Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் விவாகரத்து என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ரஜனியின் காலத்தின் பின்னர் அது நடக்கும் என்று பலர் நினைத்தார்கள்  முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐஸ்வர்யாவா…. ஐக்கிய நாடுகள் சபையில், பரத நாட்டியம் ஆடினது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

குச்சி சரியான கில்லாடி. சவுந்தர்யாவையும் தான் வச்சிக்கப்போறன் என்று அப்ப அடம்பிடிச்சபோதே பிரிவு தொடங்கீட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த ஐஸ்வர்யாவா…. ஐக்கிய நாடுகள் சபையில், பரத நாட்டியம் ஆடினது. 😁

அவங்களேதான் , ஐநா சபையில ஆட்டுக்கு குழை வெட்டினமாதிரி இவங்க ஆடின ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு இன்னும் சிங்களாத்தானே இருக்காரு. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

ஒரு விசயத்தை கண்டியளே?
சுள்ளான் கனகாலம் கட்டிப்புடிச்சு வாழ்ந்ததை விட்டுட்டு இப்ப ஓம் நமச்சிவாயத்தை கட்டிப்புடிச்சிருக்கிறான் 😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

இல்லியே அண்ணாச்சி,  கிசு கிசு வேற மாதிரி எல்லோ போகுது.

பாதிக்கப்படப் போறது லிங்காவும் யாத்ராவும் தான் .... Image preview

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

குச்சி சரியான கில்லாடி. சவுந்தர்யாவையும் தான் வச்சிக்கப்போறன் என்று அப்ப அடம்பிடிச்சபோதே பிரிவு தொடங்கீட்டுது.

ம்
இந்த குச்சியால தான் எல்லா பிரச்சனையுமே.

நான் தனுசை சொன்னன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அதிர்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை. சினிமா உலகம் காலம் காலமாக இப்படித்தானே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

-GIF-afraid-creepy-disappointed-disgusted-do-not-want-fear-scared-shocked-GIF.gif

உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

ஐ.நா சபை உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

-GIF-afraid-creepy-disappointed-disgusted-do-not-want-fear-scared-shocked-GIF.gif

உலகமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.

ஐ.நா சபை உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்..!

ஒன்றுக்கும் எடுபடாத வன்னியரையே அசைக்கப் பண்ணுமென்றால், விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் போல கிடக்கு .......

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை தனுசின் புதுபடம் ஏதாவது வெளிவரப் போகுதோ?

அதற்கான விளம்பரமோ?

மாமனின் கலையை பின்பற்றுகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சாமானியன் said:

ஒன்றுக்கும் எடுபடாத வன்னியரையே அசைக்கப் பண்ணுமென்றால், விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் போல கிடக்கு .......

காலையில எழுந்து செய்தியை வாசிக்கலாமென கைப்பேசியை திறந்தால், இம்மாதிரி ஒன்றுக்கும் பயனில்லாத, அதுவும் அமங்களமான செய்தி திறக்கிறதென்றால் ஊடகங்களின் மீது கடுப்பாகுமா இல்லையா..?🙄

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

காலையில எழுந்து செய்தியை வாசிக்கலாமென கைப்பேசியை திறந்தால், இம்மாதிரி ஒன்றுக்கும் பயனில்லாத, அதுவும் அமங்களமான செய்தி திறக்கிறதென்றால் ஊடகங்களின் மீது கடுப்பாகுமா இல்லையா..?🙄

அவனவன் தீகுளிக்க தயாராகிறான்.
நீங்க இப்படி வேற நினைக்க.

தமிழ்நாடா கொக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் - ஐஸ்வர்யா: "கூடினோம், வாழ்ந்தோம், பரஸ்பரம் பிரிகிறோம்"

17 ஜனவரி 2022
 
தனுஷ்

பட மூலாதாரம்,DHANUSH

நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் கூறியுள்ளனர்.

இதன் கீழே தனுஷ், ஓம் நமசிவாய, அன்பை பரப்பவும் என்றும் ஐஸ்வர்யா, "உங்கள் மீது எப்போதும் மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டு புன்னகைக்கும் எமோஜியுடன் "கடவுளின் வேகம்" என்று தெரிவித்துள்ளார்.

வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா

தனுஷ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த 2000களில் அவருக்கு பக்கபலமாக அவரது இருந்தவர் ஐஸ்வர்யா.

தனுஷ்

பட மூலாதாரம்,AISHWARYA

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

அதுவும் தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தபோது, அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சமூகத்தில் ஒரு பிரிவினர் உணர்ந்தனர். தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர், ஆனால் அது இருவருக்கும் இடையில் எப்போதும் குறிகேகே வந்ததில்லை என இருவரும் தெரிவித்தனர்.

தனுஷ்

பட மூலாதாரம்,DHANUSH

இந்தஇருவரும் எப்படி காதலித்தனர் என்பதை அறிய வேண்டுமா? அது...

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வவர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார். ஆனால் அந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் அதற்கு மேல் எதுவும் இல்லை.

இந்த காலக்கட்டத்தில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்க்கிறார்கள் என்று ஊடக செய்திகள் தலைப்புச் செய்திகளாயின. சினிமா சிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து விரைவில், இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

"எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, த்ரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமிக்கிறார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-60030353

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது

இதுவே ரொம்ப லேட் என்டு நினைக்குறன் .. நீங்க ரெல் மீ.?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகும் மனித  வாழ்வும் சொர்க்கமானது

மிக மிக அழகானது இனிமையானது

அதை சந்தோசமாக இன்பமாக எந்தவித மனச்சங்கடங்களுமின்றி அனுபவிக்கணும்

அது சரிவராத  இடத்து

அல்லது வாழ்வு நரகமாகும்போது

பிரிதல் என்பதே அடுத்த  கட்டங்களையாவது ஆவது அனுபவித்துசெல்ல  நன்று

யாருக்காகவோ  வாழ்ந்த  பலர் தம்வாழ்வையே முடித்ததை  பார்த்தவன் என்றரீதியில்...

அதை விட இது  கோடி தரம்  நன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதுவே ரொம்ப லேட் என்டு நினைக்குறன் .. நீங்க ரெல் மீ.?

தோழரே! ஆண்பாவம் பொல்லாதது. அன்று அழத்தொடங்கியவன் இன்னும் நிறுத்தவேயில்லை.
 
டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு: திருமணம் உறவில் சேர்ந்து வாழ்வதை போலவே பிரிவையும் இயல்பாக்க வேண்டியது ஏன்?

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
AishDha

பட மூலாதாரம்,INSTAGRAM- @AISHWARYAA_R_DHANUSH

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக நேற்று இரவு தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

பிரிவை அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

18 ஆண்டுகள் திருமண பந்தத்திற்கு பிறகு இருவரும் பிரிகிறோம், எங்கள் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என இருவரும் தனித்தனியாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நேற்று இரவு பதிவிட்டார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த தம்பதியினரின் எதிர்பாராத இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இருவர் திருமண பந்தத்தில் இணைவது எப்படி இயல்பான ஒன்றோ அது போன்றே பிரிவதும் இயல்பான ஒன்றாக்க வேண்டும் எனவும் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்றும் கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

மேலும் ரஜினிகாந்திற்கு ஆறுதல் கூறியும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் 'WE ARE WITH YOU DHANUSH', 'WE LOVE DHANUSH' என்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விவாகரத்து இயல்பானதாக்க வேண்டும்

தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவை போலவே சமந்தா - நாக சைதன்யா தம்பதி கடந்த வருடத்தில் பிரிவை அறிவித்த போதும் 'Normalising Divorce' என்ற கருத்தை அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. உண்மையில் நம் சமூகத்தில் விவாகரத்து எப்படி பார்க்க படுகிறது, அதன் பின்னுள்ள அழுத்தம் என்ன இதை எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பாக எழுத்தாளர் கொற்றவையிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்,

எழுத்தாளர் கொற்றவை

பட மூலாதாரம்,FACEBOOK- KOTRAVAI N

படக்குறிப்பு,

எழுத்தாளர் கொற்றவை

"இன்று நான் பார்த்த பல பதிவுகளிலுமே இவர்களது பிரிவு குறித்து எதிர்மறையான கருத்துகளைத்தான் பார்த்தேன். 'இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்கிறார்கள், குழந்தைகள் பற்றி யோசிக்க மாட்டார்களா? குழந்தைகள் தவித்து போவார்கள்' என்ற ரீதியிலான பதிவுகள்தான் அதிகம். இவை அனைத்துமே முட்டாள்தனமான பதிவுகள் என்பேன்.

இருவர் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் இங்கு குடும்பம் என்பது சமூகத்திற்காக என்று மாறிவிட்ட நிலையில் எல்லாரும் அதில் கருத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு என்ன புரியவில்லை என்றால் நம் வாழ்வின் நோக்கமே திருமணம் மற்றும் அதன் பிறகு குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்பதுதான் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. திருமணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே," என்கிறார் கொற்றவை.

காணொளிக் குறிப்பு,

வயதில் சிறிய தனுஷை காதல் திருமணம் முடித்த ஐஸ்வர்யா

குழந்தைகளை காரணம் காட்டுவது சரியல்ல

"அதில் நமக்கு பொருந்தக்கூடிய துணைகளோடு மட்டும்தான் வாழ முடியும். எப்பொழது அது பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறோமோ அப்போது பிரிவது என்பது மிக இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இங்கு எல்லோரும் குழந்தைகளை காரணமாக காட்டுகிறார்கள். அம்மா அப்பா சண்டை போட்டு கொண்டு மகிழ்ச்சி இல்லாத குடும்பமாக இருந்தால் அந்த சூழ்நிலைதான் குழந்தைகளுக்கு இன்னும் கடினமான ஒன்று."

"அம்மா அப்பா மகிழ்ச்சியாக இல்லை, அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பதை எல்லாம் குழந்தைகள் மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். அப்படியான சூழ்நிலை அவர்களுக்கு ஆரோக்கியமானது கிடையாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு சூழ்நிலையை புரிய வைத்து, கணவன் மனைவியாகதான் நாங்கள் பிரிகிறோம் அம்மா அப்பாவாக எப்பொழுதும் குழந்தைகளை வளர்க்க முடியும் என்ற புரிதலை அவர்களுக்கு கொடுக்க முடியும். என்னுடைய வாழ்க்கையே அதற்கு உதாரணம். "

"இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற பிரிந்த பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் இன்னும் சுந்தந்திரமாக, பக்குவப்பட்டவர்களாகவே வளர்கிறார்கள். ஆனால் சமூகம் இன்னும் பழங்கால கதைகளையும் ஆணாதிக்க சிந்தனைகளையும் திணித்து கொண்டிருக்கிறது."

பெண்களுக்கே பாதிப்பு அதிகம்

இதுபோன்ற கட்டாய சூழ்நிலைகளில் வாழ்வதால் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் மனநிலை தவறிய சம்பவங்களும் உண்டு. இது மட்டுமில்லாமல் பயம், மன அழுத்தம், உடல் ரீதியிலான கொடுமைகள் என அனைத்தும் நடக்கிறது. இதற்கெல்லாம் சமூகம் என்ன பொறுப்பெடுத்து கொள்ளும்? ஒத்து வரவில்லை என்றால் பிரிவதுதான் ஆரோக்கியமான விஷயம் என்பதை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இது போன்ற பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும்.

அதன் காரணமாகவே அவர்கள் உடனடியாக இந்த முடிவு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட மாட்டார்கள். தங்களுக்குள்ளேயே சரி செய்துவிடதான் முனைவார்கள். பின்பு முடியாது என்ற சூழலில் பிரிந்து விடுகிறார்கள்.

இங்கு யாருமே சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை குறித்து யோசிக்காமல், குடும்பம் என்ற கட்டமைப்பை புனிதப்படுத்துவதைதான் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அந்த உறவில் சேர்ந்திருந்து குழந்தைகளுக்கு வருங்காலத்தில் உன்னுடைய துணையை இப்படியும் நடத்தலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை தான் காட்டுவோம். அதற்கு புரிதலோடு பிரியும் போது இபப்டியும் உன் துணையை சந்தோஷமாக நடத்தலாம் என அந்த குழந்தை கற்கும். இவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கிறது.

பிரபலங்கள் பிரிவிலே கூட பெரும்பாலும் பெண்ணையே குற்றம் சொல்லும் சமூகத்தில் சாதாரண தம்பதிகள் பிரிவிலும் இங்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. 'படித்து வேலைக்கு செல்லும் திமிரு' என காரணம் வேறு சம்பந்தமே இல்லாமல் சொல்வார்கள்.

முன்பெல்லாம் குடும்பங்கள் பிற்போக்குத்தனமாக இருந்து பெண்கள் ஆண்களை சார்ந்தே இருந்ததால் விவாகரத்துக்கு பயப்பட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதால் பெண்கள் துணிச்சலாக அந்த முடிவை எடுக்கிறார்கள்.

அதனால் ஓர் உறவை பிரிந்த பின்பு எப்படி நண்பர்களாகவும், குழந்தைகளுக்கு நல்ல அம்மா அப்பாவாக பயணிக்க முடியும் என்பதைதான் பார்க்க வேண்டும். எல்லா வீடுகளிலும் அம்மா அப்பா 24 மணி நேரமும் சேர்ந்தேவா இருக்கிறார்கள். கல்யாணம் முடித்து அப்பா வேறு ஓர் ஊரில் கூட வேலை செய்யலாம்.

அதனால், இந்த பழமைவாத சிந்தனைகளை தவிர்த்து விட்டு குடும்பத்திற்குள் தலையிடுவதை சமூகம் நிறுத்த வேண்டும். பிரிவையும் இயல்பாக்க வேண்டும் " என்கிறார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-60036721

  • கருத்துக்கள உறவுகள்

டி டி  Happy அண்ணாச்சி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

இதுபோன்ற ஒரு முடிவு எடுத்ததற்காக எப்பொழுதும் என் மகள் என் மீது வருத்தம் கொள்ளவில்லை. இந்த முடிவு பற்றி அவளிடம் கேட்டபோது கூட, 'உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்' என்றுதான் சொன்னாள். அந்த அளவுக்கு குழந்தைகள் தயாராகி விடுகிறார்கள். இதுபோன்ற

தனக்கு சாதகமாக பிள்ளைகள் கருத்து சொல்லும் போது மட்டும் அவர்களின் கருத்து சரியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பாத துணையர்களாக வாழ்வதைக் காட்டிலும் விலகிக் கொள்வது ஆரோக்கியமானதுதானே 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தவர்களுக்கு ஜாலி,சந்தோசம்,கும்மாளம்.. பிள்ளைகளுக்கு பூமி நழுவி தலையில் வீழ்ந்தது போல் துயரம்.. என்னய கேட்டா நானும் சொல்லுவன் கலியாணம் கட்டினதில இருந்து மனிசற்ற நிம்மதியே போச்சு.. வேலையால வந்து கொஞ்சநேரம் கதிரையில சரிஞ்சு இருந்து நிம்மதியா யாழிலை எழுத முடியல.. எந்த நேரமும் போனுக்க தலைய கவுண்டு கொண்டு.. உந்த நேரத்துக்கு பிள்ளையளுக்கு குளிக்கவாத்து வீடு கிளீன் பண்ணி வீட்டு வேலையல் செய்யலாம்தான எண்டு புறுபுறுப்பு.. லீவு நாளையில நிம்மதியா படுத்து ரெண்டு மூண்டு மணிக்கு எழும்புவம் எண்டால் விடிஞ்சாப்பிறகும் வீட்டில படுத்திருந்தால் வீட்டுக்கு தரித்திரமாம்.. நிம்மதியா மனுசர் லீவு நாள் எண்டு நித்திரை கொள்ள முடியுதில்ல.. வேலையால வந்தா பிள்ளையளுக்கு பால் முடிஞ்சுது பழம் முடிஞ்சுது கடைக்கு போ எண்டா வேலை உடுப்பும் மாத்தாமால் அந்தக்களையோட கடைக்கு ஓடோனும்.. ஒரு பக் நிம்மதியா குடிக்கேலா.. ஏச்சு பேச்சு.. வீட்டில இறைச்சி சமைக்கிறதெண்டா பெரும் சண்டை.. நான் மட்டும்தான் சாப்பிடுறது.. கிழமையில அஞ்சு நாள் மாமிசம் இல்ல.. தனிய இருக்கேக்க நானே ராஜா நானே மந்திரி.. ஊர் ஊரா.. நாடு நாடா சுத்துவன்.. கலியாணம் கட்டி எல்லாம் போச்சு..😢😢😂.. என்னய இப்ப கேட்டா நானும் டைபேர்ஸ்க்கு டபில் ஓகே சொல்லுவன்..😂 ஆனால் பிள்ளையள என்னட்ட தரோனும்..

எனக்கு வேலையால வந்து கதவு திறக்க பிள்ளயள் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு கொஞ்ச எல்லா களைப்பு கவலை எல்லாம் போயிடும்.. இப்ப கொரோனாவால வந்து குளிச்சுதான் பிள்ளையள தூக்கோனும்.. அதே எவ்வளவு கஸ்ரமா இருக்கு குளிக்கும் வரையும் வெயிட் பண்னுறது.. என்னால எல்லாம் பிள்ளையள விட்டிட்டு வாழுற ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது.. அதற்காக நான் என்னுடைய எல்லா சந்தோசங்களையும் இழக்க தயார்..

கலியாணம் கட்டிட்டு டைவேர்ஸ் எடுக்குரது ஒரு பிரச்சினையே இல்லை.. அது அவரவர் சுதந்திரம் எண்டிட்டு போகலாம்.. ஆனால் பிள்ளைகளை பெற்ற பின்பு டைவேர்ஸ் எடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு முடிவு.. மிகத்துயரமானது… குழந்தை உள்ளவர்களுக்கிடையே நடக்கும் ஒவ்வொரு டைவேர்சிலும் இருவரில் யாரோ ஒருவர் குழந்தைகளை விட்டு பிரிகிறார்கள் தம் சுயநலன்களுக்காக.. எப்படி இப்படி சுயநலவாதி ஆகிறார்களோ தெரியவில்லை.. ஆராய்ந்துபார்த்தால் தம்பதிகளில் டைவேர்ஸ்க்கு காரணமான அந்த ஒருவரோ அல்லது இருவரோ இவர்களின் ஏதோ ஒரு குழந்தைகளை விட முக்கியமான சுயநலம் இருக்கும்(உ+ம்- குடிகார கணவனுக்கு பிள்ளைகளை விட குடி முக்கியம்) குழந்தைகளுக்காக உங்கள் சுயநலன்களை விடமுடியாதவர்கள் திருமணம் செய்தபின் கொஞ்சகாலம் எடுத்து யோசிச்சு நமக்கு இது ஒத்துவருமா எண்டு சிந்தித்து விட்டு பிள்ளபெறுவது உத்தமம்.. உங்கள் சுயநலன்களுக்காக பிள்ளைகளை கேட்காமல் நீங்களா பெத்த பிள்ளைகளை நீங்களே தண்டிக்க குடாது..

பி.கு- கலியாணம் கட்டாமல் இருக்கும் பசங்க என்னமாரி பொறுப்பில்லாமல் ஜாலியா இருக்கவேணும் எண்டு ஆசைப்பட்ட தயவு செய்து கலியாணம் கட்டாதைங்கோ.. பிறகு கு.சா அண்ணை போட்ட படம் மாதிரி அழுத கண்ணீரும் சோறும்தான்..😂😂😂

4 hours ago, குமாரசாமி said:

தோழரே! ஆண்பாவம் பொல்லாதது. அன்று அழத்தொடங்கியவன் இன்னும் நிறுத்தவேயில்லை.
 
டப்பிங்கில் கதறி அழுத சிம்பு: வைரலாகும் வீடியோ!

அன்ரன்பாலசிங்கம் அண்ணை சொன்னமாதிரி.. அது ஒரு துன்பியல் சம்பவம்… அதை ஏன் கேக்குரியல்..😂😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

28 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓணாண்டி வேலைக்கு ஒஞ்சி விவாகரத்து என்பது மேட்டரே இல்லை வாழ்வோம் என்று எத்தனிப்பதும் ஒவ்வொரு கட்டத்திலும் தோற்று விரக்தியடைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருசாரரும் தமக்கு தாமே உபத்திரமாவது மட்டுமின்றி தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனையானவர்களாக மாறுவதைக் காட்டிலும் அந்நிலையில் இருந்து விலகிச் செல்லலாம். நீங்கள் குறிப்பிடும் வாழ்க்கை இரசனைக்கு உரியது. செல்லச் சண்டைகள். அன்பான ஊடல்கள் உரிமைகளை உணரவைக்கும் சின்னச்சின்ன கண்டிப்புகள் ரம்மியமானவை. இவை விவகாரத்துக்கு ஒரு காலமும் அடிகோலாது😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.