Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 69
  • Views 17.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kapithan
    Kapithan

    எனக்க்கும் எனது குடும்பத்தாருக்கும் கோவிற்-19 Varient 2(?) வந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். மனைவி பிள்ளைகளைப்பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டு முதலி

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarant

  • கிருபன்
    கிருபன்

    கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும். எனக்குத் தெரிந்து பலரு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துணிவுக்கும் , தன்னம்பிக்கைக்கும் , மற்றவர்கள் பயன் பெறவேண்டுமென்ற ஆர்வத்துக்கும்  என் பாராட்டுக்களும் நன்றியும். தெரிவித்து கொள்கிறேன்.  

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே.

ஆனால் கொரனா வந்தால் எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று சொல்வது சரியல்ல. ஒருவருக்கு ஒட்சிசன் அளவு குறைந்து கொண்டு சென்றால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் பிழைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இல்லாவிடின் மிகவும் ஆபத்தாக போய்விடும்.

வீடியோவின் ஆரம்பத்தில் குடும்பத்தில் 3 பேருக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மூன்றவதாக யாருக்கு வந்தது?

பகிர்வுக்கு நன்றி  சுமே.  உங்கள் அனுபவம் நிச்சயம்  மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிலாமதி said:

உங்கள் துணிவுக்கும் , தன்னம்பிக்கைக்கும் , மற்றவர்கள் பயன் பெறவேண்டுமென்ற ஆர்வத்துக்கும்  என் பாராட்டுக்களும் நன்றியும். தெரிவித்து கொள்கிறேன்.  

நன்றி நிலாமதியக்கா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு சகோதரி.....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே.

ஆனால் கொரனா வந்தால் எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று சொல்வது சரியல்ல. ஒருவருக்கு ஒட்சிசன் அளவு குறைந்து கொண்டு சென்றால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் பிழைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இல்லாவிடின் மிகவும் ஆபத்தாக போய்விடும்.

வீடியோவின் ஆரம்பத்தில் குடும்பத்தில் 3 பேருக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மூன்றவதாக யாருக்கு வந்தது?

என் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் பெற்றோருக்கும் கடந்த ஆண்டு ஒருதடவையும் இந்தத் தையில் இரண்டாவது தடவையும் கோவிட் தொற்று ஏறப்பட்டு முதற் தடவை ஐந்தாறு நாட்களும் இரண்டாவது தடவை 28 நாட்களுக்குக் கிட்ட எழுந்து நடக்கவே முடியாமல் படுத்தே கிடந்தனர். ஒரு தடவை வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டும் அவர்கள் செல்லவில்லை. குடிநீர் இரசம் வெடிகு பிடித்தல் என்றும் இரண்டு நாட்கள் வேப்பம் பட்டை அவித்தும் குடிகததாகக் கூறினார்கள்.  உடலின் ஒட்சியன் அளவு குறைந்தால் மட்டும் வைத்தியசாலைக்குப் போங்கள் என்று பல தமிழ் வைத்தியர்களே சொல்கின்றனர். 

தகப்பனைத் தொட்டு விளையாடித் தனக்கு வராது என்ற மகளுக்குத்தான் வந்தது. 😀

2 minutes ago, suvy said:

உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு சகோதரி.....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் ........!

நன்றி அண்ணா

16 minutes ago, ஜெகதா துரை said:

பகிர்வுக்கு நன்றி  சுமே.  உங்கள் அனுபவம் நிச்சயம்  மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். 

நன்றி ஜெகதா

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

சிலருக்கு என்ன தான் நடந்தாலும் ஆங்கில சிகிச்சைகளில்த் தான் நம்பிக்கை.

10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.  உடலின் ஒட்சியன் அளவு குறைந்தால் மட்டும் வைத்தியசாலைக்குப் போங்கள் என்று பல தமிழ் வைத்தியர்களே சொல்கின்றனர். 

இங்கும் அப்படித்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒட்சிசன் அளவு குறைந்தால் அல்லது மூச்சு விட மிகவும் சிரமப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சொல்கின்றனர். ஒரு நாளைக்கு 1500 பேருக்கு வந்தால் அதில் 100 பேர் வரைக்கும் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் 98 பேராவது பிழைத்துக் கொள்கின்றார்கள்.

Quote

என் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் பெற்றோருக்கும் கடந்த ஆண்டு ஒருதடவையும் இந்தத் தையில் இரண்டாவது தடவையும் கோவிட் தொற்று ஏறப்பட்டு முதற் தடவை ஐந்தாறு நாட்களும் இரண்டாவது தடவை 28 நாட்களுக்குக் கிட்ட எழுந்து நடக்கவே முடியாமல் படுத்தே கிடந்தனர்.

இரண்டாம் தடவை வருவது மிகவும் அபூர்வம் அல்லவா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இங்கும் அப்படித்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒட்சிசன் அளவு குறைந்தால் அல்லது மூச்சு விட மிகவும் சிரமப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சொல்கின்றனர். ஒரு நாளைக்கு 1500 பேருக்கு வந்தால் அதில் 100 பேர் வரைக்கும் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் 98 பேராவது பிழைத்துக் கொள்கின்றார்கள்.

இரண்டாம் தடவை வருவது மிகவும் அபூர்வம் அல்லவா? 

இங்கு சிலருக்கு இரண்டாவது தடவையும் வந்திருக்கு. கோவிட் தொற்று ஏற்பட்டால் ஒருவாரமோ இரு வாரமோ உடலை அலட்டிக்கொள்ளாது இருக்கவேண்டும் என்கின்றனர். சிலர் வேலையை விட முடியாதவர்கள், விசா இல்லாதவர்கள் அல்லது காசு ஆசை கொண்டவர்கள் சும்மா உடல் வலிதானே என்று தெரிந்தும் வேலைக்குச் சென்று பின் நோய் முற்றி இறந்தும் போயுள்ளனர்.

13 minutes ago, ஈழப்பிரியன் said:

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

சிலருக்கு என்ன தான் நடந்தாலும் ஆங்கில சிகிச்சைகளில்த் தான் நம்பிக்கை.

அதுதான் தவறு. எனக்குததேறிய வைத்தியசாலைக்குச் சென்ற பலர் இறந்துள்ளவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு .....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் .......சுமே அக்கா .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு .....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் .......சுமே அக்கா .

அப்படியும் சொல்ல முடியாது. ஏதோ எமக்கு அப்படி விதிக்கப்பட்டிருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து பலருக்கு வந்து முறிச்சு எடுத்தது. கொரோனா வந்து சில மாதங்களில் 30 வீதமானோர் மீண்டும் வைத்தியசாலை போனதாக தரவுகள் சொல்லுகின்றன. எனவே சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வந்தால் வைத்தியரை நாடவேண்டும்.

NHS guidelines படி Oxymeter 95 க்குள்  கீழே வந்தால் உடனடியாக வைத்தியரை தொடர்புகொள்ளவேண்டும். 92 க்குப் போனால் அவசர சேவையை தொடர்புகொள்ளவேண்டும். 85 மட்டும் பிரச்சினை இல்லை என்பது சரியல்ல. அத்துடன் வைத்தியசாலைக்கு போவதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கக்கூடாது. அதனை வைத்தியர்கள்/ NHS சொல்லவேண்டும். 

கடந்த வருடம் எனக்குத் தெரிந்த ஒருவர் கொரோனா வந்திருக்கலாம் என்று வீட்டில் தனது அறையில் தனிமையாக இருக்கும்போது சிலநாட்களில் ஸ்ரோக் வந்து மரணமடைந்தார். அவருக்கு கொரோனா வந்திருக்கவில்லை. எனவே, மனதைரியம் மிகவும் முக்கியம். அத்துடன் வைத்தியர்களின் தகுந்த ஆலோசனைகளும் முக்கியம்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே!

ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை!

அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! 

உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்!

இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவ பகிர்வு. நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2021 at 19:38, கிருபன் said:

என அனுபவத்தைத் தானே கூறினேன். நான் வைத்தியாரிடம் கேட்டபோது அவர் கூறியதைத்தான் சொன்னேன். மற்றது என மக்களுக்கு 83 கூட ஒருதடவை காட்டியது. உடனே 111 இக்கு போன் செய்யும்படி கூறினேன். அது பிரச்சனை இல்லை அம்மா என்றுவிட்டாள். மறுமுறை பார்த்தபோது 90 இல் இருந்தது. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாயிருக்க வேண்டியது அவசியம் தான்.

19 hours ago, உடையார் said:

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே

வரவுக்குநன்றி

13 hours ago, புங்கையூரன் said:

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே!

ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை!

அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! 

உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்!

இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃

அதுதான் என அனுபவம் என்று போட்டாச்சே🤣

12 hours ago, கறுப்பி said:

நல்லதொரு அனுபவ பகிர்வு. நன்றி 

வருகைக்கு நன்றி

கருத்து பகிர்வுக்கு நன்றி சுமே.. நீங்கள் எல்லோரும் நலமாக இருப்தில் மிக சந்தோசம். உங்கள் எல்லோருக்கும் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் மனதில் தைரியமும் இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்பது கேள்விக்குறிதான்.வைத்தியசாலை சென்றதால் கடைசி நேரத்தில் தப்பி பிழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அதானால் வீட்டில் இருந்தால் கொறோனா மாறிவிடும் என்பதுதான் சிறு உறுத்தல். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது சாத்தியமானதில் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு நன்றி  ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)

இலங்கை ஒரு ஏழை நாடு மருத்துவ வசதிகள் இல்லை. யேர்மனி தவிர்ந்த மேற்குலகநாடுகளிலும் மருத்துவ வசதி குறைவு என்று யார் உங்களுக்கு சொன்னது  கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் யேர்மனியைவிட பல மடங்கு சிறப்பாக யுகே செய்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை ஒரு ஏழை நாடு மருத்துவ வசதிகள் இல்லை. யேர்மனி தவிர்ந்த மேற்குலகநாடுகளிலும் மருத்துவ வசதி குறைவு என்று யார் உங்களுக்கு சொன்னது  கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் யேர்மனியைவிட பல மடங்கு சிறப்பாக யுகே செய்துள்ளது

யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள்

அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால்  ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு  இங்கே வநது மருத்துவம் செய்து  சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை ஒரு ஏழை நாடு மருத்துவ வசதிகள் இல்லை. யேர்மனி தவிர்ந்த மேற்குலகநாடுகளிலும் மருத்துவ வசதி குறைவு என்று யார் உங்களுக்கு சொன்னது  கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் யேர்மனியைவிட பல மடங்கு சிறப்பாக யுகே செய்துள்ளது

அதற்கு பின் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது அன்பரே......😎

உலகத்துக்கே மருந்து மாத்திரை கொடுக்கும் நாடு ஜேர்மனி:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள்

அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால்  ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு  இங்கே வநது மருத்துவம் செய்து  சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன் 

நானும் அறிந்து கொண்டது யேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் செல்வந்தர்களில் சிலர் முதுகுத்தண்டு பிரச்சனைகள் வரும் போது இந்தியா கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்களாம்.
யேர்மன் முன்னாள் அதிபர் Helmut Kohl  தனது ஓய்வுக்கு பின்பு   இலங்கை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார்  செய்தி படித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நானும் அறிந்து கொண்டது யேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் செல்வந்தர்களில் சிலர் முதுகுத்தண்டு பிரச்சனைகள் வரும் போது இந்தியா கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்களாம்.
யேர்மன் முன்னாள் அதிபர் Helmut Kohl  தனது ஓய்வுக்கு பின்பு   இலங்கை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார்  செய்தி படித்தேன்.

காப்பு கை மருத்துவத்திற்கு கேரளாவும் சிறிலங்காவும் சிறந்ததாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நானும் அறிந்து கொண்டது யேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் செல்வந்தர்களில் சிலர் முதுகுத்தண்டு பிரச்சனைகள் வரும் போது இந்தியா கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்களாம்.
யேர்மன் முன்னாள் அதிபர் Helmut Kohl  தனது ஓய்வுக்கு பின்பு   இலங்கை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார்  செய்தி படித்தேன்.

நான் யு.கே பல தடவை வநதுளளேன்  ஆஸ்பத்திரிகளுக்கும் எனது உறவினரைப் பார்ககப் போய்யுள்ளேன். அறை வசதிகள் ..துப்பரவு.  சேவை.  மருததுவம் ...எனபன...யு.கேயை விட. ஜேரமனியில். மிகச்  சிறப்பு ஆகும். 

கொழும்பு நான்கம் குறுக்கு தெருவைப் பார்த்த மாதிரித்தான் உங்கே நகரங்கள். (city) ...பல இடங்களில் றேட்டில் பல கிழமைகாளாக பழைய வீட்டுச்சாமன் எடுக்கபபடாமால் கிடந்ததைப் பார்த்தேன் எனது உறவினர் கூறினர் பாஸ்கித்தன்..இந்தியன்.  ...இலஙகையார்......அதிகமாக வாழ்வதால். இவங்கள் குப்பைகளை  உடனும்அள்ளுவதில்லையென...இந்த குப்பைகள்...கிருமிகளை  உற்பத்தியாக்கும்.    நோய்கள்  நிறையவரும். அதிகமாக...ஊசியும்...போட வேண்டும். ஜேர்மனியில்..இன்னும்போடவில்லை  

அவசியமெனில் போடுவோம்...ஆனால்.  ஊசி மருந்து யுகே உட்பட  பிறநாடுகளுக்கு விற்றுள்ளார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.