Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்திநமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாககொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன்கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாகஒப்புமை பெற்றுஅடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்ந்து வரும் 2021 சனவரி மாதத்திற்கும் பெற்றிருக்கின்றோம்.

இணைப்பில் உள்ள அரசு பிரகடனத்தில் நமது தமிழ் மொழிகலை வரலாறுபண்பாட்டுச் சிறப்பு அது சார்ந்து நாம் தொடர்ந்து ஆற்றி வரும் பணிகள் குறித்தும்நமது தமிழ் மாணவர்கள் பெற்ற இருமொழி முத்திரை மற்றும் அவர்களுக்காக நாம் ஏற்படுத்திய கல்வி ஊக்கத்தொகை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெருமை மிகு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது. இதற்காக உழைத்த அனைத்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும்மினசோட்டா மாநில ஆளுநர் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றி...பல்வேறு சாதனைகளைப் படைத்திட்ட நமது தமிழ்ச் சங்கத்திற்கு என்றும் ஆதரவளிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி! இணையம் வழியாக நடைபெறப்போகும் சங்கமம் - 2021 (சனவரி 24 - கோரிக்கைக்கு ஏற்ப தியதி மாற்றப்பட்டுள்ளது) நிகழ்வில் நாம் அனைவரும் மறவாமல் பங்கு கொண்டுகலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ் மொழி மாதம் பிரகடனம் https://youtu.be/wtMqdzuGqVc

உங்கள்
மினசோட்டாத் தமிழ்ச் சங்க குடும்பத்தினர் 

Vanakkam, 
we take this opportunity to wish all our members and our Tamil community A happy new year!!  We are excited and happy to start the New Year with exciting news to our Tamil community. Our State Governor Tim Walz has proclaimed continuously for the second year, the month of January 2021 as “Tamil Language and Heritage Month“ in the state of Minnesota. It is a great milestone to achieve, let us celebrate and feel proud and honored to be a part of this community.  As always, follow CDC guidelines during celebrations.

We take this opportunity to thank all the MNTS board members who were instrumental in working to get this proclamation sanctioned by the Governor. We sincerely thank Governor Tim Waltz and his staff for their incredible support for MN Tamil Community. 

Yours
MNTS Family

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் சொந்த பூமியில் தமிழ்மொழிக்கு இடமில்லாவிட்டாலும் மாற்றான் எமது  மொழியை அங்கீகரிக்கின்றான்.
தகவலுக்கு நன்றி மருதங்கேணி.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வாழ்த்துக்கள்

மின்னசோட்டவில் எப்பொழுது காஜலிம் மரபு மாதம் வருமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றான் எமது  மொழியை அங்கீகரிக்கின்றான்.
தகவலுக்கு நன்றி மருதங்கேணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

என்னால் ஆன முயற்சிகளை செய்துகொண்டு இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். மினசோட்டா மாநில ஆளுநர் மற்றும் நிர்வாகிகளுக்கு மனம் கனிந்த நன்றிகள்.......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

எவ்வளவு ஒரு நல்ல விடயத்தை பதித்துள்ளார். அதற்குள்ளும்??? தமிழ் மீதான உங்கள் கரிசனையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி மருது. ஏனையமாநிலங்களிலும்  இதேதீர்மானம். வந்து. இறுதியாக அமெரிக்கா. அரசிலும் வரவேண்டும்...உங்கள் முயற்ச்சி தொடர  வாழ்த்துக்கள். 😁👍😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். மினசோட்டா மாநில ஆளுநர் மற்றும் நிர்வாகிகளுக்கு மனம் கனிந்த நன்றிகள்.......!   

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துகள் மருதர், தமிழ் சங்கத்தினருக்கும்.

சந்தோசமான செய்தி.

இலங்கை தமிழர் அரசியல் உரிமை பற்றியும் ஆயுதபோராட்டம் அரும்பிய காலத்திலேயே ஒரு அமெரிக்க மாநிலம் ஒன்று  பிரேரணை நிறைவேற்றியது. மினசோட்டா என்றே நியாபகம்.

இங்குள்ள இந்திய தமிழ் சங்கத்தின் பணிகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே...

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

On 2/1/2021 at 07:50, Maruthankerny said:

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாககொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன்கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாகஒப்புமை பெற்றுஅடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும்.

தகவலுக்கு நன்றி மருதங்கேணி. மிகவும் மகிழ்சசியான செய்தி. 

14 hours ago, goshan_che said:

வாழ்துகள் மருதர், தமிழ் சங்கத்தினருக்கும்.

சந்தோசமான செய்தி.

இலங்கை தமிழர் அரசியல் உரிமை பற்றியும் ஆயுதபோராட்டம் அரும்பிய காலத்திலேயே ஒரு அமெரிக்க மாநிலம் ஒன்று  பிரேரணை நிறைவேற்றியது. மினசோட்டா என்றே நியாபகம்.

அது மினசொட்டா அல்ல மசாசூசெற். 1979 மே  மாதம் தமிழீழ ஆதரவு தீர்மானம் மசாசூசெற் மாநில சட்ட சபையில் நிறைவேற்றபட்டு  த.வி.கூ தலைவர்  எம்.சிவசிதம்பரத்தை அழைத்து அவரிடம் நேரடியாக கையளிக்கப்ட்டது.   ஈழநாடு 22.05.1979

1100x800_cropped.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அது மினசொட்டா அல்ல மசாசூசெற். 1979 மே  மாதம் தமிழீழ ஆதரவு தீர்மானம் மசாசூசெற் மாநில சட்ட சபையில் நிறைவேற்றபட்டு  த.வி.கூ தலைவர்  எம்.சிவசிதம்பரத்தை அழைத்து அவரிடம் நேரடியாக கையளிக்கப்ட்டது.   ஈழநாடு 22.05.1979

1100x800_cropped.jpg

நன்றி “நடமாடும் ஆவண காப்பகம்” துல்ப்ஸ் அவர்களே👏🏾👏🏾👏🏾🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நடமாடும் ஆவண காப்பகம்” துல்ப்ஸ்

அப்படி அழைக்க முழுமையான தகுதியும் கொண்டவர் அவர் 👍 இது தமிழ்நாட்டில் கொடுக்கபடும் பட்டங்கள் மாதிரி இல்லை. சிறி அண்ணா சொன்னார் Tulpen விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார் என்று அது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

அப்படி அழைக்க முழுமையான தகுதியும் கொண்டவர் அவர் 👍 இது தமிழ்நாட்டில் கொடுக்கபடும் பட்டங்கள் மாதிரி இல்லை. சிறி அண்ணா சொன்னார் Tulpen விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார் என்று அது உண்மை.

உண்மைதான். விரல் நுனியில் வைத்திருப்பது மட்டும் அல்ல, விரைவில் ஆதாரத்தையும் போட்டு விடுவார்.

நல்ல செய்தி, மகிழ்ச்சி

On 2/1/2021 at 08:50, Maruthankerny said:

 வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாகஒப்புமை பெற்றுஅடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்ந்து வரும் 2021 சனவரி மாதத்திற்கும் பெற்றிருக்கின்றோம்.

வட அமெரிக்காவில் (வட அமெரிக்க கண்டத்தில்) ஒன்ராரியோயில் தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக 2014 இல் பிரகடனப்படுத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர். அனேகமான நூலகங்கள், தமிழர் வாழும் பிரதேசங்களில் உள்ள நகர சபைகள் போன்றவற்றில் தழிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில நிகழ்வுகளும், தைப் பொங்கல் கொண்டாட்டமும் இடம்பெறுகின்றது.

https://www.ontario.ca/laws/statute/s14004#:~:text=By proclaiming the month of,economic%2C political and cultural fabric.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2021 at 11:56, பெருமாள் said:

மாற்றான் எமது  மொழியை அங்கீகரிக்கின்றான்.
தகவலுக்கு நன்றி மருதங்கேணி.

ஆனால் நான் இங்கிலீஸ்தான் பெற்ற லங்வேச் எண்டு சொல்லுவன்.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

ஆனால் நான் இங்கிலீஸ்தான் பெற்ற லங்வேச் எண்டு சொல்லுவன்.. 😂😂

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்குங் காணோம் என்று சொன்ன பாரதிக்கு 30க்கு மேற்பட்ட மொழிகள் தெரியுமாம், ஆனால் அதே பாரதிதான், அதே பாடலில்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள் 
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் 
சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர் 
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்றும் சொல்லி உள்ளான்.

தமிழை சீர்திருத்த வேண்டும், அதை யுகப்புதுபித்தல் செய்யவேண்டும் என்பது தமிழை தரம் தாழ்துவதன்று, ஒரு வியாபார, விஞ்ஞான, கற்க ஏதுவான மொழியாக அதை புத்தாக்கம் செய்யவேண்டும் என்பதே.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவு வகை செய்தல் வேண்டும்.

அதற்கு, முதலில் சாதாரண தரத்தில் தமிழுக்கு விசேட தேர்ச்சி பெற்ற நாமாவது தமிழின் புணர்சி விதிகள் பற்றிய தடுமாற்றம் இன்றி எழுத பழக வேண்டும்.

எனக்கு தெரிய யாழில் வாத்தியார் என்ற ஒரு உறவை தவிர வேறு யாரும் இலக்கண சுத்தமாக தமிழ் எழுதுவதில்லை (நானும்).

ஆனால் பலர் ஆங்கிலத்தில் பிழை விடாமல் எழுத கூடியவர்கள்.

தமிழில் பிறந்து, வளர்ந்து, “ஏபிசிடி கிழவண்ட தாடி” என ஆங்கிலத்தை தப்பும் தவறுமாய் கற்ற குழந்தைகள் நாம். 

எமக்கே தமிழில் இத்தனை தடுமாற்றம்.

ஆங்கிலத்தை போல், தமிழ் இலக்கணமும் சீர்திருத்த பட வேண்டும். இலகுவாக்க படல் வேண்டும் என்பது தமிழ் மீதான அதீத பற்றினாலே அன்றி, அம்மாவை விட பக்கத்து வீட்டு அன்ரி உசத்தி இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஆங்கிலத்தை போல், தமிழ் இலக்கணமும் சீர்திருத்த பட வேண்டும். இலகுவாக்க படல் வேண்டும் என்பது தமிழ் மீதான அதீத பற்றினாலே அன்றி, அம்மாவை விட பக்கத்து வீட்டு அன்ரி உசத்தி இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும் 🤣

இலகுவாக்க பட்டால் ஒழிய தமிழ் இந்த நாடுகளில் புகைவண்டி கோச் போல தடக்கி தடக்கி தான் மெதுவாகத்தான் ஓடும் .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்குங் காணோம் என்று சொன்ன பாரதிக்கு 30க்கு மேற்பட்ட மொழிகள் தெரியுமாம், ஆனால் அதே பாரதிதான், அதே பாடலில்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள் 
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் 
சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர் 
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்றும் சொல்லி உள்ளான்.

தமிழை சீர்திருத்த வேண்டும், அதை யுகப்புதுபித்தல் செய்யவேண்டும் என்பது தமிழை தரம் தாழ்துவதன்று, ஒரு வியாபார, விஞ்ஞான, கற்க ஏதுவான மொழியாக அதை புத்தாக்கம் செய்யவேண்டும் என்பதே.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவு வகை செய்தல் வேண்டும்.

அதற்கு, முதலில் சாதாரண தரத்தில் தமிழுக்கு விசேட தேர்ச்சி பெற்ற நாமாவது தமிழின் புணர்சி விதிகள் பற்றிய தடுமாற்றம் இன்றி எழுத பழக வேண்டும்.

எனக்கு தெரிய யாழில் வாத்தியார் என்ற ஒரு உறவை தவிர வேறு யாரும் இலக்கண சுத்தமாக தமிழ் எழுதுவதில்லை (நானும்).

ஆனால் பலர் ஆங்கிலத்தில் பிழை விடாமல் எழுத கூடியவர்கள்.

தமிழில் பிறந்து, வளர்ந்து, “ஏபிசிடி கிழவண்ட தாடி” என ஆங்கிலத்தை தப்பும் தவறுமாய் கற்ற குழந்தைகள் நாம். 

எமக்கே தமிழில் இத்தனை தடுமாற்றம்.

ஆங்கிலத்தை போல், தமிழ் இலக்கணமும் சீர்திருத்த பட வேண்டும். இலகுவாக்க படல் வேண்டும் என்பது தமிழ் மீதான அதீத பற்றினாலே அன்றி, அம்மாவை விட பக்கத்து வீட்டு அன்ரி உசத்தி இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும் 🤣

ஐயா,

ஒரு புளோவில வந்ததப் போட்டாலும் விடமாட்டீங்களே.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

ஐயா,

ஒரு புளோவில வந்ததப் போட்டாலும் விடமாட்டீங்களே.. 😂😂

🤣.

அதெல்லாம் சேர்பில்லை.

சும்மா வேலை இல்லாமல் கொம்யூட்டர வெறிச்சு பார்த்துகொண்டு இருக்கேக்க எது கிடைச்சாலும் விட மாட்டோம்🤣

7 hours ago, goshan_che said:

நன்றி “நடமாடும் ஆவண காப்பகம்” துல்ப்ஸ் அவர்களே👏🏾👏🏾👏🏾🙏🏾

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி அழைக்க முழுமையான தகுதியும் கொண்டவர் அவர் 👍 இது தமிழ்நாட்டில் கொடுக்கபடும் பட்டங்கள் மாதிரி இல்லை. சிறி அண்ணா சொன்னார் Tulpen விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார் என்று அது உண்மை.

ஐயோ இப்படி புகழ்சசிக்கு நான் தகுதியானவன் இல்லையப்பா. கைவசம் இருந்த பழைய பத்திரிகைகளையும் வீடு மாறும் போது அவசரத்தில் முட்டாள்தனமாக  போது தூக்கி வீசிவிட்டு வந்தவன் நான். இந்த புகழ்சசிக்கு உண்மையில் உரித்தானவர் கிருபன் தான். 

இருந்தாலும் தகுதி இல்லாதவனை புகழ்ந்து குஷிப்படுத்தியதற்கு நன்றிகள். 🥰

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

தமிழில் பிறந்து, வளர்ந்து, “ஏபிசிடி கிழவண்ட தாடி” என ஆங்கிலத்தை தப்பும் தவறுமாய் கற்ற குழந்தைகள் நாம். 

ஏபிசிடி கிழவன்ரை தாடி.... எப்பன் செல்ல புட்டை தாடி எண்டொரு பாட்டு இருக்கெல்லோ......😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.