Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதட்டளவில் தேசியம் பேசாமப் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செய்றபாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1342331

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருந்து ......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் விருப்பபடி அகன்ற இந்தியாவை இவர் அமைக்க தான் போகிறார். அப்படி இவர் அமைத்தால் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பிஜேபி இவரை நியமிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

87 இல் இருந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா?

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் மாதிரி வர வேண்டும் என செல்வம் ஆசைப்படுகிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அப்பப்ப இப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு உளரிடுவார், கண்டுக்காம நகர்ந்து போங்க.
காந்தி(?) மண்டையை போட்டு ரொம்ப நாளாயிட்டுது சார்.

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தாளோட கட்சி (பழைய அமைப்பு) பெயர்: தமிழீழ விடுதலை இயக்கம்

ஆனால், சொல்வதோ வட-கிழக்கை இந்தியாவோட சேர்க்க வேண்டும் என்று...

அமைப்போடா பெயருமோ கொள்கையுமோ வேறு வேறு! இதிலை இவங்கள் எங்களுக்கு விடுதலை வேண்டிக்குடுக்க வெளிக்கிட்ட ஒரு அமைப்பாம்!

இந்தியாவோடா சேர்வதற்கு சிங்களவனோடையே இருக்கலாம். அது மேலானது.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்தை உருவாக்கிய..தமிழீழத்தை ஆதரித்த... இந்திரா காந்தி அம்மையார் காலத்துக்கு ஈடான கொள்கை வகுப்பாளர்கள் இப்பவும் உருவாகுவார்களாக இருந்தால்.. இவரின் இந்தக் கூற்று வரவேற்கப்பட்டிருக்கும்.

ஆனால்.. தற்போதைய ஹிந்திய கொள்கை வகுப்பாளர்களின் கீழ் ஈழத்தமிழர்கள் ஹிந்தியாவிடம் சரணாகதி அடைவது முள்ளிவாய்க்காலில் சிங்களவனிடம் சரணாகதி அடைந்த நிலையைவிட மோசமான விளைவுகளை உண்டாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தாளோட கட்சி (பழைய அமைப்பு) பெயர்: தமிழீழ விடுதலை இயக்கம்

இப்போது மட்டும் என்ன😀

8 hours ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய விரிவாக்க சம்மேளனம் என்று பெயர் மாற்றுவதே பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளையில் நடக்க  கூடிய சாத்திய கூறு இப்பொது தெரிகிறது.

கிந்தியாவின் முழு ராஜதந்திர மட்டமும் அகண்ட பாரத் என்றதை விரும்புகின்றன.  

அனால், அப்போதைய டெலொ இன் நிலைப்பாடு கிந்தியவுடன் இணைப்பது அல்ல. 

தவிர்க்க முடியாத கிந்தியவை  எவ்வாறு தமிழருக்கு சேதமில்லாமல் தமிழ் ஈழத்தை அடைய பாவிப்பது என்பது தான் TELO இன் கொள்கை.

ஏறத்தாழ, ஜேர் சிங்களப்பக்கம் சிந்தித்ததை, TELO இந்தப்பக்கம் சிந்தித்து.
  
 அரசு கொண்ட  சிங்களமே , (ராஜதந்திரமாக) காலில் விழுந்தது என்று நடித்தே, கிந்தியவை தன பக்கம் திருப்பியது.

அனால், TELO அந்த அளவுக்கு போகவில்லை. 

எவ்வாறாயிணும், புலிகளும் TELO இன் நிலைப்பாடுக்கே வந்து இருந்தனர் அழிவின் பின்னர்.

  • கருத்துக்கள உறவுகள்

 அனால், ஒரு அரசால் ஒடுக்கப்பட்ட இனம் ஒன்று, வேறு அரசின் உதவி / ஆதரவு இன்றி விடுதலை அடைந்ததாக சரித்திரம் .இல்லை.

இதை புலிகள் (மறுத்து, வெளிப்படையாக இல்லை), அவர்களால் முடியும் என்று இயங்கினர் ஒரு கட்டம் வரையிலும் - இதுவும்  சொல்லப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

சட்டியில் இருந்து ......

ஏற்கனவே அடுப்புக்குள் தான் இருக்கின்றோம் 

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்......  இந்தியாவின் எந்தப்பகுதியோடு இணைக்க கோருவதாக திட்டம்? நாமுண்டு நம் பாடுண்டு எங்கள் தோதாவில் இருக்கவே பயப்படும் கிந்தியா, தன்னாட்டுக்குள் இணைத்து குத்துது குடையுது என்று கத்துமோ? அங்குள்ள தமிழனையும் கிளப்பிவிடுவோம் தமது பயம் நிஜமாக அது இன்னும் இலகுவாகிவிடும் எண்டு கனவு காணாதோ? வேண்டுமென்றால் இங்கேயே அடிமைகளாக வைத்திருக்க சீட்டு எழுதும். ஈழத்தமிழனின் நிலை ஒன்று, போராடி தனது அதிகாரத்தை தக்க வைப்பது, இல்லை அடிமையாய் வாழ்வது, அதுவுமில்லையோ செத்து மடிவது. இவர்கள், எங்களது உரிமைகளை தர மறுத்து,  இவ்வளவு பிடிவாதம் பிடிப்பதும், அதற்காக நாங்கள் இழந்தவையும் சாதாரணமானதல்ல. தாங்களாகவே, இவர்களுக்கு  கொடுத்தாலே தப்ப முடியும் என்றொரு நிலை உருவாகும்போது தருவார்கள். எந்த நாட்டையோ, அரசியவாதியையோ, பொது நிறுவனங்களையோ இனி நம்பிப்பயனில்லை. தட்டியும் கேட்டும் களைத்து ஏமாந்து விட்டோம், காலங்கள் கடந்துதான் மிச்சம். இனிமேல், சிங்கள மக்களோடு பேசுவோம், அவர்களுக்கு தெளிவு படுத்துவோம் எங்கள் இழப்புகளையும் வேதனைகளையும். மக்களை வைத்து சூதாடும் அரசியல் வியாதிகளை கலைக்க வேண்டுமென்றால் இதைத்தவிர வேறு வழியில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தாளோட கட்சி (பழைய அமைப்பு) பெயர்: தமிழீழ விடுதலை இயக்கம்

ஆனால், சொல்வதோ வட-கிழக்கை இந்தியாவோட சேர்க்க வேண்டும் என்று...

அமைப்போடா பெயருமோ கொள்கையுமோ வேறு வேறு! இதிலை இவங்கள் எங்களுக்கு விடுதலை வேண்டிக்குடுக்க வெளிக்கிட்ட ஒரு அமைப்பாம்!

இந்தியாவோடா சேர்வதற்கு சிங்களவனோடையே இருக்கலாம். அது மேலானது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி , அதுதான் ஈ பி டீ பி. பெயரில் மட்டும்தான் ஈழம், ஆனால் செய்வதோ இனக்கொலை இராணுவத்துடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிரான கொலைகள். இப்படிப் பலர் இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அதுதான் கருணா குழு. அவர்கள் செய்த விடுதலையெல்லாம் தமிழர்களுக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை கொடுத்ததுதான். 

4 hours ago, satan said:

சிங்கள மக்களோடு பேசுவோம், அவர்களுக்கு தெளிவு படுத்துவோம் எங்கள் இழப்புகளையும் வேதனைகளையும்.

இதுவரை இதைத்தானே செய்துவருகிறோம்? கண்ட பலன்? இனவாதம் இன்றுவரை தன்னை உருவேற்றித்தான் வருகிறது. அன்றிருந்ததைக் காட்டிலும் சிங்கள இனவாத மிருகம் இப்போது இன்னும் போதை தலைக்கேறி ஆடுகிறது. போரில் எம்மைத் தோற்கடித்துவிட்டதால், முடிந்தவரையில், எமது தாயகத்தை சிங்கள பெளத்த மயமாக்குவதே அதன் நோக்கம். அதனுடன் பேசுவதில் பயனில்லை.

தந்தை செல்வாவும், அமிரும் பேசாத பேச்சையா நீங்கள் பேசப்போகிறீர்கள்? அட சும்மா இருங்கள்.

எமது தாயகமும், இருப்பும் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால் நாம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றியும், வெற்றிகரமாக அதனை நடத்துவது எப்படி என்று சிந்திப்பதுமே எமக்கு முன்னால் உள்ள தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, ரஞ்சித் said:

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி , அதுதான் ஈ பி டீ பி. பெயரில் மட்டும்தான் ஈழம், ஆனால் செய்வதோ இனக்கொலை இராணுவத்துடன் சேர்ந்து சொந்த இனத்திற்கெதிரான கொலைகள். இப்படிப் பலர் இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அதுதான் கருணா குழு. அவர்கள் செய்த விடுதலையெல்லாம் தமிழர்களுக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை கொடுத்ததுதான். 

மெய்தான்

//எமது தாயகமும், இருப்பும் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால் நாம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றியும், வெற்றிகரமாக அதனை நடத்துவது எப்படி என்று சிந்திப்பதுமே எமக்கு முன்னால் உள்ள தேவை. //

நான் எதிரப்பா... இனிப் போராடுவதற்கு எம்மிடம் மனிதவலு இல்லை. மற்றது வெளிநாடுகளில் இருப்பவர்கள் (முதல் தலைமுறை மற்றும் பிறந்த பிள்ளைகள்) எல்லாம் இங்கு வந்து போராடப்போவதில்லை. எங்கேனும் வெகு அரிதிலும் அரிதாக கடந்த ஈழப்போர் போன்று வந்து போரிடலாம். மற்றும்படி வெளிநாட்டிலிருந்து யாரும் வரப்போவதில்லை.

உள்நாட்டில் இன்னொரு ஆயுதப் போராட்டதிற்கு பங்களிக்கும் வகையில் மனிதவலு இல்லை. அதைவிட ஆயுதப் போராட்டம் தலையெடுப்பதற்கான ஏலுமான வழிகளோ இல்லை அதைக் கொண்டு செல்வதற்கான வழிகளோ இல்லை; ஏழ்மையாலும் கடந்த காலங்களில் பட்ட வலிகளாலும் (ஆயுதப்போரால் எற்பட்ட இழப்புகள்) அந்தளவிற்கு புல்லுருவித்தனம் புரையோடியுள்ளது.

எனவே ஆயுதப் போராட்டம் இல்லாமல் அறிவை வைத்து ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். இதுவே என்னுடைய நிலைப்பாடு.

சரி, உங்கட பிள்ளைகளை வெளிநாட்டிலை இருந்து கொண்டுவந்து நீங்களே ஒப்படைப்பீங்களோ, ஆயுதப் போராட்டத்திற்கு? இல்லை நீங்களே வீடுவீடாகச் சென்று உங்கள் பிள்ளைகளைப் போராட்டத்திற்கு தாருங்கள் என்று கேட்பீர்களா?
(வாதத்திற்கு ஓமெனப்படாது!)

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 14:08, ஏராளன் said:

சட்டியில் இருந்து ......

சட்டியில் இருந்து ஆடுப்புக்குள் இணையும் தமிழீழ விடுதலை இயக்க தலைவரின் திட்டத்திற்கு வெளிநாட்டில்  உள்ள ஒருவரின் ஆதரவு கிடைத்துவிட்டது.

12 minutes ago, நன்னிச் சோழன் said:

எனவே ஆயுதப் போராட்டம் இல்லாமல் அறிவை வைத்து ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். இதுவே என்னுடைய நிலைப்பாடு.

நடைமுறையாக சிந்தித்துள்ளீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

பலபத்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்களவர்களையும் இலங்கையையும் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற சந்தேகமே சிங்களவர் தமிழர்களிடையேயான மன கசப்பின் ஆரம்பபுள்ளி என்கிறார்கள்.

பல காலமாக இலங்கை தமிழர்களுக்கென்று ஒரு நாடு கிடைத்தால் தமிழகமும் தனிநாடு கேட்டு இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்ற இந்திய மத்திய ஆட்சியாளர்களின் அச்சமே இலங்கையில் தமிழருக்கென்று ஒரு நாடு கிடைக்கவிடாமல் இந்தியா தலது பலத்தை பிரயோகித்து எம் போராட்ட சக்திகளை அடியோடு அழித்தது என்பது வரலாறு.

இப்படி இருநாட்டு அரசுகளும் சந்தேகப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை ஆனால் இந்த சந்தேகங்களினால் சில லட்சம் உயிர்களை நாம்  இழந்ததுதான் மிச்சம். 

இது யாருக்கு தெரியுதோ இல்லையோ செல்வம் போன்ற பல தசாப்தங்களாய் ஆயுத அரசியல் போராட்ட அமைப்பில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும், அப்படியிருந்தும் நடைமுறை சாத்தியமில்லாத உசுப்பேத்தல் கருத்துக்களை கூறுவது, சிங்களவன் இன்னும் எந்தவித தடுப்பாயுதங்களும் இல்லாது வெறும் கைகளுடன் நிற்கும்  எம்மீது கொலைவெறி கொள்ள மட்டுமே வழிவகுக்கும்.

இந்தியாவுடன் இணைக்கவேண்டி கோரிக்கை வைப்போம் என்கிறாரே இந்தியாவுடன் ஒருவேளை வடகிழக்கு இணைந்துவிட்டால்  ஹிந்திய ஆட்சியாளர்கள் எம்மை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குவார்களா?

ஏற்கனவே வடக்கு கிழக்கை சிங்களவன் ஆக்கிரமிப்பதுபோல, இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில் இந்தி திணிப்பு, வங்கி ரயில்வே துறையிலிருந்து கூலி தொழிலாளர்கள்வரை வட இந்தியர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள், போதாகுறைக்கு அங்கிருந்து வந்து கொலை கொள்ளை  என்று தமிழகத்திலேயே பல எதிர்ப்பு குரல்கள் எழுவதை இவர் கவனித்ததே இல்லையா?

தமிழக மீனவர்கள் பலநூறுபேர் இலங்கை கடற்படையால் கொன்று குவிக்கப்பட்டும் இன்றுவரை பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு சிங்களவன் நமக்கு பண்ணுவதுபோல் தமிழகத்தை  மாற்றாந்தாய் மனபான்மையுடன் வைத்து இருப்பதை இவர் கவனித்ததே இல்லையா?  வட இந்தியர்களை இலங்கை கடற்படை கொன்றதுபோல் நூற்றுக்கணக்கில்  யாரும் கொன்றிருந்தால் ஹிந்தி ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா? 

இவர்களுடன் எம் வடக்கு கிழக்கு சேர்ந்தால் சிங்களவனைவிட சுதந்திரம் அதிகம் கிடைக்கும் என்ற சிந்தனையை என்ன சொல்ல?

தற்கால உலகில் தமக்கென அரசியல் எல்லைகளை வரைந்துகொண்டு இயங்கும் நாடுகளில் ஒன்றை பிரித்து இன்னொன்றுடன் சேர கேட்போம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத நகைச்சுவை கருத்துக்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறிய கோட்டுக்கு அருகில் பெரிய கோட்டு தத்துவம் தான். ஆனால் அது யாருக்கு?????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

மிகவும் காத்திரமான கருத்து.

இவரது கட்சி தமிழரசுக்கட்சியை மேவி கூட்ணியின் தலைமைக்கு குறி வைத்து நகர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அப்படியிருந்தும் நடைமுறை சாத்தியமில்லாத உசுப்பேத்தல் கருத்துக்களை கூறுவது

இது முதலில்.

இப்பொது  செ. அ, நாதன்  சொன்னது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகிறது 

இது முதலில்.

இப்பொது  செ. அ, நாதன்  சொன்னது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகிறது 

(அவர் கிந்திய பிராந்திய வேட்கை தெரியாமல் கதைக்கவில்லை என்று தன நினைக்கிறன்)

ஆனால், யஹார்த்தத்தில் என்ன நடைபெறுகிறது, திருமலையில் பெரிய கானித்தொகுதி இக்தியாவுக்கு கொடுக்கப்பட்டு உளது, பாதை போடுவது, என்னை குழாய் போடுவது - இலங்கைத்தீவை , அதன் சுழியையும்  தாண்டி, பெரிய நிலப்பரப்பு இழுப்பது போல அரச, பொருளாதார போன்ற  பிணைப்புகளும இறுக்குகிறது) 

கிந்தியாவின் பொருளாதார பலம் கூட கூட இன்னமும் அதிகரிக்கும், இதை அமெரிக்கா ஆய்வுமையங்கள் 2000 ஆண்டளவில் சொல்லி இருந்தன, ஆனால் இறுக்கமான பிணைப்பு என்று.

அந்த பிராந்தியத்தில், கிந்தியவை தவிர்த்து பொருளாதாரம் நடத்தக்கூடிய நிலையில் எந்த நாடும் இல்லை.

அனால், மிக முக்கிய காரணம், ஹிந்திய அரசிய, ராஜதந்திர, (படைகள் கூட) அகண்ட பாரதத்தை விரும்புவது 

எந்த வடிவத்தில் என்பதே கேள்வி?  (மாலைத்தீவு, பூட்டான்  நேபாளத்துக்கு, இலங்கைக்கு தெரிவு இல்லை புவியியலால்),பங்காதேஷ், பாகிஸ்தானிற்கு இருக்கிறது, அனால் அதன் விலை காலம் போக போக அதிகரிக்கும். 

அனால், சிங்களம் ஏற்கனவே பொருளாதாரத்தை காலியாகி திறப்பித்து விட்டுள்ளது வெளியை 

வெகு வேகமாக வரலாற்றுக் காலச் சக்கரம் சுழல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

எமது தாயகமும், இருப்பும் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால் நாம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றியும், வெற்றிகரமாக அதனை நடத்துவது எப்படி என்று சிந்திப்பதுமே எமக்கு முன்னால் உள்ள தேவை. 

இருந்த எல்லா வளங்களையும் இழந்து விட்டோம், இருப்பது போதையிலும் வாள்வெட்டிலும் மிதக்குது. இப்படி ஒரு சூழ்நிலை எதிர்காலத்தில் எழக்கூடாது என்பதற்கான திட்டங்கள் போர் முடிவடைவதற்கு முன்னே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறன. பொருளாதாரம் பறிக்கப்படுள்ளது. சுற்றிவர வகைதொகையின்றி இராணுவப்படை, நடுவில் சிக்கி நசியும் மக்களால் போராட முடியுமா? பேச்சு வலுவையே நகைச்சுவையாக்கி தமிழர் எதற்கும் லாயக்கற்றவர்களாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. முதுகு வளைந்து இருக்கும் எம்மால், ஆயுதம் தரிக்க முடியுமா? இல்லை பக்கத்து வீட்டு சகுனிதான் சும்மா விட்டுவிடுமா எங்களை? தானே ஆயுதப் பயிற்ச்சி தந்து அனுப்பிவிட்டு, கூடவே வந்து அழித்ததை மறக்க முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2023 at 20:19, நன்னிச் சோழன் said:

இந்தாளோட கட்சி (பழைய அமைப்பு) பெயர்: தமிழீழ விடுதலை இயக்கம்

ஆனால், சொல்வதோ வட-கிழக்கை இந்தியாவோட சேர்க்க வேண்டும் என்று...

அமைப்போடா பெயருமோ கொள்கையுமோ வேறு வேறு! இதிலை இவங்கள் எங்களுக்கு விடுதலை வேண்டிக்குடுக்க வெளிக்கிட்ட ஒரு அமைப்பாம்!

இந்தியாவோடா சேர்வதற்கு சிங்களவனோடையே இருக்கலாம். அது மேலானது.

சரியாக சொன்னீர்கள். இப்படி சொல்லி சொல்லியாவது பிழைத்து போகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இருந்த எல்லா வளங்களையும் இழந்து விட்டோம், இருப்பது போதையிலும் வாள்வெட்டிலும் மிதக்குது. இப்படி ஒரு சூழ்நிலை எதிர்காலத்தில் எழக்கூடாது என்பதற்கான திட்டங்கள் போர் முடிவடைவதற்கு முன்னே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறன. பொருளாதாரம் பறிக்கப்படுள்ளது. சுற்றிவர வகைதொகையின்றி இராணுவப்படை, நடுவில் சிக்கி நசியும் மக்களால் போராட முடியுமா? பேச்சு வலுவையே நகைச்சுவையாக்கி தமிழர் எதற்கும் லாயக்கற்றவர்களாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. முதுகு வளைந்து இருக்கும் எம்மால், ஆயுதம் தரிக்க முடியுமா? இல்லை பக்கத்து வீட்டு சகுனிதான் சும்மா விட்டுவிடுமா எங்களை? தானே ஆயுதப் பயிற்ச்சி தந்து அனுப்பிவிட்டு, கூடவே வந்து அழித்ததை மறக்க முடியுமா? 

நீங்கள் கூறுவது உண்மைதான். மறுக்கவில்லை. தமிழர்கள் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்தை இன்னும் 50 வருடங்களுக்குச் சிந்தித்தே பார்க்கமுடியாதளவிற்கு அவர்கள் மீது அழிவுகளை ஏற்படுத்தினோம் என்று கோத்தாபய ஓரிடத்தில் சொல்லியிருக்கிறான். எம்மீது இழைக்கப்பட்ட அழிவுகள் மட்டுமன்றி இன்றுவரை எம்மை முற்றான இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கும் இதுவே காரணம், அதாவது இன்னொரு ஆயுதப் போராட்டம் எழக்கூடாது என்பதற்காக. 

பக்கத்துச் சகுனி பற்றி நீங்கள் சொல்வது நியாயமான கவலைதான். அது இனியும் எம்மை நசுக்கவே முயலும்.  ஆனால், நீங்கள் கூறிய விடயம் பற்றி எனது கருத்தைச் சொல்கிறேன். இந்தியாவே ஆயுதப் போராட்டத்தை உருவாக்கி வளர்த்துவிட்டது என்று சொல்வது தவறு. தலைவரோ அல்லது அக்காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ இந்தியாவினால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. ஜனநாயக வழியில் போராடி இனிமேல் பயனில்லை என்கிற முடிவிற்கு வந்த பின்னர் தாமாகவே, தன்னிச்சையாக, வெளியாரின் அழுத்தம் இன்றி ஆயுதப் போராட்டம் உருவாக்கப்பட்டது. ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபின்னர் அதனை தனக்குச் சார்பாகப் பாவித்து இந்தியா உள்நுழைந்தது. ஆகவே, எமது விடுதலைப் போராட்டம் இந்தியாவினால் உந்தப்பட்டு, இந்தியாவின் கைப்பாவைகளான போராளி அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூலிப்படைகளின் போராட்டம் என்று நீங்கள் கருத்தெழுதுவதை நிறுத்த வேண்டும். இந்தியா நுழையும் முன்னமே ஆயுதப் போராட்டம் என்பது தன்னிச்சையாக உருப்பெற்று விட்டது. அதுதான் உண்மை. இந்தியா ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து அனுப்பியது என்று எழுதுவதை நிறுத்துங்கள். இதையேதான் சிங்களவர்களும் சொல்கிறார்கள். நாம் இந்தியாவின் ஏஜெண்டுகள் இல்லை. 

இறுதியாக, ஜனநாயக வழிப்போராட்டம் சரிவரப்போவதில்லை. 1948 இலிருந்து இன்றுவரை அதனால் நாம் பெற்ற பயன்கள் எதுவும் இல்லை. இன்றைய அரசியல்வாதிகள் செயல்த்திறன் அற்றவர்கள்.

இலங்கையரசு எமக்கு ஒரு அங்குலத்தைத்தன்னும் தரப்போவதில்லை. யுத்த வெற்றியின் பின்னர் எம்மிடம் இருக்கும் மிகச்சிறிய தாயகமும் அசுர கதியில் அபகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா தானே நின்று செய்த 13 ஆவது சட்டமூலத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. 

சர்வதேசத்திற்கு நாம் இருப்பதே தெரியாது. 

இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு இனமாக, ஒரு தேசமாக எம்மை இனவழிப்புச் செய்த சிங்களவர்களிடம் எமது போராட்டத்தின் நியாயத்தனமையினை புரிய வைத்தல் சாத்தியம் என்று நீங்கள் உண்மையாகவே கருதுகிறீர்களா? இன்றுவரை எமக்கெதிராக தாம் செய்த அக்கிரமங்களை "நடந்தவைதான்" என்று ஏற்றுகொள்ள மறுக்கிற ஒரு சமூகத்திடமிருந்து, தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன எம்பதை ஏற்க மறுக்கிற சமூகத்திடமிருந்து, தமிழர்களுக்கென்று தனியான பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் இருக்கின்றது என்பதை தத்துவார்த்த ரீதியில்த்தன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற சமூகத்திடமிருந்து "பேசிப் புரியவைக்கலாம்" என்று கருதுகிறீர்கள் என்றால், நீங்கள் இலங்கையின் சரித்திரத்தை புரிந்துகொள்ளவில்லை என்கிற முடிவிற்குத்தான் என்னால் வர முடிகிறது. 

எம்மிடம் இருந்தவையெல்லாம் நாம் எமது பலத்தினால் நிலைநாட்டியவை, மீள எடுத்துக்கொண்டவை. எவருமே எமக்கு எதனையும் தரத் தயாராக இல்லாதபோதே தலைவர் ஆயுதப் போராட்டத்தினால் எமக்குரியவற்றை மீட்டெடுக்க முடிவெத்தார், அதனைச் செயலிலும் காட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

எமது தாயகமும், இருப்பும் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால் நாம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றியும், வெற்றிகரமாக அதனை நடத்துவது எப்படி என்று சிந்திப்பதுமே எமக்கு முன்னால் உள்ள தேவை. 

திரும்பவும் முதலில இருந்தா ??

நான் நினைத்து இருந்தன் ரகுநாதன் கொஞ்சம் விபரமானவர் ஈழம் பற்றிய இப்பவரைக்கும் உள்ள தகவல்கள் தெரிந்தவர் என  ஆக நீங்களும் கப்பல் பார்த்த ஆள் தான் போல கிடக்கு 

சரி ஆரம்பிச்ச பிறகு சொல்லுங்க அதுக்குள்ள இங்குள்ள ஒட்டு மொத்த தமிழ் சனமும் வெளில போயிடுமோ என்ற கவலை எனக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.