Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

பெருமாள் இது தான் உண்மை நிலவரம்.

அதைவிடவும் கிளைமாக்ஸ் உண்டு அப்படி சிங்களவன் கிந்தியன்  இருவரையும் தாண்டி ஒரு தீர்வு வந்தாலும் நம்ம சம்பந்தன் சுமத்திரன் என்ன செய்வார்கள் என்பது பெரும் கேள்வி குறி உண்மையா இல்லையா ?🤣 பழையபடி வாய்க்கா வரப்பு சண்டை தொடங்கும் நமக்குள் .

  • Replies 116
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அரசாங்கம் கோரியுள்ளதால் வெளிநாட்டில் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து பகிரங்கமாக சில உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் இரு துருவங்களாகவுள்ள அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புரிந்துணர்வு ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டலாம். அரசாங்கத்தை எதிர்த்து நாம் இங்கிருந்து ஒன்றுமே செய்ய முடியாது. 

இது உத்தியோகபூர்வமான எமது தலையீடாகவும் இருக்கும்.

இந்தச் செய்தியைப்பார்த்தபோது நானும் இப்படித்தான் யோசித்தேன். 

சிங்கள இனவாதம் தமிழினத்தினது அனைத்து  முயற்சிகளையும், அது போராயினும் சரி, சமாதானமாயினும் சரி இனவாத்தினூடாகத் தோற்கடித்தே வருகின்றது. ஆனால் பொருண்மியச் சூழல் கடன்சுமை உள்நாட்டிலே ஏற்படும் அரச நெருக்கடிகள் இப்படி யோசிக்க வைக்கின்றது. சிங்கள மக்களுக்கு ஏற்படும் பொருண்மிய நெருக்கடி சிலவேளை அவர்களைப் '' பசி வந்திடப் பத்தும் பறந்திடும்'' என்று யோசிக்க வைக்குமாயின் மாற்றங்கள் நிகழலாம்.  ஆனால் புலத்திலே உள்ள தமிழமைப்புகள் ஓரணியாக இணைந்து இதனைச் செயற்படுத்த வேணடும். இங்கும் யார் கோத்தாவுக்குப் பொன்னாடை போர்த்திப் பெயரெடுப்பது என்று எண்ணாது, தமிழினத்தினது ஒரு அரசியல் இராசதந்திர நகர்வாகச் செயற்படுவதூடாக, இணையவனவர்கள் சுட்டியதுபோன்று இதனை ஒரு உத்தியோகபூர்வமான எமது தலையீடாக மாற்ற முயற்சிக்கலாம். ஒரு யுத்தத்தை எவளவு முதலிட்டோடு தமிழினம் நடாத்தியதோ அதேபோன்று இதலை ஒரு அரசியலுக்கான முதலீடாகச் செய்யலாம். உடனடி விளைவுகள் இல்லாவிடினும் காலப்போக்கில் அரசு பேசாவிடினும், தமிழினத்தின் உதவுகின்ற செயல் குறித்துச் சிங்கள மக்கள் பேசுவார்கள். பேசவைக்கலாம் அல்லவா?

49 minutes ago, பெருமாள் said:

அதைவிடவும் கிளைமாக்ஸ் உண்டு அப்படி சிங்களவன் கிந்தியன்  இருவரையும் தாண்டி ஒரு தீர்வு வந்தாலும் நம்ம சம்பந்தன் சுமத்திரன் என்ன செய்வார்கள் என்பது பெரும் கேள்வி குறி உண்மையா இல்லையா ?🤣 பழையபடி வாய்க்கா வரப்பு சண்டை தொடங்கும் நமக்குள் .

இனி தீர்வு என்று ஒன்று வரப்போவதில்லை. பிரச்சனை இருந்தால்தானே தீர்வு.

குறைந்தபட்சம் தமிழரின் சொந்த அரசியல் குழுவையே எம்மால் பலமாக்கவோ சேர்ந்து பயணிக்கக் கூடியதாகவோ ஆக்க முடியவில்லை. கூட்டமைப்பினர் வெளிநாடு வந்தால்கூட ஒழிந்து திரிந்து இரகசியக் கூட்டங்களை நடத்திவிட்டு ஓடிவிடுகின்ற நிலையே உள்ளது. 

இந்தியாவையும் சிங்கள அரசையும் தமிழ் அரசியல்வாதிகளையும் எத்தனை நாள்தான் இணையத்தில் திட்டியபடி வாழலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலங்களிலும் சரி,

போருக்கு பிந்தியதான சில வருடங்கள் ,உடலுறவுபோல் பின்னி பிணைந்ததான சீனாவுடனான சிங்களத்தின் உறவுக்கு முன்னரும் சரி மேற்குலகம் சிங்கள தேசத்துக்கு அரசியல் பொருளாதாரம் ராணுவ உதவியென்று கேட்காமலே எல்லாம் பண்ணியது.

இன்று மேற்குலகம் அன்றுபோல எதுவுமே தேடி  சென்று இலங்கை அரசுக்கு உதவுவதாய் காணவில்லை.

யுத்த குற்றம் என்ற ஒரு நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளாமலிருக்க கை கொடுத்து காப்பாற்றிய சீனா பின்னும் ரஷ்யா பின்னும் என்று ராஜபக்ச குடும்ப அரசியல் என்று பின்னால் சென்றதோ அன்றே அனைத்து மேற்குலகங்களும் ஒதுங்கிகொண்டது.

சிங்களம் வெளிநாட்டு இலங்கையர்களிடம் இருந்து உதவி எதிர்பார்க்கபடுகிறது என்று மறைமுகமாக அர்த்தபடுத்தியது தமிழர்களைத்தான், ஏனென்றால்  சிங்களவர்கள் ஒன்றும் ஒரு மில்லியன் அளவில் அமெரிக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய மண்ணில்  நிரந்தர பிரஜாவுரிமை பெற்றவர்களாகவும் பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்பவர்களாகவும் புலத்தில் இல்லை.

தமிழ் வானொலிகள் இவர்களை தேடி போக வாய்ப்பில்லை, அதனால் சிங்கள ஊடகங்களினூடாக கெளரவ பிச்சை எடுக்க, அது தமிழ் ஊடகங்களுக்கு மொழி பெயர்ப்பாகி ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான், அதுதான் சிங்கள வானொலி செவ்வி தமிழ் வடிவத்தில் யாழில் உலவுகிறது.

இந்த இக்கட்டான நிலமையில் எம் மக்களை மனசில் வைத்து புலம்பெயர் தமிழர்கள் உதவும் நிலையில்தான் இருப்பார்கள், ஆனால் அந்த உதவி ஒருபோதும் ஒட்டு மொத்தமாக எம்மக்களை சென்று சேராது, அத்தனையும் சிங்கள பகுதிக்கே திருப்பிவிடபடும்.

அன்று ஏதிலிகளாய் புலம்பெயர்ந்த  தமிழ்மக்களை பயங்கரவாதிகள் என்று காண்பிக்க கிழமைக்கு ஒரு பிளேன் இலங்கையில் இருந்து எடுத்து வந்து ஐரோப்பா அமெரிக்காவில் எம்மை கொடூரர்களாய் காண்பித்த கதிர்காமரில் இருந்து சிங்கள காவாலிகள்வரை தமிழரை  சித்தரித்த சிங்களம் இன்று ஏதிலியாய் நிற்கிறது.

கடனுக்குமேல் கடன் வாங்கி கையறு நிலையில் நிற்கும்போது எல்லாத்துக்கும் சீனாகாரன் உதவமாட்டான், ஒட்சிசன் உட்பட.அவன் எல்லை எதுவென்று அவனுக்கு தெரியும், 

அதனால்தான் இன்று பழையபடி இந்தியாவிடம் கையேந்தி இருநாட்டின் கப்பல்களும் சக்தி என்ற பெயரில் பிராணவாயு சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் முனைப்பில் இன்று இறங்கி இருக்கிறதாம்.

உங்கள் எல்லை எதுவென்று உலக நாடுகளுக்கு தெரியும், அதனால்தான் அனைவருமே மெளனாய் நிற்கின்றனர், இதில் எம்மக்களும் சிக்கி கொண்டார்களே என்பதுதான் அவர்களைமீட்க என்ன வழி என்று தெரியாத எம் சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனானப்பட்ட பிரித்தானியாவும் தட்டுத் தடுமாறி தான் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ...இலங்கையும் கட்டுக்குள் கொண்டு வரும் ...சுற்றுலாத்துறையை நம்பி இருக்கும் நாடு ,யத்தத்தால் அழிந்த நாடு மீண்டு வர கொஞ்ச காலம் எடுக்கும் ...கோத்தா , மகாநாயக்கர் மூலம் நாட்டை முடக்க வைத்துள்ளார் ...கோத்தாவுக்கு அரசியல் புதிது ....அதிலும் கற்று தேறுவார் ....பொறுத்திருங்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தைகள் என்பது போரியற்காலத்தில் எம்மால் வெல்லலாம் என்றே நிலைப்பாடுஇருந்தது அதனால் பல பேச்சு வார்த்தைகள் தோற்றுப்போய் போரும் சூழ்ந்தது எத்தனையோ நாடுகள் ஒப்பந்த  அடிப்படையில் நகர்வுகளை ந்கர்த்துகிறது உதாரணம் சீனாவை சொல்லலாம் ஏன் நமது புலம்பெயர்ந்த அரசியல் அமைப்புகள் ஓர் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி வடகிழக்கில் நமது மக்களுக்கும் ஏதாவது செய்ய முனையலாம் அல்லவா பூனைக்கு யார் மணி கட்டுவது என்றாலும் நாளைக்கு கோத்தாவுடன் கூட்டு வைத்த தமிழர்கள் என செய்திகளையும் திரித்தும் விடுவார்கள் 

உதாரணம் இப்பவரைக்கும் காத்தான் குடி பள்ளி கொலைகளை நியாயப்படுத்தியே நிற்கிறது ஒரு கூட்டம் வீரமுனை கொக்கட்டிசோலை படுகொலைகளை மறந்து இலங்கை தமிழனுக்கு எங்கு போனாலும் அடிதான் 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாரின் மொழியில் வெளிநாடு வாழ் இலங்கையர்கள் என்றால்.. வெளிநாடு வாழ் சிங்களவர்களை தான். அதுதான் அவுஸியை குறிவைச்சிருக்காவு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

இந்தியாவையும் சிங்கள அரசையும் தமிழ் அரசியல்வாதிகளையும் எத்தனை நாள்தான் இணையத்தில் திட்டியபடி வாழலாம் ?

புதியவர்கள் வரும்வரை .

2 hours ago, ரதி said:

ஆனானப்பட்ட பிரித்தானியாவும் தட்டுத் தடுமாறி தான் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ...இலங்கையும் கட்டுக்குள் கொண்டு வரும் ...சுற்றுலாத்துறையை நம்பி இருக்கும் நாடு ,யத்தத்தால் அழிந்த நாடு மீண்டு வர கொஞ்ச காலம் எடுக்கும் ...கோத்தா , மகாநாயக்கர் மூலம் நாட்டை முடக்க வைத்துள்ளார் ...கோத்தாவுக்கு அரசியல் புதிது ....அதிலும் கற்று தேறுவார் ....பொறுத்திருங்கள் 

பகிடிக்கு சொல்கிறீர்களா அல்லது உண்மையாகவே சொல்கிறீர்களா தெரியவில்லை பகிடிக்கு என்றால் குறைந்தபட்ஷம் சிரிப்புக்குறியாவது போடுங்க .

கொரனோ  லங்காவுக்குள் புகும்போதும் இதே போன்ற கருத்தை நீங்கள் சிரிக்காமல் சொன்னது நினைவில் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

. உடனடி விளைவுகள் இல்லாவிடினும் காலப்போக்கில் அரசு பேசாவிடினும், தமிழினத்தின் உதவுகின்ற செயல் குறித்துச் சிங்கள மக்கள் பேசுவார்கள். பேசவைக்கலாம் அல்லவா?

சிரிப்பதா ?அழுவதா?
சிங்கள மக்கள் சிந்திப்பதா ? அப்படி சிங்கள மக்கள் மேற்கில சூரியன் உதிக்கிற நிலை வந்து சிந்தித்தாலும் புத்த பிக்குமாரும் அரசியல் வாதிகளும் சிந்திக்க விடுவார்களா?
10% சிங்கள மக்கள் சிந்தித்து எந்த வித நன்மைகளும் எமக்கு கிடைக்க போவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

போர்காலங்களிலும் சரி,

போருக்கு பிந்தியதான சில வருடங்கள் ,உடலுறவுபோல் பின்னி பிணைந்ததான சீனாவுடனான சிங்களத்தின் உறவுக்கு முன்னரும் சரி மேற்குலகம் சிங்கள தேசத்துக்கு அரசியல் பொருளாதாரம் ராணுவ உதவியென்று கேட்காமலே எல்லாம் பண்ணியது.

இன்று மேற்குலகம் அன்றுபோல எதுவுமே தேடி  சென்று இலங்கை அரசுக்கு உதவுவதாய் காணவில்லை.

யுத்த குற்றம் என்ற ஒரு நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்ளாமலிருக்க கை கொடுத்து காப்பாற்றிய சீனா பின்னும் ரஷ்யா பின்னும் என்று ராஜபக்ச குடும்ப அரசியல் என்று பின்னால் சென்றதோ அன்றே அனைத்து மேற்குலகங்களும் ஒதுங்கிகொண்டது.

சிங்களம் வெளிநாட்டு இலங்கையர்களிடம் இருந்து உதவி எதிர்பார்க்கபடுகிறது என்று மறைமுகமாக அர்த்தபடுத்தியது தமிழர்களைத்தான், ஏனென்றால்  சிங்களவர்கள் ஒன்றும் ஒரு மில்லியன் அளவில் அமெரிக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய மண்ணில்  நிரந்தர பிரஜாவுரிமை பெற்றவர்களாகவும் பொருளாதாரத்தில் நிமிர்ந்து நிற்பவர்களாகவும் புலத்தில் இல்லை.

தமிழ் வானொலிகள் இவர்களை தேடி போக வாய்ப்பில்லை, அதனால் சிங்கள ஊடகங்களினூடாக கெளரவ பிச்சை எடுக்க, அது தமிழ் ஊடகங்களுக்கு மொழி பெயர்ப்பாகி ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான், அதுதான் சிங்கள வானொலி செவ்வி தமிழ் வடிவத்தில் யாழில் உலவுகிறது.

இந்த இக்கட்டான நிலமையில் எம் மக்களை மனசில் வைத்து புலம்பெயர் தமிழர்கள் உதவும் நிலையில்தான் இருப்பார்கள், ஆனால் அந்த உதவி ஒருபோதும் ஒட்டு மொத்தமாக எம்மக்களை சென்று சேராது, அத்தனையும் சிங்கள பகுதிக்கே திருப்பிவிடபடும்.

அன்று ஏதிலிகளாய் புலம்பெயர்ந்த  தமிழ்மக்களை பயங்கரவாதிகள் என்று காண்பிக்க கிழமைக்கு ஒரு பிளேன் இலங்கையில் இருந்து எடுத்து வந்து ஐரோப்பா அமெரிக்காவில் எம்மை கொடூரர்களாய் காண்பித்த கதிர்காமரில் இருந்து சிங்கள காவாலிகள்வரை தமிழரை  சித்தரித்த சிங்களம் இன்று ஏதிலியாய் நிற்கிறது.

கடனுக்குமேல் கடன் வாங்கி கையறு நிலையில் நிற்கும்போது எல்லாத்துக்கும் சீனாகாரன் உதவமாட்டான், ஒட்சிசன் உட்பட.அவன் எல்லை எதுவென்று அவனுக்கு தெரியும், 

அதனால்தான் இன்று பழையபடி இந்தியாவிடம் கையேந்தி இருநாட்டின் கப்பல்களும் சக்தி என்ற பெயரில் பிராணவாயு சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் முனைப்பில் இன்று இறங்கி இருக்கிறதாம்.

உங்கள் எல்லை எதுவென்று உலக நாடுகளுக்கு தெரியும், அதனால்தான் அனைவருமே மெளனாய் நிற்கின்றனர், இதில் எம்மக்களும் சிக்கி கொண்டார்களே என்பதுதான் அவர்களைமீட்க என்ன வழி என்று தெரியாத எம் சோகம்.

7 hours ago, இணையவன் said:

இனி தீர்வு என்று ஒன்று வரப்போவதில்லை. பிரச்சனை இருந்தால்தானே தீர்வு.

குறைந்தபட்சம் தமிழரின் சொந்த அரசியல் குழுவையே எம்மால் பலமாக்கவோ சேர்ந்து பயணிக்கக் கூடியதாகவோ ஆக்க முடியவில்லை. கூட்டமைப்பினர் வெளிநாடு வந்தால்கூட ஒழிந்து திரிந்து இரகசியக் கூட்டங்களை நடத்திவிட்டு ஓடிவிடுகின்ற நிலையே உள்ளது. 

இந்தியாவையும் சிங்கள அரசையும் தமிழ் அரசியல்வாதிகளையும் எத்தனை நாள்தான் இணையத்தில் திட்டியபடி வாழலாம் ?

பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் ...ஆனால் பிரச்சனையை திட்ட மிட்ட படி ஏற்படுத்துவார்கள் தேர்தல் காலத்தில் பிரச்சனை இல்லை என்றால் அரசியல் செய்ய முடியாது....

கோத்தாவின் ஒற்றைபோக்கு அரசியல் அவரால் அவரது பதவிக்காலம் வரை செய்ய முடியாமல் போய்விட்டது....சர்வதேச பொறியில் சிக்கிய இலங்கை இனிமேலும் தனித்து தீர்வுகளை எடுக்கும் நிலையில் இல்லை.....தெற்காசியாவே சிக்கலில் மாட்டுப்பட்டுவிட்டது....

தமிழ் அரசு ஆதரவாளர்கள் முண்டு கொடுக்கலாம்  ,,,தமிழ் அரசு எதிர்ப்பாளர்கள் தூக்கியெறியலாம் ஆனால் சிறிலங்கா தமிழர் சிங்களவர்களை விட ஏனையோருக்கு முக்கியம் அவர்கள் விருப்படி நாட்டை ஆள்பவர்கள் நடத்தி செல்ல வேண்டும்...

இதுவே பெரிய பிரச்சனை.....இதை யாராலும்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சிரிப்பதா ?அழுவதா?
சிங்கள மக்கள் சிந்திப்பதா ? அப்படி சிங்கள மக்கள் மேற்கில சூரியன் உதிக்கிற நிலை வந்து சிந்தித்தாலும் புத்த பிக்குமாரும் அரசியல் வாதிகளும் சிந்திக்க விடுவார்களா?
10% சிங்கள மக்கள் சிந்தித்து எந்த வித நன்மைகளும் எமக்கு கிடைக்க போவதில்லை....

சிங்கள மக்கள் சிந்தித்த ஒரு தருணத்தையாவது இங்கிருக்கும் கருத்தாளர்கள் காட்டட்டும் சொறிலங்கா சொல்வதை நிறுத்தி விடுகிறேன் .🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் உதவியினைப்பெற்றுக்கொண்டு இறுதியில் அந்த உதவிகளைப் புரிந்த கரங்களையே முறித்துப்போட்ட சரித்திரம் தான் சுதந்திர காலத்திலிருந்து நல்லிணக்க அரசுவரை தொடர்கிறது. 

அரசியல் தீர்வோ அல்லது எந்தத் தீர்வோ அவர்கள் தரப்போவதில்லை  என்றால்  புலம்பெயர் தமிழரின் உதவிகள் எந்தவித்தத்தில் எமக்குப் பயனளிக்கப்போகின்றன. அல்லது, அந்த உதவிகள்கூட தமிழருக்குத்தான் கிடைக்கும் என்கிற உத்தரவாதமாவது இருக்கிறதா? பிறகு எதற்கு இந்த நல்லிணக்கம்? 

தமிழரின் இருப்பை இன்றுவரை  திட்டமிட்டு அழித்துவரும் ஒரு தீவிர இனவாத அரசுக்கு உதவுவதன்மூலம் நாம் அடையப்போவது என்ன?

ஒரு போர்க்குற்றவாளி தமிழரின் முன் தோற்றுவிடக்கூடாது எனும் மனப்பான்மை சிங்களவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, தமிழரில் ஒரு பகுதியினருக்கு இருக்கிறது. தமது அரசியத் தலைமகளின் தவறுகளைச் சரியென்று நியாயப்படுத்த இனக்கொலையாளிகளைப் போற்றவும், புகழவும், சொந்த இனத்தை இகழவும் வேண்டிய தேவை இருக்கிறது. இவர்களை பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை, இவர்களின் கைங்கரியம் மிகத் தெளிவானது என்பதால் கடந்து செல்வதே இப்போதைக்கு செய்யவேண்டியது.

1 hour ago, putthan said:

சிரிப்பதா ?அழுவதா?
சிங்கள மக்கள் சிந்திப்பதா ? அப்படி சிங்கள மக்கள் மேற்கில சூரியன் உதிக்கிற நிலை வந்து சிந்தித்தாலும் புத்த பிக்குமாரும் அரசியல் வாதிகளும் சிந்திக்க விடுவார்களா?
10% சிங்கள மக்கள் சிந்தித்து எந்த வித நன்மைகளும் எமக்கு கிடைக்க போவதில்லை....

அண்ணா, 69 லட்சம் சிங்கள பெளத்தர்களால் தமிழர்களை அழித்து, ஒடுக்கி போரில் வெற்றியீட்டியதற்காக பதவிக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சிங்கள பெளத்த பெரும்பான்மை அரசு தமிழருக்கு எந்தவிதத்தில் உதவப்போகிறது என்று நாங்கள் நம்பி உதவச் செல்வது?

குறைந்தது இந்த இனக்கொலையரசு    தான் பதவிக்கு வந்தபின் கொண்டுவந்த தமிழர் விரோத நில ஆக்கிரமிப்பு, கலாசார செயலணி எனும் தமிழ் கலாசார அழிப்பு ஆகியவற்றையாவது மீளப்பெற்று இணக்கப்பாட்டிற்கான தனது விருப்பைக் காட்டுகிறதா? இல்லையே? பின் எந்த நம்பிக்கையில் போகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

மனித நேயப்போர், தமிழ் மக்களை புலிகளிடமிருந்து மீட்க செய்த போர் என்று பீற்றிக்கொண்ட கோத்தபாய, போர் முடிந்த கையோடு சொன்ன வார்த்தை "புலிகளை அழித்த பின் தமிழருக்கென்றொரு தீர்வு தேவையில்லை, அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்டு இருந்துவிட்டு போகலாம் தீர்வு என்று எதுவும் கேட்க  இயலாது." சரி புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவே போர் செய்தார்கள் என்றால், புலிகளிடம் இருந்து மீட்ட பணம், நகைகளை எல்லாம் அந்த மக்களிடம் திருப்பி கொடுத்திருக்க வேண்டுமல்லவா?  ஏன் செய்யவில்லை? அவர்கள் செய்த போர், தமிழரின் உரிமைகளையும், உடமைகளையும், உயிர்களையும் பறிப்பதற்கே. போர் முடிந்தபின் தமிழருக்கு இவர்கள் செய்த நன்மைகள் என்ன? உலக நாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த உதவிகளை முழுமையாக அடைய விட்டார்களா?அல்லது புலம்பெயர்ந்தோர் செய்யும் உதவிகளுக்குக்கூட கட்டுப்பாடுகளை விதித்து தடுக்கவில்லையா? ஏன்? போர் முடிந்து முள்வேலிக்குள் இருந்த மக்களுக்காக கொண்டுவந்த அவசர பொருட்களை இறக்கவிடாமல் கடலில் பல மாதங்கள் தத்தளித்து, இந்தியாவின் உதவி கோரி, தங்கள் வேலைகளையும் விட்டு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்னும் இருப்பார்கள் என நம்புகிறேன். மாறாது அவர்களின் குணம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

தமிழனாக... பிறந்தற்காக பெருமைப் பட்ட  காலம், ஒன்று இருந்தது.
இப்போ.. அப்படியான உணர்வு,  கேள்விக் குறியாக உள்ளது.

மனிதனாக பிறந்ததற்காக பெருமைப்படுங்கள்.

23 hours ago, satan said:

இதுக்கு ஏற்கெனவே  இங்கு ஒருவர் விளக்கம் தந்துள்ளார். அந்த விளக்கத்தால்  மிகவும் வெறுப்படைந்தேன்.

யார் அவரோ?😃

21 hours ago, satan said:

 பழைய பதிலை தேடி எடுக்க என்னால்  முடிவதில்லை. ஆனால் அதன் தாக்கம் அவர் வைக்கும் பல கருத்துக்களில் கண்டிருக்கிறேன்.

இந்த கருத்திலுமா? 🥲

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கற்பகதரு said:

மனிதனாக பிறந்ததற்காக பெருமைப்படுங்கள்.

யார் அவரோ?😃

இந்த கருத்திலுமா? 🥲

குறுகுறுகுதில்ல? 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

குறுகுறுகுதில்ல? 

தக்கன பிழைக்கும் என்பது நன்கு நிறுவப்பட்ட உயிரினங்களுக்கான விஞ்ஞான கொள்கை. மறைந்து போனவர்களுக்கும் கடவுள்களுக்கும் இது பொருத்தமற்றது. 😀 யாருக்கு இந்த தக்கன பிழைக்கும் என்ற கொள்கை பயன்படுத்தப்பட்டு நீங்கள் மனம் வெறுத்து போனீர்கள், கடவுள்களுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள உறவுகள் வங்கியிலோ அல்லது வீட்டிலோ பணமாக சேமித்து வைக்காமல் தங்கமாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் , அரசின் ஊதிப்பெருத்த செலவுகளுக்கும் உள்நாட்டுக்கடனுக்குமாக புதிது புதிதாக அரசு பணத்தினை அச்சிட்டு வெளியிடலாம் அதனால் பணமாக சேமிப்பில் வைத்திருப்பவர்களுக்கு நட்டம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

தமிழரின் உதவியினைப்பெற்றுக்கொண்டு இறுதியில் அந்த உதவிகளைப் புரிந்த கரங்களையே முறித்துப்போட்ட சரித்திரம் தான் சுதந்திர காலத்திலிருந்து நல்லிணக்க அரசுவரை தொடர்கிறது. 

அரசியல் தீர்வோ அல்லது எந்தத் தீர்வோ அவர்கள் தரப்போவதில்லை  என்றால்  புலம்பெயர் தமிழரின் உதவிகள் எந்தவித்தத்தில் எமக்குப் பயனளிக்கப்போகின்றன. அல்லது, அந்த உதவிகள்கூட தமிழருக்குத்தான் கிடைக்கும் என்கிற உத்தரவாதமாவது இருக்கிறதா? பிறகு எதற்கு இந்த நல்லிணக்கம்? 

தமிழரின் இருப்பை இன்றுவரை  திட்டமிட்டு அழித்துவரும் ஒரு தீவிர இனவாத அரசுக்கு உதவுவதன்மூலம் நாம் அடையப்போவது என்ன?

ஒரு போர்க்குற்றவாளி தமிழரின் முன் தோற்றுவிடக்கூடாது எனும் மனப்பான்மை சிங்களவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, தமிழரில் ஒரு பகுதியினருக்கு இருக்கிறது. தமது அரசியத் தலைமகளின் தவறுகளைச் சரியென்று நியாயப்படுத்த இனக்கொலையாளிகளைப் போற்றவும், புகழவும், சொந்த இனத்தை இகழவும் வேண்டிய தேவை இருக்கிறது. இவர்களை பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை, இவர்களின் கைங்கரியம் மிகத் தெளிவானது என்பதால் கடந்து செல்வதே இப்போதைக்கு செய்யவேண்டியது.

அண்ணா, 69 லட்சம் சிங்கள பெளத்தர்களால் தமிழர்களை அழித்து, ஒடுக்கி போரில் வெற்றியீட்டியதற்காக பதவிக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சிங்கள பெளத்த பெரும்பான்மை அரசு தமிழருக்கு எந்தவிதத்தில் உதவப்போகிறது என்று நாங்கள் நம்பி உதவச் செல்வது?

குறைந்தது இந்த இனக்கொலையரசு    தான் பதவிக்கு வந்தபின் கொண்டுவந்த தமிழர் விரோத நில ஆக்கிரமிப்பு, கலாசார செயலணி எனும் தமிழ் கலாசார அழிப்பு ஆகியவற்றையாவது மீளப்பெற்று இணக்கப்பாட்டிற்கான தனது விருப்பைக் காட்டுகிறதா? இல்லையே? பின் எந்த நம்பிக்கையில் போகிறீர்கள்? 

சிங்களவன் சோறு போடுவானாம் .....அதுதான் இந்த சிங்கள பாசம்....நம்மவருக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

யத்தத்தால் அழிந்த நாடு மீண்டு வர கொஞ்ச காலம் எடுக்கும்

இங்குள்ளவர்களை விடுங்கள். எதோ தமக்கு தெரிந்ததை சொல்கிறார்கள்.

 லீ குவான் யீவாய் விட, உங்களுக்கும், கோத்தாவிற்கும் அனுபவம் கூடாவாக இருக்கலாம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ரதி said:

யத்தத்தால் அழிந்த நாடு மீண்டு வர கொஞ்ச காலம் எடுக்கும்

இலங்கையின் எந்த சிங்களப்பகுதிகள் யுத்தத்தால் அழிந்தது?

யுத்தம் நடந்த போது சிங்கள மக்கள் சோறு தண்ணியில்லாமல் அவதிப்பட்டார்களா?

சிங்கள மக்கள் யுத்த அவலங்களினால் இடம் விட்டு இடம் பெயர்ந்து இன்றும் சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இருக்கின்றர்களா?

யுத்தம் முடிந்த பின்னர் சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட நிதிகள் உதவிகள் எல்லாம் எங்கு போய் சேர்ந்தன?
ஏன் அதிக தூரம் போவான்  சுனாமி அழிவுகளுக்கென புலம்பெயர்மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட பணம் யாருக்கு எங்கு போய் சேர்ந்தது? புலம்பெயர் மக்களின் சிறு பிள்ளைகள் கூட தெருத்தெருவாக கடை கடையாக சுனாமி உண்டியலுடன் சேகரித்து அனுப்பிய பணம் எல்லாம் எங்கு போய் சேர்ந்தது? அப்பொழுதாவது சிறிலங்கா அரசு புலம்பெயர்மக்களுக்கு ஒரு நன்றி அறிக்கையாவது விட்டதா?

 தமிழர் பிரச்சனை என்றால் உங்களைப்போன்றவர்கள் தான் சிங்களத்தின் கொடிகளை  மட்டும் தூக்கிக்கொண்டு வருகின்றீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கற்பகதரு said:

மனிதனாக பிறந்ததற்காக பெருமைப்படுங்கள்.

மனிசனாய் பிறந்தவருக்கு என்ன கோதாரிக்கு கற்பகதரு பெயர்?
பனங்கொட்டை எண்டும் வைச்சிருக்கலாம் எல்லோ? 

57 minutes ago, குமாரசாமி said:

மனிசனாய் பிறந்தவருக்கு என்ன கோதாரிக்கு கற்பகதரு பெயர்?
பனங்கொட்டை எண்டும் வைச்சிருக்கலாம் எல்லோ? 

தவக்கைக்கு றோட்டு போடுற நாட்டிலிருந்துகொண்டு உங்கட Location:கள்ளுக் கொட்டில் என்று போடலாம் என்றால் ஏன் கற்பகதரு என்று பெயர் வைக்ககூடாது?

Don't be angry

சும்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Knowthyself said:

தவக்கைக்கு றோட்டு போடுற நாட்டிலிருந்துகொண்டு உங்கட Location:கள்ளுக் கொட்டில் என்று போடலாம் என்றால் ஏன் கற்பகதரு என்று பெயர் வைக்ககூடாது?

Don't be angry

சும்மா

இதுவும் ஒருவகை கள்ளுக்கொட்டில் எல்லோ...😁

IMG_6648.JPG

Freunde beim Anstoßen

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இலங்கையின் எந்த சிங்களப்பகுதிகள் யுத்தத்தால் அழிந்தது?

யுத்தம் நடந்த போது சிங்கள மக்கள் சோறு தண்ணியில்லாமல் அவதிப்பட்டார்களா?

சிங்கள மக்கள் யுத்த அவலங்களினால் இடம் விட்டு இடம் பெயர்ந்து இன்றும் சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இருக்கின்றர்களா?

யுத்தம் முடிந்த பின்னர் சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட நிதிகள் உதவிகள் எல்லாம் எங்கு போய் சேர்ந்தன?
ஏன் அதிக தூரம் போவான்  சுனாமி அழிவுகளுக்கென புலம்பெயர்மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட பணம் யாருக்கு எங்கு போய் சேர்ந்தது? புலம்பெயர் மக்களின் சிறு பிள்ளைகள் கூட தெருத்தெருவாக கடை கடையாக சுனாமி உண்டியலுடன் சேகரித்து அனுப்பிய பணம் எல்லாம் எங்கு போய் சேர்ந்தது? அப்பொழுதாவது சிறிலங்கா அரசு புலம்பெயர்மக்களுக்கு ஒரு நன்றி அறிக்கையாவது விட்டதா?

 தமிழர் பிரச்சனை என்றால் உங்களைப்போன்றவர்கள் தான் சிங்களத்தின் கொடிகளை  மட்டும் தூக்கிக்கொண்டு வருகின்றீர்கள்

முதலில் புலம் பேர் தமிழர்களே பிச்சை போடுங்கோ என்று அவ இன்னும் கேட்கேல்ல [ [கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.].
சுனாமி காலத்தில் புலிகள் இருந்தார்கள் ...அவர்களுக்கு அரைவாசி ,மகிந்தா சகோதரர்களுக்கு கால்வாசி ...மிச்சம் தான் மக்களுக்கு தான் போனது 
யுத்தத்தின் போது ஆயுத உதவி அளித்த நாடுகள் காசுக்குத் தான் கொடுத்திருப்பார்கள் ...அதாவது கடனுக்கும் வாங்கி இருப்பார்கள்.
அத்தோடு கொரோனாவும் வந்ததாதலே நிதி நிலைமை சிக்கலாயத் தான் இருக்கும்.
கொரோனா முடிந்த பின் நீங்கள் ஊருக்கு ஒருக்கால் போயிட்டு வாங்கோ ...வவுனியாவில் இருந்து யாழ் வரை றோட்டுக்கள் தொடங்கி எல்லாத்தையும் எப்படி கட்டி வைத்திருக்கிறார்கள் என்று போய் பாருங்கோ ....இதெல்லாம் அபிவிருத்திக்கு என்று உலக நாடுகள் கொடுத்த காசு தான் ....அவர்கள் தங்களுக்கு என்று காசடித்தாலும் , மனசாட்சியோட அல்லது உலக நாடுகளுக்கு பயந்து கொஞ்சசமாவது செய்யினம் ...அத்தோட சிங்கள பகுதிகளையும் போய் பாருங்கோ கொழும்பை தவிர மற்ற சிங்க பிரதேசங்களை விட வடக்கை நன்றாக அபிவிருத்தி செய்கிறார்கள் 
எதற்கெடுத்தாலும் குத்தம் ,குறை பிடிக்கிறதை முதலில் விடுங்கோ.
தக்கண பிழைக்க பாருங்கோ  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

அங்கு போய்த்தான் பார்க்கவேணும் என்றில்லையே?

 வடகிழக்கை விடுங்க மட்டக்களப்பில பறிபோகும் காணிகள் பற்றி தாங்கள் நினைப்பதென்னவோ ?🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.