Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே

நானும் பார்க்கிறேன்

இந்து மதம் மட்டும்தான் இடிவாங்குகிறது??????

ஏனோ???

இந்தப்பாட்டியெல்லாம் வேறுயாரும் செய்வதில்லையோ???

இந்தப்பாட்டியெல்லாம் வேறு மதத்தினர்தான் கூடுதலாகச்செய்வதை நான் கண்டிருக்கின்றேன்

ஆனால் படங்களை வெளியிட்டு நான்மாட்டிக்கத்தயாரில்லை

அதேபோல் இதில் படங்களை இணைத்ததையிட்டும் எனக்கு உடன்பாடு இல்லை..........???

  • Replies 240
  • Views 28.2k
  • Created
  • Last Reply

வணக்கம்!

ஏன்னையும் சேர்த்துக் கூறவில்லை. அப்படியென்றால் நான் இதைக் கூறி இருக்கமாட்டேன். ஒருவன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர மற்றவர்களை பிழை கூறலாகாது. தமிழீழ விடுதலைக்கும் சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு சைவ சமயத்தவன். இந்து சமயத்தை இழிவு படுத்த வில்லை. ஆனால் மூட நம்பிக்கைகளில் ஊறியவன் அல்ல. களியாட்ட விழாக்களில் நான் பங்கு பற்றுவதை விட்டு இன்றோடு 25 வருடத்திற்கு மேலாகிவிட்டது. புலம் பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வார இறுதியில் ஏதாவது ஒரு களியாட்ட நிகழ்ச்சி இன்றும் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இருநூறு, நூறு டாலர்கள் என்று மக்கள் கொடுத்துப் பார்க்கின்றார்கள். எமது மூதாதையர் விட்ட பிழைகளால்தான் இன்று தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆமாம் பிள்ளை பிறந்தால், 11, 31, என்று கொண்டாட்டங்கள். அதன் பின்பு பிறந்த நாள் விழாக்கள். அரங்கேற்றங்கள். பூப் புனித நீராட்டு விழாக்கள். இப்படி பல. புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அன்னதானங்கள். இவைகளுக்கு நான் பணம் கொடுக்க வில்லை. ஆனபடியால் என்னைக் கேள்வி கேட்பதை விட்டு தாங்கள் தமிழினத்தைக் கேளுங்கள். அத்தோடு கொண்டாட்டங்கள் வைப்பது தனிப்பட்ட விடயம் என்று கூறுவார்கள். கேட்கும் பொழுது இதற்கு விடையும் தேவை!

நீங்கள் எல்லோரும் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். புறநகருக்கு புறநகர் ஆலயங்கள் தேவையா? ஆயிரக்கணக்கில் தெருவில் தேங்காய்களை உடைக்கலாமா? ஆலயங்களைக் கட்டி அதன் பின்பு நீதி மன்றங்களில் சரணடையலாமா?. ஒரு நாட்டில் ஆலயத்தைக் கட்டி விட்டு அதன் தர்மகத்தா காவலோடு உறங்குவாராம். ஏன் போட்டி பொறாமை. சண்டை சச்சரவு. ஈழ விடுதலையில் ஒற்றுமையோடு போராடுகின்றார்களா? எத்தனை இயக்கங்கள். அன்றய அரசியல் வாதிகள் தங்களுக்கென்று தொடங்கி வைத்த கூட்டங்கள் இன்று இனவாத அரசின் கூலிப் படைகளாகிவிட்டது.

தமிழினத்தையோ இந்து மதத்தையோ இழிவு படுத்துவது எனது நோக்கமல்ல. ஏனெனில் நானும் ஒரு தமிழன். அதிலும் சைவ சமயத்தவன். மூட நம்பிக்கைகள் போராட்டத்தைத் தாமதப்படுத்தும். சிந்திக்க வைப்பதுதான் எமது நோக்கம். தலைவரைச் சுப்பண்ணை சந்திக்க வில்லை என்றால், மற்றவர்கள் சந்திக்க வில்லையென்று எப்படி ஆதங்கத்தோடு கூறலாம். தமிழீழப் போராட்டத்திற்கும், பிராமணரர்களுக்கும், தேங்காய் உடைப்பதற்கும் முடிச்சுப் போடுவது தவறானது.

பிழையான வழியில் தயவு செய்து திசை திருப்பவேண்டாம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

1. இந்தத் திரியின் தலைப்பே "இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்". நீங்கள் இதில் பங்கேற்று இந்து மத நடைமுறைகள் சிலவற்றை குறை சொல்லும் பொழுது நீங்கள் போராட்ட அரசியலில் மதத்தை கலப்பதில் பங்கெடுக்கிறீர்கள். எவருடைய மத உனர்வுகளை புன்படுத்துதளும் எந்த வழியிலும் போராட்டத்திற்கு உதவப் போவதில்லை.

2. பிராமன சமுதாயத்த நேரிடையாகவே குறை சொல்கிறீர்கள். ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாகவே குறை சொல்தல் நாகரீகமன்று. சிங்களவரின் இனவெறிக்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை. போராட்டத்திற்கும் அவர்கள் பின் நிற்கவில்லை. நாம் மிகச் சிருபான்மையினர். மேலும் பிரிவுகள் தேவையில்லை.

3. மூட நம்பிக்கை போராட்டத்தை தாமதப்படுத்தும் என்கிறீர்கள். கடந்த 30 வருடங்களில் மூட நம்பிக்கை போராட்டத்தை எந்த அளவிற்கு பின் தள்ளியது என்று சொல்லமுடியுமா?

4. புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கான பாரிய பங்களிப்பு, கோவில் தேங்காய் அடிப்பை நிறுத்தியது தான் என்று முடிந்து விடக்கூடாதல்லவா? :(

  • கருத்துக்கள உறவுகள்

. புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்கான பாரிய பங்களிப்புஇ கோவில் தேங்காய் அடிப்பை நிறுத்தியது தான் என்று முடிந்து விடக்கூடாதல்லவா?

அப்படியா???

புலம்பெயர்ந்தவர்கள் கேம் விளையாடுவதுபோல் அல்லவா போர் தொடரவேண்டும் என்று மல்லுக்கட்டுகின்றனர் என இங்கு யாழ் களத்தில் இருப்போர் எண்ணுகின்றனர் எழுதுகின்றனர்??????????

அண்ணைமார் உதுகளுக்கு எதிராய் எதிரி எப்பிடி எல்லாம் ரேடியோ வைத்தும், தனியாகவும் பிரச்சாரம் செய்தவன் செய்கிறான் எண்டதை கேட்டுப்போட்டு அதுக்கான பதில்களையும் சொல்லினீங்கள் எண்டால் பார்க்கிற எங்களுக்கும் சுவாரசியமாய் இருக்கும்....!!!

அதுகளை கேக்கிறவை ஏதாவது கேள்வி கேட்டா பேந்த பேந்த முளிக்கிறதை தவிர வேற வளி இல்லாமல் கிடக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

அது பற்றி எல்லாம் சொல்ல வெளிக்கிட்டா வெட்டி போடுவாங்க வெட்டி...!!

மோகன் சாரிடம் சந்தேகம் கேட்டு மடல் எல்லாம் போட்டு காத்து இருக்கன் பதில் தான் இன்னும் இல்லை...!!! ஆனால் அவர் மௌனமாக இருப்பதால் நோக்கம் என்ன என்பதை ஓரளவு அறியக்கூடியதாக இருக்கிறது...!!

பிரச்சார ரீதியில் இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மோகன் சார் மட்டுமே பொறுப்பு என்பதை அறிய தந்துவிடுகிறேன்...!!

குறுக்காலபோவானின் தமிழ் தேசியம் மீதான பற்று என்னை அவர் மீது பொறாமை கொள்ள வைக்கிறது. இது போன்ற உங்கள் தேசியச்சேவை எங்களுக்கு தேவை.

படித்த, தேசியத்தை குத்தகைக்கு எடுத்த மக்கள் தமது தேசியத்துக்கன உழைப்பின் களைப்பை போக்க ஒன்று கூடி மகிழ்வதையும், உடல் நலத்துக்கான திராட்சை ரசம், பார்லி ரசம் குடிப்பதையும் தேசியத்தை பாதிப்பதாக சொல்லி இங்கு படங்களை இணைத்த நெடுக்காலபோவானுக்கு எனது கடுமையான கண்டனக்களை தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் இப்படி படத்தை இணைப்பதால் களத்தில் உள்ள ஒரு சிலரின் தெர்ந்தெடுத்த மறதி நோயை (Selective Amnesia ) பற்றி மற்றவர்கள் அறியும்படி செய்ததையும் வன்மையாக கண்டிக்கிறென். படித்த அறிவுள்ளவர்கள் தமதுஇ பயண களைப்பு போக பல நாட்டு எல்லைகளை கடந்து குடிபானங்களை வாங்கியதை இங்குள்ள சிலர் தொடர்ந்து குத்திக்காட்டுவது தொடர்பாகவும் எனது அதிருப்தியை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக ஒரு பொன்மொழி

"மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகல் உடைத்தால் பொன் குடம்"

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி மதம் என்பது நம்பிக்கை சார்ந்த விடயம். இலகுவில் மக்களால் மாறிவிட முடியாது.

ஆனால் ஒரு பெண் பருவமடைவதை ஊருக்கு தம்பட்டம் அடிக்கும் கீழ்த்தரமான சாமத்திச் சடங்கையாவது புலம்பெயர் மக்களால் நிறுத்தமுடியாதா?

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறன்??னுமின்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே

வாய்சொல்லில் வீரர் அடி...

இப்படித்தான் இருக்கு யாழ்பகுத்தறிவாளாகள் சங்கம்.. தாங்கள் ஒன்டும் புடுங்குறேல.... மற்றவை ஒன்டும் செய்யிறேல என்டு ஓரே ஒப்பாரி...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் தமிழீழத்கை விட்டு புலம் பெயர்ந்துவிட்டனர். கணிசமானோர் வளம் கொழிக்கும் மேற்கு நாடுகளில் குடியமர்ந்துவிட்டனர். மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர முடியாத சற்று வசதி குறைந்தவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையாக வேலை செய்து தமது குடும்பங்களின் செலவுகளைச் சமாளிக்கின்றனர். வசதி வாய்ப்புக்கள் இல்லாதோர் உயிர் தப்ப தமிழகம் சென்று அவல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

நாட்டிலும் சற்று வசதி படைத்தோர், அல்லது மேற்கு நாடுகளில் உறவினர்கள் உள்ளோர் சிங்களப் பகுதிகளில் (கொழும்பு உட்பட) தங்கியுள்ளனர். தாயகப் பகுதிகளில் எஞ்சியோரே இன்னும் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் வசதி வாய்ப்புக்கள் கிடைத்தால் இந்தியா, கொழும்பு, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மேற்கு நாடுகளுக்கு வந்துவிடுவர். எனவே புலம்பெயர் தமிழீழ மக்கள் தமது தேசியக் கடமையாக எஞ்சியுள்ள இம்மக்களை மேற்கு நாடுகளுக்கு வரவழைக்க முயலலாம்.

  • இரத்த உறவினர்களை ஸ்பொன்சர் செய்யலாம்
  • மாணவர்களாக இருக்கும் உறவுக்காரச் சிறுவர்களை மேற்கு நாடுகளில் உள்ள பாடசாலைகள்/பல்கலைக் கழகங்களுக்கு வந்து படிக்க பொருளாதார உதவிகள் செய்யலாம்.
  • தாயகத்தில் திருமணங்கள் முடிப்பதன் மூலம் இளைஞர்கள்/இளைஞிகளை மேற்கு நாடுகளுக்கு புலம் பெயரப் பண்ணலாம்.

இவ்வாறு பல வழிகளிலும் தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு வந்து சேர்ந்துவிட்டால், இங்கு கோயில்களில் தேங்காய் உடைப்பதும், களியாட்டாங்கள் வைப்பதும், டின்னர் - டான்ஸ் வைப்பதுமாக புலம் பெயர் தேசியத்தை எல்லோரும் சேர்ந்து வளர்க்கலாம். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.. வேலை சொக்கில குத்தாமல் வாயில ஸ்ரைலா கவ்விப் பிடிச்சிருக்கினம்..! :Dஅதுசரி மேக்கப்புக்கு முன்னால பக்தி பேக்கப் தானே..! :(

குத்தினால் வலிக்காதா? :(:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குள் இருக்கின்ற சில நம்பிக்கைகளைச் சிதைப்பதன் மூலம், அல்லது அவர்களின் விருப்ப்ததிற்கு மாறாக நடப்பதன் மூலம் எதிரிகளை என்னமும் சம்பாதித்துக் கொடுக்கின்ற ஒரு வேலையைத் தான் இங்கு சிலர் செய்கின்றனர். நாம் இந்து என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் எந்த சமயத்திலும் எம்மக்களின் ஒவ்வொருபிரிவும் எம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டியதில்லை. அது எதிரிக்கு வாய்ப்பாக போய்விடும். சம்பந்தப்பட்ட அனைவரும் இதை உண்ர்ந்து பொறுப்புடன் இங்கு கருத்தெழுத வேண்டும்.

கோவில்கள், களியாட்டாங்கள், உல்லாசப் பணங்கள், ஊர்க் கொண்டாட்டாங்கள் என்று அநியாயமாகச் செலவு செய்வதைத் தவிர்த்து, தமிழீழப் போராட்டத்திற்கு உதவிட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

எல்லோருக்கும் இதே மனது தான் உள்ளது என நம்புகின்றேன். ஆனால் அது எப்போது விவாதமாகின்றது என்றால், தவறான வேறு கருத்துக்களை உட்புகுத்துவது தான். இங்கே திரும்பத் திரும்ப இந்துக்களையே சாடுவது கூட, சிலருடைய மனவெறியின் வெளிப்பாடோ, இஸ்லாமிய மிதவாதப் பற்றோ என்று நான் அறியேன்.

ஆனால் மக்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணி, அந்தக் கட்டமைப்பைச் சிதைப்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல. அது போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலே மலினப்படுத்துவது போலாகும். இப்படி எரிச்சல் ஊட்டி வெறுப்பை உண்டாக்குவதை விட, பொறுப்போடு நட்பாhகச் சொன்னால் பெறும் வெற்றி அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனின் தேசியம் என்ன என்பது பற்றி யாராவது சொல்லுங்களேன்?

தே+++++++++++++சி++++++++++++++++ய+++++++++++++++++++ம் :(

காலமடா சாமி. எல்லாம் எங்கட தலைவர் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கப் போய்.. அசைலத்தால வந்த மவுசுதாங்க. ஈழம் கிடைச்சுதோ இல்லையோ.. எங்கட ஆக்கள் வெள்ளக்காரனை தோற்கடிச்சு.. அங்கேயே ஈழத்தை உருவாக்கிடுவினம் போல எல்லோ இருக்குது..! :(:(

நெடுக்கு... நீங்கள் பாட்டுக்கு தண்ணியை நிப்பாட்ட சொன்னால் நாளைக்கு தமிழீழ மக்கள் படும் அவலத்தை, கோயில் ஐயர் மார் அடிக்கிற காசுகளின் தொகையை நினைத்து வாற கவலையை எப்பிடி மறக்கிறது....??

குறிப்பா தமிழீழ மக்களுக்காக உழைத்த அலுப்பை எப்பிடி போக்கிறதாம்...???

புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்ற வேணும்... அது மாதிரி, தமிழர் பேரவலத்தீயை தண்ணி ஊத்திதான் அணைக்க வேணும்...!! :D

புறக்கணி சிறீலங்கா மாதிரி புதுசு புதுசா சிந்திக்கிறீயள்...!! அதுமாதிரி இதுவும் வெற்றி அடையட்டும்...!!

எல்லோருக்கும் இதே மனது தான் உள்ளது என நம்புகின்றேன். ஆனால் அது எப்போது விவாதமாகின்றது என்றால், தவறான வேறு கருத்துக்களை உட்புகுத்துவது தான்.

ஆனால் மக்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணி, அந்தக் கட்டமைப்பைச் சிதைப்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல. அது போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலே மலினப்படுத்துவது போலாகும். இப்படி எரிச்சல் ஊட்டி வெறுப்பை உண்டாக்குவதை விட, பொறுப்போடு நட்பாhகச் சொன்னால் பெறும் வெற்றி அதிகம்.

உண்மை தான்... தேவையற்ற வீண் விவாதங்களால் பயனில்லை. இது எமது சமுதாயத்தையே பலவீனப்படுத்தும். ஆக்கபூர்வமான வழியில் கருத்துகளை தெரிவிப்பதே பயனுள்ளது.

அத்துடன், மற்றவரது கருத்தை அவருடைய நிலையில் இருந்து விளங்க முற்பட்டால் தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சனம் ஒருவேளைச் சாப்பாட்டுகே அல்லபடும்போது புலம்பெயர்ந்த நம்மவர்கள் செய்யும் களியாட்டக் கூத்துக்கள் அநியாயமானவை. மத நம்பிக்கை தேவைதான், அதுக்காக அதை ஒரு விளம்பர விடயமாகவோ அல்லது சிலரின் பணவளத்தைக் கூட்டும் நிகழ்வாகவோ ஆக்கிவிடுவது தவறு.

டின்னர் டான்ஸுகளும், கூத்துக்களும் இப்போது எல்லா புலம் பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகின்றன. அங்கங்கு இருக்கும் இந்தியர்களோடு சேர்ந்து இவர்களும் தமது தமிழர் என்கிற அடையாளத்தைத் தொலைத்து விட்டு இந்தியர்களாக ஆடுவதும் பாடுவதும் அருவருக்கிறது.

ரெண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களாக இருக்கட்டும் ரஷ்ஷியர்களாக இருக்கட்டும், அல்லது வியட்நாமியப் போரில் அந்நாட்டு மக்களின் தியாகமாக இருக்கட்டும் இவை எவையுமே எம்மை கவலைப்பட வைக்கப் போவதில்லை.

வன்னியில் நடக்கும் எந்தச் சம்பவமும் எம்மை சலனப்பட வைக்கப் போவதில்லை. யார் சாப்பிட்டால் என்ன விட்டால் என்ன? யார் செத்தாலென்ன விட்டாலென்ன? ராணுவம் எங்கு போனால்த்தான் என்ன? எமக்கு தேவையானதெல்லாம் எமது சந்தோஷமும், களியாட்டமும்தான்.

இண்டைக்குக் குசேலன் படம், நாளைக்கு எச்.பி.பாலசுப்ரமணியத்தின்ர இசை நிகழ்ச்சி, நாளண்டைக்கு கரிகரனின்ர இசை நிகழ்ச்சி( டிக்கெட் வித்தவரிட்டயஏ கழிவும் எடுத்து)எண்டு பாத்துக்கொண்டிருப்பம். ஏதும் பெரிசெண்டால் செய்தியில பாக்கலாம் தானே?????????

குறுக்கு

இது ஒரு பகுதிதான், மிச்சச்சத்தையும் போட்டா... இந்த யாழ்க்களம் தாங்காது. ஈழவிடுதலைப்போராட்டத்தின் தீர்க்கமான காலம் இது... இதை நழுவவிட்டால் மீண்டுமொரு சந்தர்ப்பம் வருமோ தெரியாது...

புலம்பேர்ந்த ********** கொஞ்சம் சிந்திக்கவேணும். வன்னில அடியாம் இஞ்ச அடியாம், 10 ஆமியாம் 100 ஆமியாம் எண்டு ஓடுப்பட்டு திரியாமல். செயல்வீரர்களாக இருப்பார்களா???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தூக்கு காவடி எடுக்கிறதாய் நேத்தி வைக்கப் போறன் .ஒரு கட்டிலிலை நான் படுத்திருந்தபடி கட்டிலை கட்டித்தொங்க விட்டால் சரிதானே

:( :( :D:lol::D

upeventsbigiu6.jpg

nriaus010104gi0.jpg

tmcpv6.jpg

tmc1sx2.jpg

04events031ed6.jpg

nriaus010105fu4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குத்தினால் வலிக்காதா? :(:(:D

பக்தி விசயம் அல்லோ??!! வலிச்சாலும் பரவாயில்லையெண்டு தாங்குவினம்..! :D ஆனால் சொக்கையில விழுற ஓட்டைக்கு என்ன செய்யுறது? அதாலதான் நாங்க கவ்வுறது..! :lol:

dsc09518il3.jpg

dsc09534ui7.jpg

dsc04023dd3.jpg

dsc09527am5.jpg

மாறி மாறி குறைசொல்லி மனங்களைக் கனக்கச் செய்து கல்மனம் ஆக்கும் முயற்சிகளின் கச்சிதமான அரங்கேற்றம்......

இவ்விரு காட்சிகளிலும் இத்தள நிர்வாகி மோகன் அண்ணா உள்ளார் என வைத்துக்கொள்வோம்.

அவரின் கலந்து கொள்ளும் நிகழ்வு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியமா?

பொதுப் பணிகளை அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைத்து கதைத்து விமரிசித்து பொதுப்பணிகளையே தடுக்கும் கைங்கரியமாகவே இது தெரிகிறது.

அண்மைய உதாரணமாக...

மடு ஆக்கிரமிக்கப்பட்டு தான்தோன்றித்தனமான திருத்தவேலைகளால் அழிவுகள் வெளிவருவது மறைக்கப்பட்டு பின் அமைச்சர் குழாம் மன்னார் சென்று அழுத்தம் கொடுத்தும் விழா நடத்தப்படவில்லை. அரச ஆதரவுடன் தமிழ்மக்கள் செல்லாவிட்டாலும் சிங்கள கத்தோலிக்கரும் விடுப்புப் பார்க்கும் கூட்டமுமென வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கூட்டம் கூட்டி பிரமாண்டமாகப் பிரசுரித்து விளம்பரப்படுத்தும் உத்தி விழா இல்லாததால் பிசுபிசுத்துப் போனது யாவரும் அறிந்ததே...

விழா நடத்தி "மடு விடுவிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு என பிரமாண்ட விளம்பரம் நடந்திருந்தால் எம் மனநிலை என்ன?

எதிலிருந்தும் நல்லனவற்றை எமக்காக்குவோம் தீயவற்றைத் தவிர்ப்போம்.

மற்றவருக்கு அறிவுரை கூறுவதை விட "நான் இதைத் தவிர்க்கத் தயார் நீங்கள் தயாரா?" என முன்னுதாரணமாகத் திகழ்வதே தற்காலத் அவசிய அவசரத் தேவையாக உள்ளது.

இதனை விடுத்து பல்லினைக் கிண்டி மற்றவர் மூக்கில் மாறி மாறிப் பூசுவோமானால்...........பதராகிப் போவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிலகளியாண்டங்களின் போது சேகரிக்கப்படும் நிதி தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதுமுண்டு. உதாரணமாக இலண்டனில் வெண்புறாவினரால் நடக்கப்பட்ட இன்னிசை நிகழ்வு. சில கோவில்களில் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி தாயகத்துக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

விழங்ககூடிய வகையில் விழக்கம் கொடுத்து.... விழங்கிய பின்னரும் விழங்காதோர் போல் வேசமிட்டு

வெறும் மாயை மட்டுமே விதைக்க நினைக்கிறார் சில விசமிகள். ஒற்றுமையென்பது எங்கணம் சாத்தியம்?

எல்லாவற்றுக்கும் போராடி போரடித்து போனதால்த்தான்..... போத்தலுடன் போரடிக்கின்றாரோ என்னமோ?

அது குற்றமெனபடுது......... விந்தை இங்குதான் உள்ளது???

நண்பர்களே நான் உங்களின் வாசகன்..... தேவையற்றதை சேர்த்து வைக்க தேவையென்ன?

என்பதே என் கேள்வி....... தேவையானதை தொலையுங்கள் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை.... அதை மதியுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.