Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசே தமிழனுக்கு விருது

Featured Replies

இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில், தன்னுடைய படைப்பினூடாக, தன்னுடைய கவிதைகளினூடாக ஒரு இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாகும். சக ஈழத்து இளைஞனாக, புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன். அவரை வாழ்த்துகிறேன். தொடர்ந்தும் தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் படைப்புக்களாக அவர் வெளிக்கொணரவேண்டும்.

thatstaml இணையத்தளத்தில் இதுதொடர்பாக வந்த தகவலையும் இங்கே இணைக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களையும் இளங்கோவுக்கு (டிசே தமிழனுக்கு) தெரிவியுங்கள். முடிந்தால் அவருடைய கவிதைத் தொகுப்பை வாங்கிப் படியுங்கள்.

தமிழச்சி தங்கபாண்டியன், இளங்கோ நூல்களுக்கு ஏலாதி விருது

தக்கலை: 2007-08ம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூல்களுக்கான ஏலாதி இலக்கிய விருது, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனடா கவிஞர் இளங்கோ ஆகியோரின் நூல்களுக்கு கிடைத்ததது.

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல் மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15ம் தேதி தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார்.

ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

'கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்க வேண்டும். உதிரத்தின் நிணத்துடனும், வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது. அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையாகவும் கவிதை உருமாறும் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்

,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனி ராஜாசிங், தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது. தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான நாடற்றவனின் குறிப்புகள் நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர். போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்.

போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது.ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூர்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும் போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதிவாழ்க்கையில் நான் 'ஆசீர்வதிக்கப்பட்டவன்'' என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்ற போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றேன்.

இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.

நன்றி: http://thatstamil.oneindia.in/art-culture/...et.html#cmntTop

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில்,

திறமையை விட காசுக்கு.. புகழுக்கு.. அரசியலுக்கு.. பின்னணிக்கு அடிபணிந்து விருது வழங்குதல் தமிழகத்திலும் ஏராளம்..!

ஒரு ஈழத்தமிழனுக்கு கவித் துறையில் இலக்கிய விருது என்பது பாராட்டத்தக்கதே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன். அவரை வாழ்த்துகிறேன்

ஓம்

இந்த சின்னக்குட்டியும் வாழ்த்துகிறான்

வாழ்த்துக்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோவுக்கு நல் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் இளங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல படைப்புக்களை படைத்து பாராட்டுக்களை பெற வாழ்த்துகிறோம்

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கோவுக்கு.

பட்டங்கள் கொடுப்பதும் வாங்குவதுமாக தமிழ்ப்படைப்பாளர்கள் என சொல்லிக்கொள்வோர் விழாவெடுத்து பட்டங்களை கௌரவிக்க சிறந்தொரு படைப்பை தந்துவிட்டு மௌனமாக தனது எழுத்துக்களை தந்து கொண்டிருக்கும் இளங்கோவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புத் தொடர்பாகப் பாராட்டுங்கள்.. அடுத்தவன் என்ன செய்யுறான்.. இவர் என்னத்தில வேறுபடுறார் என்ற கற்பனைகளை விட்டிட்டு.. படைப்புத் தொடர்பில்.. அவரைப் பாராட்டுங்கள். இவரும் நாளைக்கு.. ஏன் இன்றைக்கே உந்த விருதுகளுக்கு அடிமையாகக் கூடும்...!

எனவே அடுத்தவையோட ஒப்பிடுறதை விட்டிட்டு.. விருது பெற்ற இருவரும்..(ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனினும்.. புலம்பெயர் தமிழ் மக்களின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்) புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றிய இலக்கியப்படைப்புக்களுக்காக விருது பெற்றுள்ளனர் என்பதை அதுவும் தமிழக கவிஞர்களால் தெரிவாக்கப்பட்டுள்ளனர் என்பதை முன்னிலைப்படுத்தி வாழ்த்துங்கள். அப்படியான படைப்புக்களை வெளியிட இன்னும் ஊக்குவியுங்கள்.

அதைவிடுத்து.. அடுத்தவன் எப்படி விருதுவாங்கினான்.. பட்டம் வாங்கினான் என்று ஒவ்வொருவரும் தமக்குள் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப அடுத்தவர்களை குறைத்துக் காட்டி மகிழும் கீழ்த்தரமான வகையில் பாராட்டுக்களைச் செய்வதைத் தவிருங்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கோ.தொடரட்டும் உங்கள் படைப்புகள்

வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறப்புடன் தொடரட்டும்.

போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் தரமான படைப்புக்களும் அவற்றைப் படைக்கும் படைப்பாளிகளையும் என்றோ ஒரு நாள் உலகம் கண்டு கொள்ளும்.

முன்னர் ஒரு தடவை டிசேயின் கவிதை ஒன்றை யாழ்க்களத்தில் இணைத்த போது அது பெரும் சர்ச்சையைக் கிழறி விட்டது.கவிதையைப் பிழையாக விளங்கிக்கொண்ட பெண்கள் சிலர் என்னோடு மல்லுக்கு நிண்றனர்.அதற்கு வேறு காரணக்களும் இருந்திருக்கலாம்.இப்போது அவர்களைக் காணவில்லை, டிசேயின் கவிதைகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு தடவை டிசேயின் கவிதை ஒன்றை யாழ்க்களத்தில் இணைத்த போது அது பெரும் சர்ச்சையைக் கிழறி விட்டது.கவிதையைப் பிழையாக விளங்கிக்கொண்ட பெண்கள் சிலர் என்னோடு மல்லுக்கு நிண்றனர்.அதற்கு வேறு காரணக்களும் இருந்திருக்கலாம்.இப்போது அவர்களைக் காணவில்லை, டிசேயின் கவிதைகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.

இது முகவும் தவறான அர்த்தப்படுத்தல். ஒரு விருதின் அடிப்படையில் படைப்பாளியின் மொத்தப் படைப்புக்களும் தரமானவை.. இலக்கிய நயமானவை என்பது ஏற்கக் கூடியதல்ல.

எத்தனையோ தடவை விருதுகள் வென்ற பெருங் கவிஞர்கள் கூட கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே ஒரு விருதைக் காட்டி.. படைப்புக்கள் எல்லாம் தரமானவை என்ற அர்த்தப்படுத்தல்.. படைப்பாளி பற்றி தவறான எடை போடலுக்கே வகை செய்யும்..!

இளங்கோவுக்கு இந்த விருது.. வெறும் படைப்பை வழங்க மட்டும் சொல்லவில்லை.. அவரின் இலக்கியப் பணியில் அவருக்கு கூடிய பொறுப்பை உண்டு பண்ணி இருக்கும் என்று நம்பலாம்..! எனி படைப்புக்கள் மென்மேலும் மெருகூறும் என்றும் கருதலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் சொன்னது சரியே (ஆதங்கம்)

நாரதர் சொன்னதும் சரியே (பாரட்டினது)

நெடுக்ஸ் சொன்னதும் சரியே (மாற்றுகருத்து)

நான் ஜால்ரா போடுறதும் சரியே. :icon_idea:

ஓ..அப்படியோ டகவலிற்கு நன்றி..றி இளைஞன்.. :D அது சரி இவர் யாழில வாற இளங்கோமாமாவா அல்லாட்டிக்கு பிறிதொரு நபரா..??.(யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கோ)..

ம்ம்..எங்கள் சகோதரன் ஒருவருக்கு விருது கிடைத்திருக்கிறது மகிழ்ச்சியான விடயம்..ம்.. :D

மற்றது..

சக ஈழத்து இளைஞனாக, புலம்பெயர்ந்து வாழும் ஒரு அகதியாக நானும் பெருமைகொள்கிறேன்.

மேலே குறிப்பிட்டிருந்தீர்கள் "புலம் பெயந்து வாழும் ஒரு அகதியாக நான் பெருமைபடுகிறேன்" என்று சந்தோஷமான விசயம்..அது சரி இப்போது "ஈழத்து அகதி" என்று சுயதம்பட்டதிற்காக சிலர் அதனை சேர்ந்த்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது.. :lol:

நான் உங்களை குறை கூறவில்லை!!..பலரை உற்றுநோக்கிய பிரகாரம் இந்த கருத்தை தெரிவிக்கிறேன்..!!

விருதுகளையும்,பட்டங்களையும் பெயருக்கு பின்னால் விலை கொடுத்து காவி திரிவதும் ஒன்று தான் இப்படி "ஈழத்து அகதி" என்று கூறி சுயதம்பட்டம் அடிப்பது என் பார்வையில் ஒன்று தான்..ன். :D

சரி..இளைஞன் கண்டிப்பா அவரின்ட புத்தகத்தை வாங்கி படிக்கிறன் மற்றது தாங்கள் அவரை வாழ்த்த சொன்னபடியால் என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.. :icon_idea:

ஆனால் பாருங்கோ..!!

யாழ்களத்திள் கூட..ட எத்தனையோ நல்ல..ல படைப்பாளிகள் இருக்கீனம்..ம்..(உங்கள் பார்வையில் படைப்பாளிகாக அர்த்தம் எனக்கு புரியவில்லை)..நாலு பேர் மத்தியில ஏற்கனவே பிரபலயமான ஆட்கள் தான் உங்கள் பார்வைக்கு படைப்பாளியாக தெரியுமோ நான் அறியேன்.. :(

முடிந்தால்..யாழ்களத்திள் இருக்கும் படைப்பாளிகளுக்கு..கு உங்களாள் ஆன உற்சாகத்தையும்..ம் வாழ்த்துகளையும் தெரிவியுங்கோ..

ஏன் சொல்லுறன் எண்டால்..இங்க இருக்கிறவைக்கு நாளைக்கு விருது கிடைத்து அதுக்கு பிறகு நீங்க வந்து பாராட்டுறதில பிரயோசனமில்லை தானே இளைஞன்..ன்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில விருதும்..விருந்தும் ஒன்னு தான்..இரண்டாலையும் மற்றவனுக்கு பிரயோசனமில்ல"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திள் கூட..ட எத்தனையோ நல்ல..ல படைப்பாளிகள் இருக்கீனம்..ம்..

முடிந்தால்..யாழ்களத்திள் இருக்கும் படைப்பாளிகளுக்கு..கு உங்களாள் ஆன உற்சாகத்தையும்..ம் வாழ்த்துகளையும் தெரிவியுங்கோ..

என்னை சொல்ல இல்லை தானே... :D. இல்லை சும்மா கேட்டனான்...... :icon_idea::D
  • கருத்துக்கள உறவுகள்

டிசே தமிழன் யாழ்களத்தில் எழுதுபவரா?.

புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றிய இலக்கியப்படைப்புக்களுக்காக விருது பெற்ற திரு.இளங்கோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சொல்ல இல்லை தானே... :D. இல்லை சும்மா கேட்டனான்...... :icon_idea::D

:D எனக்கும் இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்குது :D:lol::(:D

இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

வாழ்த்துகள் இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்..!

அதுசரி, டிசே எண்டால் என்ன? :D

டீ.சே. தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சொல்ல இல்லை தானே... :lol:. இல்லை சும்மா கேட்டனான்...... :D :D

நான் உங்களையெண்டெல்லோ நினைச்சனான். :)

  • தொடங்கியவர்

dsay1.jpg

dsay2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.