Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
பஷில் ராஜபக்ஷ

பட மூலாதாரம்,BASIL RAJAPAKSE

படக்குறிப்பு,

பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர்

இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி இரவு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கையிலுள்ள 14,50,450 அரசு ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பள முரண்பாட்டு பிரச்னை தீர்க்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற 6,66,480 பேருக்கு, ஓய்வூதிய கொடுப்பனவிற்கு மேலதிகமாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக சமுர்த்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 3,500 ரூபா கொடுப்பனவிற்கு மேலதிகமாக, அவர்களுக்கு 1,000 ரூபா வழங்கப்படும்.

ஒரு கிலோகிராம் நெல்லுக்காக விவசாயிகளுக்க 75 ரூபா வழங்கப்படும்.

20 பர்ச்சஸ் நிலப்பரப்பில் வீட்டுத் தோட்டத்தை செய்வோருக்கு 10,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் 6 மாதங்கள் கடந்த பின்னர், மீண்டும் இதே தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, மலையக மக்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை கொள்வனவு செய்வதற்கு, தலா ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 80 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை

கோதுமை மாவின் விலை தற்போது சந்தையில் 120 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த நிவாரண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு முழுமையான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 5000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஷில் தரும் விளக்கம்?

கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு அந்த தாக்கம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவித்திட்டத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக, நிதி அமைச்சு பாரிய பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், பாரிய பிரியத்தனங்களை மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க திட்டமிட்டதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பொருளாதார நிபுணரின் பார்வை

இலங்கை

பட மூலாதாரம்,M. GANESHAMURTHY

படக்குறிப்பு,

எம். கணேஷமூர்த்தி, பொருளியல் விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம்

தற்காலிக நிவாரணத்தை வழங்கி, நீண்ட கால அடிப்படையில் மக்களின் வாழ்விலை நிலையற்றதாக்கும் முயற்சியே, அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் ஊடாக பார்க்க முடிகின்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சுமார் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண பொதியொன்றையே அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருமானம் மிக மிக குறைவாக மட்டத்தில் சென்றுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இப்படியான ஒரு நிவாரண அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் அவர் கூறுகின்றார்.

சரிந்துக்கொண்டு செல்லும் தமது செல்வாக்கை, தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இது நடைமுறை சாத்தியமற்ற முயற்சி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''இந்த நிவாரணத்திற்கான பணம் எங்கிருந்து பெறப்பட போகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஒரே வழி பணத்தை அச்சிடுவதுதான். அப்படி உள்நாட்டில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணங்களை கொடுத்தால், பணவீக்கம் பல மடங்காக அதிகரிக்கும்" என கணேஷமூர்த்தி கூறுகின்றார்.

அரசாங்கம் இதனை தெரிந்து செய்கின்றதா? தெரியாமல் செய்கின்றதா? என ஒன்றுமே புரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு முழுமையான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அரசாங்கத்திற்கான வருமானம் மேலும் குறைவடையும் அதேவேளை, நிவாரணம் வழங்குவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவு பல மடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொருளியல் நியாயப்படுமொன்று கிடையவே கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பொருளாதார பாதிப்பு காணப்படுகின்ற தருணத்தில், விலைகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இவ்வாறான பாரிய நிவாரண பொதிகளை வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது என எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

''காசு கிடைப்பதை எண்ணி மக்கள் சந்தோஷப்படலாம். ஆனால் பொருளாதாரம் என்று பார்க்கும் போது, அது மிக மோசமானதாக இருக்கும். ஒரு பில்லியன் டொலரை ஏதாவது ஒரு நாடு அன்பளிப்பாக வழங்குமாக இருந்தால், அதை இப்படி செலவிடுவது பரவாயில்லை. ஆனால், கடனை பெற்றோ அல்லது பணத்தை அச்சிட்டோ இவ்வாறான நிவாரணத்தை வழங்கும் போது அது எந்தவித பலனையும் ஏற்படுத்தாது" என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59870451

(காசு) பிரிண்டிங் மெஷின் இருக்கும் வரைக்கும் ஏன் கவலை?  கோடி கோடியாக பிரிண்ட் பண்ணி வண்டில் வண்டிலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கூட கொடுத்து விடலாம்.

அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

(காசு) பிரிண்டிங் மெஷின் இருக்கும் வரைக்கும் ஏன் கவலை?  கோடி கோடியாக பிரிண்ட் பண்ணி வண்டில் வண்டிலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கூட கொடுத்து விடலாம்.

அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.

ஒரு 3டி பிரிண்டரோட போங்கோ.

காசு மட்டும் அல்ல. காசு அடிக்கும் பிரிண்டரையும் தேவைக்கு ஏற்ப அடிக்கலாம்🤣.

பண வீக்கம் மேலும் அதிகரிப்பதோடு கொடுப்பனவு பெறாதவர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். 

ராஜபக்‌சாக்கள் அடுத்த தேர்தலில் வேண்டுமென்றே தோற்ப்பதுதான் ஒரே வழி. நாட்டின் இன்றைய நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டியதில்லை.

பொதுமக்கள் புத்திசாலிகளாக இருந்தால் நொண்டிச் சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்காமல் வீட்டுத் தோட்டங்கள் மூலம் தமது உனவுத் தேவையை ஓரளவு பூர்த்திசெய்ய எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். போர்க்காலத்தில் பொருளாதாரத் தடைகளின்போது வழங்களை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்ற அனுபவம்கூட கைகொடுக்கவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

எஸ். கணேசமூர்த்தி சிங்களத்தை  பற்றி தெரியாமல் கதைக்கிறார் என நினைக்கிறேன்.  2500 வருட நீண்ட நெடிய வரலாறு சிங்களத்துக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

எஸ். கணேசமூர்த்தி சிங்களத்தை  பற்றி தெரியாமல் கதைக்கிறார் என நினைக்கிறேன்.  2500 வருட நீண்ட நெடிய வரலாறு சிங்களத்துக்கு உண்டு.

ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவும் எல்லையும்  உண்டல்லவா????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

(காசு) பிரிண்டிங் மெஷின் இருக்கும் வரைக்கும் ஏன் கவலை?  கோடி கோடியாக பிரிண்ட் பண்ணி வண்டில் வண்டிலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கூட கொடுத்து விடலாம்.

அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.

அடிக்கிறதெண்டு முடிவு எடுத்துவிட்டால்... சும்மா, ரூபாவில மினக்கெடாம, டொலர், பவுன்ஸ் எண்டு அடிச்சால், நாங்கள், பேப்பர், மை காசு தல்லாம்...   😜

1 hour ago, goshan_che said:

ஒரு 3டி பிரிண்டரோட போங்கோ.

காசு மட்டும் அல்ல. காசு அடிக்கும் பிரிண்டரையும் தேவைக்கு ஏற்ப அடிக்கலாம்🤣.

என்ன விசயம்... மூண்டு மட்டுக்கள் உங்கை நிண்டு, பதியீனம்...  🤔 🤗

  • கருத்துக்கள உறவுகள்

2 பரப்பில் வீட்டுத் தோட்டமா???? 

சூப்பர்👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ… என்னத்தை நம்பி, இவ்வளவு சலுகைகளை அறிவித்து இருக்கின்றார். 🧐

அவ்வளவு சலுகைகளையும் பார்க்க… தேர்தல் நேரம் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் போல்…
சகட்டு மேனிக்கு, அடிச்சு விட்டு இருக்கிறார். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ… என்னத்தை நம்பி, இவ்வளவு சலுகைகளை அறிவித்து இருக்கின்றார். 🧐

அவ்வளவு சலுகைகளையும் பார்க்க… தேர்தல் நேரம் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் போல்…
சகட்டு மேனிக்கு, அடிச்சு விட்டு இருக்கிறார். 🙂

தேர்தல் வருகிறது. ஜனாதிபதி பதவி விலக இருக்கிறார் அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. பசில் ஜனாதிபதி அல்லது பிரதமராக போட்டியிட இருக்கிறார்.

1 hour ago, விசுகு said:

ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவும் எல்லையும்  உண்டல்லவா????

யார் சொன்னது இது? அப்படி இருந்நாலும் அந்த முடிவு அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெறக்கூடும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

தேர்தல் வருகிறது. ஜனாதிபதி பதவி விலக இருக்கிறார் அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. பசில் ஜனாதிபதி அல்லது பிரதமராக போட்டியிட இருக்கிறார்.

பசில் ராஜபக்ச…. ஜனாதிபதி / பிரதமராக போட்டியிட்டால்,
சிங்கள மக்கள் எவ்வளவு பேர் ஆதரவு கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறி.
ஆனால்…அந்த இடை வெளிக்குள், இராணுவம் புகுந்து விடும் என நினைக்கின்றேன்.
காலம் கனியட்டும்…என்று, இராணுவம் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

தேர்தல் வருகிறது. ஜனாதிபதி பதவி விலக இருக்கிறார் அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது. பசில் ஜனாதிபதி அல்லது பிரதமராக போட்டியிட இருக்கிறார்.

பசில், பிரதமர் ஆகிறார், மகிந்தா ஒதுங்குகிறார்.... இது கொழும்பு செய்தி.... சொல்லப்படாத செய்தி; பசில் பிரதமர் ஆகிய பின் கோத்தா ஒதுங்குகிறார். சட்டப்படி பசில் ஜனாதிபதி ஆவார். பின்னர் மகிந்த மீண்டும் பிரதமர் ஆவார்.

பக்சேகளை புரிந்து கொள்ளுங்க, யூட்டர்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கற்பகதரு said:

தேர்தல் வருகிறது.

நான் நினைக்வில்ல்லை அண்ணா. இப்போ தேர்தல் வந்தால் மொட்டுக்கு மரண அடி நிச்சயம்.

3 minutes ago, Nathamuni said:

சட்டப்படி பசில் ஜனாதிபதி ஆவார்.

பசில் இன்னமும் அமெரிக்கன் டியுல் சிடிசனா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பசில் இன்னமும் அமெரிக்கன் டியுல் சிடிசனா?

டியுல் சிடிசன், சட்டம் வந்தோன்ன மாத்தினவையள் எல்லோ...🤔

அதாலை தானே பசில் எம்பியாகி, நிதியமைச்சராக வந்தவர்.... ரணில் காலத்தில, கீதா குமாரதுங்கவை தூக்கி எறிஞ்சவையள்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை பதவியில் தக்க வைக்க கொடுக்கப்படும் விலை. நாடு எப்படிப் போனால் தான் அவைக்கு என்ன.

இதோடு மாகாண சபை தேர்தல்கள் வரக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

டியுல் சிடிசன், சட்டம் வந்தோன்ன மாத்தினவையள் எல்லோ...🤔

அதாலை தானே பசில் எம்பியாகி, நிதியமைச்சராக வந்தவர்.... ரணில் காலத்தில, கீதா குமாரதுங்கவை தூக்கி எறிஞ்சவையள்...

ஓம். 

ஆனால் ஒரு அமெரிக்கன் சிட்டிசனாக இப்போதும் இருப்பவர் இப்படி பின்கதவால் ஜனாதிபதி/முப்படை தளபதியாக பிக்குகள் விடமாட்டார்கள் என நான் நினைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

(காசு) பிரிண்டிங் மெஷின் இருக்கும் வரைக்கும் ஏன் கவலை?  கோடி கோடியாக பிரிண்ட் பண்ணி வண்டில் வண்டிலாக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கூட கொடுத்து விடலாம்.

அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.

நீங்கள் பிரின்ரிங் மெசின் கொண்டு போகத் தேவையில்லை.

அவர்கள் அச்சடித்து தாறதை கொண்டு போக ஒரு லொறி கொண்டு போனால் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அடுத்த முறை ஊருக்கு போகும் போது ஒரு பிரிண்டிங் மெஷினுடன் தான் போகப் போகின்றேன்.

அதுதான் நடக்காதே! உங்களை அச்சு இயந்திரம் கொண்டு வர  அனுமதி தரமாட்டார்களே. முதலும் இல்லை, தண்டம் வேற கட்ட வேண்டி வரும். "பேராசை பெருநட்டம், தீராத உபத்திரவம்." வசதி எப்பிடி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம். 

ஆனால் ஒரு அமெரிக்கன் சிட்டிசனாக இப்போதும் இருப்பவர் இப்படி பின்கதவால் ஜனாதிபதி/முப்படை தளபதியாக பிக்குகள் விடமாட்டார்கள் என நான் நினைகிறேன்.

இல்லையே... பிரதமர், ஜனாதிபதி ஆவது சட்டபூர்வமான வழி தானே. மகிந்தா வரமுடியாமல் இருப்பதும், அதே சட்டம் தானே.

மேலும் பசில் அமெரிக்கா போட்டு வந்தவர்..... கோத்தா மாதிரி அமேரிக்க சிற்றிசன்சிப்பை கடாசி இருக்கலாம்.

அவர்கள், யமனை பச்சடி போடும் ஆட்கள்.... 😁

அய்யா, மல்லி...... கதை....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்

5 hours ago, ஏராளன் said:

கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு அந்த தாக்கம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

5 hours ago, ஏராளன் said:

அரசாங்கம் இதனை தெரிந்து செய்கின்றதா? தெரியாமல் செய்கின்றதா? என ஒன்றுமே புரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆண்டு ஆட்சி கவிழலாம் என்று பேசப்படுகிறது. அதை தடுப்பதற்கு செய்யப்படும் ஏமாற்று வித்தை. அல்லது மூளை குழம்பியிருக்கலாம். ஐந்து ஐயாயிரம் வழங்கினால், விலைவாசி பத்து ஆயிரமாகியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்தில் சில நல்ல அம்சங்கள் உள்ளது, விவசாயத்திற்கு அரசு சலுகை வழங்குவது நல்ல திட்டம் தான், உள்ளூர் உற்பத்திகளை அரசு ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

ஆனால் இந்த தலைமுறையில் உள்ள குழந்தைகள் போசாக்கு குறைவால் பாதிக்கப்படப்போகிறார்கள், அது நீண்ட கால பின்னடைவை ஏற்படுத்தப்போகிறது, உலக அரசுகளை எதிர்பாராமல் இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடக்கில் பொருளாதார தடை நிலவிய காலத்தில் பாணில் குறித்த அளவு சிறுதானியங்கள் (உள்நாட்டு உற்பத்தி) கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது, அதன் மூலம் கோதுமை மாவிற்கான கேள்வி குறைந்தது அத்துடன் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனடி, நீண்டகால திட்டம் எதுவும் இல்லை. எல்லாம் பெறும் கடனை பெற்ற கடனுக்கு வட்டியாக கட்டவே முடியும். போர் முடிந்த கையோடு ஆரம்பித்திருக்க வேண்டும். அவர்களோ வெறிப்பேச்சு, வெற்றிவிழா, நினைவுத்தூபி, பாராட்டு விழா,  புத்த சங்கங்களுக்கு காசை அள்ளி இறைத்து ஒவ்வொரு குடும்பமும்   தமிழ் மக்கள் அடக்கப்பட்டதை பார்வையிட அரச செலவில் வடக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இப்படி முட்டாள்தனமாக கிடைத்த உதவிகளை செலவிட்டு பாராட்டில் நனைந்து, மீண்டும்  தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக  ஆட்சியை பிடிக்க இருந்த பணத்தையெல்லாம் செலவிட்டு இப்ப தப்பிப்பதற்காக கேள்விகேட்டவர்களை எல்லாம் பதவி விலக்கி மூடி மறைத்தாலும்...... எவ்வளவு நாளைக்கு? சலுகைகளாலும், அடக்குமுறையாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லையே... பிரதமர், ஜனாதிபதி ஆவது சட்டபூர்வமான வழி தானே. மகிந்தா வரமுடியாமல் இருப்பதும், அதே சட்டம் தானே.

பிரதமர் ஜனாதிபதியாவது சட்டப்படி சரிதான்.

ஆனால் இப்போ அமெரிக்கா பிரஜையாய் இருப்பவரை பிக்குகள் முப்படைத்தளபதியாய் ஏற்பது கடினம்.

2 hours ago, Nathamuni said:

மேலும் பசில் அமெரிக்கா போட்டு வந்தவர்..... கோத்தா மாதிரி அமேரிக்க சிற்றிசன்சிப்பை கடாசி இருக்கலாம்.

இதைதான் நான் கேட்டேன் - நீங்கள் சொல்வது போல் பசிலை ஜனாதிபதியாக்கும் பிளான் எண்டால் - அநேகமாக அமெரிக்க பிரஜா உரிமையை கைவிட்டிருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

பொதுமக்கள் புத்திசாலிகளாக இருந்தால் நொண்டிச் சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்காமல் வீட்டுத் தோட்டங்கள் மூலம் தமது உனவுத் தேவையை ஓரளவு பூர்த்திசெய்ய எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். போர்க்காலத்தில் பொருளாதாரத் தடைகளின்போது வழங்களை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்ற அனுபவம்கூட கைகொடுக்கவில்லையா ?

இன்னும் வெளிநாட்டில் உள்ளவை அனுப்புங்கோ என்ற எதிர்பார்ப்பு மனநிலை தான் 95 சதவீதம். வளமான நிலம் நீர் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்னும் கொழும்பில் இருந்து கரட் வரேல்ல என்ற கவலையில் தான் பெரும்பாலான காத்திருப்பு.கெமிக்கல் கலப்பு உணவுகளை சாப்பிட வேண்டிய கட்டாயம் இங்கு. ஆனால் அதை நாகரீகமாக எஎதிர்பார்ப்போர் ஊரில். 

பச்சை மிளகாய் விலைகூடீட்டுது என சொல்வோர் அதை தாங்கள் உற்பத்தி செய்து சாப்பிடலாம் என்று யோசிக்கினமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, shanthy said:

இன்னும் வெளிநாட்டில் உள்ளவை அனுப்புங்கோ என்ற எதிர்பார்ப்பு மனநிலை தான் 95 சதவீதம்.

உந்த யூரியூப்பர்மாரும் கஷ்டப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிற மாதிரி  தெரியுது.ஆனாலும்  இது வளர்ந்து வேறு திசையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு என நான் நினைக்கின்றேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.