Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 
பெண்களை, ஒரு பாலின இணைகளை, மாற்றுப் பாலினரை ஒதுக்கி வைத்தல் என்று வரும் போது தீவிர கிறிஸ்தவம், தீவிர இந்துத்துவம், தீவிர இஸ்லாம் எல்லாரும் ஒரே குடையின் கீழ் தான்!

தலிபான்களாவது வெளிப்படையாகச் சொல்லிச் செய்யும் நேர்மையுடன் இருக்கின்றனர்!😂

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்.

பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்

https://www.maalaimalar.com/news/district/2021/09/30072746/3059051/tamil-news-woman-abandons-her-child-and-runs-away.vpf?fbclid=IwAR3sAVcFPQXZfJ0AjnpHUwELpm94RrfrTWxy7-Kv4A28I6gkHp5AanUXl5U

இது.. கனடா அல்ல... ஹிந்தியா.

இதையும் சேர்த்து வைச்சு மெல்லுங்கள். பொழுதுபோகட்டும்.. பக்கங்கள் நீளட்டும். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு..

தின்று கொழுத்தால்.. நண்டு வளையில் இருக்காது என்று. உலகம் எத்தனையோ சிக்கலை சந்திச்சுக்கிட்டு இருக்கு.. இதில இதுங்க வேற. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அப்பன்

எங்கட வயதுக்கு இப்படி  பல பேரை கண்டும்  சந்தித்தும்  அடித்து துரத்தியும்

வந்தவை  தான்

இது காய்ஞ்சமாடு கம்பில விழுந்தது என்றளவில் ஏற்றுக்கொள்ளலாம்??

அதையே  வாழ்க்கையாக  மாற்றும்போது அதை பாராட்டத்தேவையில்லை என்பது  தான்  சரியானது?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அதையே  வாழ்க்கையாக  மாற்றும்போது அதை பாராட்டத்தேவையில்லை என்பது  தான்  சரியானது?

அண்ணா அவரவர் வாழ்கை அவரவர் உரிமை. மனிதர்களாக வாழ தகுதி உள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் அங்கீகரிக்கப்படனும் அதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதனை நீங்களோ.. நாங்களோ எவருமோ நிராகரிக்கவில்லை.

அதேவேளை.. இந்த வகை ஒருபால் ஈர்ப்பாளர்கள் அல்லது தேர்வாளர்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளனும் அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கை முறை என்பதை போன்ற கருத்துக்கள் ஏற்புடையவில்லை. இதை எல்லாரும் வாழ்த்தி வரவேற்கனும் என்பதும் ஏற்புடையதல்ல.

மக்கள் தமக்குள் உள்ள வெறுப்புணர்வை தம்மோடு வைச்சுக் கொள்ளலாம்.. அதனை வன்முறையாக அடுத்தவர்கள் மீது காட்டக் கூடாது. ஆனால்.. அதற்கான வெறுப்புணர்வே இல்லாதவர்களாக இருக்கனுன்னு எவரும் சொல்ல முடியாது. அதுவும் அவரவர் உரிமை ஆகும். ஒரு உணவை கூட வெறுக்கவும் விரும்பவும் உரிமை உள்ளது.. அது இயற்கையானது. அதற்கு மாறாக திணிக்கக் கூடாது. 

இங்கு சிலர் இதனை ஒரு பொது அம்சமாக்கி திணிப்பதையும் அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் சமூகங்களையும் குறைசொல்வது அவரவர் புரிந்து கொள்ளலின் இயலாமை அல்லது போதாமை மட்டுமே ஆகும்.

இதுவே தான் உங்களின் இந்தக் கேள்விக்கான பதில்.

இந்த தலைப்பில் இதற்கு மேல் எழுத எதுவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்.

பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்

https://www.maalaimalar.com/news/district/2021/09/30072746/3059051/tamil-news-woman-abandons-her-child-and-runs-away.vpf?fbclid=IwAR3sAVcFPQXZfJ0AjnpHUwELpm94RrfrTWxy7-Kv4A28I6gkHp5AanUXl5U

இது.. கனடா அல்ல... ஹிந்தியா.

இதையும் சேர்த்து வைச்சு மெல்லுங்கள். பொழுதுபோகட்டும்.. பக்கங்கள் நீளட்டும். 

தமிழில் ஒரு பழமொழி உண்டு..

தின்று கொழுத்தால்.. நண்டு வளையில் இருக்காது என்று. உலகம் எத்தனையோ சிக்கலை சந்திச்சுக்கிட்டு இருக்கு.. இதில இதுங்க வேற. 

பெற்ற பல பிள்ளைகளைக் கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு போய் விட்ட heterosexual ஆண்கள் பற்றிய செய்திகள் நெடுக்கருக்குக் கண்ணில் படவில்லைப் போல! 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

பெற்ற பல பிள்ளைகளைக் கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு போய் விட்ட heterosexual ஆண்கள் பற்றிய செய்திகள் நெடுக்கருக்குக் கண்ணில் படவில்லைப் போல! 

இதிலேயே நீங்கள் ஆண்களை குற்றம் சொல்லக்கூடாது அந்தப்பெண்  ஏன் பல பிள்ளைகள் பெற்றவனுடன் போக வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்.  ஒவ்வொரு கிராமங்களிலும். 10க்கு மேற்பட்ட சம்பவங்கள் உண்டு. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இதிலேயே நீங்கள் ஆண்களை குற்றம் சொல்லக்கூடாது அந்தப்பெண்  ஏன் பல பிள்ளைகள் பெற்றவனுடன் போக வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்.  ஒவ்வொரு கிராமங்களிலும். 10க்கு மேற்பட்ட சம்பவங்கள் உண்டு. 😂🤣

ஆம். heterosexual ஆண்கள்/பெண்கள் என்று நான் எழுதியிருக்க வேண்டும்.

என் பொயின்ற்: "இவை ஒரு பாலின இணைகளுக்கு மட்டுமான பிரச்சினையாக" நெடுக்கர் காட்ட முற்படுகிறார் - அப்படி இல்லையென்று சுட்டிக் காட்டுவது மட்டும் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

21 minutes ago, Justin said:

ஆம். heterosexual ஆண்கள்/பெண்கள் என்று நான் எழுதியிருக்க வேண்டும்.

என் பொயின்ற்: "இவை ஒரு பாலின இணைகளுக்கு மட்டுமான பிரச்சினையாக" நெடுக்கர் காட்ட முற்படுகிறார் - அப்படி இல்லையென்று சுட்டிக் காட்டுவது மட்டும் தான்!

அதில் இரு பால் இயற்கை மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற திருமண ஒப்பந்தப் பிறழ்வுகள் நிகழ்ந்தால்... பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு.. சட்டப் பாதுகாப்பு உள்ளது. இதில் என்ன சட்டப் பாதுகாப்பு உள்ளது..???! இதற்கான சட்டங்கள் தெளிவாக இயற்றப்பட்டு உள்ளனவா..?! என்பவை இப்பவும் விவாதத்திற்கும்.. கேள்விக்கும் உரியனவாகவே உள்ளன. கனடாவில் கூட அதில் தெளிவை காணம்.. அதிலும்.. ஹிந்தியா.. சொறீலங்கா.. போன்ற சாப்பாட்டுக்கே வசதி இல்லாது மக்கள் வாழும் நாடுகளில்..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

என்னதான் 30 - 40 வருடங்களாக புலம்பெயர்ந்து முதலாளித்துவ, தாராளவாத ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும், தமிழர்கள் மூடுண்ட சமூகமாகவே உள்ளனர். இதனால்தான் இந்தத் திரியில் தன்பால் ஈர்ப்புடைய பெண்களின் திருமணத்தை ஒவ்வாமையுடன் பார்க்கும் ஆசாரவாதிகளின் கருத்துக்கள் காட்டுகின்றன. 

தன்பாலீர்ப்பையும் விலங்குகளுடனான புணர்ச்சியையும் (beastility) தராசில் சமப்படுத்தி பிறழ்வாகப் பார்ப்பவர்கள் சமூக மாற்றங்களையும் தன்பாலீர்ப்பாளரின் மீதான பார்வைகள் மாறிவருவதையும் தெரியாமல் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்ட தீக்கோழிகள்தான். இப்படியான ஆசாரவாதிகள் தங்கள் குடும்பங்களுக்கும் தன்பாலீர்ப்பாளர்கள் வந்துவிடப்போகின்றார்களே என்ற பயத்தோடுதான் இந்தச் செய்தியை அணுகின்றார்கள். பிள்ளைகளை தமிழ்ப்படங்களில் வரும் காதல்களைக் காட்டி வளர்த்தால் இப்படியான பயம் வருவதையும் தவிர்க்க இயலாதுதானே!😉

ஆனால் தன்பாலீர்ப்பாளர்கள் சமூகத்தில் மிகச் சிறுபான்மையினர் என்பதால் நிகழ்தகவின்படி தமிழ்ப் பிள்ளைகளிலும் மிகமிகச் சிறிய பங்கினரே தன்பாலீர்ப்பாளர்களாக இருப்பர்.  எனவே அதிகம் பயப்படவேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக மதித்து, கேலி செய்யாமல் இருந்தாலே போதும். 

உங்களிடமிருந்து இவ்வளவு கேவலமான தனி நபரை தாக்கும் நையாண்டிக் கருத்து வரும் என்று எதிர் பார்க்கவில்லை.
இங்கே எனக்கு தெரிந்து ஒருத்தரும் அவர்கள் சேர்ந்து இருப்பதையோ ,குடும்பம் நடத்துவதையோ அல்லது அவர்களது தனிப்பட்ட நடத்தை பற்றியோ கதைக்கவில்லை .
உங்களுக்கோ அல்லது ஜஸ்டின்,பிரபா போன்றோருக்கும் நாம் என்ன சொல்ல வாறோம் என்று வடிவாயத் தெரியும் ...தெரிந்து கொண்டும், "அவர்கள் வாழ்க்கை  அவர்கள் உரிமை"  என்று கொண்டு ... யார் இப்ப இல்லை என்று சொன்னது ...எழுத வரும் போது மற்றவர் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று வாசித்து விட்டு எழுதவும் .மு.பு  எழுத  வேண்டியதை யாழில் எழுத வேண்டாம் 
 
5 hours ago, Justin said:

ரதி, ஏன் அது சட்ட விரோதமான செயல் என்று எழுதியிருக்கிறேன்! ஒரு தடவையல்ல! இரண்டு தடவைகள், வாசிக்க வேண்டியது உங்கள் பணியல்லவா?

:  

"

கொஞ்ச காலத்திற்கு முன்பு  ஒரு நாடு கூட இவர்களை சட்ட ரீதியாய் அங்கிகரிக்கவில்லை ....தற்போது சில நாடுகள் அங்கரித்து உள்ளன...அதே போல ஒரு காலத்தில் சட்ட ரீதியாய் விலங்குகளோடு உறவு கொள்வதில் தப்பில்லை என்று ஒரு நிலை வந்தால், அது பற்றி உங்கள் கருத்து என்ன என்பது  தான் என் கேள்வி ...அப்படி ஒரு நிலை வராது என்று மட்டும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...20,30 வருடத்திற்கு முன்பு நீங்கள் ஒருபால் திருமணத்தை சட்ட பூர்வமாக்குவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா ...இல்லை அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

May be an image of text

அதில் இரு பால் இயற்கை மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற திருமண ஒப்பந்தப் பிறழ்வுகள் நிகழ்ந்தால்... பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு.. சட்டப் பாதுகாப்பு உள்ளது. இதில் என்ன சட்டப் பாதுகாப்பு உள்ளது..???! இதற்கான சட்டங்கள் தெளிவாக இயற்றப்பட்டு உள்ளனவா..?! என்பவை இப்பவும் விவாதத்திற்கும்.. கேள்விக்கும் உரியனவாகவே உள்ளன. கனடாவில் கூட அதில் தெளிவை காணம்.. அதிலும்.. ஹிந்தியா.. சொறீலங்கா.. போன்ற சாப்பாட்டுக்கே வசதி இல்லாது மக்கள் வாழும் நாடுகளில்..???! 

நல்ல கேள்வி நெடுக்கர்! ஒரு பால் இணைவை "திருமணம்" என சட்டம் அடையாளம் காண யார் தடையென நினைக்கிறீர்கள்? உங்களைப் போல, இங்கே கருத்துப் பகிர்ந்த ஆசார வாதிகள் போல "திருமணம்" என்றால் ஆண் பெண்ணுக்கிடையேயானது மட்டும் தான் என்று வரைவிலக்கணத்தில் விடாப் பிடியாக நிற்கும் ஆட்களே காரணம்.

அமெரிக்காவில், கனடாவில் தீர்க்கப் பட்டு விட்டது. மேற்கில் வசிக்கும்  ஆசியக் குடியேறிகளான நீங்களே சட்ட அங்கீகாரத்திற்குத் தடையாக இருக்கும் போது, சிறிலங்காவில், இந்தியாவில் எப்படி சட்ட அங்கீகாரம் கிடைக்கும்?

எனவே, இது போன்ற சோகங்கள், குழந்தைக் கைவிடல்கள் நிகழாமல் இருக்க ஒரு பால் இணைவு சட்டரீதியில் அங்கீகரிக்கப் படவேண்டும். அதற்கு இதை இயல்புக்கு மாறென ஒதுக்காத நிலை முதலில் ஏற்பட வேண்டும். அதைத் தான் இங்கே நாம் செய்து கொண்டிருக்கிறோம்1

உங்கள் கேள்விக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

உங்களிடமிருந்து இவ்வளவு கேவலமான தனி நபரை தாக்கும் நையாண்டிக் கருத்து வரும் என்று எதிர் பார்க்கவில்லை.

சக மனிதர்களின் தனிநபர் விருப்பங்களை (அவை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இருந்தும்) கேவலப்படுத்துவர்களை வெளிக்காட்டினால் இப்படித்தான் தெரியும்😀

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

உங்களிடமிருந்து இவ்வளவு கேவலமான தனி நபரை தாக்கும் நையாண்டிக் கருத்து வரும் என்று எதிர் பார்க்கவில்லை.
இங்கே எனக்கு தெரிந்து ஒருத்தரும் அவர்கள் சேர்ந்து இருப்பதையோ ,குடும்பம் நடத்துவதையோ அல்லது அவர்களது தனிப்பட்ட நடத்தை பற்றியோ கதைக்கவில்லை .
உங்களுக்கோ அல்லது ஜஸ்டின்,பிரபா போன்றோருக்கும் நாம் என்ன சொல்ல வாறோம் என்று வடிவாயத் தெரியும் ...தெரிந்து கொண்டும், "அவர்கள் வாழ்க்கை  அவர்கள் உரிமை"  என்று கொண்டு ... யார் இப்ப இல்லை என்று சொன்னது ...எழுத வரும் போது மற்றவர் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று வாசித்து விட்டு எழுதவும் .மு.பு  எழுத  வேண்டியதை யாழில் எழுத வேண்டாம் 

கொஞ்ச காலத்திற்கு முன்பு  ஒரு நாடு கூட இவர்களை சட்ட ரீதியாய் அங்கிகரிக்கவில்லை ....தற்போது சில நாடுகள் அங்கரித்து உள்ளன...அதே போல ஒரு காலத்தில் சட்ட ரீதியாய் விலங்குகளோடு உறவு கொள்வதில் தப்பில்லை என்று ஒரு நிலை வந்தால், அது பற்றி உங்கள் கருத்து என்ன என்பது  தான் என் கேள்வி ...அப்படி ஒரு நிலை வராது என்று மட்டும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...20,30 வருடத்திற்கு முன்பு நீங்கள் ஒருபால் திருமணத்தை சட்ட பூர்வமாக்குவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா ...இல்லை அல்லவா 

சட்டம் எந்த அடிப்படையில் வேலை செய்கிறது என்ற புரிதல் எனக்கு இருப்பதால் விலங்குகளோடு புணர்தலை, குழந்தைகளோடு புணர்தலை சட்ட ரீதியாக மாற்ற மாட்டார்கள் என நம்புகிறேன். அப்படி சட்ட ரீதியாக மாற்றினால் அதற்கு நான் எதிர்ப்பு. 

20- 30 ஆண்டுகள் முன்பு எனக்கு இது சட்டரீதியாகுமா தெரியாது! ஆனால், அது தெரியாத அன்றும் நான் வளர்ந்தோரின் பாலியல் தெரிவை சட்டம் கட்டுப் படுத்த முடியாதென நம்பினேன். இன்றும் நம்புகிறேன். என் போன்றவர்களின் அபிப்பிராயத்தை இப்போது சட்டங்கள் validate பண்ணியிருக்கின்றன. அவ்வளவு தான் நடந்தது - நான் இதற்காக உழைக்கவில்லை, பலர் உழைத்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

எனவே, இது போன்ற சோகங்கள், குழந்தைக் கைவிடல்கள் நிகழாமல் இருக்க ஒரு பால் இணைவு சட்டரீதியில் அங்கீகரிக்கப் படவேண்டும். அதற்கு இதை இயல்புக்கு மாறென ஒதுக்காத நிலை முதலில் ஏற்பட வேண்டும். அதைத் தான் இங்கே நாம் செய்து கொண்டிருக்கிறோம்1

உங்கள் கேள்விக்கு நன்றி!

முதலாவது மேற்குலக நாடுகளில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். 

எமது சமூகப்படி திருமணம் என்பது சமூக சமய..அங்கீகார நிகழ்வு அதன் பின் தான் ஒப்பந்தம். 

இரு பால் திருமணம் என்பது தெளிவாக தாய் - தந்தையை இனங்காண்கிறது சட்ட வலுவுக்குள் கொண்டு வருகிறது குழந்தைகள் தொடர்பிலும் இணைகள் தொடர்பிலும்.

ஆனால்.. ஒருபால் ஈர்ப்பாளர்கள்.. அல்லது தேர்வாளர்கள்... குழந்தைகளை இயற்கையாகப் பெற முடியாது. அல்லது இருபால் திருமணத்தில் இருந்து விலகாமல்.. குழந்தையும் கணவரையும் கைவிட்டு அல்லது மறுதலையாக.. நடந்து கொண்டு.. மேலே இணைக்கப்பட்ட செய்திக்கு அமைவாக.. அங்கு குழந்தைகளுக்கான உரித்து.. சட்ட பாதுகாப்பு என்பது முன்னைய இருபால் திருமண ஒப்பந்ததிற்கு அமைய பாதுக்காக்கப்படுமா.. அல்லது பின்னைய சட்டத்துக்குப் புறம்பான (ஒரு பால் திருமண ஒப்பந்தம் செய்யாமல்).. இயற்கைக்கு ஒவ்வாத.. முறையில் வாழ்வதால்.. எப்படி சந்ததிகள் பாதுகாப்பும்.. மனப்பாதிப்புக்களும் இன்றி வாழ்வர்.

இது சமூகத்தில் பல பாதகமான விளைவுகளையே உருவாக்கும்.

இந்த இயற்கைக்கு முரணான திருமணங்களை மனித உரிமைகளின் பாதுகாப்பு நிமித்தம் சில நாடுகள் அங்கீகரித்து நின்றாலும்.. ஒட்டுமொத்த மனித குலமும் அங்கீகரிக்கனும்.. வாழ்த்தனும் என்ற அவசியமில்லை. அப்படி கட்டாயப்படுத்தவும் முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அதில் இரு பால் இயற்கை மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற திருமண ஒப்பந்தப் பிறழ்வுகள் நிகழ்ந்தால்... பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு.. சட்டப் பாதுகாப்பு உள்ளது. இதில் என்ன சட்டப் பாதுகாப்பு உள்ளது..???! இதற்கான சட்டங்கள் தெளிவாக இயற்றப்பட்டு உள்ளனவா..?!

ஒருபால் திருமணத்தின் மூலம் பிள்ளைகள் பெற வாய்ப்பு இல்லை எனவே சட்டப் பாதுகாப்பு தேவையில்லை பிரியும்” போது தனி தனியாக போகவேண்டியாது  தான்    சேர்த்து சொத்து வேண்டி இருத்தல் இரண்டாக பிரியும்  தனி தனியாக வேண்டியதுக்கு சட்டம் தேவைப்படலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:
Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
May be an image of text
 
இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
 
நன்றி கனடா இந்து மத குருமார் ஒன்றியம்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

சக மனிதர்களின் தனிநபர் விருப்பங்களை (அவை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இருந்தும்) கேவலப்படுத்துவர்களை வெளிக்காட்டினால் இப்படித்தான் தெரியும்😀

 இங்கு யாரும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை குறைகூறவில்லையே.அவர்கள் எப்படியோ இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் அதை சமய சடங்காக்கி அதில் கலந்துகொண்ட எத்தனையோ சிறு, டீனேஜ் பிள்ளைகளுக்கு இதுவெல்லாம் இனி சாதாரணம் என்ற ஒரு பிழையான தகவலை எடுத்துச்செல்லும் என்பதுதான் பிரச்சனையே. புதுமை விரும்பிகள் எப்போதும் மூக்கணாங்கயிறு கட்டின மாடுமாதிரி நேராகவே பார்த்து வகுப்பெடுப்பதால் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

ஒருபால் திருமணத்தின் மூலம் பிள்ளைகள் பெற வாய்ப்பு இல்லை எனவே சட்டப் பாதுகாப்பு தேவையில்லை பிரியும்” போது தனி தனியாக போகவேண்டியாது  தான்    சேர்த்து சொத்து வேண்டி இருத்தல் இரண்டாக பிரியும்  தனி தனியாக வேண்டியதுக்கு சட்டம் தேவைப்படலாம் 

அண்ணா, விந்து வங்கியின் மூலம் ஒருவரோ அல்லது இருவருமே பிள்ளைகளை மெற்றுக்கொள்ளலாம்.

ஆம் விவாகரத்து மற்றும் சட்டங்கள் பொதுவானதாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

இரண்டு தமிழ் பெண்கள?. இல்லை ஒரு. தமிழ் பெண் ணா

நான் இரண்டும் தமிழ் பெண்கள் என்று நினைத்துவிட்டேன்.தவறாக இருக்கலாம்
ஒரு தமிழ் பெண்ணுக்கா இவ்வளவு கலவரம், உடல் உறுப்பு ஆராய்ச்சிகள் எல்லாம் செய்கிறார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மூன்று நான்கு பதின்ம வயதினர் சேர்ந்து பஸ்ஸில் வைத்து தம் பாட்டில் இருந்த ஒர் பாலின இணைகளை (அவர்களில் ஒருவர் மருத்துவர்) தாக்கியதை கிருமினல் தாக்குதலாக அல்லவா பார்க்க வேண்டும்? இதெல்லாம், பெரும்பான்மை மக்களின் நியாயமான அதிருப்தி வெளிப்பாடாகவா நீங்கள் பார்க்கிறீர்கள்? பெரும்பான்மையின் வன்முறைக்குப் பயந்து ஒதுங்கி அவர்கள் தம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா? 

ஒரு கிறிமினல் தாக்குதலை நெடுக்காலபோவான்  தன்பாலீர்ப்பாள பெண் தம்பதியை லண்டனில் பஸ்ஸில் வைச்சு மொத்து மொத்தென்று மொத்தினார்கள் என்று சாதரணமாக  மகிழ்ச்சியாக சொன்னது எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இது மாதிரியான தாக்குதல்கள் ஆசிய வம்சாவளிகள் மீதும் வெள்ளையர்களால் நடத்தபடகின்றது தானே

5 hours ago, Justin said:

பெண்களை, ஒரு பாலின இணைகளை, மாற்றுப் பாலினரை ஒதுக்கி வைத்தல் என்று வரும் போது தீவிர கிறிஸ்தவம், தீவிர இந்துத்துவம், தீவிர இஸ்லாம் எல்லாரும் ஒரே குடையின் கீழ் தான்!

💯

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அண்ணா, விந்து வங்கியின் மூலம் ஒருவரோ அல்லது இருவருமே பிள்ளைகளை மெற்றுக்கொள்ளலாம்.

ஆம் விவாகரத்து மற்றும் சட்டங்கள் பொதுவானதாகவே உள்ளது.

ஏன் குளோனிங்கும் செய்து கொள்ளலாம். ஆனால்.. உலகில் எங்கும் முழுமையான மனித குளோனிங்கிற்கு அங்கீகாரம் இல்லை. 

அப்படி விந்து வங்கியில் இருந்து அல்லது முட்டை வங்கியில் இருந்து முட்டை வாங்கி.. வாடகை தாய் வாங்கி குழந்தை பெற்றுக் கொண்டாலும்.. அதெல்லாம் பெரும் செலவான விடயங்களாக இருப்பினும்..

இயற்கையான முறையில் இரு பால் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குரிய அதே சட்டப் பாதுகாப்பு.. மற்றும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தாய் - தந்தை - பிள்ளைகள் உறவுக்கான இயற்கையான உணர்வூட்டல்கள்.. இவர்களிடம் இருக்க வாய்ப்பு குறைவு..! மேலும் அது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்புக் குறித்து பெரும் சிக்கல்களை உருவாக்கும். 

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை.. இன்றும் பலர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அமைந்த இரு பால் திருமணங்களை தான் விரும்புகின்றனர். அங்கும் இப்படியான இயற்கைக்கு மாறான திருமண பந்தங்களை செய்பவர்கள் வெகு குறைவு.

32 minutes ago, nedukkalapoovan said:

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை.. இன்றும் பலர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அமைந்த இரு பால் திருமணங்களை தான் விரும்புகின்றனர். அங்கும் இப்படியான இயற்கைக்கு மாறான திருமண பந்தங்களை செய்பவர்கள் வெகு குறைவு.

உண்மையா?  ஆய்வு செய்து இதை கண்டு பிடித்த நீங்கள் உடனடியாக காப்புரிமை பெற்றுவிடுவது நல்லது. இல்லையெனில் இதை கண்டு பிடித்ததாக யாழ்களத்தில் வேறு சிலர் உரிமை கோரக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு கருத்து வைப்பது மறந்து மற்றையவர்களின்  கருத்தை எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கு கருத்து வைப்பது மறந்து மற்றையவர்களின்  கருத்தை எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

இந்த திரி  ஒழுங்காக போய்க்கொண்டு இருக்கிறது  தயவுசெய்து திசை திருப்ப வேண்டாம்  மேலும் அவனாவன் செய்வது அவனாவனுக்கு மற்றும் சட்டியிலுள்ளது தான் அகப்பையில்  வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இந்த திரி  ஒழுங்காக போய்க்கொண்டு இருக்கிறது  தயவுசெய்து திசை திருப்ப வேண்டாம்  மேலும் அவனாவன் செய்வது அவனாவனுக்கு மற்றும் சட்டியிலுள்ளது தான் அகப்பையில்  வரும் 

தங்கள் அறிவுரைக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் என்று பொதுவாக சொல்ல முடியாவிட்டாலும். யுகேயை பொறுத்தவரை ஒத்த பாலின ஜோடி ஒன்று

1. சட்டப்படி திருமணம் செய்யலாம்

2. புதிய விஞ்ஞான முறைகள் மூலம் பிள்ளை பெறலாம்

3. Wait for it - ஒத்த பாலினஜோடி ஒன்று இன்னொருவரின் பிள்ளையை தற்காலிக சுவீகாரம் (fostering) அல்லது நிரந்தர தத்து (adoption) எடுத்தலும் செய்யலாம். 
 
4. 👆🏼இதுக்கே ஷாக் ஆகினால் எப்படி? 2020 இல் யூகேயில் தத்து எடுத்த ஜோடிகளில் 1/6 ஒத்த பாலின ஜோடிகள்தான்.

https://www.coramadoption.org.uk/who-can-adopt/five-facts-about-lgbt-fostering-and-adoption

யூகே ஒரு ஜனநாயக நாடு. இங்கே சட்டம் இப்படி இருக்கிறது என்றால் அதுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு இருந்தாலே முடியும். இல்லை என்றால் இதை இல்லாமல் ஆக்குவோம் என்பதை முன்வைத்து அடுத்த எலக்செனில் கேட்கும் கட்சிக்கு அல்லவா வாக்கு போட்டு இந்த சட்டங்களை மக்கள் மாற்றி இருப்பார்கள்?

ஏனைய மேற்குலக நாடுகளிலும் கிட்டதட்ட இதே நிலை என்றே நினைக்கிறேன்.

பிகு

இன்னுமொரு அதிர்ச்சி தகவலை இப்போ விக்கிபீடியாவில் பார்த்தேன். 

அண்டோரா முதல், அர்ஜென்டீனா, பிரேசில், இஸ்ரேல், உருகுவே வரை பல நாடுகள் தன்பாலின இணையர்கள் பிள்ளைகளை தத்து எடுப்பதை சட்டபூர்வமாக்கியுள்ளனவாம். 

https://en.m.wikipedia.org/wiki/LGBT_adoption

கலாச்சார காவலர்களுக்கு காபூலை விட்டால் வேறு கதி இல்லை போல படுகிறது🤣.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.