Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, ரஞ்சித் said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது.

இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும்,  தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில்  ஒன்றுசேர்ந்து நிற்பதுதான்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது  தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்?

இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. 

தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா?

இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா?

சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?

பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான்.

இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை?

இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை.

உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று  நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..

நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும்.

நன்றி.

"ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது.

ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை!

எனவே, ஒற்றுமை என்பதன் முதல் படி "என்னோடு ஒத்துப் போகாதவன் எல்லாம் எதிரி!" என்ற கட்டுப் பெட்டித் தனத்தைக் கைவிடுவது தான். பொது வேட்பாளர் தமிழ் பகுதிகளில் கூட மூன்றில் இரண்டு வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்ட பின்னும் உங்களுக்கு இது உறைக்கவில்லையானால், எதுவுமே உங்களுக்கு உறைக்காது! 

Edited by Justin
எண்ணிக்கைப் பிழை திருத்தம்
  • Like 2
  • Replies 109
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெ

ஈழப்பிரியன்

தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை க

பாலபத்ர ஓணாண்டி

அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை..  இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரஞ்சித் said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது.

இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும்,  தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில்  ஒன்றுசேர்ந்து நிற்பதுதான்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது  தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்?

இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. 

தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா?

இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா?

சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?

பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான்.

இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை?

இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை.

உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று  நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..

நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும்.

நன்றி.

சும்மா லூசுத்தனாமா பந்தி பந்தியா அதே பழைய புழிச்சல் கதையை எழுதாதீர்கள் ரஞ்சித்.. 

ஜனாதிபதித்தேர்தலுக்கும் பாராளுமன்று தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத பொதுவேட்பாளர் பைத்தியங்கள் என்றால் நீங்களும் அப்படியே இருக்கிறீர்கள்..

இவ்வளவு அதிகாரங்கள் பொலிஸ் நீதி மற்றும் 50வீதம் சுயாட்சி அளவுக்கு அதிகாரம் உள்ள இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இப்படி லூசுத்தனமான மத்திய பிரதமருக்கு நிக்கிறன் எண்டு எடுபாட்டு வேலை பார்ப்பது அரிது..யதார்த்தம் புரியாத விசுக்கோத்துக்கள் அல்ல.. ஆனால் நம் நாட்டில் இது எம் சந்ததி தொடரவேண்டிய வாழ்வா சாவா நிலைமை..

நீங்கள் இந்த ரைட் அப்பை எதிர்வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு எழுதவேண்டியது.. இடம்மாறி இங்க எழுதி இருக்கிறீர்கள்..

நீங்கள் அவுஸ்த்திரேலியாவில் இருந்து கொண்டு கனவு கானலாம் ஆனால் ஊரில் இருந்து கொண்டு கனவு காணமுடியாது.. விடிஞ்சா சூரியவெளிச்சத்தோட யதார்த்தமும் வந்து மூஞ்சைல அடிக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, ரஞ்சித் said:

உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று  நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..

இதுக்கு ஏன் தலைவரையும் போராட்டத்தையும் இழுக்கிறீர்கள்.. நாலு பைத்தியங்கள் செய்வதுக்கும் தலைவரும் போராட்டமும்தான்.. தடக்கி விழுந்தாலும் தலைவரும் போராட்டமும்தான்.. தயவு செய்து அவர்களை நிம்மதியாவிட்டிட்டு அரியம் அண்ட் கோ உங்களுக்கு புடிச்சா அதை எழுதுங்கோ.. 

நீங்கள் நாலுபேர் காவடி எடுப்பீர்கள்.. பிறகு அது பிழைச்சா தலைவரையும் போராட்டத்தையும் இழுப்பீர்கள்.. இவங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக தமிழர்கள் தங்கள் கவட்டையை வேகவைக்கோணும்.. அப்பிடி செய்யாட்டி தலைவரையும் போராளிகளையும் இழுத்து வண்டை வண்டையா சாபம் விடுவீர்கள்..

நல்ல வேடிக்கையா இருக்கு.. உங்களுக்கு சாபம் விட தோன்றினா ஊரில வெட்டியா கோயில் குளத்தில இருக்கிற ஏதும் சாமியை இழுத்து சாபம் விடுங்கோ.. தலைவரும் போராளிகளும் இந்த பார் பேமிற் காரங்களின்ர கேவலங்களுக்க இழுபடவேண்டாமே..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பார் பேமிற் ஒனருங்களா அண்ணா..? எப்போ கடைய திறப்பீங்கள்..?

large.IMG_0093.jpeg.bbab74b7c1ad57b2f284ef447ca1e6bb.jpeg

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nochchi said:

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறும், கூவும், கீறும் இவர்கள் சிறிலங்காவுக்குப் போய் மக்களாதரவைத் திரட்டித் தலைமையேற்று சிறிலங்காவிலிருந்து தமிழருக்கு சகவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாமே. இதிலென்ன வேடிக்கையென்றால் புலிகள் உயிர்போடிருந்த காலத்தில் முன்னணியிலே நின்று செயற்பட்டவர்களது நளினங்களைப் பார்க்கிறபோது புலிகள் வீழ்த்தப்பட்டது தனியே எதிரிகாளாலும், துரோகிளாலும் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறதோ அந்த வட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது

நொச்சி, நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கோ, தேவையில்லாத வாதங்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு பின்னால் என்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட நேரமில்லாமல் அல்லல் படுவதற்கோ நான் இப்பொழுது தயாராக இல்லை. ஆனாலும் நீங்கள் தொடுத்த அம்பு ஒன்று என்னருகில் வீழ்ந்து இருக்கிறது.’கீறும்என்ற அம்பு அது.

இன்று ஆயுதப் போராட்டமும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஏன் விடுதலைப் புலிகள் என்று கூட எவரும் இல்லை.அந்த அமைப்பில் இருந்தவர்கள் அதுவும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அது எதுவானாலும் நான் அதற்குள் போய் கிளறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை.

தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால்  நீண்ட பயணத்திலும் சரியான  பாதை தெரியாமல் பரிதவிக்கும் நிலையிலேயேதான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். இதற்குள் அவரவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தேவைக்காகவும் போராட்டத்தையும் தியாகங்களையும் பயன் படுத்துவதால் ஒரு பலனும் தமிழர்களுக்கு வந்து விடாது என்ற நிலையில்தான் எதிர்க்கிறேன்.

இவ்வாறான எனது எதிர்ப்பு இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. நான் கீறும் படங்களை யேர்மனியில் புலிகள் என்று சொல்பவர்கள் பாவிப்பதில்லை. இது விடுதலைப் புலிகள் போராடும் காலத்தில் இருந்தே இருக்கிறது. காரணம்ஏன்?’ என்ற கேள்வி எப்பொழுதும் என்னிடத்தில் இருப்பதால். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பொங்கு தமிழில் நான் எழுதிய பத்தி ஒன்றை கிருபன் முன்னர் பதிந்திருந்தார்.

https://alpha.yarl.com/forums/topic/152431-தூசு-தட்டியே-காசு-பிழைத்தவர்-மூனா/

நேரமின்மையால் அப்பொழுது அதில் எழுந்த கேள்விகளுக்கு நான் பதில் எழுதவில்லை.

பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது  விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது.

உங்களுக்கு இருக்கும்தமிழர்களுக்கான தீர்வு வேண்டும்என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான உங்கள் பாதை வேறு என் பாதை வேறு.

  • Like 4
Posted
40 minutes ago, Justin said:

"ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது.

ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை!

எந்த முட்டாள் தனமான முயற்சிகளுக்கும் தமிழ் தேசிய முலாமை பூசி விட்டால் அதை ஆதரிக்க என ஒரு கூட்டம் உள்ளது என்பதை அந்த முட்டாள்தனமான முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தம் இருப்பை பேண முயலும் கூட்டத்துக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள் இப்படியானவற்றை தொடர்ந்து முன்னெடுப்பர்.

ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் தமக்கு எது தேவையென புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றனர் என்பதை இம்முறையும் நிரூபித்து உள்ளனர்.

  • Like 2
Posted

இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். 

மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம்.

இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும்  ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.
 
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, நிழலி said:

மூச்சு விடக்கூட பயத்தில முழுசிக்கொண்டு இருந்தனாங்கள்.. கார்த்திகை விளக்கீட்டுக்கு கூட விளக்கு கொழுத்தேல்ல மாறி மாவீரர் விளக்கெண்டு சுட்டுப்போடுவாங்கள் எண்டு..

மைத்திரி வந்தபோது இருந்த அந்த உயிர்ப்பயம் போன சுதத்ந்திர உணர்வை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.. அதை அனுபவித்தனுக்குத்தான் தெரியும்.. அண்டைக்குத்தான் முதன் முதல் பொடியளா இரவு பத்துமணிவரையும் வாசிகசாலையில் இருந்து கதைச்சிட்டு சாப்பாட்டுக்கடையில போய் கடை பூட்டுற நேரம் கொக்காவும் கொத்தும் சாப்பிட்டனாங்கள்.. இல்லாட்டி ஆறேழு மணிக்கு பிறகு தெரு எப்பிடி இருக்கும் எண்டு தெரியாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவேட்பாளர் தேவையற்ற ஆணி என்ற எவராவது எங்கே அந்த ஆணியைக்குத்துவது என்று கூறினார்களா?அல்லது புலம்பெயர்ஸ்ஸைக் கைகாட்டும் யாராவது போட்டியிட்ட சிங்கள முன்னணித் தலைகளோடு ஏதாவது ஒப்பந்தகள் செய்திருப்பின் அதை வெளிப்படுத்தி இன்னாரை ஆதரியுங்கள் என்று ஏன் கூறவில்லை. தமிரசுக்கட்சி அணிபிரிந்து நின்று கூவியதை இங்கு கவனத்திலெடுக்க வேண்டிய தேவையில்லை.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Kavi arunasalam said:

பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது  விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது.

தங்களுக்கு நன்றி,
ஒருகுழுமத்தின் தமிழ்தேசியத்துக்கான முயற்சி உங்களுக்குச் செத்தவீடாகத் தெரிகிறது. ஆனால் வேறு சிலருக்கு விவாதிக்கவும், ஆராயவும் வேண்டியதாக இருக்கிறது.அது அவரரவர் நோக்குநிலை சார்ந்தது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது.

இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும்,  தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில்  ஒன்றுசேர்ந்து நிற்பதுதான்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது  தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்?

இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. 

தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா?

இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா?

சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?

பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான்.

இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை?

இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை.

உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று  நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..

நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும்.

நன்றி.

இதைவிட தெளிவாக எழுத முடியாது.

உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியதற்கு நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kapithan said:

தேசியம் என்பது உணர்வு சார்ந்தது. சரியான தலைமை வெளிப்படும்போது மக்கள் அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள். 

வடக்கு கிழக்கிலும் அதுதான் நிலைமை. 

புலம்பெயர் ஸ் சொல்லுகிறார்கள, TNA சொல்லுகிறது  என்பதற்காகவெல்லாம் தேசிய உணர்வை வெளிக்காட்ட முடியாது. 

அங்கேயுள்ள மக்களை முட்டாள்களாக எண்ணுவதையும்  புலம்பெயர்ஸ் எல்லோரும் புத்திசாலிகள் என்று எண்ணுவதையும்  முதலில் நிறுத்துங்கள். 

தமிழ் தேசியம் தோல்வி  என வாக்கு எண்ணிக்கையை வைத்து தானே இன்று கருத்து சொல்லுகின்றனர்..
புலம் பெயர்ஸ் எல்லாம் புத்திசாலிகள் என நான் எங்கும் கூறவில்லை...ஆனால் இந்த குற்றசாட்டு அன்று (ஆயுத போராட்டம் முதல்)தொடக்கம் இன்று வரை வைக்க ப்படும் ஒர் குற்றசாட்டு ...தமிழ் தேசியத்திற்கு எதிர் தரப்பால் வைக்கப்படும் பொது குற்றசாட்டு ...அது அவர்கள் கருத்து ....
இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்க எவ்வளவோ குத்திமுறிகின்றான்ர்..ஏன் நாங்கள் தமிழ் தேசியத்தை பாதுகாக்க கருத்து சொல்ல முடியாது...
மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதில் மாற்று கருத்து இல்லை ...
தாயகத்தில் 40 வருடங்களுக்கு மேலாக இணக்க அரசியல் செய்யும் டக்கிளஸினால் கூட தமிழ் மக்களை சிறிலங்கா தேசியத்தினுள் இழுத்து செல்ல முடியவில்லை ..
.

புலம்பெயர்ஸ் இருக்கும் நாடுகளில் அந்தந்த நாடுகள் தங்கள் நலன் கருதி  சில அழுதங்களை சிறிலங்கா தேசியத்திற்கு  கொடுக்கின்றது ...இதை தடுக்க சில புலம்பெயர்ஸ் மீது சிறிலங்கா தேசியம் குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து கொண்டேஇருக்கின்றது ...தொடர்ந்து வைக்கும்....

அஜித் டோவாலை(இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரை) அமெரிக்கா நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது ....ஒர் காளிஸ்தான் போராளியினை கொலை செய்ய  முயற்சித்தமைக்காக....

அதாவது இந்தியாவிக்கே சிம்ம சொப்பனமாக தேசிய இனங்களின் பிரச்சனை இந்திய‌புலம்பெயர்ஸ்சினால் கொடுக்கப்படுகின்றது...அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில்  இடுபடுகின்றனர் ...
தேசிய இனங்களின் தேசிய உணர்வை குழப்ப பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்டதேசிய‌வாதிகள் கடும் முயற்சி செய்கின்றனர்...பிரித்தானியாவினால் அழிக்கப்பட்ட தேசிய இனங்கள் இனறும் புலம் பெயர்ந்து அதேநாட்டிலிருந்து குரல் கொடுப்பது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

நன்றி சகோ

உங்களைப் போன்றவர்கள் இன்று உலகமெல்லாம் பரவிக்கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும்  இணைக்கும் புள்ளி ஒன்றே ஒன்று தான் அது தமிழ்த்தேசியம். 

இதற்குள் புகுந்து தாயகம் புலம்பெயர் தேசம் என பிரிவினைகளை பிரித்தாளும் தந்திரங்களை தொடர்ந்து எழுதுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்  தமிழ்த்தேசியத்தை உணராதவர்கள் 

தமிழ் தேசியம் சில நாடுகளுக்கு பிடிக்காது பிடிக்க போவதுமில்லை அதற்காக தமிழ்தேசியவாதிகள் சும்மாவா இருக்க முடியும்...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரஞ்சித் said:

சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?

பழைய சிவப்பு கோவணம் பறக்கப்போகின்றது🤣 ...சிறிமாவின் காலத்து கோவணமா? கோத்தா காலத்து கோவணமா பறக்கப்போகின்றது ...பார்ப்போம் ...வரலாறு தானே வழிகாட்டி.....🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவ்வளவு அதிகாரங்கள் பொலிஸ் நீதி மற்றும் 50வீதம் சுயாட்சி அளவுக்கு அதிகாரம் உள்ள இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இப்படி லூசுத்தனமான மத்திய பிரதமருக்கு நிக்கிறன் எண்டு எடுபாட்டு வேலை பார்ப்பது அரிது..யதார்த்தம் புரியாத விசுக்கோத்துக்கள் அல்ல..

உண்மை .நாங்கள் லூசுகள் சினிமா பைத்தியங்கள் என்று கேலி செய்கின்ற அவர்கள் கூட இந்திய மத்திய பிரதமருக்கான  தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். இங்கே லுசுதனம் செய்ய ஜனாதிபதி வேட்பாளர் ஏழு கட்சிகள் எண்பத்து மூன்று அமைப்புக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் படுதோல்வியடைந்த தமிழர் தரப்பு ராஜதந்திரமும்

 கருத்துக் கணிப்புகளை மேற்கோள்  காட்டி நான் எதிர்வு கூறியது போலவே ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அநுரவின் வெற்றியை உறுதி செய்ததுடன் எதிர்பார்க்கப்பட்ட படி இரண்டாம் நிலையில் சஜித் மற்றும் மூன்றாம் நிலையில் ரணில் ஆகியோரையும் உறுதி செய்தது. இதன் பின்னணியில் 'தமிழர் வாக்குகளுக்கு என்ன நடந்தது?' மற்றும் 'விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் தமது இருப்பைத் தக்கவைக்க எவ்வாறான வியூகத்தை வகுக்க வேண்டும்?' என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். 

தேர்தல் வெற்றிக்கு எழுபதுக்கு எழுபது போதும்.

இலங்கையின் குடித்தொகையில் 70% க்கும் அதிகமாகச் சிங்களவர் காணப்படும் நிலையில், அவர்களில் 70% ஆனவர்கள் ஒன்று பட்டு வாக்களித்தாலே 50%க்கும் அதிகமான(74.9% X 70%)  வாக்குகளைப் பெற்றுச் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றி பெற முடியும். 2019 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட்டு சஜித்துக்கு வாக்களித்து இருந்தும் சிங்களவரில் 70% ஆனோர் கோட்டாபயவுக்கு வாக்களித்ததால் கோத்தபாயவினால் 50% க்குஅதிகமாக வாக்குகளை பெற்று வெற்றி பெற முடிந்தது. ஆனால் வாக்குகள் மூன்றாக அல்லது நான்காகப் பிரியும் போது 60% ஆன சிங்களவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தலே வெற்றி பெற முடியும். அதுவே இம்முறை இடம் பெற்றுள்ளது. அதாவது சிங்களவரின் 60% வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 42% (60%X 70%) பெற்றுள்ள அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

சிதறடிக்கப்பட்ட தமிழர் வாக்குகள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் அரியநேந்திரன் வெற்றி பெற்ற அதேவேளை  வடக்கு கிழக்கில் அனைத்து  மாவட்டங்களிலும்  சஜித் அதிகமான வாக்குகளை பெற்று இருப்பதும், ரணிலும் இரண்டாம் நிலையில் கணிசமான வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்று இருப்பதும் ஏற்கனவே நான் எதிர்வு கூறியபடி ஈழத் தமிழர்கள் ஒரு குழப்ப நிலையில் பல கூறுகளாகப் பிரிவடைந்து வாக்களித்து இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் மலையகத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் இஸ்லாமியத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் சஜித் வெற்றி பெற்று இருந்தாலும்   இதே குழப்பநிலை இருப்பதை இம்முறை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன. அரசியலில் பழுத்த அனுபவமும் புத்திசாலித்தனமும்  மிகுந்த ரவூப் ஹக்கீம்  மற்றும்  சுமந்திரன் ஆகியோர் தோல்வியடைந்துள்ள சஜித்தை ஆதரிக்க எடுத்த முடிவு சாணக்கியமானதா என்பதை எதிர்காலம் தான் உணர்த்த வேண்டும். 

பொருத்தமற்ற தமிழ் பொது வேட்பாளராக பலிக்கடா அரியநேந்திரன் 

தமிழ் பொது வேட்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திப் போட்டியிட்ட அரியநேந்திரன் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்று இருந்த போதிலும் கிழக்கில் மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் அவருடைய சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் அண்டைய மாவட்டங்களான  திருகோணமலையிலும் அம்பாறையிலும் தோல்வி அடைந்துள்ளார். கிழக்கில் புலிகளது தளபதியாக இருந்த கருணா அம்மானின் நம்பிக்கைக்குரிய அரியம் என்ற அரியநேந்திரன், 2004 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் கருணா தரப்பின் ஊடாகக் கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டினைப்  பெற்றுப் போட்டியிட்டிருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தவர்  என்பதும் பின்னர் கிங்ஸ்லி ராசநாயகம் "இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு" அவர் தமது பாராளுமன்ற ஆசனத்தைத் தாமாகத் துறப்பதாக அறிவித்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தெரிவு செய்யப்பட்டுப் பாராளுமன்றம் சென்றார் என்பதும் வரலாறு.  2010 இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அப்போதிருந்த அனுதாப அலையால் 16,504 வாக்குகளைப் பெற்று அரியம் மயிரிழையில் வெற்றி பெற்றிருந்தாலும் பின்னர் வந்த எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை.  தற்போதைய பெறுபேறுகளும் மக்கள் ஆதரவை ஒருபோதும் பெற்று இராத அரியநேந்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டது தவறு என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் "சர்வதேசத்துக்குத் தமிழ்மக்களின் ஒற்றுமையையும் எதிர்பார்ப்புகளையும் வெளிக்காட்டக் கூடிய வேட்பாளர்" என்று அடையாளப்படுத்தப்பட்டவர் ஆங்கிலத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவராகவும் பேச்சாற்றல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது உள்ளூரில் நடைபெற்ற விவாத மேடையில் தமிழ் மொழியில் தமது தரப்பு நியாயங்களை நாட்டுக்குத் தெரிவிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாத இவர்,  'ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்றால் வெட்டுவோம் விழுத்துவோம்' என்று கூவித்  திரிந்த இந்தியக் கைக்கூலிகளும், பொதுவேட்பாளர் என்ற மாயமானைப் பலப்படுத்தப் பல இலட்சங்களை அனுப்பிய புலம்பெயர் தமிழர்களும் இரண்டு இலட்சம் வாக்குகளை மட்டுமே அரியநேந்திரன் பெற்ற நிலையில் மௌனமாக இருக்கிறார்கள். இவர்களுடைய "தமிழர்களின் ஒற்றுமை" என்ற போலிச் சாயம் விரைவில் வர இருக்கும்  பாராளுமன்ற தேர்தலில் வெளுக்கும். அரியநேந்திரனுக்கு ஆதரவளித்த சித்தார்த்தன் தோல்வியை நேர்மையாக ஏற்றுக் கொள்ளாமல் கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பேட்டி ஒன்றில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.    

தோல்வியடைந்த இந்திய சூழ்ச்சிகள் 

பல முனைகளிலும் தனது வேட்பாளர்களான ரணில் அல்லது சஜித்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்தியா பல்வேறு  சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தது. குறிப்பாகத் தனது முகவர்கள் மூலமாகத் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களம் இறக்கி அரச எதிர்ப்பு வாக்குகளை அனுரவுக்குச் செல்லவிடாமல் அரியநேந்திரனுக்குத் திசை திருப்பியது, புள்ளடி இடுவதைத் தடுத்து விருப்பு வாக்களிக்குமாறு கோரியது, 'இலங்கைத் தேர்தல் சட்டங்கள் தேர்தலுக்கு 48 மணிநேரம் முதல் அனைத்து பரப்புரைகளும் நிறுத்தப்படவேண்டும்' என்று கோரிய நிலையில் இலங்கை ஊடகங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நேர்மையற்ற முறையில் இந்திய ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மூலமாக இறுதிவரை தான் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தூண்டியது, யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அனாமதேய ஊடக அறிக்கைகளை வெளியிட்டது உட்படப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். தனது முதல் திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்டுப்பாட்டில் உள்ள வேட்பாளர்கள் மூலம்  பெரும்பான்மைப் பலத்தை பெறத் தொடர்ந்து இந்தியாவினால்  பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும். 

குழம்பிய குட்டையில் வரும் பாராளுமன்ற தேர்தல் 

பொது வேட்பாளரை ஆதரித்த சித்தார்த்தன் "பாராளுமன்ற தேர்தலைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வதற்கு இதுவரை திட்டம் எதுவும் இல்லை" என்று தெரிவித்து இருப்பது தமிழர்களின் ஒற்றுமைக்காகத் தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவித்து இருந்ததை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் சிங்கள தேசம் நான்காகப் பிரிந்துள்ள நிலையில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் தேசம் ஒற்றுமையாக 20 ஆசனங்களை ஆவது  பாராளுமன்றில் பெற்றுக்கொண்டால் பேரம் பேசுவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவு நன்மைகளைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் துண்டு துண்டாக உடைந்து  கிடக்கும் தமிழரசுக் கட்சி, இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஏனைய பல தமிழ் கட்சிகள், மற்றைய கட்சிகளுடன் இணைய மறுக்கும் தமிழ் காங்கிரஸ் ஆகியவை "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும்  தமிழரின் எதிர்கால நம்பிக்கையை சிதைத்துள்ளன. 

ஒட்டுண்ணிக் குழுக்களின் இறுதிக் கட்டம்

 "குற்றச்செயல்களில் ஈடுபட்ட (பட்டுவரும்) ஒட்டுக் குழுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை" என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்து இருப்பது வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். இந்தக் ஒட்டுக் குழுக்கள் தமது கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளை நிறுத்தி உண்மையான ஜனநாயக செயல்பாடுகளை முன்னெடுப்பார்களா என்பது விரைவில் தெரியவரும். எப்படியாயினும் ஒட்டுக் குழுக்கள் அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை மீட்கக்கூடியதாக இருந்தால், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி மூலமாகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் இன்னொரு நன்மையாக இதை கருதலாம். 

தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பாரிய  சவால்கள் 

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டாலும் அந்த வெற்றியானது குடித்தொகை அடர்த்தி கொண்ட சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அடையப்பட்டதனால் இலங்கை வரைபடத்தில் பாரிய நிலப்பரப்பு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத இடங்களாக இருக்கிறது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பலவீனத்தையும் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக 'சிங்களவர் அல்லாத மக்களின் நம்பிக்கையை பெற தவறினால் தேசிய சக்தியாக மாற முடியாது' என்ற உண்மையை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரங்களில் உறுதியளித்த அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதாயின் அதற்குப் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை அல்லது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேரின் ஆதரவு தேவை. இரு மாதங்களில் வர இருக்கும் தேர்தலுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதில்  தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதைவிடத் தேர்தல் அண்மித்ததும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளக்கூடிய ரணிலின் அறிவிப்புகளை மக்களின் எதிர்ப்பின்றி நீக்க வேண்டிய சவாலை அனுர எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக 2025 க்கு அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புப் போன்றவை மக்களின் உணர்வை தூண்டக் கூடியவை. அதை விட அடுத்த வருடத்துக்கான புதிய பாதீட்டை இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படுவதன்  முன்னர் நிறைவேற்றுவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்குக் கடன் வழங்குவோரைத் திருப்திப்படுத்தி இலங்கை நாணயத்தைச் சரியவிடாது ரணிலினதும் அவரது எசமானர்களினதும் சூழ்ச்சிக்குள் அகப்படாது செயல்படுவது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவாக ஏற்படாவிட்டால் மக்களுக்குத்  தேசிய மக்கள் சக்தி மீதும் சலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

முடிவாக, தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ள போதிலும் தமிழரின் ஒற்றுமையின்மை மிகப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது. இதேவேளை தனக்கு மண்டியிடாத இலங்கைத் தலைமைகளை நீக்கித் தனது சுரண்டல்களைத் தொடர்வதற்கு இந்திய வல்லரசும் அதன் கைக்கூலிகளும்  பாராளுமன்ற தேர்தலையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும்  பயன்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து நாம் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும்  செயல்பட வேண்டும் 

நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 
23.9.2024
 
https://www.facebook.com/share/p/uKoHuwG6mbatKcdC/?mibextid=WC7FNe

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

தமிழ் தேசியம் சில நாடுகளுக்கு பிடிக்காது பிடிக்க போவதுமில்லை அதற்காக தமிழ்தேசியவாதிகள் சும்மாவா இருக்க முடியும்...

பொறுத்திருங்கள், அனுரா யாரை அரவணைக்கிறார்என்பதே கேள்வி. நாடு இக்கட்டில் இருக்கும்போது பதவியை ஏற்கச்சொல்லி அழைப்பு முதலில் சஜித்துக்கே விடுக்கப்பட்டது, அவரோ தயங்கி விட்டார். அதைவிட வடிவேலு நகைச்சுவை வசனத்தில், பகிரங்கமாக, கட்சியின் முடிவுப்பிரகாரம் சஜித்துக்கும், அரியத்துக்கும்,ரணிலுக்கும் குத்தினேன் என்று  கூறினார். அதற்கு சிரிக்கலாம் அதேநேரம் சிந்திக்க கூடியது. இவ்வாறு கூறிவிட்டு எந்த மூஞ்சியோடு அனுராவோடு பேச முடியும்? எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக வாக்குகளை அளித்து என்ன நன்மை பெற்றோம்?  ஏமாற்றப்பட்டதே வரலாறு. ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே கருத்தப்பட்டோம். நம்பிக்கையின்   அடிப்படையில் வாக்களிக்கிறோமாம். எந்த நம்பிக்கையில்? காலம் முழுவதும் ஏமாற்றப்பட்ட வரலாறு இருக்கும்போது நம்பிக்கை எங்கிருந்து? யாரிடமிருந்து வந்தது? தலைவர்கள் நம்பிக்கையற்றவர்கள், ஒரு கொள்கை இல்லாதவர்கள், ஒரு தலைவன் இல்லை, கட்சி பிரிந்திருக்கிறது, எல்லோரையும் அணைத்துப்போகதெரியவில்லை, விரட்டுவது, வெருட்டுவது, சவால் விடுவது, கட்சி மக்களுக்காகவா, மக்கள் கட்சிக்காகவா? போன வருடம் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்தவர்கள் பங்காளிக்கட்சிகளுக்கு அந்த முடிவை தெரிவித்தனரா? விளக்கமளித்தனரா? பத்திரிகை வாயிலாக அறிந்த அவர்கள் விளக்கம் கேட்டபோது, ஏதோ சொல்கிறார்கள். ஏன் அதை நேரடியாக சொல்லியிருக்கலாமே? தமிழரசுக்கட்சியின் பெயரை பாவிக்கக்கூடாது என கட்டளையிடுகிறார். அப்போ, அதன் உண்மை நோக்கமென்ன? மாவையர் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார், தலைமைத்துவ பண்பு இருக்கிறதா அவருக்கு? அனிஞாயத்தை தட்டிகேட்கும் தைரியம் இருக்கிறதா அவருக்கு? இவர்களை நம்பி மக்கள் இனியும் இவர்களை தொடரலாமா? எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு ஏமாந்தே, மக்கள் இந்த முடிவுக்கு வந்தனர். அதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு. அப்போ, மக்களுக்கு எவ்வளவு வெறுப்பிருக்கும். அதிலும் அவர்கள் தெரிந்த வேட்ப்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். அவர் வென்றிருந்தாலும் கூட எதுவும் நடவாது. பழைய குருடி கதவைதிறவடி கதைதான். அரியம் முழு நம்பிக்கையுடன், மக்களுக்கு நேர்மையாக நடக்கும் பட்ஷத்தில் நம்மால் சாதிக்க முடியும்.  ஆனால் இவர்கள் தனி வழியில் செல்வதே தமிழருக்கு செய்யும் உதவி. சிலந்தியும் ஏழு முறை விழுந்து எழுந்துதான் தன் அழகான கூட்டை கட்டுகிறது. யாரும் எடுத்தவுடன் வெற்றி பெறுவதில்லை. தொடர விடாமல் தடுப்பார்கள். நீந்த நினைக்கிறவன் நீரில் இறங்கவேண்டும், மூச்சு பிடித்து தொடரவேண்டும். தாண்டு விடுவேன் என அஞ்சுகிறவன் அடுத்தவர் கதையை கேட்பவன் நீரிலே இறங்கக்கூடாது. கரையிலே நின்று தண்ணீர் ஆழம் அதனால்  இறங்கமாட்டேன் என்று முதுகு காட்டி ஓடி விடவேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

அதற்கு சிரிக்கலாம் அதேநேரம் சிந்திக்க கூடியது. இவ்வாறு கூறிவிட்டு எந்த மூஞ்சியோடு அனுராவோடு பேச முடியும்? எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒட்டு மொத்தமாக வாக்குகளை அளித்து என்ன நன்மை பெற்றோம்?  ஏமாற்றப்பட்டதே வரலாறு. ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து ஒன்றுக்கும் உதவாதவர்களாகவே கருத்தப்பட்டோம். நம்பிக்கையின்   அடிப்படையில் வாக்களிக்கிறோமாம். எந்த நம்பிக்கையில்? காலம் முழுவதும் ஏமாற்றப்பட்ட வரலாறு இருக்கும்போது நம்பிக்கை எங்கிருந்து? யாரிடமிருந்து வந்தது?

இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது 
கருமாந்திரம் இலங்கை தேர்தல் வாக்களிப்பு வரைபடத்தில்  எப்படி பச்சைக்கலரில் தமிழீழம் வாங்கிக்கட்டியிருக்கிறார் என்று பார்த்து புல்லரித்து புளங்காகிதமடையவேண்டும். தமிழர்களின் வாக்குகள் சாதித்த இந்த சாதனை மகத்தானது. வரைபடத்தை  சுருட்டி அப்படியே கருமாந்திரத்திற்கும் தீத்திவிட்டு தாங்களும் சாப்பிட்டு தமிழர்கள் கொண்டாடவேண்டும்    

5 hours ago, கிருபன் said:

ஆசனங்களை ஆவது  பாராளுமன்றில் பெற்றுக்கொண்டால் பேரம் பேசுவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவு நன்மைகளைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் துண்டு துண்டாக உடைந்து  கிடக்கும் தமிழரசுக் கட்சி, இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஏனைய பல தமிழ் கட்சிகள், மற்றைய கட்சிகளுடன் இணைய மறுக்கும் தமிழ் காங்கிரஸ் ஆகியவை "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும்  தமிழரின் எதிர்கால நம்பிக்கையை சிதைத்துள்ளன. 

வல்லிபுரம் விட்டா காதில நல்லா O...A  விடுவார் 
தமிழரசு கூத்தமைப்பான்கள் உடைந்து கிடக்கிறார்களாம் மற்றையவர்கள் இந்தியகைக்கூலிகளாம். ஆனால் இந்தியகைக்கூலிகள் தான் சஜித்திற்கும், ரணிலுக்கு ஒட்டு போட சொன்னவர்களாம். அப்போ சஜித்துக்கு ஓட்டுப்போட சொன்ன கருமாந்திரம் அண்ட் Co  மட்டும் எந்த நாட்டு கைக்கூலி மிஸ்டர் வல்லிபுரம் ...?.   

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் படுதோல்வியடைந்த தமிழர் தரப்பு ராஜதந்திரமும்

தேர்தல் வெற்றிக்கு எழுபதுக்கு எழுபது போதும்.

சிதறடிக்கப்பட்ட தமிழர் வாக்குகள்.

பொருத்தமற்ற தமிழ் பொது வேட்பாளராக பலிக்கடா அரியநேந்திரன் 

தோல்வியடைந்த இந்திய சூழ்ச்சிகள் 

குழம்பிய குட்டையில் வரும் பாராளுமன்ற தேர்தல் 

ஒட்டுண்ணிக் குழுக்களின் இறுதிக் கட்டம்

 "

தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பாரிய  சவால்கள் 

Dr முரளி வல்லிபுரநாதன் 
23.9.2024

ஒரு வரியில் சொல்லவேண்டிய விடயத்தை போட்டு சுத்தி வளைத்து மூக்கை..,?

தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை அது வரப் போவதுமில்லை. அதனால் தான் உலகத்தில் ஒரு நாட்டின் அல்லது இனத்தின் 2 வீதமான மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்திலோ அல்லது ஊர்வலத்திலோ கலந்து கொண்டால் அதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

எனவே அரியத்தார் ஒரு பரிசோதனை நாய் தான். ஆனால் அவர் வாக்களிக்கும் தகுதி உடைய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அனைத்து பிரிவினைகளையும் பிளவுகளையும் உணவு உறையுள் வேலை வாய்ப்பு என்ற அனைத்து கைக்குள் போடுதலையும் தாண்டி...

உன் தேசமுடிவுகளை நீ மட்டுமே எடு. அதில் நாம் எந்த விதத்திலும் தலையிடமாட்டோம். வாழு.

நான் தள்ளி நிற்கிறேன். அதை மதித்து எம்மையும் வாழவிடு.

என்று வாக்களிக்கும் தகுதி உடைய மக்களில் இருபது வீத மக்கள் கூட்டம் சொல்லி இருக்கிறது. காது கொடுக்க தயாராக உள்ளவனுக்கு இது போதும். மற்றவர்களுக்கு 99,99 ம் கேட்கப் போவதில்லை..

நன்றி அரியம் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/9/2024 at 00:15, island said:

அரியமோ அவரை களத்தில் இறக்கிய நிலாந்தினோ யதீந்திராவோ எதையும் நிரூபிக்கவில்லை. அவர்களை நிராகரித்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.😂 

எமது மக்களும் அரசியல்வாதிகளும் எம்மினம் எவ்வளவு ஒற்றுமையானது என்பதை வெளிஉலகிற்கு அடிக்கடி காட்டிக்கொள்கிறார்கள். அது எம்மினத்தின் சாபக்கேடு.

அதுசரி உங்கட நானாக்கள் ஆருக்கு வோட்டு போட்டவையாம்!! இனி கூட்டமா கிளம்பவேண்டியதுதானே அணுரவின்ர காலில விழ!! இதுக்கெல்லாம் உங்களுக்கு சொல்லியா தரணும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nochchi said:

 இதிலென்ன வேடிக்கையென்றால் புலிகள் உயிர்போடிருந்த காலத்தில் முன்னணியிலே நின்று செயற்பட்டவர்களது நளினங்களைப் பார்க்கிறபோது புலிகள் வீழ்த்தப்பட்டது தனியே எதிரிகாளாலும், துரோகிளாலும் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறதோ அந்த வட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது.  

அதே!! 👍

Posted
13 hours ago, putthan said:

பழைய சிவப்பு கோவணம் பறக்கப்போகின்றது🤣 ...சிறிமாவின் காலத்து கோவணமா? கோத்தா காலத்து கோவணமா பறக்கப்போகின்றது ...பார்ப்போம் ...வரலாறு தானே வழிகாட்டி.....🤣

இன்னும் ஆறு மாதத்துக்குள் தெரிந்து விடும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ரஞ்சித் said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது.

இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும்,  தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில்  ஒன்றுசேர்ந்து நிற்பதுதான்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது  தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்?

இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. 

தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா?

இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா?

சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?

பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான்.

இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை?

இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை.

உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று  நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..

நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும்.

எங்கே ஆளை காணவில்லையே என்று நினைத்தேன்! மிக நேர்த்தியான கருத்துக்கள். நன்றி.

நீங்களும் கோஷானும் இல்லாமல் இங்க சில கொசுக்களின்ர தொல்லை தாங்க முடியவில்லை.

  • Like 1
Posted
4 hours ago, விசுகு said:

என்று வாக்களிக்கும் தகுதி உடைய மக்களில் இருபது வீத மக்கள் கூட்டம் சொல்லி இருக்கிறது. காது கொடுக்க தயாராக உள்ளவனுக்கு இது போதும். மற்றவர்களுக்கு 99,99 ம் கேட்கப் போவதில்லை..

நன்றி அரியம் அண்ணா.

இந்த 20 வீதம் என்ற கணக்கை எங்கிருந்து பெற்றீர்கள் விசுகு?அல்லது யாழ்ப்பாண மக்கள் மட்டும் தான் வடக்கு கிழக்கின் மொத்த மக்கள் தொகையா?

வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84  வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்களால்  நிராகரிக்கப்பட்டவருக்கு பட்டுக் குஞ்சம் சாத்தாமல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் புரிந்து கொள்ளாவிடின் கூட பிரச்சனை இல்லை, அதானால் மக்களுக்கு எந்த பாதகமும் ஏற்படப் போவதில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, நிழலி said:

வடக்கு கிழக்கு மக்களால்  நிராகரிக்கப்பட்டவருக்கு பட்டுக் குஞ்சம் சாத்தாமல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் புரிந்து கொள்ளாவிடின் கூட பிரச்சனை இல்லை, அதானால் மக்களுக்கு எந்த பாதகமும் ஏற்படப் போவதில்லை.

அது சரி, சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கும், கூட்டமைப்பின் மற்றவர்கள் சொன்னதால் ரணிலுக்கும் போட்ட வாக்குகளால் என்ன சாதகம் வந்தது என்று சொல்லிவிட்டு போறது!!

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.