Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரோடு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1304340

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்மை.... வெள்ளைப்புலி என்று சொல்லி கிண்டல் பண்ணிய சிங்களவர்,
இப்போ... அவரால் தமக்கு லாபம் கிடைக்கும் என்றவுடன் ஜனாதிபதி ஆலோசகராக நியமித்து
லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.
தமக்கு தேவை என்றால்... என்னவும் செய்வான் சிங்களவன்.  

தமிழ் அரசியல்வாதிகளுக்கு... சாணக்கியம் என்றால், என்னவென்று தெரியாமல்.. 
இந்தியாவின் காலைப் பிடித்துக் கொண்டு  முழி பிதிங்கிக் கொண்டு நிற்கிறார்கள்.

ஜனாதிபதி ஆலோசகர் இல்லை. ஜனாதிபதியின் சர்வதேச பருவநிலை ஆலோசகர்.

https://www.newswire.lk/2022/10/12/president-gives-new-role-to-erik-solheim/

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இணையவன் said:

ஜனாதிபதி ஆலோசகர் இல்லை. ஜனாதிபதியின் சர்வதேச பருவநிலை ஆலோசகர்.

https://www.newswire.lk/2022/10/12/president-gives-new-role-to-erik-solheim/

இதற்குச் சரியான தெரிவு இந்தப் பால்குடியல்லோ.. Greta Thunberg

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு தொலைக்காட்சிப்பெட்டியில் வானிலை பார்க்க நேரமில்லை.......அதற்காக ஒரு ஆலோசகர்........!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

Image

Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan 🇱🇰 President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership! Proud to be appointed his International Climate Adviser together with
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்மை.... வெள்ளைப்புலி என்று சொல்லி கிண்டல் பண்ணிய சிங்களவர்,
இப்போ... அவரால் தமக்கு லாபம் கிடைக்கும் என்றவுடன் ஜனாதிபதி ஆலோசகராக நியமித்து
லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.
தமக்கு தேவை என்றால்... என்னவும் செய்வான் சிங்களவன்.  

தமிழ் அரசியல்வாதிகளுக்கு... சாணக்கியம் என்றால், என்னவென்று தெரியாமல்.. 
இந்தியாவின் காலைப் பிடித்துக் கொண்டு  முழி பிதிங்கிக் கொண்டு நிற்கிறார்கள்.

அவர்களுக்கு இந்தியாவின்******குள்  மட்டுமே தொங்க அனுமதி. அதற்குத்தான் தமிழ்மாக்கள் வாக்களித்து அனுப்பியுள்ளார்கள். 

இவர் புலம்பெயர் நாடுகளில் வலைவிரிச்சுத் திரிந்தவர். இலங்கைக்குள் இலங்கையராப் பழையதை மறந்துவாழுங்கோ என்று பறைஞ்சுகொண்டு திரிஞ்சு யாரும் பிடிபடவில்லையோ அல்லது பிடித்தவர் வேலைக்காகவில்லையோ தெரியவில்லை. இப்ப சனாதிபதி ஆலோசகர் வேடத்தோட ...         முன்சனிலை சில ஆண்டுகளுக்கு முன் வந்து சிங்களவரையும், சிங்களத் தமிழரையும் வைச்சு தமிழ்த் தேசியத்தை நேசிக்கிற மக்களையும் கூப்பிட்டு வகுப்பெடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டு போனவராம் என்று அறிந்தேன்.  சிங்களவரோடை வாழலாம் என்று ஓதுகிற தமிழர் ஏனின்னும் வெளிநாடுகளிலை என்று எனக்குப் புரியுதியில்லை.

நன்றி, 

  • கருத்துக்கள உறவுகள்

அவர், தவறான நடத்தை காரணமாக ஜநாவில் இருந்து வெளியேறு மாறு கோரப்பட்டவர் என்கிறார்களே 🤔

  • கருத்துக்கள உறவுகள்

$500  பிரயாணங்களுக்கு மட்டும் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டு பதவி விலகுமாறு கோரப்ப்பட்டு பதவி விலகியுள்ளார். 

https://www.google.ca/amp/s/amp.theguardian.com/environment/2018/nov/20/un-environment-chief-erik-solheim-resigns-flying-revelations

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அவர், தவறான நடத்தை காரணமாக ஜநாவில் இருந்து வெளியேறு மாறு கோரப்பட்டவர் என்கிறார்களே 🤔

ஆமாம் பணத்தை நேர்மை இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்.   அதாவது ஐநா சபையின் பணம்...என்று நினைக்கிறேன் சரியா?. 

4 minutes ago, nunavilan said:

$500  பிரயாணங்களுக்கு மட்டும் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டு பதவி விலகுமாறு கோரப்ப்பட்டு பதவி விலகியுள்ளார். 

https://www.google.ca/amp/s/amp.theguardian.com/environment/2018/nov/20/un-environment-chief-erik-solheim-resigns-flying-revelations

தனியா 500 டொலரா? டொலரா?       எங்கே நேர்வோ  இருந்து சுவிஸ்  போனாரர?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

மிச்சம் மீதீயாய் இருக்கிற தமிழ்ச்சனத்தை அழிக்கிறதுக்கு பிளான் குடுக்க போகுது.😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் பணத்தை நேர்மை இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்.   அதாவது ஐநா சபையின் பணம்...என்று நினைக்கிறேன் சரியா?. 

தனியா 500 டொலரா? டொலரா?       எங்கே நேர்வோ  இருந்து சுவிஸ்  போனாரர?

இல்லை. கென்யா போன்ற நாடுகளுக்கான பயணம் கோட்டல் செலவுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இல்லை. கென்யா போன்ற நாடுகளுக்கான பயணம் கோட்டல் செலவுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

எரிக்  சொல்ஹைய்ம் அடிக்கடி சிலோனுக்கு பேச்சு வார்த்தைக்கு வந்து...
சிங்களவனின் காசை  சுருட்டுற  குணம் தொத்தீட்டுது. 
வெள்ளைப் புலியின்... ஊழல் குருமார் எல்லாம், ராஜபக்ச குடும்பங்கள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

மஹிந்தவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயற்பட்டமையை மஹிந்த ராஜபக்ஷ இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஸ, எரிக் சொல்ஹெய்ம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த ராஜபக்ஸவிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.

நோர்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

309428164_1152893398983932_5582555089772657646_n.jpg

310090197_1152893388983933_7194569831764471385_n.jpg

309850804_1152893412317264_5941212263332710660_n.jpg

https://athavannews.com/2022/1304428

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மஹிந்தவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்

ஒபரேசன் பீக்கோன் சக்ஸஸ் என்பதால் கட்டாயம் சந்திக்கத்தானே வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

Image

Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan 🇱🇰 President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership! Proud to be appointed his International Climate Adviser together with

இரண்டு நரிகளும் சேர்ந்துதான் எம் போராட்டத்தை ஒழித்தார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

309428164_1152893398983932_5582555089772657646_n.jpg

படத்தில்... சுரேன் ராகவனும் உள்ளார்.
சோல்ஹைம் சந்திக்க வந்த தமிழ் ஆள்... சுரேன் ராகவன் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

309428164_1152893398983932_5582555089772657646_n.jpg

படத்தில்... சுரேன் ராகவனும் உள்ளார்.
சோல்ஹைம் சந்திக்க வந்த தமிழ் ஆள்... சுரேன் ராகவன் போலுள்ளது.

சுரேன் ராகவன் SLFP 🧐

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் இவரை சந்திக்க கூடாது காரணம் இவர் பருவ மாற்ற ஆலோசகர்  இனப்பிரச்சனையைக் ஆன ஆலோசகர் இல்லை   ஆனால் தமிழர்களை சந்திக்க முயற்சிகள் மேற்கோள்வார்    உள்நாட்டில் தமிழர்களை அழிந்து முடிந்தது இனி வெளிநாட்டு வாழ். தமிழர்கள் தான் பிரச்சனையாக இருக்கிறது அதையும் ஒரு கை பார்க்க போகிறார்கள் அவதானத்துடன் இருப்போம் 😀

  • கருத்துக்கள உறவுகள்+
21 minutes ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் இவரை சந்திக்க கூடாது காரணம் இவர் பருவ மாற்ற ஆலோசகர்  இனப்பிரச்சனையைக் ஆன ஆலோசகர் இல்லை   ஆனால் தமிழர்களை சந்திக்க முயற்சிகள் மேற்கோள்வார்    உள்நாட்டில் தமிழர்களை அழிந்து முடிந்தது இனி வெளிநாட்டு வாழ். தமிழர்கள் தான் பிரச்சனையாக இருக்கிறது அதையும் ஒரு கை பார்க்க போகிறார்கள் அவதானத்துடன் இருப்போம் 😀

எங்கடை ஆக்கள் சிங்களவனிட்டை பதவியும் பணமும் கிடைக்குது என்டால் அடிச்சுப் பிடிச்சுக்கொண்டு வரிசையிலை முன்னுக்கு நிப்பினம். இதிலை எங்க அவதானமா நிக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இல்லை. கென்யா போன்ற நாடுகளுக்கான பயணம் கோட்டல் செலவுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நன்றி நூணவிலான். 500 டொலர்  அல்ல5000 .டொலர் அல்லது 50,000 டொலர் என்ற சந்தேகம் பட்டு விட்டேன்.....

500 டொலர் மிக சிறிய தொகை   பாவம் இதற்காக அவரின் பதவியை பறித்து விட்டார்கள்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நன்றி நூணவிலான். 500 டொலர்  அல்ல5000 .டொலர் அல்லது 50,000 டொலர் என்ற சந்தேகம் பட்டு விட்டேன்.....

500 டொலர் மிக சிறிய தொகை   பாவம் இதற்காக அவரின் பதவியை பறித்து விட்டார்கள்    

$ அரை மில்லியன் 

🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

ஒபரேசன் பீக்கோன்

ஒபரேசன் பீக்கோன்........? 🙃

Getting Ready Gif - Gp Muthu Comedy Funny Youtube - Kulfy

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நா............. ரணிலுடன்  ஒட்டுவது இரு  நரிகள்  ஒன்றிணைந்த பெரும்  அழிவை  எமக்குத்தரப்போகிறது

நீ  தூங்கு  தமிழா...😡

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலையே சாப்பிட வழியிலை...இதுக்குள்ளை அவருக்கு சர்வதேச ஆலோசகர் பதவி கேட்குது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.