Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக் கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

cemetry2004aee3.jpg

உயிர் முட்டி எழுகிறது உணர்வு.

காதுமடலை உராயும் காற்றின் வழியே

உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.

அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...

உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்

உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.

உமக்கான மொழியெடுத்து

உம்மோடு பேச முடியாது, ஊமையாகி

தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.

வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை

பொய் கலந்தென் புனைவிருப்பின்

சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.

கார்த்திகை 27, 1982

முதல் மாவீரன் மண்ணில் சரிந்து

இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.

காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்

கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.

இளமை தேய்ந்து, முதுமை எங்கள்

காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.

கார்த்திகைத் திங்கள் என்றாலே

கனக்கும் இதயத்திற்கு கல்லறைப் பாடல்கள்தான்

உயிர் உந்தும் விசையை உள்ளெடுக்க வைக்கிறது.

ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் உயிர்துளிகள் உருகி

உறுதி மொழி எடுக்கும் வரை ஓர்மமின்றி நலிகிறது.

உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்

நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,

எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்

ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.

ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி

அதிலும் உன்னத தோழர்களின் உயிர்ப்பூவனத்தில்

அந்தி சாய்கையிலே அமர்தலே பேரின்பம்.

தேவரீர்!,

உங்கள் கோபுர வாசலுக்குள் பாதம்பதிக்க வழியற்ற

புலம் பெயர்வின் பெருவாழ்வு...

அருவருப்புப் பிண்டம்போல் அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு

உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொரிகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏதோ புலம்பலுடன்

உங்களைக் காணவந்து,

ஆவி துடித்திருக்கும் உங்களின் ஆவலை முடக்கிவிட்டு,

'மறுபடியும் வருவோம்,

தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு

தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்

அடுத்த வருடம்... இன்னொரு சாட்டு சொல்லி

உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப் புறப்பட்டு விடுகிறோம்.

ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,

வல்லாண்மைச் சதி எங்கள் வாழ்வு அள்ளிக் கருக்குவதை

உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை கொண்டே

உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே

நிமிர்ந்தெழும் சக்தி கேட்க

செங்காந்தள் அள்ளிவந்து சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.

எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்

புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,

இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல்

உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?

ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று

அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!

இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று

கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!

பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம்

அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி

இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.

களத்துலவும் தோழர்கள் கட்டாயம்

வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.

கல்லறைத் தேவரீர்!,

உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்

நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்

புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்

இன்றுங்கள் முன்னிலையில் மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.

எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்

ஆழப்பதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை

உங்கள் மூச்சுக் காற்றில் மூசும் எரிமலையாய் ஏற்றுக.

சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று

எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக்காயங்களுடன்

உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்

அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.

இளைய தேவரீர்!

இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்

உறுதிமொழி இதுதான்.

Edited by valvaizagara

தங்களது இந்த கவிதை நேற்று தமிழ்முரசம் வானொலியில் (நோர்வே) கேட்க்க கிடைத்தது. கனடாவில் இருந்து வல்வைசகாறா என்று விஜய் சொன்னார். நீங்களாகத்தான் இருக்குமென நினைத்தேன் சரியாக போய்விட்டது. வரிகள் நிறைவேற நானும் உங்களுடன் வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரமான கருத்துக்களுடன் கவிதை யாக்குகிறீர்கள் சஹாறா. நன்றி!!!

கடவுளே... என்ன சொல்றது..

நீங்கள் மிகவும் அருமையாக உணர்ச்சி மழையில் தமிழமுதை வார்த்திருக்கிறீர்கள்..

நன்றிகள் பாராட்டுகள் வாழ்த்துகள்..

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலிருந்து குமுறும் உங்கள் கவி புரிகிறது, மா வீரரை ஆழமாகவே நேசிக்கிறீர்கள்.உங்கள்

குமுறும் எரிமலை ,எரிக்கும் சிங்க படையின் உயிர், கிடைக்கும் அன்னைக்கு திருமுடி, வரும் அந்த நாளும் வரும் .....

.என்று கூறி விடை பெறும் அக்கா. நிலாமதி .

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்

அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.

இளைய தேவரீர்!

இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்

உறுதிமொழி இதுதான்.

உன்மையில் உணர்வுகள் அடங்கிவிட்டது உன் கவி கேட்டு

பூமித்தாய் கேட்கும் உன் கவி புலர்ந்திடும் காலை மலர்ந்திடும் தேசம்

மாவீரர் கனவு நனவாகும் உன் கவியும் காவியமாகும்

Edited by கிருபா

மிக நன்றாக இருக்கின்றது கவிதை

"களத்துலவும் தோழர்கள் கட்டாயம்

வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.

கல்லறைத் தேவரீர்!,

உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்

நாங்களல்ல அவர்கள்தான். "

மிகச் சிறப்பான வரிகள். உங்களின் சொற் தேர்வும், எடுத்தியம்பும் உணர்வுகளும் நன்றாக இருக்கின்றது. வாசித்து முடித்த பின் கவிதை இட்டு சென்ற உணர்வின் இடைவெளிகளில் வலிகள் வந்து அமர்ந்து கொண்டது.

-நிழலி-

  • தொடங்கியவர்

நன்றி வாசகன் உங்கள் தகவலுக்கு.

நோர்வேயில் இயங்கும் தமிழ் முரசத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கவியுரையில் எடுத்த உறுதிமொழி நிறைவேற வேண்டுதல் செய்வது என்பதைக் காட்டிலும் செயலாற்றுவோம் என்பதே அதிகம் பொருத்தபாடு உடையதாக இருக்கும் வாசகன். அதற்கான வழிகளில் எங்கள் நோக்குகளை பலப்படுத்துவோம்.

காத்திரமான கருத்துக்களுடன் கவிதை யாக்குகிறீர்கள் சஹாறா. நன்றி!!!

விளையாட்டுத்தனமாக இருக்கமுடியாத காலகட்டத்தில் அல்லவா எங்கள் வாழ்வு இருக்கிறது சுவி.

கடவுளே... என்ன சொல்றது..

நீங்கள் மிகவும் அருமையாக உணர்ச்சி மழையில் தமிழமுதை வார்த்திருக்கிறீர்கள்..

நன்றிகள் பாராட்டுகள் வாழ்த்துகள்..

நானல்ல விகடகவி. எனை இவ்வண்ணம் ஆக்குபவர்கள் என் மாவீரத் தோழர்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலிருந்து குமுறும் உங்கள் கவி புரிகிறது, மா வீரரை ஆழமாகவே நேசிக்கிறீர்கள்.உங்கள்

குமுறும் எரிமலை ,எரிக்கும் சிங்க படையின் உயிர், கிடைக்கும் அன்னைக்கு திருமுடி, வரும் அந்த நாளும் வரும் .....

.என்று கூறி விடை பெறும் அக்கா. நிலாமதி .

மாவீரர்களை நேசிப்பதில் எனக்கு அதிகம் உங்களுக்குக் குறைவு என்று பார்க்க முடியாது நிலாமதியக்கா. வெளிப்படுத்தும் விதத்தில் மட்டுமே மாறுபடுகிறது. உங்களுக்குள்ளும் வார்த்தைகளுக்குள் வெளிவராமல் ஆழமனதில் அமர்ந்திருப்பார்கள். தேடிப் பாருங்கள் உங்களுக்குள் இருக்கும் அவர்களின் நினைவுத் தேக்கங்கங்கள் பிரமிப்பைத் தரும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்

அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.

இளைய தேவரீர்!

இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்

உறுதிமொழி இதுதான்.

உன்மையில் உணர்வுகள் அடங்கிவிட்டது உன் கவி கேட்டு

பூமித்தாய் கேட்கும் உன் கவி புலர்ந்திடும் காலை மலர்ந்திடும் தேசம்

மாவீரர் கனவு நனவாகும் உன் கவியும் காவியமாகும்

60 ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கும் ஒரு இன ஒடுக்குமுறையை எதிர்த்தும், எங்கள் பாரம்பரிய வாழ்விடங்களை மீட்கவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் போராட்டத்தை தெரிந்தும் தெரியாத நோக்கில் சர்வதேசம் அசட்டையாக இருக்கிறது. எங்கள் மக்களின் வாழ்வு அவலங்கள் குறைவதற்கான எந்த முனைப்பையும் வல்லாண்மை நாடுகள் உருவாக்கி தருவதற்கு முன்வராத நிலையில், எங்கள் வாழ்வையும் விடுதலையையும் நாங்களே தீர்மானிக்கவேண்டிய நிலையிலேயே உள்ளோம். எங்கள் வல்லமையே எங்கள் தாயை மீட்கும்.எங்களினம் மாற்றான் நாட்டைக் கேட்கவில்லை. எங்கள் மண்ணைத்தானே கேட்கிறோம். எங்கள் வாழ்வைத்தானே கேட்கிறோம்.மீட்போம் இது எமக்கான வாசகம். நன்றி கிருபா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

மிக நன்றாக இருக்கின்றது கவிதை

"களத்துலவும் தோழர்கள் கட்டாயம்

வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.

கல்லறைத் தேவரீர்!,

உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்

நாங்களல்ல அவர்கள்தான். "

மிகச் சிறப்பான வரிகள். உங்களின் சொற் தேர்வும், எடுத்தியம்பும் உணர்வுகளும் நன்றாக இருக்கின்றது. வாசித்து முடித்த பின் கவிதை இட்டு சென்ற உணர்வின் இடைவெளிகளில் வலிகள் வந்து அமர்ந்து கொண்டது.

-நிழலி-

நன்றி நிழலி.

சொற்களை நான் தேர்வு செய்வதில்லை. உள்ளத்தின் விசிப்பில் தன்னால் வந்து அமர்ந்து கொள்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி சகாறா. எமது போராட்டத்தை இவ்வளவு தூரம் வெற்றி பாதையில் கொண்டு வந்தவர்கள் மாவீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவரீர்!,

உங்கள் கோபுர வாசலுக்குள் பாதம்பதிக்க வழியற்ற

புலம் பெயர்வின் பெருவாழ்வு...

அருவருப்புப் பிண்டம்போல் அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு

உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொறிகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏதோ புலம்பலுடன்

உங்களைக் காணவந்து,

ஆவி துடித்திருக்கும் உங்களின் ஆவலை முடக்கிவிட்டு,

'மறுபடியும் வருவோம்,

தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு

தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்

என்னத்தை சொல்லுறது எனக்குள் நானே மெளனமாகிக் கொள்கிறேன். வரிகளிற்கு வணக்கங்கள். :lol:

மாவீரர்கள் பற்றிய உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை அழகிய கவிவரிகளாக அள்ளித்தெளித்துள்ளீர்கள். நன்றிகள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகளை ஊட்டி

உயிர் வலியை உணர்த்தும்

உங்கள் கவிதைக்கு...

நன்றிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகாய் உள்ளது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகின்றது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

எங்கள் ஒவ்வொருவரினதும் மன உணர்வை உங்கள் வரிகளில் சொன்ன விதம் மிக நன்று.....

உண்மையில் நெஞ்சம் கனக்க வைத்துவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள்..

இளங்கவி

வணக்கம் வல்வை சகாரா

உங்கள் கவிதைகளை நோர்வே தமிழ்முரசம் வானொலியில் மாவீரர் நாளன்று ஒலிபரப்பியவன் நான்தான். உங்கள் அனுமதி இன்றி உங்கள் பெயருடன் அதனை வாசித்திருந்தேன். கவிதைக்கு நன்றி.

நட்புடன் பரணீதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி சகாறா. எமது போராட்டத்தை இவ்வளவு தூரம் வெற்றி பாதையில் கொண்டு வந்தவர்கள் மாவீரர்கள்.

ஆமாம் நுணாவிலான். அவர்களின் உயிர்க் கொடையே இன்று எங்கள் வாழ்வின் உரமாகி இருக்கிறது. தாயகத்திற்கு மட்டுமல்ல முழுத்தமிழினத்திற்கும் அவர்கள் உரம் ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வரவிற்கும் பதிவிற்கம் நன்றி நுணா.

என்னத்தை சொல்லுறது எனக்குள் நானே மெளனமாகிக் கொள்கிறேன். வரிகளிற்கு வணக்கங்கள். :o

நீங்கள் மெளனமாகும் காரணம் எனக்குத் தெரியும் .

உங்கள் வரவிற்கும், பதிவிற்கும் நன்றி சாத்திரி.

மாவீரர்கள் பற்றிய உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை அழகிய கவிவரிகளாக அள்ளித்தெளித்துள்ளீர்கள். நன்றிகள் :)

நன்றி மல்லகை வாசம்.

உணர்வுகளை ஊட்டி

உயிர் வலியை உணர்த்தும்

உங்கள் கவிதைக்கு...

நன்றிகள்!

பறவைகள், உயிர்வலி என்பது என்னைப் பொறுத்தவரை இன்று நேற்றல்ல அறிவு தெரிந்த நாளில் இருந்து வளர்ந்து கொண்டே செல்கிறது.

தாயகம் மீட்போம் என்ற நம்பிக்கை ஒன்றுதான் எமக்கானதாக இருக்கிறது.

அழகாய் உள்ளது என்று மட்டுமே சொல்லத் தோன்றுகின்றது...

இது அப்பழுக்கற்ற கொடையின் அழகு. எழுத எழுத எழுத்திற்கும் எழில் பிறக்கும்.

valvaizagara

எங்கள் ஒவ்வொருவரினதும் மன உணர்வை உங்கள் வரிகளில் சொன்ன விதம் மிக நன்று.....

உண்மையில் நெஞ்சம் கனக்க வைத்துவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள்..

இளங்கவி

உங்களுக்குள் இருக்கும் எங்கள் மாவீரஉறவுகளே உங்கள் உணர்வுகளில் முகம் காட்டுகிறார்கள். அவர்கள் விழிதிறக்கும் போதெல்லாம் உங்கள் இதயம் கனத்துப் போகும். நான் புலம்புவதாக எண்ணாதீர்கள் மறுபடியும் உங்கள் எண்ணங்களை மீட்டிப் பாருங்கள் இளங்கவி. உங்கள் வரவிற்கும் பதிவிற்கும் நன்றி இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வை சகாரா

உங்கள் கவிதைகளை நோர்வே தமிழ்முரசம் வானொலியில் மாவீரர் நாளன்று ஒலிபரப்பியவன் நான்தான். உங்கள் அனுமதி இன்றி உங்கள் பெயருடன் அதனை வாசித்திருந்தேன். கவிதைக்கு நன்றி.

நட்புடன் பரணீதரன்

நன்றி பரணீ

உங்கள் ஒலிவரப்பில் எங்கள் உணர்வுகளைத் தவழ விட்டதற்காக உங்களுக்கு எனது நன்றி உரைக்கிறேன். இதற்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை பரணீ.

கவிதைக்கு நன்றி வல்வை சகாரா.

எங்கள் கண்மணிக் குஞ்சுகள் வரிசையாக மீளாத்துயில் கொள்ளும் காட்சியை காணும் மன வலிமை என்னிடம் இல்லை.

கொண்ட நேசத்தை விளக்க வார்த்தைகளும் இல்லை.

உங்கள் வரிகள் நெஞ்சை அழுத்துகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் தலைப்பும் உணர்வு மயமானதாக இருக்கிறது. ஒருபேப்பர் பத்திரிக்கையிலும் பிரசுரித்திருந்தார்கள்.தொடர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி வல்வை சகாரா.

எங்கள் கண்மணிக் குஞ்சுகள் வரிசையாக மீளாத்துயில் கொள்ளும் காட்சியை காணும் மன வலிமை என்னிடம் இல்லை.

கொண்ட நேசத்தை விளக்க வார்த்தைகளும் இல்லை.

உங்கள் வரிகள் நெஞ்சை அழுத்துகின்றன.

உங்கள் வார்த்தைகளிலேயே நீங்கள் அவர்களில் வைத்திருக்கும் பாசத்தை அறியமுடிகிறது. உங்கள் உணர்வுகளக்குச் சிரம் தாழ்த்துகிறேன்.

கவிதையும் தலைப்பும் உணர்வு மயமானதாக இருக்கிறது. ஒருபேப்பர் பத்திரிக்கையிலும் பிரசுரித்திருந்தார்கள்.தொடர??்டும் உங்கள் தமிழ்ப்பணி.

நன்றி புலவர்.

ஒரு பேப்பர் நிர்வாகத்தினருக்கு,

எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல் எழுதுவதற்கான முழுப்பலத்தையும் பிரயோகிக்க இடம் தந்திருக்கும் உங்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றி உரைக்கிறேன்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

cemetry2004aee3.jpg

உயிர் முட்டி எழுகிறது உணர்வு.

காதுமடலை உராயும் காற்றின் வழியே

உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.

அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...

உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்

உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.

உமக்கான மொழியெடுத்து

உம்மோடு பேச முடியாது, ஊமையாகி

தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.

வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை

பொய் கலந்தென் புனைவிருப்பின்

சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.

கார்த்திகை 27, 1982

முதல் மாவீரன் மண்ணில் சரிந்து

இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.

காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்

கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.

இளமை தேய்ந்து, முதுமை எங்கள்

காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.

கார்த்திகைத் திங்கள் என்றாலே

கனக்கும் இதயத்திற்கு கல்லறைப் பாடல்கள்தான்

உயிர் உந்தும் விசையை உள்ளெடுக்க வைக்கிறது.

ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் உயிர்துளிகள் உருகி

உறுதி மொழி எடுக்கும் வரை ஓர்மமின்றி நலிகிறது.

உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்

நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,

எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்

ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.

ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி

அதிலும் உன்னத தோழர்களின் உயிர்ப்பூவனத்தில்

அந்தி சாய்கையிலே அமர்தலே பேரின்பம்.

தேவரீர்!,

உங்கள் கோபுர வாசலுக்குள் பாதம்பதிக்க வழியற்ற

புலம் பெயர்வின் பெருவாழ்வு...

அருவருப்புப் பிண்டம்போல் அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு

உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொரிகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏதோ புலம்பலுடன்

உங்களைக் காணவந்து,

ஆவி துடித்திருக்கும் உங்களின் ஆவலை முடக்கிவிட்டு,

'மறுபடியும் வருவோம்,

தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு

தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்

அடுத்த வருடம்... இன்னொரு சாட்டு சொல்லி

உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப் புறப்பட்டு விடுகிறோம்.

ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,

வல்லாண்மைச் சதி எங்கள் வாழ்வு அள்ளிக் கருக்குவதை

உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை கொண்டே

உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே

நிமிர்ந்தெழும் சக்தி கேட்க

செங்காந்தள் அள்ளிவந்து சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.

எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்

புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,

இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல்

உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?

ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று

அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!

இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று

கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!

பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம்

அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி

இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.

களத்துலவும் தோழர்கள் கட்டாயம்

வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.

கல்லறைத் தேவரீர்!,

உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்

நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்

புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்

இன்றுங்கள் முன்னிலையில் மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.

எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்

ஆழப்பதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை

உங்கள் மூச்சுக் காற்றில் மூசும் எரிமலையாய் ஏற்றுக.

சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று

எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக்காயங்களுடன்

உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்

அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.

இளைய தேவரீர்!

இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்

உறுதிமொழி இதுதான்.

எந்த வேளையில் இந்தக் கவிதையை யாத்தேனோ.....

Edited by valvaizagara

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,

வல்லாண்மைச் சதி எங்கள் வாழ்வு அள்ளிக் கருக்குவதை

உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை கொண்டே

உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

எங்களது..... தூக்கம் வாராமல் அவதிப்படும் நேரங்களும், தொண்டைக்குழிக்குள் உண்ட உணவு இறங்கமறுக்கும் அவஸ்தைகளும், நெஞ்சை அமுக்கும் பாரங்களும் என இப்பொழுது நமக்குள்ளே நாம் புளுங்கும் உணர்வினையும் எம் மெளனத்தில் உணர்ந்து கொள்வீர் என வேண்டி...., இடிக்கப்பட்ட உங்கள் கல்லறைத் தரைமீது கண்ணீரால் மண் நனைக்கின்றோம்!

உணர்வுகளை அப்படியே உள்வாங்கிய வரிகள் .....அருமை அக்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

cemetry2004aee3.jpg

உயிர் முட்டி எழுகிறது உணர்வு.

காதுமடலை உராயும் காற்றின் வழியே

உங்கள் மூச்சின் இளஞ்சூடு படர்கிறது.

அருவமாய் வந்தெங்கள் அருகிருக்கிறீர்கள்...

உப்பேரி கரையுடைக்கும் எங்கள் விழிகளுக்குள்

உக்கிர நெருப்பை தேடுகிறீர்கள்.

உமக்கான மொழியெடுத்து

உம்மோடு பேச முடியாது, ஊமையாகி

தலை குனிந்தே உங்கள் முன் குற்றக் கூண்டேறி நிற்கிறோம்.

வெற்று வார்த்தைகளால் கவிபாட முடியவில்லை

பொய் கலந்தென் புனைவிருப்பின்

சத்திய நெருப்பு சுத்தி வந்து தீய்க்கிறது.

கார்த்திகை 27, 1982

முதல் மாவீரன் மண்ணில் சரிந்து

இன்றுடன் ஆண்டு 27 ஆகிவிட்டது.

காலநதி என்னவோ ஈழவர் வாழ்வைக்

கரைத்தபடி வேகமாய் நகர்கிறது.

இளமை தேய்ந்து, முதுமை எங்கள்

காதோரக் கேசங்களில் கடிதம் எழுதுகிறது.

கார்த்திகைத் திங்கள் என்றாலே

கனக்கும் இதயத்திற்கு கல்லறைப் பாடல்கள்தான்

உயிர் உந்தும் விசையை உள்ளெடுக்க வைக்கிறது.

ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் உயிர்துளிகள் உருகி

உறுதி மொழி எடுக்கும் வரை ஓர்மமின்றி நலிகிறது.

உங்களைத் தரிசிக்கவரும் ஒவ்வொரு கணமும்

நேற்றைய நாட்களின் தோழமைச் சிரிப்பும்,

எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைத் துளிர்ப்பும்

ஆழப்பரவி எங்கள் சுயத்தை எரிக்கின்றன.

ஆலய தரிசனம் ஆன்மாவிற்கு நிம்மதி

அதிலும் உன்னத தோழர்களின் உயிர்ப்பூவனத்தில்

அந்தி சாய்கையிலே அமர்தலே பேரின்பம்.

தேவரீர்!,

உங்கள் கோபுர வாசலுக்குள் பாதம்பதிக்க வழியற்ற

புலம் பெயர்வின் பெருவாழ்வு...

அருவருப்புப் பிண்டம்போல் அகத்தில் நெளிகிறது.

உங்கள் உயிர்க்கொடையின் செறிவு

உள்ளப்புண்களில் அமிலம் அள்ளிச் சொரிகிறது.

ஒவ்வொரு வருடமும் ஏதோ புலம்பலுடன்

உங்களைக் காணவந்து,

ஆவி துடித்திருக்கும் உங்களின் ஆவலை முடக்கிவிட்டு,

'மறுபடியும் வருவோம்,

தாயக விலங்கறுத்த தேமதுரச் சேதி கொண்டு

தித்திக்க பேசுவோம்" என்றும் வாக்களிக்கிறோம்

அடுத்த வருடம்... இன்னொரு சாட்டு சொல்லி

உங்கள் வாய்களுக்குப் பூட்டுப்போட்டுப் புறப்பட்டு விடுகிறோம்.

ஈழவர் விதி இதுவென்றாகிக் கிடக்கிறது.

இன்றும் வந்துள்ளோம்...

மௌனப்பதில்களை மட்டுமே சுமந்தபடி,

வல்லாண்மைச் சதி எங்கள் வாழ்வு அள்ளிக் கருக்குவதை

உணர்வீர்கள் என்ற பெரு நம்பிக்கை கொண்டே

உங்கள் முன்றலில் கூடியுள்ளோம்.

ஏக்கத்தோடு பார்க்கும் உங்களிடமே

நிமிர்ந்தெழும் சக்தி கேட்க

செங்காந்தள் அள்ளிவந்து சிரம் தாழ்த்தி நிற்கிறோம்.

எங்களைப் பார்த்து ஏமாற்றம் அடையாமல்

புன்னகைப் பூவெறிந்து நிற்கிறீர்களே,

இன்னும் அறியாமையில் துவளும் எங்கள் மேல்

உங்களுக்கு இவ்வளவு பற்றுதலா?

ஏளனப்பட்டதாய் ஈழவள் ஆகலாகாதென்று

அக்கினிச் சிறகெடுத்த அவதார புரசரே!

இயலாமை எங்களின் இருப்பாகக் கூடாதென்று

கல்லறை மேனியராய் கருக்கொண்டோரே!

பெருந்தாய்த் தமிழகத்தின் உறவுக்கொடியெலாம்

அணிதிரண்டு எமை அரவணைக்கும் ஒரு செய்தி

இன்றுங்கள் காதுபாயும் முதல் மதுரம் ஆகிடுக.

களத்துலவும் தோழர்கள் கட்டாயம்

வெற்றிச் செய்தியோடு விரைந்தோடி வருவார்கள்.

கல்லறைத் தேவரீர்!,

உங்கள் ஏக்கத்தைத் தீர்க்கும் பெருவரம் பெற்றவர்கள்

நாங்களல்ல அவர்கள்தான். - எனினும்

புலம்பெயர்வின் மோகத்தில் அள்ளுண்டு போகாமல்

இன்றுங்கள் முன்னிலையில் மீண்டெழும் வரங்கேட்டு நிற்கிறோம்.

எங்கள் நெஞ்சக் கூட்டிற்குள்ளும்

ஆழப்பதையுண்டிருக்கும் விடுதலைப் பொறியை

உங்கள் மூச்சுக் காற்றில் மூசும் எரிமலையாய் ஏற்றுக.

சாட்டுரைத்தே கேடுற்றர் தமிழச் சாதியென்று

எங்கள்சந்ததி சரிதம் எழுதக்கூடாது.

ஆண்டுக்கொருமுறை வந்து உங்களை ஏக்கக்

கூண்டுக்குள் அடைக்க இனியும் எம்மால் முடியாது.

உங்கள் தாகம் தீர்க்காது ஊமைக்காயங்களுடன்

உமைவிட்டுச் செல்வது இதுவே இறுதியாகட்டும்.

அடுத்த வருகை உங்களைக் காணவெனில்

அன்னை திருமுடி தரித்த பின்னர்தான்.

இளைய தேவரீர்!

இன்றுங்கள் கோட்டத்தில் எடுக்கும்

உறுதிமொழி இதுதான்.

வல்வை சகாராஅக்காவுக்கு

எங்கள் உள்ளக் குமுறல்களை உங்கள் வரிகளில் வடித்தமைக்கு மிக்க நன்றிகள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.