Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:

சுமந்திரன் தான் இரண்டாவது  இடத்தை பிடித்து வென்றுவிட்டதாக  10 நிமிடத்துக்கு முதல் கூறினார் 

அவர் புத்திஜீவி என்று அவர் மீது கொஞ்ச நம்பிக்கை இருந்தது ...எப்ப ஒரு அபலை பெண்ணை ஏமாத்தி பதவி தக்க வைத்துக் கொண்டாரோ அப்பவே சொறி நாயிலும் கேவலமாய் போயிட்டார் 
 
  • Replies 252
  • Views 52.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இப்படி சொல்லும் நீங்கள் தான் அம்பாறையில் கூட்டமைப்பின் தோல்விக்கு கருணாவை சாடுகிறீர்கள்....சீப்பான அரசியல் இது ...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது தேடாமல் ,மக்கள் ஏன் கருணாவுக்கும் ,சிங்களவனுக்கும் வோட் போட்டார்கள் என்று ஆராயாமல் கருணாவை குறை சொல்றது ....கருணா அங்கு கேட்டு இருக்காட்டிலும் அங்கு கூட்டமைப்பு வந்திருக்காது ...இன்னுமொரு சிங்கள அல்லது முஸ்லீம் எம்பி வந்திருப்பார்.
அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லும் முன் உங்களைத் திருத்துங்கள் 

அது ரதி👍

Mudhalvan tamil Movie - Overview

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0750.jpg

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

கஜேந்திரகுமாருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தையிட்டு சந்தோசம்.

25 minutes ago, உடையார் said:

எனக்கும் தான் பார்ப்போம் என்ன செய்கின்றார் என்று

இந்தத் தேர்தலில்

ரணிலின் தோல்வியும்

கஜேந்திரகுமாரின் வெற்றியும்

கொஞ்சம் ஆறுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய சொந்த வோட்டை கூட போட முடியாமல் ஜெயிலில் இருந்து கொண்டு வென்ற பிள்ளையானுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அங்கயன் ,ஜனா,டக்ளசுக்கும் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியினருக்கு தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. சைக்கிள் இரட்டைச் சில்லுடன் பாராளுமன்றத்திற்கு செல்கிறது......

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

நல்லா பிளன் பண்ணி செய்திருக்கின்றார்கள் மகி & கோ

இதை ஐனநாயக தேர்தல் என்று சொல்ல தேவையில்லை

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Dash said:

என்னைப் பொறுத்தவரை முழு தேர்தலுமே சந்தேகத்துக்குரியது; தமிழர் ஒருவரை வெல்ல வைக்கவே இவ்வளவு முயற்சி எடுத்த கோத்தா கும்பல். சிங்கள பிரதேசங்களில் எல்லம் என்ன செய்திருக்கும்? அதை விட கண்டு கொழும்பு போன்ற இடங்களில் இவர்கள் பெறும் வெற்றிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன; அதே போல்  எல்லா இடங்களிலும் இவர்கள் சரியாக 70 -72 % பெறுவதும் சந்தேகதுக்குரியது.

ரணிலுக்கோ ,சஜித்திற்கோ வராத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வருது 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

ரணிலுக்கோ ,சஜித்திற்கோ வராத சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வருது 

இரண்டு பேரிண்டை குடும்பியும்  IMG-0751.jpg இவற்ர கையில...

Edited by MEERA

12 minutes ago, MEERA said:

இரண்டு பேரிண்டை குடும்பியும்  IMG-0751.jpg இவற்ர கையில...

ரணிலின் குடுமி அவரின் கையில் இருக்கலாம் ஆனால் சஜித்தின் குடுமி அவரின் கையில் இருக்க வேண்டிய அவசியன் இல்லை.

மனோகணேசன் கொழும்பில் வென்றார் ?

1 hour ago, ரதி said:

இப்படி சொல்லும் நீங்கள் தான் அம்பாறையில் கூட்டமைப்பின் தோல்விக்கு கருணாவை சாடுகிறீர்கள்....சீப்பான அரசியல் இது ...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது தேடாமல் ,மக்கள் ஏன் கருணாவுக்கும் ,சிங்களவனுக்கும் வோட் போட்டார்கள் என்று ஆராயாமல் கருணாவை குறை சொல்றது ....கருணா அங்கு கேட்டு இருக்காட்டிலும் அங்கு கூட்டமைப்பு வந்திருக்காது ...இன்னுமொரு சிங்கள அல்லது முஸ்லீம் எம்பி வந்திருப்பார்.
அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லும் முன் உங்களைத் திருத்துங்கள் 

கடந்த முறை கூட்டமைப்புக்கு கிடைத்த வோட்டுக்களையும் , இந்த தடவை கிடைத்த வோட்டுக்களையும் ஒப்பிட்டு பாருங்கள் 
 
நான் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். நான் எங்கு கருணாவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று எழுதியிருக்கின்றேன்? நான் எழுதியது கருணாவால் தமிழர் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று தான் எழுதியிருக்கின்றேன். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருப்பது புரியவில்லையா?
மகிந்த அணி கருணாவை அம்பாறையில் களமிறக்கியதே தமிழர் வாக்குகளை பிரித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்காக (என அன்றும் எழுதியிருந்தேன்). அது தான் இன்று நிறைவேறி இருக்கின்றது.

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.

இனியும் இதற்கு பின்னரும் கூட கருணாவால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக நான் எழுதாத ஒன்றை எழுதியதாக நினைப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.

அதை அப்படியே மாற்றி போட்டு பாருங்கள் நிழலி 
கோடீஸ்வரன் பாப்பா திறந்துவிட்ட சப்பட்டையும் உருண்டையும் தான் அடுத்த ஐந்து வருடத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழர்களின் உரிமையை பெற்றுத்தரும் என்று நம்பி வீட்டிற்கு வாக்கு போட்டவர்களுக்கு கிடைத்திருக்கும் பயன் தான் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவர்,
கடந்த  ஐந்து வருடம் முஸ்லிம்கள் கொடுத்த டிரீட்மென்ட் 50% அம்பாறை தமிழர்  மூளையிலிருந்து கூத்தாடிகளை கழுவியிருக்கிறது,  இனிவரப்போகும் ஐந்துவருட டிரீட்மென்ட் கூத்தாடிகளை மிச்சமிருக்கும் பேர்வழிகளின்  மூளையிலிருந்தும் கழுவி யதார்த்தத்தை உணரவைக்கும், அப்படியும் திருந்தாவிடில் இன்னொமொரு ஐந்துவருடம் ஸ்பெசல் டிரீட்மென்ட் கொடுப்பான் முஸ்லீம். அயம் கரண்டி 

  • கருத்துக்கள உறவுகள்

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

முன்னணியினருக்கு தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. சைக்கிள் இரட்டைச் சில்லுடன் பாராளுமன்றத்திற்கு செல்கிறது......

🚴‍♀️சைக்கிளுக்கு🚴🏻‍♂️..... இரண்டு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. 👍🏼 🙂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nilmini said:

2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 

நல்லதொரு  கட்டுரை, நில்மினி. 👍🏼

இனி வரும் காலங்கள்... மிகவும் ஆபத்தானவை என்பதனை, ஊகிக்க முடிகின்றது.

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

வடக்கு கிழக்கிலும் தமிழ் முஸ்லீம் மக்கள் அதிக வாக்குகளை அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்திருப்பதால் இனி தமிழர் பிரச்சினை என்று பெரிதாக கதைக்க மாடடார்கள். இந்த அரசு அபிவிருத்தி சார்ந்த காரியங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சம்பந்தன், சுமந்திரன், விக்கி , கஜன் போன்றோர் வழமையான பாடல்களை படுவதட்கு தடை இருக்காது. எதிர்ப்பு அரசியலை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அம்பாறையில் இருந்த ஒன்றயும் இழந்ததும் மிச்சம். சம் சும்மை தாக்கி அவர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது என்று நிறைய பேர் எழுதினாலும் மக்கள் அதை கணக்கில் எடுக்கவில்லை. மக்கள் அறிவாளிகளா அல்லது இணையப்போராளிகள் அறிவாளிகளா தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தத் தேர்தலில்

ரணிலின் தோல்வியும்

கஜேந்திரகுமாரின் வெற்றியும்

கொஞ்சம் ஆறுதல்.

தேர்தலில் எங்களுக்கான ஆறுதல் பரிசுகள்😃

1 hour ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 

தோற்று 11 வருடங்கள் ஆகிவிட்டது, மீண்டும், ஒரு பிறப்பு இளைஞர்களிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

அக்கினி மிக நல்ல முடிவும் தெளிவும் 
ஈசல் துரோகிகள் வரும் வேகத்திலேயே தொலைந்துவிடுவார்கள் 
அவர்கள் வெல்வதை பற்றி அரசியலில் பெரிதாக அலட்டிகொள்ள ஏதும் இல்லை 
காரணம் எஜமானிகளை கடந்து அவர்கள் விரும்பினாலும் எதுவும் செய்ய முடியாது 

தமிழ்நாடுபோல திருத்த முடியாத கழுதையையும் .....(தி மு க) 
அடித்தும் திருத்த முடியாத கழுதையையும் (அ  தி மு க)
ஆண்டாண்டு காலமாக வைத்து இழுப்பதைப்போல ஈழத்தமிழர்கள் இருக்க கூடாது 

மக்களை ஓரளவுக்கு மேல் ஏமாற்றுபவர்களை அகற்றிவிட வேண்டும்.   

தமிழ் பிரணித்துவத்தை வைத்து இவ்வளவு நாளும் எதோ வெட்டி புடுங்கின மாதிரி 
வெளிக்கிட்டுவிடார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Robinson cruso said:

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

றொபின்சன்  குரூசோ.... தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது...
நேற்றுக் காலையில்... நீங்கள் தெரிவித்த, கணிப்பை நினைத்துக் கொண்டேன்.  
மிகச் சரியாக... கணித்து இருந்தீர்கள். பாராட்டுக்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ranil-1-1.jpg

வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 27 இலட்சத்து 71ஆயிரத்து 984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக மூன்று இலட்சத்து, 27ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பிரதான கட்சியாக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வரலாற்று தோல்வியைச் சந்தித்துள்ளது.

அந்த கட்சி இம்முறை ஒரேயொரு ஆசனத்தை மட்டும் பெற்றுள்ளது. இக்கட்சி மொத்தமாக இரண்டு இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு ஆசனமும் போனஸ் ஆசனமாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் எந்த ஆசனத்தையும் பெறாமல் தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.

இதேநேரம் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேரதலில் ஐக்கிய தேசியக் கட்சி 50 இலட்சத்து 98 ஆயிரத்து 916 வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

http://athavannews.com/வரலாற்றுத்-தோல்வியை-பதிவ/

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:
2 hours ago, Robinson cruso said:

ராஜபக்சேக்கள் குறைந்தது  135 இடங்கள் எடுப்பார்கள் என்று எழுதி இருந்தேன். அவர்கள் அதையும் விட அதிகமாகவே எடுத்திருக்கிறார்கள். இனி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கலாம். பொறுத்துஇருந்துதான் பார்க்க வேண்டும் தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்குவார்களா என்று. நான் அறிந்த வரிக்கும் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

றொபின்சன்  குரூசோ.... தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது...
நேற்றுக் காலையில்... நீங்கள் தெரிவித்த, கணிப்பை நினைத்துக் கொண்டேன்.  
மிகச் சரியாக... கணித்து இருந்தீர்கள். பாராட்டுக்கள்.

நானும் அவரின் கணிப்பு தவறு என்று சொல்லியிருந்தேன்.
மன்னிக்கவும் குரூசோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.