Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

http://www.samakalam.com/அமெரிக்கா-நோக்கி-பறந்தார/
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த ஜனாதிபதி அநுர தான் எண்டு தெரிஞ்சிட்டுது போல கிடக்கு...சஜித் இல்லாட்டி ரணில் வந்தால் திரும்பி வருவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

அடுத்த ஜனாதிபதி அநுர தான் எண்டு தெரிஞ்சிட்டுது போல கிடக்கு...சஜித் இல்லாட்டி ரணில் வந்தால் திரும்பி வருவார். 😂

பசிலுக்கும் ஒருக்காலாவது பிரதமரா வர்வேணும் என்று ஆசை அதுநடக்காது போலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, குமாரசாமி said:

அடுத்த ஜனாதிபதி அநுர தான் எண்டு தெரிஞ்சிட்டுது போல கிடக்கு...சஜித் இல்லாட்டி ரணில் வந்தால் திரும்பி வருவார். 😂

36 minutes ago, வாதவூரான் said:

பசிலுக்கும் ஒருக்காலாவது பிரதமரா வர்வேணும் என்று ஆசை அதுநடக்காது போலை

நாமல் சொல்வதுபோல் நேர்மையோடு, ஊழல் செய்யாத அரசியல் செய்திருந்தால் ஏன் ஓடவேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யக் கட்டாயம் பதவி தேவையா? பதவியில்லாது பொறுப்போடு மக்களுக்குத் தொண்டு செய்பவனே ''தொண்டன்''. இவர்கள் தண்டலுக்கல்லவா பதவியைத் தேடுவோர். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைய தகவலின்படி கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமலின் இருகுழந்தைகள் அவருடைய மாமியாருடன் நாடடைவிட்டு வெளியேறியதாக அறியமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப... இவ்வளவு காலமும் ரணில் இவர்களை பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

அனுர வந்தவுடந் கடுமையானண்டனையுடன், கொள்ளையடித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டி வரும் என்ற பயத்தில்டுகின்றார்கள்.

அமெரிக்காவில் உள்ள இந்திய சாத்திரி ஒருவர், மகர ராசியை சேர்ந்த அனுர வருவார் எனணித்துள்ளார். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப... இவ்வளவு காலமும் ரணில் இவர்களை பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

அதிலென்ன  சந்தேகம்? நல்லாட்சி அமைந்தபோது ஒளிந்திருந்த மஹிந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியது ரணில், தன்னுடைய பதவிக்காலத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்காது பாதுகாத்தது ரணில், அநுர வந்தால்; ரணிலுக்கும் ஆப்பு இருக்கு. இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். யார் வந்தாலும் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டும் உண்மை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 தெருவில் யாராவது  குனிந்தால் கல்லெறிய போகிறார்கள் என்ற பயத்தில் பழக்க தோசத்தில் தெரு நாய்கள் ஓடும். பின்னர் சற்று நேரத்தில் பயம் தெளிந்து  திரும்பி வரும். அதை போல தான்  இவர்களும்.  ஒவ்வொரு முறையும் நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்றால் ஓடுவார்கள். பின்னர், பயம் தெளிய  இவர்களும் திரும்பி  வருவார்கள். அது இவர்கள் வாடிக்கை. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம்

20 Sep, 2024 | 01:34 PM
image
NSC-_976x90_.gif

( விமான நிலைய செய்தியாளர் )

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் அறுவரும் இன்று (20) காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-651 விமானத்தின் ஊடாக துபாய்க்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள  Silk Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்ட இவர்கள் இந்த விமான சேவைக்காக ஒருவருக்கு தலா 52 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அறுவரும் துபாய்க்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரணிலின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.சஜித்தின் வெற்றியும் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதால் பலர் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.

Posted
39 minutes ago, புலவர் said:

ரணிலின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.சஜித்தின் வெற்றியும் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதால் பலர் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.

சஜித் வெல்ல வாய்ப்பே இல்லை.

போட்டி ரணிலுக்கும், அனுரவுக்கும் தான்.  

முதல் சுற்றில் ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை வரின், அனுர வெல்வார். இரண்டாம் விருப்பு வாக்கையும் சேர்க்க வேண்டி வரின், ரணில் வெல்லக் கூடிய சாத்தியம் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

ரணிலின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.சஜித்தின் வெற்றியும் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதால் பலர் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.

23 minutes ago, நிழலி said:

சஜித் வெல்ல வாய்ப்பே இல்லை.

போட்டி ரணிலுக்கும், அனுரவுக்கும் தான்.  

முதல் சுற்றில் ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை வரின், அனுர வெல்வார். இரண்டாம் விருப்பு வாக்கையும் சேர்க்க வேண்டி வரின், ரணில் வெல்லக் கூடிய சாத்தியம் அதிகம்.

தமிழரசு கட்சி…. யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ… அவர் தோற்பதுதான் வரலாறு என்று மாகாணசபை அவைத் தலைவரும் சஜித் பிரேமதாசவுக்காக சுமந்திரனுடன் பிரச்சாரம் செய்தவருமான சிவஞானம் சொல்லியுள்ளார். 

வரும் 22’ம் திகதி சஜித்துக்கு என்ன நடக்கிறது என  பார்ப்போம்.

தமிழக தேர்தல்களில் கடைசியாக நடந்த தேர்தலைத் தவிர மற்றைய தேர்தல்களில் எல்லாம், வைகோ… யாருக்கு ஆதரவு கொடுக்கின்றாரோ அந்தக் கட்சி தோற்றதுதான் வரலாறு. அதனால்… வைகோவை ராசி இல்லாத தலைவர் என்றும் சொன்னார்கள்.
அந்த ராசி… தமிழரசுக் கட்சிக்கும் உள்ளதா என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது கணிப்பின்படி அநுர முதற்சுற்றிலே அமோக வெற்றி பெறுவார், சஜித் இரண்டாவதாகவும், ரணில் மூன்றாவதாகவும் தான் வருவார்.

ரணிலுக்கு கிராம புறங்களிலும், அடிமட்மக்களிடமும் ஆதரவு அறவே இல்லைநகர்ப்புற மத்திய தர மக்களும், கணிசமான அளவு சிறுபான்மை மக்களுமே ரணிலுக்கு வாக்கு அளிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பசில் ராஜபக்ச திடீரென வெளிநாடு பறந்தது ஏன்..! வெளியானது காரணம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச(basil rajapaksa) மருத்துவ நோக்கங்களுக்காக டுபாய் சென்றுள்ளார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sagara kariyawasam) உறுதிப்படுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்லவிருந்ததாகவும், ஆனால் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (namal rajapaksa)தேர்தல் நடவடிக்கைகளுக்காக கடைசி நேரம் வரை இரவு பகலாக உழைத்ததாகவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

கட்சிக்கு அறிவித்த பசில்

பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதாக கட்சிக்கு தெரிவித்திருந்தார். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர் விரைவில் நாடு திரும்புவார்.

பசில் ராஜபக்ச திடீரென வெளிநாடு பறந்தது ஏன்..! வெளியானது காரணம் | Basil Left Country For Medical Purposes

விரைவில் நாடு திரும்புவார்

மேலும், வெளிநாடு சென்றுள்ள பசில் ராஜபக்ச விரைவில் திரும்பி வந்து கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச திடீரென வெளிநாடு பறந்தது ஏன்..! வெளியானது காரணம் | Basil Left Country For Medical Purposes

https://ibctamil.com/article/basil-left-country-for-medical-purposes-1726847488

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

சஜித் வெல்ல வாய்ப்பே இல்லை.

போட்டி ரணிலுக்கும், அனுரவுக்கும் தான்.  

முதல் சுற்றில் ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை வரின், அனுர வெல்வார். இரண்டாம் விருப்பு வாக்கையும் சேர்க்க வேண்டி வரின், ரணில் வெல்லக் கூடிய சாத்தியம் அதிகம்.

முதல் சுற்றில 1வது வாக்கை சஜித்துக்குப்  போட்டவர்கள் 2வது வாக்கை ரணிலுக்குப் போட வாய்ப்பில்லை. மேலும் 2வது 3வது வாக்குப் போடுவதில் மக்களுக்குத தெளிவின்மை இருக்கிறது. பெருமபாலானவர்கள் புள்ளடி  போட்டே பழகியவர்கள்.2வது சுற்று எண்ணும் நிலை வந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் எடுக்கும்.பெரும் குழப்பங்களும் உருவாகும். எனக்கு குள்ளநரி ரணில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரடங்குட்டம் போடும் அதிகாரம் ரணிலிடம் உள்ளதாக அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பின் பின்னால்... ரணில் தோற்கும் நிலை ஏற்பட்டால்... எதுகும் செய்ய தயாராக இருக்கின்றார்கள் போலுள்ளது.

அப்படி நடந்தால்.... ஜே.வி.பி. சும்மா இருக்காது. ஒரு கலவரம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

460647009_3772768903053603_4814167787617

நாங்கள்மெரிக்கா போறோம். டாடா.... bye bye ஸ்ரீலங்கா.  😂  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போற போக்கை பார்த்தால் சுணாமியோ சூறாவளியோ வரத்தான் போகிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 அமெரிக்க நோக்கிப் பறந்தார்  பஸ்ஸில் .............என்று வாசிச்சுபோடாதேங்கோ .... 😄😆😄

  • Haha 1
Posted
47 minutes ago, புலவர் said:

முதல் சுற்றில 1வது வாக்கை சஜித்துக்குப்  போட்டவர்கள் 2வது வாக்கை ரணிலுக்குப் போட வாய்ப்பில்லை. மேலும் 2வது 3வது வாக்குப் போடுவதில் மக்களுக்குத தெளிவின்மை இருக்கிறது. பெருமபாலானவர்கள் புள்ளடி  போட்டே பழகியவர்கள்.2வது சுற்று எண்ணும் நிலை வந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் எடுக்கும்.பெரும் குழப்பங்களும் உருவாகும். எனக்கு குள்ளநரி ரணில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேற வேண்டும்.

என் சிங்கள நண்பர் சிலர் நீங்கள் சொன்ன மாதிரித் தான் சொல்கின்றனர். அனுரவுக்கு முதல் விருப்பை போடுகின்றவர்களின் இரண்டாம் விருப்பாக சஜித் தான் உள்ளார் என.  அதே நேரம் சஜித்தை முதலாவதாக தெரிவு செய்கின்றவர்கள், அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய தயங்குவர் என்று.

படித்த, மேட்டுக் குடி சிங்களவர்கள் அதிகம் வாழும் கண்டி மாவட்டத்தில் ஜேவிபி இற்கு கடும் எதிர்ப்பும் உள்ளது. 

பார்ப்பம், நாளைக்கு இன்னேரம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளாவது வெளியாகத் தொடங்கியிருக்கும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, நிழலி said:

என் சிங்கள நண்பர் சிலர் நீங்கள் சொன்ன மாதிரித் தான் சொல்கின்றனர். அனுரவுக்கு முதல் விருப்பை போடுகின்றவர்களின் இரண்டாம் விருப்பாக சஜித் தான் உள்ளார் என.  அதே நேரம் சஜித்தை முதலாவதாக தெரிவு செய்கின்றவர்கள், அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய தயங்குவர் என்று.

படித்த, மேட்டுக் குடி சிங்களவர்கள் அதிகம் வாழும் கண்டி மாவட்டத்தில் ஜேவிபி இற்கு கடும் எதிர்ப்பும் உள்ளது. 

பார்ப்பம், நாளைக்கு இன்னேரம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளாவது வெளியாகத் தொடங்கியிருக்கும். 

நான் யாழ்ப்பாணத்தில் சிலருடன் கதைத்த போது...

யார் வென்றாலும் ரணில் கதிரையை விட்டு அசையமாட்டார் என்றார்கள். தெற்கில் குழப்பங்களும் அவசரகால நிலைமையும் ஏற்படும் என்கின்றனர். பார்க்கலாம். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

460647009_3772768903053603_4814167787617

நாங்கள்மெரிக்கா போறோம். டாடா.... bye bye ஸ்ரீலங்கா.  😂  🤣

என்ன சமந்தற்ற ஆவியும் போகுது...?

  • Haha 1
Posted
39 minutes ago, விசுகு said:

நான் யாழ்ப்பாணத்தில் சிலருடன் கதைத்த போது...

யார் வென்றாலும் ரணில் கதிரையை விட்டு அசையமாட்டார் என்றார்கள். தெற்கில் குழப்பங்களும் அவசரகால நிலைமையும் ஏற்படும் என்கின்றனர். பார்க்கலாம். 

நான் அப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.

ரணில் இப்படி மோட்டுத்தனமாக செய்யும் ஆள் இல்லை. உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கும் கொக்கு அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, விசுகு said:

நான் யாழ்ப்பாணத்தில் சிலருடன் கதைத்த போது...

யார் வென்றாலும் ரணில் கதிரையை விட்டு அசையமாட்டார் என்றார்கள். தெற்கில் குழப்பங்களும் அவசரகால நிலைமையும் ஏற்படும் என்கின்றனர். பார்க்கலாம். 

இதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே அச்சமுள்ளது. றம் செய்யலாமென்றால் ஏன் ரணில், ரணிலுக்குச் சார்பான அரசுகள் மற்றும் படைகள் செய்ய முடியாதா? யே.ஆர் ஆட்சியில் நடாத்திமுடிக்கப்பட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலையிருந்து பார்த்து வளர்ந்துள்ள ரணிலின் சுயமுகம் இந்தத் தேர்தற் தோல்வியோடு பிரதிபலிக்குமாயின் நன்மையே.தன்னை ஒரு தாளாவாதியாகக் காட்டியவாறு பொளத்த சிங்கள மேலாதிக்கத்தை பேணிவரும் இரண்டு ஆண்டு ஆட்சியில்  சிங்களவரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையோ, வழிபாட்டிடங்களையோ விடுவிக்கமுடியாத சர்வ அதிகாரங்களும் கொண்ட அரசுத்தலைவர் ரணில். பொறுத்திருந்து பார்ப்போம்!

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.