Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி

Featured Replies

இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

அனைவருக்கும் மீண்டும் அன்பு கலந்த நன்றிகள். வணக்கம்.

யாழோடு பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை.

யாழை உருவாக்கி நிர்வாகித்த மோகனுக்கும் இளைஞனுக்கும் மட்டுறுத்தினர்களுக்கும் யாழுக்கு மெருகூட்டிய உறவுகளுக்கும் நன்றிகள்.

இத்தனை காலம் யாழில் தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்ட மோகன் வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுடன் இணைந்திருந்த நாட்களை............மாதங்களை.............. வருடங்களை மறக்க முடியவில்லை.

மனதுக்கு ஆறுதல் தந்த யாழ்களத்துக்கும் நிர்வகித்த மோகனுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தளம் மூடப்படுகிறது என்பதை அறிந்த போது ஒருகணம் அதிர்ச்சியில் எதுவும் செய்ய முடியவில்லை.சாதரணமாக வேலையிடத்தில் நான் யாழுக்குள் நுழைவதில்லை ஆனால் இன்று மனசு ரொம்ப பாரமாக உணர்கிறேன்.எனது நெருங்கிய சொந்தம் ஒன்றை இழக்கின்ற உணர்வு.யாழ் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே எனது ஆசை.எப்பிடிஎன்றாலும் யாழை உருவாக்கி நிர்வகித்த மோகன் அண்ணாவுக்கும் மட்டிறுத்தினர்கள் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Edited by vathavuran

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடங்களாக எங்களுடன் வந்த யாழ் இணையம் எங்களை விட்டுப் பிரியப் போகிறதோ என்ற கவலை. எனினும் 5 வருடங்களாக தாயகத்தில் இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு தந்த யாழுக்கு நன்றி. யாழின் உருவாக்கி நடாத்திய மோகன், இளைஞன், மற்றைய எல்லா நிற்வாகிகளுக்கும் நன்றி. முள்ளிவாய்க்காலோடு ஒவ்வொன்று ஒவ்வான்றாக இழந்து கொண்டிருக்கிறோம்.

ஐந்து வருடங்களாக யாழை வாசிக்கிறன். கருத்து எழுதினதில்லை. நிறைய விடயங்களை அறியகூடியதாக இருந்தது. அன்றாட வாழ்வில் யாழிற்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வெறுமையை உணர்கிறேன். கஷ்டமாக இருக்கிறது. யாழை மிகச் சிறப்பாக நடத்திய மோகனிற்கும் நிர்வாகதினர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் எனக்கு ஒரு ஆசான்.

இணையத் தமிழ் கற்றுத் தந்தது யாழ்.

வலைப்பூ உலகம் காட்டியது யாழ்.

ஆக்கங்களைப் படைக்க தூண்டியது யாழ்.

கருத்துச் சண்டை பிடிக்க வைச்சு விளக்கங்களை தெளிவுகளை தந்தது யாழ்.

சமூகத்தின் இரண்டாம் மூன்றாம் பக்கங்களை நான் காண வைச்சது யாழ்.

நல்ல மனிதர்களில் இருந்து புழுகர்கள் வரை வந்து போகக் காண வைச்சது யாழ்.

சில நண்பர்களை காட்டியது யாழ்.

எல்லாவற்றிற்கும் மேலாக தினமும் ஊரை உலகை காட்டியது யாழ்.

இப்படி இன்னும் இன்னுமாக என் வாழ்வின் ஒரு அத்தியாயமாக நிற்கிறது யாழ்.

யாழை இழப்பதென்பது.. கடினமானது.. பலமானது.. தாக்கமானது.

எதுஎப்படியோ இத்தனையையும் தந்த யாழையும் அதனை உருவாகி நிர்வகித்த அனைவரையும் அவர்களின் பொன்னான நேரத்தை எமக்காக சமூகத்திற்காக தேசத்திற்காக செலவிட்டதற்கு நன்றிகள் சொல்லி கட்டாது. இருந்தாலும் சொல்வது கடமை.

நன்றி யாழ். எப்போதும் எம் நினைவோடு நீ இருப்பாய். நீ மீளும் வரை நாம் காத்திருப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீண்டும் வலம் வர வேண்டும் அதுதான் எனது விருப்பம்,ஏன் இந்த முடிவு? மாலை வேளையில் தேனீர் அருந்தாமல் இருப்பதுண்டு ஆனால் யாழ் பார்க்காமல் இருப்பதில்லை ,அவதாரங்கள் பல எடுத்து கிறுக்கி இன்பம் கண்டேன்,

புத்தன் என்ற பெயரில் கதை என்ற நினைப்பில் பலகிறுக்களை செய்து உறவுகள் பலரை பெற வாய்ப்பளித்த யாழ் இணையத்தினருக்கு நன்றிகள்

கஷ்டமாக இருக்கிறது. யாழை மிகச் சிறப்பாக நடத்திய மோகனிற்கும் நிர்வாகதினர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் யாழுக்கு எனது நன்றிகலந்த வணக்கம் .

புத்தனின் சரணங்கள் ,,நான் யாழில் இரு அவதாரம் எடுத்து கருத்து வைத்திருந்தேன்.....பலருக்கு தெரிந்திருக்கும்,..புத்தன் அல்லது ஜில் என்பவருடன் தொடர்பு கொள்ளவேண்டும் எனின் இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்

அன்புகலந்த நன்றியுடன் புத்தன் ....ஜில்

தொடர்புகளுக்கு.......yarlputthan@hotmail.com

யாழோடு ... ஏறக்குறைய 10 வருட பயணம் .. பல பெயர்களில் .. பல சர்ச்சைகளுடன் ..

... நாலெழுத்தை எழுத தூண்டியதும்/வைத்ததும் யாழே! ... மறக்க முடியாத பயணம்! இத்தனை வருடங்களும், ஒரு நாளாவது யாழை ஒருதடவையாவது பார்க்காமல் இருந்ததில்லை! இனி????

சரி/பிழை ... மனதில் பட்டதை சொன்னோம்! இனி??? சிலர் யாழை கொண்டே நால்வருக்கு உதவவும் முற்பட்டனர்!! இனி???

மோகனுக்கு ... யாழை மீண்டும் கொண்டு தொடர கை கொடுக்க நால்வராவது முன்வருவார்களாயின், நால்வரில் ஒருவனாக என் பங்கை செய்ய நான் தயார்!

... ஒன்றை சொல்கிறேன் ... எதனை சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழர்களிடம் எதிர்பார்த்ததோ .. அவை எம்மூலமாகவே நடந்தேறுகின்றன ... எம் குரல்கள் மெல்ல மெல்ல இல்லாதொழிக்கப்படுகின்றன! ... அதற்கு யாழும் உடந்தையாகிறதா??????

.

ஒவொன்றாக இழக்கிறோமோ என்ற கவலை.

ஊருக்கு போக முடியவிட்டாலும் ஊரில் இருக்கிற நினைப்பை தந்தது யாழ். பல பழைய நினைவுகளை மீட்க வைத்தது யாழ்.

ஒரு ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்தது / செய்வது யாழ்.

இப்படியாக உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் கருத்துக்களை பரிமாறக் கூடிய ஒரு நிலமை / வல்லமை ஒரு சில சமூகங்களிற்கே இருக்கும். அந்த வகையில் யாழ் மிகச் சிறப்பானது.

மோகனிற்கு என்னுடைய நன்றிகளும் நல்வாழ்த்துக்களும்.

இளைஞன் மற்றும் ஏனைய மட்டுருத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

இனிமையான நல்ல மனிதர்களை இங்கே சந்தித்தேன்.

அன்புடன்,

‍ஈசன்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இந்த நொடியை மறக்க முடியாமல் மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு.

யாழும் எனது ஒரு நெருங்கிய நண்பன் போலாவே இதுவரை இருந்து வந்தது. ஒரு நண்பனின் இழப்பு போல தோன்றுது. முதன் முதலா இணையத்தில் எழுதியதுனா அது யாழில் தான். முதன் முதலா "அ" எழுதினது போல உணர்வு. நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒருசில நல்ல நண்பர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.நான் யாழுக்கு ரொம்ப நன்றி சொல்லவேணும். உண்மையை சொல்ல வேணும் என்றால் இதே யாழ்களத்தில் தான் நான் ப்ரியா(http://www.yarl.com/forum3/index.php?showtopic=70155) என்று ஒரு பொண்ணை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ண போறேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தந்ததும் இதே யாழ் தான்.

பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கிய யாழுக்கும்,மோகன் அண்ணாவிற்கும்,மட்டுறுத்துனர்கள் அனைவருக்கும்,யாழ்கள உறுப்பினர்கள்,யாழ் வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும்,வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

ஜீவா

Edited by ஜீவா

... இங்கு பலர் தமது ஆதங்கங்களை வெலிப்படுத்தியிருக்கிறார்கள்! ... யாழை தொடர விருப்பம் ... முழுமையாக மோகனுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கவும் தயார் ... மோகனின் பதில்??????

யாழ் எனும் ... நீண்டகால நண்பனை இழக்க விருமபாத .....

  • கருத்துக்கள உறவுகள்

மனவருத்தமா இருக்கு..! இருந்தாலும் என்ன செய்யிறது? நடத்திறவைக்குத்தான் கஷ்டம் தெரியும்..!

இவ்வளவு நாட்களும் செவ்வனே நிருவகித்த மோகன் குழுவினருக்கு நன்றிகள் பல..!

  • கருத்துக்கள உறவுகள்

விடைகள் இல்லாமல் எத்தனையோ விடயங்கள் நம் மனதில் இருக்கின்றன

விடைகள் கிடைக்கும் என்று காத்திருக்கின்றொம்.

இப்போது மோகன் அண்ணாவின் இந்த முடிவிற்கு காரணம் தெரியவில்லை.

அறிந்து கொண்டால் எங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பைச் செய்யலாம்

எந்த வழிகளிலும் யாழைத் தொடரமுடியாது என்றால் அதற்கான காரணத்தை அறிந்துகொண்டால் மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைக்கும்.

இதுவரை காலமும் தமிழுக்கும் தமிழ் உறவுகளுக்கும் ஆற்றிய பணிகளுக்கு யாழ் நிர்வாகத்திற்கு எனது கோடி நன்றிகள்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் எல்லாருக்கும் நிழலாய் இருந்த யாழ் என்னும் களம் நின்று போகப் போவது போல் உணர்கிறேன்.. எனக்கு என்னத்தை எழுதுவது எண்டே புரியவில்லை..ஆனாலும் எமக்குத் தெரியாது தானே இக்களத்துக்கு உரியவருக்கு என்ன இட்டல்,இடஞ்சல்கள் இருக்கு என்பது..ஆகவே நான் மேலும்,மேலும் எதையும் மட்டுமாரிடம் கேட்கப் போவது இல்லை...நான் ஏதாச்சும் கரச்சல் தந்திருந்தால் ..என்னால் யாராச்சும் வேதனைப் பட்டு இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.நான் இலகுவில் யாரையும் நோகப் பண்ணுபவள் இல்லை..இருந்தாலும் சொல்ல முடியாது தானே.நன்றி..நன்றி...நன்றி. :)

மோகன் அண்ணா உட்பட அனைத்து மட்டுமாருக்கும் மிகுந்த நன்றிகள்..மீண்டும் எங்கள் யாழ் இதே போல் நல்ல தலைமயின் கீழ் இயங்கும் பட்டசத்தில் இதே யாயினியாக உங்கள் முன் வலம் வருவேன்.நன்றி. :lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

புலி வருது புலி வருது என்று இறுதியில் புலி வந்தது கணக்கா.. மூடப் போறம் மூடப் போறம் என்று இறுதியில் யாழை மூடிட்டாங்கன்னா உறவுகளாய் வாழ்ந்த நாம் திக்குத்திக்காக சிதறும் நிலையே உள்ளது. அதைத் தவிர்க்க..

உங்கள் தொடர்புகளை காக்க.. ஒருங்கிணைய.. இங்கு உங்களோடு தொடர்புகளை பேண வகை சொன்னீங்கன்னா.. அவசியமான வேளைகளில் தொடர்புகொள்ள வசதியா இருக்கும்.

நிச்சயமா அநாவசியமா தொடர்பு கொண்டு கரைச்சல் தரமாட்டம் என்பதை எங்களளவில் உறுதியாக சொல்லலாம். இங்கு உங்களை தொடர்பு கொள்ளக் கூடிய வழிமுறைகளை சொல்லுங்கள்.

நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71933&pid=597957&st=20&#entry597957

யாழ் எனக்கு 4 வருடங்களாகத் தான் தெரியும். அதிலும் உறுப்பினராக இணைந்தது இரண்டரை வருடங்கள் முன்பு தான். தனிப்பட்ட காரணங்களினால் எழுதாமலே இருந்த எனக்கு மீண்டும் அதுவும் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்ள வழி தந்து எழுதத் தூண்டியதும் யாழ் தான். இணைந்து சில மாதங்களிலேயே கனடாவில் பல நல்ல நண்பர்களையும் (கந்தக சாகரா, தமிழச்சி, முரளி, மணிவாசகன், நிலாமதி அக்கா, சபேஷ் etc ) கடல் கடந்து பல தொடர்புகளையும் ஏற்படுத்தி தந்ததும் யாழ் தான்..

யாழ் நின்று போனால் இனி எதிலும் எழுதப் போறதும் இல்லை. யாழின் முடிவுடன் நிழலி / பிழம்பு இன் எழுத்துகளும் இறந்து விடும். மீண்டும் அரசியலாயினும் சரி இலக்கியம் ஆயினும் சரி இனி எதுவும் வாழ்நாளில் எழுதப் போவதும் இல்லை. இந்த கேடு கெட்ட இனத்தில் எழுதி ஒன்றையும் புடுங்கப் போவதும் சாத்தியம் இல்லை. புத்தகங்கள் தொடர்ந்து வாசிப்பதுடன் எல்லா எழுத்து விடயங்களையும் நிறுத்த வேண்டியது தான்

ஒரு 7 மாதம் மட்டு வாக இருக்கும் போது என்னை ஆச்சரியப் படுத்தியது மோகனின் பொறுமை தான். என்னத்துக்கு இந்தாள் இவ்வளவு கஷ்ரப் பட்டு இதை தூக்கி கொண்டு திரியுது என்று சில நேரம் நினைத்தது உண்டு. உள்ளே கொஞ்சம் வந்து பார்க்கும் போது தான் அதன் வலி, அதற்காக அவர் படும் கஷ்ரம், அதனை புரிய முயற்சி கூட எடுக்க விரும்பாத பல உறுப்பினர்களின் தொடர் தொல்லைகள், பட்டங்கள், அவமானங்கள் என்று அவரும், அவருடன் பல காலம் மட்டு வாக இருக்கும் இணையவனும். வலைஞனும் சந்தித்து இருப்பவை ஏராளம் என்று purinthathu. மோகனின் இந்த முடிவு மிகக் கவலை அளித்தாலும், அவரின் முடிவில் மிகுந்த நியாயம் இருக்கின்றது என்பதை உணருகின்றேன். எம்மால் ஒரு இணையத்தளத்தை கூட தொடர்ந்து நடத்த முடியாது என்ற உண்மையும் கூடவே முகத்தில் வந்து அறைகின்றது

எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 7 மாதம் மட்டு வாக இருக்கும் போது என்னை ஆச்சரியப் படுத்தியது மோகனின் பொறுமை தான். என்னத்துக்கு இந்தாள் இவ்வளவு கஷ்ரப் பட்டு இதை தூக்கி கொண்டு திரியுது என்று சில நேரம் நினைத்தது உண்டு. உள்ளே கொஞ்சம் வந்து பார்க்கும் போது தான் அதன் வலி, அதற்காக அவர் படும் கஷ்ரம், அதனை புரிய முயற்சி கூட எடுக்க விரும்பாத பல உறுப்பினர்களின் தொடர் தொல்லைகள், பட்டங்கள், அவமானங்கள் என்று அவரும், அவருடன் பல காலம் மட்டு வாக இருக்கும் இணையவனும். வலைஞனும் சந்தித்து இருப்பவை ஏராளம் என்று purinthathu. மோகனின் இந்த முடிவு மிகக் கவலை அளித்தாலும், அவரின் முடிவில் மிகுந்த நியாயம் இருக்கின்றது என்பதை உணருகின்றேன். எம்மால் ஒரு இணையத்தளத்தை கூட தொடர்ந்து நடத்த முடியாது என்ற உண்மையும் கூடவே முகத்தில் வந்து அறைகின்றது

இதிலிருந்து மீண்டு வர வழி இல்லை என்று சொல்கிறீர்களா நிழலி?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல முடியவில்லை.

முகமறியாப் பல நண்பர்களை யாழ் தந்தது. எனினும் தனிப்பட்ட ரீதியிலான தொடர்புகளைப் ஒரு சிலரைத் தவிர எவருடனும் பேணவில்லை. இவர்களையெல்லாம் (அவர்களுக்கே தெரியாது) இழப்பது கவலைதான்.

யாழ் களத்தைத் தவிர வேறு எங்கும் தமிழில் கருத்துப் பதிந்ததில்லை. இனியும் எழுதப் போவதில்லை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இந்த நொடியை மறக்க முடியாமல் மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு.

யாழும் எனது ஒரு நெருங்கிய நண்பன் போலாவே இதுவரை இருந்து வந்தது. ஒரு நண்பனின் இழப்பு போல தோன்றுது. முதன் முதலா இணையத்தில் எழுதியதுனா அது யாழில் தான். முதன் முதலா "அ" எழுதினது போல உணர்வு. நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒருசில நல்ல நண்பர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.நான் யாழுக்கு ரொம்ப நன்றி சொல்லவேணும். உண்மையை சொல்ல வேணும் என்றால் இதே யாழ்களத்தில் தான் நான் ப்ரியா(http://www.yarl.com/forum3/index.php?showtopic=70155) என்று ஒரு பொண்ணை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ண போறேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைத் தந்ததும் இதே யாழ் தான்.

பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கிய யாழுக்கும்,மோகன் அண்ணாவிற்கும்,மட்டுறுத்துனர்கள் அனைவருக்கும்,யாழ்கள உறுப்பினர்கள்,யாழ் வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும்,வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

ஜீவா

அது தான் பிரியா கருத்துகளத்தில் அறிமுகத்தோடு எழுதாமல் விட்டு விட்டார் என நினைக்கிறேன்...உங்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள்...யாழ் மூலம் இணைந்த இரண்டாவது ஜோடி என நினைக்கிறேன்[முதலாவது மணிவாசகன்‍ ரசிகை என யாரோ எழுதிய ஞாபகம்]

  • கருத்துக்கள உறவுகள்

.

அன்பு யாழே....., உன்னை இழக்கப் போவதை எண்ணி வேதனை.

மனிதருக்கு மரணம் சொல்லாமல் வரும் என்பார்கள்.

ஆனால்..... உனக்கு சொல்லிக் கொண்டு வருவதை என்னவென்று சொல்ல....

உனது மரணத்தின் மூலம் சந்தோசப் படப் போகும் ஒரு சிலருக்காக......, எம்மை தவிக்க விட்டு செல்வது நியாயமா?

என்னை, உன்னில் ஒரு அங்கத்தவனாக உள் வாங்கி..... கடந்த இரண்டு வருடமாக எனது ஆருயிர் நண்பனாக இருந்தமைக்கு நன்றி கூறுகின்றேன்.shake2.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.

நான் யாழில் போட்டிகளையும் ,பயண அனுபவங்களையும் தான் தந்திருக்கிறேன்.எனது பயண அனுபவங்களை சிலவற்றை எனது வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். இன்னும் இடாதவற்றில் சிலவற்றை பிரதி எடுத்து சேமித்து வருகிறேன். அதில் நான் எழுதும் போது சக உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களை வாசிக்கும் போது கவலையாக இருக்கிறது. இந்த உறவுகளைப் பிரியப் போகிறோமோ என்ற கவலை. பாடசாலை, பல்கலைக்கழகத்தில் இறுதி நாளில் ஏற்பட்ட கவலை, தாயகத்துக்கு சென்று திரும்பும் போது ஏற்பட்ட கவலை, உறவினர்களைப் பிரியும் போது ஏற்பட்ட கவலை போன்று ஒரு கவலை வருகிறது. யாழ்களப் புத்தனும் நேற்று தொலைபேசியில் கதைக்கும் போது கவலையாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

எனினும் யாழ்களத்தை திறம்பட நடாத்திய மோகனுக்கு நன்றிகள். யாழ் இணையத்தில் இருப்பவர்கள் பலரை யாழில் இணைய முன்பு நேரில் எனக்கு பழக்கம், புத்தன், யமுனா, யாழ்கவி, யாழ்ரவி,சபேஸ், சாந்தி ரமேஸ், அதீபன், கானாபிரபா....

ஆனால் யாழில் இணைந்ததற்கு பிறகு நேரில் சென்று சந்தித்த உறவுகள் - சுண்டல், ஈழவன், மோகன், தயா, கிருபன், விகடகவி, செந்தில்....

பார்க்காமல் பழகிய உறவுகள் பலர் இருக்கிறார்கள்.

வாழ்க்கை என்றால் பிரிவு வரத்தான் செய்யும். எப்பொழுது வரும் என்று தெரியாது. ஆனால் அப்பிரிவு உடனே வருகிறது என்றால் வேதனையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்!

பலரின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள், ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மூடும் திட்டம் பிற்போடப்படுகின்றது. முன்னர் போலவே களம் இயங்கும். கிடைக்கப்பெற்ற ஆலோசனைகளினை அடிப்படையாகக் கொண்டு சில மாற்றங்களை விரைவில் ஏற்படுத்துகின்றேன். ஆலோசனைகள் தந்தவர்களுக்கும், மின்னஞ்சல்கள், தனிமடல்கள், தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்கும் நன்றி.

யாழ்களம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது கண்டு மகிழ்சியும் நன்றிகளும்

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயோ!!!!!!!!!!!!!!

என்னத்தை எழுதுவது?மிக நெருங்கிய ஒருவர் நோய்வாய்ப் பட்டு இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கையில் செய்வதறியாது உறவுகள் கதறுவது போல இருக்கிறது யாழ்கள உறவுகளின் நிலைமை .யாழ் இணையம் நிறுத்தப்படுமானால் அது தமிழருக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்பது உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.