Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கு வருத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி  . மீதியை தொடருங்கோ 

Edited by நிலாமதி

  • Replies 110
  • Views 14.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிலாமதி said:

குணமடைந்து   மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி  . மீதியை தொடருங்கோ 

கருத்துக்கு நன்றி நிலா அக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தாரை லொள்ளுக்குக் குறைவில்லை. ஆனாலும் சிலநேரம் எரிச்சல் தான் வரும்.🤣

உப்பிடி எரிச்சல் வாற லொள்ளுகளை என்ரை வீட்டிலை  விட்டால் என்ரை முன் பல்லுக்களை நான் பொறுக்கித்தான் எடுக்க வேணும்....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன்.

மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார்.

"வணக்கம் எப்படி இருக்கிறாய்"

" சரியான தண்ணீர்த் தாகம்"

" இப்ப தலை சுற்றலில்லையா"

" இல்லை. எனக்கு என்ன நோய்"

" உனக்கு liver இல் தான் பிரச்சனை"

"அதிலா கான்சர்"

" உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு"

" எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே"

"உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்"

" இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு"

" நீ அல்ககோல் குடிப்பாயா"

" இல்லை "

எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது.

" சிகரெட் பிடிக்கிறனியா"

" எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை"

" கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்"

" ஓமோம் மூன்று குழந்தைகள்"

" வேலை செய்கிறாயா"

" ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது"

" கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் "

" ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் "

" ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்"

" நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் "

" இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் "

" காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...."

"என்ன குளிசைகள் பாவிக்கிறாய்"

"பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்"

" எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் "

"கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்"

" உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா"

" என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா"

"இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்"

"முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்"

அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது"

"மஞ்சள் காமாளையா"

"ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்"

"கோப்பி குடிப்பேன்"

" வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு"

"ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்"

"மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை"

"அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை"

எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன்.

" வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder "

" இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது"

" யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்"

" எந்தளவு குடித்தாய்"

" இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்"

"உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா"

" மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை"

" நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "   

" அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் " 

" இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு"

"சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே"

"ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.    

பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.

 வரும் இன்னும்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே இவ்வளவும் நடந்திருக்கா?
எது எப்படியோ இங்கு கண்டது சந்தோசம்.

மறுபடியும் சமையல்கட்டில் ஆளைக் காணலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. அக்கா அக்கு வேறு ஆணிவேரா மெடிக்கல் சர்டிபிகேட் , வாழ்க்கை முறை பற்றி எல்லாம் சொல்லிட்டா.
யாழ் களத்தில்  ப்ரைவேசி , கான்செண்ட் போர் இன்போமேஷன் இத்தியாதி சட்டங்கள் இருக்கிறதா?

எது எப்படியோ இங்கு கண்டது சந்தோசம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் , முதல் பகுதியை போய் வாசித்த பின்னர் குழப்பம் தான். உடலமைப்பியலில் வயிற்றை நான்கு காற்பங்குகளாகப் (quadrants)  பிரிப்பார்கள். வலது மேல் காற்பங்கில் (Right upper quadrant) வலி என்றால், முதலில் மருத்துவருக்கு மனதில் எழ வேண்டியது "கல்லீரல்" தான். ஏன் அடி வயிற்றில் இருக்கும் சிறு நீர்ப்பையைத் தேடி, புற்று நோய் என்றும் புரளி கிளப்பினார் என்றும் தெரியவில்லை! 

வீடியோவில் உங்களைப் பார்த்த போது உங்கள் கண்களைப் பரிசோதிக்கவும் கேட்கவில்லையா? சிறு நீர் பரிசோதனையில் பிலிருபின் அளவு அதிகரித்திருப்பதையும் தவற விட்டு விட்டார் போல இருக்கிறது!

அவர் உங்கள் குடும்ப மருத்துவராக இருந்தால் , கழட்டி விட்டு வேறொருவரை தேடிக் கொள்வது நல்லதென நினைக்கிறேன். 

Edited by Justin
நடு பந்தி சேர்க்கப் பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,நலம் பெற வேண்டுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சீ ....நான் ஆரம்பத்திவிருந்தே சொல்லிக் கொண்டு வந்தது ஒன்றே ஒன்று தான் கண்டதையும் சாப்பிடாதீங்கோ என்று..பார்த்தீர்களா முளை விட்டது விடாதது எல்லாம் என்ன செய்திருக்கிறது என்று..எனக்கு உங்கள் சாப்பாட்டு முறையில் டவுட் வந்த படியால் தான் சொல்லிக் கொண்டு வந்தேன்.😀✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே இவ்வளவும் நடந்திருக்கா?
எது எப்படியோ இங்கு கண்டது சந்தோசம்.

மறுபடியும் சமையல்கட்டில் ஆளைக் காணலாமோ?

சமையல்க் கட்டை தொடரும் எண்ணம் இல்லை அண்ணா  😀

10 hours ago, Sasi_varnam said:

ம்ம்ம்.. அக்கா அக்கு வேறு ஆணிவேரா மெடிக்கல் சர்டிபிகேட் , வாழ்க்கை முறை பற்றி எல்லாம் சொல்லிட்டா.
யாழ் களத்தில்  ப்ரைவேசி , கான்செண்ட் போர் இன்போமேஷன் இத்தியாதி சட்டங்கள் இருக்கிறதா?

எது எப்படியோ இங்கு கண்டது சந்தோசம் 😀

வருகைக்கு நன்றி சசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

எனக்கும் , முதல் பகுதியை போய் வாசித்த பின்னர் குழப்பம் தான். உடலமைப்பியலில் வயிற்றை நான்கு காற்பங்குகளாகப் (quadrants)  பிரிப்பார்கள். வலது மேல் காற்பங்கில் (Right upper quadrant) வலி என்றால், முதலில் மருத்துவருக்கு மனதில் எழ வேண்டியது "கல்லீரல்" தான். ஏன் அடி வயிற்றில் இருக்கும் சிறு நீர்ப்பையைத் தேடி, புற்று நோய் என்றும் புரளி கிளப்பினார் என்றும் தெரியவில்லை! 

வீடியோவில் உங்களைப் பார்த்த போது உங்கள் கண்களைப் பரிசோதிக்கவும் கேட்கவில்லையா? சிறு நீர் பரிசோதனையில் பிலிருபின் அளவு அதிகரித்திருப்பதையும் தவற விட்டு விட்டார் போல இருக்கிறது!

அவர் உங்கள் குடும்ப மருத்துவராக இருந்தால் , கழட்டி விட்டு வேறொருவரை தேடிக் கொள்வது நல்லதென நினைக்கிறேன். 

அந்த சென்டரில் மொத்தம் ஆறு வைத்தியர்கள் இருக்கின்றனர். அவர்களில் மூவர் தமிழர், இருவர் பிரிடிஷ் காரர், இன்னும் ஒருவர் சைனீஸ். நாம் இவர்களுடன் கதைக்கவேண்டும் என்றால் அவர்களுக்குத் தருவார்கள். இல்லையேல் அங்கு இருக்கும் யாரோ ஒருவருக்குத் தருவார்கள். நான் வீட்டுக்கு வந்தபின் எனக்குக் கான்சர்  என்று சொன்ன விடயத்தைக் கூறியபோது மகள் அவருக்கு எதிராக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாள். அதற்கு அதற்குப் பொறுப்பான வைத்தியரிடம் இருந்து மன்னிப்புக் கேட்டு கடிதம் வந்தது. ஆனாலும் மற்றவர்கள் போல் இல்லாமல் நல்லாக் கதைப்பார் அந்த வைத்தியர்.

9 hours ago, nunavilan said:

சுமோ,நலம் பெற வேண்டுகிறேன். 

எனக்கு இப்ப குணமாக்கிவிட்டுது நுணா

8 hours ago, யாயினி said:

சீ ....நான் ஆரம்பத்திவிருந்தே சொல்லிக் கொண்டு வந்தது ஒன்றே ஒன்று தான் கண்டதையும் சாப்பிடாதீங்கோ என்று..பார்த்தீர்களா முளை விட்டது விடாதது எல்லாம் என்ன செய்திருக்கிறது என்று..எனக்கு உங்கள் சாப்பாட்டு முறையில் டவுட் வந்த படியால் தான் சொல்லிக் கொண்டு வந்தேன்.😀✍️

😀😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் காமாளை என்று சொல்லியபிறகு மூன்று நாளின் பின் கட்டில் இல்லை என்று கூறி என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கூப்பிட்டு இரத்தம் எடுத்தார்கள். மூன்றுவாரங்களாக ஒரே பத்தியச் சாப்பாடுதான். புதிய வேலை வீட்டிலிருந்து 10 நிமிடப்பயணம். எதற்கு வீட்டிலேயே சும்மா இருக்கவேண்டும். அதுபோக வேறு யாரையும் வேலைக்கு எடுத்தால் வேறு வேலை தேடவேண்டும் என எண்ணியபடி வைத்தியரிடம் வேலை செய்யலாமா என்று கேட்க, கடினமான வேலை இல்லை என்றால் செய்யலாம். அதுவும் இரண்டு நாட்கள் தான் என்கிறீர்கள் என்கிறார்.

அன்று மாலை வீட்டில் இருக்கும்போது தொலைபேசி இலக்கம் மறைத்தபடி( No Caller ID ) ஓர் போன் வருகிறது. நான் போனை எடுக்கவில்லை. பின்னர் புதிய இலக்கத்துடன் ஒரு அழைப்பு. யார் என்று பார்த்தால் யாழ்கள உறவு. என்ன அக்கா. இலக்கம் தெரிந்தால்த்தான் எடுப்பியளோ என்று கேட்கிறார். வேலைக்குப் போன அன்று கொஞ்சம் சனம் அதிகம். தொடர்ந்துதொலைபேசி அழைப்புக்களால் வந்த டென்ஷன் என்று இருக்க ஒரு போன் வருகிறது இலக்கம் மறைத்தபடி. எடுக்காமல் விடுவோம் என்று நினைக்க அடுத்தநாள் தமிழ்ப்பள்ளி. அது தொடர்பாகவும் சிலர் இப்படி இலக்கத்தை மறைத்து போன் செய்வது. எனவே எடுப்போம் என்று எண்ணி எடுத்தால் ஒரு பெண் குரல். நீங்கள் நிவேதாவோ என்று கேட்டதாகத்தான் நினைவு. ஏனெனில் அந்த போனை எடுத்த உடனேயே எனக்கு ஒரு கஸ்டமர் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து போன் கதைக்காக கூடாது. எனவே அவசரமாக நீங்கள் யார் கதைக்கிறீர்கள்? "என்னைத் தெரியேல்லையோ " என்று கேட்க சினம் வருகிறது. இலக்கம் இல்லாமல் எடுத்ததுமல்லாமல் என்னைத்தெரியுதோ என்றால் ..... "நான் வேலையில நிக்கிறன். ஆர் கதைக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ பிறகு எடுக்கிறன்" என்று சொல்ல போன் கட் ஆகிட்டுது. ஆராய் இருக்கும் என்று மண்டையைப் போட்டு உடைச்சும் விளங்கவே இல்லை. யாழில் உங்களைத் தேடீனம் என்று ஒரு உறவு மெசெஞ்சரில் செய்தி அனுப்பத்தான் வந்து பார்த்தால் யார் என்று புரிந்தது.

மருத்துவமனை எனக்குத் தந்த மருத்துவ அறிக்கையில் "இவரின் நோய்க்குக் காரணம் இவர் அருந்திய மூலிகைத் தேநீர். இவர் தன்னைத் தானே நோயாளி ஆக்கிக்கொண்டார்" என்று இருக்க மனிசன் முதல் வேலையா நான் அரைச்சு வச்சிருந்த அத்தனை மூலிகைப் பொடிகளையும் குப்பையில் கொட்டிவிட்டார். எனக்கு வைத்தியர்கள் தந்த அறிக்கையில் நம்பிக்கை இல்லாமல் தலைமை வைத்தியரை தொடர்புகொள்கிறேன். மருந்து என்றால் எல்லாமே அளவுடன் இருக்க வேண்டும். எல்லாம் எல்லோருக்கும் ஏற்புடையதாகி விடாது. மூலிகை வைத்தியமும் இப்பிடி இப்பிடிச் செய்யவேண்டும் என்று இருக்க ஆளாளுக்கு You Tube இல் போடுவதைப் பாத்து நீங்களே வைத்தியம் செய்ய வெளிக்கிட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தான் வரும் என்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யார் என்று பார்த்தால் யாழ்கள உறவு. என்ன அக்கா. இலக்கம் தெரிந்தால்த்தான் எடுப்பியளோ என்று கேட்கிறார்

இது நாதமுனியாய் இருக்குமெண்டு நினைக்கிறன் 😁

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு பெண் குரல். நீங்கள் நிவேதாவோ என்று கேட்டதாகத்தான் நினைவு.

இது என்ரை லண்டன் தங்கச்சி 😎

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி குணமடைந்து வந்தது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அன்று மாலை வீட்டில் இருக்கும்போது தொலைபேசி இலக்கம் மறைத்தபடி( No Caller ID ) ஓர் போன் வருகிறது. நான் போனை எடுக்கவில்லை. பின்னர் புதிய இலக்கத்துடன் ஒரு அழைப்பு. யார் என்று பார்த்தால் யாழ்கள உறவு. என்ன அக்கா. இலக்கம் தெரிந்தால்த்தான் எடுப்பியளோ என்று கேட்கிறார். வேலைக்குப் போன அன்று கொஞ்சம் சனம் அதிகம். தொடர்ந்துதொலைபேசி அழைப்புக்களால் வந்த டென்ஷன் என்று இருக்க ஒரு போன் வருகிறது இலக்கம் மறைத்தபடி. எடுக்காமல் விடுவோம் என்று நினைக்க அடுத்தநாள் தமிழ்ப்பள்ளி. அது தொடர்பாகவும் சிலர் இப்படி இலக்கத்தை மறைத்து போன் செய்வது. எனவே எடுப்போம் என்று எண்ணி எடுத்தால் ஒரு பெண் குரல். நீங்கள் நிவேதாவோ என்று கேட்டதாகத்தான் நினைவு. ஏனெனில் அந்த போனை எடுத்த உடனேயே எனக்கு ஒரு கஸ்டமர் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து போன் கதைக்காக கூடாது. எனவே அவசரமாக நீங்கள் யார் கதைக்கிறீர்கள்? "என்னைத் தெரியேல்லையோ " என்று கேட்க சினம் வருகிறது. இலக்கம் இல்லாமல் எடுத்ததுமல்லாமல் என்னைத்தெரியுதோ என்றால் ..... "நான் வேலையில நிக்கிறன். ஆர் கதைக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ பிறகு எடுக்கிறன்" என்று சொல்ல போன் கட் ஆகிட்டுது. ஆராய் இருக்கும் என்று மண்டையைப் போட்டு உடைச்சும் விளங்கவே இல்லை. யாழில் உங்களைத் தேடீனம் என்று ஒரு உறவு மெசெஞ்சரில் செய்தி அனுப்பத்தான் வந்து பார்த்தால் யார் என்று புரிந்தது.

பாவம் எம் கள உறவு & குடும்பம், இப்படியெல்லாம் திட்டுவாங்கி எங்களுக்கு தகவல்களை தந்தவருக்கு நன்றி. நாங்கள் எவ்வளவு கவலைப்பட்டிருப்போம் சுமேயை காணவில்லையென்று. 😢

55 minutes ago, குமாரசாமி said:

இது நாதமுனியாய் இருக்குமெண்டு நினைக்கிறன் 😁

இது என்ரை லண்டன் தங்கச்சி 😎

இல்லை கனாடவில் இருந்து மட்டுறுத்தினரின் மனைவி😎

சுமே அக்கா விரைவில் பூரண நலமடைய வாழ்த்துக்கள். 💐 கண்டதில் மகிழ்ச்சி. 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

இல்லை கனாடவில் இருந்து மட்டுறுத்தினரின் மனைவி😎

ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி 

பகிர்வுக்கு நன்றி சுமே. 

இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன்.

சம்பவம் 1: 

அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர்.

திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு.

ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார்.

சம்பவம் 2:

இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

சம்பவம் 3:

விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி  (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது.

சம்பவம் 4:

சுமேயின் அனுபவம்

------------

கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை ,  வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது.

முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இது நாதமுனியாய் இருக்குமெண்டு நினைக்கிறன் 😁

இல்லை என்டு நான் நினைக்கிறன்😀😀

சுமோவை கண்டது மகிழ்ச்சி...

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்ரி 
நலமோடு திரும்பியமையை இட்டு மகிழ்ச்சி ,அன்ரி   உந்த பதிமார்கள்  தரும் சூரணம், உருட்டித்தரும் தார் உருண்டைகள், மூலிகை கஷாயங்கள் உடன்   படுகவனம், இலங்கையில் ஒருகாலத்தில் பல அன்ரிமார்களின்  பாசமிகு தோழன் சித்தாலேப்பையால் காலை கழற்ற வேண்டி வந்த கேசும் உண்டு  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி சுமே. 

இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன்.

சம்பவம் 1: 

அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர்.

திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு.

ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார்.

சம்பவம் 2:

இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

சம்பவம் 3:

விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி  (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது.

சம்பவம் 4:

சுமேயின் அனுபவம்

------------

கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை ,  வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது.

முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.

தமிழ் மக்களிடம் நான் அதிகமாக பழகுவதால் இப்படி எண்ணத்தோன்றுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்த சமூக வலைதளங்களில், யுடியூப்பில் வருவதை அப்படியே நம்பி சீரழிவதில் எமது மக்கள் நெம்பர் 1 என்றே படுகிறது. 

வரலாறு, அரசியல், ஆன்மீகம், மருத்துவம், என எல்லாவற்றிற்கும் பேஸ்புக்கில், யுடியூப்பில் முகம் தெரியாத மனிதர்கள் சொல்வதை அல்லது வாட்சப்பில் வரும் போர்வேட்டில் இருப்பதை பின் பற்றுவது, இப்படி செய்யாதேங்கோ என சொன்னால், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று மார்தட்டுவது.

ஏதோ எமது முன்னோர் எல்லாரும் குரக்கன் புட்டை சாப்பிட்டு 100 வருடம் திடகாத்திரமாய் வாழ்ந்தது போல.

சிலர் வாழ்ந்துதுருக்கலாம் ஆனால் முன்பை விட இப்போதான் இலங்கையில் life expectancy அதிகம். 

இன்னொரு புரட்டு முன்பெல்லாம் நோயில்லாமல் வாழ்வார்கள் என்பது.

அவர்கள் நோயில்லாமல் வாழவில்லை நோயில் செத்தே போனார்கள்.

ஒரு 40 வருடத்துக்கு முன் டயபிடிஸ் வந்த ஆள், ஊரில் என்ன வருத்தம் என்று தெரியாமலே 45-55 வயசில அவுட் ஆகிவிடும். 

அவரை நோயில்லாமல் வாழ்ந்தார் என்றும், இன்று மாத்திரை எடுத்து டயபடீசை கட்டுபடுத்தி 80 வயதுவரை வாழ்பவரை நோயோடு வாழ்கிறார் என்றும் சொல்கிறோம்.

1 hour ago, goshan_che said:

தமிழ் மக்களிடம் நான் அதிகமாக பழகுவதால் இப்படி எண்ணத்தோன்றுகிறதோ தெரியவில்லை ஆனால் இந்த சமூக வலைதளங்களில், யுடியூப்பில் வருவதை அப்படியே நம்பி சீரழிவதில் எமது மக்கள் நெம்பர் 1 என்றே படுகிறது. 

நான் அப்படி நினைக்கவில்லை கோசான். இது எங்களில் மட்டுமல்ல, எல்லா சமூகத்திலும் உண்டு. என் வேலையில் பல இந்தியர்களுடனும், சீனர்களுடனும், கறுப்பினத்தவர்களுடனும் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைக்கின்றது. அவர்களிடமும் இவ்வாறான பழக்கங்களும் நம்பிக்கைகளும் உண்டு. இந்தியர்களும் சீனர்களும் மரபு ரீதியிலான மருத்துவத்தை அதிகம் நம்புகின்றவர்களாக உள்ளனர். மஞ்சள் தூள் எல்லா கிருமிகளையும் கொன்று விடும் என்று மஞ்சளை காலையில் கொஞ்சம் குடிக்க கொடுக்கும் ஒரு இந்தியர் என்னுடன் வேலை செய்கின்றார் (புலிகள் தம் உணவில் மஞ்சள் தூளை அதிகம் கலன். கருஞ்சீரகத்தை தண்ணியில் கலந்து குடிக்கும் சீனப் பெண்மணி எங்கள் குடும்ப நண்பராக இருக்கின்றார்.

சிங்களவர்கள் இப்பவும் ஆயுர்வேதத்தை அதிகம் நம்புகின்றனர். ஆயுர்வேதம் என்று சொல்லி எந்த மூலிகையை கொடுத்தாலும் நம்பிவிடுவார்கள்.  அவர்கள் சமகனை அதிகம் நம்பிக்கொண்டு இருந்த காலமும் உண்டு (எம் மக்களிலும் பலர் இன்னமும் சமகனை நம்புகின்றனர்).

மத நம்பிக்கையால் தடுப்பூசியை மறுக்கும் கூட்டமும், இரத்த தானத்தை நிராகரிக்கும் கூட்டமும். மருந்து மாத்திரையை எடுக்காமல் விடும் கூட்டமும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறைய உண்டு. இயேசு தந்த மூச்சை எப்படி தடுப்பது என்று கேட்டு மாஸ்க் போடாத அறிவாளிகள் பலர் அமெரிக்காவில் இருக்கின்றனர் தானே.
 
எனக்கு காச்சல் தடுமல் வந்தால் முதல் மூன்று நாட்கள் மருத்துவமாக மனிசி தரும் ரசத்தை தான் அதிகம் நம்புகின்றேன். காரசாரமாக மனிசி வைச்சு தரும் ரசத்தை பார்த்து குதிக்கால் தெறிக்க ஓடின கிருமிகள் கனக்க 
 
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

நினைத்துப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது. சிங்களவர்கள் வெடிமல் மீது அபரிமித நம்பிக்கை உள்ளவர்கள். 

எனக்கு தெரிந்த இந்தியர்களும் என்ன வருத்தம் என்றாலும் தேனும், மஞ்சளும், மிளகும் போதும் என்பார்கள்.

சிலதில் விசயமில்லாமலும் இல்லை. உதாரணமாக கற்பூரவல்லி இலை நெஞ்சு சளியை ஓரளவுக்கு குறைக்கும். நீங்கள் சொன்னது போல ரசமும். 

தவிரவும் பதனிட்ட உணவால் ஆரோக்கியம் கெடுகிறது என்பதையும் ஏற்கிறேன்.

ஆனால் பிளட் கேன்சரா, பிளேண்டியில் இஞ்சி சேர்த்து எட்டு வாரம் குடியுங்கள் என்ற ரீதியிலான பதிவுகளை பார்க்கும் போது, உண்மையான விடயங்களிலும் நம்பிக்கையீனம் ஏற்பட்டு விடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.