Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கால நேரம் பற்றிய முன் யோசனையின்றி  அழைத்த வதனியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் . அடுத்ததாக பின் விளைவை யோசியாத உறவுகளை குற்றம்சொல்ல வேண்டும் . கதை வேடிக்கையாக இருந்தாலும்  உண்மையானதாக இருந்தால்  ரொம்பவே வலிக்கும். இப்படி  வேற்று இன சமூகத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட்துண்டு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

லொக்டவுண்  

வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.  

இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர்.  

வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள்.

இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள்.  

இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன.

நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள்.

இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;.

அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள்.

அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது.

சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன.

வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது.

மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள்.

அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள்.

திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை.  

மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான்.

வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான்.  

என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும்  உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான்.

வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது.  

எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த

குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்?  

மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள்.

வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது.

என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர்.  

இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை.  

அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது.

உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான்.

காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர்.

நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை.

வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர்  “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர்.

ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது.

இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள்.

மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான்.

இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள்.

சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது.  

உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர்.

இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது.  

வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை.

நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான்.

தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான்.

நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.

நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள்.

பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் .

இதில் யாரை நோவது?

கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா?

ஆத்திரப்பட்ட நந்தனையா?

அல்லது அவனது 50வது பிறந்த நாளையா?

லோக்டவுணையா?

எதை?

இந்த கதை இன்னும் இந்த வருட பிறப்பு XMAS க்கு முதல் வந்திருந்தால்  கொஞ்ச தமிழ் சனம்  நோய் வராமல் தப்பி இருக்கும்கள் .

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துக் கருத்திட்ட நிலாமதி பெருமாள் மற்றும் பச்சையிட்ட நுணாவிலான் நந்தன் குமாரசாமி சுவி அனைவருக்கும் நன்றிகள்  இது  வெள்ளைகளின் சமூகத்தில் மட்டுமல்ல  எங்கட ஆக்களுக்கும் நடந்துள்ளன. கெடு குடி சொற்கேளாது என்றொரு பழமொழி உண்டு. நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavallur Kanmani said:

தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான்

மறக்க முடியாத பிறந்தநாள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் மொக்குச்சனம் என்று சொல்வது😖

இங்கிலாந்திலும் பல பார்ட்டிகள் இப்படிக் கள்ளமாக நடக்கின்றன. பெரும் பணக்காரர்கள் வாழும் இலண்டனின் மத்திய பகுதியிலும் ஆங்கிலேய கனவான்களும், சீமாட்டிகளும், பல இளவயதினரும் லொக்டவுனை மதிக்காமல் நடந்துகொள்கின்றார்கள். நம்மவர்களும் தங்கள் பங்குக்கு செய்கின்றார்கள்தான். ஒரு சிலர் பிடிபடுகின்றனர். பிடிபடாதவர்கள் பெரிய சாதனை படைத்த பெருமையுடன் மீண்டும் பார்ட்டிகளுக்கு திட்டம் போடுகின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavallur Kanmani said:

இதில் யாரை நோவது?

கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா?

ஆத்திரப்பட்ட நந்தனையா?

அல்லது அவனது 50வது பிறந்த நாளையா?

லோக்டவுணையா?

எதை?

காலத்திற்கேற்ற கதை கண்மணி அக்கா!

முதலில் நந்தனின் நண்பனுக்கு இரண்டு சாத்து. மற்றது வதனி அழைப்பு விடுத்தவுடனை ஒரு புத்திமதியும் சொல்லாமல் தாங்கள் சோடிச்சு மினுக்கிக்கொண்டு கொண்டாட்டத்துக்கு வந்த 25 பேருக்கும்  என்னத்தை சொல்ல....இஞ்சையும் துருக்கி சனங்கள் உந்த விளையாட்டைத்தான் செய்யினம்.
  
பாவம் நந்தன்...இனி தண்ட காசுக்கு வேறை உழைக்க வேணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

இதைத்தான் மொக்குச்சனம் என்று சொல்வது😖

இங்கிலாந்திலும் பல பார்ட்டிகள் இப்படிக் கள்ளமாக நடக்கின்றன. பெரும் பணக்காரர்கள் வாழும் இலண்டனின் மத்திய பகுதியிலும் ஆங்கிலேய கனவான்களும், சீமாட்டிகளும், பல இளவயதினரும் லொக்டவுனை மதிக்காமல் நடந்துகொள்கின்றார்கள். நம்மவர்களும் தங்கள் பங்குக்கு செய்கின்றார்கள்தான். ஒரு சிலர் பிடிபடுகின்றனர். பிடிபடாதவர்கள் பெரிய சாதனை படைத்த பெருமையுடன் மீண்டும் பார்ட்டிகளுக்கு திட்டம் போடுகின்றார்கள்.

கிருபன் சார்!
இஞ்சை பாருங்கோ மாஸ்க் என்னெத்துக்கெல்லாம் பாவிக்கலாம் எண்டு.....உப்பிடியெண்டால்  நாட்டிலை புதுப்புது வைரஸ் எல்லாம் பரவும் தானே...😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துக் கருத்திட்ட ஈழப்பிரியன் கிருபன் குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்.  
பச்சைப் புள்ளிகளிட்ட தமிழ்சிறி புங்கை யாயினி கிருபன் ஈழப்பிரியன் மோகன் பெருமாள் தமிழினி அனைவருக்கும் நன்றிகள். 
இந்த லொக்டவுண் காலத்தில் சமூக அக்கறையுடன் செயல்படுவது அனைவரின் கடமை. இல்லாவிட்டால் நாமும் பாதிக்கப்படுவதுடன் மற்றையவர்களையும் இக்கட்டுக்களில் மாட்டி விடுகிறோம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனத்திலை இருக்கிற இந்தப் படங் காட்டிற குணம் ஒரு நாளும் போகாது என்பதை உங்கள் கதை தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது!

இடம், பொருள், ஏவல் என்பவற்றை அவர்கள் ஒரு நாளும் கணக்கெடுப்பதேயில்லை!

இப்ப சிட்னி முருகனும் நல்லாத்  தனிச்சுப் போனார்! ஆனால் கவலைப் படவேயில்லை!

சனம் தான் வாங்கின  சாறிகளையும், நகைகளையும்,  புதுக் கார்களையும் ஊருக்குக் காட்ட  ஏலாமல் தலையைச் சொறிஞ்ச படி  இருக்கினம்!

காவலூர்  கண்மணியின்  கதையோட்டம்  பற்றி விமர்சிக்க  எனக்கு அருகதையில்லை!

தொடர்ந்தும்  எழுதுங்கள்...!

  • Like 1
Link to comment
Share on other sites

19 hours ago, Kavallur Kanmani said:

பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் .

இதில் யாரை நோவது?

கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா?

ஆத்திரப்பட்ட நந்தனையா?

அல்லது அவனது 50வது பிறந்த நாளையா?

லோக்டவுணையா?

எதை?

லொக்டௌன் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நல்ல ஒரு கதையாக்கம் அக்கா. 

தண்டப்பணத்துடன் முடிந்திருந்தாலாவது ஆறுதல் கொள்ளலாம். அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் வேதனை.

விதியோ, சதியோ அன்றைய நாளில் அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாராத இந்த துரதிஷ்டமான நிகழ்வுகள் அவர்கள் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கும்.

நாட்டுச் சூழல் தெரிந்தும் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்த வதனியைக் குற்றம் சொல்ல நினைத்தால், அவள் தன் கணவன் மேல் வைத்த அளவுகடந்த அன்பு நாட்டின் சட்டதிட்டங்களை மறக்கச் செய்துவிட்டது என்பது தான் உண்மை. எனவே அவளை நொந்து பயனில்லை. எனினும் பலருக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கும். 

மறுபுறம், எதிர்பாராத கொண்டாட்டம், பின்னர் வந்த பொலீஸார், தண்டப்பணம், ஊராரின் அவச்சொல் இவற்றால் ஏற்பட்ட திடீர் மன அழுத்தம் வதனியின் கணவனைப் பாதித்திருக்கும். அதன் விளைவே பின்னர் நடந்த துரதிஷ்டமான நிகழ்வுகள். அதற்காகக் குடும்ப வன்முறை தான் தீர்வு என்றில்லை. கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் கணநேரத்தில் வந்த கோபத்தால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்திருக்க முடியும். கணநேரக் கோபம் என்றாலும் பலகாலம் சேகரிக்கப்பட்ட மன அழுத்தத்தின் ஒட்டுமொத்த விளைவாகவும் அவனுக்கு வந்த அடக்கமுடியாக் கோபத்தைப் பார்க்கலாம். எனவே இது கணவன்மார்களுக்கான wake up call. இவை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அவசியம். 

கோவிட் லொக்டௌன் காலத்தில் குடும்ப வன்முறை கணிசமான அளவு அதிகரித்ததாக இங்குள்ள பத்திரிகைகளில் படித்தேன். இது பல நாடுகளிலும் நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கதை இதற்கு ஒரு உதாரணம். 

காலத்துக்கேற்ற கதைக்கு நன்றி அக்கா. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

இடம், பொருள், ஏவல் என்பவற்றை அவர்கள் ஒரு நாளும் கணக்கெடுப்பதேயில்லை!

இப்ப சிட்னி முருகனும் நல்லாத்  தனிச்சுப் போனார்! ஆனால் கவலைப் படவேயில்லை!

சனம் தான் வாங்கின  சாறிகளையும், நகைகளையும்,  புதுக் கார்களையும் ஊருக்குக் காட்ட  ஏலாமல் தலையைச் சொறிஞ்ச படி  இருக்கினம்!

போன கிழமை இஞ்சையொரு மரணச்சடங்கு...
அவையளுக்கு உள்ள இடம் முழுக்க சொந்தங்கள்
70 சனத்துக்கு மேல வந்தவையாம்....
இப்ப போகாத சனத்துக்கு அதென்ன அவையள் எல்லாரும் வந்தவையள் உங்களுக்குத்தான் கொரோனா சட்டங்கள் தடுக்குதோ எண்டு பெரிய குறையாம்.இதாலை நண்பர்கள் சொந்தங்கள் எண்டு ஒரே சலசலப்பாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்போ எனது ஆக்கங்களுக்கு படித்து ஊக்கமளிக்கும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். புங்கையூரானின் ஆக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அனைவர் வீட்டு அலுமாரிகளும் எப்போ லொக்டவுண் முடியும் என்று காத்திருக்கின்றன. புடவைகள் நகைகளின் ஸ்ரையில் எல்லாம் மாறி விடுமே என்ற கவலையுடன் பலர். 
கருத்துக்கு நன்றிகள் மல்லிகைவாசம் என்னதான் கணவனில் அன்பு பாசம் இருந்தாலும் நாட்டு நிலமையை கொஞ்சம் சிந்தித்து செயலாற்றி இருக்கலாம். பணஇழப்பையாவது கஸ்ரப்பட்டு சரிப்பண்ணி விடலாம். உயிரிழப்பு ஏற்பட்டால் அதன் பாதிப்பை ஒரு குடும்பம் தாங்குவது எவ்வளவு சிரமம். நாம் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நன்றிகள்
யார் என்ன சொன்னாலும் அவர்களுக்காக நமது குடும்பங்களின் பாதுகாப்பையம் நலனையும் முன்னிறுத்தியே சிந்திக்க வேண்டும். செத்தவீடு பிறந்தநாள் கோவில் என்று எல்லாத்தையும் நிலமை சரிவந்தபின் அனுபவிக்க முதலில் நாங்கள் இருக்கவல்லோ வேணும்.  கருத்துக்கு நன்றிகள் குமாரசாமி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தோடு கூடிய கதை சகோதரி.......!

நியாயமாய் பார்த்தால் இந்தக் கதைக்கு முதலாவது கருத்து நான்தான் எழுதியிருக்க வேண்டும்.எனது கருத்தை எழுதியிருந்தால் இவ்வளவு நல்ல கருத்துக்கள் பின்னால் வந்திராது.....!

எனது கருத்து :

காவல்துறைதான் இவ்வளவுக்கும் காரணம்.எங்களுடைய கொண்டாட்டங்கள் தெரியும்தானே, கண்டும் காணாமல் எச்சரித்து விட்டு  போயிருக்கலாம். அல்லது ஒரு ஆயிரம் டொலரை வாங்கி பாக்கட்டில் போட்டுகொண்டு கம்மென்று போயிருக்கலாம்......!   👍

இந்த லொக்டவுன் காலத்தில் கடந்த ஒண்டரை வருடங்களில்  எந்த ஒரு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்கள் முதலாவது கல்லை எறியக் கடவது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழி கண்மணி கதை ஆரம்பித்தபோது மனம் திக்கென்றது.... சரி எப்படி போகிறது என்று பார்ப்போம் எனறு தொடர்ந்து வாசித்தேன். ஒரு கணம் கடந்த காலத்தில் லொக்டவுனை நான் அலட்சியம் செய்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கக்கூடும். எல்லோருடைய நலமும் பாதுகாப்பும் இந்நாட்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஒரு கணம் நான் தவறியிருந்தால் இந்தக்கதை என்னுடையதாக இருந்திருக்கும் என்பது நிதர்சனம். லொக்டவுன் உண்மையின் தரிசனம். வாழ்த்துக்கள் தோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுல நம்ம சனத்துக்கு நடந்த கதை போல நினைக்கிறன் வாழ்த்துக்கள் கண்மணி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நாங்கள் எந்த கொண்டாட்டத்திலும் பங்குபற்றவில்லை.  கட்டாயம் யாரையாவது (ககோதரர்கள் பிள்ளைகள் ) உட்பட சந்திக்க வேண்டுமென்றாலும் நாங்கள் காரின் கதவைத் திறந்து இறங்கி நின்றுகொண்டு அவர்களை வெளியே வரும்படி அழைத்து 2 மீற்றர் தொலைவில் மாஸ்க் அணிந்தபடி மிகவும் கவனமாக நடந்துகொண்டிருக்கிறோம். ஆலய வழிபாடுகள் அனைத்தும் வீட்டிலிருந்தபடி நேரலையில் பார்க்கிறோம். 
தொற்று நோய் என்று எச்சரித்தபின்பும் தொட்டுத்தான் பார்ப்போம் என்று எண்ணுவது பெரிய தப்பு. படித்து கருத்தெழுதிய சுவி சகாரா தனி அனைவருக்கும் நன்றிகள்.
இது லண்டனில் மட்டுமல்ல கனடாவிலும் இன்னும் பல நாடுகளிலும் நடந்த கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இந்த லொக்டவுன் காலத்தில் கடந்த ஒண்டரை வருடங்களில்  எந்த ஒரு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்கள் முதலாவது கல்லை எறியக் கடவது.....!

அதிகம் கலந்துகொள்ள வாய்க்கவில்லை!

கிளப் ஒன்றில் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம். ரெஸ்ரோறன்ற்றில் ஒரு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்! அவ்வளவுதான்!!

 

  • Like 1
Link to comment
Share on other sites

உப்பிடி காதும் காதும் வைச்ச மாதிரி இங்க எங்கள் சனத்துக்குள் நிறைய நடக்குது.  எனக்கு தெரிந்து இப்படி போய் கலந்து கொண்ட ஒரு குடும்பத்தில் மனைவிக்கும் கணவருக்கும் கொரனோ வந்து படுத்தி எடுத்து விட்டது.

காலத்துக்கு ஏற்ற கதை.

6 hours ago, suvy said:

 

இந்த லொக்டவுன் காலத்தில் கடந்த ஒண்டரை வருடங்களில்  எந்த ஒரு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்கள் முதலாவது கல்லை எறியக் கடவது.....!

இடையில கட்டுப்பாடுகளை தளர்த்தி 25 பேர் உள்வீட்டில் (indoor) சந்திக்கலாம் என்று அரசு சொல்லிய கடந்த ஆகஸ்டில் நாலு  நண்பர் குடும்பமாக ஒரு கொட்டேஜ் இற்கு போய் வந்தோம். கட்டுப்பாட்டு இறுக்கிய காலத்தில் பார்ட்டி ஒன்றுக்கும் போகவில்லை.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை ஏமாற்றுகின்றோம் என நினைத்து எம்மவர்கள் இப்படிப்பட்ட தப்புகள் செய்து பணம் முதல் பல இழப்புகள் நடக்கின்றது,

சட்டத்தை மதித்து நடந்தால் நடந்தால் எந்த பிரச்சனையுமில்லை, கார் ஓட்டுவது முதல்..

நல்ல கதை, காலத்திற்கேற்றது👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களால் வேலை அற்று இருப்பவர்களுக்கு வேலையும் கூடத் தான்.பாவங்கள் நாலு சுவற்றுக்குள்ள அடிபடுகிறம் விழுகிறம் என்றுண்டு ஊரையே கூப்பிடுவது..ஆக்கத்திற்கு நன்றி கண்மணி அக்கா..🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்தெழுதிய கிருபன் உடையார் யாயினி நிழலி அனைவருக்கும் நன்றிகள். லொக்டவுண் எமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தந்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் எம் பிள்ளைகளைப் பற்றி கதைகதையாக எழுதலாம். எதற்கும் நிலமை சரி வரும்வரை அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். உங்கள் நேரத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

கதை கற்பனையாக இருந்தாலும் கனடாவில் இந்த லொக் டவுனிலும் செத்த வீடு வீட்டில் கொண்டாடப்பட்ட ஒரு காணொளியை பார்த்து திகைத்து போனேன். 25 க்கு மேற்பட்ட உறவினர்கள் சகிதம் பிரேதம் வீட்டுக்குள் வைக்கப்பட்டு செத்த வீடு கொண்டாடப்பட்டது. அதிஸ்டவசமாக யாரும் மாட்டுப்படவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாவது மிகப்பெரிய வீடொன்றில் கசினோ நடாத்தியுள்ளார்கள்.(சீனர்கள் என நினைக்கிறேன்) இது பிடிபட்டு விட்டது. 
சட்டம் மக்கள் நலனுக்காக போடப்படுவதை மக்கள் உணருவதில்லை.
கதைக்கு நன்றிகள் அக்கா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை கற்பனையல்ல கனடாவில் நடந்ததாக கேள்விப்பட்ட கதைதான். தப்பினால் பிழைத்தோம் மாட்டுப்பட்டால் கொண்டாட்டத்திற்குப் போகும்பொழுதே ஆயிரம் டொலர்களை எக்ஸ்ராவாகக் கொண்டுபோனால் பிரச்சனையில்லை.படித்துக் கருத்திட்டமைக்கு நன்றிகள் நுணாவிலான். அத்துடன் பச்சைப்புள்ளியிட்ட இணையவன் ரதி நிழலி உடையார் சுவைப்பிரியன் பெனி மல்லிகைவாசம் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி விக் ஏன் உங்களுக்கு தண்டப்பணம் தந்தார்கள் ?  கூட்டத்துடன் நின்றீர்களா? 
காவல் துறையினர் மக்களின் நலனுக்காகத்தானே கடமையாற்றுகின்றனர்.
சட்டங்களுக்கு பொதுமக்கள் மதிப்பளித்தே ஆகவேண்டியது கட்டாயமாகிறது. ஆனாலும் 1500 டொலர் என நினைக்க கவலையாக உள்ளது. சிறைத்தண்டனையும் உள்ளதா?  கொரானா வந்தாலும் வந்தது மக்களை ஒரு கை பார்க்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டல்லவா நிற்கிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
    • 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை       என்டிஏ* 295   என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231   இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17   மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க  தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)   படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)   பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)   படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
    • இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால் இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்   த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................
    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.