Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதுவும் ஒரு கனடாக்காரரின் காணிதான். எல்லாமாக இருபது பரப்பு. இப்ப இவ்வளவும் தான் செய்யிறம். போகப்போக பெரிதாக்கலாம் என்று இருக்கிறம் என்கிறார். உங்கள் பண்ணைகள் ஏன் மூடினீர்கள் என்றதற்கு, நாங்கள் நாங்கள் நின்றால்தான் பண்ணையை ஒழுங்காகப் பாராமரிக்கலாம். நான் மற்றவர்கள் பண்ணையைக் கவனிக்க வந்தவுடன் அங்கு வேலை செய்பவர்களும் கவனம் இல்லை. கோழிகள் எல்லாம் நோய் வந்து செத்துவிட்டன. இப்ப நான் இதை மட்டும் தான் பார்க்கிறேன் என்றவுடன் அவர் சொல்லாமலே பல விடயங்கள் எனக்குப் புரிகின்றன. 

எதுவும் பேசாமல் அவரிடம் இருந்து விடைபெற்று வர, என்ர போன் நம்பர் இருக்குத் தானே அக்கா. பண்ணை போட உதவிகள் தேவை என்றால் அடியுங்கோ  என்கிறார். உங்களுக்கு அடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று மனதுள் சொல்லியபடி வருகிறேன்.  

நான் ஒரு முன்மாதிரிப் பண்ணையை உருவாக்கி இவர்களுக்குக் காட்டவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. சில பெண்கள் வன்னியில் பண்ணைகளை நடத்துகிறனர். அதையும் பாருங்கள் என்று ஒருவர் முன்மொழிகிறார். ஏற்கனவே பார்த்தவைபோல்தான் இவையும் இருக்கும் என்னும் எண்ணத்தில் இனி எதையும் பாற்பதில்லை என்று முடிவுசெய்கிறேன். 

இனி இந்த யூடூபில் வரும் விடயங்களையும் நம்ப முடியாது போலுள்ளது.  சில ஒருங்கிணைத்த பண்ணைகளை பார்த்தது அங்கு செல்லும் போது சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.  உங்களின் அனுபவத்தை பார்த்த போது வீண் கற்பனைகள் இல்லாதிருப்பது மனசுக்கும் உடலுக்கும் நன்மையென்று நினைக்கிறேன்.
டென்மார்க் அல்லது நோர்வே பெண் ஒருவர் வன்னியில் ஒரு பெரிய பண்ணை நடத்துவதாக கிட்டடியில் ஒரு யூடூபில் பார்த்தேன்.  அது பற்றி நீங்கள் கேள்வி பட்டீர்களோ?

காணி வாங்கும் விடையத்தை நீங்கள் கைவிட்டது நல்லது ... அங்கு முழுமையாக சென்று இருக்கும் வரைக்கும் காணி வாங்குவது வீண் மன உளைச்சல்.
ஒருங்கிணைத்த பண்ணை வைக்க விரும்பினால், நிறைய தோட்ட காணிகள் வெறுமனே தரிசுபத்தி இருக்கிறது.  ஒரு ஐந்து பத்து வருட குத்தகைக்கு எடுத்து செய்து பார்க்கலாம்.

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

 நிறைய தோட்ட காணிகள் வெறுமனே தரிசுபத்தி இருக்கிறது.  

உங்களுக்கு அனுபவம் இல்லை என்று தெரிகிறது

சும்மா கிடக்கும் காணி என்று எம்மூரில் ஒருவர் லண்டனில் இருந்து போய் சில பரப்புகளை ஒன்றாக்கி தோட்டக்காணி ஆக்கினார். அடிதடி கோட்டு கேஸ் என்று இழுக்க தொடங்க ஓடி வந்து விட்டது. பார்க்க ஆசையாக இருந்த காணிகள் மீண்டும் தரவையாக.....😭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

உங்களுக்கு அனுபவம் இல்லை என்று தெரிகிறது

சும்மா கிடக்கும் காணி என்று எம்மூரில் ஒருவர் லண்டனில் இருந்து போய் சில பரப்புகளை ஒன்றாக்கி தோட்டக்காணி ஆக்கினார். அடிதடி கோட்டு கேஸ் என்று இழுக்க தொடங்க ஓடி வந்து விட்டது. பார்க்க ஆசையாக இருந்த காணிகள் மீண்டும் தரவையாக.....😭

உண்மையில் நேரடி அனுபவம் இல்லை.  மற்றவர்களின் கருத்துக்கள், தற்போது வரும் யூடூபில் பார்க்கும் காணொளிகளை வைத்து ஒரு ஊகமே .

சும்மா இருந்த காணிகளை அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்று செய்தும் அடிதடியா?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Sabesh said:

உண்மையில் நேரடி அனுபவம் இல்லை.  மற்றவர்களின் கருத்துக்கள், தற்போது வரும் யூடூபில் பார்க்கும் காணொளிகளை வைத்து ஒரு ஊகமே .

சும்மா இருந்த காணிகளை அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்று செய்தும் அடிதடியா?

முதலில் ஆம் என்றவர்கள் பின்னர் கதைகளைக் கேட்டு தொடங்கி விட்டார்கள். வெளிநாட்டில் இருந்து ஊருக்கே போகாதவர்கள் எல்லாம் சண்டைக்காக போனார்கள் 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் நம்மவர்களையே நம்பமுடியாது போலிருக்கு.....?

ஒட்டுமொத்தமாக எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது

11 hours ago, suvy said:

நாங்கள் யு டியூபில் ஒரு சினிமாவைத்தான் பார்க்கிறோம், நேரில் சென்று பார்க்கும்போதுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப் படுகிறோம் என்பது புரியும் ..........எல்லாம் அனுபவம்தான்......ஒன்றும் செய்யேலாது போனவை போனவைதான்.......தொடருங்கள் சகோதரி...........!  

உண்மைதான் அண்ணா. சினிமா போல் எம்மை ஏமாற்றுகிறார்கள்.

7 hours ago, Sabesh said:

அங்கு சென்று இருப்பதென்று முடிவானால், இது எழுத்தில் தேவை இல்லாத விடையம் என்று நினைக்கிறேன்.  வீண் வம்பு 😉

மிகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்😀

7 hours ago, Sabesh said:

இனி இந்த யூடூபில் வரும் விடயங்களையும் நம்ப முடியாது போலுள்ளது.  சில ஒருங்கிணைத்த பண்ணைகளை பார்த்தது அங்கு செல்லும் போது சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.  உங்களின் அனுபவத்தை பார்த்த போது வீண் கற்பனைகள் இல்லாதிருப்பது மனசுக்கும் உடலுக்கும் நன்மையென்று நினைக்கிறேன்.
டென்மார்க் அல்லது நோர்வே பெண் ஒருவர் வன்னியில் ஒரு பெரிய பண்ணை நடத்துவதாக கிட்டடியில் ஒரு யூடூபில் பார்த்தேன்.  அது பற்றி நீங்கள் கேள்வி பட்டீர்களோ?

காணி வாங்கும் விடையத்தை நீங்கள் கைவிட்டது நல்லது ... அங்கு முழுமையாக சென்று இருக்கும் வரைக்கும் காணி வாங்குவது வீண் மன உளைச்சல்.
ஒருங்கிணைத்த பண்ணை வைக்க விரும்பினால், நிறைய தோட்ட காணிகள் வெறுமனே தரிசுபத்தி இருக்கிறது.  ஒரு ஐந்து பத்து வருட குத்தகைக்கு எடுத்து செய்து பார்க்கலாம்.

எனக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் ஏற்படும் என்றில்லை. எதற்கும் இரண்டு பண்ணைக்களைப் போய்ப் பாருங்கள்.

5 hours ago, Sabesh said:

உண்மையில் நேரடி அனுபவம் இல்லை.  மற்றவர்களின் கருத்துக்கள், தற்போது வரும் யூடூபில் பார்க்கும் காணொளிகளை வைத்து ஒரு ஊகமே .

சும்மா இருந்த காணிகளை அதன் உரிமையாளரிடம் அனுமதி பெற்று செய்தும் அடிதடியா?

நம்பிக்கையானவர்களிடம் தெரிந்தவர்களூடாக ஒரு வக்கீலை வைத்து எழுதி செய்தால் பிரச்சனை வராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒருங்கிணைந்த பண்ணைகளின் சிறந்த மாதிரிகளைப் பார்க்க விரும்புவோர் போக வேண்டிய இடம் மத்திய மாகாணம். 20 ஆண்டுகளுக்கு முன்பே, குண்டசால, சரசவிகம, ஹிந்தகல, மஹகந்த போன்ற பேராதனையை அண்டிய சிறு கிராமங்களில் அருமையான ஒருங்கிணைந்த பண்ணைகள் இருந்தன. இவற்றுள் பலவற்றிற்கு கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிய அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றுள் ஹிந்தகலவில் இருந்த பண்ணை சேதன பண்ணையாக இருந்தது. குண்டசாலையில் இருந்த ஒருங்கிணைந்த பண்ணையில், லொத்தர் அடிப்படையில் ஒரிரு குடும்பங்களைத் தேர்வு செய்து சில வருடங்களுக்கு பண்ணையில் வசித்து பயிற்சி பெறச் செய்யும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

வளர்க்கும் பயிர்கள், ஆட்டினங்கள், மாட்டினங்கள் என்பன வடமாகாணத்தில் வேறாக இருக்கும், ஆனால், செயல்படுத்தும் நுட்பங்கள், முறைகள் பற்றி இந்த மத்திய மாகாண ஒருங்கிணைந்த பண்ணைகளில் கற்கலாம், ஆலோசனை பெறலாம்.

நான் இந்தியாவிலும் சென்றுபார்க்க உள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிநான்கு 

அதற்குள் மகள் என்னை யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு மாதமாக அடைத்து வைத்திருக்கிறீர்கள். எப்ப வேறு இடங்கள் பார்க்கப் போவது என்கிறாள். இணுவிலில் இருந்து தொடருந்தில் கிளம்பி வவுனியா போய் அங்கு இரு குடும்பங்களைக் கண்டு தங்கி அங்கிருந்து வவுனிக்குளம் என்னும் இடத்தில் என்  ஒன்றுவிட்ட அண்ணா சிறிய வீடு ஒன்று கட்டி ஐந்து ஏக்கர் நிலத்தை பக்கத்திலுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு ஆறுமாதம் இங்கு, ஆறு மாதம் கனடாவிலுமாக வாழ்கிறார். அவரின் அழைப்பின் பேரில் அங்கும் ஒருநாள் நிற்க அந்தப் பக்கம் காணிகள் வாங்குவோமா என்னும் எண்ணமும் எழுந்தது. என் அண்ணருக்கும் எனக்கும் பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் அவர் அமிர்தலிங்கத்தின் வால். போக என்னுடன் புலிகளுக்கு எதிராகவே எப்போதும் கதைத்து வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருப்பார். அத்தோடு அந்தப் பகுதியில் யானைகள் குரங்குகளின் ஆட்டக்காசமும்அப்பப்ப இருக்குமாம் என்றதுடன் அவருக்கு அருகில் இருப்பது சரிவாராது என்று முடிவுசெய்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதே நல்லது என்கிறேன். 

அங்கிருந்து பஸ்சில் திருகோணமலை சென்றது. கோணேசரத்துக்கு 2017 இலும் சென்றது. இப்ப மகளுக்காக அவரையும் கூட்டிச் சென்றோம்.அங்கு முதலிலே மகள் ஹோட்டல் புக் செய்திருந்தார். மூவர் தங்க 6000 ரூபாய்கள். அங்கிருந்தே கன்னியா வென்நீர் ஊற்று பார்ப்பதற்கு போய்வர ஓட்டோ 2000 ரூபாய்கள். கோணேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும்போது சிங்களவர்களின் கடைகளைப் பார்த்து முன்னர் வந்த கோபம் இப்ப வரவில்லை. ஏனெனில் இங்கு வசிக்கும் மக்களே எதுவும் செய்ய முடியாதிருக்கும்போது நாம் கோபம் கொண்டோ மனம் வருந்தியோ எதுவும் ஆகப்போவதில்லை எனும் கையாலாகாத்தனம். 

அது முடிய புறாத்தீவு. சிறிய வள்ளத்தில் நாம் தனியாகக் செல்வதானால் 5000  ரூபாய்கள் என்றனர். சரி என்று புறப்படும்போது ஒரு சிங்கள சோடி வர  அவர்களையும் ஏற்றிக்கொண்டு போவோம் நீங்கள் நான்காயிரம் அவர்கள் நான்காயிரம் தரட்டும் என்றனர். இது என்ன கணக்கு என்று நான் குளம்ப, அம்மா அவர்கள் எம்மிடம் எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். பேசாமல் இருங்கள் என்றதும் நானும் எதுவும் கதைக்கவில்லை. தீவுக்குள் நுழைவதற்கு, பின்னர் எம்மை கடலுக்கடியில் பவளப்பாறைகள் காட்டுவதற்கு என்று நானும் கணவரும் இலங்கையின் பழைய அடையாள அட்டை வைத்திருந்ததனால் குறைவான  காசும் மகள் வெளிநாடு என்பதனால் டொலரில் 10,15,25 என்று மகளுக்குமட்டும் 16000 ரூபாய்களை அறவிட்டனர்.  அது மிக அற்புதமான அனுபவம்தான். 

பின்னர் அடுத்தநாள் காலை மீண்டும் பஸ்சில் வெளிக்கிட்டு எல்லா, நுவரெலியா என்று பின்னர் கண்டி போவதாக ஏற்பாடு ஆனால் கண்டி செல்லாமலே கொழும்பு சென்றாச்சு. ஏனெனில் கணவரும் மகளும் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பச் செல்லவேண்டி இருந்ததால் கணவரின் காணி விடயம் ஒன்று முடிக்கவேண்டி இருந்தது ஒன்று. அடுத்தது நான் தொடர்ந்து நிற்பதனால் எனக்கு ஒரு வருட விசா எடுக்கவேண்டியும் இருந்தது. மூன்றாவது பஸ் பயணம் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. றெயின் பஸ் என்று டாய்லெட் பிரச்சனை ஒருபுறம். அதனால் இனிமேல் வருவதானல் ஒருகாரையோ அல்லது வானையோதான் காசைப் பார்க்காமல் பிடித்துக்கொண்டு திரிய வேண்டும் என்னும் என் விருப்பத்தை மகளோ கணவரோ ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படித் திரிவதுதான் அவர்கள் இருவருக்கும் ஏற்றதாக இருக்க, இனிமேல் நீங்கள் இருவரும் தனியத் திரியுங்கள் என்றுவிட்டேன். 

அத்தோடு கொழும்பில் கோட்டலில் ஒரு நாள் மூன்று பேர் தங்கும் அறை 8000 ரூபாய்களுக்கு எடுத்து  அடுத்தநாள் காலைவரை தங்கிவிட்டு மகள் தான் அங்கேயே இருக்கிறேன் என்று கூற எனக்கோ அவளைத் தனிய விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. கவனமாக  இருங்கோ என்று பலதடவை சொல்ல அம்மா நான் சின்னப் பிள்ளை இல்லை அம்மா என்று சிரிக்கிறாள். கோட்டலுக்கு முன்னால் நிற்கும் ஓட்டோக்களைக் காணவில்லை. அதனால் அங்கு வேலை செய்யும் பையன் வீதியில் ஒரு ஓட்டோவை எமக்காக மறிக்க மீற்றர் போடுகிறேன் என்கிறார். சரி என நானும் கணவரும் ஏறிக்கொள்கிறோம். விசா எடுப்பதற்கு பிறகு செல்வோம். முதலில் லைசென்ஸ் மாற்றுவோம் என எண்ணி அங்கு சென்றால் எக்கச்சக்கமான சனம். அத்தனை தூரம் சென்றதற்கு ஓட்டோக்காரர் 1200 ரூபாய்களைத்தான் எடுத்தார். அதுவே யாழ்ப்பாணத்தில் என்றால் 2000 ரூபாய் கொடுக்கவேண்டும்.  

நாம் யூக்கேயில் இருப்பதனால் ஒரே பக்கம் staring என்பதனால் uk இல் main post office இல் ஒரு வருட லைசென்ஸ் எடுத்துக்கொண்டு போய் இலங்கையில் ஒரு ஆண்டுகள் வாகனங்கள் ஓட முடியும். நாம் அதை மறந்துபோய் வந்துவிட்டோம். ஆகவே நான் தொடர்ந்து அங்கு நிற்பதனால் எடுப்போம் என்று யாழ்ப்பாணத்தில் கச்சேரிக்குச் சென்றால் காத்திருப்புக்குப் பின் வரிசையில் நின்று ஒருவரிடம் செல்கிறோம். அவர் மெடிக்கல் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் வேறு எவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று கூறி எனது அடையாள அட்டையைக் கேட்கிறார். அது நான் படிக்கும் காலத்தில் எடுத்தது. அதைப் பார்த்ததுமே அவருக்கு விளங்கிவிட்டது போல. வெளிநாடோ? என்கிறார். ஓம் என்று கூற வெளிநாடு என்றால் நீங்கள் சுண்டுக்குளி லேடீஸ் ஸ்கூல் இற்குப் பின்னால் இருக்கும் ஒரு கண் வைத்தியரோ அல்லது கண்ணாடிக் கடையோ தெரியவில்லை. அங்கு சென்று தான் எடுக்க வேண்டும்.என்று முகவரி தந்ததோடு மட்டுமன்றி 8000 ரூபாய்கள் என்கிறார். நாமும் சரி என்று வெளியே வந்து முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை மறித்து அவரிடம் விடயத்தைக் கூறுகிறேன்.

மெடிக்கல் எடுக்கும் இடம் கச்சேரிக்குப் பின்னால் இருக்கே. நீங்கள் வெளிநாடோ என்கிறார். ஓம் என்றதற்கு அதுதான் உங்களிட்டைக் காசு பிடுங்க நினைக்கிறார் என்று எம்மை பின்னாலே உள்ள இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றால் ஒரு 20 நிமிடத்தில் 800 ரூபாய்கள் பெற்றுக்கொண்டு சான்றிதழ் தருகின்றனர். வெளியே வர அந்த ஓட்டோக்காரர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்க யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் வந்த நாம் அவருடன் யாழ்ப்பாணம் செல்கிறோம். கொழும்பில் லைசென்ஸ் மாற்றும் இடத்துக்குச் சென்ற பின்னர் தான் கணவர் தன் லைசென்சைக் காணவில்லை என்கிறார். இனி என்ன செய்வது யாழ்ப்பாணத்தில் இருந்தால் மீண்டும் கொழும்பு வரும்போது எடுப்போம் என்று கூறி அவரை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு நான் உள்ளே செல்கிறேன். 

வரிசையில் நின்று ஒருவரிடம் சென்று எமது விபரங்களைக் கொடுக்க அவர் எல்லாத் தகவல்களையும் ரைப் செய்து இன்னொருவரிடம் அனுப்புகிறார். கன  நேரமாக என்னைக் காக்கவைத்துவிட்டுப் போன் செய்து சிங்களத்தில் கதைத்தபடி இருக்கிறார். எனக்கு கடுப்பானாலும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறேன். பின்னர் அவர் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு வெளிநாட்டவர்களுக்கு 11000 ரூபாய் என்றும் தூரத்தில் இருக்கும் கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட்டு வரும்படி கூறுகிறார். நேரம் 12.30. கவுண்டருக்குச் சென்றால் அங்கும் வரிசை நீள்கிறது. ஒரு பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் எனக்கு முன்னால் இருவரும் பின்னால் ஐவரும் இருக்க வேலை செய்பவர் வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. 

அவர்கள் தமக்குள் சிங்களத்தில் அமளிப்படுகிறார்கள். என்ன என்று நான் கேட்க அவர் லஞ்ச் பிரேக் என்கின்றனர். எப்ப வருவார் என்றதற்கு தமக்கும் தெரியாது என்கின்றனர். மற்றவர்கள் வேறு கவுண்டருக்குப் போக நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஒருவர் வந்து ஏன் நிற்கிறாய் என்று கேட்க நான் விபரத்தைக் கூற அவர் வா என்று என்னைக் கூட்டிச் சென்று உள்ளே வேறொருவரிடம் விடயத்தைக் கூறி foreign என்றுவிட்டுப் போக அவர் என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இன்னொரு கவுண்டருக்குப் போய் என் லைசென்சைப் பெற்றுக்கொள்ளுமாறு கூற அங்கே செல்கிறேன். 

ஒரு சிங்களப் பெண் என் பாஸ்போட்டையும் பணம் கட்டிய பற்றுச்சீட்டையும் வாங்கிப் பார்த்துவிட்டு, நீ வெளிநாடு என்றதனால் இன்னும் 8000 ரூபாய்கள் கட்ட வேண்டும் என்று வெளியே உள்ள வேறொரு கவுண்டர் ஒன்றுக்குப் போகுமாறு கூற ஏன் இங்கு கட்ட முடியாதா என்கிறேன். அவர்கள் உன்னை வெளியேதான் அனுப்பியிருக்கவேண்டும். மாறி அனுப்பிவிட்டார்கள் என்கிறார். ஒன்றுக்கு இரண்டு பேர் 11000 ரூபாய்கள் என்றுகூற இவ இன்னும் 8000 காட்டச் சொல்கிறா. அதுவும் வெளியே உள்ள கவுன்டரில் என்று கணவரிடம் சொல்லிக் கோபப்பட, நாம் வேறு சிங்களம் தெரிந்தவர்களைக் கூடிக்கொண்டு வந்திருக்க வேண்டும். இனி உவர்களுடன் நின்று வாக்குவாதப்பட்டு பிரயோசனமில்லை. போய் கட்டிப்போட்டு வா என்கிறார். எனக்கோ இவவை விடக்கூடாது என்று இருந்தாலும் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகிறது.. வெளியே சென்று காட்டிவிட்டு வர மூன்றுமணிக்கு வெளியே உள்ள இடம் ஒன்றைக் காட்டி அங்கு வந்து லைசென்சைப் பெற்றுக்கொள்ளும்படி கூற நானும் கணவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வந்து காத்திருக்க எட்டு ஆண்டுகளுக்கான லைசென்ஸ் கைக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காத்திருக்க எட்டு ஆண்டுகளுக்கான லைசென்ஸ் கைக்கு வருகிறது.

இந்த லைசென்ஸ் உடன் உழவு மெசின்  ஒட முடியுமா ????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்த லைசென்ஸ் உடன் உழவு மெசின்  ஒட முடியுமா ????

உழவு யந்திரத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.அவைகளுக்கு 8 போட்டு காண்பிக்க வேண்டும்.அப்படித்தான் முன்பு இருந்தது.நான் அப்படித்தான் எடுத்திருந்தேன்......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

உழவு யந்திரத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.அவைகளுக்கு 8 போட்டு காண்பிக்க வேண்டும்.அப்படித்தான் முன்பு இருந்தது.நான் அப்படித்தான் எடுத்திருந்தேன்......!  😁 

தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணை......ஆனால்   சுமே.   உழவு இயந்திரத்தில் இருக்கும்   ஒரு போட்டோ    பார்த்தேன்......ஆகையால்   கேட்டேன்  ....🤣. வேற ஓன்றுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சுமே சொன்ன பன்டத்தரிப்பு ஆசிரியரின் பண்ணைக்கு இரன்டு தடவை சென்றிருக்கிறேன்.நான் போன போது பண்ணை அற்புதமாக இருந்தது.நான் நினைக்கிறேன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கால்நடைகளிற்க்கான உணவுகள் தட்டுப்பாடு காரனமாக அதிகமானவந்றை விற்று இருக்கலாம் என்டு.மற்ற உடுப்பிட்டி பண்ணைகாரனுடன் போனில் கதைத்துள்ளேன்.மற்றும் நானும் கடந்த சில வருடங்களாக சிறு பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன்.நான் அங்கு நின்று ஒன்றை உருவாக்கி அது பயன் தரத் தொடங்கும் போது இங்கு வர வேன்டி இருக்கும்.அதோடு அங்கு கவனிப்பு இல்லாமலும் நேர்மையில்லாமலும் அழிந்து விடும்.அடுத்த முநை போய் மீன்டும் ஒன்று என்டு இப்படியே போகுது.நானும் விடுகிற மாதிரி இல்லை.பார்ப்போம்.

4 hours ago, Kandiah57 said:

சுமே.   உழவு இயந்திரத்தில் இருக்கும்   ஒரு போட்டோ    பார்த்தேன்......ஆகையால்   கேட்டேன்  ....🤣. வேற ஓன்றுமில்லை 

அந்த உழவு இயந்திரம் இன்னும் உயிரோட இருக்கா?😄

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 08:38, விளங்க நினைப்பவன் said:

அவாவின் பயண கட்டுரையும் நீங்கள் வெளியிடும் இலங்கை படங்களும் அங்கே போக வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குபவை தான்.

மிக்க நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2023 at 08:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பன்னிரண்டு 

முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில்  அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு  பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர். 

கண்ணில் அம்மாச்சி  உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார்.  நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம். 

சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன். 

வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும்  கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார்.  ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு.  

காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி. 

கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல்  சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர்  மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

கிறிக்கட் வர்னணை போல் (பந்துக்கு பந்து) மிக சுவாரசியமாக மனம் திறந்து எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்கிறோம் சுமோ….

தங்குமிடங்கள் உணவகங்களின் பெயரை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி போற நேரம் எல்லாம் எட்டு வருசத்துக்கு எல்லா வாகனமும் அக்கா ஓடலாமா🤔....இல்ல அப்படித் தான் படங்கள் பல விதமாக பார்க்க கூடியதாக இருந்தது....🤭

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிளுக்கு தனியாக லைசன்ஸ் எடுக்கணும் .

அதாவது லைட் , கெவி என இருக்கிறது லைட் விகிக்கிள் வாகனங்களுக்குள் ஆட்டோ , வான் ,  ஓட்டலாம் கெவி என்பதற்குள் பேருந்து , லொறி , பாரவூர்திகள் ஓட்டலாம் 

ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு மாத்திரம் எடுத்தால் வேறு வாகனம் ஓட முடியாது பிடிப்பாங்கள்  சுளையாக அள்ளி விடுவாங்கள் 

நானும் ஒரு நண்பர் கூறினார் எனக்கு தெரிந்கவர்களுக்கு உதவி செய்துள்ளேன் போய் பார்த்து சொல்லுங்கள் என அங்கே போய் பார்த்தேன் அப்படி எதுவுமே நடந்தததாக இல்லை ஆனால் காணியை மட்டும்  அடைத்து பராமரிக்கிறார் அவர் யாழில் இல்லை முகநூல் வழியாக ஆனால் மீண்டும் அவரிடம் சொல்ல மனம் இல்லை அங்கு எதுவுமே நடக்கவில்லை என சொல்ல  ஆக நூற்றுக்கு 90 வீதம் புலம்பெயர்ந்தவர்களை இங்குள்ள் சிலர்  ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என சத்தமாக சொல்லலாம் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 08:04, Kandiah57 said:

இந்த லைசென்ஸ் உடன் உழவு மெசின்  ஒட முடியுமா ????

May be an image of motorcycle and text

A1, A,B, G1  இந்த நான்கும்தான் ஓடமுடியும்.

On 28/4/2023 at 13:23, சுவைப்பிரியன் said:

நானும் சுமே சொன்ன பன்டத்தரிப்பு ஆசிரியரின் பண்ணைக்கு இரன்டு தடவை சென்றிருக்கிறேன்.நான் போன போது பண்ணை அற்புதமாக இருந்தது.நான் நினைக்கிறேன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கால்நடைகளிற்க்கான உணவுகள் தட்டுப்பாடு காரனமாக அதிகமானவந்றை விற்று இருக்கலாம் என்டு.மற்ற உடுப்பிட்டி பண்ணைகாரனுடன் போனில் கதைத்துள்ளேன்.மற்றும் நானும் கடந்த சில வருடங்களாக சிறு பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன்.நான் அங்கு நின்று ஒன்றை உருவாக்கி அது பயன் தரத் தொடங்கும் போது இங்கு வர வேன்டி இருக்கும்.அதோடு அங்கு கவனிப்பு இல்லாமலும் நேர்மையில்லாமலும் அழிந்து விடும்.அடுத்த முநை போய் மீன்டும் ஒன்று என்டு இப்படியே போகுது.நானும் விடுகிற மாதிரி இல்லை.பார்ப்போம்.

அதையும் எங்கே என்று சொன்னால் நானும் போய் பார்க்கலாம்.

On 28/4/2023 at 09:18, suvy said:

உழவு யந்திரத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.அவைகளுக்கு 8 போட்டு காண்பிக்க வேண்டும்.அப்படித்தான் முன்பு இருந்தது.நான் அப்படித்தான் எடுத்திருந்தேன்......!  😁 

நீங்கள் லைசென்ஸ் எடுக்கும்போதும் இதே தொகைதான் அறவிட்டார்களா ??

On 29/4/2023 at 16:56, தனிக்காட்டு ராஜா said:

மோட்டார் சைக்கிளுக்கு தனியாக லைசன்ஸ் எடுக்கணும் .

அதாவது லைட் , கெவி என இருக்கிறது லைட் விகிக்கிள் வாகனங்களுக்குள் ஆட்டோ , வான் ,  ஓட்டலாம் கெவி என்பதற்குள் பேருந்து , லொறி , பாரவூர்திகள் ஓட்டலாம் 

ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு மாத்திரம் எடுத்தால் வேறு வாகனம் ஓட முடியாது பிடிப்பாங்கள்  சுளையாக அள்ளி விடுவாங்கள் 

நானும் ஒரு நண்பர் கூறினார் எனக்கு தெரிந்கவர்களுக்கு உதவி செய்துள்ளேன் போய் பார்த்து சொல்லுங்கள் என அங்கே போய் பார்த்தேன் அப்படி எதுவுமே நடந்தததாக இல்லை ஆனால் காணியை மட்டும்  அடைத்து பராமரிக்கிறார் அவர் யாழில் இல்லை முகநூல் வழியாக ஆனால் மீண்டும் அவரிடம் சொல்ல மனம் இல்லை அங்கு எதுவுமே நடக்கவில்லை என சொல்ல  ஆக நூற்றுக்கு 90 வீதம் புலம்பெயர்ந்தவர்களை இங்குள்ள் சிலர்  ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என சத்தமாக சொல்லலாம் 

எனது லைசென்சுக்கு ஓட்டோ ஓட்ட முடியாது. ஆனால் முன்பே அதற்க்கும் சேர்த்துப் போடுங்கக்கள் என்றாள் தந்திருப்பார்களாம். அது எனக்குத் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 16:49, யாயினி said:

இனி போற நேரம் எல்லாம் எட்டு வருசத்துக்கு எல்லா வாகனமும் அக்கா ஓடலாமா🤔....இல்ல அப்படித் தான் படங்கள் பல விதமாக பார்க்க கூடியதாக இருந்தது....🤭

எல்லாம் ஓட்ட முடியாது. காரும் ஸ்கூட்டியும் கட்டாயம் ஓடலாம்.

On 29/4/2023 at 12:24, MEERA said:

தொடர்கிறோம் சுமோ….

தங்குமிடங்கள் உணவகங்களின் பெயரை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

இனி எழுதும்போது குறிப்பிடுகிறேன்.

On 28/4/2023 at 17:59, nunavilan said:

கிறிக்கட் வர்னணை போல் (பந்துக்கு பந்து) மிக சுவாரசியமாக மனம் திறந்து எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

நன்றி

On 28/4/2023 at 13:52, நிழலி said:

அந்த உழவு இயந்திரம் இன்னும் உயிரோட இருக்கா?😄

அது நேராக ஓட்டும் மட்டும் ஓகே. திருப்புவது மிகக் கடினம். சிறிது நேரம் ஒட்டிவிட்டு மீண்டும் அவரிடம் கொடுத்ததில் தப்பித்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

A1, A,B, G1  இந்த நான்கும்தான் ஓடமுடியும்.

நல்லகாலம் பிளைட் ஓடேலாது. அதுவுமெண்டால் நாங்கள் இஞ்சை இருக்கேலாது.:rolling_on_the_floor_laughing:

அது சரி.....

அங்கை ஆரிட்டையும் உங்கடை சமையல் சித்து விளையாட்டையும்  செய்து காட்டினனீங்களோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை  கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை  கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரம் அருமை கவி அருணாசலம் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

பண்ணை தேடி ஒரு  உலா 😆..தொழிளாளர் தின நல் வாழ்த்துக்கள்🤭

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.