Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

சொன்ன சொல் மாறப்படாது. 🤭

  • Replies 101
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் வெக்கம், மானம், சூடு, சுரணை இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள்...

மேற்குறிப்பிட்டவற்றில் கடுகளவேனும் இல்லாதவர்கள் கடைந்தெடுத்த தத்தியாக இருப்பினும் அரியணையில் அமர்ந்து துக்ளக் ஆட்சி நடத்துவார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா?

Velmurugan PPublished:June 12 2021, 10:36 [IST]

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்பட 10 பேர் எதற்காக விமர்சனம் செய்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

மன்னிப்பு கேட்டார்

வீடியோ வெளியீடு

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேச மாட்டேன் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி வினோத் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். பின்னர் அதனை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது

வினோத் கொடுத்த புகார்

இதன்பின்னர் தன்னை மிரட்டியதாக வினோத், திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதந்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்,.

ஐந்து பிரிவுகள்

என்னென்ன வழக்கு

இதனிடையே சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153A,504,505(1)(b)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், வழக்கறிஞர் ராஜசேகர் கூறுகையில், இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.

கருணாநிதி

குஷ்பு

அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.

வீடியோக்களை அழிக்கணும்

புகாரினால் பாய்ந்த வழக்கு

அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/new-cases-against-saattai-duraimurugan-for-defaming-karunanidhi-and-khushboo-423738.html

Edited by goshan_che
செய்தியை வெட்டி ஒட்டும் போது, முழுவதும் ஒட்டவில்லை.

48 minutes ago, shanthy said:

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? 

சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும்.

எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?

சீமானின் தம்பிகள்

சீமானின் தம்பிகள்

'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலியாகச் சித்திரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். அதன் காரணமாக அவரை மிரட்டிய குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை திருச்சி போலீஸார் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தம்பிகளைக் கைதுசெய்திருப்பதாக' சீமான் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் - பிரபாகரன்
 
சீமான் - பிரபாகரன்

கடந்த சில தினங்களாக, சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்கிறார்கள். இதைப் பார்த்து அதற்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன், பிரபாகரனைத் தவறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,

 

இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் முற்றியநிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சமர் கார் ஸ்பா நிறுவனம்
 
சமர் கார் ஸ்பா நிறுவனம்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தது. அவர்கள்மீது பிரிவு 147 – கலகம் செய்தல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

 

யார் இந்த 'சாட்டை' துரைமுருகன்?

நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தவர். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். `சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சமூக வலைதளங்களில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாகச் சித்திரித்து பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக, சாட்டை துரைமுருகனும் ஒருவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

இந்தநிலையில், இவரது செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். 'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினைக் கேலியாகச் சித்திரித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை
 
போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை

இந்தநிலையில்தான் பிரபாகரன், சீமானை விமர்சனம் செய்ததாக வினோத் என்பவரை மிரட்டியதாக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிரட்டியதற்காக நடந்த வழக்கு பதிவா... இல்லை தி.மு.க-வினரைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதால், தி.மு.க தலைமை கொடுத்த அழுத்தமா என்று கொந்தளிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்

 

 

https://www.vikatan.com/news/politics/youtuber-saatai-durai-murugan-arrested-by-police-in-trichy-for-threatering-car-spa-centre-owner

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார்.

இதில் திமுகவுக்கு விழுந்த மாங்காய்கள்

1. நாம் தமிழர்/தமிழ் தேசியம் வன்முறை, சகிப்புதன்மை அற்ற வழி என்ற பிம்பம்.

2. தலைவரை பற்றிய அந்த அவதூறு இந்திய லெலெவலில் டுவிட்டரில் டிரெண்டாகியது.

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

4. 7 பேர் விடுதலையில் நாடகம் ஆடி விட்டு அதை இவர்கள் தலையில் தூக்கி போடலாம்(பொய்யாக).

5. ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என்ற வேற்றுமையை மேலும் இதை கொண்டு ஒரு படி முன்நகர்த்தலாம்.

திருட்டு திமுக என்பது சரியாகத்தான் இருக்கு. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ?  

பலமுறை எதிர்த்து எழுதி பேசியதால் அவையள் கனபேருக்கு என்னை கண்டால் வேப்பிலை கசப்பு. இனவெறி பிடித்தவள் எனும் பட்டமும் தந்து கனகாலம். 

11 minutes ago, goshan_che said:

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார். 

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். 

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

 

முதலில் மாட்டுக்குள்  கழுதையை கொண்டு வந்து விடுவதை நிறுத்துங்கள்

(அங்கே பகிடிக்கு  பேசப்பட்டதை  கள  உறவுகள் அறிவர்)

இந்த  திரி சம்பந்தமாக கருத்து எழுதுவதற்கு முன்னர் (கருத்து சுதந்திரத்தை  மதிப்பவர் என்ற முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ன  சொல்கிறாரகள் என்றும் அறிய) 

மேலே உள்ள  காணொளியை தயவு  கூர்ந்து கேளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

இதே கருத்துதான் எனதும். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

உண்மையில் திமுக ஆட்சியில்  உள்ள கட்சி

நாம் தமிழர் வளர்ந்து  வரும் நிலையில்  உள்ள  கட்சி

அதிலும்  திமுகவை  எதிர்ப்பதே முதல் கடமை  என  அறிவித்து  செயற்படும் கட்சி

எப்பொழுதுமே மக்கள் ஆ;ட்சி அதிகாரத்திலுள்ளவர்களை கேள்வி  கேட்கவும்

அவர்களை அடுத்த தடவை  பதவி இறக்கவுமே விரும்புவர்

அது  தான் வரலாறும்  கூட.

அதே நேரத்தில் சீமான் திமுக  தலைவரை  சந்தித்தது  மட்டுமல்லாது

திமுக ஆட்சியை புகழ்ந்தும் உள்ள  நிலையில்..........

இந்த  நடவடிக்கை திமுகவை இறங்கவும்  நாம்  தமிழரை  ஏறவுமே  செய்யும்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

10 பக்கம் தாண்டாது சொல்றேன் நம்புங்கோ விருது.  @goshan_che போட்டியில் அதிகமாக கலந்து கொள்வதில்லை என அறிவித்திருக்கிறார்.😇

அடுத்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.🙆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, shanthy said:

 

சாந்தியக்கா! அங்கை ஊரிலை தென்னிலங்கை கோரோனா வருத்தக்காரரை யாழ்ப்பாண பக்கம் கொண்டு போயினமாம் ஏனெண்டு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டமல்லவா.

சீமானின் நெகிழ்ச்சிக்கு.. கிடைத்த பரிசு. திருந்தாத முன்னேற்றக்கழகத்திடம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது. அது போலித் திராவிடம் பேசிக்கிட்டு.. தமிழர் விரோத குடும்ப ஆட்சியை தமிழகத்தில் முன்னெடுக்க.. காங்கிரஸ் போன்ற இனப்படுகொலை நேரடிப்பங்காளிகளால் ஊட்டி வளர்க்கப்படும் ஒரு கொடிய சக்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

திருந்த வாய்ப்பில்லை ராஜா. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

பெருமாள் நீங்கள சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறியள்.ஆனால் உங்கள் நியாயமான நிலைப்பாடு புறக்குடத்தில் ஊற்றிய இன்னுமொரு வாழித் தண்ணீர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சாட்டை குறூப்பை விமர்சிப்பது நியாயமற்ற செயல்!

முதலில்: பல காலமாகத் தெரிந்த ஒரு தி.மு.க காரர் பொறி வைக்கிறார் என்று சாட்டைக்கு எப்படிப் புரியும்? 

இரண்டாவது: "புரிதல்" ஏற்படுத்திய பிறகு ஒருவர் திருத்திய கருத்தை வெளியிட்டு விட்டு, சாட்டை குழு வெளியேறிய பிறகு மீளப் போய் மாற்றுவார் என்று அவர்களுக்கு எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவந்தம் செய்தனர் என்று முறையிடுவார் என்று எப்படி எதிர்பார்ப்பது? வழமையாக இது சாட்டை பார்த்திருக்கக் கூடிய சினிமாக்களில் நடப்பதேயில்லையே? 

எனவே, சாட்டை குழு மீது விமர்சனமேதுமில்லை எனக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

ஜேர்மனி என்றதும் சிங்கம் குதிச்சு என்றி ஆகுது  ஏன் சிங்கள் சாந்தி அக்கா குறிப்பிட்ட சஞ்சிகைகள் , எழுத்தாளர்கள் புலிகளுக்கும் , தலைவர்களுக்கும் இப்பவரைக்கும் அங்கிருந்து எழுதுகிறார்கள் இதற்கு நீங்கள் ஏதேனும் இடத்தில் எதிப்புக்கு கையை தூக்கி இருக்றீர்களா??

இப்படி பல நாடுகளிலும் இருந்தும் எழுதி இலங்கைக்கே பார்சல் பண்ணுகிறார்கள் அதை முகநூலில் பலர் காவிக்கொண்டே திரிகிறார்கள்  இதெல்லம் படித்து கடக்கிறார்கள் பதில் ஏதும் சொல்லாமல் .

எனக்கென்னமோ கொல்லன் பழுத்த இரும்பை கண்டால் எதையோ  ஆட்டி ஆட்டி அடிப்பது போல த்தான்  இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு தாயக மக்கள் மீதிருக்கிற அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

ஆனால் திரியை அடிச்சு நூத்தால் கொஞ்சம் damage control செய்யலாம் என்ற நோக்கத்திற்காக தாயக மக்களின் துன்பத்தை பயன்படுத்துறார்களாக இருந்தால் அது மிகவும் அருவருக்கத் தக்கது!

பல திசை திருப்பும் அணுகுமுறைகளில் ஒன்று: "இங்கையென்ன வாதாட்டம், அங்க பாருங்கோ முக்கியமான விசயம் நடக்குது? " 

(மாநில தமிழ்ச்சங்கம் ஊடாக தாயக மக்களுக்கு முதல் பகுதி உதவியை அனுப்பி விட்டு, தற்போது இரண்டாம் கட்டம் அனுப்ப தயார்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன் - எனவே என்னைத் திட்டாதீர்கள்!)  

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

அண்ணெய்  உங்கள் அக்கறை நல்ல விடயம்தான் கடந்த ஐந்து நாட்களா விடிகாலை நித்திரையில் ஊரில் இருந்து போன்கள்  வந்த வண்ணம் உள்ளது பயணத்தடை  என்று அன்றாடம் தொழில் புரிவோர் நிறைய பாதிக்கப்படுகினம். முன்பு உதவிகள் பெற்று இருப்பினும் அங்குள்ள விலைவாசிகளுக்கு சமாளிக்க முடியாது முடிந்தமட்டும் செய்வம் இங்கு குழுவாக செய்ய வெளிக்கிட  ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்லி கடைசியில் அதுகளை பசியில் சாகடித்து விடுவம்.

பார்வையிழந்தவர்களின் உதவி கேரல் கடிதம் இங்கு இணைத்தது  என் பிழை தயவு செய்து நிர்வாகம் அதை அகற்றி விடவும் பாருங்க எவ்வளவு எகத்தாளமான  கருத்து வருது   இனிமேல் யாழில் எந்த  உதவி கோரல் கடிதங்கள் இனைக்கபோவதில்லை பங்கு பெறப்போவதும் இல்லை நான் கொடுப்பதை யாரும் நக்கலடிக்க போவதில்லை தானே நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, shanthy said:

 

 சாந்தி அக்கா! கண்டவன் கிண்டவன் கதைக்கிறதை எல்லாம் சாட்சி வீடியோவாய் போட வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் நாறும்.பதிலுக்கு என்னிடமும் காணொளிகள் பல கைவசம் இருக்கு. வேண்டாம் உந்த விளையாட்டு. யாருக்குமே அழகில்லை. எல்லோரும் யாழ்கள நலன் கருதி/தமிழின நலன் கருதி அடக்கி வாசிப்போம். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.