர்கள் எவராவது இருக்கின்றார்களா? எவராவது வடக்கு, கிழக்கில் மற்றும் கொழும்பு உட்பட தெற்கில் வாழும் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து அரசியலில் பலத்தைக் காட்டமுடியுமா? 

இல்லை என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் வராது.

சம்சும் ஆளுமை உள்ளவர்களா?... நீங்கள் சொன்ன தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வந்து அரசியல் பலத்தை காட்ட இவர்களால் முடிந்ததா? பதில் இல்லை .
கிழக்கில் பல படித்தவர்கள் அரசியலில் ஆர்வமாய் உள்ளதை காண கூடியதாய் இருக்குது ..தேர்தலிலும் நிற்கிறார்கள் ...பொறுத்திருந்து பார்ப்போம் ...மாற்றம் வருவது நல்லத்திற்கே.
வடக்கிலும் படித்தவர்கள் துணிந்து அரசியலில் ஈடுபட முன் வர வேண்டும் ..சுமத்திரனின் /கூட்டமைப்பின் வாலை பிடித்து தொங்குவதை விடுத்து தனித்து அரசியலில் முன்னேற வேண்டும் 
 
52 minutes ago, கற்பகதரு said:

மக்களின் ஏகோபித்த விருப்பை பெற்றவர்களால் மக்களுக்கு தேவையன அரசியல்மற்றத்தை த்தரமுடியுமா? எங்கள் வரலாறு இல்லை என்றே சொல்கிறது. இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை. இதற்குள் சிலர் ஆர்ப்பாட்டம், செருப்புமாலை என்று மக்களை ஏவிவிட மக்களும் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பின்னால் போகும் சாத்தியம் அதிகம். இந்த மனித உளவியல் இயற்கையானது. இதை (crowd psychology or social psychology) என்று அழைப்பர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுத்தான் மாற்றங்கள ஏற்படுத்த வேண்டும் என்றால் மக்களை நன்கு கவரக்கூடிய கூடியவர்களே மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம். தமிழ் மக்களை கவரும் சக்திபடைத்த அரசியல்வாதிகள் பலர்  வந்து போனார்கள் ஆனால் மாற்றம் வரவில்லை, ஏன் தெரியுமா? சமயம் பரப்பி பணம் திரட்டும் சுவிசேச திருடர்களும் கள்ளச்சாமியார்களும் போல இந்த அரசிய்வாதிகளும்,  மக்களை கவரும் கலையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் - அரசியல் சட்டத்தில் இந்த அரசியல்வாதிகளுக்கு அறிவு பூச்சயம். அரசியல் சட்டத்தில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மக்களை கவரும் கலையில் அறிவு பூச்சியம். சுமேந்திரனுக்கோ அந்த அறிவு பூச்சியத்துக்கு கீழே.

ஆகவே இதுவரை காலமும் இருந்தது போல முதலில் மக்களை கவரத்தக்கவராக இருக்கட்டும், பிறகு அரசியல் மாற்றத்தை கொண்டுவருகிறாரா என்று பார்க்கலாம் என்று தொடர்ந்தால் எந்த மாற்றமும் வராது.

பெருமளவு மக்களை கவரத்தக்கவர்கள் தான் அரசியலில் ஈடுபட்டு அரசியல் தீர்வை கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை தீர்வு தரத்தக்க தலைமை சாத்தியம் இல்லை. மக்களை கவரும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியல் தீர்வை திட்டமிட்டு, ஒப்பந்தம் உருவாக்கி பலரையும் சம்மதிக்க வைத்து அதை நிரந்தரமான தீர்வாக நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை. இவ்வாறான ஆற்றலுள்ளவர்களாலேயே தீர்வை கொண்டுவர முடியும்.

மற்றவர்களை விடுங்கள் இறந்து விட்டார்கள் ...சுமத்திரன் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? ...இவர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பேணுவதில் தப்பில்லை ...ஆனால் "அதனுடாய் மாற்றங்களை செய்வதே இவரது பாணி என்று சொல்லி உள்ளீர்கள்"... இது வரை அவர் செய்த ஏதாவது ஒரு மாற்றத்தையாவது சொல்லுங்கள் பார்ப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

மற்றவர்களை விடுங்கள் இறந்து விட்டார்கள் ...சுமத்திரன் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? ...இவர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பேணுவதில் தப்பில்லை ...ஆனால் "அதனுடாய் மாற்றங்களை செய்வதே இவரது பாணி என்று சொல்லி உள்ளீர்கள்"... இது வரை அவர் செய்த ஏதாவது ஒரு மாற்றத்தையாவது சொல்லுங்கள் பார்ப்போம் .

சுமந்திரன் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள். அரசியல் சட்டத்தில் மாற்றங்களை செய்து தமிழ் மக்களின் குறைபாடுகளை தீர்க்க எடுக்கப்பட்ட எவரது முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை.  2015 வரை ஆட்சியில் இருந்த அரசு போர் வெற்றி காரணமாக அரசியல் தீர்வை கருத்தில் கொள்ள மறுத்தது. அதற்கு பின்னான 5 வருடங்களே சுமந்திரன் அரசியல் தீர்வுக்கு முயன்ற காலம்.

சுமந்திரனின் முயற்சிக்கு பெருமளவில் தடையாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. அவரால் கலைக்கப்பட்ட அரசு சுமந்திரனின் முயற்சிக்கு ஆதரவாக இருந்ததால் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் சென்று ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார். ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் முயற்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. தனது முயற்சியை தோற்கடித்தவர்களையே தன்னுடைய திட்டத்தை செயற்படுத்தும் பங்காளிகளாக்க முயற்சிக்கிறார்.

 இவர் பல சிறு சிறு மாற்றங்களை செய்ய முயலும் ஒருவராக இருந்தால் சில வெற்றி பெற்ற மாற்றங்களை காட்டக்கூடியதாக இருந்திருக்கும். இவர் ஒரே ஒரு மாற்றத்துக்கே முயற்சிக்கிறார். அது ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு. கடந்த 70 வருங்களாக பலரும் முயன்று தோற்றுப்போன ஒரு முயற்சி இது. வேறு சட்டத்துறை அரசியல் மற்றும் சமுகவியல் தலைவர்களான, விக்னேஸ்வரன், குருபரன் குமாரவடிவேல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட விரும்பாததற்கு காரணம் அது வெற்றிபெறாது என கருதுவதாக இருக்கலாம். சுமந்திரனும் மற்றவர்களை போல இந்த முயற்சியை கைவிட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்றா கருதுகிறீர்கள்? வேறு பலரும் அரசியல் தீர்வுதிட்டத்தை முன்வைக்கலாம், அதற்கு சுமந்திரன் தடையாக இல்லை. ஆனால் இவர் தவிர எவருமே முயற்சிக்கவில்லையே? இவரையும் ஒதுங்கிவிடு என்று சொன்னால் அரசியல் தீர்வுக்கு எவருமே முயற்சிக்க கூடாதென்றா சொல்கிறீர்கள்? 

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.