Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அட்டைகள் இல்லா வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை  காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை  அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது.

அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் படை போல நான் எங்காவது அட்டை வருதா என்று பார்த்தபடிதான் இருப்பன். இப்ப அங்கே போய் வீட்டு கட்டினாலும் அட்டை வரத்தானே போகுது என்று நினைத்தாலே நெஞ்சு பக் பக் எண்டுது. ஊர்ல இருக்கிறவை தான் எனக்கு நல்ல வழி காட்டவேணும்.

அட்டை வீட்டினுள் வராமல் இருக்க அல்லது வளவில் பெருகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் ?????  அதுக்குப் பிறகுதான் ஊரில போய் வீடு கட்டுறதா இல்லியா என்ற இறுதி முடியை எடுக்க வேணும். இது நினைவு வந்ததில் இருந்து அட்டைகள் தான் கனவிலும் வருது.

தயவு செய்து யாரும் இதில் அட்டைகளின் படம் போட்டுவிட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப ஓவர். ஊரிலையே பிறந்து வளர்ந்து இடையில வந்திட்டு.. அட்டைக்கு பயம் என்றால்.. சரி அதுபோகட்டும்..

சுற்றுப்புறத்தை துப்பரவாக வைச்சிருந்தால் அட்டை வராது. அதுவும் மழைகாலங்களில் தான் வரும். மற்றும்படி வெயில் காலத்தில் வராது.

அப்படியும் அட்டை வருகுது என்றால்.. பிலீச்சிங் பவுடர்.. குளோரின் பவுடர் வாங்கி ஈரலிப்பான இடங்களில் தூவி விட்டால்.. அட்டை மற்றும் இலையான் வராது. 

அப்புறம் மழை காலங்களில் ஊரில் நுளம்பு, தவளை..எறும்பு மற்றும் பூரான் .. பாம்பு போன்றனவும் வரும். குளவியும் வரும். பல்லி வேறு வரும். இவற்றை எல்லாம் 100% தடுக்க ஏலாது. நுளம்பு வலை மற்றும் நுளம்பு எதிர்ப்பு திரவம்.. பாவிக்கலாம். 

மற்றவற்றோடு கூட வாழப் பழகிக் கொள்ள வேண்டியான். கொரோனாவோடு வாழப் பழகிக்கிற மாதிரி. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இது ரெம்ப ஓவர். ஊரிலையே பிறந்து வளர்ந்து இடையில வந்திட்டு.. அட்டைக்கு பயம் என்றால்.. சரி அதுபோகட்டும்..

சுற்றுப்புறத்தை துப்பரவாக வைச்சிருந்தால் அட்டை வராது. அதுவும் மழைகாலங்களில் தான் வரும். மற்றும்படி வெயில் காலத்தில் வராது.

அப்படியும் அட்டை வருகுது என்றால்.. பிலீச்சிங் பவுடர்.. குளோரின் பவுடன் வாங்கி ஈரலிப்பான இடங்களில் தூவி விட்டால்.. அட்டை மற்றும் இளையான் வராது. 

அப்புறம் மழை காலங்களில் ஊரில் நுளம்பு, தவளை..எறும்பு மற்றும் பூரான் .. பாம்பு போன்றனவும் வரும். குளவியும் வரும். பல்லி வேறு வரும். இவற்றை எல்லாம் 100% தடுக்க ஏலாது. நுளம்பு வலை மற்றும் நுளம்பு எதிர்ப்பு திரவம்.. பாவிக்கலாம். 

மற்றவற்றோடு கூட வாழப் பழகிக் கொள்ள வேண்டியான். கொரோனாவோடு வாழப் பழகிக்கிற மாதிரி. 

அட்டைக்கு மட்டும் தான் அரியண்டம். அது ஏன் என்றே தெரியவில்லை.  சில ஊர்களில் அட்டைகளே இல்லையாம். கேட்கவே அதிசயமாக இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது யாழ்ப்பாண வீட்டிலும், வளவிலும் நீங்கள் குறிப்பிட்ட எல்லா அட்டைகளும் நிறய  இருந்தது . முருங்கை மரத்தில நீடு சாம்பல் நிற மசுக்குட்டிகள் ஒரு நேரத்துக்கு வரும். இப்பவும் வீடும் வாழவும் அதே மாதிரியே கட்டடங்கள் எய்தும் புதுசாக கட்டப்படாமல் இருக்கு. ஆனால் அட்டைகள், மாசுக்குட்டிகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன. ஒரு சில இன்னும் இருக்கு. சின்ன வயசில் பார்க்க அருவருப்பாக இருந்தாலும் இப்ப அந்த இனங்கள் இல்லாம அழிந்து வருவதை கவனித்து கவலை பட்டேன். அவை எல்லாம் அரிய இனங்கள். எமது ஊருக்குரிய உயிரினங்கள். காகங்கள், மைனாக்கள், பச்சை கிளிகள் எல்லாம் மிகவும் குறைந்து போய்விட்டன. எமது இடத்தில இல்லாமல் போனாலும் மற்ற இடங்களிலாவது அவை இன்னும் இருந்தால் அறியத்தரவும். 

அனால் உங்களுக்கு அட்டை பயம் மாதிரி எனக்கு மட்டத்தேளை நினைத்தாலே பயம். மாலைதீவில் நிறய வகை வகையாக இருக்கு.ஒருநாள் எனது மகன் குழந்தையாக இருந்தபோது அறையில் ஒரு மட்டத்தேளை கண்டுவிட்டு தகப்பன் வருமட்டும் ஒரு இடத்திலேயே 3 மணித்தியாலம் நிலத்தில் இருந்தேன் . அதுவும் அசையாமல் அதிலேயே நின்றுகொண்டு இருந்தது. மாலைதீவு எலிகளும் ஒரு புதுவிதம். கலைத்தால்  எங்கள் மீது பாயும். கடலை மறைத்து கட்டியுள்ள சுவர் வளைகளுக்குள் வாழும். இன்னும் 200, 300 வருடங்களில் கடல் எலிகளாக மாறிவிடுமோ என்று நினைப்பேன் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nilmini said:

எமது ஊரில் மசுக்குட்டிகள் இன்னும் இருக்கு.. முருங்கை இல்லை வர்க்க ஆசைப்பட மசுக்குட்டி இருக்கும் என்று சித்தி பஞ்சிப்பட நான் ஆய்ந்து வறுத்தேன்.

என்னடா ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. என்னைப் போல உந்த ஆண்களுக்கும் அட்டைக்குப் பயமோ ?????😀

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அட்டையை பார்த்தால் அரியண்டமாயிருக்கும்...ஆனால் பயமில்லை..இரவிலும் வராது ...வீட்டுக்குள்ளும் வராது...போன வருடம் போன போது துண்டாய் காணவில்லை ...நான் நினைக்கிறேன் வெக்கை என்ட படியால் காண கிடைக்கவில்லை  என்று ஆனால் , நில்மினி சொன்ன மாதிரி மட்டத் தேள் என்றால் பேய்ப் பயம்...வீட்டுக்குள்ளும் வரும் ...ஒரு இரவு என்னோ ஊர்ந்த மாதிரி இருக்க😨 ,படுக்கையை உதற மட்டத்தேள்...அன்டைக்கு முழுக்க நித்திரையில்லை.

கோயிலுக்கு முன்னால் உள்ள வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போது  எதிர்ப்பக்கத்தின் ஒரு முனையில் இருந்து மஞ்சளாய் ஏதோ ஊர்ந்து அடுத்த முனைக்கு போய்க் கொண்டு இருந்தது..பாம்பு என்று சுதாகரித்து அப்படியே நின்று விட்டேன் ...ஆனால் அடுத்த முனையில் ஒரு அண்ணா மோ.சைக்கிளியில் இருந்து யாரோடோயோ போன் கதைத்து கொண்டு இருந்தவர் ...[பாம்பைக் கண்டும் பேசாமல் கதைத்துக் கொண்டு இருக்கிறார் ...பாம்பு அவற்ற பக்கம் தான் போகுது ...ஒரு ஜயா கண்டு விட்டு பாம்பு தம்பி என்று சொல்ல கோயில் பாம்பு ஒன்றும் செய்யாது ஐயா ...என்று போட்டு ஆடாமல் ,அசையாமல் இருக்கிறார். பார்த்த எனக்குத் தான் ஈரக்குலை நடுங்கிச்சுது 😀

சுமோக்கா உங்களுக்கு அட்டை எனக்கு மண்புழு :):)

மண்புழுவிற்கு பயம் என்றில்லை ஆனால் அவற்றை கண்டால் நான்  ஓடிவிடுவேன்....

மற்றவர்களுக்கு சிரிப்பாக இருக்கும் நான் மண்புழுவை கண்டால் பாம்பை கண்ட மாதிரி ஓடுவது ஆனால் என்ன செய்வது நான் முயற்ச்சி செய்தும் அவற்றை கண்டால் அலறி அடிப்பதை மட்டும் மாற்றமுடியவில்லை. இந்த வியாதியால்  நானாக பூங்கன்றுகள் மரக்கறி கன்றுகள் நட்டு அழகு பார்க்க முடிவதில்லை :( 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமது ஊரில் மசுக்குட்டிகள் இன்னும் இருக்கு.. முருங்கை இல்லை வர்க்க ஆசைப்பட மசுக்குட்டி இருக்கும் என்று சித்தி பஞ்சிப்பட நான் ஆய்ந்து வறுத்தேன்.

என்னடா ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. என்னைப் போல உந்த ஆண்களுக்கும் அட்டைக்குப் பயமோ ?????😀

அட்டை உள்ள ஊரில் தானே பிறந்து வளர்ந்தோம்......

வீட்டை சுற்றி கல்லு பதித்தால் அட்டை பூச்சிகள் போன்றன வீட்டுற்குள் வருவதை குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட்டை வீட்டினுள் வராமல் இருக்க அல்லது வளவில் பெருகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் ????? 

20 hours ago, nedukkalapoovan said:

அப்புறம் மழை காலங்களில் ஊரில் நுளம்பு, தவளை..எறும்பு மற்றும் பூரான் .. பாம்பு போன்றனவும் வரும். குளவியும் வரும். பல்லி வேறு வரும். இவற்றை எல்லாம் 100% தடுக்க ஏலாது.

18 hours ago, nilmini said:

நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது யாழ்ப்பாண வீட்டிலும், வளவிலும் நீங்கள் குறிப்பிட்ட எல்லா அட்டைகளும் நிறய  இருந்தது . முருங்கை மரத்தில நீடு சாம்பல் நிற மசுக்குட்டிகள் ஒரு நேரத்துக்கு வரும்.
 
16 minutes ago, தமிழினி said:

மண்புழுவிற்கு பயம் என்றில்லை ஆனால் அவற்றை கண்டால் நான்  ஓடிவிடுவேன்....

ஆபிரிக்காவிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இவற்றையெல்லாம் வறுத்து இறால் வறுவல் போல விரும்பி உண்கிறார்கள். இவற்றுள் சில புரதம் நிறைந்த உணவு வகைகள். உலகின் உணவுப்பற்றக்குறையை நீக்க இந்த உணவுகளை உலகமயமாக்க ஐ.நா.வின் உணவுப்பிரிவு முயற்சி செய்து வந்தது. கரப்பொத்தான், ஈசல் போன்றவையும் இந்த உணவு வகைகளுள் அடங்கும். பிலிப்பீன்ஸிலும் சிங்கப்பூரிலும் கரப்பொத்தானை விரும்பி உண்பார்கள். சிங்கப்பூர் சட்டம் போட்டு அதை தடை செய்திருக்கிறது. மற்றவர்கள் கரப்பொத்தான் சாப்பிடுவதை வெறுக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம். இந்தியாவின் சில பகுதிகளில், ஈசல், எறும்பு வறுவல் விரும்பி உண்ணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

மண்புழுவிற்கு பயம் என்றில்லை ஆனால் அவற்றை கண்டால் நான்  ஓடிவிடுவேன்....

மற்றவர்களுக்கு சிரிப்பாக இருக்கும் நான் மண்புழுவை கண்டால் பாம்பை கண்ட மாதிரி ஓடுவது ஆனால் என்ன செய்வது நான் முயற்ச்சி செய்தும் அவற்றை கண்டால் அலறி அடிப்பதை மட்டும் மாற்றமுடியவில்லை. இந்த வியாதியால்  நானாக பூங்கன்றுகள் மரக்கறி கன்றுகள் நட்டு அழகு பார்க்க முடிவதில்லை :( 

நீங்களுமா!

ஊரில் 10 - 15 வரை மண்ணுக்குள் அளைந்து விளையாடியவர்கள் வெளிநாடு வந்தபின் மண்புழு, குட்டிச் சிலந்திகளுக்கெல்லாம் பயப்படுவதை என்னவென்று சொல்வது?

அவுஸுக்கு ஒரு ஹொலிடே போய் எல்லா நட்டுவாக்காலியையும் பார்த்தால்தான் கிலி அடங்கும்🤪

18 minutes ago, கிருபன் said:

நீங்களுமா!

ஊரில் 10 - 15 வரை மண்ணுக்குள் அளைந்து விளையாடியவர்கள் வெளிநாடு வந்தபின் மண்புழு, குட்டிச் சிலந்திகளுக்கெல்லாம் பயப்படுவதை என்னவென்று சொல்வது?

அவுஸுக்கு ஒரு ஹொலிடே போய் எல்லா நட்டுவாக்காலியையும் பார்த்தால்தான் கிலி அடங்கும்🤪

கிருபன் அண்ணா

இதை பயம் என்று சொல்வதா அல்லது ஒரு வித வருத்தம் என்று சொல்வதா என்று தெரியவில்லை.

மண்புழுவிற்கு பயம் என்று சொல்வது எனக்கே கூச்சமாக இருக்கும். அது கடிக்காது என்று தெரியும் அதனால் பயப்படுவதற்கு  தேவையில்லை இருந்தும்  அவை நெளிவதை பார்க்கமுடிவதில்லை.

புது விதமான ஒரு  ஃபோபியா :(

மற்ற ஊர்வனவற்றை கண்டாலும் பயம் தான் ஆனால் மண்புழு ஒரு படி மேலே :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவவுக்கு சந்திரமண்டலத்திலைதான் வீடு கட்ட வேணும். அங்கைதான் ஒரு பூச்சி புளுக்களும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஊரில் போய் வாழ தகுதியற்றவர்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

21 hours ago, nilmini said:

மாலைதீவு எலிகளும் ஒரு புதுவிதம். கலைத்தால்  எங்கள் மீது பாயும்.

நியூயோர்க் நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் ஓடித் திரியும் எலிகளைப் பார்த்தால் எலியா பூனையா என்றே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 22:24, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை  காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை  அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது.

அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் படை போல நான் எங்காவது அட்டை வருதா என்று பார்த்தபடிதான் இருப்பன். இப்ப அங்கே போய் வீட்டு கட்டினாலும் அட்டை வரத்தானே போகுது என்று நினைத்தாலே நெஞ்சு பக் பக் எண்டுது. ஊர்ல இருக்கிறவை தான் எனக்கு நல்ல வழி காட்டவேணும்.

அட்டை வீட்டினுள் வராமல் இருக்க அல்லது வளவில் பெருகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கா சொல்லுங்கள் ?????  அதுக்குப் பிறகுதான் ஊரில போய் வீடு கட்டுறதா இல்லியா என்ற இறுதி முடியை எடுக்க வேணும். இது நினைவு வந்ததில் இருந்து அட்டைகள் தான் கனவிலும் வருது.

தயவு செய்து யாரும் இதில் அட்டைகளின் படம் போட்டுவிட வேண்டாம்.

அது சிம்பிள் அக்கா.

உந்த கொத்து ரொட்டி போடுறியள் எல்லோ...

அப்படியே அட்டைக் கொத்து எண்டு ஊர்ல ஒரு புது அயிட்டத்தை போட்டு விடுங்கோ.

வியாபாரமும் ஓகோ எண்டு போகும்..... அட்டையும் இல்லாமல் போயிடும்....

ஆகா.... நல்ல வருமானம், நல்ல வருமானம் என்று அத்தார் கல்லாவில காசை வாங்கிப் போடுற மாதிரியும் இருக்கும்.

என்ன சொல்லுறியள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும்,

உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும்,

உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀

AA6BE14F-3949-4627-A72D-C8456CBE41B4.jpeg

அமெரிக்காவில் இப்படியான சுளக் (Slug)என்று சொல்லக் கூடிய அருவருப்பான ஒரு உயிர் உள்ளது.ஆகவே அமெரிக்காவும் நிராகரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.

டபிள் டெக்கரை விட்டுட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

AA6BE14F-3949-4627-A72D-C8456CBE41B4.jpeg

அமெரிக்காவில் இப்படியான சுளக் (Slug)என்று சொல்லக் கூடிய அருவருப்பான ஒரு உயிர் உள்ளது.ஆகவே அமெரிக்காவும் நிராகரிக்கிறது.

இது இங்கேயும் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

டபிள் டெக்கரை விட்டுட்டியள்.

டபுள் டெக்கர் கொஞ்சம் செக்சியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க ஊரில் போய் வாழ தகுதியற்றவர்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

நியூயோர்க் நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் ஓடித் திரியும் எலிகளைப் பார்த்தால் எலியா பூனையா என்றே தெரியாது.

பெருச்சாளி எலி . Bandicoot 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

எனக்கு அட்டையை பார்த்தால் அரியண்டமாயிருக்கும்...ஆனால் பயமில்லை..இரவிலும் வராது ...வீட்டுக்குள்ளும் வராது...போன வருடம் போன போது துண்டாய் காணவில்லை ...நான் நினைக்கிறேன் வெக்கை என்ட படியால் காண கிடைக்கவில்லை  என்று ஆனால் , நில்மினி சொன்ன மாதிரி மட்டத் தேள் என்றால் பேய்ப் பயம்...வீட்டுக்குள்ளும் வரும் ...ஒரு இரவு என்னோ ஊர்ந்த மாதிரி இருக்க😨 ,படுக்கையை உதற மட்டத்தேள்...அன்டைக்கு முழுக்க நித்திரையில்லை.

கோயிலுக்கு முன்னால் உள்ள வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போது  எதிர்ப்பக்கத்தின் ஒரு முனையில் இருந்து மஞ்சளாய் ஏதோ ஊர்ந்து அடுத்த முனைக்கு போய்க் கொண்டு இருந்தது..பாம்பு என்று சுதாகரித்து அப்படியே நின்று விட்டேன் ...ஆனால் அடுத்த முனையில் ஒரு அண்ணா மோ.சைக்கிளியில் இருந்து யாரோடோயோ போன் கதைத்து கொண்டு இருந்தவர் ...[பாம்பைக் கண்டும் பேசாமல் கதைத்துக் கொண்டு இருக்கிறார் ...பாம்பு அவற்ற பக்கம் தான் போகுது ...ஒரு ஜயா கண்டு விட்டு பாம்பு தம்பி என்று சொல்ல கோயில் பாம்பு ஒன்றும் செய்யாது ஐயா ...என்று போட்டு ஆடாமல் ,அசையாமல் இருக்கிறார். பார்த்த எனக்குத் தான் ஈரக்குலை நடுங்கிச்சுது 😀

நான் இப்ப போன போதும் பாம்பைக் கண்டேன். பயம் இருக்கத்தான் செய்யும் ஆனால் அட்டைபோல் இல்லை. இரவில் டாய்லட் போகும்போதுகூட நின்மதியாகப் போக முடியாதவாறு மேலே எங்காவது நிக்கும்.

23 hours ago, தமிழினி said:

சுமோக்கா உங்களுக்கு அட்டை எனக்கு மண்புழு :):)

மண்புழுவிற்கு பயம் என்றில்லை ஆனால் அவற்றை கண்டால் நான்  ஓடிவிடுவேன்....

மற்றவர்களுக்கு சிரிப்பாக இருக்கும் நான் மண்புழுவை கண்டால் பாம்பை கண்ட மாதிரி ஓடுவது ஆனால் என்ன செய்வது நான் முயற்ச்சி செய்தும் அவற்றை கண்டால் அலறி அடிப்பதை மட்டும் மாற்றமுடியவில்லை. இந்த வியாதியால்  நானாக பூங்கன்றுகள் மரக்கறி கன்றுகள் நட்டு அழகு பார்க்க முடிவதில்லை :( 

நானும் மண்புழுவை கையால் தொடமாட்டேன் என் இரண்டாவது கையில் எடுத்து வைதது எனக்குப் பயம் காட்டுவா 😀

23 hours ago, MEERA said:

அட்டை உள்ள ஊரில் தானே பிறந்து வளர்ந்தோம்......

வீட்டை சுற்றி கல்லு பதித்தால் அட்டை பூச்சிகள் போன்றன வீட்டுற்குள் வருவதை குறைக்கலாம்.

என்ன இப்படிச் சொல்கிறீர்கள். அட்டை எல்லா இடமும் ஏறி வருமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

ஆபிரிக்காவிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இவற்றையெல்லாம் வறுத்து இறால் வறுவல் போல விரும்பி உண்கிறார்கள். இவற்றுள் சில புரதம் நிறைந்த உணவு வகைகள். உலகின் உணவுப்பற்றக்குறையை நீக்க இந்த உணவுகளை உலகமயமாக்க ஐ.நா.வின் உணவுப்பிரிவு முயற்சி செய்து வந்தது. கரப்பொத்தான், ஈசல் போன்றவையும் இந்த உணவு வகைகளுள் அடங்கும். பிலிப்பீன்ஸிலும் சிங்கப்பூரிலும் கரப்பொத்தானை விரும்பி உண்பார்கள். சிங்கப்பூர் சட்டம் போட்டு அதை தடை செய்திருக்கிறது. மற்றவர்கள் கரப்பொத்தான் சாப்பிடுவதை வெறுக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம். இந்தியாவின் சில பகுதிகளில், ஈசல், எறும்பு வறுவல் விரும்பி உண்ணப்படுகிறது.

வராமல் இருக்க வழி சொல்லுங்கோ எண்டால் உணவகம் வைக்க வழி சொல்லுறியள்😃

22 hours ago, கிருபன் said:

அவுஸுக்கு ஒரு ஹொலிடே போய் எல்லா நட்டுவாக்காலியையும் பார்த்தால்தான் கிலி அடங்கும்🤪

ஒன்லைனில் அவுசைப் பற்றி வாசிச்சிட்டே என் பிள்ளைகள் அந்தப்பக்கம் வரமாட்டோம் என்கின்றனர்.

20 hours ago, குமாரசாமி said:

உவவுக்கு சந்திரமண்டலத்திலைதான் வீடு கட்ட வேணும். அங்கைதான் ஒரு பூச்சி புளுக்களும் வராது.

நான் எல்லாப் பூச்சி புழுவுக்கும் பயம் என்றா சொன்னேன். அட்டைக்கு மட்டும் தானே. 😀

20 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க ஊரில் போய் வாழ தகுதியற்றவர்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

உங்களுக்கு அட்டைக்கு வழி சொல்லாத தெரியவில்லை என்று சொல்லுங்கள் அண்ணா 😂

20 hours ago, Nathamuni said:

அது சிம்பிள் அக்கா.

உந்த கொத்து ரொட்டி போடுறியள் எல்லோ...

அப்படியே அட்டைக் கொத்து எண்டு ஊர்ல ஒரு புது அயிட்டத்தை போட்டு விடுங்கோ.

வியாபாரமும் ஓகோ எண்டு போகும்..... அட்டையும் இல்லாமல் போயிடும்....

ஆகா.... நல்ல வருமானம், நல்ல வருமானம் என்று அத்தார் கல்லாவில காசை வாங்கிப் போடுற மாதிரியும் இருக்கும்.

என்ன சொல்லுறியள்?

நல்லாய் இருப்பியள் 🤣

19 hours ago, நந்தன் said:

கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.

உப்பிடி விளையாடின மனிசரும் இருக்கினமே 😆

19 hours ago, உடையார் said:

இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும்,

உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀

நீங்கள் என்ன நிராகரிக்கிறது. நானே நிராகரிச்சிட்டன். அவுசும் வேண்டாம் அட்டையும் வேண்டாம் ஆளை விடுங்கோ.  😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

AA6BE14F-3949-4627-A72D-C8456CBE41B4.jpeg

அமெரிக்காவில் இப்படியான சுளக் (Slug)என்று சொல்லக் கூடிய அருவருப்பான ஒரு உயிர் உள்ளது.ஆகவே அமெரிக்காவும் நிராகரிக்கிறது.

அந்தக் கருமம் இங்கையும் நிறைய. ஆனால் நான் அப்பப்ப மருந்து போட்டு பெருகாமல் பண்ணீடுவன்

12 hours ago, சுவைப்பிரியன் said:

டபிள் டெக்கரை விட்டுட்டியள்.

அதென்ன டபிள் டெக்ரர்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் அட்டை இல்லை ஆனால் வெளிகளில் உண்டு 

ஆட்லறி அடிக்கே பயப்படாத பெண்கள் இருந்தநாட்டில் அட்டைபூச்சிக்கு பயமா  ஆர் .பி,ஜீ அலேட்டா அடிப்பாங்கள் நம்ம பெண்கள் ஒரு காலத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.