Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை இன்று காலை மரணம்

தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று காலமானதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கை மரணமடைந்துள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இச்செய்தியால் உலக மக்கள் அனைவரும் கண்கலங்கிவுள்ளனர்.

http://meenakam.com/?p=2405

Edited by விடியல்

  • Replies 78
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காச் சிறையில் என்ன கொடுமைகளை அனுபவித்தரோ தலைவரின் தகப்பனார். எனது கண்ணீர் அஞ்சலிகள்.

ஈன்ற பொழுதிலும் பெரிதுவத்து

தன் மகனைச் சான்றோன் என

சேர்ந்த தந்தையே

ஈழத்தின் விடுதலைக்காய்

பகைச் சிறையில் நீங்கள் செய்த தியாகம்

வீண்போகாது

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தலை நிமிர்த்தும் கணத்தில் மீண்டும் ஒரு முறை

உறுதி எடுக்கின்றேன்.

உங்கள் கனவு நனவாகும்

தமிழ் ஈழம் நிச்சயம் மலரும்.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று சாவடைந்துளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து அரசாங்க தடுப்பு முகாமிற்கு மக்களுடன் சென்றனர் அங்கிருந்து பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்டனர். இவர்களை நாலாம் மாடியில் வைத்து விசாரணை செய்ததாக அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. தொல் திருமா இலங்கை சென்றபோது கோத்தபாயவிடம் இவர்களை பார்வையிட கேட்டபோது அவர்கள் நலமாக இருப்பதாக கூறப்பட்டது. இதே வேளை இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இவர்களின் உடல் நிலைகள் தொடர்பில் பலர் தொடர்பு கொண்டும் கேட்டபோது இராணுவத்தினரால் எதுவும் கூறப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை கூட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/news

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குற்றமும் செய்யாத வயதானவர்களை இராணுவ சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைத்து படுகொலை செய்வதும்.. இந்த உலகில் ஜனநாயகம்..! இந்த ஜனநாயகத்துக்கு என்று முடிவுரை எழுதப்படுகிறதோ அன்றே அநியாயங்களில் பாதிக்கு முடிவும் பிறக்கும்..!

சிங்களப் பேரினவாதம் இதோடும் திருப்தி கொள்ளப் போவதில்லை..!

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா..! தேசிய தலைவரின் உறவுகளுக்கு எமது ஆறுதல்களையும் பரிமாறிக் கொள்கின்றோம்..!

கண்ணீர் அஞ்சலிகள்.

சுயாதீன மருத்துவர்களால் பூவுடல் பரிசோதனை நடைபெற்று, உறவினர்களிடம் உடல் கையளிக்கப் படாவிட்டால், இவ்வளவு முதுமையிலும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, மருத்துவம் மறுக்கப்பட்டு, அடைத்து வைத்திருந்த கொடியவர்களின் கொடுமைகள் காரணமாகவே அவர்கள் மரணித்ததாக மனிதாபிமானம் கொண்ட அனைவராலும் கருதப்படும்.

கொடுங்கோல் ஆட்சியாளர் மத்தியில் சிறுதுளி மனிதாபிமானம் உள்ளவர்கள் யாராவது இருப்பின் அவரது மனைவியை உடனடியாக விடுவிக்க வேண்டும். உறவினர் பொறுப்பெடுக்க முன்வராவிட்டால், இடம்பெயர்க்கப்பட்ட முதியவர்களை பராமரிக்கும் வவுனியா சிவன் கோவில் முதியோர் இல்லம், தெல்லிப்பளை முதியோர் இல்லம், மன்னார் அகில இலங்கை இந்துமாமன்ற முதியோர் இல்லம், கொழும்பில் உள்ள பல முதியோர் இல்லம் போன்ற ஒன்றில் அவர்களை ஒப்படைக்க வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

என, அறத்துப்பால் - இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல் பகுதியில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவரின் தந்தையாரின் சீரிய வளர்ப்பால் தனது தந்தைக்கு பெரும் புகழை அளித்துள்ளார் நமது தலைவர் அவர்கள்.

தலைவர் அருகில் நின்று செய்ய இயலாத காரியங்களை நாம் மனதில் ஏந்தி செய்வோமாக.

அவருடைய தந்தையாரின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலிகள், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

துணைவியாரை தயவு செய்து கனடாவில் அவருடைய மகளிடம் அனுப்பி இராசபக்ச ஒரு புண்ணியம் தேடட்டும்.

... கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை ..... http://www.eelanatham.net/news

சிறு திருத்தம்.

அவர்கள் இருவரும் மோதல் வலயத்தில் சரணடையவில்லை.

செட்டிகுளம் (வலயம் - நாலு) முகாமில், முதியோர் பகுதியில் சிலநாட்கள் இருந்தபோது, ஜூன் மாதத்தில் சிங்கள பாதுகாப்புப் படையால் இனங்காணப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டனர்.

பின்னர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கேள்வி. முகாமிலுள்ள அனைத்து முதியவர்களும் பல மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டாலும், இவ்விருவரும் அனைத்து மனிதாபிமான நியதிகள் மற்றும் சட்டங்களுக்கு புறம்பாக, ஜனநாயக போர்வையில் இயங்கும் மிலேச்சர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததில், கீழ்தர வேளைகளில் வல்ல, உலகின் மாபெரும் போலி ஜனநாயக நாட்டின் பங்கும் உள்ளதாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று சாவடைந்துளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவம் கூறுகின்றது.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை தமிழீழ தேசிய தல்கைவரின் தந்தையும் , தாயும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news

தமிழினத்தை நிமிரவைத்த

ஒரு தானைத் தலைவனை

பெற்றெடுத்த திருமகனே

தங்கள் ஆத்மா சாந்தியடைய

பிரார்த்திக்கிறோம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே!

இவரது இறப்புத் தொடர்பான சுமந்திரமான விசாரணைக்குக் கோருதல், வயோதிபர்களைத் தடுத்துவைத்தல் போன்ற நீதிக்குப் புறம்பான இந்த நடவடிக்கைகளை வெளிக்கொணர ஆவண செய்ய முன்வர வேண்டும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களின் தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

தமிழினத்தின் தலைமகனை, முதல்மகனை தந்த பெருமகனே நன்றி அய்யா!

Edited by காவாலி

தமிழீழ தேசீயத் தலைவர் அவர்களின் தந்தையார் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.சிங்கள காடையர்கள் வயதான முதியவர்களையும் சித்ரவதை செய்து இலங்கைத் தீவின் ஒற்றுமையை கட்டிக் காக்கட்டும்.எழவெடுத்த பனியா,பார்ப்பனீய இந்திய ஜனநாய்கம் கைகொட்டி சிரிக்கட்டும்.சோனியா,ராகுல் மட்டும் வாழ்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முதியவரை கூடவிடவில்லை ,

உலகம் எம்மை திரும்பியே பார்க்கவில்லை ,

மனிதாபிமானமே ,உண்மையே ,இரக்கமே நீ இல்லை ஏனென்றால் நீ இயற்கை எய்து விட்டாய்

தமிழினமே உனக்கு ஆறுதல் சொல்ல போவது யார்?

எமக்கு ஒரு தேசிய தலைவரை தந்த அந்த பெரியவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ,

கண்ணீருடன்

தமிழ்முரசு

Edited by தமிழ்முரசு

நன்றி திருத்தப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசீயத் தலைவர் அவர்களின் தந்தையார் மரணத்திற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

தேசிய தலைவரின் உறவுகளுக்கு எமது ஆறுதல்களையும் பரிமாறிக் கொள்கின்றோம்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சிறைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஆதலால் உரிய விசாரணைகள் நடைபெற்று நீதி வழங்பப் பட வேண்டும். முதியர்வர்கள் பலரை விடுவித்த போதும் தேசியத் தலைவரின் பெற்றோரை 4ம் மாடியில் வைத்து சித்திரவதை செய்தது மிகக் கொடூரமானதாகும்.

ஈழத்தமிழினத்தை தலை நிமிரச்செய்த பிள்ளையைப் பெற்று வளர்த்து தமிழினத்தின் கைகளில் கொடுத்த அந்த மாமனிதனின் மறைவுக்கு எனது நினைவு வணக்கங்கள்.தேசியத் தலைவரின் குடும்பத்தாருடன் எனது சோகத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களின் தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

தமிழர் வரலாற்றில் நிகரில்லாத் தலைவரைப் பெற்றுத் தந்த வேலுப்பிள்ளை அவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

aniCandle.gif

தலைவர் அவர்களின் தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா..!

தேசிய தலைவரின் உறவுகளுக்கு எனது ஆறுதல்களையும் பரிமாறிக் கொள்கின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் இராணுவத் தடுப்புக்காவலில் இருந்தபோது நேற்றிரவு மரணமானார்.

http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zB2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

velupillai%20prabhakaran%20family.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பெரியவரின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தேசியத்தலைவரின் தந்தையாரின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலிகள், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

தேசியத் தலைவரின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கு எனது சோகத்தையும் ஆறுதல்களையும் பரிமாறிக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் அவர்களின் தந்தையாரின் மறைவு கலங்க வைக்கிறது. கண்ணீர் அஞ்சலிகள்..!

தலைவா உன் தந்தைக்கு என் உயிரினும் மேலான அனுதாபங்கள்..

சிவாஜிலிங்கம் நீர்(உமக்கு இலகு)மகின்த மூலமாக அல்லது வேறு வழியிலேனும் பூதவுடலை கனடாவிலுள்ள மகளிடம் கொடு, நான் உனது அடிமை அன்றிலிருந்து,இது எனது இரங்கல் செய்தியாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.