Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Popular Post

                               காவலூர்க் கனவுகள்

spacer.png

கடலோரம் அலைவந்து
  கரைமீது மோதும்
காதோரம் ஆலய
  மணி வேதம் ஓதும்
இனிதான தென்றலும்
  இடை வந்து வீசும்
எங்கெங்கு நோக்கினும்
  தெய்வீகம் பேசும்
இல்லங்கள் எங்குமே
  இறை புகழ் பாடும்
இயம்பிடும் செபமாலை
  தினம் சாரல் தூவும்
அதிகாலைத் திருப்பலி
  அரங்கேறும் நேரம்
அற்புத கானங்கள்
  அகமெங்கும் மோதும்
நிலவோடு கடல் வந்து
  நிதம் சங்கமிக்கும்
கடலோடு மேகங்கள்
  தலை கோதிச் செல்லும்
செம் பருத்திப் பூக்கள்
   வேலியில்; ஆடும்
செவ்வந்திப் பூக்களும்
  பொன் அள்ளித் தூவும்
அதி காலைச் சேவல்கள்
  அறை கூவிப் பாடும்
அதை மிஞ்சும் திருந்தாதி
  மணி நாதம் கேட்கும்
வான் முட்டும் ஆலய
  கோபுரம் நான்கும்
ஆன்மீக தாகங்கள்
  தீர்த்திடும் பாங்கும்
அறிவூட்டும் அதிசய
  கலைக்கூடம் எங்கள்
அறிவுக்கண் திறந்திடும்
  அற்புதம் செய்யும்
குயிலோசை காதிலே
  இன்னிசை பாடும்
அலையோசை காற்றோடு
  சுதிதாளம் போடும்
வெள்ளிக் கொலுசொலி
  வீதியில் சிந்தும்
துள்ளும் வனிதையர்
  சிரிப்பொலி மிஞ்சும்
காலைச் சந்தையும்
  களைகட்டிக் கூடும்
காவலூர்த் துறைமுகம்
  கலகலப் பூட்டும்
மாலைச் சூரியன்
  மறைந்திடும் வேளை
மஞ்சள் குளித்திடும்
  கடல் மகள் நாணம்
கண்டு களித்திட
  காளையர் கூடும்
கடற்கரை பொன்மணற்
  பரப்பென மின்னும்
பூவரசம் பூக்கள்
  சாமரம் வீசும்
மாமரக் காற்றிலும்
  தமிழ் மணம் வீசும்
காவலூர்க் கனவினைக்
  கண்களில் சுமக்கும்
கண்மணிகள் வாழ்வில்
  வசந்தமே வீசும்

--

Edited by Kavallur Kanmani

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமே வீசும்

நன்றி அக்கா

மண்ணை கண்முன் கொண்டு வந்ததற்கு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கவரும், அழகிய படமும்..
அருமையான கவிதையும்....
ரசித்தேன்... கண்மணி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

காவலூர்க் கனவினைக்
  கண்களில் சுமக்கும்
கண்மணிகள் வாழ்வில்
  வசந்தமே வீசும்

அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

மாலைச் சூரியன்
  மறைந்திடும் வேளை
மஞ்சள் குளித்திடும்
  கடல் மகள் நாணம்
கண்டு களித்திட
  காளையர் கூடும்

இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..!

எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...!

பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு மண்வாசனை கவிதை.

ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள்.
இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

தாயக கனவுகள்   எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வசந்தமே வீசும்

நன்றி அக்கா

மண்ணை கண்முன் கொண்டு வந்ததற்கு.

எங்கு நாம் வாழ்ந்தாலும் நாம் உருண்டு பிரண்டு ஓடி ஆடிய மண்ணின் நினைவை மறக்க முடியுமா? கருத்துக்கு நன்றிகள் விசுகு

1 hour ago, uthayakumar said:

அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.

ஓ நீங்களும் காவலூரா? எம் கனவுகளிலும் கண்முன் விரியும் காவலூரின் நினைவுகள் கவிஎழுத வைத்தது. கருத்துக்கு நன்றிகள் உதயகுமார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புங்கையூரன் said:

இதைத் தான் ....பொன் மாலைப் பொழுது...என்று கூறுவார்கள் போலும்....காவலூரின் கண்மணி..!

எனக்கென்னவோ....அணைக்கட்டிலிருக்கும்...கண்ணா மரமாக இருக்கத் தான்...ஆசை...!

பொன் மாலைப் பொழுதுகளை மட்டுமல்ல,,,,,,,,,அதி காலைப் பொழுதுகளையும் தரிசித்த படியே....வேர் தடவும் மீன்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம்...! கவிதைக்கு நன்றி...!

அந்த அழகிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழகிய அலையோசையையும் நாம் வாழும் காலம் வரை மறக்கமுடியுமா? கருத்துக்கு நன்றிகள் புங்கையூரன்

26 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு மண்வாசனை கவிதை.

ஒரு சில நாட்களுக்கு முன் யூரியூப்பில் ஊர்காவத்துறை,கரம்பொன் போன்ற இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அற்புதமான இடங்கள்.
இவற்றையெல்லாம் இழந்து கொண்டு வருகின்றோமோ என்ற ஆதங்கம் நெஞ்சை வருடுகின்றது.
 
சென்ற வருடம் போய் மீண்டும் சில நாட்களாவது இவற்றை அனுபவிக்கலாம் என்ற நாம் கட்டிய மனக்கோட்டைகளெல்லாம் கொரோனாவால் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இழந்து கொண்டு வருகிறோம் என நினைக்கவே வலிக்கிறது. நன்றிகள் குமாரசாமி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:

தாயக கனவுகள்   எல்லாம் நனவாக்க வேண்டுமென்று தான் ஆசை . அது நிராசையாக போய்விடக்கூடாது , என்றுதான் எல்லோருக்கும் ஆசை ..

கனவுகள் நனவாகும் என்ற ஆசை மனம் நிறைய இருந்தாலும் காலம் நம்பிக்கையை பொய்யாக்கி விடுமோ என்ற பயமும் உள்ளது. கருத்துக்கு நன்றிகள் நிலாமதி.

நேரில் பார்த்தறியாத காவலூரை கவிதை வாயிலாக காண வழி செய்த கண்மணி அக்காவுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தூர இருந்து பாக்கும் கடல்கோட்டை, அந்தோனியார் கல்லூரி இடைவேளைநேரத்தில் 'பாதையில்' காரைநகர் போய்வருவதும் ஒரு சுகம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையை வாசிக்க

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நேரில் பார்த்தறியாத காவலூரை கவிதை வாயிலாக காண வழி செய்த கண்மணி அக்காவுக்கு நன்றி

நன்றிகள் நிழலி. முன்பென்றால் நயினாதீவுக்குப் போவதற்கு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் இருந்து பயணம் செய்வார்கள். இப்போது குறிகட்டுவானிலிருந்து செல்வதால் எமது ஊர் பலருக்குத் தெரியாமல் போய் விட்டது.

48 minutes ago, நந்தன் said:

தூர இருந்து பாக்கும் கடல்கோட்டை, அந்தோனியார் கல்லூரி இடைவேளைநேரத்தில் 'பாதையில்' காரைநகர் போய்வருவதும் ஒரு சுகம்

அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றீர்களா? எல்லோரும் அயலவர்களாகத்தான் உள்ளீர்கள். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் கவிதையை வாசிக்க

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.

கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.  
அத்துடன் எனது கவிதைக்கு விருப்பிட்ட சபேஸ். நிலாமதி. நந்தன்.பெனி. தமிழினி.யாயினி. விசுகு.குமாரசாமி.புங்கையூரன்.சு.ப.சோமசுந்தரம்.நுணாவிலான்.நிழலி.ஈழப்பிரியன்அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊர் வாசம் என்பது இறக்கும் வரை மறக்காது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2021 at 06:31, வாதவூரான் said:

சொந்த ஊர் வாசம் என்பது இறக்கும் வரை மறக்காது

எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான்.
கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 15:29, தமிழ் சிறி said:

கண்ணைக் கவரும், அழகிய படமும்..
அருமையான கவிதையும்....
ரசித்தேன்... கண்மணி அக்கா.

உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை  பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

தக  தகிட... தக  தகிட...

இதே  தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. :)

அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌

தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை...
தொடர்ந்தும் எழுதுங்கள்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 20:59, Kavallur Kanmani said:

செம் பருத்திப் பூக்கள்
   வேலியில்; ஆடும்
செவ்வந்திப் பூக்களும்
  பொன் அள்ளித் தூவும்
அதி காலைச் சேவல்கள்
  அறை கூவிப் பாடும்

தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

தக  தகிட... தக  தகிட...

இதே  தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. :)

அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌

தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை...
தொடர்ந்தும் எழுதுங்கள்.

இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி.

4 minutes ago, Kavallur Kanmani said:
5 hours ago, Paanch said:

தினமும் காலையில் எழும்போது என் வீட்டிலேயே நான் காணும் இனிதான காட்சிகள்... கடல்கடந்து வந்ததால் நினைவில்மட்டும் உறங்கிய நிலையில், என்னை உலுக்கி எழுப்பி எனது ஊருக்கே கொண்டுசென்று மீண்டும் அதனைக் காணவைத்தது உங்கள் காவலூர்க் கனவுக் கவிதை. தொடர்ந்தும் நாங்கள் கவலை மறந்து மகிழ உங்கள் அழகிய கனவுகள் தொடரட்டும். 🙌     

இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த  நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள்   ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்.... 

On 6/3/2021 at 06:59, Kavallur Kanmani said:

குயிலோசை காதிலே
  இன்னிசை பாடும்
அலையோசை காற்றோடு
  சுதிதாளம் போடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

நல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்

கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள்

19 hours ago, putthan said:

அருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த  நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள்   ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்.... 

நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான மண்மணம் வீசும் கவிதை......நான் nrtb யில் வேலை செய்த காலத்தில் காரைநகர் ஜெற்றியில்தான் டிப்போ இருந்தது.அப்போது புது டிப்போ கட்டப்படவில்லை. சிலதடவை அந்த கடற்கோட்டைக்கு சென்றிருக்கின்றேன். அந்நாட்கள் மறக்க முடியாதவை.கரம்பொன்னிலும் நிறைய உறவினர்கள் உள்ளார்கள். பாராட்டுக்கள் சகோதரி.......!   👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.