Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது அவர், உங்கள் கேள்விகள் ஆக்கபூர்வமானதாக இல்லை, தமிழ் மக்களுக்கு உதவும் கேள்வி அல்ல, குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்விகள் இல்லை என கூறிவிட்டு மீண்டும் தனது தொலைபேசியின் அழைப்பினை துண்டித்துவிட்டார்.

குறித்த செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில்,

https://www.ibctamil.com/srilanka/80/155932?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

அப்புவுக்கு இண்டைக்கு இரவு தூங்கும்  போது ஏதாவது ஆச்சுதோ ...இந்த ஊடகவியலாளரை சும்மா விடமாட்டன் இப்பவே சொல்லிப்போட்டன்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அப்புவுக்கு இண்டைக்கு இரவு தூங்கும்  போது ஏதாவது ஆச்சுதோ ...இந்த ஊடகவியலாளரை சும்மா விடமாட்டன் இப்பவே சொல்லிப்போட்டன்  

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்குத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்குத்தானே.

ஐயா இவ்வளவுகாலமும்  பாய்ந்த பாச்சல் போதும் 
இனிமேல் கண்டமேனிக்கு பாய்ந்திட வேணாமெண்டு சொல்லுங்கோ , உடம்பும் வயசும் ஒத்துக்காதகாலம் 
இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டு போயிடனும் , யங் போய் போல சீன் போடப்போய் ஒண்டு கிடக்க ஒண்டு ஆயிட்டால் இலங்கை தமிழரை யார் கரையேத்துறது 

  • கருத்துக்கள உறவுகள்

"ஆறு மாதம் முன்னர், தேர்தலுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்காக தேர்தல் முடிந்த பின் ஏன் மணியை நீக்கினீர்கள் ?" என்று ஒரு கேள்வியை இங்கே கேட்ட போது இதே போன்ற ஒரு பதில் ஒரு யாழ் உறவுக்குக் கிடைத்ததாக நினைவு!

ஊரில் எவ்வளவு பிரச்சினை, இதுக்குள் யார் எதை ஆரம்பித்தார்கள் என்பதெல்லாம் academic value மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்வி கேட்கப்போகிறேன் என்று அப்புவிடம் முன்னரே சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு பின் கேள்விகளைக் கேட்கவேண்டும். இந்த ஊடகவியலாருக்கு இங்கிதம் தெரியாது. வயதுக்கு ஒரு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.🤨

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் இருக்கலாம் ஆனால் ஊடகவியலாளரின் இந்தக் குறிப்பிட்ட கேள்வி நிச்சயம் பலனற்றது. 

என்னைப் பொறுத்தவரை இக்கேள்வி "மலட்டுத் தன்மையானது". எந்தவிதமான நன்மையையும் ஒருவருக்கும் தரப்போவதில்லை.

எங்கள் ஊடகவியலாளர்கள் எப்போது நிகழ் உலகுக்கு வரப்போகினம்.. 🤥

வயது முதிர்ந்த, பழுத்த, எங்கள் தரப்பின் மிகவும் முக்கியமான அரசியல்வாதி ஒருவர் தனக்குரிய நேரத்தை ஊடகவியலாளருக்கு ஒதுக்கும்போது அதன் பெறுமதி ஊடகவியலாளருக்குத் தெரிய வேண்டாமா.. அல்லது தனது தொழிலின் பெறுமதி அவருக்குத் தெரியாதா.. ? 

முட்டாள்தனமான கேள்வியும் மிகவும் பொறுப்பற்ற ஊடகவியலாளரும்..☹️

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கேள்விகள் ஐயாவுக்கு மட்டுமல்ல இன்னும் சிலருக்கும் தேவையில்லாத கேள்விகளே தான்..

ஐயாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்றால்..

மகிந்த நல்லவரா வல்லவரா..

கோத்தா சாணக்கியனா.. சரித்திரமா..

தீபாவளி எப்படி வரும்..

நீங்கள் எப்படி சுகமா இருக்கீங்களா..

சந்திரிக்கா சுகமா இருக்காவா..

ரணில் என்ன கொட்டாவி விடுகிறாரா.. (இது கொஞ்சம் ஐயாவை கோபப்படுத்தக் கூடும்..)

சுமந்திரன் விசாரணைக்கு போறாராம்.. உண்மையா...

சிங்கள மக்களோடு வாழ்வது சொர்க்கமா.. சுகமா...

ஒன்றுபட்ட நாடு.. பிளபுபடாத நாடு எவ்வளவு முக்கியம்..

புலிகள் பயங்கரவாதிகளா.. தீவிரவாதிகளா..

சிங்கக் கொடியில் உள்ள சிங்கம் அம்மன் கோவில் சிங்கமா.. புத்தகோவில் சிங்கமா...

இப்படியான தமிழ் மக்களை உலகின் உச்சாரக் கொப்பில் நிறுத்தக் கூடிய கேள்விகளை தான் கேட்கனும்.. ஐயாவிடம்..

அதைவிட்டிட்டு..

தமிழீழம்.. புலிகள்.. பிரபாகரன்.. மாவீரர்கள்.. தாயகம்..சுயநிர்ணயம்.. இனப்படுகொலை.. போர்க்குற்ற விசாரணை.. அரசியல் கைதிகள்.. இப்படியான பதங்கள் பாவிப்பது ஐயாவுக்கு ஒவ்வாமை ஆகும். அது தமிழ் மக்களை பெரிதும்.. பாதிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

சம்பந்தன் ஐயா தொடர்பாக பல்வேறு விமரிசனங்கள் இருக்கலாம் ஆனால் ஊடகவியலாளரின் இந்தக் குறிப்பிட்ட கேள்வி நிச்சயம் பலனற்றது. 

என்னைப் பொறுத்தவரை இக்கேள்வி "மலட்டுத் தன்மையானது". எந்தவிதமான நன்மையையும் ஒருவருக்கும் தரப்போவதில்லை.

எங்கள் ஊடகவியலாளர்கள் எப்போது நிகழ் உலகுக்கு வரப்போகினம்.. 🤥

வயது முதிர்ந்த, பழுத்த, எங்கள் தரப்பின் மிகவும் முக்கியமான அரசியல்வாதி ஒருவர் தனக்குரிய நேரத்தை ஊடகவியலாளருக்கு ஒதுக்கும்போது அதன் பெறுமதி ஊடகவியலாளருக்குத் தெரிய வேண்டாமா.. அல்லது தனது தொழிலின் பெறுமதி அவருக்குத் தெரியாதா.. ? 

முட்டாள்தனமான கேள்வியும் மிகவும் பொறுப்பற்ற ஊடகவியலாளரும்..☹️

அவை மட்டும் இல்லை நாமும் நிகழ் காலத்துக்கு வர வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ் காலம் என்றால் தமிழன் சிங்களவனின் அடக்குமுறைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி ஏதோ கிடைக்கிறதை அனுபவிச்சுக்கிட்டு வாழ்ந்து சாகனும்.

அப்படின்னா... கொரானா சொல்லுது.. எல்லாரும் தொத்து வாங்கி சாகிறவன் சாக.. வாழுறவன் வாழ் என்று. அந்த நிகழ்காலத்தை மட்டும் ஏன் ஏத்துக்கொள்ளினம் இல்லை. ஏன்னா.. அது அவரவர் சொந்த வாழ்க்கையில் கைவைக்குது. இது எவனோ அடிமையாகக் கிடக்கிறது தானே.. நாம ஒட்டி ஒரசி உல்லாசம் அனுபவிப்பம். இந்த நிகழ்காலக் கதையை ஏன் கொரானாவிடம் சொல்ல முடியவில்லை..???!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

அவை மட்டும் இல்லை நாமும் நிகழ் காலத்துக்கு வர வேணும்.

உண்மை.. 😂😂

(நக்கல்.... 😡)

  • கருத்துக்கள உறவுகள்

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

அண்ணை போராடி களைச்சு தான் இப்ப எழுத வெளிக்கிட்டிருக்கிறார்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

நிகழ் காலம் என்றால் தமிழன் சிங்களவனின் அடக்குமுறைக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி ஏதோ கிடைக்கிறதை அனுபவிச்சுக்கிட்டு வாழ்ந்து சாகனும்.

தமிழன் இவ்வளவு முட்டாளா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

உங்கள் கருத்துக்களை.... வாசிக்கும், அளவுக்கு... 
முட்டாள்களாவேகவே  இருந்து விடுகின்றோம்.

இப்ப...  சந்தோசமா... ⁉️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவை நிகழ்காலம் என்றால் ஸ்ருடண்ட் ஆயோ அகதி ஆயோ வெள்நாட்டுக்கு எஸ்க்கேப் ஆகி அவரவர் சொந்தவாழ்க்கையில் யுத்தமோ அதன் பாதிப்புகளோ அன்றாட பிழைப்பில் கைவைக்காத மாரி பாதுகாப்பா நிம்மதியா இருந்துகொண்டு கொரோனவோடையும் சிங்களவனோடையும் நெட்டில சொறிராத்துரது.. ஒரண்டை இழுக்கிறது..😂😂

ஓணாண்டி... 

உங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது ஏன் இத்தனை காழ்ப்புணர்வு.. 😏

புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் மட்டும்தான் வேண்டும் ஆனால் அவர்கள் வாயைத்திறந்தாலே போதும் தாம்தூம் என்று குதிக்கிறீர்களே ஏன்... 😬

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...

ஓணாண்டி யாழ் களத்தில் வேறொரு பெயரிலும் இருக்கிறீர்களோ...

(தனிநபர் தாக்குதல் என்று உடனே குழறிக் குழறி அழுதுபோட்டு.. கொம்பிளைன் பண்ணிப் போடாதேயுங்கோ... 😆)

2 hours ago, kalyani said:

அண்ணை போராடி களைச்சு தான் இப்ப எழுத வெளிக்கிட்டிருக்கிறார்.🤪

 போராடிக் களைச்சுபோகவில்லை. பிறறின் வாழ்க்கையைப் பார்த்து புகைஞ்சு களைச்சுப் போனார்.. 😏

1 hour ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

தமிழர்கள் முட்டாள்கள் என்று கூறுவதில் பேரானந்தம் போலும்.. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா முன்னோக்கிப் பாயவேண்டும் என்பதால் குழப்பமான கேள்விகளைக் கேட்கவேண்டாம்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

ரொம்ப வீரியமாகப் பறக்கின்றார்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

spacer.png

நாங்க ஏதோ கற்பனை செய்தோம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

உங்கட அறிவிலித்தனத்தையும் பார்க்கிறம் தானே கடந்த 11 வருசமா. இல்லாட்டி நீங்களே முடிச்சு வைச்ச விசாரணைகளை நீங்களே ஆரம்பிக்கப் போறீங்களாமே. இதொல்லோ அறிவின் உச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

உங்கட அறிவிலித்தனத்தையும் பார்க்கிறம் தானே கடந்த 11 வருசமா. இல்லாட்டி நீங்களே முடிச்சு வைச்ச விசாரணைகளை நீங்களே ஆரம்பிக்கப் போறீங்களாமே. இதொல்லோ அறிவின் உச்சம். 

தமிழன் இவ்வளவு முட்டாளா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

தமிழன் இவ்வளவு முட்டாளா?

தமிழன் என்னும் பதத்தினுள் நீங்களும் அடங்குவதால்  தமிழன் ஒரு அடிமுட்டாள்!!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2020 at 04:44, நந்தன் said:

நாங்க ஏதோ கற்பனை செய்தோம் 

கற்பனைக்கு ஏது எல்லை!!!😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.