Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன, ஆங்கில மொழிகளில் மாத்திரம் ரயில்வே நிலையத்தில் அறிவிப்பு பலகை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் 

விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/140359/Eop_5avXcAAL7nZ.jpg

நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ரயில்வே பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் இது நிறுவப்பட்டுள்ளதாக திலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் குறித்த அறிவிப்பு பலகையை நிறுவுவதற்கு யார் காரணம் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் திலந்தா பெர்னாண்டோ கூறினார்.

https://www.virakesari.lk/article/96131?fbclid=IwAR1Dv9zv_m0b6mIan-uI1ZFjPw15QzWA_kQl8vp6ExkGlAb0Vx0YLRhTQt0

  • கருத்துக்கள உறவுகள்

வலு வேகமாக.... சீனா, இலங்கையை ஆக்கிரமிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

வலு வேகமாக.... சீனா, இலங்கையை ஆக்கிரமிக்கின்றது.

சிறிமா காலத்திலை அடிக்கல் நாட்டினது இப்ப வளர்ந்து   கன இடங்களிலை சின்ன வீடுகளே பிரமாண்டமாய் இருக்குதாம்😎

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசமல்ல இனி இலங்கை, சீன தேசம் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, உடையார் said:

சிங்கள தேசமல்ல இனி இலங்கை, சீன தேசம் 😂

அகண்ட பாரதம் உணருமா? அல்லது சூடு சுரணை இல்லாமல் திரைப்படங்களில் மட்டும் செய்து காட்டுவார்களா???? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அகண்ட பாரதம் உணருமா? அல்லது சூடு சுரணை இல்லாமல் திரைப்படங்களில் மட்டும் செய்து காட்டுவார்களா????  🤣

அதுக்கெங்க சூடு சுரணையிருக்கு, தமிழனை அழிக்க வேண்டும், அதுதான் அதனின் கொள்கை 🤣

இலங்கையில் இப்போது ஆங்கிலத்துடன் சீன மொழியையும்  கற்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதாவது வருங்காலத்தில் சீன உலகில் முதல் இடத்திட்க்கு வருமென்று எதிராபர்ப்பதால் அப்படியான ஏட்பாடுகள். எனவே பேராதனை பல்கலைக்கழகத்தில் சீன மொழி கடகை பீடம் ஒன்றயும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கட்கயை முடித்தவர்கள் வரும்காலங்களில் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். எனவே இனி சீன மொழியும் இலங்கையில் இணைப்பு மொழியாக்கினால் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இனி சைனா லங்கா  என்று அழைக்கப்படும் கோத்தாவுக்கு போன் அடிச்சு சைனா லங்கா சீனாவின் எத்திணையாவது  மாகாணம் என்று கேளுங்கப்பா .

அறிவிப்பு பலகையில் தமிழும் இல்லை. எனவே சிங்களவர்களுக்கு இது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு தமிழ் இருந்து இருந்தால் தான் சிங்கன்களுக்கு இரத்தக் கொதிப்பு வந்து விடும். முக்கியமாக விமல் வீரசிங்க வகையறாக்களுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, உடையார் said:

அதுக்கெங்க சூடு சுரணையிருக்கு, தமிழனை அழிக்க வேண்டும், அதுதான் அதனின் கொள்கை 🤣

அதுக்கு பாக்கிஸ்தானிலை என்ன விடுப்பு நடக்குது எண்டு பாக்கவே நேரம் காணது......😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

No photo description available.

இனி சைனா லங்கா  என்று அழைக்கப்படும் கோத்தாவுக்கு போன் அடிச்சு சைனா லங்கா சீனாவின் எத்திணையாவது  மாகாணம் என்று கேளுங்கப்பா .

நான் நினைக்கிறன் இதை இலங்கை சுற்றுலாத்துறைதான் வைத்திருக்கும் என்று 
அவர்கள் வைத்திருப்பின் இதில் பெரிதாக தவறும் இல்லை என்று எண்ணுகிறேன் 
எவ்வளவு உல்லாசப்பிராயணிகள் வருகிறார்கள் எந்த மொழியை கொண்டவர்கள் 
அதிகமாக வருகிறார்கள் என்பதை பொறுத்து. அவர்களுக்கு ஒரு வழி-துணை  காட்டுதலாக 
இருக்கும் என்றே  நான் எண்ணுகிறேன்.

பிரான்ஸ் லூட்ஸ் மாத கோவிலில் தமிழ் இருப்பதுபோல ...
எல்லோரும்தான் வருகிறார்கள் ஆனால் தமிழர்கள்தான் 
உண்டியலை நிரப்புகிறார்கள் என்று அறிந்துகொண்ட அவர்கள் 
தமிழர்களுக்கு தமது உண்டியலை நிரப்ப இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொடுப்பதுபோல. 
 
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

ஆனால் அவன் தன் நாட்டு மொழியை அடவு வைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, theeya said:

ஆனால் அவன் தன் நாட்டு மொழியை அடவு வைக்கவில்லை. 

இது ஒரு எக்ஸ்ட்ரா தகவல் பலகையாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன் 
தமிழ் சிங்களம் இருந்த பழைய தகவல் பலகை இப்போதும் இருக்கும் 
இது தமிழ் சிங்களம் தெரியாத நபர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் 
என்பது எனது அனுமானம். 

நான் இலங்கை செல்லும் குறிப்பாக யாழ்ப்பாணம் செல்லும் 
சுற்றுலாபயணிகளின் யூடுப் வீடியோக்கள் பார்த்து இருக்கிறேன் 
அவர்கள் யாழ்ப்பாணத்தில் மிகவும் பாதுக்காப்பாக உணருகிறார்கள் 
எல்லா இடமும் தனியாக அச்சம் இன்றி செல்ல கூடியதாக இருக்கிறார்கள் 
லோக்கல் மக்கள் நல்ல உதவி மனப்பான்மையோடு இருப்பதாகவும் சொல்கிறார்கள் 
ஆனால் இந்த மொழி பிரச்னையை குறிப்பிடுகிறார்கள். யாழில் இருந்து 
ஊர்காவல்துறை செல்லும் பஸ் தமிழ் சிங்கள மொழி போர்டுடன் செல்கிறது 
அவர்களுக்கு தாம் சரியான பஸ்ஸில்தான் ஏறுகிறோமா? அல்லது அது எத்தனை மணிக்கு 
வரும் போன்ற தகவல்கள் அறியமுடியாமல் இருக்கிறது .... மக்களுக்கு அவர்கள் கேட்பது புரிகிறது இல்லை 
அவர்கள் சொல்வது இவர்களுக்கு புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

யாழில் இருந்து 
ஊர்காவல்துறை செல்லும் பஸ் தமிழ் சிங்கள மொழி போர்டுடன் செல்கிறது 

பருத்தித்துறைக்கே யாழிலிருந்து பேருந்து ஓடமுடியாது தோணி ஓடும்போது.... ஊர்காவற்துறைக்கு எப்படி ஓடமுடியும்.???🤔

PHOTO-2020-12-08-17-31-49-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2010 இல் வரைந்த படம் இது

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

2010 இல் வரைந்த படம் இது

spacer.png

நல்ல கற்பனையுடன், வடிமைக்கப் பட்ட ஓவியம். :grin:

130551086_3605479716212790_5429717981803334130_o.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=lXqEBFrFuhAAX9wgZWf&_nc_ht=scontent-frt3-2.xx&oh=6401da8cc3703efa3427755bd5f39d30&oe=5FF7A901

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

No photo description available.

Mount Lavinia Hotel, தங்கள் விளம்பரத்துக்காக உல்லாசப்பயணிகளுக்கு தங்களை அறிமுகப்படுத்த வைத்த தகவல்பலகை இது. கீழே தங்கள் பெயரையும் இலச்சினையையும் போட்டிருக்கிறார்கள். 

37 minutes ago, கற்பகதரு said:

Mount Lavinia Hotel, தங்கள் விளம்பரத்துக்காக உல்லாசப்பயணிகளுக்கு தங்களை அறிமுகப்படுத்த வைத்த தகவல்பலகை இது. கீழே தங்கள் பெயரையும் இலச்சினையையும் போட்டிருக்கிறார்கள். 

இவ்வாறாக சுற்றுலா பயணிகள் மி க அதிகமாக வரும் பிரதேசங்களில் gastronomy தனியார் நிறுவனங்கள் இவ்வாறான அறிவிப்பு பலகைகளை வைப்பது சாதாரணமான ஒன்று. சுவிற்சர்லாந்தில் Titlis,Jungfraujoch போன்ற மலை உச்சிக்கு செல்லும் Bergbahn நிலையங்கில் தனி ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பல அறிவிப்பு பலகைகளை சர்வசாதாரணமாக காணலாம்.  காரணம் கோடைகாலங்களில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த பிரதேசங்களுக்கு படையெடுப்பார்கள். குளிர் காலங்கள் முழுக்க முழுக்க Skiing area வாக இருப்பதால் ஐரோப்பியர்கள் மட்டுமே இங்்கு வருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

மலை உச்சியில் ஒரு சேர்ச் கட்டி தமிழில் அறிவிப்பு பலகை வைத்து பாருங்கோ நாங்களும் இடம் பார்க்க இல்லை வேண்டுதல் கேட்டு பிரார்த்தனை செய்ய படையெடுத்து வருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இவ்வாறாக சுற்றுலா பயணிகள் மி க அதிகமாக வரும் பிரதேசங்களில் gastronomy தனியார் நிறுவனங்கள் இவ்வாறான அறிவிப்பு பலகைகளை வைப்பது சாதாரணமான ஒன்று. சுவிற்சர்லாந்தில் Titlis,Jungfraujoch போன்ற மலை உச்சிக்கு செல்லும் Bergbahn நிலையங்கில் தனி ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பல அறிவிப்பு பலகைகளை சர்வசாதாரணமாக காணலாம்.  காரணம் கோடைகாலங்களில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த பிரதேசங்களுக்கு படையெடுப்பார்கள். குளிர் காலங்கள் முழுக்க முழுக்க Skiing area வாக இருப்பதால் ஐரோப்பியர்கள் மட்டுமே இங்்கு வருவார்கள். 

அவர்கள் என்னதான் மற்றைய மொழிகளில் போட்டு இருந்தாலும் சுதேச மொழி யில் குறிப்பு  கட்டாயம் இருக்கும் .

ஆனால் சைனா லங்காவில் சிங்கள  மொழி வாழனும் என்று சக தமிழர்களை  இலட்சக்கணக்கில் இனவழிப்பு அழித்தார்களோ அவர்களின் தாய் மொழி சிங்களம்  மருந்துக்கு கூட இல்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மலை உச்சியில் ஒரு சேர்ச் கட்டி தமிழில் அறிவிப்பு பலகை வைத்து பாருங்கோ நாங்களும் இடம் பார்க்க இல்லை வேண்டுதல் கேட்டு பிரார்த்தனை செய்ய படையெடுத்து வருவோம்.

ஏற்கனவே போய்க்கொண்டுதான் இருக்கிறியள்  பெயர் சிவனொளிபாதமலை கிஸ்தவ, முஸ்லிம் ,பவுத்தர்கள் ,இந்துக்கள் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு சம்பந்தமில்லா கதையை சொல்லி அந்த மலையில் ஏறி இறங்கி  உடலில் உள்ள கொழுப்பை கரைத்து கொண்டு இருக்கிறியள் .

எங்கோ பிறந்த முஸ்லீம் சமயத்துக்கும் இந்த மலைக்கும் என்ன சம்பந்தம் ?

ஒரு கிருஸ்தவ நாடோடி தன்னுடைய குறிப்பில் எழுதினால் இயேசு கால்தடம் அந்த மலையில் எப்படி பதியும் ?

பாலியில்  எழுதிய மகாவம்சத்தில் இந்த மலையை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை எப்படி புத்தரின் கால் அங்குவந்தது ?

அதே போல் இந்துக்களுக்கும் பெயரைத்தவிர எந்த நேரடியான சம்பந்தமும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

2010 இல் வரைந்த படம் இது

spacer.png

நன்றி கவி அருணாசலம் அண்ணை  அந்த காலகட்டத்தில் இந்தப்படத்தை போட  வலைதளம்களில் சைனா லங்காவுக்கு ஆதரவாய் குரைத்தவர்கள்  இன்று உங்களின் எதிர்வு கூரல் நிஜமாகியுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சீனர்கள் அதிகம் புழங்கும் சியாற்றில் ரகோமா விமான நிலையத்தில் பிரதான அறிவிப்புகள் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் தான். 

இது சாதாரணமான நடைமுறைச் செலவுகளைக் குறைக்கப் பயன்படும் ஒரு திட்டம். சீனாவில் இருந்து வரும் பயணிகள் கணிசமானோருக்கு நாட்டின் சுதேச மொழியோ ஆங்கிலமோ தெரியாது. என்ன குத்தி முறிஞ்சாலும் அவர்கள் தான் உலக சனத்தொகையில் அதிகம், அதனால் பயணிகளின் சனத்தொகையிலும் பல நாடுகளில் சீனர்கள் அதிகம். 

வழி உதவி கேட்கும் சீனர்களுக்கு சீன மொழியில் உதவ ஒருவரை வைத்து அவருக்குப் படியளப்பதை விட ஒற்றை செலவில் இப்படியொரு அறிவிப்புப் பலகை புத்திசாலித்தனமான திட்டம்.

இரு தரப்பிலும் இருக்கும் உசார் ரீம்களுக்கு நித்திரை கலைக்க ஏதாவது தேவை, இது கிடைத்திருக்கிறது! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவிலை எக்கச்சக்கமான இடங்களிலை தமிழ் அறிவிப்பு பலகைகள் இருக்குதாமே?

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களே விசாரணையை ஆரம்பிச்சு இருக்காங்களாம், ( விசாரணை நடக்கிறதும் நடக்காமல் விடுவதும் வேற கதை)

ஆனால் இஞ்ச கொஞ்சப்பேர் வியாக்கியாணம் & முண்டு கொடுக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.