Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

சாத்தான்,  இதை உங்கள் கருத்தை மேற்கோள் காட்டி  எழுதினாலும் இது எனது அரசியல் கருத்துக்களைச் சகிக்கமுடியாமலும் அதற்கு காத்திரமான எதிர்க்கருத்து வைக்க முடியாததாலும்  தொடர்ச்சியாக என் மேல் வசை மாரி  பொழியும்  அனைவருக்கும் இது பொருந்தும்.  எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. பாசாங்கு தன்மை அற்றவை. இத்திரியில்  எனது கருத்தில் நான் பாவித்த வசனநடை புரிதலில் குழப்பமானது என்பதால் தவறான பொருளை கொடுத்தது குறித்து  என்னிடம் அதுபற்றி நேரடியாக  கேள்வி கேட்ட பண்பான உறவுகளுக்கு எனது பதிலையும் வருத்தத்தையும்  தெரிவித்துவிட்டேன்.  

கண்முடித்தனமான புலியெதிர்பபு வாதிகள், கண்மூடித்தனமான புலியாதரவு வாதிகள். இந்த இருதரப்புமே தமிழ் மக்களின் எதிர் காலத்துக்கு உதவாத பெறுமதியற்ற ஜடங்களே. இவ்வாறான இரு பகுதியனரையுமே நான் நேரில் சந்திதித்திருக்கிறேன்.  அவர்களில் புலியாதரவு, புலியெதிர்பபு என்ற சிறிய வித்தியாசத்தை தவிர மற்றைய குணாம்சங்கள் எல்லாம்   ஒரே மாதிரியே  உள்ளதை என்னால்  அறியமுடிந்தது.  அதேவேளை, இந்த இரு பகுதியுமே மிகவும் அநாகரீகமான ஆசாமிகள் என்பது அவர்களின்   எழுத்துக்கள், பேசுக்கள்  வசவுகள் மூலம் அறியமுடிந்தது. தமிழ் இனத்தின் நல்வாய்ப்பாக,  தாயகத்தில் இந்த இருபகுதியினரும் அருகிவிட்டனர் என்பது நல்ல செய்தி. இவர்களது வெற்றுக் கற்பனைகள்  காலாவதியாகிவருவதால் வெளிப்படையான மக்கள் கருத்துக்களை வைக்கும் போது அதற்கு   பதில் கூற முடியாமல் வசவுகள் மூலம் எதிர்கொள்ளலாம்  என்று இப்போதும் அதே பழைய கற்பனைக்கோட்டையில் வாழ்கின்றனர். அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை கூட உணரமுடியாத பரிதாப நிலை அவர்களுக்கு. ஆகவே இந்த பெறுமதி அற்ற சிறு குழுவினர்  ஜதார்ததமான மக்களின்  கருத்துக்களை மாற்றிவிடப் போவதில்லை என்பதை சாமான்ய தமிழ்  மனிதர்களுடனான உரையாடலில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆகவே, அவர்களின்  வசவுகளுக்கு நன்றிகூற  அவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 😆 

குறிப்பு:  போதுமானளவு விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டதால் இத்திரியில் இதுவே எனது கடைசிக் கருத்தாதலால் இதற்கு மேல் என்மீது வசைமாரி பொழிய வருபவர்கள் இந்த பதிலை மீள வாசித்து கிரகித்து கொள்ளுமாறு அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். 😂

இவர்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை ...புலி இல்லாமல் போன பின் அவர்களை அவமானப்படுத்துகின்றோம் . அது ,இது என்று கதைப்பவர்கள் சிலர் இந்த யாழில் எழுத தொடங்கிய போது புலிளுக்கு எதிராய் எழுதிய கருத்துக்கள் இன்னும் இருக்கும் ...நாய் வேஷம் போட்டாச்சு என்று குலைக்கினமாக்கும் 

  • Replies 127
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதியில் சீனா நிறுவனத்திற்கு அனுமதி – இந்தியாவின் கரிசனை குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது-ரம்புக்வெல 

1-12-696x392.jpg
 19 Views
யாழ்ப்பாணத்தில் தீவுப்குதியில் சீனா நிறுவனத்திற்கு மீள்சுழற்சி சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமை குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து   அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, “அமைச்சரவை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன அவை குறித்து ஆராய்ந்துவருகின்றோம். குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறும்.
 
நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனா நிறுவனம் மீள்சுழற்சி சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமை குறித்த இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மைநிலையை தெரிவிக்கும் கருத்து. சமன் செய்து சீர்தூக்குங் கோல் ஒன்றும் அவர்களிடம் இல்லை.  அந்த கோலை கை தடியாக தான் அவர்கள் பாவிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கற்பனை கோட்டையில் மகிழ்ச்சியாக வாழட்டும்.

ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்..?

வெளிநாட்டுக் காசு மட்டும்தான் உங்களுக்கு வேண்டும். காசைத் தந்தபின் முன்புறமும்  பின்புறமும் பொத்திக்கொண்டு இருக்க வேண்டுமா.. ? 

அல்லது உங்களுக்கு வெளிநாட்டுக் காசு வரவில்லையென்று கோபமா.. ? 

இதை மேலும் விரிவாக எழுதி பிறரை மனம் நோகச் செய்ய விரும்பாத காரணத்தால் இத்துடன் நிறுத்துகிறேன்

😡

(இந்த எனது பிரத்தியேக கருத்து {எழுத்தில் மட்டும்}விளங்க நினைப்பவருக்கு மட்டுமே எழுதப்பட்டது. வேறு அவருக்கும் எழுதப்பட்டதல்ல.)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

தாயக மக்களுக்கு எதிராக நாம் எழுத மாட்டோம் என்பதால் வெளியே வந்தோரை ஏற்கனவே தாமும் வெளியில் வந்து விட்டு திட்டுகிறார்கள் 

ஆனால் தாயக பகுதிகளில் கப்பல்களை நிறுத்தி அமெரிக்க கனடிய ஐரோப்பிய அவுஸ்திரேலிய பிரசாஉரிமை தாறோம் வாருங்கள் என்றால் எத்தனை வீத மக்கள் ஊரில் மிஞ்சுவார்கள்? அந்தவகையில் பார்த்தால் புலம் பெயர்தல் அவரவர் வசதிக்கேற்ப தொடரத்தான் போகிறது?

எனவே யார் பெரிது யார் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் முடிந்த வரை அனைத்து மக்களும் ஒன்றாகி சிந்தித்து அனைத்து வளங்களையும் திரட்டி தாயகம் நோக்கி திருப்பினால் மட்டுமே தங்குபவர்களை வைத்தாவது தாயகத்தை காப்பாற்ற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

ஏனென்றால் அலெக்ஸ் பரந்தாமன் பின் புலம் அறியப்பட்ட பின் இங்கு ஒருத்தரும் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை ஆனால் உங்களுக்கு இந்த செய்திகள்  உவப்பானது .

நான் நினைத்தேன் எந்த கருத்து கதைகளை இணைந்தாலும் யாழ் வாசகர்கள் கருத்தாளர்கள் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை  விட்டு விடுவார்களே என்று ஆனால்  இன்று கருத்தாளரே தவறான உறுதிப்படுத்தப்படாத கதைகளை உதாரணம் காட்டுகிறார் என்றால்  மிகுதி சொல்லதேவையில்லை .

அலெக்ஸ் பரந்தாமன் சொல்வதை உறுதிப் படுத்துவது எப்படியென்று உங்களுக்கும், கல்யாணிக்கும், கப்ரனுக்கும் வேறு மூலங்களை அந்தத் திரியிலேயே சுட்டிக் காட்டியாயிற்றே? இன்னும் மண்ணுக்குள் புதைத்த தலையை நீங்கள் வெளியே எடுக்கவில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, உடையார் said:

யாழ்ப்பாணத்தில் தீவுப்குதியில் சீனா நிறுவனத்திற்கு மீள்சுழற்சி சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமை குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின்ரை கரிசனை எப்பிடியிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின்றி பாலைவனங்களாகி வருகின்றன. இவர்கள் வேறு வெப்பத்தை அதிகரித்து???

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின்றி பாலைவனங்களாகி வருகின்றன. இவர்கள் வேறு வெப்பத்தை அதிகரித்து???

இவ்வளவு உதவிகள் செய்கிற  இந்தியாவுக்கு 100 ஒட்டகங்கள் அனுப்பி வைப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.......!   🙁

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2021 at 12:15, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்களை(மேற்கு/இந்தியா)வை நம்பி இருப்பதையும் இழக்கக்கூடாது என்று மட்டும் தெரிகிறது.. 

சீனாவோ அல்லது எவரோ ஒன்றும் ராணுவ அல்லது தமது ஆயுத பலத்தை பிரயோகிக்கும் கட்டுமானம், மற்றும் தளங்களை காட்டவில்லை.

இது மெழுந்தவாரியாக  ஒரு நல்ல திட்டம். 

சரி, எதிர்க்கும் கிந்தியா ஏதாவது செய்ய முயற்சித்ததா? 

மாறாக, தமிழர்கள் கட்டிய ஒரு சிறு பாதுகாப்பு அரண் ஆனா புலிகளையும் அழித்தது. இருப்பை சிங்களத்திடம் அடகு வைத்தது. இப்படி பல சொல்லலாம்.

இதை இங்கு (மின் உற்பத்தி காற்றாலை) மூலமாக கச்சத்தீவு பகுத்தியில்  சீன நிறுவுவதன் சாத்திய கூறுகளும், அதற்கண survey பற்றியும் வேறு ஒரு திரியில் 1-2 வருடங்களுக்கு முதல் சொல்லி இருந்தேன். ஒருவரும் அதை கவனத்தில் எடுக்கவில்லை.       

இந்த  திட்டம், sustainable, மற்றும் சுற்று சூழல் பகுதியின் நலத்தை கருத்தில் எடுத்தும், காலாவதியாகும்  போது  முறையாக decommission மற்றும் முற்றான அகற்றுதல் இருந்தால் இந்த திட்டம் உரிய தர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருந்தால் நல்லது என்பதை மறுக்க கூடிய காரணங்கள் அல்லது வாதங்கள் இருக்கிறதா?

இதில் மிகப்பெரிய பூகோள  அரசியலும் உள்ளது.

அதாவது, 500 வருடங்களுக்கு முதல், உலகில் சீன ஒழுங்கு இருந்தபோது, தமிழர்களை மற்றவர்கள் தாக்க முனையவில்லை.   தமிழரிற்கு, ஆக குறைந்தது பிராந்திய அதிகார இடைவெளி இருந்தது. 

மேற்கு உலக ஒழுங்கு முற்றாக விடுபடாமல் இருந்தாலும், மழுங்கும் போது, அதாவது சீன உலக ஒழுங்கு மேலெழும் போது, தமிழரிற்கான உலக  மற்றும்   பிராந்திய அதிகார இடைவெளி கூடும் என்பது எனது கணிப்பு. அதற்கு மருதங்கேணி சொன்னதும் கையில் இருக்க வேண்டும்.      

மாறாக, சுருக்கமாக,  இப்போதைய கிந்தியா, சொறி சிங்களம் எல்லாமே மேற்கின் ஒழுங்கு.  
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்.

கிந்தியா இதை எதிர்க்கிறது என்றால், கிழக்கு கொள்கலன் துறையை ஏன் அழுங்காக பிடிக்கிறது. அது சீனாவின் PORT-CITY அருகே தானே உள்ளது.

ஆகவே, கிந்தியா தனது தேவை என்றால்,  சீனாவுக்கு பிடி உள்ள இடத்துக்கு அருகே, அதனது (கிந்தியாவின்) பொருளாதார வழங்கல்களிற்கு (கிழக்கு கொள்கலன் துறை 70% கிந்திய சரக்கு கப்பல் போக்குவரத்து) RISK எடுத்து அபிவிருத்தி செய்ய ஆயத்தம். சீனாஅருகே    இருப்பது பிரச்சனை இல்லை என்று தானே கருதவேண்டி இருக்கிறது.        

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

அதாவது, 500 வருடங்களுக்கு முதல், உலகில் சீன ஒழுங்கு இருந்தபோது, தமிழர்களை மற்றவர்கள் தாக்க முனையவில்லை.   தமிழரிற்கு, ஆக குறைந்தது பிராந்திய அதிகார இடைவெளி இருந்தது. 

மேற்கு உலக ஒழுங்கு முற்றாக விடுபடாமல் இருந்தாலும், மழுங்கும் போது, அதாவது சீன உலக ஒழுங்கு மேலெழும் போது, தமிழரிற்கான உலக  மற்றும்   பிராந்திய அதிகார இடைவெளி கூடும் என்பது எனது கணிப்பு. அதற்கு மருதங்கேணி சொன்னதும் கையில் இருக்க வேண்டும்.      

மாறாக, சுருக்கமாக,  இப்போதைய கிந்தியா, சொறி சிங்களம் எல்லாமே மேற்கின் ஒழுங்கு.  

நன்றி கடஞ்சா!,

சிலநாட்களுக்கு முன், இதைப்பற்றி எனது நண்பருடன் உரையாட முடிந்தது.. நீங்கள் சொல்வதைப்போலவே, சீனாவிற்கு இடம்வகுப்பது சிலகாலங்களின் பின் எங்களுக்கு ஓரளவிற்கு நன்மை தரலாம்(எதிர்காலத்தைப்பற்றி உறுதியாக கூறமுடியாது) என்ற பார்வையில்தான் உரையாடல் போனது.. மேலும் இந்த தருணத்தில் எங்களை இந்தியாவே மேற்கே அவர்கள் நினைத்தபடி கையாள இடம் கொடுக்ககூடாது என்றளவிற்கு சிந்திக்கதொடங்கியிருப்பது கூட நல்லது. 

மேலும், மருதங்கேணி கூறிய காணி வாங்குதல், பொருளாதார முன்னேற்றம் என்பனபற்றியும் சிந்தித்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்ட ஆரம்ப கட்டம் ,உச்ச கட்டம் போன்ற நிலைகளில் சிவப்பு தொப்பி போட்ட  தாடிக்கார அண்ணாமார்,கண்ணாடி லெனின்,மாவோமாமா மார் என்று கொஞ்ச பேர்  ஓடி திரிந்தவை ,பிறகு புலம் பெயர்ந்து படிச்சு பட்டம் பெற்று தற்பொழுது சீனா சார்பாக கருத்து வைக்கினம் அதாவது கொமினிசத்தை  டிசன்டா பரப்பினமாம்.

PLA என்ற அமைப்பையும் தொடக்கினவை ..

ஒரு காலத்தில் புரட்சிப்படைகளை உருவாக்கி நாடுகளில் கிளர்ச்சிகளை தூண்டிய இந்த கொமினிட்ஸ்கள்(பயங்கரவாதிகள்) இப்பொழுது ஏழை நாடுகளின் அரசுகளை கடன் வலையில் வீழ்த்தி தங்களது மாவோ சித்தாந்தத்தை பரப்ப முயற்சி செய்கின்றனர்...

( எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது ,77/78 களில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தாடிக்கார நண்பன் கேட்டான் கொம்னிசம் என்றால் என்ன? கொம்னிச நாடு எது ? நான் சொன்னேன் சீனா, ரஸ்யா என்று ...
உடனே அவன் சொன்னான் இல்லை உலகம் பூராவும் மாவோவின் கொம்னிச சித்தாந்தம் வந்த பின்பு தான் கொம்னிசம் நாடுகள் உருவாகும் என்றான்)

சீனா வந்தால் சுபிட்சமாம் ....இருக்கிற கோவணத்தையும் பறித்து தாங்கள் கட்டி போட்டு சனத்தை நிர்வாணமாக அலையவிட்டிடு ,எல்லோரும் நிர்வாணமாக நின்றால் அதுதான் சம 
 உரிமை சமதர்மம் என வகுப்பு எடுப்பாங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

உலகம் பூராவும் மாவோவின் கொம்னிச சித்தாந்தம் வந்த பின்பு தான் கொம்னிசம் நாடுகள் உருவாகும் என்றான்)

சீனா வந்தால் சுபிட்சமாம் ..

இது சரியாக முஸ்லிம் மதம் உலகை ஆளும் நாள் வரும் போது மனிதர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்பது போல 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு சுபிட்சம், அதன் பார்வையில், சீன வரவின் மூலம் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா?  

2 hours ago, putthan said:

சீனா வந்தால் சுபிட்சமாம்

யதார்தத்திற்கு வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தில், சீனா நன்றாகவே இலங்கையில் காலூன்றிவிட்டது.. அவர்களுடைய திட்டங்களை ஒன்றுமே செய்ய முடியாமல் தானே இவர்கள்(இந்தியா/மேற்கு) இருக்கிறார்கள்.. 

இவ்வளவு காலமும் இந்த இந்திய/மேற்கு கூட்டணியை நம்பி ஏமாந்தது போதாதா?..அவர்களுக்கு எங்களால் இனி ஒரு பயனுமில்லை அல்லது அவர்கள் நினைத்தப்படி நாங்கள் நடக்கவில்லை என்றவுடன் இல்லாதெழித்தார்கள்.. அதன் பயனை இப்ப அனுபவிக்கிறார்கள். 

நாங்கள் இனியாவது ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறோமா? இல்லை இந்த இந்தியா/மேற்குதன்னும் எங்களுக்கு நடந்த அநீதிக்கு நியாத்தை தரவேண்டும் என நினைத்து ஏதாவது செய்கிறதா? இல்லையே, மீண்டும் ஏதாவது கிளர்ச்சியை செய்யத்தானே அல்லது அப்படியொரு தோற்றத்தை தரவேண்டும் என்றுதானே செயலாற்றுகிறார்கள்..
இதற்கு மக்கள் இனி எடுபடக்கூடாது.. 

ஆக மிஞ்சினால் இந்த இந்தியா/மேற்கு கூட்டனி ஒரு மூன்றாம் உலகயுத்ததிற்கு ஆயுத்தமாவார்களா? ஒரு bio weapon இப்ப செய்த மாதிரி செய்யதால் இந்த இந்தியா/மேற்கு என்ன செய்யும்?

ஆகையால் சீனாவை இவர்கள் நினைப்பது போல நடத்தமுடியாது.. இதனால் ஒரு கட்டத்தில் எங்களுக்கு நடந்ததை உளரீதியாக கேட்கவேண்டிய நிலைக்கு இந்த இந்திய/மேற்கு நாடுகள் வருமென நம்புவோமாக.. அப்பொழுது அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாக பயன்படுத்தவேண்டும்.. பயன்படுத்துவேமா? 

மக்கள் யுத்தத்தால் பொருளாதார ரீதியாகவும், உளரீதியாகவும் களைத்துவிட்டார்கள்.. ஆகையால் அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றி/பலப்படுத்தி அதே சமயத்தில் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளையும் கைவிடாது செல்லவேண்டும்.. 

இதெல்லாம் உடனடியாக நடைபெறுமா தெரியாது..ஆனால் யதார்த்தத்தில் சீனாவினால் சிங்களம் நன்மையடைவதையும், சீனா இலங்கையில் நன்றாக காலூன்றிவிட்டதையும் தடுக்கமுடியாது..இனி எங்களுடைய think tank என்ன செய்யபோகிறார்கள் என சிந்திக்கவேண்டும்.. 

53 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சீனா இப்போது இலங்கையை தனது காலனியாகவே மாற்றிவிட்ட்து. எங்கும் சீனர்கள், எதிலும் சீனர்கள் என்ற நிலைமைதான். அவர்களது பணப்புழக்கங்களுக்கு அளவு கணக்கு, கேள்வி கேட்பது என்பதெல்லாம் கிடையாது. இலங்கை அரசு ஒன்றும் பச்சை குழந்தை அல்ல. இவர்களுக்கு இந்திய கோவமடையும் என்று தெரிந்துதான் சீனாவுக்கு வடக்கு திடடமெல்லாம் வழங்குகிறார்கள். சீன பலம் வாய்ந்த நாடு மட்டுமல்ல, உலக அமைப்பான ஐக்கிய நாடுகளின் முக்கிய பதவிகளையும் எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதும் இலங்கைக்கு தெரியும். அந்த துணிவில்தான் இலங்கை அரசும் தான் நினைத்தபடி செய்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள், யுத்த குற்றங்கள் தொடர்பாக மேட்குலக நாடுகளோ, இந்தியாவோ இதனை காலமாக ஆக்கபூர்வமான நடடிக்கைகளும் எடுக்கவில்லை, எடுக்கப்போவதுமில்லை. இன்று உலக வர்த்தக அமைப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் தமிழர்களுக்கான தீர்வோ, நல்லிணக்கமோ விரைவில் எதிர்பார்க்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

விடுதலைப் போராட்ட ஆரம்ப கட்டம் ,உச்ச கட்டம் போன்ற நிலைகளில் சிவப்பு தொப்பி போட்ட  தாடிக்கார அண்ணாமார்,கண்ணாடி லெனின்,மாவோமாமா மார் என்று கொஞ்ச பேர்  ஓடி திரிந்தவை ,பிறகு புலம் பெயர்ந்து படிச்சு பட்டம் பெற்று தற்பொழுது சீனா சார்பாக கருத்து வைக்கினம் அதாவது கொமினிசத்தை  டிசன்டா பரப்பினமாம்.

PLA என்ற அமைப்பையும் தொடக்கினவை ..

ஒரு காலத்தில் புரட்சிப்படைகளை உருவாக்கி நாடுகளில் கிளர்ச்சிகளை தூண்டிய இந்த கொமினிட்ஸ்கள்(பயங்கரவாதிகள்) இப்பொழுது ஏழை நாடுகளின் அரசுகளை கடன் வலையில் வீழ்த்தி தங்களது மாவோ சித்தாந்தத்தை பரப்ப முயற்சி செய்கின்றனர்...

( எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது ,77/78 களில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தாடிக்கார நண்பன் கேட்டான் கொம்னிசம் என்றால் என்ன? கொம்னிச நாடு எது ? நான் சொன்னேன் சீனா, ரஸ்யா என்று ...
உடனே அவன் சொன்னான் இல்லை உலகம் பூராவும் மாவோவின் கொம்னிச சித்தாந்தம் வந்த பின்பு தான் கொம்னிசம் நாடுகள் உருவாகும் என்றான்)

சீனா வந்தால் சுபிட்சமாம் ....இருக்கிற கோவணத்தையும் பறித்து தாங்கள் கட்டி போட்டு சனத்தை நிர்வாணமாக அலையவிட்டிடு ,எல்லோரும் நிர்வாணமாக நின்றால் அதுதான் சம 
 உரிமை சமதர்மம் என வகுப்பு எடுப்பாங்கள் ...

பொருளாதார அடிப்படையிலே முதலாளித்துவ நாடு அல்லது பொதுவுடமை நாடு என்பது தீர்மானிக்கப்படும், முதலாளித்துவ நாட்டில் தேவை கூடுதலான பொருள்களுக்கு விலை இயல்பாக அதிகமாகவுள்ளதால் அதனை உற்பத்தி செய்ய முதலாளிகள் முன் வருவார்கள், அதனடிப்படையில் உற்பத்தி மேற்கொள்ளப்படும், பொதுவுடமை நாட்டில் மத்திய திட்டமிடல் பிரிவு; எப்பொருளை எவ்வளவு உற்பத்தி செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
பொதுவுடமை உற்பத்தி முறமை அதிகளவு விரயங்களை கொண்டிருக்கும் அத்துடன் மக்களின் விருப்புகளை முழுமைபடுத்தாது.
முதலாளித்துவ பொருளாதாரத்திலும் குறைபாடுகள் உண்டு அதனால்தான் மேற்கு நாடுகளிலும் மருத்துவம், கல்வி, வீதி போன்ற அடிப்படை தேவைகளை அரசு இலவசமாக வழங்குகிறது அதனை தனியார் வசம் முற்று முழுதாக ஒப்படைக்காது, அது மட்டுமன்றி வரிவிதிப்பின் மூலம் வருமான மீள் வினியோகம் மூலம் பொதுவுடமை அடிப்படையை பேண முயல்கிறது.
முதலாளித்துவ நாடுகளில் மக்களால் ஆட்சியாளர்கள் பாராளுமன்ற ஆட்சியுடமையுள்ள பிரதமமந்திரியோ அல்லது சர்வாதிகாரமுள்ள ஜனாதிபதியோ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ஆனால் பொதுவுடமை பொருளாதாரத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாத சர்வாதிகாரி ஆட்சி புரிவார் இதே போல் மன்னராட்சியுள்ள நாடுகளிலும் முதலாளித்துவ பொருளாதாரம் நிலவுகிறது.
ஆனால் அரசுகள் எப்பொருளாதாரக்கொள்கையைக்கடைப்பிடித்தாலும் அவர்களது பூகோள அரசியல் செயற்பாடு ஒரே மாதிரியே இருக்கும்.

விடுதலைப்புலிகள் பொதுவுடமை  பொருளாதாரக்கொள்கையைக்கொண்டவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

ஆனால் அரசுகள் எப்பொருளாதாரக்கொள்கையைக்கடைப்பிடித்தாலும் அவர்களது பூகோள அரசியல் செயற்பாடு ஒரே மாதிரியே இருக்கும்.

ஒரு சிறு பகுதி சேர்த்தால் , அதாவது 'மற்றும் எந்த உள்நாட்டு அரசியல் கொள்கையையோ', நீங்கள் நான் சொன்னதை இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டிர்கள்.

மறுத்து இப்பொது சீனா, ஓர் இருமுறை கலந்த முதலித்துவ பொருளாதாரத்தை அமுல் படுத்துகிறது.

முற்றான அரச ஆதரவு முதலாளித்தும்.

சில பகுதிகளில் தனியார் மயப்பட்ட, அரச மேட்ர்பார்வை முதலாளித்தும்.  

அரசியலை தீர்மானிப்பது பெயரளவில் கம்யூனிசம்  உள்ள ccp.

சீன எங்கோ சென்றுவிட்டது, அதனை இப்போதும் கமூனிச கண்ணாடியூடாக பார்ப்பது, சீனாவை பற்றி அறிய விரும்புவார்கள் காலத்தில் எவ்வளவு பின்னிற்றகிறார்கள் என்பதாகும்.   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இனி எங்களுடைய think tank என்ன செய்யபோகிறார்கள் என சிந்திக்கவேண்டும்.. 

எங்களிடம் சிந்தனையாளர் குழாம் இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

சீனா இப்போது இலங்கையை தனது காலனியாகவே மாற்றிவிட்ட்து

இன்று பப்புவா நியுகினி அரசு, சீனாவின் hydro-electric plant திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிவிட்டது..(The Australian https://apple.news/AYN_sWC_LTIqdzgVutj9uuA )

அதே போல அவுஸ்ரேலியாவின் பார்லி, lobster மற்றும் wineற்கான இறக்குமதி தடை இழுபறியில் உள்ளது.. (https://www.abc.net.au/radionational/programs/breakfast/chinese-new-year-pain-for-australian-producers/13147518)

இப்படியே போனால், அவுஸ்ரேலியாவை சுற்றியுள்ள தீவுகளையும் சீனா அதனது காலனியாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

எங்களிடம் சிந்தனையாளர் குழாம் இருக்கோ?

சண்டை குரூப் இருக்குது 😆

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, நான் அறிந்தது, சீனாவில் ஊழல் மற்றும் கையூட்டு என்பது அபிவிருத்தியை ஊக்குவிக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாது, அனால் உண்மை.

இது திரிக்கு முற்றான பொருத்தம் இல்லை ஆயினும், கீழே சொல்வதை சீன மற்ற நாடுகளிலும் கொண்டுவர பார்கிறதோ என்ற சந்தேகமும் உண்டு. 

இது பொதுவாக 2000 (சீனா wto இல் இணைந்த போதது) பின் வந்த சட்டங்களால் உருவாகியுள்ள நிலை.  

ஏனெனில் வளங்களின் கட்டுப்பாடு வைத்து இருப்பது அரசு.

அபிவிருத்திக்கு வளத்தை கையூட்டு கொடுத்து, அரசிடம் இருந்து கட்டுப்பாடு அபிவிருத்தி செய்பவர்களிடம் வரும்.

அரசுக்கு தொடர்ந்து கட்டுப்பாடு கட்டணம், வளத்தின் பெறுமான உயர்வு வரி போன்ற பல வருவாய்கள்  வரும். வளம் மக்களுக்கே சொந்தமாக இருக்கும்.

இந்த மாதிரியான ஏற்பாடு, இங்கு மேற்கில் இருக்கும் பண முதலைகள் செய்வது. வரி தவிர்ப்பதத்திற்கும், சந்ததிக்கு வரி இல்லாமல் கடத்துவதற்கும்  

எதாவது ஓர் சொத்தின்  அல்லது வளத்தின் உரிமை ஓர் (வரியை பெரும்பாலும் தவிர்க்க கூடிய நாட்டில் உள்ள) கம்பனியிடம் இருக்கும். அந்த சொத்துரிமை கம்பனியை நிர்வகிப்பது இன்னுமோர் கம்பனி (கட்டுப்பாட்டை நிர்வகிப்பது). கஆற்றுப்படை நிர்வகிக்கும் கம்பனியில், பெரும்பான்மை பங்கு தாரர் இந்த பணமுதலையால் nominate செய்யப்பட்டவர்கள் (நோமின்டே செய்வதற்கு வேறு ஓர் கம்பனி) . இப்படியான ஏற்பாட்டில் சொத்தின் உரிமை யாருக்கு என்று தெரியவருவது மிக கடினம்.   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

மறுத்து இப்பொது சீனா, ஓர் இருமுறை கலந்த முதலித்துவ பொருளாதாரத்தை அமுல் படுத்துகிறது.

முற்றான அரச ஆதரவு முதலாளித்தும்.

சில பகுதிகளில் தனியார் மயப்பட்ட, அரச மேட்ர்பார்வை முதலாளித்தும்.  

இதே போல் முன்னாள் சோவியத் அதிபர் மிகைல் கொபர்சேவ் என்பவர் பெர்ஸ்ரொய்கா எனும் ஒரு திட்டத்தினூடு பொதுவுடமையில் மாற்றத்தினை ஏற்படுத்த முனைந்தார் அதனை ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார் அதன் சராம்சமும் ஏறத்தாழ நீங்கள் கூறிய விட்யம் போன்றதெ, பெரெஸ்ரொய்காவினை அமல் படுத்தும்பட்ட்சத்தில் 10 ஆண்டுகளில் சோவியத் உலகில் முதலாம் நிலயைப்பிடிக்கும் என்ற கருத்தை அமெரிக்க உளவு அமைப்பு அமெரிக்க அர்சை எச்சர்த்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

எங்களிடம் சிந்தனையாளர் குழாம் இருக்கோ?

இல்லாமல் இருக்காது

ஆனால் எப்பொழுதும் போல தனித்தனியாக இயங்குகிறார்களே தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் இந்த திட்டத்தை நாமே செயற்படுத்தினால் என்ன.👉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.