Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

முதலில் புலம் பேர் தமிழர்களே பிச்சை போடுங்கோ என்று அவ இன்னும் கேட்கேல்ல [ [கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.].
சுனாமி காலத்தில் புலிகள் இருந்தார்கள் ...அவர்களுக்கு அரைவாசி ,மகிந்தா சகோதரர்களுக்கு கால்வாசி ...மிச்சம் தான் மக்களுக்கு தான் போனது 
யுத்தத்தின் போது ஆயுத உதவி அளித்த நாடுகள் காசுக்குத் தான் கொடுத்திருப்பார்கள் ...அதாவது கடனுக்கும் வாங்கி இருப்பார்கள்.
அத்தோடு கொரோனாவும் வந்ததாதலே நிதி நிலைமை சிக்கலாயத் தான் இருக்கும்.
கொரோனா முடிந்த பின் நீங்கள் ஊருக்கு ஒருக்கால் போயிட்டு வாங்கோ ...வவுனியாவில் இருந்து யாழ் வரை றோட்டுக்கள் தொடங்கி எல்லாத்தையும் எப்படி கட்டி வைத்திருக்கிறார்கள் என்று போய் பாருங்கோ ....இதெல்லாம் அபிவிருத்திக்கு என்று உலக நாடுகள் கொடுத்த காசு தான் ....அவர்கள் தங்களுக்கு என்று காசடித்தாலும் , மனசாட்சியோட அல்லது உலக நாடுகளுக்கு பயந்து கொஞ்சசமாவது செய்யினம் ...அத்தோட சிங்கள பகுதிகளையும் போய் பாருங்கோ கொழும்பை தவிர மற்ற சிங்க பிரதேசங்களை விட வடக்கை நன்றாக அபிவிருத்தி செய்கிறார்கள் 
எதற்கெடுத்தாலும் குத்தம் ,குறை பிடிக்கிறதை முதலில் விடுங்கோ.
தக்கண பிழைக்க பாருங்கோ  

ஓம்..... யூரியுப்பிலை எல்லாம் சிலோன் றோட்டை பற்றித்தான் கதைக்கினம்.....ஆட்சி நல்லதோ கெட்டதோ........ஆனால் றோட்டு அந்த மாதிரி போட்டுத்தள்ளுறாங்கள் எண்டு.

அபிவிருத்தி......அபிவிருத்தி......அபிவிருத்தி

  • Replies 116
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

இலங்கையில் உள்ள உறவுகள் வங்கியிலோ அல்லது வீட்டிலோ பணமாக சேமித்து வைக்காமல் தங்கமாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் , அரசின் ஊதிப்பெருத்த செலவுகளுக்கும் உள்நாட்டுக்கடனுக்குமாக புதிது புதிதாக அரசு பணத்தினை அச்சிட்டு வெளியிடலாம் அதனால் பணமாக சேமிப்பில் வைத்திருப்பவர்களுக்கு நட்டம் ஏற்படும்.

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

ஒன்றுமே இல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் அதை வைத்து செலவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 

52 minutes ago, பெருமாள் said:

அங்கு போய்த்தான் பார்க்கவேணும் என்றில்லையே?

 வடகிழக்கை விடுங்க மட்டக்களப்பில பறிபோகும் காணிகள் பற்றி தாங்கள் நினைப்பதென்னவோ ?🤣

காசுக்கு விற்றாலும் பறி போகும் அதிக விலைக்கு விற்கிரார்கள் செய்தியாளர்கள் பறி போகுதெனவும் எழுதுகிறார்கள். அர்சாங்கமும் காணிகளை கையகப்படுத்துகிறது . வெளிநாட்டிலிருப்பவர்களும் காணி விற்கிறார்கள் எனது தெரிந்தவர் ஒருவர் வாங்கினார் 65 லட்சம் அது அவர் பழகியவ்ர் என்ற முறையில் குறைந்த விலைக்கு கொடுத்ததாம்  பெருமாள் பணம் அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பியது 

17 minutes ago, குமாரசாமி said:

ஓம்..... யூரியுப்பிலை எல்லாம் சிலோன் றோட்டை பற்றித்தான் கதைக்கினம்.....ஆட்சி நல்லதோ கெட்டதோ........ஆனால் றோட்டு அந்த மாதிரி போட்டுத்தள்ளுறாங்கள் எண்டு.

அபிவிருத்தி......அபிவிருத்தி......அபிவிருத்தி

கொழும்பு வந்து இறங்கினால் உங்களை குலுங்காம கொண்டு செல்ல பாதைகள் அது மட்டும் அல்லாமல் நேரமும் ம்மிச்சம் சாமியோ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சுனாமி காலத்தில் புலிகள் இருந்தார்கள் ...அவர்களுக்கு அரைவாசி ,மகிந்தா சகோதரர்களுக்கு கால்வாசி ...மிச்சம் தான் மக்களுக்கு தான் போனது

தெரியாமல் கதைக்க கூடாது.

சுனாமி பணம், மற்ற நாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் அளித்தது,  புலிகளுக்கு போகவில்லை.

சில உதவி நிறுவங்கள், சில பொருட்களாக புலிகளின் இடத்துக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கலாம், ஆனால் பணம் அல்ல. 

புலிகளிடம் சென்றது, புலிகள் தாமாக சேர்த்தது, மற்றும் விரும்பிய மக்களின் பங்களிப்பு. அது ஒரு போதும் நிறுவனமயப்பட்ட உதவியை மிஞ்சி இருக்க முடியாது.  

சுனாமி பணம், சிலவேளை, கருணாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இடைக்கால நிவாரணம் என்று ஒன்றை புலிகள் கோரினார்கள். ஆனால் வழமைபோல் தட்டிக் கழித்து முழுவதையும் அமுக்கி உண்மையில் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தவிர்த்து சிங்களபகுதிகளுக்கு திருப்பி விட்டார்கள். எவ்வாறெல்லாம் நரம்பற்ற நாக்கை வளைத்து வளைத்து.....????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பகுதிகளுக்கென வந்த சுனாமி நிதியை தங்களிடம் தருமாறு விடுதலைப்புலிகள் போராடியதும் ஒரு வரலாறுதான்.

இதில் புலம்பெயர் மக்கள்  கக்கூஸ் கழுவி பிழைக்கின்றார்கள் என்று நக்கல்   வேறு.....தொழில் என்றால் என்னவென்று தெரியாத பண்டாரங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

சுனாமி காலத்தில் புலிகள் இருந்தார்கள் ...அவர்களுக்கு அரைவாசி ,மகிந்தா சகோதரர்களுக்கு கால்வாசி ...மிச்சம் தான் மக்களுக்கு தான் போனது 

 நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமர் பக்கத்து வீடு போல.....😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

வவுனியாவில் இருந்து யாழ் வரை றோட்டுக்கள் தொடங்கி எல்லாத்தையும் எப்படி கட்டி வைத்திருக்கிறார்கள் என்று போய் பாருங்கோ ....இதெல்லாம் அபிவிருத்திக்கு என்று உலக நாடுகள் கொடுத்த காசு தான் ..

தென்பகுதியின் அதிவேக சாலைகள், தெருக்கள் அனைத்தும் சீன உதவியுடன் அமைக்கப்பட்டவை, வடபகுதியின் தண்டவாளங்கள் தெருக்கள் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டவை அவை அனைத்தும் பிராந்திய  வல்லரசுகளின் கேந்திர மைய போட்டியின் அடிப்படையில் கடனாகவும் அன்பளிப்பாகவும் வழங்கபட்டவை.

நீங்கள் சொன்னதுபோல் உலகநாடுகள் எல்லாம் இலங்கையை

 அபிவிருத்தி பண்ணுங்கோ என்று கொடுத்த நிதியில் அவை அமைக்கப்பட்டதில்லை.

4 hours ago, ரதி said:

சிங்கள பகுதிகளையும் போய் பாருங்கோ கொழும்பை தவிர மற்ற சிங்க பிரதேசங்களை விட வடக்கை நன்றாக அபிவிருத்தி செய்கிறார்கள் 

இயற்கை அழிவுகளை தவிர எந்த அழிவுகளையும் பார்த்திராத சிங்கள தேச கட்டுமானங்கள் பழசாதான் இருக்கும்.

என்னமோ எதிரிநாட்டை துவம்சம் செய்ததுபோல் சொந்தநாட்டின் ஒரு பகுதியை கொத்துக்குண்டும் பல்குழல் பீரங்கிகளையும் கொண்டு தகர்த்து இடிச்சு தரைமட்டமாக்கியபின் அந்த பூமியில் புதுசா ஒரு கக்கூசு கட்டினாலும் தென்னிலங்கை கட்டிடங்களைவிட பள பள என்று இல்லாவிட்டாலும் பார்க்க நல்லாதானிருக்கும்.

சுனாமிகாலத்தில் சர்வதேசங்கள் தமிழர் பகுதிக்கு ஒதுக்கிய நிதியை புலிகள் கையில் கொடுக்க கூடாது என்று ஜேவிபி நீதிமன்றம்வரை சென்று தடை வாங்கியதாக ஞாபகம் உண்டு.

மற்றும்படி ஒரு பேரழிவின் பின்னர் உலக உலக உதவிகள் எதுவும் கிட்டாமல் புலிகள் தமது பகுதியில் ஏற்பட்ட சேதங்களை தனித்து நின்று  ஈடுகட்டினர் என்றால் கண்டிப்பாக அது புலம்பெயர் மக்களிடம் இருந்து கிடைத்த ஒரு பகுதி உதவியினால்தான்,அதனை அவர்கள் முழுங்கி பிறரைபோல் ஏப்பமிட்டிருக்க வாய்ப்பில்லை.

பெரும்பகுதி உதவியை சிங்களம் பல தடைகளை ஏற்படுத்தி தடுத்துவிட்டது,  அதில் தமிழ்பகுதிக்கு கொடுக்கபடாமல்  களஞ்சியங்களில் வைக்கப்பட்டு காலாவதியான மருந்து உணவு பொருட்களும் அடக்கம் என்பது  நாம் கடந்து வந்த கதை.

கொழும்பு அபிவிருத்தியும் யாழ் அபிவிருந்தியும் ஒன்றல்ல என்று நினைக்கிறேன். ஒன்று முன்னேற்றைத்தை நோக்கிய அபிவிருத்தி மற்றது நுகர்வோரை நோக்கிய அபிவிருத்தி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

ஒன்றுமே இல்ல சம்பளம் கொடுக்கிறார்கள் அதை வைத்து செலவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 

காசுக்கு விற்றாலும் பறி போகும் அதிக விலைக்கு விற்கிரார்கள் செய்தியாளர்கள் பறி போகுதெனவும் எழுதுகிறார்கள். அர்சாங்கமும் காணிகளை கையகப்படுத்துகிறது . வெளிநாட்டிலிருப்பவர்களும் காணி விற்கிறார்கள் எனது தெரிந்தவர் ஒருவர் வாங்கினார் 65 லட்சம் அது அவர் பழகியவ்ர் என்ற முறையில் குறைந்த விலைக்கு கொடுத்ததாம்  பெருமாள் பணம் அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பியது 

கொழும்பு வந்து இறங்கினால் உங்களை குலுங்காம கொண்டு செல்ல பாதைகள் அது மட்டும் அல்லாமல் நேரமும் ம்மிச்சம் சாமியோ

65 இலட்சம் ரூபாவை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப கூடியதாகவுள்ளது ஆச்சரியமான விடயம், பொதுவாக அரசுகள் அந்நிய செலாவணிநெருக்கடியைத்தீர்ப்பதற்கு நாட்டிற்கு வெளியே பணத்தினை எடுத்து செல்வதைக்கட்டுப்படுத்துவார்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டுக்கல்வி போன்றவற்றைக்கட்டுப்படுத்துவார்கள் அத்துடன் அத்தியாவசிய உள்நாட்டு பிரதியீட்டுப்பொருள்களின் இறக்குமதிக்குத்தடை விதிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கும் மருந்துவ பொருதளின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது, ஆனால் தேவையற்ற வகைகளில் அந்நிய செலாவணியை இழக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

சொந்தநாட்டின் ஒரு பகுதியை கொத்துக்குண்டும் பல்குழல் பீரங்கிகளையும் கொண்டு தகர்த்து இடிச்சு தரைமட்டமாக்கியபின் அந்த பூமியில் புதுசா ஒரு கக்கூசு கட்டினாலும் தென்னிலங்கை கட்டிடங்களைவிட பள பள என்று இல்லாவிட்டாலும் பார்க்க நல்லாதானிருக்கும்.

இதே நிலைதான் கிழக்கு ஜேர்மனிக்கும் மேற்கு ஜேர்மனிக்கும்....
மேற்கும் கிழக்கும் இணைந்த பின் கிழக்கு ஜேர்மனி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரதேசம் என பிரகடனப்படுத்தினார்கள். வீதிகள் பாலங்கள்  வீடுகள் என அனைத்தும் நவீன பிரமாண்டங்கள். வீதி விளக்குகள் தொடக்கம் எல்லாமே நவீன தொழில் நுட்பங்கள். புனரமைக்கப்பட்ட வீடுகளை பார்த்தால் புதிய நகரம் போல் காட்சியளிக்கும். அதை பார்த்து மேற்கு ஜேர்மன் மக்கள் எரிச்சல் பட்டாலும் தமது நாடு எனும் போது அமைதி அடைகின்றார்கள்.

60 வருடமாக  புனரமைக்காத வீதியை காபெட் போட்டு மூடியவுடன் ஈழத்தமிழர் அடிப்படை உரிமைகள் நிறைவேற்றப்பட்டு விட்டது என நான் புளகாங்கிதம் அடைந்தால் என்னை விசர் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

கடல்கோள் அனர்த்தத்தால் இலங்கைக்கு
13 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிரம் கோடி
ரூபா வரையிலான சேதங்கள்
ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி
தெரிவித்துள்ள நிலையில்
அனர்த்தத்தையடுத்து இதுவரை இலங்கைக்கு
13694 கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள்
கிடைக்கப் பெற்றுள்ளதாக திறைசேரி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடல்கோள்
அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள தேசங்களை
மீண்டும் புனரமைக்க இதுவரை 13694 கோடி
ரூபா வெளிநாட்டு உதவிகள் இலங்கையை
வந்தடைந்துள்ளன.இதற்கு மேலதிகமாக
அவசர புனரமைப்பு பணிகளுக்காக கடன்
உதவியாக மேலும் 45462 கோடி ரூபா நிதியை
எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு
வழங்குவதாக வெளி நாடுகளும் மற்றும் பல
அமைப்புகளும் அரசிற்கு உறுதி
இலங்கைக்கு இது வரை கிடைத்த வெளிநாட்டு
உதவி 13694 கோடி ரூபா
யளித்துள்ளன.இதேவேளை அனர்த்தத்தால்
இலங்கைக்கு 13 ஆயிரம் கோடி முதல் 15
ஆயிரம் கோடி ரூபா வரையிலான சேதங்கள்
ஏற்பட்டுள்ளதென கணிப்பிடப்பட்டிருப்பதாக
இலங்கை மத்திய வங்கி அண்மையில்
தெரிவித்தது.இதேவேளை அனர்த்தத்தையடுத்து
சர்வதேச நாணயநிதியம் 2500 கோடி
ரூபாவையும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆயிரம்
கோடி ரூபாவையும் உலக வங்கி 500 கோடி
ரூபாவையும் நிதி உதவிகளாக இலங்கை
அரசிற்கு வழங்கியுள்ளன.மேலும்
ஜப்பானிடமிருந்து 2560 கோடி ரூபா
இந்தியாவிடமிருந்து 2724 கோடி ரூபா
அமெரிக்காவிடமிருந்து 134 கோடி ரூபா நோர்வே
அரசிடமிருந்து 115 கோடி ரூபா மற்றும்
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்த 1400 கோடி
ரூபாவும் வெளிநாட்டு உதவிகளாக இலங்கை
அரசு பெற்றுள்ளது

https://noolaham.net/project/22/2148/2148.pdf

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை லட்சக்கணக்கில் அழித்த, இன்றுவரை எம்மை ஆக்கிரமித்து, எமது நிலங்களை சிறுகச் சிறுக அபகரித்து, எமது கலாசாரத்தை அழிக்கக் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு இனவாத அரசுக்கு இங்கொருவர் தொடர்ந்தும் ஆதரவாகப் பேசுவதன் காரணம் என்ன? 

ஒன்றில் கடந்த 40 வருடங்கலாக கோமாவிலிருந்து, தமிழர்மீது நடத்தப்பட்ட, இன்றும் நடத்தப்படுகிற இனவழிப்பு முயற்சிகள் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்கவேண்டும், அல்லது அனைத்தும் தெரிந்தும் தமிழரையும், முன்னிருந்த புலிகளையும் தான் ஏற்றுக்கொண்டிருக்கும் "புதிய அரசியல் வழியின் காரணமாக" எதிர்க்கவேண்டும் என்பதற்காக இதனைச் செய்யவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

60 வருடமாக  புனரமைக்காத வீதியை காபெட் போட்டு மூடியவுடன் ஈழத்தமிழர் அடிப்படை உரிமைகள் நிறைவேற்றப்பட்டு விட்டது என நான் புளகாங்கிதம் அடைந்தால் என்னை விசர் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்.🤣

எமது போராட்டமே றோட்டுக்கும் மின்சாரத்துக்கு மானதே.

அது தான் கிடைச்சிட்டுதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

சுனாமி காலத்தில் புலிகள் இருந்தார்கள் ...அவர்களுக்கு அரைவாசி

யாழில் இது வியாதி எந்த ஆதாரமும் இல்லாமல் புலிகள் மேல் கல்லெறிவது வெட்டு விழாமல் அந்த புலிகளுக்கு எதிரான கருத்து யாழில் இருப்பது எழுதியவருக்கு உள்ளுக்குள் சந்தோசம் ஆக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தீவு எதிர்கொண்டு நிற்கும் மோசமான நிதி நெருக்கடிகளுக்கு வினைத்திறனற்ற நிதி நிருவாகம் , ஊழல் மோசடிகள், தவறான முதலீடுகள், என்பன அடிப்படையான காரணமாக இருக்கின்றன என்பதை ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகள் மறைக்க முயற்சிக்கின்றார்கள் 

ராஜபக்சே குடும்ப உறுபினர்களுக்கும் அவர்களின் நண்பர்களும் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் கோடிக்கணக்கான அரச பொது நிதியை  திருடி இருக்கிறார்கள். 

சட்டவிரோதமாக செலவு செய்து இருக்கின்றார்கள் 

குறிப்பாக, 
மகிந்த ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்ட 'தேசத்திற்கு  மகுடம்' கண்காட்சி  நிகழ்வுகளை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட  வீதிகள் நிர்மாணிக்கும் திட்டத்தில்  மட்டும்  300 மில்லியன் ரூபா அரச பணம் திருடப்பட்டது 

மஹிந்த ராஜபக்சே அவர்களின் ஏற்பாட்டில் கீழ் நிரமணிக்கப்பட்ட கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையான விரைவு வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட   46.8 மில்லியன் பணத்திற்கு எவ் விதமான கணக்குகளும் இல்லை  

ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் வகையின்   2,278,000 பெறுமதியான அரச பணத்தை சட்டவிரோதமாக செலவு செய்து இருந்தார்கள் 

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தனது மைத்துனர் உதய வீரதுங்க சகிதம் மிக் விமானங்கள் கொள்வனவின் போது போலி நிறுவனம் (Bellimissa Holdings Limited) ஒன்றின் பெயரில் 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மோசடி செய்து இருந்தார்

கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் தலைமையில்  பெற்றோருக்கு நினைவு இல்லம் அமைப்பதற்காக  33 மில்லியன் பெறுமதியான அரச பொதுநிதி சட்டவிரோதமாக பயன்படுத்தி இருந்தார்கள் 

நாமல் ராஜபக்சே அவர்கள் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கான நாளை அமைப்பு அரசுக்கு சொந்தமான 172 மில்லியன் ரூபா பணத்தை களவாடி இருந்தது 

அதே போல நாமல் ராஜபக்சே அவர்கள் அரச பொதுநிதிக்கு சொந்தமான  45 மில்லியன் ரூபா பணத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டவிரோதமாக மோசடி செய்து இருந்தார் 

இது தவிர, நாமல் ராஜபக்சே 500,000 அமெரிக்கா டொலர்களை இலஞ்சமாக பெற்று கொண்டு அரச நிதியை துஸ்பிரோயோகம் செய்து இருந்தார் 

பாடசாலை மாணவராக இருந்த யோசித்த ராஜபக்சே அவர்களுக்கு சொந்தமான  CSN தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 365 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான எவ்விதமான கணக்குகளும் இல்லை 

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தொடர்புடைய அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில்  11.4 பில்லியன் அரச பொது நிதிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது 

பொருளாதார விவகார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே அவர்கள் திவிநெகுமே  அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 3000 மில்லியன் ரூபா பணத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாடல் செய்து இருந்தார் 

சட்டவிரோத பணபரிமாற்றத்தின் மூலம் இலங்கையின் பல பகுதிகளில்   282 மில்லியன் ரூபா பெறுதியான சொத்துக்களை பசில் ராஜபக்சே அபகரித்து இருக்கின்றார்

பசில் ராஜபக்சே அவர்களின் பொறுப்பின் கீழ் அப்பாவி பொதுமக்களுக்கு என உருவாக்கப்பட்ட அரச பொது வீடமைப்பு திட்டத்தில் செய்த மோசடி மட்டும் 70 மில்லியன் அரச பொது நிதிக்கு எவ்விதமான கணக்குகளும்   இதுவரை இல்லை 

அதே போல ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் நண்பர்களும் சட்டவிரோதமாக சம்பாதித்த 2 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது 

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்களின் பொது அரச பொது நிதி கையாடல் செய்யப்பட்டு இருந்தது. 

இது போதாதென்று  தேர்தல் அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்டு தோல்வியடைந்த  பாரிய அபிவிருத்தி (?) திட்டங்களான, 

அம்பாந்தோட்டை துறைமுகம் , 

அம்பாந்தோட்டை விமான நிலையம் ,   

கொழும்பு தாமரை தடாகம் 

100,000 பேருக்கான அரச வேலைவாய்ப்பு மற்றும் 50,000 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு போன்ற  பல திட்டங்களில் அரச பொது நிதி பாரிய இழப்பை சந்தித்தது. 

அதே போல மேற்குறித்த திட்டங்களுக்காக பெருமளவு கடன்கள் பெறப்பட்டன. சாத்திய ஆய்வுகள் இன்றி பணம் அச்சிடப்பட்டன 

 இந்த சூழ்நிலையில் அரச பொது நிதி எதிர்கொண்டு நிற்கும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்ககாக  அரச ஊழியர்களை தங்களது மாத சம்பளத்தை தியாகம் செய்யுமாறு ராஜபக்சே நிருவாகம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன 

கோடிக்கணக்கான பணத்தை திருடிய ராஜபக்சே குடும்பத்தினரை தவிர்த்து வெறும் 20000-50000 வரை சம்பளம் பெரும் அரசாங்க ஊழியர்களை தியாகம் செய்ய கோருவது கோரமானது

https://www.facebook.com/permalink.php?story_fbid=1521953298143674&id=100009870542216

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊழல் செய்யப்படும் பணம் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் மீது கட்டுப்பாடுகளை  விதிக்கவில்லைபோல உள்ளது, ஒரு கற்பனை மட்டுமே, பதவிக்காலம் முடிந்தபின் மீண்டும் வெளிநாட்டில் போய் குடியேறி அப்பணத்தினை அனுபவிக்கலாம். ( இது ஒரு ஊகம்  மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ணை, உதெல்லாம் ஏதோ பெரிய களவெண்டு இஞ்ச தூக்கிக்கொண்டு வாறியள். புலிகள் அடிக்காத கொள்ளையா? 

புலிகள் மத்திய வங்கிக்குக் குண்டு வைக்கேக்க அங்கேயிருந்த தங்கம், பணம் எண்டு இன்றைய மதிப்பில ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எடுத்துக்கொண்டு போய் சுவிஸ் பாங்கில (வன்னியில இருக்கிற சுவிஸ் பாங்கச் சொல்லுறன்) போட்டவையாம் எல்லே? உது போதாதெண்டு, வெளிநாட்டில இருந்து கப்பல் கப்பலா வந்திறங்கின டாலர்களை அப்படியே தங்கட நிலச் சுரங்கத்துக்கை கொண்டுபோய் பதுக்கி வைச்சு இருந்தவையாம். தலைவர், சூசை, பால்ராஜ், ஜெயம், தீபன், சொர்ணம் எண்டு எல்லாத் தளபதி மாரும் உந்தக் கொள்ளையடிச்ச பனத்தில வன்னிக்குள்ள பெரிய பல்நாட்டு வியாபாரங்களை நடத்தி வந்தவையாம். உதை அறிஞ்ச கருணா, நீதிகேட்டுப் போராடித்தான் வெளியில வந்தவராம் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்.

ராஜபக்ஷ குடும்பம் காசு அடிச்சுது எண்டு சொல்லுறியளே, அவங்கள் நாட்டுக்கு எத்தினை நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறாங்கள் எண்டு தெரியுமே உங்களுக்கு? நூறுரூபாயில 75 ரூபாயை அடிச்சாலும் மீதி 25 ரூபாய நாட்டுக்குக் குடுக்கிறாங்கள் தானே? அதுகாணாதே உங்களுக்கு? போதாக்குறைக்கு சீனாவைக் கொண்டுவந்து இறக்கிவிட்டது ஆர்? அதுவும் எங்கட ராஜபக்ஷ குடும்பம்தானே? இப்ப பாருங்கோ, எங்கட நாடு இன்னொரு வல்லரசா வரப்போகுது. அபிவிருத்தியெண்டால் அபிவிருத்தி, அந்தமாதிரி அபிவிருத்தி. ஊரெல்லாம் ரோட்டுப் போட்டு விட்டுட்டாங்கள் எண்டால், இனிமேல் சீனாக்காரன் சந்தோசமா தன்ர வாகனங்களை ஓடித்திரியலாம். இது எங்களுக்குப் பெருமதானே? இப்ப என்ன, உந்தக் கடன் எல்லாம் எப்பிடிக் கட்டப்போறியள் எண்டு கேக்கப்போறியள், அவ்வளவுதானே? நாங்கள் எதுக்கு இருக்கிறம்? கோத்தா மாமா பாடுபட்டு புலிகளை அழிச்சதுக்கு நாங்கள் அவருக்கு இந்தச் சின்ன உதவியச் செய்யாட்டில் பிறகு என்னத்துக்கு இருந்து எண்டு கேக்கிறன்? 

எப்பபாத்தாலும் என்ர கோத்தா மாமாவைக் குறை சொன்னபடி. உங்களுக்கு உதே வேலையாப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாமல் ராஜபக்சே

இவருக்கு, ஏறத்தாழ 1 -5 பில்லியன் டாலரில் துபாய்  (அல்லது UAE இந்த ஓர் இராச்சியத்துள்) இல் வங்கி வைப்பில் உள்ளது.

இவ்வலுவது நாடுகளும் இருக்க, நமல் அடக்கடி, துபாய், UAE  ஏன்? 
 
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

65 இலட்சம் ரூபாவை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப கூடியதாகவுள்ளது ஆச்சரியமான விடயம், பொதுவாக அரசுகள் அந்நிய செலாவணிநெருக்கடியைத்தீர்ப்பதற்கு நாட்டிற்கு வெளியே பணத்தினை எடுத்து செல்வதைக்கட்டுப்படுத்துவார்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டுக்கல்வி போன்றவற்றைக்கட்டுப்படுத்துவார்கள் அத்துடன் அத்தியாவசிய உள்நாட்டு பிரதியீட்டுப்பொருள்களின் இறக்குமதிக்குத்தடை விதிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கும் மருந்துவ பொருதளின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது, ஆனால் தேவையற்ற வகைகளில் அந்நிய செலாவணியை இழக்கிறது.

இலங்கையில் இருந்து வங்கிகள் ஊடாக இவ்வளவு பணம் அனுப்பமுடியாது என்று நினைக்கிறேன். உண்டியல் மூலம் அனுப்பி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி “காசடிச்சாலும் மனச்சாட்சியோட” மனச்சாட்சி உள்ளவன் காசடிப்பானா…? என்ன ஒரு முண்டு கொடுப்பு.

“புலிகளுக்கு அரவாசி” இப்படி கூச்சம் இல்லாது எழுதுகிறீர்களே..? பங்கு பிரித்து கொடுத்தது நீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

“புலிகளுக்கு அரவாசி” இப்படி கூச்சம் இல்லாது எழுதுகிறீர்களே..? பங்கு பிரித்து கொடுத்தது நீங்களா?

ஒரு கோட்டினை சிறிதாகக் காட்டுவதற்கு அதற்கருகில் இன்னொரு கோட்டினை அதனைக் காட்டிலும் நீளமானதாகக் கீறுவதில்லையா? அதுபோலத்தான் மீரா இதுவும். கோத்தா, மகிந்த சகோதரர்களின் குற்றத்தைச் சிறிதாகக் காட்டுவதற்கு புலிகளும் குற்றம் செய்தார்கள்தானே என்று காட்டவேண்டியிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

எம்மை லட்சக்கணக்கில் அழித்த, இன்றுவரை எம்மை ஆக்கிரமித்து, எமது நிலங்களை சிறுகச் சிறுக அபகரித்து, எமது கலாசாரத்தை அழிக்கக் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு இனவாத அரசுக்கு இங்கொருவர் தொடர்ந்தும் ஆதரவாகப் பேசுவதன் காரணம் என்ன? 

ஒன்றில் கடந்த 40 வருடங்கலாக கோமாவிலிருந்து, தமிழர்மீது நடத்தப்பட்ட, இன்றும் நடத்தப்படுகிற இனவழிப்பு முயற்சிகள் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்கவேண்டும், அல்லது அனைத்தும் தெரிந்தும் தமிழரையும், முன்னிருந்த புலிகளையும் தான் ஏற்றுக்கொண்டிருக்கும் "புதிய அரசியல் வழியின் காரணமாக" எதிர்க்கவேண்டும் என்பதற்காக இதனைச் செய்யவேண்டும். 

அவர்களுக்கு தெரிந்ததை செய்கிறார்கள், அவர்கள் அறிவு அவ்வளவுதான், அதற்கு மேல்  நாம் எதிர்பார்த்து நேரத்தை வீணாக்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி அனர்த்தத்தின் போது மஹிந்தா அடிச்ச கொள்ளையை நீதிமன்றத்திற்கு கொண்டு போனார்கள், தான் கம்பி எண்ணப்போகிறேன் என்பது நன்றாக தெரிந்ததும், அந்தப்பணத்தை வீசி, சந்திரிகா அரசவையில் இருந்துகொண்டே அவவுக்கு எதிராக சிங்கள மக்களை கிளப்பி, குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்புவோம் என பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்து, குடும்பத்திலுள்ள அனைவரும் ஆட்சிக்குள் குடியேறிவிட்டினம்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை தீவு எதிர்கொண்டு நிற்கும் மோசமான நிதி நெருக்கடிகளுக்கு வினைத்திறனற்ற நிதி நிருவாகம் , ஊழல் மோசடிகள், தவறான முதலீடுகள், என்பன அடிப்படையான காரணமாக இருக்கின்றன என்பதை ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகள் மறைக்க முயற்சிக்கின்றார்கள் 

ராஜபக்சே குடும்ப உறுபினர்களுக்கும் அவர்களின் நண்பர்களும் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் கோடிக்கணக்கான அரச பொது நிதியை  திருடி இருக்கிறார்கள். 

சட்டவிரோதமாக செலவு செய்து இருக்கின்றார்கள் 

குறிப்பாக, 
மகிந்த ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்ட 'தேசத்திற்கு  மகுடம்' கண்காட்சி  நிகழ்வுகளை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட  வீதிகள் நிர்மாணிக்கும் திட்டத்தில்  மட்டும்  300 மில்லியன் ரூபா அரச பணம் திருடப்பட்டது 

மஹிந்த ராஜபக்சே அவர்களின் ஏற்பாட்டில் கீழ் நிரமணிக்கப்பட்ட கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையான விரைவு வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட   46.8 மில்லியன் பணத்திற்கு எவ் விதமான கணக்குகளும் இல்லை  

ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் வகையின்   2,278,000 பெறுமதியான அரச பணத்தை சட்டவிரோதமாக செலவு செய்து இருந்தார்கள் 

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தனது மைத்துனர் உதய வீரதுங்க சகிதம் மிக் விமானங்கள் கொள்வனவின் போது போலி நிறுவனம் (Bellimissa Holdings Limited) ஒன்றின் பெயரில் 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மோசடி செய்து இருந்தார்

கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் தலைமையில்  பெற்றோருக்கு நினைவு இல்லம் அமைப்பதற்காக  33 மில்லியன் பெறுமதியான அரச பொதுநிதி சட்டவிரோதமாக பயன்படுத்தி இருந்தார்கள் 

நாமல் ராஜபக்சே அவர்கள் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கான நாளை அமைப்பு அரசுக்கு சொந்தமான 172 மில்லியன் ரூபா பணத்தை களவாடி இருந்தது 

அதே போல நாமல் ராஜபக்சே அவர்கள் அரச பொதுநிதிக்கு சொந்தமான  45 மில்லியன் ரூபா பணத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டவிரோதமாக மோசடி செய்து இருந்தார் 

இது தவிர, நாமல் ராஜபக்சே 500,000 அமெரிக்கா டொலர்களை இலஞ்சமாக பெற்று கொண்டு அரச நிதியை துஸ்பிரோயோகம் செய்து இருந்தார் 

பாடசாலை மாணவராக இருந்த யோசித்த ராஜபக்சே அவர்களுக்கு சொந்தமான  CSN தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 365 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான எவ்விதமான கணக்குகளும் இல்லை 

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தொடர்புடைய அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில்  11.4 பில்லியன் அரச பொது நிதிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது 

பொருளாதார விவகார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே அவர்கள் திவிநெகுமே  அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 3000 மில்லியன் ரூபா பணத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாடல் செய்து இருந்தார் 

சட்டவிரோத பணபரிமாற்றத்தின் மூலம் இலங்கையின் பல பகுதிகளில்   282 மில்லியன் ரூபா பெறுதியான சொத்துக்களை பசில் ராஜபக்சே அபகரித்து இருக்கின்றார்

பசில் ராஜபக்சே அவர்களின் பொறுப்பின் கீழ் அப்பாவி பொதுமக்களுக்கு என உருவாக்கப்பட்ட அரச பொது வீடமைப்பு திட்டத்தில் செய்த மோசடி மட்டும் 70 மில்லியன் அரச பொது நிதிக்கு எவ்விதமான கணக்குகளும்   இதுவரை இல்லை 

அதே போல ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் நண்பர்களும் சட்டவிரோதமாக சம்பாதித்த 2 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது 

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்களின் பொது அரச பொது நிதி கையாடல் செய்யப்பட்டு இருந்தது. 

இது போதாதென்று  தேர்தல் அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்டு தோல்வியடைந்த  பாரிய அபிவிருத்தி (?) திட்டங்களான, 

அம்பாந்தோட்டை துறைமுகம் , 

அம்பாந்தோட்டை விமான நிலையம் ,   

கொழும்பு தாமரை தடாகம் 

100,000 பேருக்கான அரச வேலைவாய்ப்பு மற்றும் 50,000 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு போன்ற  பல திட்டங்களில் அரச பொது நிதி பாரிய இழப்பை சந்தித்தது. 

அதே போல மேற்குறித்த திட்டங்களுக்காக பெருமளவு கடன்கள் பெறப்பட்டன. சாத்திய ஆய்வுகள் இன்றி பணம் அச்சிடப்பட்டன 

 இந்த சூழ்நிலையில் அரச பொது நிதி எதிர்கொண்டு நிற்கும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்ககாக  அரச ஊழியர்களை தங்களது மாத சம்பளத்தை தியாகம் செய்யுமாறு ராஜபக்சே நிருவாகம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன 

கோடிக்கணக்கான பணத்தை திருடிய ராஜபக்சே குடும்பத்தினரை தவிர்த்து வெறும் 20000-50000 வரை சம்பளம் பெரும் அரசாங்க ஊழியர்களை தியாகம் செய்ய கோருவது கோரமானது

https://www.facebook.com/permalink.php?story_fbid=1521953298143674&id=100009870542216

இந்தக் கொள்ளைகளை நல்லாட்சி அரசு விசாரிக்க தொடங்கியதும், குடும்பத்தோடு கம்பியெண்ண பயந்து, மக்களிடம் தங்கள் கொள்ளை வெளிப்படமுன் மைத்திரி என்கிற இளிச்சவாயனை கைக்குள் போட்டு, குழப்பியடிச்சு, குண்டுவைச்சு மக்களை பயமுறுத்தி மீண்டும் கதிரையேறி தப்பித்துவிட்டோம் என்று நினைக்கலாம். என்றோ ஒருநாள் மாட்டாமலா போகப் போகிறார்கள்? இதுதான் இவர்களின் கடைசி குடும்ப அரசாட்சியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

65 இலட்சம் ரூபாவை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப கூடியதாகவுள்ளது ஆச்சரியமான விடயம்

இலங்கையிலிருந்து தனிநபர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை வங்கி வைப்பின் ஊடாக வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது, மத்திய வங்கியின் அனுமதி பெற்றே செய்யலாம்.. 

வேறு விதமாக( உண்டியல் மூலம் அல்லது தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் மூலம் அங்கேயும் இங்கேயுமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவுகளாக பரிமாற்றம் செய்திருக்கலாம்) இங்கே வந்திருந்தால்,  Anti Money Laundering(AML) சட்டம் அந்த பணத்தை வைப்பில் இட விட்டுவைக்குமா தெரியவில்லை.. வங்கிகளை இப்பொழுது APRA மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதைப்பற்றி அறியமுடிந்தது

ஆனால் இலங்கை இரட்டைகுடியுரிமை பெற்றவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையிலிருந்து தனிநபர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை வங்கி வைப்பின் ஊடாக வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது, மத்திய வங்கியின் அனுமதி பெற்றே செய்யலாம்.. 

வேறு விதமாக( உண்டியல் மூலம் அல்லது தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் மூலம் அங்கேயும் இங்கேயுமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவுகளாக பரிமாற்றம் செய்திருக்கலாம்) இங்கே வந்திருந்தால்,  Anti Money Laundering(AML) சட்டம் அந்த பணத்தை வைப்பில் இட விட்டுவைக்குமா தெரியவில்லை.. வங்கிகளை இப்பொழுது APRA மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதைப்பற்றி அறியமுடிந்தது

ஆனால் இலங்கை இரட்டைகுடியுரிமை பெற்றவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.. 

இங்கே வழமையான நாணயமாற்று  வீதத்தை விட 4 ரூபாய் கூடிய விலைக்கு எடுப்பிக்கிறார்கள்.

ஆனால் கையில்தான் காசு தரப்படும்.

வங்கியில் போட்டால் அது “கழுவுதல்” ஆகவே வரும் பணத்தில் 25% க்கும் மேல் கேட்பார்கள்.

எப்படி வசதி 🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.