Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.!

Screenshot-2021-03-06-15-36-44-895-com-a

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்....

இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகூடியதாக உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.

எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும்.

எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள். இலங்கை பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய பணிகளாக.

தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்தல்.

இதற்காக தமிழ் பேசும் கல்வி சமூகத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை கோருகிறோம்.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்குதல்.

இதற்கான ஆலோசனைகளை தமிழ் பேசும் சமூகத்தின் பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையினரிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.

தமிழ் பேசும் மக்களின் விளையாட்டுத்துறை மற்றும் அழிந்துப்போகும் கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்.

இந்த விடயத்தில் தமிழர் மத்தியில் செயற்படும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

http://aruvi.com/article/tam/2021/03/06/23371/

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை விட ஈழத் தமிழர் மொழியுணர்வும் பகுத்தறிவும் உடையோர் என்று நம்புகிறேன். எனவே  பாஜக மதவெறிப்  பருப்பெல்லாம் அங்கே வேகாது என்று உறுதியாக நம்புகிறேன். பாசிசம் இப்படித்தான் பல வேடங்களில் நீண்ட காலத் திட்டத்தோடு வரும். மேலும் இலங்கைக்கு ராஜபக்சேக்கள்  போன்ற பாசிஸ்டுகள் போதாதா ?

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய  கட்சிகள் போல இதுவும் ஓன்று இருந்துட்டு போகட்டும். யார் குத்தினாலும் அரிசி வந்தால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு  கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர்  செயற்படுவார்கள்

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு  கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர்  செயற்படுவார்கள்

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாரதிய (இந்தியா) ஜனதா (மக்கள்) கட்சி?

இலங்கை, பாரதம் ஆகிய இரண்டு நாட்டு மக்களையும் இணைக்கும் கட்சியோ?

இந்த கட்சிக்கு வரதராஜபெருமாள் தலைமை தாங்கினால் நல்லதோ என்னவோ.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் ஈடுபடாவிட்டால் ஏன் அரசியல் கட்சியாகப் பதிய வேண்டும்.. ? 

எனவே, 

இவர்கள் பசுத்தோல் போர்த்திய ஓநாயாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். 

தமிழ் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோரை நேரடியாகப் பகைக்காது செயற்படவே அரசியலில் ஈடுபடாது அரசியலில் ஈடுபட முனைகின்றனர்.

🤥

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை பாரதிய (இந்தியா) ஜனதா (மக்கள்) கட்சி?

இலங்கை, பாரதம் ஆகிய இரண்டு நாட்டு மக்களையும் இணைக்கும் கட்சியோ?

இரெண்டு நாடுகளையும் இணைக்கும் முயற்சி. ராஜிவ் காந்தி முயன்று தோற்றுப்போன முயற்சியில் மோடி இப்போது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணி இனி சாம்பார்.....அரோகரா :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்குப் போட்டி. எல்லாப் பக்கங்களாலும் பந்தாடப்படுவது தமிழர்களே... 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையையும் சேர்த்து பாரதிய ஜனதா கட்சி அகன்ற இந்து இந்தியா அமைத்து பின்பு தமிழீழத்திற்கு பிரிந்து செல்லும் உரிமை கொடுப்பார்கள் என்று சில இலங்கையர் நம்புகிறார்கள் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையையும் சேர்த்து பாரதிய ஜனதா கட்சி அகன்ற இந்து இந்தியா அமைத்து பின்பு தமிழீழத்திற்கு பிரிந்து செல்லும் உரிமை கொடுப்பார்கள் என்று சில இலங்கையர் நம்புகிறார்கள் 😂

என்ரை செல்லம் விளங்க நினைப்பவன்! 
ஈழத்தமிழனுக்கு சிங்களவரைப் போல எல்லா உரிமையும் இருந்தால்/அவன் சிங்களவன் குடுத்திருந்தால் ஏன் அவன்  கண்ட கண்ட பரதேசி கட்சியளை எல்லாம் தொடங்கப்போறான்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல்  இவர்கள் இலங்கை சங்கிகள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் காலையும் மலையும்  மாட்டு கோமியம் குடித்து வாழ்வார்கள்

வெளிவந்துவிட்டது; படிக்கத் தவறாதீர்கள்...

அகண்ட பாரதமும் பிராமணர் (ராம) ராஜ்ஜியமும் - முதலாம் பாகம்.

ஆசிரியர்: RSS

பதிப்பு : நாக்பூர் பதிப்பகம்

மொழி: ஹிந்துத்வா

ஆண்டு: 2021

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஈழத்தமிழன் உள்ளூர் கட்சிகளின் தொல்லை தாங்கமுடியாமல்  தெறிச்சு நிக்கிறான். விரல் விட்டு எண்ண பக்கத்திலை நிக்கிறவன்களின் கைகளையும் இரவல் கேட்கவேண்டியிருக்கு. இது போதாது என்று இறக்குமதி செய்த கட்சிகள் களத்தில் இறக்க வேண்டுமா?

தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் செயல்படுவதே தமிழர் தரப்புக்கு பாரிய அரசியல் பின்னடைவு என்பதை புரியாதவனல்ல தமிழன். அப்படியிருக்க இந்திய கட்சி தமிழ் பிரதேசத்தில் கிளை அமைத்து காலூன்ற எண்ணுவது ஏற்புடையதல்ல.

ஈழத்தமிழனின் சுய நிர்ணய உரிமை, சுயாட்சி, தமிழ் பிரதேசங்களின் கட்டுமானங்கள் பற்றி பா.ஜ.க தனது கொள்கைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும். கட்சி வேண்டுமா இல்லையா என்பது பற்றி பிறகு வேண்டுமானால் சிந்திக்கலாம்.

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

இதுபோன்ற அரசியல் உத்திகளை இந்தியா தமிழ் நாட்டுடன் நிறுத்திக்கொண்டால் எல்லா தரப்பினருக்கும் நல்லது. புதுடில்லியின் இந்த முட்டாள்தனமான நகர்வால் அதன் பூகோளஅரசியல் இராஜ தந்திரம் அடிமட்ட நிலைக்கு வந்துவிட்டது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

இரெண்டு நாடுகளையும் இணைக்கும் முயற்சி. ராஜிவ் காந்தி முயன்று தோற்றுப்போன முயற்சியில் மோடி இப்போது.

இலங்கைத் தமிழர் இனி விளங்கின மாதிரித்தான்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing, people sitting and text that says 'இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்: இந்தியாவுடன் தொடர்பு இல்லை என தெரிவிப்பு! முக்கியச் செய்திகள் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி இன்று யாழில் உதயம்: இந்தியாவுடன் தொடர்பு இல்லை என தெரிவிப்பு! by Pagetamil March 6, 2021 SHARE f JC NA JAFFNA PRESS CLUB யாழ் ഉ க அமையம் යාපනය ධ්ය සමාජය hoddam Road, Jaffna,'

பாரதிய என்றால் இந்தியாவை குறிக்காது அதுதானே... 🤔

பாரதிய என்பது... பாரதியை குறிக்குமோ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளமைக்கு பௌத்தமதகுரு கடும் கண்டனம்

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது என சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

pahiyangala_Ananda_Sagara_Thero_800x400-

இலங்கை பாரதியஜனதா கட்சி என்ற அமைப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது பகியங்கல ஆனந்த சாகர தேரர் என்ற பௌத்த மதகுரு இலங்கையின் கட்சி அரசியலில் இந்தியா செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தால் பல பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா என்ற கட்சி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு அவ்வாறான செய்தியாளர் மாநாடுகளை தடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://thinakkural.lk/article/113650

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.