Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்.முபாரக் -

Thurainayagam.JPG

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. 

சமூக வலைத்தளங்களில் உலாவிய பொருத்தமற்ற முறையில் மொழிபெயர்க்கப்பட்ட குறிப்பிட்ட கானொளியே பலர் தங்கள் உணர்வினை வெளிப்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. 

இந்த நேர்காணலை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும்போது நேர்கண்டவர் சிங்கள மக்களிடம் எதனை கொண்டு சேர்க்க முயல்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 எனினும் மிகத் தெளிவாகவும், திடமாகவும் யதார்த்த அரசியல்வாதியாக சுமந்திரன் அவர்கள் பதிலளித்திருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டு பயணிக்கும் நபராக, அவர் ஆயுதப் போராட்டத்தினுடைய பொறிமுறையினை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருந்தார். 

ஒர் உரிமைசார் ஆயுதப் போராட்டமானது தீர்வுக்காக அரசியல் மயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், மூன்று தசாப்த காலங்களுக்கு மேல் நீடிக்காததையும் உலக வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டதனால் இதனை அடியொற்றியதான பதிலாக அதனை நாம் பார்க்க முடியும். 

சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் அவர்கள் உணர்ச்சி அரசியலைத்தாண்டி நடைமுறைச் சாத்தியமான அரசியலை மேற்கொண்டு வரும் சிறந்த அரசியல்வாதி எனவும்,

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை அரசின் அனுசரனையுடனேயே நாம் பெற்றுக் கொள்ள முடியும் அதற்கான அணுகுமுறையினை தமிழ் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்துகின்ற கட்சியின் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

 இலங்கையில் காலாகாலமாக மூவின மக்களும் இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் ஒற்றுமையாக, பரஸ்பர புரிந்துணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். 

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

ஒருசில கடும்போக்குவாதிகளினால் சிங்கள மக்கள் குழப்பமடையச் செய்யப்பட்டு வருகின்றமையினால் இந்நிலை தொடர்ந்து வருகின்றது. 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சொல்ல முடியாத இழப்புக்களையும், துயரங்களையும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள். 

இதனால் தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கான அதிகாரங்களுடன்கூடிய தீர்வு அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள் எனவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க சிங்கள மக்கள் அரசுக்கு ஆணையிட வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!

-

http://www.importmirror.com/2020/05/blog-post_940.html

1 minute ago, colomban said:

சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார்.

போலிக்கு துதிபாடும் துரைநாயகத்தின் விமர்சனம் தேவையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இந்நிலையில் தமிழ் மக்களும் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல மாறாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற அவர்களுக்கான உரிமைகளைக் கோரியே அரசுடன் போராடி வருகின்றார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலாகாலமாக தீர்வு என்ற விடையத்தில் தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

19 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

தமிழ் மக்கள் சிங்கள அரசுகளினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பது தெரிந்தும், ஏமாற்றும் அரசொன்றுக்கு முண்டுகொடுத்து காப்பாற்றிது ஏன்? புரியவில்லை??    

எல்லாம் எல்லோருக்கும் புரியாது. கொரோனா வைரஸ் முகமூடி போட்ட வைத்தியர்களையும் கொல்கிறதே? இன்னமும் முகமூடி போடுகிறீர்களா? இப்படியான கேள்விகள் அந்த துறைசார் வல்லுனர்கள் தவிர மற்றவர்களுக்கு பயனற்றவை - உங்கள் கேள்வியும் தான். உங்களுக்கு தேவையான பதில் இணைய செய்தித்தளங்களில் தாராளமாக உள்ளது, ஆனால் உங்களுக்கு புரியவில்லை என்று எழுதியுள்ளீர்கள், அது உண்மை. இது புரிவதற்கு சிக்கலான விடயம். எல்லாம் எல்லோருக்கும் புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அப்ப என்ன செய்து இருக்க வேண்டும்? ரணிலின் ஆட்சியை கலைக்க உதவி செய்து விட்டு மகிந்த அண்ட் கோ வை அப்பவே கொண்டு வந்து இருக்க வேண்டுமா?

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

2 minutes ago, Paanch said:

சந்தர்ப்பம் பேரம் பேசிக் காப்பாற்றுவதற்கு இருந்ததல்லவா....

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

தாரமும், குருவும், அரசியல்வாதிகளும் தலைவிதிப்படி என்று புது மொழி எழுதவேண்டும். 😩

1 hour ago, நிழலி said:

அந்தளவுக்கு எல்லாம் ராச தந்திரம் எல்லாம் எங்கள் தமிழ் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் கூட நிகழ்ந்து இருக்காது.

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அல்ல, சுமந்திரனின் இடத்தில் யார் தற்போது இருந்தாலும் அவதூறுகள் வந்த வண்ணமே அமையும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்பமுடியாது.

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

சுமந்திரன் மீதான பாய்ச்சல் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் என்று எடுக்கப்படாது ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு சமூகம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயற்பாடு என்று எடுத்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சுமத்திரனை போன்று சிந்தித்து தான் செர்.பொன் ராமநாதன் போன்றோர் ஐக்கிய இலங்கையை அன்று வரவேற்றனர் .....அதை ஒழுங்காக நடத்த தெரியாத சிங்களபெளத்த அரசியல்வாதிகள் இப்பொழுது ஐக்கியம் பற்றி பேசுகிறார்கள்....ஆயிரம் ராமனாதங்கள்,ஆயிரம் சுமத்திரன் கள்,ஆயிரம் ஆயிரம் தமிழ்தேச நேசக்  கரங்கள் உருவானாலும் சிங்கள மக்களின் பிரநிதிகளிடமிருந்து  அந்த நேசக்கரத்தை பிடிக்க ஒரு அரசியல்வாதியும் முன்வரப்போவதில்லை....
நேசக்கரத்தை பிடித்தால் வாக்குகளை இழக்க வேண்டும்.....நேசக்கரத்தை உதறிதள்ளினால் அமோக வாக்குகள் ....நான்  அனுபவத்தில் கண்ட உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருத்த எடுப்பில் கற்பனைகளை வளர்த்துவிட்டு எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்களால் நொந்து போனவர்கள் மனதை யதார்த்த அரசியல் செயற்பாடுகள் சாந்தி அடையவைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. 

கற்பனை உலகில் கோட்டை கட்டிய அவர்களை சாந்தி அடையவைக்க வேண்டுமானால் தொடர்ந்தும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நரம்பு  புடைக்க பேசி நடித்து ஏமாற்ற வேண்டும்.
உண்மை நியையை ஏற்று கொண்டு கனவு உலகில் இருந்து அவர்கள் வெளிவருவது தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விளக்கம் கொடுத்து வாக்கு வங்கிக்கு தயாராகினம். கட்சி தலைவருக்கும் விளங்கவில்லை, உறுப்பினர்களுக்கும் விளங்கவில்லை. அப்போ; புரியாத மொழியில் பேசுகிறோம் என்கிற துணிவில் விளாசித் தள்ளி இருக்கிறார் சட்டாம்பி. நாங்கள் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சொன்ன கருத்தை வைத்து ஒரு  பிடி பிடித்தவுடன் அது சொந்த கருத்து என்று உதார் விட்டு ஆள்மாறும் மொள்ளமாரித்தனம் இருக்கும்வரை யார் எதுவேண்டுமானாலும் உளறலாம்.   

இங்கு நல்ல விமரிசனங்களை முன் வைத்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. இருந்தாலும் சிலருக்கு தேவையற்ற விமர்சனங்களை வைக்கவிடடாள் நித்திரையே வராது. 

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா துரைநாயகம் முதலில் சுத்துமாத்திரனுக்கு செம்பு தூக்குவதை விட்டிட்டு உங்களுக்கு வாக்கு போட்ட மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

மூதூர் நகரத்திற்கு வருவதற்கான பாலம் இன்றோ நாளையோ என்று தொங்கிக் கொண்டிருக்கிறது, சோனகர்களை தாண்டி அரச தனியார் உதவிகள் தமிழ் பிரதேசங்களுக்கு வர பஞ்சிப்படுகிறது இப்படி பல.....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

முதலில் தீர்வு பொதி என்டு பிரச்சாரம் செய்து கொன்டு வாக்கு கேட்டு வருபவர்களை ஓட விரட்ட வேணும்.மற்றது இப்படி இணையத்தில் உந்த அரசியல் வாதிகளை விரட்டுவதை விட தேர்தல் களத்தில ஏன் விரட்ட முடியாது உள்ளது.

இணையத்தில் கை மட்டும் உறையும்....! தேர்தல் களத்தில் பையும் நிறையுமே...!! 😁 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சுமந்திரனை நீக்கி விட்டு வரப்போகும் நபர் (அவர் எகஸ்(X) ஆக இருக‍்கலாம் Y ஆக இருக்கலாம்) எப்படி செயற்பட வேண்டும்  என்பதில் எமக்கு ஒரு தெளிவு இல்லை.  அது குறித்து நிழலி கேட்ட கேள்விக்கும் தெளிவான பதிலை இங்கு யாரும் வழங்கவும் இல்லை.  இன்று சுமந்திரன் தனது விருப்படி இப்படி செயற்படுவதற்கு காரணம் விடுதலை புலிகள் 2004 ம் ஆண்டில் விட்ட தவறு தான். 2004 ம் ஆண்டு விடுதலை புலிகளின் சிபார்சில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்   பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். எல்லோருமே டம்மி பீஸுகள்தான். சிறந்த ஆளுமைகளை அன்றே பாராளுமன்ற உறுப்பினர ஆக்கி இருந்தால் சம்பந்தர் தனது விருப்படி சுமந்திரனை கொண்டு வந்திருக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அந்த ஆளுமைகள் சம பலத்துடன் இருந்திருப்பார்கள். இராணுவரீதியில் ஜீனியஸ் ஆக விளங்கிய விடுதலைப்புலிகள் அரசியலில் அவ்வாறு நடந்து கொள்ள முயற்சிக்க கூட இல்லை.  அப்போது சரியாக நடந்திருந்தால் சுமந்திரன் போன்ற நபர்கள் இன்று எமது  அரசியலில் ஆதிக்கம் செலுத்து இருக்க முடியாது என்பது எனது கருத்து. 

அனைத்துலக மட்டத்தில் நடை பெற்ற முக்கிய பேச்சுவார்த்தை காலங்களில் யோகி, பாலகுமார் போன்ற  அரசியல் விற்பன்னர்களை அரசியல் துறை பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். சர்வதேச நாடுகளில் பத்திரிகை சந்திப்புகளில் என்றாலும் சரி ராஜ தந்திரிகளுடனான சந்திப்புகளிலும் சரி நேரடியாக அவர்களுடன் உரையாடி நட்பை வளர்த்து எனது பக்க நியாயங்களை புரிய வைக்கும்    திறமை வாய்ந்தவர்களை  அனுப்பி இருக்கலாம். இறுதியாக 2006  பெப்ரவரியில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணை தலைமை நாடுகளால் பாரிய அழுத்தம் கொடுக்கபட்டதை  அந்த நேரத்தில்  பேச்சுவார்த்தை குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் அறிந்தேன்.  அந்த அழுத்தம் கிட்டத்தட்ட  1987 ல்  தலைவர் பிரபாகரனை டெல்லி மிரட்டியது போன்ற நிலை இருந்த‍தாக செய்திகள் வந்தன.    சர்வதேச நாடுகள் என்ன நிலைபாட்டில் இருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல்களை தலைமைக்கு அளிக்காமல் தலைமையையும் தளபதிகளையும் உசுப்பேற்றும் நடவடிக்கைகளே அந்த காலத்தில் எடுக்கபட்டது. எப்போது அடுத்த அடி என்பதே அப்போது  புலிகளின் ஐரோப்பிய கிளை உறுப்பினர்களின் அன்றாடப் பேச்சாக இருந்தது.  அந்த உசுப்பேத்தல்களை நம்புபவர்களாகவே அன்று எம்மை போன்ற சாதாரண மக்கள் இருந்தார்கள். 

( 2009 வரை விடுதலை போராட்டதிற்கு என்னாலான பங்களிப்பை செய்த பல ஆயிரம் மக்களின் ஒருவரான மனிதில் எழுந்த கேள்விகளே இவை)

புலிகள்/தலைவர் தெரிந்தே தான் டம்மி பீசுகளை த.தே.கூ  அமைப்பில் இறக்கினார்கள் ...இவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம் ...அடுத்தது தலைவருக்கு எப்பவுமே அரசியல் ரீதியான தீர்வுகளில் நம்பிக்கை இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

எதிரியை தனது விவேகத்தால் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இருந்ததை வரலாற்றில் கூட நான்  அறியவில்லை. நரம்பு  புடைக்க கத்தி உசுப்பேற்றி கேட்போரை விசிலடிக்க வைத்துவிட்டு புஸ்வாணமாய் போவதே தமிழனின் விவேகம்.  

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

உண்மைதான்

17 minutes ago, Paanch said:

எதிரியை தனது வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் அன்றும் இருந்தது, இன்றும் கண்டோம். ஆனால் சூழ்ச்சியை வெற்றி கொள்ளும் திறமை தமிழரிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அன்று எல்ளாளன், இன்று பிரபாகரன்.

சூழ்சசியை வெற்றி கொள்வது தான் விவேகம். யுத்தத்தில் சூழ்சசி என்பது காலாகாலமாக இருந்து வந்த நடைமுறை தான்.  எதிரிகளை இனங்கண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர்களை வெற்றி கொண்டு தமிழரின் இறைமையை நிலைநாட்டும்  திறமை சோழர்களிடம் கூட இருக்கவில்லை. 

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

எதிரி சூழ்சசிகள் செய்வான் என்பதை புரிந்து கொள்ளாதவன் விவேகம்  அற்றவன். 

ஒரு உண்மையான வீரனுக்குச் சூழ்ச்சி புரியத் தெரியாது. சூழ்ச்சியே தெரியாதவனுக்கு அதுபற்றிய விவேகம் எப்படிவரும்....?  உங்கள் கூற்று உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனே தேவையில்லை என்று சொல்லுது தமிழ் சனம். இவர் மூதூர் வாசி எதுக்கு இவ்வளவு முக்கு முக்கிறார். மூனாக்கு சுமந்திரன் மூக்கால் சிந்துவதாலா..??! 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.