Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2024 at 02:04, வாலி said:

நன்றாக ஆரத்தழுவுவார்கள் அதுவும் பெண்கள் என்றால் ஸ்பெசல் ஆரத்தழுவுதல் கிடைக்கும்!👀

வாலி அனுபவமோ?😂😂😂

  • Replies 68
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம்.   😂 🤣

  • விசுகு
    விசுகு

    இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃

  • உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2024 at 00:05, zuma said:

எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..

மற்ற தலங்களுக்கும் சென்றுள்ளார்கள் சரி - ஆக குறைந்தது நல்லூர் கந்தனிடம்.

அனால், மற்ற மத குருமார்களிடம் ஆசி பெற்றதற்கு படம் இருக்கிறதா?

அனால், இப்படியாக காலில் விழுந்து ஆசி பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ரா கலாசாரம் வர வேண்டும். 

அல்லது சிங்களவர் தவிர்ந்த மற்றவர்கள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. 

அவர் தமது பெற்றோரின் , பெற்றார் வழி மூத்தோர, மற்றும் ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்று இருந்தால் வரவேற்று  இருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2024 at 02:12, goshan_che said:

ஓம்…அது பெளத்தர்கள் போனால்…

ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை.

1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா?

இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா?

இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள்.

நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்?

@குமாரசாமி @zuma

நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா?

எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள்.

நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா?

அடுத்து என்ன…

தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே????

உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?

கொழும்பில் இருந்தபோது வெள்ளிக்கிழமைகளில் அண்ணருடைய கடையில் கொஞ்சம் சில்லறை எடுத்து வைத்துக் கொண்டு பிக்குகள் வந்து பிச்சை (தானம்?) கேட்கும் போது போடுவார்கள். சில்லறை கொடுக்காது விட்டால் அவர்களுடைய இன்னொரு முகத்தை பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

Rev. Fr. கிளி (கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்)  தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது தலைவரின் கையைப் பிடித்து முத்தமிட்டார். (வழமையாக குருவானவர்கள் போப் அல்லது காடினல் தரத்திலுள்ளவர்களின் கையைப் பிடித்து முத்தமிடுவதுதான் வழமை. )

இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதை எவருமே பெரிதாக கொள்ளவில்லை. ஏனென்றால் Fr. கிளியவர்கள் தலைவரின் மேல் கொண்ட மரியாதையின், நேசத்தின் வெளிப்பாடு அது. 

இங்கே மரபுப்படி பிக்குக்கள் கதிரையில் இருக்கிறார்கள்.  அவர்களைச் சந்திக்கச் செல்பவர்கள் அவர்களுக்கு வழமைபோல பெளத்தர்கள் கொடுக்கும் மரியாதையை இவர்களும் கொடுக்கிறார்கள். இது தற்செயலாகக் கூட  நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். 

இந்த விடயம் விவாதத்திற்குரிய முக்கியத்துவம் மிக்கதா? 

புரியவில்லை,.......

🥺

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

Rev. Fr. கிளி (கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்)  தலைவர் பிரபாகரனைச் சந்தித்தபோது தலைவரின் கையைப் பிடித்து முத்தமிட்டார். (வழமையாக குருவானவர்கள் போப் அல்லது காடினல் தரத்திலுள்ளவர்களின் கையைப் பிடித்து முத்தமிடுவதுதான் வழமை. )

எந்தவொரு  கத்தோலிக்க பாதிரியார் சந்திப்பும், அதுவும் அதிகார பீடத்திற்கு சென்று , என்பது அரச சந்திப்பு.

நான் நினைக்கவில்லை அந்த சந்திப்பு வாதிகனுக்கு தெரியாமல் நடந்தது என்று.

காரணம் எதுவாகவும் இருக்கலாம். 

மற்றது ஒருவர், இன்னொருவர் காலில் விழவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

வாலி அனுபவமோ?😂😂😂

மீரா சார், நிறைய விடயங்களை என்னால் சொல்லமுடியும். அவை இத்திரிக்கு தொடர்பில்லாதனவாதலால் எழுதாமல் விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எந்தவொரு  கத்தோலிக்க பாதிரியார் சந்திப்பும், அதுவும் அதிகார பீடத்திற்கு சென்று , என்பது அரச சந்திப்பு.

நான் நினைக்கவில்லை அந்த சந்திப்பு வாதிகனுக்கு தெரியாமல் நடந்தது என்று.

காரணம் எதுவாகவும் இருக்கலாம். 

மற்றது ஒருவர், இன்னொருவர் காலில் விழவில்லை.

காலில் விழுவது அல்ல விடயம். இன்னொருவருக்கு அவர்களின் மரபுப்படி மரியாதை கொடுப்பதில் என்ன தவறு? 

சிங்களப் பிள்ளைகள் இன்னொரு சமூக மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவது நடப்பதுதானே? 

இன்னொரு சமூகத்தினரின் மரபுகளுக்கு மரியாதை கொடுப்பதில் தவறென்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

காலில் விழுவது அல்ல விடயம். இன்னொருவருக்கு அவர்களின் மரபுப்படி மரியாதை கொடுப்பதில் என்ன தவறு? 

சிங்களப் பிள்ளைகள் இன்னொரு சமூக மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவது நடப்பதுதானே? 

இன்னொரு சமூகத்தினரின் மரபுகளுக்கு மரியாதை கொடுப்பதில் தவறென்ன ? 

தனிப்பட்டவராக  அவர் செய்வது வேறுவிடயம். 

மக்கள் பிரதிநிதியாக செய்வது என்பது ... அதன் குறியீடு.

அதைத்தான் சொல்லி இருக்கிறேன், சிங்களவர் செய்வது அவர்களின் கலாசாரம்; அனால் அதை தமிழர்கள் செய்யவேண்டும் என்ற சிங்களவரின் வடர்புறுதலான எதிர்பார்ப்பு , செய்தால் தான் மரியாதை என்பது திணிப்பு, திணிபு குறியீடு.

முக்கியமாக அது சிங்களவர் அல்லாதோரை பற்றி சிங்களவரிடம் உருவாக்கும்  political connotation, மிகவும் ஆபத்தானது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

உங்கள் கரிசனை சரியானதுதான். ஆனால் அவர்களது செய்கை எதேச்சையானதாக இருந்திருந்தால் எங்கள் ஆட்களின் விமர்சனம் தேவையற்ற ஒன்று. 

அது தவிர, இராஜதந்திரிகள் முதல் அரச தலைவர்கள் ஈடாக எல்லோரும் பீடாதிபதிகளைச் சந்திக்கப்போகும்போது பீடாதிபதிகள் எழுந்திருப்பதில்லை. அத்துடன் பீடாதிபதிக்ளது இருக்கையின் உயரத்துக்கு சமமாக அல்லது உயரம் குறைவாகத்தான் பிறருக்கு இருக்கைகள் போடப்படுகின்றன. 

ஒருவரைச்  சந்திக்கும்போது அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களைச் சந்திக்காமல் தவிர்ப்பதுதான் நாங்கள்  செய்யக்கூடியது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

தனிப்பட்டவராக  அவர் செய்வது வேறுவிடயம். 

மக்கள் பிரதிநிதியாக செய்வது என்பது ... அதன் குறியீடு.

அதைத்தான் சொல்லி இருக்கிறேன், சிங்களவர் செய்வது அவர்களின் கலாசாரம்; அனால் அதை தமிழர்கள் செய்யவேண்டும் என்ற சிங்களவரின் வடர்புறுதலான எதிர்பார்ப்பு , செய்தால் தான் மரியாதை என்பது திணிப்பு, திணிபு குறியீடு.

முக்கியமாக அது சிங்களவர் அல்லாதோரை பற்றி சிங்களவரிடம் உருவாக்கும்  political connotation, மிகவும் ஆபத்தானது. 

மிகச்சரியான கருத்து.

காலில் விழுவது என்பது அவர்கள் கலாச்சாரம்.

பெற்றோர், தவிர ஏனையோர் காலில் விழுவது இல்லை  என்பது எமது கலாச்சாரம். அதானால்தான் சசிகலா காலில் எடப்பாடி விழுந்ததையும், புலம்பெயர் நாட்டில் ஐயர் காலில் பிள்ளைகள் விழுவதையும் நாம் ஒரு இனமாக முன்பே விமர்சித்தோம். 

கைலாகு கொடுப்பது போல் அல்லது கையில் முத்தமிடுவது போல் அல்ல இது.

இது அவர்களுக்கு சப்பை மேட்டராக இருக்கலாம் ஆனால் எமக்கு சரணாகதியின் வெளிப்பாடு.

ஒரே இலங்கையர் என்ற ஈரச்சாக்கில் எம்மை போட்டு மூடுவதன் இன்னொரு அங்கமே இது.

உயிர்களை அழித்தல் போல ஒரு இனத்தின் பண்பாட்டியல் கட்டுமானத்தின் கூறுகளை அழிப்பதும் கூட cultural genocide தான்.

இதை கேள்வி கேட்கும் திராணி கூட எந்த அமைப்புக்கோ ஊடகத்துக்கோ இல்லை என்பது வெட்கக்கேடான விடயம்.

இதற்கும் மேலா இதற்கு புரிந்தும், புரியாமலும் ஒத்தூத இன்னொரு கொஞ்சம் பேர்.

4 hours ago, விசுகு said:

கொழும்பில் இருந்தபோது வெள்ளிக்கிழமைகளில் அண்ணருடைய கடையில் கொஞ்சம் சில்லறை எடுத்து வைத்துக் கொண்டு பிக்குகள் வந்து பிச்சை (தானம்?) கேட்கும் போது போடுவார்கள். சில்லறை கொடுக்காது விட்டால் அவர்களுடைய இன்னொரு முகத்தை பார்க்கலாம். 

நிச்சயமாக…

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எமக்கு சரணாகதியின் வெளிப்பாடு.

எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். 

இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அதே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதே.

நன்றி சகோ 

மாற்றத்தை தன் வீட்டில் இருந்து செய்யத் தொடங்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்ததற்கெல்லாம் நொட்டி  நோண்டுவது என்பது பழக்கமாகி வருகிறது.....😁

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

எடுத்ததற்கெல்லாம் நொட்டி  நோண்டுவது என்பது பழக்கமாகி வருகிறது.....😁

Pot Calling Kettle Black Merch & Gifts for Sale | Redbubble

“நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம்.   😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Pot Calling Kettle Black Merch & Gifts for Sale | Redbubble

நீ கறுப்பு என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம்.   😂 🤣

ஒன்று நான்  கறுப்பா பயங்கரமாக இருப்பேன் அல்லது நீங்கள் பயங்கரமாக கறுப்பாக இருப்பீர்கள்.  நிச்சயமாக  இருவரும் சமமாக இருக்க வாய்ப்பே இல்லை,....🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். 

இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும். 

உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்..பாடகர்கள்  விழவைத்தே மானத்தை வாங்குகிறார்கள்... இன்னும் எத்தனையோ விதமான கூத்துக்கள்.. இதனைப் பார்க்கும்போது..கனடாவில் பெற்றொரின்  பண்பு கற்காலத்துக்கு செல்கிறதா என்று  எண்ணத் தோன்றுகிறது..

நன்றி விசுகர் உங்கள் வீட்டுப்புரட்சிக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது? இலங்கையின் பேரினவாதத்தின் அடிநாதமாக பெளத்த மதம் உள்ளது, எவ்வாறு தமிழர்கள் தமிழ் தேசியத்தினை தமது இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாக பெளத்தம் உள்ளது.

தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுவதன் மூலம் வழமையாக இருந்து வந்த தமிழ் தேசிய கோட்பாட்டிலிருந்து வெளியே வந்து சிங்கள பேரினவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் இருக்கலாம் ( இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள்தான் தெரிவு செய்தார்கள், சிங்கள மக்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் ஏன் காலில் விழுந்தார்கள் என்று).

இலங்கையில் இரண்டு மதங்கள் பெரும்பாலும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன ஆனால் மற்றய இரு மதங்கள் அரசியலில் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை, ஆனால் தமிழ் அரசியலில் இதுவரை இருந்த தேசிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பெற்றோர், தவிர ஏனையோர் காலில் விழுவது இல்லை  என்பது எமது கலாச்சாரம்.

எப்போதில் இருந்து இந்த கூத்து நமது கலாச்சாரமானது🙄
எனது பெற்றோர் காலில் விழும்படி என்னை கேட்டதும் இல்லை அப்படி அவர்கள் கேட்டிருந்தாலும் அறிவுவந்த வயதிற்கு பின்பு அவர்கள் காலில் விழ மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். 

இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும். 

அய்யருக்கு நீங்கள் சொன்னது  அருமையான பதில் அண்ணர். இந்த சம்பிரதாயங்களை மாற்றுவதில் உங்களை போன்று பல ஆயிரம் பேர் பங்குபெறவேண்டும். ஆனால் இதட்கு எதிர்மறையாக இந்தியாவில் இருந்து சில முறைமைகள் புகுத்தப்படுகின்றமையை நான் காண்கிறேன், அடிமைத்ததனத்தை உறுதிசெய்கின்ற வகையில்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/11/2024 at 02:12, goshan_che said:

நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா?

நான் இதுவரை யார் காலிலும் வீழ்ந்து வணங்கியதில்லை. கோவில்களில் கூட வீழ்ந்து வணங்குவதை நிறுத்தி நீண்ட காலமாகி விட்டது.அது அவசியமானது இல்லை என நினைக்கின்றேன்
ஆனால் ஒரு சிங்கள கட்சியை ஆதரித்த தமிழ் உறுப்பினர்கள் அதற்கமைய நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் கடமை அல்லது கட்டுப்பாடாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது? இலங்கையின் பேரினவாதத்தின் அடிநாதமாக பெளத்த மதம் உள்ளது, எவ்வாறு தமிழர்கள் தமிழ் தேசியத்தினை தமது இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாக பெளத்தம் உள்ளது.

தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுவதன் மூலம் வழமையாக இருந்து வந்த தமிழ் தேசிய கோட்பாட்டிலிருந்து வெளியே வந்து சிங்கள பேரினவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் இருக்கலாம் ( இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள்தான் தெரிவு செய்தார்கள், சிங்கள மக்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் ஏன் காலில் விழுந்தார்கள் என்று).

இலங்கையில் இரண்டு மதங்கள் பெரும்பாலும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன ஆனால் மற்றய இரு மதங்கள் அரசியலில் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை, ஆனால் தமிழ் அரசியலில் இதுவரை இருந்த தேசிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
 
இதை ஒரு ஆரம்ப அறிகுறி என காட்டவே இவர்கள் விழ வைக்கப்பட்டார்கள்.

2 hours ago, vasee said:

முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது?

ஈரானில் இப்போதும் இதுதான். Theocracy என்பார்கள்.

என்ன ஈரான் நேரடி தியோக்ரசி, இலங்கை மறைமுக தியோக்ரசி.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

எப்போதில் இருந்து இந்த கூத்து நமது கலாச்சாரமானது🙄
எனது பெற்றோர் காலில் விழும்படி என்னை கேட்டதும் இல்லை அப்படி அவர்கள் கேட்டிருந்தாலும் அறிவுவந்த வயதிற்கு பின்பு அவர்கள் காலில் விழ மாட்டேன்

நல்லது. ஆனால் நம்மில் பலர் பெரும்பாலும் பெற்றார் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்பார்கள் என நினைக்கிறேன். தத்தம் பண்ணிய பின் பெற்றார் காலில் விழுந்து ஆசி பெறுவது பல காலமாக நான் கண்டுள்ளேன்.

10 minutes ago, குமாரசாமி said:

நான் இதுவரை யார் காலிலும் வீழ்ந்து வணங்கியதில்லை. கோவில்களில் கூட வீழ்ந்து வணங்குவதை நிறுத்தி நீண்ட காலமாகி விட்டது.அது அவசியமானது இல்லை என நினைக்கின்றேன்
ஆனால் ஒரு சிங்கள கட்சியை ஆதரித்த தமிழ் உறுப்பினர்கள் அதற்கமைய நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் கடமை அல்லது கட்டுப்பாடாக இருக்கலாம்.

ஆக இதன் பின்னால் நுண் அரசியல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். 

இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும். 

சம்பிரதாயத்தை மாற்ற விரும்பும் விசுகர் ஏன் ஐயரை கூப்பிட்டு மகனின் திருமணத்தை நடத்தினார்? 😉

7 minutes ago, goshan_che said:

ஆக இதன் பின்னால் நுண் அரசியல் இருக்கிறது.

நிச்சயமாக இருக்கின்றது. 
எனது நிலைப்பாடு என்னவெனில் சிங்கள அரசியலில் புது முகங்களும் புதிய அரசியலும் இனவாத அரசியல்தான் என சாட்சியாக  சர்வதேசத்திற்கு காட்டவேண்டும்.பார்க்கலாம் அடுத்த காலங்களில்......

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் சரோஜா பவுள்ராஜும் தன் அரச அலுவலகத்தில் புத்தர் சிலைக்கு பூ வைத்து கும்பிட்டு தனது கடைமையை ஆரம்பித்திருக்கிறாரம்! 

https://x.com/EmDeeS11/status/1859193507820298356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

அமைச்சர் சரோஜா பவுள்ராஜும் தன் அரச அலுவலகத்தில் புத்தர் சிலைக்கு பூ வைத்து கும்பிட்டு தனது கடைமையை ஆரம்பித்திருக்கிறாரம்! 

https://x.com/EmDeeS11/status/1859193507820298356

தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர்.

அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.