Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

12 வயதுச் சிறுமியின் இனவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 வயதுச் சிறுமியின் இனவாதம்

எங்களில் எத்தனை பேருக்கு 12 வயதில் எமது இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றியோ அல்லது இது எதற்காக நடக்கிறது என்பதுபற்றியோ, அல்லது இதனை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியோ பூரண அறிவு இருந்திருக்கிறது?

இதற்கான பதில் என்னெவென்றால், எம்மில் பலருக்கு அந்த வயதில் சண்டை ஒன்று நடக்கிறது, அதில் பலர் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கடந்து இது தொடர்பான வேறு பிக்ஞைகள் இருந்ததில்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் சிலரைத் தவிர.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு 12 வயதுச் சிறுமியின் அரசியல்மயப்படுத்தலும், இலங்கையில் நடந்த இனவழிப்புத் தொடர்பான அவளின் கண்ணோட்டமும் என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டிருந்தது. அச்சம்பவத்தினை இங்கே பதிவதன் நோக்கம், நாம் எமது பிள்ளைகளை , குறிப்பாக புலம்பெயர் நாட்டில் எவ்வாறான அரசியல்மயப்படுத்தல்களில் ஈடுபடுத்தியிருக்கிறோம் அல்லது ஈடுபடுத்தவில்லை என்பதைச் சொல்லவே. 

எனது இளைய மகள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து உயர்தரத்திற்கென்று புதிய பாடசாலை ஒன்றிற்குச் சென்று வருகிறாள். தனது முன்னாள் பாடசாலையில் தனது நண்பிகள் எவரும் இப்புதிய பாடசாலையில் இவளோடு இல்லாததும், புதிய நண்பிகளைத் தேடும் அவளது முயற்சி அவ்வளவாக வெற்றியளிக்காத நிலையிலும் அடிக்கடி என்னிடம் இதுகுறித்து வருத்தப்பட்ட வருகிறாள். நானும் என்னால் முடிந்தளவிற்கு, "யோசிக்காதை, உனக்குச் சரியான நண்பிகள் நிச்சயம் வருவார்கள், நல்ல நண்பிகளைப் பெறுவதற்கு காலம் எடுக்கலாம், ஆனால் நிச்சயம் கிடைப்பார்கள்" என்று அவளைச் சமாதானப் படுத்தி வந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நாட்கள் சில ஓடிவிட, ஒருநாள் பாடசாலை முடிந்து அவளை கூட்டிவர சென்றிருந்தேன். அன்று மிக மகிழ்ச்சியாகக் அவள் காணப்பட்டாள். "என்ன ஹப்பியா இருக்கிறாய், என்ன நடந்தது?" என்று மகளை வினவினேன். "உங்களுக்குத் தெரியுமா அப்பா, எனக்கு ஒரு நல்ல நண்பி கிடைத்துவிட்டாள், அவன் மிகவும் அருமையானவள், மென்மையானவள், அன்பாகப் பேசுகிறாள்" என்று கூறிவிட்டு, "அதிலும் முக்கியமாக அவள் இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சிறுமி அப்பா" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அவளது முகத்தில் இருந்த சந்தோசம் எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுவரை தனக்குச் சரியான சிநேகிதிகள் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டு வந்தவளுக்கு சரியான நண்பி கிடைத்திருப்பதாக எண்ணி அவள் பட்ட சந்தோசத்திற்கு அளவேயில்லை. எனக்கு மனதில் சிறிது தயக்கம் இருந்தாலும், அவளின் சந்தோசத்தை அப்போதைக்குக் கெடுக்க வேண்டாமே என்று எண்ணி, "அப்படியா, நல்லவிடயம், நீ தமிழென்று அவளுக்குத் தெரியுமோ ?" என்று அவளைக் கேட்டேன். "ஓம் அப்பா, நான் தமிழ் என்று அவளுக்குத் தெரியும், இலங்கையைப் பற்றியும் என்னிடம் பேசினாள்" என்று அவள் கூறினாள். "என்னது, இலங்கையைப் பற்றியா? என்ன பேசுகிறாள்?" என்று நான் கேட்கவும், "அப்படி ஒன்றும் இல்லை, இலங்கையில் நடந்த போர் பற்றி எனக்குத் தெரியுமா என்று கேட்டாள், நான் அவ்வளவாக இதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று அவளிடம் கூறிவிட்டேன், அதன் பிறகு வேறு விடயங்களைப் பேசத் தொடங்கிவிட்டோம்" என்று மகள் பதிலளித்தாள். "எதற்கும் இந்தச் சிறுமியுடன் அவதானமாக நடந்துகொள்" என்று நான் கூறவும், "நீங்கள் எப்பவும் இப்படித்தான். உங்களுக்கு எல்லாச் சிங்களவரைக் கண்டாலும் இதே சந்தேகம் தான்" என்று கடிந்துகொண்டாள். நானும் அமைதியாகிவிட்டேன். 

வீட்டில் வந்து நான் சிங்களச் சிறுமி பற்றி தன்னிடம் வீணாக விவாதம் செய்வதாக எல்லோரிடமும் முறையிட்டுக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்தவர்களும் நான் தேவையில்லாமல் பயப்படுவதாகவும், புலம்பெயர் நாட்டில் வாழும் சிங்களவர்கள் இனவாதிகள் அல்லவெனவும், மகளின் சந்தோசத்தில் நான் தலையிடுவதாகவும் கூறிவிட்டு, அச்சிறுமியின் பெற்றோரினது தோலைபேசி இலக்கத்தையும் பரிமாறிக் கொண்டார்கள். நான் எதுவும் பேசவில்லை, ஆனாலும் இந்தச் சிறுமிபற்றி எனக்கு சந்தேகம் ஒன்று மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது. இந்த வாரத்தில் அச்சிறுமியின் தாயாருடன் மனைவி உரையாடியதும், ஒருமுறை நேரில் சென்று அலவளாவியதும் நடந்தது. "பிள்ளையைப் போலவே, தாயாரும் மென்மையானவள், அமைதியாகப் பேசுகிறாள், தனது மகள் பற்றி அதிக அக்கறையும் அதேவேளை அதீத கவலையும் கொள்கிறாள் போலத் தெரிகிறது, தனது மகள் சிலவேளைகளில் காரணமின்றிப் பயப்படுவதாகவும், சிலவேளை இதனாலேயே தன்னைக் காயப்படுத்தவும் முயற்சிக்கிறாள் என்றும் கூறுகிறாள். எங்கள் மகளுடன் நட்புக் கிடைத்ததுபற்றி மகிழ்ச்சியடைவதாகக் கூறினாள்" என்று மனைவி கூறினாள். நான் எதுவுமே கூறவில்லை, ஆனால் அச்சிறுமியின் இலங்கைப் பிரச்சினைபற்றிய கேள்வி மனதில் இன்னமும் கேட்டுக்கொண்டே இருந்தது.

நேற்று, வெள்ளிக்கிழமை, வழமைபோலவே மகளை அழைத்துவர பாடசாலைக்குச் சென்றிருந்தேன். வழமையாக அவளது முகத்திலிருக்கும் புன்னகை இல்லை. என்னைக்கண்டதும், "அப்பா, எப்பிடி இருக்கிறீர்கள்?" என்று அன்பாக விசாரிக்கும் அவளது அன்றாட சம்பாஷணை அன்றில்லை. நான் வாகனத்தை ஓட்டிக்கொண்டே அவளுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்னடா நடந்தது ஸ்கூலில?" என்று ஆரம்பித்தேன். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "அப்பா, நீங்கள் சொன்னது சரிதான்" என்றாள். அப்படி என்னத்தைக் கூறினேன், எதைச் சரியென்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. "என்ன சொல்கிறாய்?" என்று அவளை மீண்டும் கேட்டேன். அவள் பேசத் தொடங்கினாஅள்.

"உங்களிடம் எனது புதிய சிங்கள நண்பி பற்றிச் சொன்னேன் அல்லவா? அவளைத்தான் கூறுகிறேன். நான் எதிர்பார்த்ததுபோல அவள் இல்லையப்பா. நிறையவே அரசியல் பேசுகிறாள். அவளுடன் பேசவே வெறுப்பாக இருக்கிறது எனக்கு" என்று சொன்னாள். 

அப்படி என்னதான் அவள் கூறுகிறாள் என்று கேட்டேன்.

"இன்று காலை பாடசாலை ஆரம்பித்தவுடன், என்னருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.  அமர்ந்துகொண்டு, தற்போது நடக்கும் ரஸ்ஸிய உக்ரேன் போர் பற்றி என்ன நினைக்கிறாய், இப்போரில் எத்தரப்பை நீ ஆதரிக்கிறாய் என்று என்னிடம் கேட்டாள். நானோ, பல உக்ரேனிய மக்கள் கொல்லப்படுகிறார்கள், ஆகவே அம்மக்களைத்தான் ஆதரிக்கவேண்டும் என்று அவளிடம் கூறிவிட்டு, நீ எத்தரப்பை ஆதரிக்கிறாய் என்று திருப்பிக் கேட்டேன். அவளோ ரஸ்ஸியாவைத்தான் என்று சொன்னாள். ஏன் என்று அவளிடம் நான் கேட்டபோது, வீட்டில் அப்பாவும் அம்மாவும் எத்தரப்பை ஆதரிக்கவேண்டும் என்பதுபற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் விவாதத்தில் கலந்துகொண்ட நான், ரஸ்ஸியாவை ஆதரிப்பதுதான் சரி, ஏனென்றால், இலங்கையில் இவ்வாறான போர் நடந்தபோது மேற்குலகும், பத்திரிக்கைகளும் தமிழர்களைத்தானே ஆதரித்தன? சிங்களவர்களைத் தவறானவர்களாகக் காட்டின, அதுபோலத்தான் உக்ரேனிலும், அன்று நாம் செய்ததை இன்று ரஸ்ஸியர்கள் செய்கிறார்கள்? ஆகவே நாம் ரஸ்ஸியர்களைத்தான் ஆதரிக்கவேண்டும் என்று எனது பெற்றோரிடம் கூறினேன் என்றாள். எனக்கு அவள் பேசுவது புரியவில்லை" என்று கூறிவிட்டு அமைதியானாள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னுடைய வயதை ஒத்த ஒரு சிறுமிக்கு இந்த அரசியல் புரிவது எப்படி என்று மகளைக் கேட்டேன். தெரியவில்லையப்பா, ஆனால் வீட்டில் நிறையவே அரசியல் பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. அடிக்கடி வீட்டில் விவாதிக்கும் அரசியல் விடயங்களைப்பற்றி என்னிடம் பேசுகிறாள். பாதி வேளைகளில் என்ன பேசுகிறாள் என்பதே எனக்குப் புரிவதில்லை என்று கூறிவிட்டுத் தொடர்ந்தாள் மகள். 

"சரி, உக்ரேனியர்கள் பாதிக்கப்படுவதாக எதனை வைத்துச் சொல்கிறாய்? என்று என்னிடம் கேட்டாள். நானோ ஒவ்வொருநாளும் செய்திகளில் வரும் ஒளிப்படங்களையும், செய்திக்குறிப்புகளையும் வைத்துதான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறேன். எங்களைப்போன்ற வயதுடைய பல சிறுவர்கள் பாடசாலைகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இது தவறல்லவா? என்று நான் அவளிடம் கேட்டேன். அவளோ, " தொலைக் காட்சியில் சொல்பவற்றை எப்படி உன்னால் நம்ப முடிகிறது? இன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுபவை ஒன்றில் முன்னர் நடந்த போர்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதும், மேற்குலக செய்திச் சேவைகளினால் திட்டமிட்டு சோடிக்கப்பட்ட நாடகங்களும்தான் என்பது உனக்குத் தெரியுமா? ஆனால், இதன் மறுபக்கம் ஒன்றிருக்கிறது, அதுதான் மேற்குலக செய்திச் சேவைகள் உனக்குக் காட்ட விரும்பாதது. உண்மையிலேயே இப்போரில் பாதிக்கப்படுவது ரஸ்ஸியர்கள்தான், ஆனால் மேற்குலகோ இதனை மறைத்து உக்ரேனியர்களைப் பாதிக்கப்படும் மக்களாகக் காட்டுகிறது. இதே வேலையைத்தான் இலங்கைப்போரிலும் இவர்கள் செய்தார்கள் என்று கூறினாள் அப்பா" என்று மகள் கவலையுடன் சொன்னாள். 

இலங்கைப் போரில் அப்படி என்ன நடந்ததாக உனது நண்பி கூறுகிறாள் என்று மகளைக் கேட்டேன். 

"இலங்கைப் போரில் தமிழர்களே சிங்களவர்களைக் கொன்றதாகவும், ஆனால், இலங்கையில் தமது அதிகாரத்தை நிலைநாட்ட மேற்குலகும், மேற்குலகச் செய்திச் சேவைகளும் தமிழர்கள் மேல் நடத்தப்பட்டதாக கூறி பல படுகொலைகளைக் உலகிற்குக் காட்டினார்கள். சிங்களவர்கள் கொடூரமானவர்கள் என்றும், போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று கூறினார்கள், அவர்களால் காட்டப்பட்ட அனைத்துச் சாட்சிகளும் தமிழர்களால் சிங்களவர்கள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள்தான். ஆனால், தமிழர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டி, இலங்கையில் தலையிடுவதையே இந்த வெள்ளைக்கார செய்தியாளர்கள் செய்தார்கள். இன்று உக்ரேனில் நடப்பதும் இதுதான். உக்ரேனில்  தமது அதிகாரத்தை நிலைநாட்ட, உக்ரேனில் மக்கள் கொல்லப்படுவதாக நாடகம் ஆடுகிறார்கள். அதனால்த்தான், பாதிக்கப்படும் ரஸ்ஸியர்கள் சார்பாக சிங்களவர்கள் இருக்கவேண்டும் நாம் வீட்டில் முடிவெடுத்தோம் என்று கூறுகிறாள் அப்பா" என்று கவலையுடன் கூறினாள். 

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஒரு 12 வயதுச் சிறுமியினால் இந்தளவிற்கு அரசியல் பேச முடியுமா என்று மனம் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு பாலகியின் மனதில் எந்தளவிற்கு நஞ்சை இவளின் பெற்றோர்கள் விதைத்திருக்கிறார்கள் என்கிற ஆத்திரமும் எனக்குத் தோன்றியது. ஆனால், அவள் சொல்வதுபற்றி சரியான புரிதலுடன் தான் சொல்கிறாள் என்பது மகளின் அவள்பற்றிய விவரணம் மூலம் எனக்குத் தெரிந்தது. 

நடைபெற்ற ஒரு இனவழிப்பை, படுகொலையினை, முற்றான தவறான புரிதலுடன், சிங்களவர்களின் நிலைப்பாட்டில் சற்றும் தவறாமல், சர்வதேசம் அந்தப் போரினை எப்படியாகப் பார்த்தது என்பதை சிங்களச் சார்பு நிலைப்பாட்டிலிருந்து இந்தச் சிறுமியால் பேச முடிவது குறித்து ஒருபக்கம் அதிர்ச்சியும், இன்னொருபக்கம் ஆத்திரமும் அடைந்தேன். 

"இதற்குத்தானே இவளுடன் அவதானமாக இருக்கும்படி உன்னிடம் கூறினேன்? அன்று நான் கூறியபோது வீட்டில் எல்லோரும் சேர்ந்து என்னைக் கடிந்து கொண்டீர்களே? இப்போது என்ன சொல்கிறாய்? என்று மகளைப் பார்த்து, சற்றுச் சினந்துகொண்டே கேட்டேன். "அவள் பேசுவது தவறு அப்பா" என்று அமைதியாகக் கூறினாள். "சரி, இதுபற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று அவளிடம் கேட்டேன். "உக்ரேனியர்கள் பாவம் அப்பா, நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல, இலங்கையில் சிங்களவர்கள் எங்களுக்குச் செய்ததை இன்று ரஸ்ஸியர்கள் உக்ரேனியர்களுக்குச் செய்கிறார்கள். ஆகவே உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நாம் இருப்பது அவசியம் அப்பா" என்று தெளிவாகக் கூறினாள். மகளது இந்தத் தெளிவு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவளை, "இந்தச் சிறுமியுடன் இனி என்ன செய்வதாக உத்தேசம்? என்று  கேட்டேன். "அவளிடமிருந்து விலகப்போகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக அவளின் நட்பைத் துண்டிக்கப் போகிறேன், அவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. அரசியல் பேசும்போது அவர் கோபப்படுகிறாள், இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது" என்று தயக்கத்துடன் கூறினாள். 

"நேற்றுக் காலையின் பின்னர், அவளை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறேன். மதியம் தன்னுடன் பேசாமல் எனது தமிழ் நண்பிகளுடன் நான் பேசுவதை அவள் கண்டிருக்க வேண்டும். உடனே எனக்குத் தொலைபேசியில் "துரோகிப் பெட்டை நாயே" என்று வைது செய்தியனுப்பினாள். நான் அதற்குப் பதிலளிக்கவில்லை. இவளிடமிருந்து அமைதியாகப் பிரிவதே பிரச்சினையாக இருக்கும்போலத் தெரிகிறது அப்பா" என்று கவலையுடன் கூறினாள். 

நானும், "சரிதான், சிறிது சிறிதாக அவளை விலத்தி நட. இவளால் உனக்கு நட்புக் கிடைக்கப்போவதில்லை, மாறாக மன உளைச்சல்தான். இவள் 12 வயதுடைய சாதாரண சிறுமியல்ல. நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்ட இனவாதி என்று கூறிவிட்டு அமைதியானேன். மகளும் அதனை அமோதிப்பதுபோல மெதுவாகத் தலையை அசைத்துக்கொன்டிருந்தாள். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெளிவாகவே புரிகின்றது, ரஞ்சித்…!

எனது மகளுக்கும் மிகவும் நெருக்கமான சிங்கள நண்பி ஒருத்தி இருக்கிறாள்..! ஆனால் ஒரு நாளும் அவர்கள் இலன்கை அரசியல் கதைத்து நான் கண்டதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகளின் புதிய நண்பியடமிருந்து உங்கள் மகளை விலகியிருக்கச் சொல்லுங்கள். மன நிலை சரியில்லாத பிள்ளை போல உள்ளது. கோபம் ஒரு அறிகுறி தான்…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

உங்கள் மகளின் புதிய நண்பியடமிருந்து உங்கள் மகளை விலகியிருக்கச் சொல்லுங்கள். மன நிலை சரியில்லாத பிள்ளை போல உள்ளது. கோபம் ஒரு அறிகுறி தான்…!

உண்மை

 

ரஞ்சித்,

உங்கள் மகளின் safety தொடர்பாக அதிக கவனம் எடுங்கள். அந்த சிங்கள சிறுமி காரணமின்றி பயப்பட்டு தன்னையே காயப்படுத்துகின்ற அளவுக்கு உள்ளவர் என்பதால் வன்முறை செய்வதற்குரிய மனப்பாங்கும் உள்ளது. அத்துடன் அவர் உங்கள் மகளுக்கு அனுப்பிய குறும்செய்தியும் அவரது மனநிலையை காட்டுகின்றது. 

அச் சிறுமியின் பெற்றோர்கள் அச் சிறுமியின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ரகுநாதன் நம்ப பட்ட கஸ்ரங்கள் தமிழர்களின் இலங்கை வரலாறு 30 வருட கால சம்பவங்களை மகளுக்கு தெளிவாக சொல்ல தொடங்குக்கள் அது அவள் இன்னொருவருக்கு விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். அந்த சிங்கள பெற்றோர்கள் அவர்கள் இலங்கை பற்றிய ( இனவாத) அரசியலையே சொல்லி பேசி இருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தையும் அவர்கள் வழியில்.

நம்மவர்கள் புலம் பெயர்ந்ததும் நமது முன்னைய சரித்திரங்களை மறந்து விடுவதும் சாதாரணம். உதாரணமாக குழந்தைக்கு தமிழ் தெரியாது என்ற சொல்லும் வரை .

என் மனதில் பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, நிழலி, தனி,

 

உங்கள் கரிசணைக்கு நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது ரகுநாதன் நம்ப பட்ட கஸ்ரங்கள் தமிழர்களின் இலங்கை வரலாறு 30 வருட கால சம்பவங்களை மகளுக்கு தெளிவாக சொல்ல தொடங்குக்கள் அது அவள் இன்னொருவருக்கு விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். அந்த சிங்கள பெற்றோர்கள் அவர்கள் இலங்கை பற்றிய ( இனவாத) அரசியலையே சொல்லி பேசி இருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தையும் அவர்கள் வழியில்.

நம்மவர்கள் புலம் பெயர்ந்ததும் நமது முன்னைய சரித்திரங்களை மறந்து விடுவதும் சாதாரணம். உதாரணமாக குழந்தைக்கு தமிழ் தெரியாது என்ற சொல்லும் வரை .

என் மனதில் பட்டது

பாவம் 12 வயது பிள்ளைக்கு எப்படி புரிய வைக்கலாம்,  புரிய வைப்பது..படிக்கிற பிள்ளையல்லவா..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சத்திலேயே…. திருத்த வேலை செய்யும்   சிங்களவனுக்கு, இனவாதம் என்பது இரத்தத்திலேயே ஊறியது.

பாவம் அந்தக் குழந்தையை… பிஞ்சிலேயே பழுக்க வைத்து விட்டார்கள்.
தமிழ் துவேஷ மனப்பான்மையில் இருந்து, அது இனி… மீண்டு வர சந்தர்ப்பம் மிக அரிது. 

ரஞ்சித்….  நீங்கள் அந்தக் குடும்பத்தினரிடம் இருந்து அவதானமாக இருக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று தென் இலங்கையில் ஒரு கட்சி சொன்னதாக சொன்னார்கள்.

4 hours ago, ரஞ்சித் said:

உக்ரேனியர்கள் பாவம் அப்பா, நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல, இலங்கையில் சிங்களவர்கள் எங்களுக்குச் செய்ததை இன்று ரஸ்ஸியர்கள் உக்ரேனியர்களுக்குச் செய்கிறார்கள். ஆகவே உக்ரேனியர்களுக்கு ஆதரவாக நாம் இருப்பது அவசியம் அப்பா" என்று தெளிவாகக் கூறினாள். மகளது இந்தத் தெளிவு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

உங்கள் மகள் சொன்னது நீதி நியாயமானது.
ஜனநாயக நாடுகளில் சுதந்தரமாக வாழ்ந்து வசதிகளை அனுபவித்தபடி அப்படி வாழ விரும்பும் யுக்ரேன் நாட்டை மக்களை ஆக்கிரமிக்கும் சர்வாதிகாரி புரினை ஆதரிப்பவர்களுக்கும், சிங்கள சிறுமிக்கும் நான் வேறுபாடு காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு ரஞ்சித். 👌
உங்களது மகளின் இந்த  அனுபவம் ஒரு துரதிஷ்டமே. இருந்தாலும் அதில் ஒரு கற்கை உங்களது மகளுக்கு கிடைத்திருக்கிறது, அதுவே  எம்மவருக்கு நிகழ்ந்த துன்பங்களுக்கான தேடலாகவும் இருக்கலாம்.
சரியான விடயங்களை பக்க சார்பில்லாமல் மகளுக்கு எடுத்தது சொல்லுங்கள்.
எனது மகன்கள் மூவருக்கும் ஓரளவு எங்கள் பக்க யுத்த அனுபவ, துன்பங்களை பகிர்ந்துள்ளேன். 
மாவீரர் நாள் நிகழ்வு பார்த்து மலைத்து நின்றார்கள், அதிக கேள்விகள் கேட்டார்கள்.
Funny Boy போன்ற ஆங்கிலதில் வந்த திரைப்படம் பார்த்து 1983 இனக்கலவரம் பற்றி நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டார்கள். அதனோடு சேர்ந்து எனக்குண்டான அவலங்கள் கூடிய தகவல்களும் அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன். அது தொடரும். 

நீங்கள் பகிர்ந்ததை போன்ற இப்படியான அனுபவங்கள் பிள்ளைகள் மூலமாக எனக்கு கிட்டவில்லை. ஆனால் நான் இருக்கும் நண்பர் குழாமில் ஒரு சிங்கள நண்பர் அவரது கதை பேச்சுக்களில் ஒரு எகத்தாளத்தோடு கதைப்பார். அதற்க்கு காரணமும் எம்மவர்கள் தான்!!!
12 பேர் இருக்கும் நண்பர் வட்டத்தில் ஒரு சிங்களவர் காயப்படக்கூடாது என்பதற்காக இல்லாத பொல்லாத புலிகள் பற்றிய அதீதமான அவதூறுகளை கதைக்கும் நம்மவர் கொஞ்ச பேர் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தை உள்வாங்கி அந்த ஒரு சிங்கள நபர் சில விடயங்களை மேற்கோல் காட்டி கிண்டல் கதைகள் கதைப்பார். நான் அவரின் முகத்துக்கு நேராகவே எனக்கு தெரிந்த உண்மைகளை, சிங்கள அரசாங்கம் செய்த வன்மங்களை,  போட்டு உடைப்பேன். ஒருநாளும் எமக்குள் பகையாக மாறியதில்லை. 
ஆனால் எங்களவரின் மீது தான் எனக்கு கோபம். 
சின்ன உதாரணம், 10 ஆண்டுகளுக்கு முன்னம்; எமது இதே நண்பர் வட்டத்தில் இருந்த ஒருவர் (தமிழர்) புதிதாக வீடு வாங்கி போயிருந்தார். அவரின் வீட்டுக்கு நாங்கள் நண்பர்கள் அனைவரும் விருந்திட்கு போயிருந்தோம், அவரது வரவேடற்பரறையில் பெரிதாக தேசியத்தலைவரின் படம் கம்பீரமாக இருந்தது. 
அலங்காரங்களாக புலிக்கொடி, நாள்காட்டி ... இப்படி சில விடயங்கள். வந்திருந்த தமிழ் நண்பர்களில் ஒருவர் அவருக்கே உரித்தான  மேட்டுக்குடி பாணியில் அந்த அலங்காரம் பற்றி கருது சொல்லி, கொழுத்திப் போட்டார். அது அப்படியே அரசியல் விவாதமாக மாறி பற்றி எரிந்து , சிங்கள நண்பரும் கருத்து சொல்ல.. காரசாரமாக முகம் சுளிக்கும் வார்த்தைகளோடு நான் பாதியிலேயே விருந்தை விட்டு வெளியேறி விட்டேன். 
ஆனால் நான் என்றைக்கும் எமக்குள் சிங்கள நண்பர், அவர் மனைவி, பிள்ளைகள் இருக்கிறார் என்பதற்காக எனது கருத்துக்களை விட்டுக்கொடுப்பதில்லை.

உண்மையில் எனக்கு தமிழரோடு எங்கள் அரசியல் ஞாயங்கள் பேசுவதை விட சிங்களவரோடு பேசுவது தான் பிடிக்கும். ஏனென்றால் அவர்களின் சுயத்தை தோலுரித்து காட்ட என்னிடம் இருக்கும் தகவல்கள் அளவற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று தென் இலங்கையில் ஒரு கட்சி சொன்னதாக சொன்னார்கள்.

உங்கள் மகள் சொன்னது நீதி நியாயமானது.
ஜனநாயக நாடுகளில் சுதந்தரமாக வாழ்ந்து வசதிகளை அனுபவித்தபடி அப்படி வாழ விரும்பும் யுக்ரேன் நாட்டை மக்களை ஆக்கிரமிக்கும் சர்வாதிகாரி புரினை ஆதரிப்பவர்களுக்கும், சிங்கள சிறுமிக்கும் நான் வேறுபாடு காணவில்லை.

இந்தப் போரில் இலங்கை ரஸ்ஸியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நம்பியே அவ்வாறு தவறிழைக்க வேண்டாம் என்று மேற்குலக அமைப்பொன்று இலங்கையைக் கேட்டிருந்ததாகத் தகவல். இந்தியாவில் ரஸ்ஸியாவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டு வருகிறது. பல இணையத்தள நிபுணர்கள் ரஸ்ஸியாவை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியாயினும் உங்கள் பிள்ளையை அந்தப் பிள்ளையிடமிருந்து விலகி இருக்க சொல்லுங்கள்......அவர்கள் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் விரோதப் போக்கை ஒரு பயிற்சியாகவே கைக் கொண்டு வருகின்றார்கள்......கவனம்......! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

12 வயதுச் சிறுமியின் இனவாதம்

எங்களில் எத்தனை பேருக்கு 12 வயதில் எமது இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றியோ அல்லது இது எதற்காக நடக்கிறது என்பதுபற்றியோ, அல்லது இதனை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியோ பூரண அறிவு இருந்திருக்கிறது?

இதற்கான பதில் என்னெவென்றால், எம்மில் பலருக்கு அந்த வயதில் சண்டை ஒன்று நடக்கிறது, அதில் பலர் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கடந்து இது தொடர்பான வேறு பிக்ஞைகள் இருந்ததில்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் சிலரைத் தவிர.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு 12 வயதுச் சிறுமியின் அரசியல்மயப்படுத்தலும், இலங்கையில் நடந்த இனவழிப்புத் தொடர்பான அவளின் கண்ணோட்டமும் என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டிருந்தது. அச்சம்பவத்தினை இங்கே பதிவதன் நோக்கம், நாம் எமது பிள்ளைகளை , குறிப்பாக புலம்பெயர் நாட்டில் எவ்வாறான அரசியல்மயப்படுத்தல்களில் ஈடுபடுத்தியிருக்கிறோம் அல்லது ஈடுபடுத்தவில்லை என்பதைச் சொல்லவே. 

எனது இளைய மகள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து உயர்தரத்திற்கென்று புதிய பாடசாலை ஒன்றிற்குச் சென்று வருகிறாள். தனது முன்னாள் பாடசாலையில் தனது நண்பிகள் எவரும் இப்புதிய பாடசாலையில் இவளோடு இல்லாததும், புதிய நண்பிகளைத் தேடும் அவளது முயற்சி அவ்வளவாக வெற்றியளிக்காத நிலையிலும் அடிக்கடி என்னிடம் இதுகுறித்து வருத்தப்பட்ட வருகிறாள். நானும் என்னால் முடிந்தளவிற்கு, "யோசிக்காதை, உனக்குச் சரியான நண்பிகள் நிச்சயம் வருவார்கள், நல்ல நண்பிகளைப் பெறுவதற்கு காலம் எடுக்கலாம், ஆனால் நிச்சயம் கிடைப்பார்கள்" என்று அவளைச் சமாதானப் படுத்தி வந்தேன்.

 

மிகவும் கட்டாயமாக அவசியமாக

ஆனால்  மிகவும்  அவதானமாக நாம்  அடுத்த  தலைமுறைக்கு  சேய்யவேண்டிய தேவை  இது

ஏன் அவதானமாக என்று சொல்கின்றேன்  என்றால் அடுத்த தலைமுறையிடம் கண்டபடி ஆதாரமற்றதை பொய்களை விதைக்கக்கூடாது முடியாது

என்  வளர்ப்புக்கு ஒரு உதாரணம்  சொல்கின்றேன்

சின்ன மகளது பல்கலைக்கழகத்தில் சிலரை  ஒன்றிணைத்து சில குரூப்பாக பிரித்து படிக்கும் போது

ஒரு உதவித்திட்டம் செய்வதற்காக அந்தந்த மாணவர்களின் சொந்த நாட்டு சாப்பாடுகளை செய்து அதை விற்று அதில்  வரும்  வருமானத்தைக்கொண்டு குறிப்பிட்ட உதவியை செய்வது தான் நோக்கம்

எனது மகளின் குரூப்பில் 16 பேர்

அதில் எனது மகளுடன் சேர்த்து 14 பேர் பிரான்சை சொந்த தாய் நாடாக  கொண்டவர்களில்லை

எனவே 15 சாப்பாடுகள் வித்தியாசமான நாடுகளை சேர்ந்தவை

எனது மகளும்  தாயாரின் உதவியுடன் சாப்பாடும்  பலகாரங்களும் செய்து எடுத்து சென்றிருந்தாள்

சாப்பாடுகளை வைத்து விட்டு அதன் மீது அந்தந்த நாட்டுக்கொடிகளை வைக்கும்போது தான் மகள் கவனித்திருக்கிறாள் தனது தயாரிப்புக்களுக்கு சிறீலங்கா கொடி  வைக்கப்படுவதை.

அதை  உடனே  அகற்றிய மகள்  நான் சிறீலங்கன் அல்ல

நான் தமிழச்சி

எனது சாப்பாட்டுக்கு மேல் சிறீலங்கா கொடியை  தவிர வேறு எதையும்  நீங்கள் வைக்கலாம்  என சொல்லி  சிறீலங்கா கொடியை எடுத்து விட்டாள்

இது கன நாளைக்கு பின்னர் தான்  எனக்கே தெரிய  வந்தது

 எமது புதிய  தலைமுறையும்  கோபத்தை  தம்மில் அடக்கி  வைத்துள்ளனர்

அதை யாராவது சீண்டும்போது அவர்கள்  தமது  காட்டமான  எதிர்ப்பையும் பங்களிப்பையும்  காட்டியதை  பலமுறை  பிரான்சில்  கண்டுள்ளேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரஞ்சித் உங்கட மேற்குலகு ஆதரவு நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்க புதுக்கதையோட வந்திருக்கிறியள்.. அதில எங்கட நாட்டுப்பிரச்சினையையும் கொஞ்சம் சேர்த்து நல்ல டேஸ்ட்டா ஒரு கதை செஞ்சிருக்கிறியள்.. எனக்கு மனதில் பட்டதை அப்படியே எழுதித்தான் பழக்கம் குறை நினைத்தாலும் பருவாயில்லை.. முகஸ்துதிக்கு இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே எழுதினால்தான் யாழ் யாழ்மாதிரி இருக்கும்.. எனக்கு உங்க முன்னய பதிவில் எழுதிவிட்டு இதை வாசிக்க இதுதான் மனதில் தோன்றுது.. அப்படியே பச்சையா எழுதி இருக்கிறன்..

உக்ரேன் ரஷ்யா நம் நாட்டு பிரச்சினை அவுஸ் எண்டு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி நல்ல ஒரு ரேஸ்ட்டான ஒரு அவல் கிண்டி இருக்கிறியள்..👌

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவது தீயவராவதும் அன்னை வளர்பினிலே.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது ரகுநாதன் நம்ப பட்ட கஸ்ரங்கள் தமிழர்களின் இலங்கை வரலாறு 30 வருட கால சம்பவங்களை மகளுக்கு தெளிவாக சொல்ல தொடங்குக்கள் அது அவள் இன்னொருவருக்கு விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். அந்த சிங்கள பெற்றோர்கள் அவர்கள் இலங்கை பற்றிய ( இனவாத) அரசியலையே சொல்லி பேசி இருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தையும் அவர்கள் வழியில்.

நம்மவர்கள் புலம் பெயர்ந்ததும் நமது முன்னைய சரித்திரங்களை மறந்து விடுவதும் சாதாரணம். உதாரணமாக குழந்தைக்கு தமிழ் தெரியாது என்ற சொல்லும் வரை .

என் மனதில் பட்டது

மிகவும் சரியான கருத்து.  

எங்கள் பிள்ளைகளுக்கு எமது வரலாறு தெரியாத அளவிற்கு நாம் வளர்த்திருக்கின்றோம் என்று பெற்றோர்தான் வெட்கப்பட வேண்டும்.

☹️

(ஆகக் குறைந்த அளவிலாவது அறியத்தர வேண்டும் )

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக தான் இருக்க வேண்டும் என்று தென் இலங்கையில் ஒரு கட்சி சொன்னதாக சொன்னார்கள்.

உங்கள் மகள் சொன்னது நீதி நியாயமானது.
ஜனநாயக நாடுகளில் சுதந்தரமாக வாழ்ந்து வசதிகளை அனுபவித்தபடி அப்படி வாழ விரும்பும் யுக்ரேன் நாட்டை மக்களை ஆக்கிரமிக்கும் சர்வாதிகாரி புரினை ஆதரிப்பவர்களுக்கும், சிங்கள சிறுமிக்கும் நான் வேறுபாடு காணவில்லை.

ஆட்டுக்குள் மாட்டைச் செருகும் உங்கள் செயல் இந்தத் திரியின் நோக்கத்தை திசை திருப்பும் இழி செயலாகும்

😏.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

ரஞ்சித்,

உங்கள் மகளின் safety தொடர்பாக அதிக கவனம் எடுங்கள். அந்த சிங்கள சிறுமி காரணமின்றி பயப்பட்டு தன்னையே காயப்படுத்துகின்ற அளவுக்கு உள்ளவர் என்பதால் வன்முறை செய்வதற்குரிய மனப்பாங்கும் உள்ளது. அத்துடன் அவர் உங்கள் மகளுக்கு அனுப்பிய குறும்செய்தியும் அவரது மனநிலையை காட்டுகின்றது. 

அச் சிறுமியின் பெற்றோர்கள் அச் சிறுமியின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.

எனது மகனுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது...வோஅன்...(VAGUAN ..canada) உயர்தரம் படித்த வேளையில் ..டவுன்ரவுணில் எம்து போராட்டங்கள் உச்சம் பெற்று நடைபெற்ற வேளையில் ..இவன் தனது கொரிய நண்பர்களை கூட்டிச் சென்று..பங்கு பற்றச் செய்தும் ..லிளக்கமும் கொடுத்து ஆதரவைபெற்றிருக்கிறான்...அடுத்த நாள்  அங்கு பயிலும் சிங்களநாய்களால்   அச்சுறுத்தப்பட்டான்....இப்படி எத்தனை அனுபவங்கள்  புலம்பெயர் நாட்டில் ..பலருக்கு நடந்திருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

.அடுத்த நாள்  அங்கு பயிலும் சிங்களநாய்களால்   அச்சுறுத்தப்பட்டான்....இப்படி எத்தனை அனுபவங்கள்  புலம்பெயர் நாட்டில் ..பலருக்கு நடந்திருக்கு..

இது தான் எமது பலவீனம் 

எமது பலம் தெரியாமல் தூங்குது எம் இனம்.

புலத்தில் நாம் தான் பெரும்பான்மை இருந்தும் எம்மை பிரித்து பலவீனமாக்கி சிங்களம் இங்கும்????😭

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க இங்கிலாந்தில் படிக்கிற காலத்திலும் ஒரு சில சிங்களவர்கள் இனவாதமாக நடந்து கொண்டதுண்டு. பல்கலைக்கழகத்திடம் முறையிட்டதோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.

ஆனாலும்.. சிங்களவர்களுக்கு தங்கள் கடைகளில் பெற்றோல் நிலையங்களில் வேலை கொடுப்பதும் நம்மவர்கள் தான். 

ஊரில்.. சிங்கள இராணுவம் உட்பட.. இப்ப கொஞ்சம் மக்களிடம் நெருக்கமாக பழகுவதை அவதானிக்க முடியுது. மக்கள் இசைவாக்கப்பட்டு இருக்கிறார்கள். சிங்கள பொலிஸ் தான் அதிகம்.. மக்களிடம் காசு பறிப்பதை குறிப்பாகக் கொண்டு.. அடாத்தாக செயற்படுகிறது.  மக்களும் சாதாரண சிங்களவர்களை குறித்த நல் அபிப்பிராயங்களை வளர்ப்பதைக் காண முடியுது. பெரும்பான்மையான சிங்களவர்கள் வெளிப்படையாக இனக்குரோதம் காட்டுபவர்களாக இல்லை.. இப்போ ஊரில். அவர்களுக்கும் இப்ப பொருண்மிய நெருக்கடிகள்.. தமிழர்கள் குறித்த புரிந்துணர்வு அதிகம் உணரப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஆனால்.. சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் உயர் பதவி சிங்கள முப்படை ஆட்களும்.. இனகுரோதம்.. இனவிரோதம் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் மகளின் பாதுகாப்பு முக்கியம் அநேக சிங்களவர்கள் மென்மையானவர்கள் போல் நடிப்பது ஒரு கலை 1000வருடங்களுக்கு மேலான தமிழர் எதிர்ப்பு இனவாதம் தீயை  இலகுவில் அணைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, பெருமாள் said:

ரஞ்சித் மகளின் பாதுகாப்பு முக்கியம் அநேக சிங்களவர்கள் மென்மையானவர்கள் போல் நடிப்பது ஒரு கலை 1000வருடங்களுக்கு மேலான தமிழர் எதிர்ப்பு இனவாதம் தீயை  இலகுவில் அணைக்க முடியாது. 

இலங்கையில் நடந்த இனக்கலவரங்களே நல்ல உதாரணம்.பக்கத்து வீட்டுக்காரன் தமிழன் என்றால் கொலை செய்து கொள்ளை அடிக்கவும் தயங்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.