Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! இந்த உலக மக்கள் தொகையில் எத்தனை வீதமானவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் என யாரிடமாவது  கேட்டு சொல்ல முடியுமா?

நான் அறிந்த வரை மிக மிக குறைவு.

  • Replies 58
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 
சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு திறந்து விட்டது. வெசாக்கிற்கு திறந்து விட்டது. இப்ப கண்டி பெரகராவுக்கு திறந்து விடுறது.. எப்படி ஆபத்தோ அதே ஆபத்து கோவில்களை.. கூட்டங்களை கூட்டும் போதும் உண்டு.

இவ்வளவு கொரோனா நெருக்கடிக்குள் பாராளுமன்றத் தேர்தல்.. தமிழர் இன அழிப்பு போர் வெறறி விழா உட்பட எத்தனை அரசியல் கூத்துக்களை அரங்கேற்றி இருக்கினம்,

எத்தனை புதிய புத்த கோவிகளை கட்ட கூட்டம் கூடி அடிக்கல் நாட்டப்பட்டிருக்குது.

தமிழ் பகுதிகளில் ஒன்றென்றவுடன் மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகத்தை பிரயோகிக்க துடிப்பவர்கள் ஏன் தென்பகுதியில் முடியுதில்லை.

வடக்கிற்கு தெற்கில் இருந்து ரயில் விட்டும்.. கொரோனா நோயாளிகளை இராணுவ பஸ்களில்.. காவி வந்தும்..  வைரஸை நாடெங்கும் பரப்பியது யார்.. கோத்தா அரசும்.. அதன் முட்டாள் இராணுவமும். 

அப்படி இருக்க தமிழ் மக்கள் மீது மட்டும் கொரோனா அதிகாரத் துஷ்பிரயோகம் ஏன்..??!

கோவில்களில் கூடும் மக்களுக்கு ஒரு பொது கொரோனா விதி அமைக்கப்பட்டிருக்கலாம். விசேட தினங்களில் அர்ச்சகர் மட்டும் இருக்க.. மக்கள்.. தொலைத்தொடர்புகள் வழி வழிபாடு செய்ய வழி செய்திருக்கலாம்.

அப்படித்தானே மேற்கு நாடுகளில்.. மக்கள் மீது துஷ்பிரயோகத்தை பிரயோகிக்காது.. அரசுகள் நடந்து கொள்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழ் மக்கள் மீதான சிங்கள அதிகார துஷ்பிரயோகத்தை வரவேற்கும் பலரும்.. வெளிநாடுகளில்.. அந்தந்த அரசுகள் வழங்கி இருக்கும்.. கொரோனா பாதுகாப்பையும் நெகிழ்வையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பவர்களாகவே உள்ளனர். அதனை ஏன் தாயக மக்கள் அனுபவிப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.. ??!

சிங்களவனின் அபிரிவிருத்தி அரியாரத்திற்கு சாமரம் வீசுபவர்கள்.. தாம் வெளிநாடுகளில் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் நெகிழ்வையும் சுகாதாரப் பாதுகாப்பையும் தாயக மக்களுக்கு அந்த நாட்டு அரசும் வைத்தியத்துறையும் வழங்க ஏன் வற்புறுத்தினம் இல்லை..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விசுகு said:

நான் அறிந்த வரை மிக மிக குறைவு.

நன்றி விசுகர்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

அட இந்த ஆதாரத்தை எங்கு படித்தீர்கள் ?

அல்லது சும்மா அடித்து விடுவதாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொரனா பரவாமல் இருக்க கோவிலைப் பூட்டுங்களென்றால் "கடவுள் இருக்கிறாரா இல்லையா ?" என்ற ஐந்தாம் வகுப்பு லெவல் விவாதத்தில் வந்து நிற்கிறது திரி!

"கர்த்தருக்கு முன்னால் கொரனா தூசு" என்று பெரும் எடுப்பில் தடுப்பூசியும் எடுக்காமல் கூட்டம் போட்ட  தீவிர கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் சரமாரியாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள் - கர்த்தர் மௌனமாகத் தான் இருக்கிறார்!

சிவனும் முருகனும் கூட மௌனமாகத் தான் இருப்பர்! ஏன்?

"இவங்களுக்கு ஒன்றரைக் கிலோ மூளையைப் படைக்க மெனக்கெட்ட நேரம், எருமை மாட்டுக்கு ஏரோப்பிளேன் ஓட்டப் பழக்கியிருக்கலாம்!"  என்று சலித்துப் போயிருக்கின்றனர் எல்லாக் கடவுளரும்!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க, இன்று (09) இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார். 

ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்றையதினம் சுகாதார சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருந்தபோதும், இந்த ஆலய உற்சவத்துக்கு கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இச் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ். குமார், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

Tamilmirror Online || தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

வட்சப்ல கெத்தா படம் அனுப்பின கோஸ்டியல் எல்லாம் போனை ஓப் பண்ணிட்டு எஸ் ஆகிவிட்டர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாட்டுடன் சேர்த்து வீடியோவில் எழுதி இருக்கும் வரிகளும் சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கு…

இப்பொழுது எல்லாம் அடிக்கடி இரவில் எழும்பி இருந்து நினைக்கிறேன் நான் என் மரணத்துடன் அழிந்துவிடுவேன் பிள்ளைகள் அம்மா அப்பா யாரையும் இனி வாழ்வில் இன்னொரு தடவை பார்க்கமுடியாதே என்பதை நினைக்கும்போது வெறுமையாக இருக்கு மனசு முழுதும்..

எப்பொழுது கலெக்ஸிகள் நட்சத்திரங்கள் உருவாகி அழிவது பிக்பாங் பூமி தோன்றிய விதம் அணுவின் உள்ளிருக்கும் அப் டவுன் குவாக் போசோன்கள் பீல்ட் கூர்ப்பு etc..எல்லாம் எப்ப தெர்யதொடங்கியதோ கடவுள் இல்லை உயிர் என்பதும் இல்லை மறுபிறப்பும் இல்லை ஏதாவது ஒன்றை கொண்டு நினைவுகளை அழித்துவிட்டால் அந்த உடல் ஓணாண்டியே இல்லை இது எல்லாம் எப்ப புரியத்தொடங்கியதோ அண்டைக்கு புடிச்ச சனி..

இப்ப எல்லாம் நெத்தியில பட்டை அடிச்சுகொண்டு இல்லை பைபிளை தூக்கிகொண்டு மறுபிறப்பையும் உயிர் இருக்கு என்பதையும் நம்பிக்கொண்டு கோயிலுக்கோ சர்ச்சுக்கு நிம்மதியாக  போறவ்ங்களை பார்க்க பொறாமையாக இருக்கு..

ஒண்டுமே தெரியாம ஆடுமாடுகளை போல வாழ்வது எவ்வளவு நிம்மதி.. எதுக்குதான் பாழாய்ப்போன மனித மூளை உண்மைகளை உய்த்தும் பகுத்தும் அறியக்கூடியதாக வளர்ச்சி அடைஞ்சுதோ..😢😢

எம்மாம் பெரிய விசயத்தை ஜஸ்ட் லைக்தட் சொல்லிடீங்க புலவரே.

நீங்கள் சொன்னதுதான் உண்மை. 

பொறந்தது தனியா, இறப்பதும் தனியா…

காலம் முடிந்த மோட்டார் காரை, தூக்கி கயாலாங்கடையில் போட்டு விடுவோம். அதற்கு ஆன்மா இருக்கிறதா, மறு பிறவி உண்டா? தீர்ப்பு நாளில் இமாம் மெகெதி, அல்லது யேசு வந்து அந்த காரை எழுப்புவார் என நாம் நம்புவதில்லை.

அதே போல்தான் மரம், செடி, புல், பூண்டு, பல்மிருகம், பறவை, பாம்பு மனிதன் எல்லாமே. 

மோட்டார்காரை மனிதன் உருவாக்குகிறான். உயிரிகள் இயற்கையாய் உருவாகிறன. அவ்வளவுதான்.

நாம் ஒரு உயிரி. Random ஆக தோன்றி, random ஆக மறைகிறோம்.

இடையில் எல்லாம் சும்மா….

சில விசயங்களை நாம் வார்த்தைகள் மூலமே தெளிவாக விளக்குகிறோம்.

இறை நம்பிக்கை. எந்த மொழியிலும் இறை  உண்மை என யாரும் சொல்வதில்லை.

நீங்கள் சொன்னது போல் இது ஒரு coping mechanism தான்.

வாழ்க்கை ஒரு பிணி. ஏற்றமும் இறக்கமும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் ராட்டினம்.

 எம்மை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது, அந்த சக்தி நியாமானது. அது எம்மை காக்கும் என்ற நம்பிக்கை பலரை பைத்தியம் ஆக்காமல் காப்பாற்றுகிறது.

ஆகவே கூர்ப்பு கொள்கையின் அடிப்படையில் தன்னை தற்காத்து கொள்ள மனித இனம் கண்டு பிடித்த (defense mechanism, survival strategy) சாதனம்தான் இறை, சிறப்பு படைப்பு கொள்கை, மதம்.

அதனால்தான் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டால், பலருக்கு கடும் சினம் வருகிறது. இந்த கோவம், தாய்மை உணர்வு போல ஒரு உயிரியல் எதிர்வினை.

Ignorance is bliss. (உண்மையை) அறியாமல் இருப்பது பெரும் இன்பம் என்பார்கள். 

ஆனால் உண்மையை அறிந்தாலும் கலங்க தேவையில்லை.

யாரை நம்பி யாரும் இல்லை. இந்த வாழ்வை தவிர வேறு ஏதும் இல்லை என்ற உண்மையை தரிசித்த பின், இல்லாத பந்த பாசத்தை நினைத்து என்ன கவலை?

Live in the now. இந்த வாழ்க்கை ஒரு பயணம். ஒரு ஸ்டேசனில் ஏறும் போது தொடங்கும். நமக்குரிய ஸ்டேசன் வந்ததும் முடியும். 

இது ஒரு இலக்கில்லா பயணமும் கூட.

இந்த பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் முடிந்தளவு சந்தோசமா அனுபவிப்பது மட்டுமே நாம் செய்ய கூடியது.

பிகு

இது எனது வாழ்கை பற்றிய பார்வை மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

🙏அற்புதம் தலைவா… இதுதான் நிஜம்.. நாளையையும் நேற்றையையும் யோசித்தால் பைத்தியம் புடித்துவிடும்.. இந்த நிமிடத்தை வாழ்ந்துவிடவேண்டும்.. அவ்வளவுதான் நான் தேடியதில் கண்டடைந்தது.. எந்த அர்த்தமும் இல்லாத புல்லு முளைப்பதும் படுவதும்போல யாரும் படைக்காமலும் எடுக்காமலும் ரண்டமாக நடக்கும் நம் பிறப்பு இறப்பின் உண்மைகளை தெரிந்துகொண்டதால்தான் புத்தருக்கும் இந்த வெறுமை வந்து வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டிருப்பார்.. இப்போ புத்தர் உடம்பும் கார்பனும் நைதரசனும் மூலக்கூறுகளுகமா உக்கி இருக்கும்.. அவரை சுத்தி இருந்தவர்கள் தாம் உணர்ந்த அதே வெறுமையை போக்க அவரை கடவுள் ஆக்கிவிட்டனர்.. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த வாழ் படம் பாக்கபோகிறேன்.. அதுவும் இந்த நொடியை வாழ்தலை பற்றியதாம்…

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன இரண்டு பேரும் சுடலைத் தத்துவம் பேசிக்  கொண்டிருக்கிறீங்கள்? இப்ப தானே செவ்வாய்க் கிழமை? hump day கூட வரவில்லையே இன்னும்?😂

தட்டித் தவறி வட்டுக்குள் வயது போகும் வரை வாழ நேர்ந்து விட்டால் பென்சனுக்கும் சேர்த்து வைக்கத் தானே வேணும்? அதற்காக எதிர்காலம் பற்றியும் யோசிக்க வேண்டித் தான் இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடலைத் தடுப்பது நல்லவிடயமே. சிங்கள அரசு அதனை எந்த நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும், நண்மை நமக்குத்தான். 

அதேவேளை, தென்பகுதியில் மத வழிபாட்டுத் தலங்களோ அல்லது மக்கள் பெருந்தொகையாக ஒன்றுகூடுவதோ எமக்குப் பிரச்சினையில்லை. அவர்கள் ஒன்றுகூடுவதும், நோய்த்தொற்று அடைவதும் அவர்களின் பிரச்சினை. இதற்குள் அங்கே திறக்கிறீர்கள், இங்கே பூட்டுகிறீர்கள் என்று நாம் குறைப்படத் தேவையில்லை. எம்மக்களுக்கான தொற்று குறைந்து, மக்கள் காப்பாற்றப்பட்டால் போதும் எமக்கு.

சிங்களத் தொற்றுக்கு அவர்களின் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். எமக்கு இரண்டாம் தர குடிமக்கள் சலுகைகள்தான் என்கிறபடியினால், நாம் அவதானமாக இருப்பதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 12:32, கற்பகதரு said:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

8 hours ago, பெருமாள் said:

அட இந்த ஆதாரத்தை எங்கு படித்தீர்கள் ?

அல்லது சும்மா அடித்து விடுவதாக்கும் .

மற்றவர்களையும் உங்களைப் போன்றவர்கள் என்று நினைப்பது மனித இயல்பு, ஆனால் எப்போதும் அது உண்மையல்ல. நீங்கள் கேட்ட ஆதாரம் இங்கே:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விசுகர்! இந்த உலக மக்கள் தொகையில் எத்தனை வீதமானவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் என யாரிடமாவது  கேட்டு சொல்ல முடியுமா?

8 hours ago, விசுகு said:

நான் அறிந்த வரை மிக மிக குறைவு.

புள்ளிவிபரங்கள் அப்படி காட்டவில்லையே? இதோ பாருங்கள்:

https://ta.m.wikipedia.org/wiki/சமயங்களின்_குடித்தொகைப்_பட்டியல்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

என்ன இரண்டு பேரும் சுடலைத் தத்துவம் பேசிக்  கொண்டிருக்கிறீங்கள்?

😂

அது அண்ணா இவர்களை இலங்கை தமிழ் நபர் ஒருவர் வழி மறித்து என்னிடம் வந்து திருமுழுக்கு எடுங்கள் இறந்த பின் நீங்கள்  சொர்க்கத்திற்கு போகலாம் என்று நிறைய சொல்லியிருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

தமிழர் பகுதிகளில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடலைத் தடுப்பது நல்லவிடயமே. சிங்கள அரசு அதனை எந்த நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும், நண்மை நமக்குத்தான். 

அதேவேளை, தென்பகுதியில் மத வழிபாட்டுத் தலங்களோ அல்லது மக்கள் பெருந்தொகையாக ஒன்றுகூடுவதோ எமக்குப் பிரச்சினையில்லை. அவர்கள் ஒன்றுகூடுவதும், நோய்த்தொற்று அடைவதும் அவர்களின் பிரச்சினை. இதற்குள் அங்கே திறக்கிறீர்கள், இங்கே பூட்டுகிறீர்கள் என்று நாம் குறைப்படத் தேவையில்லை. எம்மக்களுக்கான தொற்று குறைந்து, மக்கள் காப்பாற்றப்பட்டால் போதும் எமக்கு.

சிங்களத் தொற்றுக்கு அவர்களின் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். எமக்கு இரண்டாம் தர குடிமக்கள் சலுகைகள்தான் என்கிறபடியினால், நாம் அவதானமாக இருப்பதே சிறந்தது.

அண்ணா, இதிலை என்ன பிரச்சினை எண்டால் தென்பகுதியில் தொற்று வந்தவுடனை தனிமைப்படுத்தல் என்று தமிழர் பகுதிக்கு தானே கொண்டு வருகினம்,அது மட்டுமல்லாமல் அங்கிருந்து தப்பி போய் அருகில் உள்ள மக்களுக்கு பரப்புகினம். இழுத்துப் பூட்டுறதெண்டால் எல்லாத்தையும் தான் பூட்ட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 23:59, குமாரசாமி said:

சைவ கோவில்களை அரச உடமையாக்கினால் சாதி வேறுபாடுகள் ஒழியுமா சார்?   

நான் சாதி என்று எங்கயாவது குறிப்பிட்டு இருக்கிறனா ?? சாமியார் குடி கோவில்களில் நீ தலைவராவதா  (குடும்பம்) அல்லது மற்ற குடும்பத்தில் தலைவராவதா எனற போட்டியில் அது நீதி மன்றத்துக்கு சென்று தீர்ப்பில் அரசு கையகப்படுத்தும் பின் அரசே திருவிழாக்களை நடத்தும்  செலவு அனைத்துக்கும் உரிய பற்று சீட்டுகள் காட்டவேண்டும் , நேர்த்தி பொருள் எல்லாம் அரசே ஏலம் கூறி கோவில் கணக்கில் வைத்துக்கொள்ளும் நிர்வாகம் பெயருக்கு மட்டும் இயங்கும் 

சாதிகளுக்கு கோவில் இருந்தது ஆனால் அவை இடித்து அழிக்கப்பட்டது புலிகளால் தற்போது சாதிக்கோவில்கள் இல்லை ஆனால் இன்னும் பல வருடங்களில் அவை மீண்டும் முளைக்கலாம் ,முளைக்காமலும் போகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

தட்டித் தவறி வட்டுக்குள் வயது போகும் வரை வாழ நேர்ந்து விட்டால் பென்சனுக்கும் சேர்த்து வைக்கத் தானே வேணும்? அதற்காக எதிர்காலம் பற்றியும் யோசிக்க வேண்டித் தான் இருக்கிறது!

நிச்சயமாக அண்ணா. இலக்கற்ற பயணம்தான், பயணத்துக்கு முன்னும் பின்னும் எதுவும் இல்லைத்தான். ஆனால் பயணிக்கும் காலத்தில் ஒரு யன்னலோர சீட்டில் பயணிக்க ஆசைபடுவதும், பயண முடிவில்  உறங்கலிருக்கையில் இருக்க இப்போதே தயார் பண்ணுவதும், நாம் இறங்கிய பின்னும் பயணிக்கும் கூட வந்தோர் சுகமாம பயணிக்க வழிவகை செய்வதும் கூட, live in the nowவிக்கிக் அடங்கும் என்பதே நான் நினைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

5 hours ago, கற்பகதரு said:

மற்றவர்களையும் உங்களைப் போன்றவர்கள் என்று நினைப்பது மனித இயல்பு, ஆனால் எப்போதும் அது உண்மையல்ல. நீங்கள் கேட்ட ஆதாரம் இங்கே:

நான் கேட்ட கேள்விக்கு விடை இதுவல்லவோ ?  நீங்க சொன்னதுக்கும்  ஆதாரம் என்று இணைத்த YT க்கும் சம்பந்தம் எங்குள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎08‎-‎2021 at 09:41, விசுகு said:

கேள்வி அதுவல்ல என்று  நினைக்கின்றேன்

ஒரு  நாடு

இரு  சட்டம்???

இங்கே  பூட்ட முடிகிறது??

அங்கே  பூட்ட முடிவதில்லை???

ஏன்????

கோத்தா ஜனாதிபதி அவர் பொதுவாய் கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் என்று ஒரு உத்தரவு போடுவார்...அதை செயற்படுத்துவது அதிகாரிகள் . அரச அதிபர் ,வைத்திய பணிப்பாளர் ,சுகாதார உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள் போன்றோருக்கு கடமை இருக்கு ....வட ,கிழக்கில் இருப்பவர்கள் தங்கட கடமையை ஒழுங்காய் செய்கிறார்கள் ...சிங்கள பகுதியில் திறந்து இருக்கு ,எங்கட பகுதியிலும் திறக்கட்டும் ...போய் சாகட்டும் ,நோய் பரவட்டும் அல்லது உங்களை மாதிரி வெளி நாட்டில் இருந்து எதற்கெடுத்தாலும்  சாவதற்கும்  கூட சிங்களவர்களை போட்டியாக நினைக்கவில்லை ...தங்கட மக்கள் சாக கூடாது ,நோய் பரவ கூடாது ...உயிரோடு இருந்தால் நாளைக்கும் கோயில் திறக்கலாம் ,திருவிழா செய்யலாம் என்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் ...உங்கட குப்பைகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம் 

இந்த கோயில் திருவிழா தொடங்கி கவனமாய்த் தான் நடத்தினார்கள்...தீர்த்தமன்று ஆடி அமாவாசை ,பிதிர் கடன் கழித்தல் அவர்களை தொட்டால் பிரச்சனை என்று தான் அதிகாரிகள் விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு திறந்து விட்டது. வெசாக்கிற்கு திறந்து விட்டது. இப்ப கண்டி பெரகராவுக்கு திறந்து விடுறது.. எப்படி ஆபத்தோ அதே ஆபத்து கோவில்களை.. கூட்டங்களை கூட்டும் போதும் உண்டு.

இவ்வளவு கொரோனா நெருக்கடிக்குள் பாராளுமன்றத் தேர்தல்.. தமிழர் இன அழிப்பு போர் வெறறி விழா உட்பட எத்தனை அரசியல் கூத்துக்களை அரங்கேற்றி இருக்கினம்,

எத்தனை புதிய புத்த கோவிகளை கட்ட கூட்டம் கூடி அடிக்கல் நாட்டப்பட்டிருக்குது.

தமிழ் பகுதிகளில் ஒன்றென்றவுடன் மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகத்தை பிரயோகிக்க துடிப்பவர்கள் ஏன் தென்பகுதியில் முடியுதில்லை.

வடக்கிற்கு தெற்கில் இருந்து ரயில் விட்டும்.. கொரோனா நோயாளிகளை இராணுவ பஸ்களில்.. காவி வந்தும்..  வைரஸை நாடெங்கும் பரப்பியது யார்.. கோத்தா அரசும்.. அதன் முட்டாள் இராணுவமும். 

அப்படி இருக்க தமிழ் மக்கள் மீது மட்டும் கொரோனா அதிகாரத் துஷ்பிரயோகம் ஏன்..??!

கோவில்களில் கூடும் மக்களுக்கு ஒரு பொது கொரோனா விதி அமைக்கப்பட்டிருக்கலாம். விசேட தினங்களில் அர்ச்சகர் மட்டும் இருக்க.. மக்கள்.. தொலைத்தொடர்புகள் வழி வழிபாடு செய்ய வழி செய்திருக்கலாம்.

அப்படித்தானே மேற்கு நாடுகளில்.. மக்கள் மீது துஷ்பிரயோகத்தை பிரயோகிக்காது.. அரசுகள் நடந்து கொள்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. தமிழ் மக்கள் மீதான சிங்கள அதிகார துஷ்பிரயோகத்தை வரவேற்கும் பலரும்.. வெளிநாடுகளில்.. அந்தந்த அரசுகள் வழங்கி இருக்கும்.. கொரோனா பாதுகாப்பையும் நெகிழ்வையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பவர்களாகவே உள்ளனர். அதனை ஏன் தாயக மக்கள் அனுபவிப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.. ??!

சிங்களவனின் அபிரிவிருத்தி அரியாரத்திற்கு சாமரம் வீசுபவர்கள்.. தாம் வெளிநாடுகளில் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் நெகிழ்வையும் சுகாதாரப் பாதுகாப்பையும் தாயக மக்களுக்கு அந்த நாட்டு அரசும் வைத்தியத்துறையும் வழங்க ஏன் வற்புறுத்தினம் இல்லை..???!

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதுகிறீர்களா ? ...விளக்கமில்லாமல் அல்லது விளங்கியும் வீம்புக்கு எழுதுபவர்களுடம் எழுதி மினக்கெடுவதே வீண்  வேலை 
 
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

கோத்தா ஜனாதிபதி அவர் பொதுவாய் கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் என்று ஒரு உத்தரவு போடுவார்...அதை செயற்படுத்துவது அதிகாரிகள் . அரச அதிபர் ,வைத்திய பணிப்பாளர் ,சுகாதார உத்தியோகத்தர்கள் , வைத்தியர்கள் போன்றோருக்கு கடமை இருக்கு ....வட ,கிழக்கில் இருப்பவர்கள் தங்கட கடமையை ஒழுங்காய் செய்கிறார்கள் ...சிங்கள பகுதியில் திறந்து இருக்கு ,எங்கட பகுதியிலும் திறக்கட்டும் ...போய் சாகட்டும் ,நோய் பரவட்டும் அல்லது உங்களை மாதிரி வெளி நாட்டில் இருந்து எதற்கெடுத்தாலும்  சாவதற்கும்  கூட சிங்களவர்களை போட்டியாக நினைக்கவில்லை ...தங்கட மக்கள் சாக கூடாது ,நோய் பரவ கூடாது ...உயிரோடு இருந்தால் நாளைக்கும் கோயில் திறக்கலாம் ,திருவிழா செய்யலாம் என்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் ...உங்கட குப்பைகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம் 

இந்த கோயில் திருவிழா தொடங்கி கவனமாய்த் தான் நடத்தினார்கள்...தீர்த்தமன்று ஆடி அமாவாசை ,பிதிர் கடன் கழித்தல் அவர்களை தொட்டால் பிரச்சனை என்று தான் அதிகாரிகள் விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன் 

அதாவது

கோத்தா  இவற்றை செயற்படுத்துவதை  கவனிக்காததால் தான் இத  நடக்கிறது?

சரி  சகோதரி  உங்களுக்கு அவர்களுடன்  உள்ள  தொடர்புகளை  தெரிந்ததால் நம்பித்தான்  ஆகணும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களிடம் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தமிழர்கள் தோற்று விட்டனர். இது குறித்த கோபம் எல்லா இடங்களிலும் வெளிப்படுவது இயல்பானது - புரிகிறது.

 இந்தத் திரியில் கொரனாவைக் கட்டுப் படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், போடப் பட்டும் தடுப்பூசிகள் மீதான போலி விஞ்ஞான விமர்னசங்களால் சிங்கள அரசுக்குப் பாதகம் ஒன்றுமில்லை!

ஆனால் இக்கருத்துக்களை தாயகத்தில் வசிக்கும் ஒரு சிலராவது உள்வாங்கி, பெருப்பித்து ஏற்றுக் கொண்டு அதனால் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கா விட்டாலும்  இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்! இது தான் ஒன்றரை வருடங்களில் கொரனா தொற்று உலக நாடுகளில் எமக்குக் கற்றுத் தந்த பாடம்!

உதாரணமாக: இங்கே சௌகரியமாக  ஊசி போட்டு விட்டு இருக்கும் ஒருவர் , வடக்கில் சிங்கள இராணுவம் சில இடங்களில் உப்புத் தண்ணியை தடுப்பூசியென ஏற்றுவதாக ஒரு வதந்தியைக் கிளப்பி விடுகிறார், வதந்தியை நம்பி அங்கே சிலர் ஊசியைத் தவிர்த்தால், வதந்தி கிளப்பியவருக்கு ஒரு பாதிப்பும் இல்லை!

எனவே, உங்கள் வழமையான no-loss-to-me ரக பிண அரசியலை இந்தப் பெருந்தொற்றுக் குறையும் வரையாவது சுருட்டி ஒரு பக்கம் வைத்து, பொது சுகாதாரச் செய்திகளைக் குழப்பாமல் இருங்கள்!     

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

எம்மாம் பெரிய விசயத்தை ஜஸ்ட் லைக்தட் சொல்லிடீங்க புலவரே.

நீங்கள் சொன்னதுதான் உண்மை. 

பொறந்தது தனியா, இறப்பதும் தனியா…

காலம் முடிந்த மோட்டார் காரை, தூக்கி கயாலாங்கடையில் போட்டு விடுவோம். அதற்கு ஆன்மா இருக்கிறதா, மறு பிறவி உண்டா? தீர்ப்பு நாளில் இமாம் மெகெதி, அல்லது யேசு வந்து அந்த காரை எழுப்புவார் என நாம் நம்புவதில்லை.

அதே போல்தான் மரம், செடி, புல், பூண்டு, பல்மிருகம், பறவை, பாம்பு மனிதன் எல்லாமே. 

மோட்டார்காரை மனிதன் உருவாக்குகிறான். உயிரிகள் இயற்கையாய் உருவாகிறன. அவ்வளவுதான்.

நாம் ஒரு உயிரி. Random ஆக தோன்றி, random ஆக மறைகிறோம்.

இடையில் எல்லாம் சும்மா….

சில விசயங்களை நாம் வார்த்தைகள் மூலமே தெளிவாக விளக்குகிறோம்.

இறை நம்பிக்கை. எந்த மொழியிலும் இறை  உண்மை என யாரும் சொல்வதில்லை.

நீங்கள் சொன்னது போல் இது ஒரு coping mechanism தான்.

வாழ்க்கை ஒரு பிணி. ஏற்றமும் இறக்கமும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் ராட்டினம்.

 எம்மை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது, அந்த சக்தி நியாமானது. அது எம்மை காக்கும் என்ற நம்பிக்கை பலரை பைத்தியம் ஆக்காமல் காப்பாற்றுகிறது.

ஆகவே கூர்ப்பு கொள்கையின் அடிப்படையில் தன்னை தற்காத்து கொள்ள மனித இனம் கண்டு பிடித்த (defense mechanism, survival strategy) சாதனம்தான் இறை, சிறப்பு படைப்பு கொள்கை, மதம்.

அதனால்தான் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டால், பலருக்கு கடும் சினம் வருகிறது. இந்த கோவம், தாய்மை உணர்வு போல ஒரு உயிரியல் எதிர்வினை.

Ignorance is bliss. (உண்மையை) அறியாமல் இருப்பது பெரும் இன்பம் என்பார்கள். 

ஆனால் உண்மையை அறிந்தாலும் கலங்க தேவையில்லை.

யாரை நம்பி யாரும் இல்லை. இந்த வாழ்வை தவிர வேறு ஏதும் இல்லை என்ற உண்மையை தரிசித்த பின், இல்லாத பந்த பாசத்தை நினைத்து என்ன கவலை?

Live in the now. இந்த வாழ்க்கை ஒரு பயணம். ஒரு ஸ்டேசனில் ஏறும் போது தொடங்கும். நமக்குரிய ஸ்டேசன் வந்ததும் முடியும். 

இது ஒரு இலக்கில்லா பயணமும் கூட.

இந்த பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் முடிந்தளவு சந்தோசமா அனுபவிப்பது மட்டுமே நாம் செய்ய கூடியது.

பிகு

இது எனது வாழ்கை பற்றிய பார்வை மட்டுமே. 

அத்தனைக்கும் ஆசைப்படு  பாலகுமாரா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தால் மொழிபெயர்த்து வாசிக்கவும்.புரளி கிளப்புவது எனது பழக்கமல்ல. அவ்வளவிற்கு கேவலமானவனும் அல்ல. இன்று ஜேர்மனியிலும் இதே பிரச்சனை  சிறிதாக ஆரம்பித்துள்ளது.

இதே போல் இலங்கை வடபகுதியிலும் நடைபெற்றதாக நான் அறிந்தேன் அவ்வளவுதான்.

Corona scam in India: 2500 people get salt water instead of vaccine.

Corona-Betrug in Indien: 2500 Menschen bekommen Salzwasser statt Impfstoff

  • Tobias Utz
    VonTobias Utz
     
In Indien ist es zu einem Corona-Betrug im großen Stil gekommen. Zahlreiche Menschen erhielten eine Dosis Salzwasser.

Mumbai – In Indien sind rund 2.500 Menschen einem Impfbetrug zum Opfer gefallen. Ihnen wurde Salzwasser statt Corona*-Impfstoff* injiziert. Der Betrug fiel auf, da den „Geimpften“ die Impfausweise auffällig erschienen.

Mittlerweile wurden verantwortliche Ärzte und medizinische Mitarbeitende festgenommen, wie CNN berichtet. Vishal Thakur, ein hochrangiger Polizeibeamter, erklärte, dass viele der Impfungen zwischen Ende Mai und Anfang Juni nahe Mumbai durchgeführt wurden. Die Ärzte sollen bis zu 28.000 US-Dollar mit den gefälschten Impfungen verdient haben. Bezahlt wurde offenbar in bar, vor Ort. (tu) *fr.de ist ein Angebot von IPPEN.MEDIA.

https://www.fr.de/panorama/indien-corona-impfung-salzwasser-2500-menschen-coronavirus-impfstoff-pandemie-zr-90844670.html

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

நான் கேட்ட கேள்விக்கு விடை இதுவல்லவோ ?  நீங்க சொன்னதுக்கும்  ஆதாரம் என்று இணைத்த YT க்கும் சம்பந்தம் எங்குள்ளது ?

தேடுங்கள், கண்டடைவீர்கள். சும்மாயிருந்தால் தெளிவுபிறக்குமா? முயற்சி திருவினையாக்கும்.😇

1 minute ago, குமாரசாமி said:

முடிந்தால் மொழிபெயர்த்து வாசிக்கவும்.புரளி கிளப்புவது எனது பழக்கமல்ல. அவ்வளவிற்கு கேவலமானவனும் அல்ல. இன்று ஜேர்மனியிலும் இதே பிரச்சனை  சிறிதாக ஆரம்பித்துள்ளது.

இதே போல் இலங்கை வடபகுதியிலும் நடைபெற்றதாக நான் அறிந்தேன் அவ்வளவுதான்.

செலைன் ஊசியேற்றுவதால் பாதிப்பு குறைவு. சில நன்மைகளும் உண்டு. இது வழமையான மருத்துவ முறையும் கூட. ஆனால் இது கோவிட் தடுப்பு மருந்தல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று விளங்கித் தான் எழுதுகிறீர்களா ? ...விளக்கமில்லாமல் அல்லது விளங்கியும் வீம்புக்கு எழுதுபவர்களுடம் எழுதி மினக்கெடுவதே வீண்  வேலை 
 
உங்கட வினைத்திறனற்ற.. கருத்துக்களுக்கு ஒத்தூதாட்டி,.. இப்படி தான் நீங்கள் எழுதிக் கொள்வது வழமை. 😃🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.