Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

விழிப்புணர்வை கொடுப்பதே எனது நோக்கம். எம்மை வழிநடத்திய தலைமகளில் தவறுகள் இருந்தன என்று கூறுவது எமக்க அவமானம் அல்ல

தான் விட்ட பிழைகளை சுய விமர்சனம்செய்யாமல் தொடர்ந்து செல்பவன்
ஒரு நாளும் தனது இலக்கை அடையமாட்டான்
இது எல்லோருக்கும் பொருந்தும்.
புலிகள் மட்டுமல்ல எல்லா விடுதலை இயக்கங்களும் பாரிய விளைவுகளை ஈழத் தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
  
  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் கௌம்பிடுச்சு!இனி ஒரே ரணகந்தான்!

2 minutes ago, வாத்தியார் said:

தான் விட்ட பிழைகளை சுய விமர்சனம்செய்யாமல் தொடர்ந்து செல்பவன்
ஒரு நாளும் தனது இலக்கை அடையமாட்டான்
இது எல்லோருக்கும் பொருந்தும்.
புலிகள் மட்டுமல்ல எல்லா விடுதலை இயக்கங்களும் பாரிய விளைவுகளை ஈழத் தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
  
நன்றி வாத்தியார், நான் இதையே தெளிவாக பல முறை சொல்லியுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

தான் விட்ட பிழைகளை சுய விமர்சனம்செய்யாமல் தொடர்ந்து செல்பவன்
ஒரு நாளும் தனது இலக்கை அடையமாட்டான்
இது எல்லோருக்கும் பொருந்தும்.
புலிகள் மட்டுமல்ல எல்லா விடுதலை இயக்கங்களும் பாரிய விளைவுகளை ஈழத் தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
  
முதலில் நீங்களும் உங்களை போல் சிந்தனை உள்ளவர்களும் தமிழ் மக்களுக்காக இன்றுவரை செய்ததை சுயவிமர்சனம் செய்து, அடுத்த கட்டத்த தயார்படுத்தி செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

வாத்தியார், தமிழ்மக்களின் அரசியலை தமது உயிர் மேல் சுமந்தவர்கள் புலிகள். அவர்களில் ஒருவராக அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா.

இதை மறந்து விடாதீர்கள்

ஒற்றுமை என்பது சாத்வீகம் என்றாலும் ஆயுதப் போராட்டம் என்றாலும் ஒரு நிலையாக இருக்க வேண்டும்
உங்களுக்கு வேண்டுமானால் சிலரை மக்களின் முன்னிறுத்தி அவர்களை உங்கள் கைகளால் கட்டிப்போடுவதும்..... அதையே பேட்டியாக.... வெளியே கூறுவதும்..... அரசியலாக இருக்கலாம்...... விட்ட பிழைகளைப் பற்றித்தான் இங்கு அலசல் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாத்தியார் said:

ஒற்றுமை என்பது சாத்வீகம் என்றாலும் ஆயுதப் போராட்டம் என்றாலும் ஒரு நிலையாக இருக்க வேண்டும்
உங்களுக்கு வேண்டுமானால் சிலரை மக்களின் முன்னிறுத்தி அவர்களை உங்கள் கைகளால் கட்டிப்போடுவதும்..... அதையே பேட்டியாக.... வெளியே கூறுவதும்..... அரசியலாக இருக்கலாம்...... விட்ட பிழைகளைப் பற்றித்தான் இங்கு அலசல் 

விட்ட பிழைகளை கடந்த 12 வருடங்களாக அலசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.. இது வரை அடைந்த பயன்????

அன்றும் செயற்படவில்லை இன்றும் செயற்படவில்லை.. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

... விட்ட பிழைகளைப் பற்றித்தான் இங்கு அலசல் 

முதலில் தலைப்பை வாசிக்காமல் அலசாதீர்கள்??? 

தலைப்பு : மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

முதலில் நீங்களும் உங்களை போல் சிந்தனை உள்ளவர்களும் தமிழ் மக்களுக்காக இன்றுவரை செய்ததை சுயவிமர்சனம் செய்து, அடுத்த கட்டத்த தயார்படுத்தி செல்லுங்கள்.

மக்கள் என்ன விதமான தேர்வை ஏற்றுக்கொள்கின்றார்களோ... அந்தத் தீர்வு     சரியானதா.. அல்லது அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யலாமா... என ஆலோசித்து..
அந்த ஆலோசனையின் முடிவை.... மக்களிடம் மீண்டும் கொண்டு சென்று.... அவர்களின் முடிவை...
எங்கள் முடிவாக.... ஒரு தீர்வாக.... முன் வைக்க வேண்டும்.

உங்களுக்கு இப்படி ஒரு பதில்க் கருத்து எழுதுவதே எங்கள் மக்களுக்காத் தான்.

6 minutes ago, MEERA said:

விட்ட பிழைகளை கடந்த 12 வருடங்களாக அலசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.. இது வரை அடைந்த பயன்????

அன்றும் செயற்படவில்லை இன்றும் செயற்படவில்லை.. 

முப்பது வருடங்களை விட 12  வருடங்கள் குறைவுதான்
எங்களுக்கும் இன்னும் ஒரு 18  வருடங்கள் தாருங்களேன் 

5 minutes ago, விசுகு said:

முதலில் தலைப்பை வாசிக்காமல் அலசாதீர்கள்??? 

தலைவன் சரியாக இருந்தால் தலைப்பைப் பற்றி யார் சிந்திப்பார்கள்
கருத்துக்கு கருத்து எழுதுவது அரசியல் நாகரீகம்
நெற்றிக்கு நேரே புள்ளி வைப்பதல்ல அரசியல்  அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

நாட்டை விட்டு வெளியேறிய எம்மை சில்லறை என்று விழிந்தாதன் மூலம்  நீங்களே உங்களை சில்லறையென வரையறை செய்து விட்டீர்கள் . இந்தச் சம்பத்தனை தமிழ்மக்கள் பேசுவதில் எந்தத்தப்புமில்லை. எனனெனில் நடக்கமுடியாத...பேசமுடியாத...ஒழுங்காக தன் நாளந்தக்கடமைகளைச் செய்யமுடியாதவர்  ஏன் பாராளுமன்ற உறுப்பினராயிருக்கவேண்டும். ?வேறு ஒரு தமிழ் இளைஞனை இந்தப்பதவியில் அமர்த்தி ஆலோசனை வழங்கி ஒரு தலைவனை வளர்த்து எடுக்கலாம் .செல்வநாயகம் தொடக்கம் இவர் வரை செய்த பிழைகள் ...உயிர் போகும்வரை பாராளுமன்ற உறுப்பினராயிருப்பது. ...பேச்சுவார்த்தை மேசையில்...சிங்களவன் தரமாட்டான்...சிங்களவன் தரமாட்டான்...என்று சொல்லி மிகக்குறைத்தபட்சக்கோரிக்கைகளை முன் வைப்பது  தமிழ்ஈழம் கேட்டால் ...மாநில சுயாட்சி கிடைக்கும்  எப்பவும் கேட்பதை விடக் குறைவாகத்தான் கிடைக்கும் இதை தொண்டமான். சொல்லியுள்ளார்  கூட்டணித் தலைவர்களுக்கு  பேச்சுவார்த்தைக்கலை  தெரியாது..என்று..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

சம்பந்தனுக்கு பின்னர் திருமலையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலையே தற்போது உள்ளது.

கடந்த தேர்தலில் கட்சிக்குள்ளேயே சண்டை. 

***

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

தான் விட்ட பிழைகளை சுய விமர்சனம்செய்யாமல் தொடர்ந்து செல்பவன்
ஒரு நாளும் தனது இலக்கை அடையமாட்டான்
இது எல்லோருக்கும் பொருந்தும்.
புலிகள் மட்டுமல்ல எல்லா விடுதலை இயக்கங்களும் பாரிய விளைவுகளை ஈழத் தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
  
இதில்  கூட்டமைப்பை ஏன் விமர்சிக்க கூடாது??  . இங்கு துல்பன் சம்பந்தரை கரித்து கொட்டுகிறோமாம். அதற்கு உங்கள் பதில் என்ன?

16 minutes ago, Kandiah57 said:

நாட்டை விட்டு வெளியேறிய எம்மை சில்லறை என்று விழிந்தாதன் மூலம்  நீங்களே உங்களை சில்லறையென வரையறை செய்து விட்டீர்கள் . இந்தச் சம்பத்தனை தமிழ்மக்கள் பேசுவதில் எந்தத்தப்புமில்லை. எனனெனில் நடக்கமுடியாத...பேசமுடியாத...ஒழுங்காக தன் நாளந்தக்கடமைகளைச் செய்யமுடியாதவர்  ஏன் பாராளுமன்ற உறுப்பினராயிருக்கவேண்டும். ?வேறு ஒரு தமிழ் இளைஞனை இந்தப்பதவியில் அமர்த்தி ஆலோசனை வழங்கி ஒரு தலைவனை வளர்த்து எடுக்கலாம் .செல்வநாயகம் தொடக்கம் இவர் வரை செய்த பிழைகள் ...உயிர் போகும்வரை பாராளுமன்ற உறுப்பினராயிருப்பது. ...பேச்சுவார்த்தை மேசையில்...சிங்களவன் தரமாட்டான்...சிங்களவன் தரமாட்டான்...என்று சொல்லி மிகக்குறைத்தபட்சக்கோரிக்கைகளை முன் வைப்பது  தமிழ்ஈழம் கேட்டால் ...மாநில சுயாட்சி கிடைக்கும்  எப்பவும் கேட்பதை விடக் குறைவாகத்தான் கிடைக்கும் இதை தொண்டமான். சொல்லியுள்ளார்  கூட்டணித் தலைவர்களுக்கு  பேச்சுவார்த்தைக்கலை  தெரியாது..என்று..

நாட்டின் வாழ்ந்த தமிழ் மக்கள் தொகையில் உலகெங்கும் சிதறிய நாம் எல்லோரும் சில்லறைகள் தானே கந்தையா. இதில் என்ன வெட்கம் உள்ளது.

மற்றப்படி செல்வநாயகம், சம்பந்தர் தொடர்பான உங்களின் அரசியல் விமர்சனத்தில் எனக்கும்  உடன்பாடு உள்ளது. உங்கள் கருத்து சரியானதே. இளையவர்களை உள்வாங்கி இருக்க வேண்டும்.  

ஆனால் பேச்சுவார்ததை கலை திறமை ராஜதந்திரம் என்பது தமிழரை பிரதிநிதித்துவப்படுத்திய எவருக்கும் இதுவரை இருந்ததில்லை. அதன் றிசல்ட பார்தத பிறகும் எமக்கு இன்னும் என்ன சந்தேகம்?  

இரவு வணக்கங்கள் கந்தையா. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

சம்பந்தர் 390 வாக்குக்கள் வாங்குகிறாரோ 39 வாக்குகள் வாங்கவாரோ என்பதல்ல இங்கு விவாதம். சம்பந்தர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சம்பந்தர் ஏதோ பெரிய அரசியல் சாணக்கிய தலைவர் அல்ல. ஏதோ தற்செயலாக  ரிஎன்ஏ  தலைவராக்கப்பட்டார்.  அவரால் தமிழருக்கு  தீர்வு எடுத்து கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. அதுவும்  புலிகளை முற்றாக அழித்து வெற்றி எக்காளத்தின் உச்சத்தில் இருந்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தர் அல்ல வேறு எவர் இருந்தாலும் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது. உள்ளதையும் பறி கொடுக்க தான் முடியும்.  அப்படியிருக்க சம்பந்தர் என்ற நபரை பலிக்கடாவாக்கி  இங்கு தவணை முறையில்  தனிப்பட்ட தாக்குதல்களை மட்டும் நடத்தி மகிழும்  மன நோயைதான் நான் எனது முதல் கருத்தில் சுட்டிக்காட்டினேன்.   

30 வருடமாக மற்றறவர்கள் எல்லோரையும் தடை செய்து போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத போது சம்பந்தர் என்ற சிறு அரசியல்வாதி எம்மாத்திரம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்ட பின்னர் கூட அவர்கள் ஒரு ஏவலாளிக்கள் போல தான் நடத்தப்பட்டனர் எனபதை பின்வரும் விடியோ உரையாடலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் நாங்கள் தான். எங்களுக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது. சமாதானத்தை முன்னெடுப்பது நாங்கள் தான்.  இவயள நடத்துறதுதம் நாங்கள் தான். அது தான் கூறுகிறேன்

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

https://www.ndtv.com/video/shows/talking-heads/talking-heads-anton-balasingham-aired-july-2006-312369

எத்தனை தடைக்கற்களை விடுதலை புலிகள் தாண்ட வேண்டி இருந்தது என்பதை  இக்காணொளி  காட்டுகிறது. இரண்டு பக்கங்களையும் பார்த்து விமர்சிக்க பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

அரசியலில் கருத்து ரீதியாக பதில் சொல்ல முடியாத போது இறந்த மாவீரர்களை துணைக்கு அழைப்பது உங்களைப் போன்றோரின் வழமையான உத்தி.  அரசியல் விவாதத்தில் மாவீரரகளை கேடயமாக பயன் படுத்துவது பாசாங்கு தமிழ் தேசியத்தின் உத்திகளில் ஒன்று. மாவீரர்களை கேடயமாக பயன் படுத்தாது அவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள். அரசியல் தீர்மானங்கள் பற்றிய விவாததமில் அரசியல் கருத்துக்கள் மூலம் அதை எதிர்கொள்வதே சரியானதாக இருக்கும். 

அதேபோலத்தான் அரசியல் ரீதியாகவோ அறிவுபூர்வமாகவோ பதில்கூற அல்லது பதில் தெரியாதபோது முள்ளிவாய்க்காலை இழுத்து புலிவாந்தியெடுக்கும் உங்களின் கருத்துக்களென்பதும் புரியவில்லைபோலும்!

அப்படியொரு தலைவன் மீண்டுமொருமுறை பிறந்து வந்தாலேயொழிய நீங்கள்கூறும் இளையதலைமுறைகள் ஒரு மயிரையும் புடுங்கிறமாதிரி தெரியவில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

நாட்டின் வாழ்ந்த தமிழ் மக்கள் தொகையில் உலகெங்கும் சிதறிய நாம் எல்லோரும் சில்லறைகள் தானே கந்தையா. இதில் என்ன வெட்கம் உள்ளது.

மற்றப்படி செல்வநாயகம், சம்பந்தர் தொடர்பான உங்களின் அரசியல் விமர்சனத்தில் எனக்கும்  உடன்பாடு உள்ளது. உங்கள் கருத்து சரியானதே. இளையவர்களை உள்வாங்கி இருக்க வேண்டும்.  

ஆனால் பேச்சுவார்ததை கலை திறமை ராஜதந்திரம் என்பது தமிழரை பிரதிநிதித்துவப்படுத்திய எவருக்கும் இதுவரை இருந்ததில்லை. அதன் றிசல்ட பார்தத பிறகும் எமக்கு இன்னும் என்ன சந்தேகம்?  

இரவு வணக்கங்கள் கந்தையா. 

சில்லறைக்கு... நான்கு பக்க, விளம்பரம் கொடுத்த...
"துல்ப்பன், என்ற... சில்லறைக்கு" ... நன்றி, ஐயா.... :grin: 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

டுல்பன் நீங்கள் இணைத்த காணொளியை இப்போது தான் பார்க்கின்றேன்
இப்படி ஒரு அரசியல் ஆலோசகரை நாம் தோளில்   தூக்கி வைத்துக்குக் கொண்டாடினோம் என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

காரணம் அவர் தமிழ் மக்களின் அரசியல் ஆலோசகராகச் செயற்படவில்லை. அவர் விடுதலைப் புலிகளின் பேச்சாளராகவே தனது கருத்தைக் கூறியுள்ளார்

நான் இங்கே யாழ்களத்தில் ஒன்று அரை வருடங்களாக பார்த்த போது இவரை ஒரு பெரிய தமிழர்களின் அரசியல் வழிகாட்டியாக எழுதியதை படித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் அரசியல் எதுவித பிரயோசனமும் அற்றது. அவரது அரசியல் சாணக்கியம் இதுவரையில் தமிழருக்கு எதனையும் தரவில்லை. அதனால்த்தான் அப்படி எழுதினேன். 

புலிகளுக்கு 30 வருடம் கொடுத்தீர்கள், எங்களுக்கு 12 வருடம் தானே தந்திருக்கிறீர்கள், இன்னும் 18 வருடம் வேண்டும் என்று கேட்பது தமிழரின் தலையில் இனியும் மாவரைக்கத்தான் என்பது தெளிவு. புலிகளின் 30 வருட காலப் போராட்டத்திற்கு முன்னரே தமிழரசுக் கட்சி அரசியல் ஆரம்பித்து விட்டது. 1949 இலிருந்து அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். புலிகள் காலத்திலும் அவர்கள் தமக்கான அரசியலை நடத்தினார்கள். ஆக, 72 வருடங்களாக அரசியல் நடத்தி, தமிழினத்தை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்டு இப்போதும் அரசியல் பேசுகிறார்கள். இன்றும் அதே வெற்று வார்த்தைகள், வாய்ச்சவடால்கள். 

புலிகளுக்கு இவர்களின் அரசியலை விட்டு வெளியேறி, ஆயுதமுறையில் விடுதலையினை வென்றெடுக்கலாம் என்கிற உறுதி இருந்தது. அதை அவர்கள் குறிப்பிடத் தக்களவு செய்தும் காட்டினார்கள். தமிழ் மக்களின் அரசியலின் பொற்காலம் புலிகளின் காலம்தான். தமிழ் மக்களின் அரசியலின் ஒரே இயங்குசக்தியாக அவர்கள் இருந்தார்கள். அவர்களே எங்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தார்கள். இன்றுவரை புலிகள் போல தமிழ் மக்களின் வாழ்வில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாக்கம் செலுத்தியவர்கள் வேறு எவரும் இலர்.  இதை புலிகளுக்கு எதிராக எழுதுவதே தமது கடமை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாய்வீச்சில் ஈடுபடுபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். ஒருவேளை புலிகளின் அரசியல் வென்று, தமிழர்களுக்கான வாழ்வு மலர்ந்திருந்தால் அன்றும் கூட புலிகளின் அரசியலை இவர்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால், இவர்களைப்பொறுத்தவரை தமிழ் மக்களின் அவலங்கள் என்று பேசுவதுகூட புலிகளை விமர்சிக்கக் கிடைத்த ஒரு காரணியாக மட்டும்தான், ஆனால் உண்மையான தேவை புலிகளை விமர்சிப்பது, அவர்கள் வென்றால் என்ன, தோற்றால் என்ன, இவர்களைப் பொறுத்தவரையில் வேறுபாடு இல்லை. 

இன்றும் சம்பந்தனின் அரசியல் கையாலாகத்தனத்திற்கும், அவரது அரசியலின் படுதோல்விக்குப் பின்னரும் தமிழ் மக்கள் அவரைத் தெரிவு செய்வதற்குக் காரணம் அவரின் கட்சிப் பெயரில் இருக்கும் "தமிழ்த் தேசியம்" எனும் சொல்லும் அக்கட்சியினரை விட்டால் ஏனையவர்கள் எல்லாம் அரசின் பினாமிகள் என்கிற காரணமும் மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால், சம்பந்தனே கூறியதுபோல, "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு" எனும் கட்சியில் ஒரு விளக்குமாறை நிறுத்தினாலும் வெல்லும் என்பதுபோல, சம்பந்தன் என்கிற ............. இன்றுவரை வென்றுவருகிறது.
 
குறிப்பு : நான்காவது பந்தியில் புள்ளிகளால் குறிப்பிடப்படும் சொல் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது. அச்சொல்லால் குறிப்பிடப்படும் கருவி ஊரில் முற்றம் பெருக்கப் பயன்பட்டு வருகிறது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே தமிழர் விரோதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழருக்கு சார்பான சட்டங்கள் அகற்றப்பட்டு இருக்கிறது. இன்று ஒன்றும் இல்லா நிலையிலுள்ளோம். நம்ம தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூவிவிட்டு தேநீர் விருந்தோடு கலைந்து விடுவினம். அவன் நாளொரு சட்டமியற்றி தமிழரை ஓரங்கட்டிவிட்டான். சட்டங்களும், சலுகைகளும் அனைவர்க்கும் சமமாய் இருந்திருந்தால் பிரிவினை எழுந்திருக்குமா? மதவெறி, சுயநலம், வன்முறையால் தமிழரின் அமைதி பறிபோனது. கலவரங்களால் நிர்கதியாக்கப்பட்டோம். யேர்மனிக்கு ஓட வேண்டாம்,  ஏன் இதை சர்வதேசத்துக்கு கொண்டு போக இவர்களால் முடியவில்லை? இளையோர் கையில் பதவி போய்விடும், தாம் செல்வாக்கு செலுத்த முடியாது போய்விடும் என்கிற அச்சமா? ஒன்றுமறியாது இவர்களுக்கு பின்னால் வால் பிடித்து, வேடிக்கை பாத்து திரிந்த இளைஞரை போராட தூண்டியது யார்? அவர்கள் போராடும்போது எதனால் போராட்டம் தோற்றம் பெற்றது? யார் தூண்டியது என்பதை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்தாதது ஏன்? இலங்கையில் நடந்தது, நடப்பது இனவழிப்பு என்று சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்ல தம் உயிரைக் கொடுத்தார்கள். சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்தார்கள். சர்வதேசத்தின் பார்வையை வேறு பக்கம் திருப்ப இரகசியமாக, மறைமுகமாக சந்திப்புகளை நடத்தி இழுத்தடிப்பு செய்ய முயலவில்லையா?  "நாங்கள்தான் தமிழரின் ஏகப்பிரதிநிதிகள், எங்களுக்கு வாக்களித்து பேரம் பேசும் சக்தியை தாருங்கள், இழந்த எம் உரிமையை மீட்டெடுப்போம்." என்று முங்கிவிட்டு, அது முடியாத காரியம் என்று கையை விரிப்பதற்கும், அழுகிற பிள்ளையின் வாயில் மிட்டாயை கொடுத்து வாயை அடைப்பதுபோல் தீபாவளிக்கு தீர்வு, பொங்கலுக்கு தீர்வு என்று பேய்க்காட்டுவதற்கும் இவர்கள் தேவைதானா? சிங்களவன் எத்தனை கொடூரத்தை தமிழருக்கு இளைத்துவிட்டு நீதியை நிலைநாட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். மக்களின் ஆணையை மீறமாட்டேன் என்று துணிந்து சொல்கிறான். நீங்களோ? சிங்கள மக்கள் விரும்பாத தீர்வை நாம் பெற முடியாது என்கிறீர்கள்.  உங்களுக்கு வாக்கு போட்டு தெரிவு செய்தது சிங்கள மக்களா? அவர்கள் சொல்லும் தேர்வு தமிழர் இந்நாட்டின் அடிமைகள். இதை ஆமோதிக்கிறீர்களா? வாக்களித்து தெரிவு செய்துவிட்ட மக்களின் கேள்விகளை, குறைகளை கேட்காது தவிர்ப்பது, அதிகார பதிலளிப்பது இதுதான் அவரின் வயதுக்குரிய செயலா? அவரை விமர்சிப்பதற்கும், திட்டுவதற்கும்நமக்கு முழு உரிமையும் உண்டு. அவர்கள் நம்மால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மக்கள் அகதிகளாக வெளியேறும்போது அந்த மக்களின் தலைவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அந்த மக்களோடு உடன் இருந்தாரா? அவர்களை தேற்றினாரா? அவர்களுக்கு வழி காட்டினாரா? அந்த மக்களுக்கு முன்னே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிங்களவனின் வெற்றிக்கும், எக்காளத்திற்கும்நமது தலைமைகளின் இயலாத்தன்மையும், முட்டுக்கொடுப்புமே காரணம். படித்தவர்கள், வயதானவர்கள் செய்வது எல்லாம் சரியுமல்ல. படிக்காதவர்கள், இளையோர் செய்வது எல்லாம் பிழையுமல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் இங்கே யாழ்களத்தில் ஒன்று அரை வருடங்களாக பார்த்த போது இவரை ஒரு பெரிய தமிழர்களின் அரசியல் வழிகாட்டியாக எழுதியதை படித்திருக்கிறேன்.

மதியுரைஞர் பாலசிங்கம் அண்ணா அந்த வீடியோவில் சரியாகத்தான் பேசியிருக்கின்றார். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை வெல்ல தனது அரசியல் சாணக்கியத்தையும், இராஜதந்திரங்களையும் திறமையாகப் பாவித்தவர். புலிகள் இக்காட்டான நிலைமைக்குச் சென்றபோதெல்லாம் அவற்றிலிருந்து மீட்டவர். அவர் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எப்படியும் தடுத்து நிறுத்தியிருந்திருப்பார்..

கூட்டமைப்பு அப்போதும், இப்போதும் சுயமாகச் சிந்தித்து ஒரு தூரதரிசனத்துடன் செயற்படும் அமைப்பு அல்ல. முன்னர் புலிகளினால் வழிநடத்தப்பட்டார்கள். இப்போது இந்தியாவாலும் மேற்குநாடுகளினாலும் வழிநடத்தப்படுகின்றார்கள். நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் இந்தியாவைத் தவிர்த்து மேற்குநாடுகளை நம்பி ரணிலுக்கு முட்டுக்கொடுத்தார். அது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

சம்பந்தர் மூப்பினால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்பு சரியான தலைமை இல்லாமல் இன்னமும் அதல பாதாளத்தில் விழக்கூடாது என்பதற்காகத்தான் தலைவராக நீடிக்கின்றார்.  அவருக்கு அப்புறம் எப்படியும் சுமந்திரன் கொடியைப் பிடித்துவிடுவார்!

எனவே, சம்பந்தர் இடையிடையே விடும் சவுண்டுகளை கண்டுகொள்வதில் அர்த்தம் இல்லை!

1 hour ago, கிருபன் said:

கிருபன் திரு அன்ரன் பாலசிங்கம் மிக சிறந்த அரசியல் சாணக்கியம் நிறைந்த ராஜதத்திரி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் மட்டும் இல்லை என்றால் புலிகள் இயக்கம் எப்போதோ அழிந்திருக்கும்.  

ஆனால் மிக நீண்ட காலமாக அரசியல் ஆலோசகராக இருக்கும் அவரால் குறைந்தது புலிகள் இயக்கத்துக்குள்ளாவது சிறந்த அரசியல் அறிவுள்ள ராஜதந்திரிகள் எவரையும் உருவாக்காமல் போனது ஏன்? அரசியல் ராஜதந்திர கற்கை நெறி என்பது ஒரு விடுதலை இயக்கத்திற்கு மிக அவசியமானது. அவ்வாறு ஒன்றை உருவாக்கி புலிகள் இயக்கத்துக்குள் பல ராஜதந்திரிகளை உருவாக்க அவருக்கு சிறந்த கால அவகாசம் இருந்தது. அதை செய்திருந்தால் திரு.பாலசிங்கம் இல்லாமலே புலிகள் தாங்களாக தமது ராஜதந்திரத்தை பயன்படுத்தி முள்ளிவாய்கால் பேரழிவை தடுத்து நிறுத்தியிருப்பார்களே? ஒரு தனி மனிதனுன் வாழ்வு என்பது நிரந்தரம் இல்லாதது. ஆகவே ஏற்கனவே நோயாளியான அவரை மட்டுமே சர்வதேச ராஜதந்திரத்துக்காக  நம்பி இருந்தது தவறல்லவா? 

ஜப்பான் பேச்சுவார்தைகளின் போது அவரின் ராஜதந்திர அறிவுரைகள் கூட புறக்கணிக்கப்பட்டு அவருக்கும் இயக்கத்திற்கும் முரண்பாடு அவரது வாழ்வின் இறுதி நாட்களில் ஏற்பட்டிருந்ததாக இங்கு யாழ்கள பதிவுகளிலும் வந்ததே? இவை எல்லாம் எதிர்கால சந்திதி அறியவேண்டிய எமது போராட்ட வரலாற்று குறிப்புக்கள். மறைக்கப்பட வேண்டிய இரகசியங்கள் அல்ல என்பதாலேயே இங்கு இதைக் கூறுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இதில்  கூட்டமைப்பை ஏன் விமர்சிக்க கூடாது??  .  சம்பந்தரை கரித்து கொட்டுகிறோமாம். அதற்கு உங்கள் பதில் என்ன?

கூட்டமைப்பை விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. சம்பந்தர் இன்றைய நிலையில் இப்படி ஒரு பேட்டியைக் கொடுக்கும் அளவில் தேகாரோக்கியமான நிலையில் இல்லை .

அவருக்காக யாரோ தயாரித்த இப்படியான தலைப்புக்கள் நகைப்பிற்கிடமாக உள்ளது.  

ஒருவர் கூட்டமைப்பை விமர்சனம் செய்யும்போது...... இன்னொருவர் சமாந்தரமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் ஒப்பிட்டு .... கருத்தை வைக்கும் பொது....
பலரும் குய்யோ முறையோ என்று கருத்துக்களை வைக்கின்றனர். அது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே தமிழர் விரோதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தமிழர் நாகரீகம் சிந்துவெளி நாகரீகத்திற்கும் முற்பட்டதாக உலக ஆராச்சியாளர் பலரின் கட்டுரைகளும் தெரிவிப்பதாகவே எங்கள் காலத்திலும் செய்திகள் வருகின்றன. தமிழர் சைவசமயத்தைப் பின்பற்றிவந்த காலங்களில் வேறு இனங்களின் விரோதப்போக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எப்போது ஆரியம் உட்புகுந்து தமிழரிடையே இந்துசமயத்தைப் பரப்ப, தமிழரும் அதனைப் பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்றே தமிழர் விரோதப் போக்கு ஆரம்பமானதாகத் தோன்றுகிறது. முக்கியமாக வர்ணாச்சிரம வாழ்க்கை முறைகளே தமிழினத்திற்குள்ளே பிரிவினையைத் தொடக்கி விரோதப்போக்கு வளர்ந்து பிற இனங்களும் தமிழர் விரோதப்போக்கை கொள்ள வைத்திருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கிருபன் திரு அன்ரன் பாலசிங்கம் மிக சிறந்த அரசியல் சாணக்கியம் நிறைந்த ராஜதத்திரி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் மட்டும் இல்லை என்றால் புலிகள் இயக்கம் எப்போதோ அழிந்திருக்கும்.  

ஆனால் மிக நீண்ட காலமாக அரசியல் ஆலோசகராக இருக்கும் அவரால் குறைந்தது புலிகள் இயக்கத்துக்குள்ளாவது சிறந்த அரசியல் அறிவுள்ள ராஜதந்திரிகள் எவரையும் உருவாக்காமல் போனது ஏன்? அரசியல் ராஜதந்திர கற்கை நெறி என்பது ஒரு விடுதலை இயக்கத்திற்கு மிக அவசியமானது. அவ்வாறு ஒன்றை உருவாக்கி புலிகள் இயக்கத்துக்குள் பல ராஜதந்திரிகளை உருவாக்க அவருக்கு சிறந்த கால அவகாசம் இருந்தது. அதை செய்திருந்தால் திரு.பாலசிங்கம் இல்லாமலே புலிகள் தாங்களாக தமது ராஜதந்திரத்தை பயன்படுத்தி முள்ளிவாய்கால் பேரழிவை தடுத்து நிறுத்தியிருப்பார்களே? ஒரு தனி மனிதனுன் வாழ்வு என்பது நிரந்தரம் இல்லாதது. ஆகவே ஏற்கனவே நோயாளியான அவரை மட்டுமே சர்வதேச ராஜதந்திரத்துக்காக  நம்பி இருந்தது தவறல்லவா? 

ஜப்பான் பேச்சுவார்தைகளின் போது அவரின் ராஜதந்திர அறிவுரைகள் கூட புறக்கணிக்கப்பட்டு அவருக்கும் இயக்கத்திற்கும் முரண்பாடு அவரது வாழ்வின் இறுதி நாட்களில் ஏற்பட்டிருந்ததாக இங்கு யாழ்கள பதிவுகளிலும் வந்ததே? இவை எல்லாம் எதிர்கால சந்திதி அறியவேண்டிய எமது போராட்ட வரலாற்று குறிப்புக்கள். மறைக்கப்பட வேண்டிய இரகசியங்கள் அல்ல என்பதாலேயே இங்கு இதைக் கூறுகிறேன்.  

செல்வநாயகத்துடன் செய்யப்பட்ட ஓப்பந்தங்கள் ஏன் அமுல்படுத்தப்படவில்லை ...?1956 இல் அரசியலமைப்பிலிருந்த  சிருபான்மையினருக்கு ஆதரவான சரத்து இப்போதும் அமுலிலுண்டா? சிங்களவரில் ராஐதந்திரிகளுண்டா?  இலங்கையரசிடம் தமிழருக்கென்று உள்ள தீர்வுதான் என்ன? இலங்கையரசிடம் தமிழருக்கு  தீர்வு இல்லாவிடில் எபபடிப்...என்னத்தைப்பேசமுடியும்? வடக்கு...கிழக்கு  மாகணசபைத்தேர்த்தல்கள் ஏன் பல வருடங்காளாக நடத்தப்படவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

கூட்டமைப்பை விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. சம்பந்தர் இன்றைய நிலையில் இப்படி ஒரு பேட்டியைக் கொடுக்கும் அளவில் தேகாரோக்கியமான நிலையில் இல்லை .

அவருக்காக யாரோ தயாரித்த இப்படியான தலைப்புக்கள் நகைப்பிற்கிடமாக உள்ளது.  

ஒருவர் கூட்டமைப்பை விமர்சனம் செய்யும்போது...... இன்னொருவர் சமாந்தரமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் ஒப்பிட்டு .... கருத்தை வைக்கும் பொது....
பலரும் குய்யோ முறையோ என்று கருத்துக்களை வைக்கின்றனர். அது ஏன்?

அந்த பக்கம் அல்லது இந்த பக்கம் என்பதும்  நடுநிலை என்ற ஒன்றில்லை என்பதாக இருக்கலாம்.

குய்யோ முறையோ என்று  கருத்துக்கள் பரிமாறும் போது தான் நியாயமான கருத்து உதிர்க்கும் வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மதியுரைஞர் பாலசிங்கம் அண்ணா அந்த வீடியோவில் சரியாகத்தான் பேசியிருக்கின்றார். தமிழ் மக்கள் அரசியல் உரிமைகளை வெல்ல தனது அரசியல் சாணக்கியத்தையும், இராஜதந்திரங்களையும் திறமையாகப் பாவித்தவர். புலிகள் இக்காட்டான நிலைமைக்குச் சென்றபோதெல்லாம் அவற்றிலிருந்து மீட்டவர். அவர் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எப்படியும் தடுத்து நிறுத்தியிருந்திருப்பார்..

கூட்டமைப்பு அப்போதும், இப்போதும் சுயமாகச் சிந்தித்து ஒரு தூரதரிசனத்துடன் செயற்படும் அமைப்பு அல்ல. முன்னர் புலிகளினால் வழிநடத்தப்பட்டார்கள். இப்போது இந்தியாவாலும் மேற்குநாடுகளினாலும் வழிநடத்தப்படுகின்றார்கள். நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் இந்தியாவைத் தவிர்த்து மேற்குநாடுகளை நம்பி ரணிலுக்கு முட்டுக்கொடுத்தார். அது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

சம்பந்தர் மூப்பினால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்பு சரியான தலைமை இல்லாமல் இன்னமும் அதல பாதாளத்தில் விழக்கூடாது என்பதற்காகத்தான் தலைவராக நீடிக்கின்றார்.  அவருக்கு அப்புறம் எப்படியும் சுமந்திரன் கொடியைப் பிடித்துவிடுவார்!

எனவே, சம்பந்தர் இடையிடையே விடும் சவுண்டுகளை கண்டுகொள்வதில் அர்த்தம் இல்லை!

பாலசிங்கம் அண்ணா தவிர்ந்த புலிகள் ராஜதந்திரம் கொண்டாடுவர்களா இல்லையா என்பதற்கு புலிகள் இல்லாத இந்த 12 வருடங்களே சாட்சி. அவர்கள் அற்று அணுவும் அசையாது எனில்?????

அவர்கள் மீண்டும் மீண்டும் தேடப்படும் நிலை எனில்??

3 hours ago, வாத்தியார் said:

கூட்டமைப்பை விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. சம்பந்தர் இன்றைய நிலையில் இப்படி ஒரு பேட்டியைக் கொடுக்கும் அளவில் தேகாரோக்கியமான நிலையில் இல்லை .

அவருக்காக யாரோ தயாரித்த இப்படியான தலைப்புக்கள் நகைப்பிற்கிடமாக உள்ளது.  

ஒருவர் கூட்டமைப்பை விமர்சனம் செய்யும்போது...... இன்னொருவர் சமாந்தரமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும் கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் ஒப்பிட்டு .... கருத்தை வைக்கும் பொது....
பலரும் குய்யோ முறையோ என்று கருத்துக்களை வைக்கின்றனர். அது ஏன்?

செத்த பிணத்தை விட்டு விடுங்கள் என்பது ஆகக்குறைந்த மனிதாபிமானம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.