Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை!

”காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பலஸ்தீனுக்கு ஆதவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” காசா சுடுகாடாக மாறுகிறது! வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது. சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏன் எனில் அதன் வலியும் வேதனையும் எமக்குத் தெரியும். 2009 ஆம் ஆண்டுக்கும் அதற்கு முந்திய காலத்திலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள், மத வழிபாட்டிடங்கள்,  சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முகாம்கள் என குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

ஓர் இனம் அழிவதை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனோ நிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்க மாட்டார்கள். எங்கு அநியாயம் நடக்கின்றதோ அங்கு எமது மக்களின் மற்றும் எனது குரல் ஒலிக்கும். கொல்லப்படுபவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தும் இலங்கை வாழ் மக்கள் எமது நாட்டில் கொல்லப்படவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராட வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1357784

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பலஸ்தீனுக்கு ஆதவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

ஹாமாஸ் ஆதரவான கூட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்க கூடாது 👎

தகுந்த தருணத்தில் தமிழர் சார்பாக வழங்கப்பட்ட சாணக்கியனின் கருத்து சரியானது. இக் கருத்து தமிழர் அழிந்தபோது மகிழ்ச்சி அடைந்த அனைத்துத் தரப்பினரையும் நோக்கியது மட்டுமல்லாது தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் வழியமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஓர் இனம் அழிவதை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனோ நிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்க மாட்டார்கள். எங்கு அநியாயம் நடக்கின்றதோ அங்கு எமது மக்களின் மற்றும் எனது குரல் ஒலிக்கும். கொல்லப்படுபவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தும் இலங்கை வாழ் மக்கள் எமது நாட்டில் கொல்லப்படவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராட வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான இடத்தில் சொல்ல வேண்டிய கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியும், சஜித்தும் காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறதாம்.

அல்ஜசீரா வன்னியிலும் காசா போன்ற இனப்படுகொலை நடைபெற்றதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை!

இது சரியான நிலைப்பாடு.

பலஸ்தீன மக்கள் எம் எதிரிகள் அல்ல.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஹாமாஸ் ஆதரவான கூட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்க கூடாது 👎

இது ஹமாசுக்கு ஆதரவான கூட்டம் என்று எங்கும் சொல்லப்படவில்லையே? பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கூட்டம் என்று தான் நான் உட்பட அனேகமானோர் விளங்கிக் கொண்டுள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

தகுந்த தருணத்தில் தமிழர் சார்பாக வழங்கப்பட்ட சாணக்கியனின் கருத்து சரியானது. இக் கருத்து தமிழர் அழிந்தபோது மகிழ்ச்சி அடைந்த அனைத்துத் தரப்பினரையும் நோக்கியது மட்டுமல்லாது தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் வழியமைக்கும்.

தமிழர் முஸ்லீம்களுடன் ஒற்றுமைக்கு தயாராக இருந்தாலும், முஸ்லீம்கள் ஒருபோதும் தமிழர்களுடன் ஒற்றுமையாகவோ அல்லது தமிழர் தாயகத்துக்கு ஆதரவாகவோ இருப்பார்கள் என்பது இலங்கை வரலாற்றில் ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லாத  ஒன்று.

இலங்கை மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் பிற இனங்களுடன் உள் நோக்கம் எதுவும் இன்றி முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்வதா சரித்திரமேயில்லை.

தாம் பெரும்பான்மையில்லாத இடங்களில் ஒற்றுமைபோல் நடிப்பார்கள், தமது ஆட்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால், தாம் வாழும் ஊரையோ அல்லது தாம் வாழும் நாட்டையோ இஸ்லாமிய மயமாக்க துடிப்பார்கள்.

முஸ்லீம்கள் இலங்கையில் தமிழருடன் நிரந்தரமாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையானால், நம்புவதில் தவறில்லை நம்பிக்கையும் வாழட்டுமே.

உண்மை, மாற்றத்துக்கான அனைத்துக் களங்களையும் திறக்கவேண்டியது அவசியமானது. இதில் காத்திருப்பதைவிடக்  களமிறக்கிச் செயற்பட்டுப் பார்ப்தே நன்று. அதனைப் பொருத்தமாகச் செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

இது ஹமாசுக்கு ஆதரவான கூட்டம் என்று எங்கும் சொல்லப்படவில்லையே? பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கூட்டம் என்று தான் நான் உட்பட அனேகமானோர் விளங்கிக் கொண்டுள்ளோம்.

நீங்கள் எல்லாவற்றையும் தப்பு தப்பா விளங்கி கொளவ்துக்கு நாம் என்ன செய்ய ? 

2 hours ago, valavan said:

தமிழர் முஸ்லீம்களுடன் ஒற்றுமைக்கு தயாராக இருந்தாலும், முஸ்லீம்கள் ஒருபோதும் தமிழர்களுடன் ஒற்றுமையாகவோ அல்லது தமிழர் தாயகத்துக்கு ஆதரவாகவோ இருப்பார்கள் என்பது இலங்கை வரலாற்றில் ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லாத  ஒன்று.

இலங்கை மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் பிற இனங்களுடன் உள் நோக்கம் எதுவும் இன்றி முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்வதா சரித்திரமேயில்லை.

தாம் பெரும்பான்மையில்லாத இடங்களில் ஒற்றுமைபோல் நடிப்பார்கள், தமது ஆட்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால், தாம் வாழும் ஊரையோ அல்லது தாம் வாழும் நாட்டையோ இஸ்லாமிய மயமாக்க துடிப்பார்கள்.

முஸ்லீம்கள் இலங்கையில் தமிழருடன் நிரந்தரமாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையானால், நம்புவதில் தவறில்லை நம்பிக்கையும் வாழட்டுமே.

உண்மை.

ஒரே மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இரு பிரிவினர் எவ்வளவு கலத்துக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பகைத்துக் கொண்டே இருப்பது ? இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பகை நாடுகள் நட்பு நாடுகளாகி வளர்ந்துள்ளன. அணுகுண்டுகள் மூலம் அழிக்கப்பட்ட நாடு அதன் எதிரியுடன் நிரந்தரப் பகைமையைப் பேணவில்லை. 
வேற்றுமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இரு பிரிவினருக்கும் முரண்பாடுகள் தொடர்ந்து இருக்கும். சமயம், கலாச்சாரம் வேறுபட்டது. இந்த வேறுபாடுகளுடன் பொதுவான இணக்கப்பாடுகளை இனம்காண்பதுதான் புத்திசாலித்தனம். இதற்கு ஒரு உதாரணம்தான் மேலுள்ள செய்தி. தமிழர்களிடம் மதம் சார்ந்த ஆதரவு எதிர் நிலைப்பாடுகள் இல்லை என்பதை வலியுறுத்தியது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அல்ஜசீரா வன்னியிலும் காசா போன்ற இனப்படுகொலை நடைபெற்றதாம்.

இது தான் வேண்டும்

இதைத் தான் எம்மவர் வெளியில் கொண்டு செல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, nunavilan said:

அல்ஜசீரா வன்னியிலும் காசா போன்ற இனப்படுகொலை நடைபெற்றதாம்.

ஐயனே மூலத்தை வழங்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

உண்மை, மாற்றத்துக்கான அனைத்துக் களங்களையும் திறக்கவேண்டியது அவசியமானது. இதில் காத்திருப்பதைவிடக்  களமிறக்கிச் செயற்பட்டுப் பார்ப்தே நன்று. அதனைப் பொருத்தமாகச் செய்துள்ளார்.

சாத்தான் வேதமோதுகிறது, முள்ளிவாய்க்காலில் கொலைக்களமாடி ராஜபக்ஸ்சேக்கள் இரத்தம் தோய்த கைகளுடன் நிற்கும்போது அவர்களுக்கு கைலாகு கொடுத்து கும்மாளமடித்தவர் இப்போது என்ன சொல்லுறார் பாருங்கோ. 

இதே பாலஸ்தீனர்கள் இர்ண்டாயிரத்துஒ ஒஅதினாறில் மகிந்தவுக்கு "பாலஸ்தீன நட்சத்திரம்" என்னும் உயரிய விருது கொடுத்து பாலஸ்தீனப்பகுதியில் உள்ள தெருவுக்கு மகிந்தவின் பெயர் வைத்ததை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

அரபுலகம் உடுக்கும் உள்ளங்கிகள் தொடக்கம் அடிக்கும் வாசத்தண்ணி வரைக்கும் எதோ ஒரு வகையில் இஸ்ரேலியர்களது தொடர்பு இல்லாமலில்லை.

டுபாய் சவூதி கட்டார் ஆகிய அரபு நாடுகள் தங்கள் முதலீடுகளில் அடிவிழும் என்பதால் கள்ள மெளனம் காட்டுகிறார்கள்.

யசீர் அரபாத் இலங்கை வந்தபோது தமிழர் நெருக்குவாரத்துக்குள் இருந்தார்கள் மிகப்பெரிய பொருளாதாரத் தடையைத் தமிழர் பகுதி எதிர்கொண்டதனால் பட்டினிசாவை எதிர்கொண்டார்கள் ஆனால் மனிசன் வாயே திறக்கவில்லை. 

தமிழன் இழிச்ச வாயன் அவனுக்கு எல்லோரையும் பார்த்து அனுதாபப்படும் பழக்கம், அப்படி இல்லாதுவிடில் தூய தமிழினவாதம் பேசுகிறார்கள் பாசிசத்தின் எச்சங்கள் என யாராவது பத்தி எழுதுவார்கள்.

புலிகளும் அவர்களது தடையங்களும் அழிந்து இதோடு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

எழுபத்து நாஙின் ஆயுதமேந்திய போராட்டம் ஆரம்பித்தது எனக் கொள்வோமாகவிருந்தால் புலிகளது எழுர்ச்சி என்பது எண்பத்து ஆறில் தான் தொடங்கியது மெல்ல மெல்ல வளந்து அவர்களது பேரெழுர்ச்சி என்பது தொன்னூறுகளின் ஆரம்பத்துக்குச் சற்றிப் பிந்தியகாலம். தமிழனம் கண்ட முப்பது வருட ஆயுதமேந்திய போராட்ட வரலாற்றில் புலிகளது அனைத்து பலம் மிக்க காலம் என்பது இரண்டாயிரத்துக்கு பின்னதான கருணாவின் உடைவுக்கு முன்னதான காலமாகும் 

ஆகபுலிகளது பேரெழுர்ச்சிக்காலம் என்பது பத்திலிருந்து பதினைந்து வருடங்களாகும் புலிகள் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டது 

இந்தப்போலி ஜனநாயகவாதிகள் அல்லது தூய ஜனநாயகவாதிகள் இதுவரை சாதித்ததென்ன? இவ்வளவு காலம் கடந்தும் புலிகள் பாசிஸ்டுகள் எனக்கூறிக்கொள்வதைத் தவிர எதைப்பெற்றுக்கொண்டார்கள்.

நீதியாளர் இளஞ்செழியன் யாழ் குடாநாட்டிலிருந்து மாற்றலாகிச் செல்லுபோது நான் நீதித்துறையில் எந்த இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் என விரும்பினேணோ குடாநாட்டில் அதை நிறைவேற்றிவிட்டேன் எனக்கூறியிருந்தார்.

அவர் கூறியது வேறு எதுவுமில்லை போதைவஸ்துக் கடத்தி விற்பவன் கஞ்சா கடத்துபவன் கசிப்புக் காச்சுபவன் இளவாலையில் காலைக்கடன் கழிக்க வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து நீதவான் ஏன் அப்படிச்செய்தாய் எனக்கேட்டபோது போதையில் இருந்தேன் பெண்ணைப்பார்த்ததுன் என வெறி ஏறிவிட்டுது எனக்கூறியவனை இப்படியான உதவாக்கரைகளை பிணையில் எடுக்கலாம் எனும் விடையத்தை அறிமுகப்படுத்தினதே தமிழர் பகுதியில் மீண்டும் கொண்டுவந்த நீதி நடைமுறை ஆகும் .

இவர்கள் மீண்டும் வெளியில்வந்து தூய வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் தூய ஜனநாயகம். 

தமிழர் பிரதிநிதிகள் என நாடாளுமன்றம் அனுப்பிய எம்மவர்கள் ஒன்றுசேர்ந்து தமிழர் பகுதியில் நடக்கும் வன்முறை மற்றும் போதைக்கலாச்சாரம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவா என நாடாளுமன்றில் கூக்குரலிட வக்கில்லை  இதற்குள் பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களாம் தூ.......

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

தாம் பெரும்பான்மையில்லாத இடங்களில் ஒற்றுமைபோல் நடிப்பார்கள்,

உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு.  இணக்கமாக வாழ ஐனநாயக உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும் என்பார்கள்.

8 hours ago, valavan said:

தமது ஆட்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால், தாம் வாழும் ஊரையோ அல்லது தாம் வாழும் நாட்டையோ இஸ்லாமிய மயமாக்க துடிப்பார்கள்.

மதத்தின் ஷாரியா சட்டம் தான் கண்டிப்பாக உங்களுக்கும் என்பார்கள்.

5 hours ago, இணையவன் said:

இதற்கு ஒரு உதாரணம்தான் மேலுள்ள செய்தி. தமிழர்களிடம் மதம் சார்ந்த ஆதரவு எதிர் நிலைப்பாடுகள் இல்லை என்பதை வலியுறுத்தியது. 

இது முற்காலத்தில் இருந்தே தமிழர்களால் வலியுறுத்தபட்டுள்ளது தானே. முஸ்லிம் மத சட்டம் ஷாரியா தான் உண்மையானது உலகில் உள்ள அனைத்து மக்களும் பின்பற்ற பட வேண்டியது என்று தவறான நம்பிக்கையை பெரும்பாலன முஸ்லிம்கள் நிராகரித்து நவீனமாக சிந்திக்காத வரை...

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நாம் கதைத்தாலும் ...இலங்கை இசுலாமியன் திருந்தமாட்டான்...உலகமே அழிந்தாலும் ..இந்த இசுலாமியன் ..புலி தம்மை இனச்சுத்திகரிப்புச் செய்தது என்பதைக் கைவிடான்...ஏனெனில் அவர்களின் அரசியல் இருப்பூகு புலிப் .புராணம் தேவை.. இனப்பரம்பல் செய்தபின் இடம் பிடிக்க வும் இது தேவை...நாம அநியாயமாகநேரத்தைச் செல்வழித்து ...கத்திக் குலைப்பதுதான் மிச்சம்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

சாத்தான் வேதமோதுகிறது, முள்ளிவாய்க்காலில் கொலைக்களமாடி ராஜபக்ஸ்சேக்கள் இரத்தம் தோய்த கைகளுடன் நிற்கும்போது அவர்களுக்கு கைலாகு கொடுத்து கும்மாளமடித்தவர் இப்போது என்ன சொல்லுறார் பாருங்கோ. 

இதே பாலஸ்தீனர்கள் இர்ண்டாயிரத்துஒ ஒஅதினாறில் மகிந்தவுக்கு "பாலஸ்தீன நட்சத்திரம்" என்னும் உயரிய விருது கொடுத்து பாலஸ்தீனப்பகுதியில் உள்ள தெருவுக்கு மகிந்தவின் பெயர் வைத்ததை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

அரபுலகம் உடுக்கும் உள்ளங்கிகள் தொடக்கம் அடிக்கும் வாசத்தண்ணி வரைக்கும் எதோ ஒரு வகையில் இஸ்ரேலியர்களது தொடர்பு இல்லாமலில்லை.

டுபாய் சவூதி கட்டார் ஆகிய அரபு நாடுகள் தங்கள் முதலீடுகளில் அடிவிழும் என்பதால் கள்ள மெளனம் காட்டுகிறார்கள்.

யசீர் அரபாத் இலங்கை வந்தபோது தமிழர் நெருக்குவாரத்துக்குள் இருந்தார்கள் மிகப்பெரிய பொருளாதாரத் தடையைத் தமிழர் பகுதி எதிர்கொண்டதனால் பட்டினிசாவை எதிர்கொண்டார்கள் ஆனால் மனிசன் வாயே திறக்கவில்லை. 

தமிழன் இழிச்ச வாயன் அவனுக்கு எல்லோரையும் பார்த்து அனுதாபப்படும் பழக்கம், அப்படி இல்லாதுவிடில் தூய தமிழினவாதம் பேசுகிறார்கள் பாசிசத்தின் எச்சங்கள் என யாராவது பத்தி எழுதுவார்கள்.

புலிகளும் அவர்களது தடையங்களும் அழிந்து இதோடு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

எழுபத்து நாஙின் ஆயுதமேந்திய போராட்டம் ஆரம்பித்தது எனக் கொள்வோமாகவிருந்தால் புலிகளது எழுர்ச்சி என்பது எண்பத்து ஆறில் தான் தொடங்கியது மெல்ல மெல்ல வளந்து அவர்களது பேரெழுர்ச்சி என்பது தொன்னூறுகளின் ஆரம்பத்துக்குச் சற்றிப் பிந்தியகாலம். தமிழனம் கண்ட முப்பது வருட ஆயுதமேந்திய போராட்ட வரலாற்றில் புலிகளது அனைத்து பலம் மிக்க காலம் என்பது இரண்டாயிரத்துக்கு பின்னதான கருணாவின் உடைவுக்கு முன்னதான காலமாகும் 

ஆகபுலிகளது பேரெழுர்ச்சிக்காலம் என்பது பத்திலிருந்து பதினைந்து வருடங்களாகும் புலிகள் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டது 

இந்தப்போலி ஜனநாயகவாதிகள் அல்லது தூய ஜனநாயகவாதிகள் இதுவரை சாதித்ததென்ன? இவ்வளவு காலம் கடந்தும் புலிகள் பாசிஸ்டுகள் எனக்கூறிக்கொள்வதைத் தவிர எதைப்பெற்றுக்கொண்டார்கள்.

நீதியாளர் இளஞ்செழியன் யாழ் குடாநாட்டிலிருந்து மாற்றலாகிச் செல்லுபோது நான் நீதித்துறையில் எந்த இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் என விரும்பினேணோ குடாநாட்டில் அதை நிறைவேற்றிவிட்டேன் எனக்கூறியிருந்தார்.

அவர் கூறியது வேறு எதுவுமில்லை போதைவஸ்துக் கடத்தி விற்பவன் கஞ்சா கடத்துபவன் கசிப்புக் காச்சுபவன் இளவாலையில் காலைக்கடன் கழிக்க வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து நீதவான் ஏன் அப்படிச்செய்தாய் எனக்கேட்டபோது போதையில் இருந்தேன் பெண்ணைப்பார்த்ததுன் என வெறி ஏறிவிட்டுது எனக்கூறியவனை இப்படியான உதவாக்கரைகளை பிணையில் எடுக்கலாம் எனும் விடையத்தை அறிமுகப்படுத்தினதே தமிழர் பகுதியில் மீண்டும் கொண்டுவந்த நீதி நடைமுறை ஆகும் .

இவர்கள் மீண்டும் வெளியில்வந்து தூய வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் தூய ஜனநாயகம். 

தமிழர் பிரதிநிதிகள் என நாடாளுமன்றம் அனுப்பிய எம்மவர்கள் ஒன்றுசேர்ந்து தமிழர் பகுதியில் நடக்கும் வன்முறை மற்றும் போதைக்கலாச்சாரம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவா என நாடாளுமன்றில் கூக்குரலிட வக்கில்லை  இதற்குள் பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களாம் தூ.......

நீங்கள் சொல்வது உண்மை சரியானதாகும்  இந்த இரண்டு பகுதியினரும். இலங்கை தமிழரைப் பொறுந்தளவில் ஒன்று தான்  இவர்கள் இலங்கையின் நண்பர்கள்  மேலும் சிறுவர்கள் பெரியவர்கள் யார் இறந்தாலும்  கொல்லப்பட்டாலும். கவலையளிக்கிறது  ஆனால்  பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது நிறுத்திவிட்டால்   இஸ்ரேலியர்கள் கொல்லபடுவார்கள்   

இந்த பிரச்சனையை இலங்கை தமிழர்கள் பிரச்சினையுடன் ஒப்பிடுவது  சுத்த மோசம்  ஏனென்றால்  எங்களுக்கு காசா   மேற்குகரை   எதுவுமில்லை பாலஸ்தீனருக்கு உண்டு     இன்று நடக்கும் போர்  இஸ்ரேலிருந்து  இஸ்ரேலியரை  அடித்து துரத்துவதற்க்காகவே  மாறாக  பாலஸ்தீனரின். உரிமைக்காக இல்லை  ஹமாஸ் இஸ்ரேலினை ஏற்றுக்கொள்ளவில்லை  ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும்  சிறிலாங்காவை  ஏற்றுகொண்டுள்ளன.  அதேசமயம். இலங்கை தமிழ் ஈழத்தை ஏற்றிக்கொள்ளவில்லை    ஏற்றுக்கொண்டார்கள் என்றால் தமிழர்கள் பிரச்சனை தீரும்  புலிகள் இலங்கை சிங்களவர்களை  அடித்து துரத்த போராடவில்லை அதாவது இலங்கையை விட்டு  இலங்கை தீவில் நீங்களும் இருங்கள்’ நாங்களும் இருப்போம்  என்று தான் சொன்னார்கள்  ஹமாஸ்  என்ன செய்கிறது  ?????????? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சிறுவர்கள் பெரியவர்கள் யார் இறந்தாலும்  கொல்லப்பட்டாலும். கவலையளிக்கிறது  ஆனால்  பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது நிறுத்திவிட்டால்   இஸ்ரேலியர்கள் கொல்லபடுவார்கள்   

இந்த பிரச்சனையை இலங்கை தமிழர்கள் பிரச்சினையுடன் ஒப்பிடுவது  சுத்த மோசம்  ஏனென்றால்  எங்களுக்கு காசா   மேற்குகரை   எதுவுமில்லை பாலஸ்தீனருக்கு உண்டு     இன்று நடக்கும் போர்  இஸ்ரேலிருந்து  இஸ்ரேலியரை  அடித்து துரத்துவதற்க்காகவே  மாறாக  பாலஸ்தீனரின். உரிமைக்காக இல்லை  ஹமாஸ் இஸ்ரேலினை ஏற்றுக்கொள்ளவில்லை  ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும்  சிறிலாங்காவை  ஏற்றுகொண்டுள்ளன.  அதேசமயம். இலங்கை தமிழ் ஈழத்தை ஏற்றிக்கொள்ளவில்லை    ஏற்றுக்கொண்டார்கள் என்றால் தமிழர்கள் பிரச்சனை தீரும்  புலிகள் இலங்கை சிங்களவர்களை  அடித்து துரத்த போராடவில்லை அதாவது இலங்கையை விட்டு  இலங்கை தீவில் நீங்களும் இருங்கள்’ நாங்களும் இருப்போம்  என்று தான் சொன்னார்கள்  ஹமாஸ்  என்ன செய்கிறது  ?????????? 

இஸ்ரேலிய 1400 க்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகள் முதியவர்களையும் கொன்று 240 பேரை கடத்தியும்  யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததே  ஹமாஸ் தானே. அப்போது அதன் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

தமிழர் முஸ்லீம்களுடன் ஒற்றுமைக்கு தயாராக இருந்தாலும், முஸ்லீம்கள் ஒருபோதும் தமிழர்களுடன் ஒற்றுமையாகவோ அல்லது தமிழர் தாயகத்துக்கு ஆதரவாகவோ இருப்பார்கள் என்பது இலங்கை வரலாற்றில் ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லாத  ஒன்று.

இலங்கை மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் பிற இனங்களுடன் உள் நோக்கம் எதுவும் இன்றி முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்வதா சரித்திரமேயில்லை.

தாம் பெரும்பான்மையில்லாத இடங்களில் ஒற்றுமைபோல் நடிப்பார்கள், தமது ஆட்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால், தாம் வாழும் ஊரையோ அல்லது தாம் வாழும் நாட்டையோ இஸ்லாமிய மயமாக்க துடிப்பார்கள்.

முஸ்லீம்கள் இலங்கையில் தமிழருடன் நிரந்தரமாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையானால், நம்புவதில் தவறில்லை நம்பிக்கையும் வாழட்டுமே.

நன்றாக கூறினீர்கள். பாடசாலையாக இருக்கலாம், உயர் கல்வி கூடங்களாக இருக்கலாம் இவர்கள் தங்கள் இனத்துடன்தான் சேர்ந்திருப்பார்கள். தமிழன் அழிந்தால் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. தமிழன் அழிக்கப்பட்ட்டபோது பாற்சோறு கொடுத்து கொண்டாடிய கூடடம்தான் இவர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளும் முஸ்லிம்களும் அழியக்கூடாது என்பதுதான் இவர்கள் கொள்கை. 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இஸ்ரேலிய 1400 க்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகள் முதியவர்களையும் கொன்று 240 பேரை கடத்தியும்  யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததே  ஹமாஸ் தானே. அப்போது அதன் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

இஸ்ரேல் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கொன்ற, கைது செய்து சிறையில் வைக்கப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

இது ஹமாசுக்கு ஆதரவான கூட்டம் என்று எங்கும் சொல்லப்படவில்லையே? பாலஸ்தீனத்துக்கு ஆதரவான கூட்டம் என்று தான் நான் உட்பட அனேகமானோர் விளங்கிக் கொண்டுள்ளோம்.

இந்த கூட்டம் நடக்கும்போது நான் யூனியன் பிளேஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். கடும் மழை, மின்னல் காற்று வீசியது. கையில் குடையுடன் சிறிது நேரம் நின்று பார்த்தேன். 
பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

இந்த கூட்டம் நடக்கும்போது நான் யூனியன் பிளேஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். கடும் மழை, மின்னல் காற்று வீசியது. கையில் குடையுடன் சிறிது நேரம் நின்று பார்த்தேன். 
பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்.  

ஏன் அவர்கள் அப்படி பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இன்று காசாவில் இருக்கும் மக்கள் 20 30 வருடங்கள் முன்பு இன்றைய இஸ்திரேலிய பிரதேசங்களில் 
இருந்து வீடு வாசல் சொந்த ஊர் அனைத்தில் இருந்தும் கொலை வெறியுடன் சியோனிஸ்ட் அரக்கர்களால் கொலைசெய்யபடும்போது தப்பி அகதிகளாக ஓடி மிஞ்சியர்வர்கள் ஆகும் 
இன்று மூன்றாவது தலைமுறை சுற்றி சுவர் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்ட திறந்த வெளி சிறைச்சாலைக்குள் பிறந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது 

சியோனிஸ்ட் அரக்கர்களால் திடடமிட்டு கட்டப்படிருக்கும் இந்த சிறைச்சாலைக்குள் இருந்து 
ஒரு பாலஸ்தீனன் சுந்தந்திர உலகிற்கு வருவதற்கு 
என்ன வழிமுறையை இத்தனை 50 வருடங்களில் ஐ நா மற்றும் சர்வதேசம் என்று சொலுவோர்கள் செய்திருக்கிறார்கள்? 

"பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்." 

40 minutes ago, colomban said:

இந்த கூட்டம் நடக்கும்போது நான் யூனியன் பிளேஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். கடும் மழை, மின்னல் காற்று வீசியது. கையில் குடையுடன் சிறிது நேரம் நின்று பார்த்தேன். 
பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்.  

ஹமாஸ் ஆறாத புண்ணின் வலி,

இஸ்ரேல், அப் புண்ணின் தோற்றுவாய் மட்டுமல்ல, அது குணமாக விடாமல் விஷமாக்கும் காரணி.

காரணியை கட்டுப்படுத்தாமல், வெறுமனே வலியை அழித்தால், அது நிரந்தர தீர்வாகாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

இஸ்ரேல் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக கொன்ற, கைது செய்து சிறையில் வைக்கப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை எவ்வளவு??

இப்படியெல்லாம் கேட்கப்படாது! அந்தளவுக்கெல்லாம் விளக்கமில்லை எங்களுக்கு!!😜

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இந்த கூட்டம் நடக்கும்போது நான் யூனியன் பிளேஸ் ரோட்டில் நடந்து கொண்டிருந்தேன். கடும் மழை, மின்னல் காற்று வீசியது. கையில் குடையுடன் சிறிது நேரம் நின்று பார்த்தேன். 
பெரும்பாலன இலங்கை முஸ்லீம்கள் ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்ப்பாக பார்க்க மாட்டார்கள். ஹமாசின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள்.  

அவர்களை முஸ்லிம்கள். என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள்   முஸ்லிம்கள் என்னவும் செய்யலாம் ஒரே இரவில் 1200  இஸ்ரேலியரை ..இஸ்ரேல்    உள்ளே புகுந்து  அவர்களின் வீடுகளில் வைத்து கொல்லப்படுவது பயங்கரவாதமில்லை   அது விடுதலை போர்     

1,.500 கிலோமீட்டர்  துரத்துக்கு நிலத்தின் கீழே சுரங்க மாளிகை. அமைத்துள்ளார்கள்    ஆனாலும் சுதந்திரமில்லை    நம்ப முடிகிறதா??? 

2,. 1960. ஆம் ஆண்டில்  இருந்த மக்கள் தொகையை விட  இன்று மூன்று மடங்குகள் அதிகம் மக்கள் தொகை உண்டு  எப்படி சுதந்திரம் இல்லாமல் இவ்வாறு பெரும் தொகையில் பிள்ளைகள் பெற முடிகிறது??? 

3,.ஹமாஸ் போருக்கான தயாராகிய பின்னர் தான்  தாக்குதல்களை ஆரம்பித்தது  ..இஸ்ரேல் போரை நிறுத்தினாலும்  ஹமாஸ் தொடரும்  நிறுத்தப்போவதில்லை  அதாவது  இஸ்ரேலியர்கள் பெருமளவில் கொலை செய்ய ஹமாஸ் ஏற்கனவே தயாராகி உள்ளது  

4 ...இன்றைய சூழ்நிலையில்  பாலஸ்தீனர்களை  கொல்லப்படுவதை நிறுத்து என்று கூறுவது  இஸ்ரேலியர்களை கொல்லு. என்பது ஆகும்.  காரணம்  ஹமாஸ்  இஸ்ரேலியரை கொல்லமாட்டோம். என்று எந்தவித உத்தரவாதத்தைம் வழங்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.