Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம்  கொண்டுவரப்படுவது உறுதி

UNHRC-696x390.jpg
 35 Views

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம்  கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் சிறீலங்காவுக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று சிறீலங்கா அரசுக்கு முன்னதாகவே அனுப்பப்பட்டுள்ளது. முன்னைய தீர்மானம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்த தவறிய சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பதிலை அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது. சிறீலங்காவுக்கு எதிரான இந்த புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ள குழுவுக்கு பிரித்தானியாவே தலைமைதாங்கவுள்ளது.

தீர்மானத்தின் வரைபில் உள்ளடக்க வேண்டிய தமிழ் தரப்பின் கருத்துக்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்து கடந்த வாரங்களில் கலந்துரையாடியுள்ளனர்.

சிரியா மற்றும் மியான்மார் மீது கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஒத்த தீர்மானங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் கட்சிகளின் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குரல் கொடுக்கப்போவதாக கடந்த ஒக்டோபர் மாதம் சீனா வெளிப்படையாக தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனோ வைரசின் தாக்கத்தினால் இறந்த முஸ்லீம் மக்களின் உடல்களை எரிக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் பொது அமைப்புக்குள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ilakku.org/?p=37982

  • Replies 161
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

எனினும் அதற்கான கதவை மூடும்படி தமிழ் தரப்பிலிருந்து வேண்டுகோளை முன்வைக்கலாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் மேற்குலகு கடந்தகாலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம். இந்த அழுத்தங்களால் இலங்கை மேலும்  மேலும் சீனாவை நோக்கிதான் சாயும் என்றால் மேற்குலகம் மீண்டும் பொறுமை காக்கும்.

இது உங்களுக்கு மட்டுமல்ல, இங்கே கருத்தெழுதும் பலருக்கும் புரியும் விடயம். அவகாசம் கொடுக்காமல் விடுதல் என்பது இலங்கை அரசை உடனே ஜெனீவாவில் இருக்கும் நிலவறைச் சிறையில் அடைப்பதல்ல. இலங்கை சீனாவுடன் போய் விடும், எனவே ஏனைய சக்தி வாய்ந்த நாடுகள் இப்படிச் செய்யப் போவதில்லை. 

சரி, இனி நீங்களே கூறுங்கள்: என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கற்பகதரு said:

இயக்கங்கள் இருந்தபோது எல்லாவற்றையும் (நகைகள், பணம் மட்டுமல்ல, பிள்ளைகளையும் கூட) பிடுங்கி அழித்துவிட்டார்கள்.

***

நான் உங்களிடம்  கேட்டது இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட பின்னர் உங்கள் அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என செய்கின்றார்கள்?

பதில் சொல்ல வெட்கமாக இருந்தால் அப்படியே ஒதுங்கி நில்லுங்கள். மாவீரர்களை கொச்சைப்படுத்தாமல்.....😡

48 minutes ago, குமாரசாமி said:

***

நான் உங்களிடம்  கேட்டது இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட பின்னர் உங்கள் அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என செய்கின்றார்கள்?

பதில் சொல்ல வெட்கமாக இருந்தால் அப்படியே ஒதுங்கி நில்லுங்கள். மாவீரர்களை கொச்சைப்படுத்தாமல்.....😡

இங்கு மாவீர‍ர்களை யாரும் கொச்சைப்படுத்த வில்லை. விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள்  மாவீர‍ர்களை துணைக்கு அழைத்து அவர்களின் தியாகங்களுக்கு பின்னால் அரசியல் தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.  அது இங்கு வாடிக்கையாகிவிட்டது. 

மண்ணிற்காக தியாகம் செய்த மாவீர‍ர்களுக்கு மரியாதை செய்வது என்பது வேறு அம்மாவீர‍ர்கள் உயிருடன் இருக்கும் போது எடுத்த முடிவுகளை அரசியல் தீர்மானங்களை விமர்சிப்பது என்பது வேறு. அதை விமர்சிக்கும் உரிமை அந்த முடிவுகளால் பாதிக்கபட்ட ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.  

 மக்களின் போராளிகளின் தியாகங்களை வைத்து சிறந்த முடிவுகளை எடுக்க தெரியாமல் போராட்டத்தை வெளிவரமுடியாத  ஒரு முட்டு சந்தில் விட்டு சென்றதே இயக்கங்கள்  செய்த சாதனை. இது வெளிப்படையானது. இந்த அதல பாதாளத்தில் இருந்து மீண்டு வர பத்து ஆண்டுகள் என்ன இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் போதாது.  ஒரு தலைமுறையின் பின்னரே அவர்களின் சாதுரியத்தால் அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியும். எமது தலைமுறையில் எதுவும் நடக்க போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

அது உங்கள் போன்ற அறிவுரையாளர்களின் மூடநம்பிக்கை. மக்களுக்கு இன்றும் தேசிய தலைவரும் மாவீரர்களும் மாமனிதர்களும் இறுதியான சரியான பொறுப்பாளர்களும் அவர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இங்கு மாவீர‍ர்களை யாரும் கொச்சைப்படுத்த வில்லை. விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள்  மாவீர‍ர்களை துணைக்கு அழைத்து அவர்களின் தியாகங்களுக்கு பின்னால் அரசியல் தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.  அது இங்கு வாடிக்கையாகிவிட்டது. 

மண்ணிற்காக தியாகம் செய்த மாவீர‍ர்களுக்கு மரியாதை செய்வது என்பது வேறு அம்மாவீர‍ர்கள் உயிருடன் இருக்கும் போது எடுத்த முடிவுகளை அரசியல் தீர்மானங்களை விமர்சிப்பது என்பது வேறு. அதை விமர்சிக்கும் உரிமை அந்த முடிவுகளால் பாதிக்கபட்ட ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.  

 மக்களின் போராளிகளின் தியாகங்களை வைத்து சிறந்த முடிவுகளை எடுக்க தெரியாமல் போராட்டத்தை ஒரு முட்டு சந்தில் விட்டு சென்றதே இயக்கங்கள்  செய்த சாதனை. இது வெளிப்படையானது. இந்த அதல பாதாளத்தில் இருந்து மீண்டு வர பத்து ஆண்டுகள் என்ன இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் போதாது.  ஒரு தலைமுறையின் பின்னரே அவர்களின் சாதுரியத்தால் அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியும். எமது தலைமுறையில் எதுவும் நடக்க போவதில்லை. 

உங்களைபோன்றவர்கள் இருக்கும்வரை இந்தத்தலைமுறை என்ன அடுத்ததலைமுறையிலும் ஒன்றும் நடக்காது. கீறல்விழுந்த இசைத்தட்டைபோல் அதையே திரும்ப திரும்ப கூவிக்கொண்டிருங்கள்.

தலைவர் ஒருகொள்கைக்காக போராட சென்றார், அவரது கொள்கைக்காக மக்கள்கூட்டமும் அவர்பின்னால் சென்றது. அந்த கொள்கைக்காகவே அவர்கள் எல்லோரும் மரணித்தார்கள். அரைகுறை தீர்வை ஏற்று மேற்கின், அமெரிக்கனின் திட்டப்படி நடந்தால் யாசிர் அராபாத்துக்கு நடந்ததுதான் தனக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்ததாலேயே அவர் இறுதியில் அந்த முடிவுக்கு வந்திருப்பார்! அவர் ஒன்றும் போராட்டத்தை விட்டு ஓடிவந்து பெரிய அறிவுசெம்மல்கள் போல் யாருக்கும் வகுப்பெடுக்கவில்லையே! ஒன்றும் முடியாவிட்டால் மூடிக்கொண்டிருங்கள் அல்லது உங்கள் அறிவுரைகளை கொண்டு ஸ்ரீலங்காவில்போய் அறிவார்த்தமான அரசியலை முன்னெடுங்கள். தட்டச்சு அறிவுரைகளால் எந்தப்பயனும் இல்லை!! போராட்டம் மௌனித்து ஒரு தசாப்தமாகிவிட்டது. தலைவரைவிட உங்களால் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கமுடியும் என்றால் புலத்திலிருந்து கத்தாமல் தாயகம் சென்று ஏதாவது முடியுமா என்று பாருங்கள். அதைவிட்டு ...

26 minutes ago, Eppothum Thamizhan said:

பதில் கருத்து எழுத முடியாமல் விட்டால் மூடிகொண்டிருக்கள், பொத்திக்கொண்டிருங்கள் என்று கூறுவது உங்களது வாடிக்கை. உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் நீங்கள் தட்டச்சை உபயோகித்து இங்கு எழுதலாம் என்றால் அதே தட்டச்சை உபயோகித்து  நானும் எழுதலாம்.

ஒருவரை ஒருவர் வாயை மூடிக்கொண்டிருங்கள் என்று கூறும் எந்த அதிகாரமும் உங்களுக்கும் இல்லை எனக்கும்  இல்லை என்ற அடிப்படை அறிவு எம் அனைவருக்கும் கட்டாயம் தேவை.

'' புலத்திலிருந்து கத்தாமல் தாயகம் சென்று ஏதாவது முடியுமா என்று பாருங்கள். அதைவிட்டு'' 

''எப்போதும் தமிழன்'' என்று புனை பெயர்வைப்பதை விட தமிழ் சொற்களின் பொருள் விளங்கி வைத்திருப்பது மிக முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்

போயும் போயும்.. அந்த தூதுவருக்கு ...சும்மிடம் சொல்லவா ..தோணிச்சு....அய்யோ பாவம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நான் உங்களிடம்  கேட்டது இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட பின்னர் உங்கள் அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என செய்கின்றார்கள்?

இதுக்கு பதில் வராதே ?😄

39 minutes ago, tulpen said:

'' புலத்திலிருந்து கத்தாமல் தாயகம் சென்று ஏதாவது முடியுமா என்று பாருங்கள். அதைவிட்டு'' 

நீங்கள் செய்யலாமே 

11 minutes ago, பெருமாள் said:

நீங்கள் செய்யலாமே 

அது எப்போதும் தமிழன் எனக்கு கூறிய கூற்று. தமிழ் மொழியை வாசித்து விளங்குங்கள் முதலில்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இதுக்கு பதில் வராதே ?😄

நீங்கள் செய்யலாமே 

புலம்  தாயகம் இரன்டும் ஒன்று என்று நினைக்கிறேன்.

1 minute ago, சுவைப்பிரியன் said:

புலம்  தாயகம் இரன்டும் ஒன்று என்று நினைக்கிறேன்.

அதை தான் சுட்டிக்காட்டினேன் சுவைப்பிரியன். அது பெருமாளுக்கு புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ.... எங்களுக்கு தெரிந்தது புலிகளுக்கு காசு கொடுக்கவும் ஐநா முன்றலில் கத்தவும். 2009 ற்கு பின்னர் காசு கட்டிய குதிரை தோற்று விட்ட காண்டில் இங்கு வாந்தி எடுக்கவுமே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

இயக்கங்கள் இருந்தபோது எல்லாவற்றையும் (நகைகள், பணம் மட்டுமல்ல, பிள்ளைகளையும் கூட) பிடுங்கி அழித்துவிட்டார்கள்.

6 hours ago, satan said:

நீங்கள் இவைகளை நினைத்து அவர்களை வெறுக்கிறீர்கள். நாங்கள் வாழும்வயதில் அவர்கள் மறைந்ததை எண்ணி அழுகிறோம். இப்படி நகை, பணம் என்று வாழ்ந்திருந்தால் அவர்களும் இன்று எம்முடன்  வாழ்ந்திருக்கலாம். வாழத்தெரியாதவர்கள், அவர்களுக்கு தெரிந்தது தம்மை இழந்தாவது விடுதலை வேண்டும் என்ற உணர்வு. அவர்களை இனியாவது உறங்க விடுங்கள் மண்ணுள். உங்களுக்கு புண்ணியமாகும். 

பிள்ளைகளையும் கூட கொடுத்தோமே? அதை விட்டுவிட்டீர்களே? நகையும் பணமும் தானா உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறது? நாங்கள் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

பிள்ளைகளையும் கூட கொடுத்தோமே? அதை விட்டுவிட்டீர்களே? நகையும் பணமும் தானா உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறது? நாங்கள் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? 

சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட அல்லது அவர்களிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடக்கும் போராட்டங்கள் போல் இயக்கங்களிடம் கேட்டு எந்த போராட்டங்களும் நடத்தப்பட்டனவா? அப்படி நடக்காததற்கு காரணம் அவர்களை போராட்டத்துக்கு கொடுக்கும் போதே உயிர் ஆபத்தையும் மக்கள் உணர்ந்திருந்தார் என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

பேருக்கு தாங்களும் வெளிக்கிட்டு ஒட்டுக்குழுக்களில் திரிந்தவர்களுக்கு உண்மையான தியாகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் இவர்கள் இப்போது மக்களை சாட்டி  முதலைக்கண்ணீர் வடிக்கினம் பிள்ளகளை உறவினரிடம் கொடுத்து வளர்க்க சொல்லி விட்டு தாய் புலியான கதைகள் உள்ளன அதெல்லாம் இவர்களுக்கு தெரியுமா விசுகு அண்னை ...

அம்மாவீரரின் பெயர் செந்தளிர்.
4பிள்ளைககளின் தாய்  93ஆம் ஆண்டு கடற்புலிகளில் இணைந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

புலம்  தாயகம் இரன்டும் ஒன்று என்று நினைக்கிறேன்.

42 minutes ago, tulpen said:

அதை தான் சுட்டிக்காட்டினேன்

எப்போதும் தமிழன் என்று பெயர் வைத்திருப்பவருக்கே புலம் என்றால் என்ன என்று விளங்கவில்லையே 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இங்கு மாவீர‍ர்களை யாரும் கொச்சைப்படுத்த வில்லை. விமர்சனங்களை எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள்  மாவீர‍ர்களை துணைக்கு அழைத்து அவர்களின் தியாகங்களுக்கு பின்னால் அரசியல் தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள்.  அது இங்கு வாடிக்கையாகிவிட்டது. 

மண்ணிற்காக தியாகம் செய்த மாவீர‍ர்களுக்கு மரியாதை செய்வது என்பது வேறு அம்மாவீர‍ர்கள் உயிருடன் இருக்கும் போது எடுத்த முடிவுகளை அரசியல் தீர்மானங்களை விமர்சிப்பது என்பது வேறு. அதை விமர்சிக்கும் உரிமை அந்த முடிவுகளால் பாதிக்கபட்ட ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.  

 மக்களின் போராளிகளின் தியாகங்களை வைத்து சிறந்த முடிவுகளை எடுக்க தெரியாமல் போராட்டத்தை வெளிவரமுடியாத  ஒரு முட்டு சந்தில் விட்டு சென்றதே இயக்கங்கள்  செய்த சாதனை. இது வெளிப்படையானது. இந்த அதல பாதாளத்தில் இருந்து மீண்டு வர பத்து ஆண்டுகள் என்ன இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் போதாது.  ஒரு தலைமுறையின் பின்னரே அவர்களின் சாதுரியத்தால் அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியும். எமது தலைமுறையில் எதுவும் நடக்க போவதில்லை. 

போராட்ட வழிமுறைகளை, தவறுகளை விமர்சிக்கப் போகிறீர்களா, ஆராயப் போகிறீர்களா.. ? தாராளமாகச் செய்யுங்கள். சுய விமரிசனம் மிகவும் முக்கியம் தவறுகளை அடையாளம் காண, திருத்திக்கொள்ள.

ஆனால் விமரிசனம் என்கின்ற பெயரில் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள், வெறுப்புக்களை காட்டாதீர்கள். 

எந்த இயக்கமாகினும் தங்கள் உயிரைக் கொடுக்க ஆயத்தமாகத்தான் போனார்கள். உயிரைக் கொடுத்தார்கள். அந்த உயர்வான தியாகத்தை கொச்சைப் படுத்த அனுமதிக்க முடியாது. 

இப்போதுகூட யாழ் களத்திலுள்ள பலர் தங்கள் மேதாவித்தனத்தை காட்டுவதற்காக பிழை காண்பது எல்லோருக்கும் தெரியும். நான் படித்தவன், எனது பின்ணணி உயர்வானது, நான் சொல்வதுதான் சரி என்கின்ற மனனிலையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் வரவேற்கப்படாது. 

ஒரு ஆசிரியரின் நிலையில் இருந்து/ ஒரு தந்தையின் நிலையில் இருந்து பிழைகளைச் சீர்தூக்கினால் யார் கோபப்படப் போகிறார்கள்.

மேன்மையான ஆசிரியரும் உன்னதமான தந்தையும் தங்கள் மாணாக்கரும் பிள்ளைகளும் பிரிந்து நின்று அடிபடுவதை ஒருபோதும் விரும்பப் போவதில்லை. 👍

  • கருத்துக்கள உறவுகள்

யூட், ஜஸ்ரின், துல்பென், விளங்க நினைப்பவன்,

இந்த திரியின் தலைப்பு  ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி.

இந்த தலைப்பை ஒட்டி நீங்கள் எழுதியவை எவற்றுக்கும் இங்கே பதில் எழுதியவர்கள் எவரிடமும் பதில் இல்லை.

திரியின் கருத்தை ஒட்டி தாம் முன்வைத்த ஒவ்வொரு கருத்தும் மண்ணை கவ்வும் போது திரியை திசை திருப்பும் முகமாக இவர்கள் எறியும் கிரனைட்தான் இந்த “இயக்கங்களுக்கு முந்திய தலைவர்கள், 2009 ற்கு பிந்திய தலைவர்கள் என்ன செய்தார்கள்?” என்ற கேள்வி.

இந்த கேள்வி இந்த திரியில் எழ முன்னரே, இதை ஊகித்து நான் preemptive ஆக பதில் கொடுத்து விட்டேன்.

1948-2020 வரை எந்த தமிழ் தலைமையும், அது ஆயுத தலைமையோ, அரசியல் தலைமையோ சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. அப்படி செய்துருந்தால் நாம் இந்த தலைப்பில் இன்று இப்படி பேசிக்கொண்டிருக்கவும் மாட்டோம்.

1948-2020 வரையான தமிழர் பலத்தின் வரைபு (graph) ஏறி இறங்கியது, 2002 இல் வரலாற்றில் இல்லாத உட்சம் பெற்று 2009 இல் பழைய படி 1948 புள்ளிக்கு திரும்பி விட்டது.

இதுதான் வரலாறு. இதை மட்டும் சொல்வது போதுமானது.

இங்கே இவர்கள் எதிர்பார்ப்பதே நீங்கள் புலிகளின் மீது ஒரு விமர்சனத்தை வைக்க மாட்டீர்களா? என்பதுதான்.

மிக தந்திரமாக எப்போதும் முதல் கேள்வி புலிகள் என்று குறிப்பிடாமல், “இயக்கங்கள்” என்றே கேட்கப்படும் (அதில் ஈ எண்டி எல் எப், த்ரீ ஸ்டாரும் அடங்கும்).

ஆனால் அதற்கு ஒரு பதில் வந்த கையோடு, வரிசையாக கூலிக்கு மாரடிப்பவர்கள் போல வந்து, “ஐயோ மாவீரரை தூற்றுகிறார்கள்” என்று வாயிலும் வயித்திலும் அடித்து அழுவார்கள்.

This is pathetic drama. மிக கீழ்தரமான கழிவிரக்க நாடகம். தமது அம்மணத்தை மறைக்க மாவீரரை போர்வையாக போர்த்தும் இழி செயல்.

மாவீரரை தூற்றும் அளவுக்கு நீங்கள் யாரும் இல்லை என்பது கண்கூடு.

ஆனால் இந்த நாடகத்துக்கு ஒக்சிசன் வழங்காமல் நீங்கள் வீசப்படும் கிரனைட்டுகளை கடந்து போகவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

அப்படி செய்தால், தர்க்கம் மண்ணை கவ்வியதும் திரியை விட்டு எஸ் ஆவதை, அல்லது தனிபட்டு தாக்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இராது.

1948-2020 எந்த தமிழ் தலைமையும் எதையும் செய்யவில்லை (நாகரீகமாக சொல்வதாயின் புடுங்கவில்லை). 

இதை மட்டும் ஒரு standard replyயாக போட்டு கடந்து செல்வதே உசிதமானது.

Don’t react, keep the moral high ground, don’t feed this melodrama. 
 
#அனுபவம் பேசுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பிள்ளைகளையும் கூட கொடுத்தோமே? அதை விட்டுவிட்டீர்களே? நகையும் பணமும் தானா உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறது? நாங்கள் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? 

நாங்கள் என்று கூறாதீர்கள். சிலர் எதுவுமே கொடுக்கவில்லை என்பது இங்குள்ள எல்லோருக்கும், உங்களுக்கும் தெரியும். ஆனால் வெற்று ஆலோசனைகளை அள்ளி வீசவும் தாங்களும் போராட்டத்திற்கு அனுதாபிகளாக இருப்பதாகக் காட்டவும் பல்வேறு ஆலாபனைகளை அள்ளி வீசுவர். ஆனால் அவர்களிடம் இருப்பது புலி வெறுப்பு மட்டுமே. மக்களின் ஏகோபித்த ஆதரவை புலிகள் கொண்டிருப்பதை அவர்களா ஏற்க முடிவதில்லை.  😦

""வட மாகாணத்தை விட்டு வெளியே செல்ல Pass கிடைக்காத காரணத்தால் போராட்டத்திற்கு எதிராக இருக்கும் பலரை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.""

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உண்மைதான் கற்பிதன்,

இங்கே எழுதுபவர்கள் 99% இனவிடுதலை போராட்டம் உக்கிரமாக நடக்கும் போது சுயநலத்துக்கா வட மாகாணத்தை விட்டு தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்தான்.

சிலர் பாஸ் எடுத்து வந்தார்கள், சிலர் ஓமந்தை கள்ள பாதையால் வந்தார்கள், சிலர் 95 க்கு பின் காங்கேசன்துறை -திருமலையால் வந்தார்கள்.

நானும், யூட்டும், நீங்களும் இப்படிதான் இல்லையா?

அப்படி இல்லை என்றால் நாம் இன்று யாழில் கருத்தெழுதமாட்டோம், ஏதோ ஒரு உடைத்து போடப்பட்ட சாவுகட்டின் கீழ் உறங்கி கொண்டிருப்போம்.

இதில் பாஸ் எடுத்து ஓடி வந்தவர், பாஸ் எடுக்காமல் ஓடி வந்தவரை பார்த்து எப்படி நக்கல் அடிக்க முடியும் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

யூட், ஜஸ்ரின், துல்பென், விளங்க நினைப்பவன்,

இந்த திரியின் தலைப்பு  ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி.

இந்த தலைப்பை ஒட்டி நீங்கள் எழுதியவை எவற்றுக்கும் இங்கே பதில் எழுதியவர்கள் எவரிடமும் பதில் இல்லை.

திரியின் கருத்தை ஒட்டி தாம் முன்வைத்த ஒவ்வொரு கருத்தும் மண்ணை கவ்வும் போது திரியை திசை திருப்பும் முகமாக இவர்கள் எறியும் கிரனைட்தான் இந்த “இயக்கங்களுக்கு முந்திய தலைவர்கள், 2009 ற்கு பிந்திய தலைவர்கள் என்ன செய்தார்கள்?” என்ற கேள்வி.

இந்த கேள்வி இந்த திரியில் எழ முன்னரே, இதை ஊகித்து நான் preemptive ஆக பதில் கொடுத்து விட்டேன்.

1948-2020 வரை எந்த தமிழ் தலைமையும், அது ஆயுத தலைமையோ, அரசியல் தலைமையோ சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை. அப்படி செய்துருந்தால் நாம் இந்த தலைப்பில் இன்று இப்படி பேசிக்கொண்டிருக்கவும் மாட்டோம்.

1948-2020 வரையான தமிழர் பலத்தின் வரைபு (graph) ஏறி இறங்கியது, 2002 இல் வரலாற்றில் இல்லாத உட்சம் பெற்று 2009 இல் பழைய படி 1948 புள்ளிக்கு திரும்பி விட்டது.

இதுதான் வரலாறு. இதை மட்டும் சொல்வது போதுமானது.

இங்கே இவர்கள் எதிர்பார்ப்பதே நீங்கள் புலிகளின் மீது ஒரு விமர்சனத்தை வைக்க மாட்டீர்களா? என்பதுதான்.

மிக தந்திரமாக எப்போதும் முதல் கேள்வி புலிகள் என்று குறிப்பிடாமல், “இயக்கங்கள்” என்றே கேட்கப்படும் (அதில் ஈ எண்டி எல் எப், த்ரீ ஸ்டாரும் அடங்கும்).

ஆனால் அதற்கு ஒரு பதில் வந்த கையோடு, வரிசையாக கூலிக்கு மாரடிப்பவர்கள் போல வந்து, “ஐயோ மாவீரரை தூற்றுகிறார்கள்” என்று வாயிலும் வயித்திலும் அடித்து அழுவார்கள்.

This is pathetic drama. மிக கீழ்தரமான கழிவிரக்க நாடகம். தமது அம்மணத்தை மறைக்க மாவீரரை போர்வையாக போர்த்தும் இழி செயல்.

மாவீரரை தூற்றும் அளவுக்கு நீங்கள் யாரும் இல்லை என்பது கண்கூடு.

ஆனால் இந்த நாடகத்துக்கு ஒக்சிசன் வழங்காமல் நீங்கள் வீசப்படும் கிரனைட்டுகளை கடந்து போகவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

அப்படி செய்தால், தர்க்கம் மண்ணை கவ்வியதும் திரியை விட்டு எஸ் ஆவதை, அல்லது தனிபட்டு தாக்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இராது.

1948-2020 எந்த தமிழ் தலைமையும் எதையும் செய்யவில்லை (நாகரீகமாக சொல்வதாயின் புடுங்கவில்லை). 

இதை மட்டும் ஒரு standard replyயாக போட்டு கடந்து செல்வதே உசிதமானது.

Don’t react, keep the moral high ground, don’t feed this melodrama. 
 
#அனுபவம் பேசுகிறது

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள்முன்னிறுத்தும் இவர்களில் ஒருவரேனும் போராட்டத்தையும் போராளிகளையும் இந்தத் திரியில் இகழ்ந்து எழுதவில்லையா.. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழர்களால் புலம்  என ஆழைக்கப்படுவது இலங்கைதவிர்ந்த மற்றையநாடுகளை  தாயகம் என்பது இலங்கையையாகும். விட்டபிழை திருந்தி நடப்பது மனித இயல்பு. பிரபாகரன் விட்டபிழை நேர்மையற்ற சிஙகளயரசுடன் பேச்சுவார்த்தையிலிடுபட்டது.ஒரேயடியாகப்போரடியிருந்தல் முடிவு

மாறியிருக்காலம் .போரட்டம் தோற்றதை வைத்து போரடியமுறை பிழை- போரடியநோக்கம் பிழை என்று கூறமுடியாது.

😁😍👍

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

உண்மைதான் கற்பிதன்,

இங்கே எழுதுபவர்கள் 99% இனவிடுதலை போராட்டம் உக்கிரமாக நடக்கும் போது சுயநலத்துக்கா வட மாகாணத்தை விட்டு தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்தான்.

சிலர் பாஸ் எடுத்து வந்தார்கள், சிலர் ஓமந்தை கள்ள பாதையால் வந்தார்கள், சிலர் 95 க்கு பின் காங்கேசன்துறை -திருமலையால் வந்தார்கள்.

நானும், யூட்டும், நீங்களும் இப்படிதான் இல்லையா?

அப்படி இல்லை என்றால் நாம் இன்று யாழில் கருத்தெழுதமாட்டோம், ஏதோ ஒரு உடைத்து போடப்பட்ட சாவுகட்டின் கீழ் உறங்கி கொண்டிருப்போம்.

இதில் பாஸ் எடுத்து ஓடி வந்தவர், பாஸ் எடுக்காமல் ஓடி வந்தவரை பார்த்து எப்படி நக்கல் அடிக்க முடியும் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

நக்கல்... 😂😂

எனக்குள்ள கோபம் என்னவென்றால்.....எதற்கெடுத்தாலும் போராடத்தையும் போராளிகளையும் இகழ்வதுதான். 30 வருடங்கள் என்னத்தை வெட்டிக் கிளித்தவயள் என்று கேட்டால் ....

எமக்கு பல்வேறு மாறுபட்ட அப்பிப்பிராயங்கள் இருக்கலாம். அதற்காக தியாகங்களை இகழ்வது ஏற்புடையது அல்ல. 

குறிப்பு; எனது குடும்பம் போராட்டத்திற்குத் தேவையான அளவிற்கும் மேலதிகமாகப் பங்களித்துவிட்டது (மேற்கில் உள்ள பலரைவிட)  👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உண்மைதான் கற்பிதன்,

இங்கே எழுதுபவர்கள் 99% இனவிடுதலை போராட்டம் உக்கிரமாக நடக்கும் போது சுயநலத்துக்கா வட மாகாணத்தை விட்டு தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்தான்.

சிலர் பாஸ் எடுத்து வந்தார்கள், சிலர் ஓமந்தை கள்ள பாதையால் வந்தார்கள், சிலர் 95 க்கு பின் காங்கேசன்துறை -திருமலையால் வந்தார்கள்.

நானும், யூட்டும், நீங்களும் இப்படிதான் இல்லையா?

நான் அப்படியான எந்த முறையிலும் வரவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியில் வந்தபின்னரும் மக்களை காக்கவென்றே  திரும்பிப் போன குடும்ப உறவை இழந்த எனக்கு நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.