Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளனுக்கு ஜாமீன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளானுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளனுக்கு ஜாமீன்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளானுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

25 நிமிடங்களுக்கு முன்னர்
 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறை.

"மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே அவர் ஒரு சலுகையை அனுபவித்துவிட்டாா் எனச் சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக, இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், "பேரறிவாளன் இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்" என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேளிவியெழுப்பியது.

"302வது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்" என தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "302வது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்" என்பதை சுட்டிக்காட்டினார்.

பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

முடிவில், பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-60676624

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சந்தோஷமான செய்தி, இதேபோல் மற்றவர்களுக்கும் பிணை வழங்க வேண்டும்🙏

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய அனுபவித்து விட்டார் .....இனியாவது சமூகத்துடன் இணைந்து சந்தோசமாக இருக்கட்டும்.......!  👍

அப்படியே மற்றவர்களும் வெளியே வர வேண்டும்.......! 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. ஏனையோரையும் விடுதலை செய்யுங்கள். அவரின் தாயார் ஏறி இறங்காத படிகள் இல்லை.

காலையில் கேட்ட நல்லதொரு மகிழ்ச்சியான செய்தி. 

பேரறிவாளனுக்கு கொடுத்த ஜாமீனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனையவர்களுக்கும் ஜாமீன் கொடுக்க முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"நீதி ஜெயிக்கும். நளினிக்கும் பிணை வாங்க முயற்சி பண்றோம்!"- கண்ணீருடன் நளினியின் அம்மா பத்மா

"இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க தீர்ப்புதான். இப்ப என் பொண்ணு நளினி பரோலில் வந்திருக்காங்க. எனக்கு 82 வயசு ஆகிட்டதால முன் மாதிரி உடல்நிலை இல்லைங்க... ரொம்ப மோசமாகிடுச்சு. என் பொண்ணுதான் என்னை பாத்ரூம் கூட்டிட்டு போய் என்னை பார்த்துக்கிறா!"- நளினியின் அம்மா பத்மா

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பின் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நளினியின் அம்மா பத்மாவிடம் பேசினோம்.

நளினி, பத்மா (நளினியின் அம்மா)

நிலவையும், நட்சத்திரத்தையும் என் பொண்ணு பார்த்தே பல ஆண்டுகள் ஆகிடுச்சு. ஒவ்வொரு நாளும் அந்த நிலவையும், நட்சத்திரத்தையும் குழந்தை மாதிரி ரசிச்சு பார்க்குறா... பெத்த மனசு துடிக்குதும்மா..." எனக் கண் கலங்கியவர் தொடர்ந்து பேசினார்.

நளினி
 
நளினி

"சட்ட வல்லுநர்கள்கிட்ட பேசி நளினிக்கும் பிணை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். விடுதலை தொடர்பா நாங்க கொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கு. நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்குவாங்க... நீதி ஜெயிக்கும் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கோம்!" என்கிறார், தழுதழுத்த குரலில்!

"நீதி ஜெயிக்கும். நளினிக்கும் பிணை வாங்க முயற்சி பண்றோம்!"- கண்ணீருடன் நளினியின் அம்மா பத்மா | Nalini's mother Padma talks about the Court's judgement regarding Perarivalan - Vikatan

 
நளினி, பத்மா (நளினியின் அம்மா) File Photo

"இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க தீர்ப்புதான். இப்ப என் பொண்ணு நளினி பரோலில் வந்திருக்காங்க. எனக்கு 82 வயசு ஆகிட்டதால முன் மாதிரி உடல்நிலை இல்லைங்க... ரொம்ப மோசமாகிடுச்சு. என் பொண்ணுதான் என்னை பாத்ரூம் கூட்டிட்டு போய் என்னை பார்த்துக்கிறா. அவளுக்கு பரோல் வழங்கியதற்காக தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இப்ப நாங்க வேலூரில் இருக்கோம். என் பொண்ணு என் பக்கத்திலேயே இருக்கணும்னு மனசு கடந்து துடிக்குதும்மா... வயசாகிடுச்சுல இதுக்கு மேலேயும் என்னால அவளை பிரிந்து இருக்க முடியலை.

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்யாத குற்றத்திற்காக…. 32 ஆண்டுகள் சிறையில் இருப்பது கொடுமை.
மற்றவர்களுக்கும் விரைவில், மகிழ்ச்சியான தீர்ப்பு வர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி, மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.  

  • கருத்துக்கள உறவுகள்

 மகிழ்ச்சியான செய்தி 🙏 ஏனையவர்களுக்கும் ஜாமீன் கொடுக்க முன்வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜாமீன் கொடுப்பதோடு நின்றுவிடாது எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய இந்திய அரசியல்வாதிகளில் பலர் இன்றும் அரசில் உள்ளனர். அப்படியும் பேரறிவாளனுக்கு யாமீன் வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் அளித்து மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 🙏

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி, மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. விரைவில் மற்றவர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and outdoors

30 ஆண்டுகள்... நடையாய் நடந்த, 
அற்புதம் அம்மாவின் கால்களுக்கு கிடைத்த... சிறு இளைப்பாறுதல் இது.
இனி யாவும் நலமாகட்டும்.. 
மற்ற 6 பேருக்கும் அதுவே நடக்கட்டும்..

Cartoonist Bala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.