Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

அதாவது மகிந்தவுக்கு (சிங்களத்திற்கு) வாலாட்டுறவைக்கு(அது யாராகவிருந்தாலும்) எலும்புத்துண்டு ஏதாவது போடுவாங்கள். அவையளும் கவ்விக்கொண்டு போகலாம். வாலாட்டாவிட்டால் எலும்புத் துண்டுமில்லை. இதுதானே  நீங்கள் கூறு விரும்புவது 😏😏

,கருணா அங்கு நிற்பதும் மகிந்தாவின் ஆலோசனைப்படி தான்....அது ஒர் முஸ்லீம் பிராந்தியமாக மாறுவதை இனவாதிகள் விரும்பவில்லை அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளை முஸ்லீம் பிரதேசமாக்குவதில் முஸ்லீம்கள் முழுமூச்சாக இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இவர் போன்ற மகிந்தா வாசிகள் அங்கு தேவை...
(முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்கள் அவர்களும் சிறுபான்மையினர் என்பது எனக்கும் தெரியும்)

வடக்கு கட்சிகளின் பிரதிநிதி இங்கு வெற்றி பெற்றாலும் இரு வருடங்களில் கட்சி மாறிவிடுவார்...ஆகவே மக்களை ஏமாற்றாமல் மொழிபற்றுடன் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்யலாம்....

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....

  • Replies 104
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முழுப்பூசணிக்காயை ஒரு பானை  சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இராவிட்டால் இவர் இருக்க வேண்டிய இடம் சிறையல்லவா? எப்படி சிங்கள தேசிய கட்சியில் பிரதி அமைச்சராக முடிந்தது? தலைவரின் உடலை அடையாளம் காட்ட எத்தனையோ போராளிகள் இருக்க,   இவர் மட்டும் ஏன் கூட்டி  வரப்படவேண்டும்? அதுவும் தான் வெளிநாடு சென்றுவிட்டேன். என்று வேறு புளுகுகிறார்.

த .தே கூட்டமைப்பு தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள். என்கிற நிலையை உடைத்து, இவர்களை வைத்து சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தங்களை குறைப்பதற்கு, பகடைக்காய்களாக இருந்து தமிழரின் முன்னேற்றங்களை, போராட்டங்களை இல்லாதொழிப்பதற்கே இவர்கள் இறக்கப்படுகிறார்கள். தலைவர் சமஷ்டிக்கு சம்மதிக்கவில்லை என்கிறார். போராட்டம் மௌனித்து ஆண்டுகள் பல கடந்தும், அந்தப் பேச்சுக்கே இடமில்லை. என்று அடம்பிடிக்கும் சிங்களத்திடம் வேறு என்ன திட்டம் இருந்தது? அல்லது எதை இவர் அவர்களிடம்  இருந்து பெறப்போகிறார்? அபிவிருத்தி! நாம கஸ்ரப்பட்டு சேர்க்க,  தம் அதிகாரத்தை பயன்படுத்தி  சூறையாடவும், விரட்டி அடிக்கவும் தான்  உதவும்.  வெறும் அரசியற் கைதிகளை விடுவிக்க முடியாத சிங்களத்தின் அடிமை. சாதிக்கப் போறார் தவறாமல் குத்திவிடுங்கோ. இவரை வெல்ல வைப்பதற்காகவே முஸ்லீம்களை உசுப்பி விடும் சிங்களம். அதன்பின் அவர்களிடம் இருந்து இலகுவாக பிடுங்கிக்கொள்ளும்.  இப்போ அதற்கு தலைவலி நிக்க வேணும். அதை நீக்க இப்படியான நிவாரணிகள்  தேவை.  அதற்கு என்ன நாடகமும் போடும் சிங்களம். ஆனால் தமிழரை அடிமையாக்கவேணும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து நகராது. 15 ஆண்டுகள் திட்டம் நாளை யார் கையில் அதிகாரம் யாரே அறிவார்?   

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்....

இதுக்கு கருணாவை விட்டா வேறு தெரிவு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

,கருணா அங்கு நிற்பதும் மகிந்தாவின் ஆலோசனைப்படி தான்....அது ஒர் முஸ்லீம் பிராந்தியமாக மாறுவதை இனவாதிகள் விரும்பவில்லை அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளை முஸ்லீம் பிரதேசமாக்குவதில் முஸ்லீம்கள் முழுமூச்சாக இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இவர் போன்ற மகிந்தா வாசிகள் அங்கு தேவை...
(முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்கள் அவர்களும் சிறுபான்மையினர் என்பது எனக்கும் தெரியும்)

வடக்கு கட்சிகளின் பிரதிநிதி இங்கு வெற்றி பெற்றாலும் இரு வருடங்களில் கட்சி மாறிவிடுவார்...ஆகவே மக்களை ஏமாற்றாமல் மொழிபற்றுடன் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்யலாம்....

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....

அதென்னமோ இந்த விடயத்தில் நீங்கள் கூறுவது உண்மைதான். 💯

  • கருத்துக்கள உறவுகள்

இது 35 அடி....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஆறடி உயரத்தில் வெறும் கட் டவுட் வைத்தால் மட்டும் போதாது .இங்கே சில பேரின் முகத்தில் கரியை பூசுவதற்காவது நீ வென்று காட்ட வேண்டும் அண்ணா ...வெல்வதோடு மட்டும் நின்று விடாது ...கிழக்கில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக நீங்கள் மாற வேண்டும் 👍
 
 ரதி,

நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை:

1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்.

2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர்.

3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர்.

4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது.

5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார்.

6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள்.

7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கருணாவை வைத்து முஸ்லிம்களை அடக்கலாம் என மகிந்த/ கோட்டா நினைத்திருக்கிறார்கள் போல உள்ளது. அதன் மூலம் தமிழர், முஸ்லிம் விரோதத்தை அதிகரிக்கலாம் என்பதையும் குள்ள சிங்களம் அறிந்தே செய்கிறது.

அத்தோடு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க வைப்பதோடு ஐ.தேகவின் பிழவால்  மேலும் பல வாக்குகளை கிழக்கில் பெறமுடியும் என கோத்தா கணக்கிட்டிருக்கலாம்.

9 hours ago, கிருபன் said:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 ரதி,

நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை:

1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்.

2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர்.

3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர்.

4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது.

5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார்.

6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள்.

7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.

தமிழினத்தினை 1957ல் இருந்தே அழிக்கும் சிங்களத்தை தமிழ் இனப் படுகொலைக்கு பொறுப்பு இல்லை என்று கூறத் துணிந்த கற்பகதருவிற்கு முரளீதரனின் துரோகம் நியாயமாகத்  தெரிவதுஆச்சரியமல்ல. 😂😂

1) என்னால் பிற திரிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்.🤥

2) இந்தத் திரியை திசை திருப்பும்  முயற்சியை நிறுத்துங்கள் 😏

3) இங்கும் தரம் பார்ப்பீர்களா 😂

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

தாயைக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்று தான்.

இதுக்குப் பிறகு அவன் எப்படி இருந்தால் என்ன?

2 hours ago, Kapithan said:

தமிழினத்தினை 1957ல் இருந்தே அழிக்கும் சிங்களத்தை தமிழ் இனப் படுகொலைக்கு பொறுப்பு இல்லை என்று கூறத் துணிந்த கற்பகதருவிற்கு முரளீதரனின் துரோகம் நியாயமாகத்  தெரிவதுஆச்சரியமல்ல. 😂😂

1) என்னால் பிற திரிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்.🤥

2) இந்தத் திரியை திசை திருப்பும்  முயற்சியை நிறுத்துங்கள் 😏

3) இங்கும் தரம் பார்ப்பீர்களா 😂

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

தாயைக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்று தான்.

இதுக்குப் பிறகு அவன் எப்படி இருந்தால் என்ன?

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.
  • கருத்துக்கள உறவுகள்

கருணா போன்ற மாசற்ற மாணிக்கத்தை பற்றி லண்டனில் இருக்கும்  அக்காவிடம் மட்டும் கேட்டால் போதாது 
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எங்களிடமும் கேட்கவேண்டும், 
கருணா, 2008 மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தலிகளில் வெற்றி பெற்று புரிந்த சேவையை பார்த்து  புல்லரித்து போன மட்டக்களப்பார்கள் அடுத்த தேர்தலில் தர்ம அடி கொடுத்து துரத்தினர்.
அங்கேயும் இங்கேயும் தொங்கி திரிந்த கும்மானுக்கு ஒன்றும் தேறவில்லை,  

தன்னுடைய பருப்பு மட்டக்களப்பில் எடுபடவில்லை (மட்டுவில் தமிழர் பெரும்பாண்மை), என்றதும் முஸ்லிம்களால் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகும் (தமிழர் சிறுபான்மையாக இருக்கும்) எல்லைப்புற நகரங்களை குறிவைத்தார், சிக்கியது கல்முனை ஏற்கனவே கூத்தமைப்பின் கூத்தாடிகளின் மேல் கொலை வெறுப்பில் இருந்த தமிழர்களை கையில் போட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்று பிலிம் காட்டுகிறார்.

கும்மானின் பப்ளிசிட்டி ஸ்டன்டிற்கு கல்முனை மூன்றாம் குறிச்சியில் தமிழரால் முஸ்லிமிற்கு விற்கப்பட்ட காணி அடியெடுத்து கொடுத்தது, 

மேலதிக தகவல்கள் :- இந்த 35 அடி (?) கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது இதே மூன்றாம் குறிச்சி தெருவுக்கு போகும் வழியில்(RKM பாடசாலை  சந்தி,அதற்க்கு திரும்பும் சந்தி), இந்த மூன்றாம் குறிச்சியில் விடுதலை புலிகளின் வால்கள் அந்தக்காலத்திலிருந்தே அதிகம், வால்களுக்கு இன்னொரு வாலை தான் அதிகம் பிடிக்கும், இப்படி முஸ்லிம்களுக்குக்கெதிராக போராட ருத்ர அவதாரம் எடுத்திருக்கும் கும்மான் 
தப்பி ஓட்டிவந்ததே அலிசாஹிர் மௌலானா என்ற முஸ்லீம் ஒருவரின் வாலை பிடித்துக்கொண்டுதான்.
இதை சொல்லி அலிஸாகிர் புலம்பியதெல்லாம் தனிக்கதை   

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

கர்ணா அம்மான் காணமல் போய் கனகாலம் நாம  இப்படிக்கா போவோம்  சிங்கன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  வயசும் போட்டுது எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் கூத்தமைப்பால் வந்த வினை கிழக்கில் கூட்டமைப்பை தவிர எவர் வந்தாலும் அவருக்கு சப்போட்ட பண்ணுவம் 

97259431-3277898725768706-64231896048153

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

அம்மான் போன்றோர் அங்கு வெற்றியடைந்தால் அந்த மக்களுக்கு சில அபிவிருத்தி திட்டங்களை செய்யலாம் ...ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..

இப்படித்தான்.. சம் சும் கும்பல்.. ஒரு தமிழ் பேசக் கூடிய சிங்களவனை நிறுத்தினால்.. தமிழ் சிங்கள வாக்குகளை அள்ளலாம் என்று நினைச்சு ஒருத்தரை நிறுத்திச்சினம். அவரும் வென்றார். கடைசியில் அவர் கூட்டமைப்புக்கு ரா ரா காட்டிட்டு வாக்குப் போட்ட மக்களிற்கும் தன் பின்புறத்தைக் காட்டிட்டு போயிட்டார்.

அதெப்படியோ தெரியல்ல.. நம்மாள தான் நம்மை காட்டிக்கொடுத்தவனை.. கொன்றொழித்தவனை ஆட்சியிமல் அமர்த்தி அதிகாரம் கொடுத்து அழகு பார்க்க முடியுது..

அதனால் தான்.. முரளிதரன் மட்டுமல்ல.. டக்கிளஸ்.. வரதராஜப்பெருமாள்..சித்தார்த்தன்.. இவங்க எல்லாம் இன்னும் இன அழிப்பு காட்டிக்கொடுப்பு ஆயுத அரசியலில் இருக்க முடியுது. இதே மேற்கு நாடுகள் என்றால்.. இவர்கள் முகவரி இல்லாத ஆட்களாக்கப்பட்டிருப்பார்கள். 

நம்மவர்கள் ஏமாறுவதற்கு என்றே வாக்குச் சீட்டை பயன்படுத்துவதில் வல்லவர்கள். 

கருணா அம்மான் அல்லது வேறு தமிழர் யார்வரினும் கிழக்கு மக்களுக்கு உயர்வு அவர்களாலேயே  தேடிக்கொள்ள வேண்டும். தமிழரின் தேசிய அளவிலான கட்சிகள் கூட கிழக்குத் தமிழருக்கு எதுவும் இதுவரை செய்ததில்லை. 

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Iraivan said:

கருணா அம்மான் அல்லது வேறு தமிழர் யார்வரினும் கிழக்கு மக்களுக்கு உயர்வு அவர்களாலேயே  தேடிக்கொள்ள வேண்டும். தமிழரின் தேசிய அளவிலான கட்சிகள் கூட கிழக்குத் தமிழருக்கு எதுவும் இதுவரை செய்ததில்லை. 

கிழக்குத் தமிழருக்கு மட்டுமல்ல வடக்குத் தமிழருக்கும் அவர்கள் எதனையும் செய்யவில்லை 😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

கர்ணா அம்மான் காணமல் போய் கனகாலம் நாம  இப்படிக்கா போவோம்  சிங்கன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  வயசும் போட்டுது எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் கூத்தமைப்பால் வந்த வினை கிழக்கில் கூட்டமைப்பை தவிர எவர் வந்தாலும் அவருக்கு சப்போட்ட பண்ணுவம் 

97259431-3277898725768706-64231896048153

எப்படி இருந்த கருணா தலைவருடன். கருணாவுக்கு இருந்த மரியாதை, கர்ஜனை, திமிரும் தலைவருடன் இருந்தபோது இப்ப இருக்கா? பார்க்கவே என்னவோ மாதிரியிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

கருணா போன்ற மாசற்ற மாணிக்கத்தை பற்றி லண்டனில் இருக்கும்  அக்காவிடம் மட்டும் கேட்டால் போதாது 
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எங்களிடமும் கேட்கவேண்டும், 
கருணா, 2008 மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தலிகளில் வெற்றி பெற்று புரிந்த சேவையை பார்த்து  புல்லரித்து போன மட்டக்களப்பார்கள் அடுத்த தேர்தலில் தர்ம அடி கொடுத்து துரத்தினர்.
அங்கேயும் இங்கேயும் தொங்கி திரிந்த கும்மானுக்கு ஒன்றும் தேறவில்லை,  

தன்னுடைய பருப்பு மட்டக்களப்பில் எடுபடவில்லை (மட்டுவில் தமிழர் பெரும்பாண்மை), என்றதும் முஸ்லிம்களால் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகும் (தமிழர் சிறுபான்மையாக இருக்கும்) எல்லைப்புற நகரங்களை குறிவைத்தார், சிக்கியது கல்முனை ஏற்கனவே கூத்தமைப்பின் கூத்தாடிகளின் மேல் கொலை வெறுப்பில் இருந்த தமிழர்களை கையில் போட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்று பிலிம் காட்டுகிறார்.

கும்மானின் பப்ளிசிட்டி ஸ்டன்டிற்கு கல்முனை மூன்றாம் குறிச்சியில் தமிழரால் முஸ்லிமிற்கு விற்கப்பட்ட காணி அடியெடுத்து கொடுத்தது, 

மேலதிக தகவல்கள் :- இந்த 35 அடி (?) கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது இதே மூன்றாம் குறிச்சி தெருவுக்கு போகும் வழியில்(RKM பாடசாலை  சந்தி,அதற்க்கு திரும்பும் சந்தி), இந்த மூன்றாம் குறிச்சியில் விடுதலை புலிகளின் வால்கள் அந்தக்காலத்திலிருந்தே அதிகம், வால்களுக்கு இன்னொரு வாலை தான் அதிகம் பிடிக்கும், இப்படி முஸ்லிம்களுக்குக்கெதிராக போராட ருத்ர அவதாரம் எடுத்திருக்கும் கும்மான் 
தப்பி ஓட்டிவந்ததே அலிசாஹிர் மௌலானா என்ற முஸ்லீம் ஒருவரின் வாலை பிடித்துக்கொண்டுதான்.
இதை சொல்லி அலிஸாகிர் புலம்பியதெல்லாம் தனிக்கதை   

தம்பி , தாங்கள் இப்ப எங்கே இருக்கிறீர்கள் ? ...அதிகமாய் புலம்புறீங்கள்😂 அவர் வென்றிட்டாலும் என்ட பயமா :LOL:
 
6 hours ago, உடையார் said:

எப்படி இருந்த கருணா தலைவருடன். கருணாவுக்கு இருந்த மரியாதை, கர்ஜனை, திமிரும் தலைவருடன் இருந்தபோது இப்ப இருக்கா? பார்க்கவே என்னவோ மாதிரியிருக்கு. 

வயசு போக போக எல்லோரும் வயக் கெட்டுப் போறது தான் 😟

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

34 நிமிடங்கள் செவ்வியை முழுமையாகப் பார்த்தால் அம்மானின் தெளிவான பதில்கள் என்ன சொல்கின்றன என்று புரியும்.

கோத்தா 13+ கூடத் தரமாட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் வந்த மாகாணசபைகளைக் கூட செயல்படவிடமாட்டார்.

அடுத்த 10-15 வருடங்களுக்கு ராஜபக்ஸக்களைத் தவிர வேறு எவரும் பதவிக்கும் வரமுடியாது என்பதால், அம்மான் தனக்கு மகிந்தவுடன் (இனத்துவேஷம் இல்லாத மகிந்த) உள்ள செல்வாக்கைப் பாவித்து ஏதாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

ஆனால் அம்பாறையில் தமிழ் பா.உ. ஒருவர்தான் வரலாம். அம்மான் அங்கு தேர்தலில் நிற்பதால் வாக்குகள் பிரிந்துபோய் ஒருவர்கூட வரமுடியாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

அந்த வில்லங்கமான தீர்வு என்ன என்று கொஞ்சம் விரிவாக பேசினால் 
எங்களுக்கும் புரியுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

அந்த வில்லங்கமான தீர்வு என்ன என்று கொஞ்சம் விரிவாக பேசினால் 
எங்களுக்கும் புரியுமே? 

பேட்டியை ஆறுதலாகப் பார்த்தால் தெரியும்.  வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஒரு தீர்வை ராஜபக்ஸக்களோடு பேசி எட்டலாம் என்று சொல்கின்றார் அம்மான். 

சமஸ்டி என்ற சொல்லைப் பாவித்தாலும், சமஸ்டி என்றாலே பிரிவினை என்ற கருத்து சிங்களவரிடையே இருப்பதால் அப்படியான சொல்லாடல்களுடன் பேசமுடியாது என்று தெரிந்துவைத்திருக்கின்றார்.

சிங்களவர்களை விட முஸ்லிம்களால்தான் கிழக்கில் தமிழர்களுக்கு ஆபத்து என்று சொல்லுவதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்.

எல்லாம் ஒரு எம்பியாக வந்து தனது சொத்துக்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான்.  வேறு ஒரு தீர்வையும் எடுத்துத் தரமாட்டார் அம்மான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?

எந்த கம்பெனியில வேலை செய்து சேர்த சொத்து

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?

இலங்கையில் பணக்காரர்களில் முதலாவதாக வருபவர் மகிந்த. 

நாலாவதாக இருந்தர் ஆறுமுகம் தொண்டமான்

ஐந்தாவது கருணா அம்மான். கோத்தா மேலே வரவேண்டுமென்றால் ஏற்கனவே இருக்கும் பணம்காரர்களிடம் இருந்துதானே சம்பாதிக்கவேண்டும். அதிலும் தமிழர்களாக இருந்து பணக்காரர்களாக் இருந்தால் எடுப்பது இலகு!

5 minutes ago, MEERA said:

எந்த கம்பெனியில வேலை செய்து சேர்த சொத்து

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சூப்பர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

கிழக்குத் தமிழருக்கு மட்டுமல்ல வடக்குத் தமிழருக்கும் அவர்கள் எதனையும் செய்யவில்லை 😏

அவர்கள் எல்லோருக்கும் ஆபீஸ் கொழும்பில்த் தான்.அதனால் அங்கேயே குந்தியிருக்கிறார்கள்.

வாக்குகள் வடக்கு கிழக்கில் இருக்கிறபடியால் தேர்தல் காலங்களில் தலையைக் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

இலங்கையில் பணக்காரர்களில் முதலாவதாக வருபவர் மகிந்த. 

நாலாவதாக இருந்தர் ஆறுமுகம் தொண்டமான்

ஐந்தாவது கருணா அம்மான். கோத்தா மேலே வரவேண்டுமென்றால் ஏற்கனவே இருக்கும் பணம்காரர்களிடம் இருந்துதானே சம்பாதிக்கவேண்டும். அதிலும் தமிழர்களாக இருந்து பணக்காரர்களாக் இருந்தால் எடுப்பது இலகு!

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

அவர் எம்பியா வந்தால் அவருடைய சொத்துக்களை எடுப்பது மகிந்தா சகோதரர்களுக்கு கஸ்டமா என்ன🤭 ..போட்டு தள்ளிப் போட்டும் எடுப்பார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.