Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் விரும்பும் வேலை தலைப்பு (Job Title) என்ன..?!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நெடுக்ஸ் அண்ணா,விசுகு அண்ணா,

திங்கட்கிழமை லோயரிடம் போட்டுவந்து சொல்கிறேன். :(

நெடுக்ஸ் அண்ணா; இப்படி ஒரு திரியைத்திறந்து என்னையெல்லாம் கடுப்பேத்துறதென்றே முடிவு பண்ணிட்டிங்க போல‌ :rolleyes:

...

இதைத் தான் நானும் யோசிச்சனான்... ^_^

உறவுகளில் பலர் ஆசிரியர் பதவியில் வகித்தபடியாலோ என்னவோ மூன்றாம் வகுப்பிலிருந்து அந்த மோகம் எனக்கும் இருந்தது.... பத்தாவது முடித்தபோது கணிதத்தில் அதிக மதிப்புகள் பெற்றதினால் (tuition செலவு பெற்றோருக்கு இருந்ததே இல்லை :) ) அந்தத் துறையில் ஆர்வம் கூடியது. ஆனால் 'அன்னியர்' என்ற ஒரே காரணத்தால் அறிவியல், கணிதம் போன்ற முதல் இரண்டு (குரூப்பில் படிக்க மதிப்பெண்கள் இருந்தும்) இடம் கிடைக்கவில்லை. மூன்றாவது-வணிகத்துறையில் தான் கிடைத்தது. ஆரம்பத்தில் மனமில்லாது தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா ஆர்வாத்தில் படிக்கும் போது அதற்கும் இடையூறு வந்தது... கண்மூடித் திறப்பதற்குள்... அறியாத நாடு, குடும்பத்தை விட்டுப் முதல் முதலில் பிரிந்து சொல்லில் அடக்க முடியாத அனுபவங்கள், குடும்பப் பொறுப்புகள் இதனுள் வாழ்க்கைக் கனவுகள் எங்கே நினைவாகும் என்ற ஏக்கங்கள்...

வேலை- வீடு- வீடு- வேலை - இப்படியே காலம் போனது. முன்னேற வழி இருக்காதா என்ற ஏக்கம், ஒரு தவிப்பு... பல வருடங்கள் கல்லூரியைக் கடந்து தான் பஸ்சில் வேலைக்குப் போய்வந்தேன். கல்லூரியால் போகும்/ வரும் மாணவர்களைப் பார்க்க பழைய கனவுகள் கண்களை நிரப்பும். ஒருநாள் முடிவெடுத்து அந்த கல்லூரியில் ஒரு ஆலோசகரை அணுகி ஏதேனும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிவுரை கேட்டேன். அதன் பயனாக படிப் படியாக படித்து 2 வருடங்களில் பல்கலைக் கழகம் வரை சென்றேன். முழு நேர படிப்பு என்பதனால் பகுதி நேர வேலை மட்டுமே செய்ய அனுமதித்திருந்தார்கள். மீண்டும் குடும்பப் பொறுப்புகள்... முதல் வருடத்தில் அரை ஆண்டோடு எடுத்த முயற்சியும் தடைப்பட்டு விட்டது. மீண்டும் முழு நேர வேலை... ("ஒன்று நீ படி! இல்லை... மற்றவனை படிப்பி!!" என்று அடிக்கடி எனக்குத் நன்கு தெரிந்த ஒரு பெரியவர் சொல்லுவார், அந்த ஒன்றையாவது செய்த திருப்பதி.) எனது உறவு ஒன்றை பல்கலைக் கழகம் வரை அனுப்பி முதல் பிரிவில் சித்தி அடைய வைத்த மனதிருப்தி! தற்போது இங்குள்ள அரசாங்க நிறுவனம் ஒன்றில் வேலை, அதில் வேலை சம்பந்தமாக படிக்கக் கூடியவைகளை/வேண்டியவைகளை படிப்பதற்கு நிறுவனமே பொறுப்பெடுத்து அனுப்புவதால் படிப்படியாக அதில் முன்னேறுகிறேன்.

நெடுக்ஸ் நீங்கள் விரும்பிய துறையில் தொடர்ந்து செல்வது பாராட்டக் கூடியது. ஜீவா உங்களுக்கு எதிர் காலம் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்போதுள்ள வைத்தியதுறை நான் விரும்பி தெரிந்தல்ல, வேறுவழியில்லாமல் தெரிந்தெடுத்தேன்..எனக்கு விருப்பம் கணிதத்ததுறைதான், எங்கே ஒருபதிவில் நிழலி சொன்னதுபோல், முதலில் பௌதீக மாணவன், பிறகுதான் engineer என்கிறது போல். ஆனால் காலப்போக்கில் சின்ன சின்ன விடயங்களே செய்யமுடியாதுள்ளது-கணிதத்தில்..கூட்டல்/கழித்தல்/பெருக்கல்/ வகுத்தல்..தலையை சுத்துகிறது. எங்களுக்கு நோயாளியை அனுமதிக்கும் போது kg நிறுப்பார்கள் பின் அதை lb செய்வார்கள்..அதை செய்யவே/மாற்றவே ஏலாது..பாவிக்காத உறுப்பு பலமிழந்தது போல்..

மற்றும்படி ..குடும்ப சுமைகாரனமாக பலவித அழுத்தங்கள்..இப்ப உள்ள தொழிலில் தொடர்ந்து/ பிரச்சனையிலாமல் இருந்தால் சரி..ஒருவித கட்டுப்பாடில்லாமல் வளர்ந்தால் நிறைய கஸ்ரப்படுகிறேன். விசு பதிந்தது போல்..கோப்பை கழுவுகிற தொழிலுக்கு போனேன்..இங்கே கோப்பி கடை ஒன்று உள்ளது..டிம் கொட்டன் என்று, நல்ல மனேயர் என்ர ஆர்வத்தை பார்த்திட்டு வேலை தந்தா..என்னவே..2 கிழமையால வேஸ் ரூம் கழுவ சொன்னார்கள்..மனைவி நினைத்துப்போட்டு உடனேயே மாட்டேன் என்று போட்டு வந்துவிட்டேன்-அவவிற்கு விருப்பம் இல்லை..நானாகத்தான் நாண்டு பிடித்து இங்கிலீஷ் பழக என போனது- 3 வருடம் சும்மா இருந்து போட்டு..எனக்கு மனம் கேட்கவில்லை..இன்னாரின் இன்னார் இந்த வேலை செய்வது என்று..உடனேயே வந்து விட்டேன். அடுத்தநாள் கூப்பிட்டார்கள்..சொனார்கள்/ விளக்கம் சொன்னார்கள்...நான் எனது நிலையை சொன்னேன்..அவர்கள் இது சட்டம் என்றார்கள் ..ஒரு தமிழ் மனிசி சொன்னாவ..தம்பி அது ஊரில தான் அப்படி உதுகளுவுகிற ஆக்கள் குறைஞ்சாக்கள்..இஞ்சை எல்லாரும் செய்யுறது என்றா. நான் சொன்னேன் அவவுக்கு..எனக்கு இது கேவலம் இல்லை.. எனக்கு எல்லாம் ஒண்டு..ஆனால் பெண்சாதிக்கு விருப்பம் இல்லை..இவ்வளவு காலமும் 3 வருடமா என்னை பார்த்தவ..உழைக்கிற காசு முழுக்க/ அதுக்கு மேலால எனக்கு சோதினைக்கு காட்டித்தான் கடனில் இருக்கிறம்..இந்த நிலையில் அவவுக்கு விருப்பமில்லாமல் இப்ப வேண்டாம்..ஒருநேரத்தில் அவவே கடன் சுமை தாங்காமல் என்னை செய்ய சொன்ன வந்து செய்கிறேன்..என்று..கடவுள் அதிகம்? சோதிக்காமல் இப்ப உள்ள வேலையை தந்துள்ளார்..

ஆரோ முந்தி ஒரு இடத்தில குறிப்பிடிருந்தார்கள் ஓயவெடுக்க காலம் கணக்கு பார்ப்பது என்று..அது குறை என்கிறது போல்..எனக்கு இப்ப 40 க்கு குறைய..ஆனால் வேண்டும் இப்ப லீவு..ஏலுமெண்டால் பென்சன்..காணும்..பட்ட கஸ்ரம் காணும்..

திரிக்கு சம்பந்தமாகவேண்டால்..ஒரு cardiologist ஆக வேண்டும்..அது இப்ப முயல் கொம்பு மாதிரி..செத்து பிழைக்கிறது என்று முடிவெடுத்திருக்குது..பார்ப்பம்..அதில்லாட்டி அவுஸ்திரேலியாக்கு போகவேண்டும்..பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு போகவேண்டும்..கொஞ்சகாலம் லண்டன் இலும்தான்..எல்லாரையும் போல பிள்ளை படிப்பிக்க வேண்டும்..லோயருக்கு..சும்மா அலம்பிக்கொண்டு இருப்பதால் நிற்பாட்டுகிறேன்.

ஜீவா..எலும் எண்டால் ஊருக்கு போய் முடித்துப்போட்டு வராது..இல்லாட்டி கலியாணம் கட்டுகிறது..நாங்கள் எங்கேயோ ஒருடத்தில் நக்கத்தான்/தன்கிருக்கத்தான் வேண்டும் அது எங்கே என்பது எங்களில் கைகளில் இருக்கு....நான் மனிசியிட காசில படிக்க மாட்டன் என்று இருந்தால் ..இப்ப வேறை மாதிரி இருப்பன்..எங்களுக்கு தெரியாதவர்களிடம் (அகவும் இழிவான) உதவிகளை கேட்டிருப்பேன்..

பிறகு எழுதுகிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்களின்ட வாழ்கை.... நினைத்ததை ஆரம்பத்தில் இருந்தே படிக்க இயலாமை... வேறு துறைக்கு சிப்ட் ஆனமை... மனசு ரொம்ப கஸ்டமாயிருக்கு... :rolleyes:

நான் கனடாவுக்கு வந்து மொன்றியலில் சிலகாலம் வாழ்ந்தேன். அப்போது பிரஞ்சு மொழி படிக்க சென்றேன். என்னுடன் இரு உருசியாவில் இருந்து வந்த ஒரு யூதர்கள் படித்தார்கள். இருவரும் பொறியியலாளர்கள். தாம் இங்குள்ள யூத மக்கள் ஒன்றியத்துக்கு சென்றதாகவும் இருவரின் கல்வித்தகமைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் கனேடிய மொழி, பல்கலைக்கழக படிப்புக்களுக்கு ஏற்றவாறு தமது தகுதிகளை மாற்ற ஆழுக்கு பத்தாயிரம் டாலர்கள் கொடுத்தனராம். :rolleyes:

இப்படி பணம் எடுத்து படித்தவர்கள் பின்னர் ஐம்பதினாயிரம் இல்லை ஒரு இலட்சம் டாலர்கள் என பின்னர் நன்கொடையாக வழங்குவதுண்டாம்.

ஓவியனாக வேண்டும் என்பது என் ஆசை.

பெற்றோர்களுக்கு நான் Engineer ஆக வேண்டுமென ஆசை

நேரங்கள் என்னால் விரயமாகப்பட்டன

போராட்டத்தில் சில காலம்

புலம்பெயர்ந்தபோது மதி தன்னை நிதானித்துக் கொண்டது

விட்ட குறை தொட்ட குறையாக கட்டிட கலைஞன் (Architect ) ஆக விரும்பினேன்.

இடையில் கொஞ்சம் வியாபாரம். பெரும் தோல்வி.

BTECH முடித்துவிட்டு Architect படிக்கப் போனேன். முற்றாக படித்து முடிக்க 7 வருடங்கள் செல்லும் என்றார்கள். பணக்கஷ்டம். பல்டியடித்தேன்.

வரைபடக்கலைஞனாய் ஆரம்பித்தேன். வேலையில் கணனிகளின் வன்பொருள்/மென்பொருள் பராமரிக்கும் வேலையும் என்னுடையதுதான். வேலைக்குத் தேவையான குறுகிய கால கல்விகளை கற்றுக்கொண்டேன். கடவுள் என்னை வழி நடத்தினார். குறுகிய காலத்திற்குள் நிறைய வேலைகள் மாறி நிறைய அனுபவங்களை உள்வாங்கிகொண்டேன். Designing எனது விருப்பம். இப்பொழுது போக்குவரத்து துறையில் வேலை செய்கிறேன். அதில் கூட நான் விரும்பிய ஓவிய கிறுக்கல்களே அதிகம்.

முக்கியமாக ஜீவாவுக்கு

காலத்தை விரயமாக்காமல் இடையில் விடப்பட்ட கல்வியை தொடருங்கள்.

டிஸ்கி

இத்திரியின் தன்மை கருதி நான் செய்த மலசலகூடம் கழுவும் தொழில், குழிதோண்டி அத்திவாரம் போடும் தொழில், சமையல் தொழில் மற்றும் etc etc தொழில்களை விளக்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு துறையும், இசைத்துறையும் தான் எனக்கு பிடித்தமானவை. :rolleyes:^_^ பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க கணித துறையில் படித்தேன்.நல்ல பேறு பேறு கிடைத்தும் தொடர்ந்து படிக்காமல் நாட்டை விட்டு வெளியேறி இந்த நாட்டுக்கு வந்தேன்.

ஏனோ தெரியவில்லை ஏதாவது புதிதான துறையில் அப்போது படிக்க வேண்டும் என மனம் என்னை தூண்டியது. கணணி துறையை தெரிவு செய்து படித்து தொழிலும் கிடைத்தது. நானாக உழைத்து படித்தது.எல்லா வகையான வேலைகளும் செய்தேன் அனுபவமும், பணமும் தேவை எனக்கருதி.

என்னை நான் தொடர்ந்து கேள்வி கேட்பதுண்டு. அதாவது ஏன் இன்னொருவனுக்கு வேலை செய்ய வேண்டும் என.ஆனால் பெரிய நிறுவனங்களுடன் எப்படி போட்டி போட முடியும் என சிறிய மனப்பயம் உண்டு.முகாமைத்துவ அனுபவமும் குறைவு என்பதும் இன்னொரு காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் எழுதியதின் தொடர்சியாக..

மற்றவர்களில் தனக்கிருப்பது என்பது வாழ்வின் ஒரு பாகம்..அது அம்மா அப்பா நண்பர் உறவினனர், மனிசி பிள்ளைகள் ..அயலவர் இதை எப்படிபாவிப்பது என்பதுதான் எங்கள் வாழ்வின் வெற்றி. எல்லாநேரமும் முகம் தெரியாதவர்கள் வரமாட்டார்கள். பனங்காய் எழுதியது போல் "தமிழ் சனியன்களை கண்டால் தூர ஓடு" என்பது ஒரு வாழ்க்கை முறைதான். ஆனால் அதற்காக அதே தேவையை இன்னுமொருவரிடம் நாங்கள் பெறத்தான் வேணும். இப்ப எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத தெரியாவிட்டால், தமிழ் உறவுகளிடம் கேட்கலாம், ஆனால் கேட்டால் பிறகு நல்ல நிலைக்கு வந்த பின்பும் சொல்லிக்காடுவர்கள் (எல்லோரும் அல்ல) ஆனால் இதையே பக்கத்து வீடுக்காரனிடம் கேட்டால், அவன் செய்து தருவான்.. பிறகு ஏதாவது அவனுக்கும் செய்யவேண்டும்..இதைத்தான் நான் சொல்லவந்தது.. என்னை பொறுத்தவரையில் (விசாவுக்காய்) கலியாணம், அல்லது ஒருவரின் காசில் படிப்பது என்பது என்ர்ருக்கொள்ளக்கூடிய செயல்களே..

தொழிலை பொறுத்தவரையில் இருக்கும் தொழில் முன்னேற பார்க்கவேண்டும்..வாழ்வில் பாதி தொழில் என்பதை உணரவேண்டும்... அண்மையில் எனது நண்பனுடன் கதைக்கும் போது யார் யார் என்ன கார் வைத்திருக்கிறாகள் என்றபோது, நாங்கள் (எல்லோருமல்ல), பார்ப்பது அவர் இன்ன கார் வைத்திருக்கிறார் இவர் இன்னது வைத்திருக்கிறார் என்று..அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள், செய்துகொண்டிருக்கிராகள் என்று பார்ப்பதில்லை. நான் வேலை செய்கிற இடத்தில் உள்ள இதய வைத்தியர் நான் போவது 615 -645 ஆனால் அவர் வருவது அதுக்கு முன்னுக்கு..உண்மையில் வேலை தொடங்குவது 7:30. 7:30 போனால் பார்க்கிங்கில் இடமும் கிடையாது..இதுதான் இப்பவுள்ள போட்டியும் உலகமும்..

"The early bird catcheth the worm."

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

போடாத வேஷம் இல்லை

செய்யாத வேலை இல்லை

போகாத நாடும் குறைவு.

சின்ன வயதில் கணக்காளராக வரவேண்டுமென விரும்பினேன். அதன்படியே பாடசாலையிலும் அதற்கான பாடங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். கடைசி வருடத்தில், சும்மா அறிந்து கொள்வதற்காகவும், சுலபமாக மதிப்பெண்கள் பெறலாம் என்பதற்காகவும் குடும்பப் பாடத்தை எடுத்தேன். அதில் ஒரு பகுதியாகப் படித்த உளவியல் பாடம் எனது வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எனது இலட்சியம் உளவியல் மட்டுமே. அதிலும் சிறுவர்களுக்கான உளவியலில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டுமென்பதே எனது விருப்பம். ஆர்வம் காட்டும் மற்றைய தலைப்புகள், கட்டடக்கலை நிபுணர், வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பெரிய நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகி. ஏனோ வைத்தியத்துறையிலும், அரசியல்துறையிலும் விருப்பமே வரமாட்டேன் என்கிறது. எந்தத்துறையில் படித்தாலும் அதில் மிகச் சிறந்தவராக இருக்கவேண்டுமென்பதே எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது சிறு வயது ஆசை ஒரு கணக்காளன்(கைசியர்), பின்னர் கணணியில் ஒரு உயர்ந்த இடம்(பில்கேட்ஸ்) இப்போது ஒரு மிகப்பெரும் பணக்காரன், எனது வாழ்நாளுக்குள் எனது லட்சியத்தை அடையாமல் ஓயமாட்டேன். அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை வருகிற வருடத்தில் இருந்து தொடங்க இருக்கிறேன், :D:lol: :lol: காரணம் இப்போது பத்து பைசா பாக்கட்டில் இல்லை, இமயமலை ஆகாது எந்தன் உயிர் வேகாது......வெற்றி கொடிகட்டு வானை முட்டும் வரை முட்டு.........(இது படையப்பா பாட்டு, இதுதான் எனது தேசியகீதம்) :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்து மாடு அதிலை இரண்டு நாம்பன் மாடு கட்டாயம் வேணும்

அஞ்சாறு ஆடுகள்

கொஞ்ச கோழிக்குஞ்சுகள்

அம்பது பொயிலைக்கண்டு

ஆயிரம் மிளகாய்க்கண்டு

அங்கையங்கை கொஞ்ச பயித்தங்கொடி,புடலங்கொடி,பாவக்காய் பந்தல் வேலிக்கரையிலை பூசணிக்காய்க்கொடி அங்காலை சுரைக்காய் அப்பிடியே மிளகாய்க்கீரையும் தக்காளியும் அதுக்குப்பக்கத்திலை கத்தரிக்காயும் அதுக்குபக்கத்திலை நிக்கிற வாழைமரத்துக்கு நேரை கிடக்கிற துரவுப்புட்டியிலை நிண்டு பாக்க தெரியிற வயலும் தென்னங்காணியும் பனங்காணியும் தெரியுற அழகே தனியழகு.

கோணங் கோணங் புளியங்காய். கொப்பர்ற்ரை.................................

பத்து மாடு அதிலை இரண்டு நாம்பன் மாடு கட்டாயம் வேணும்

அஞ்சாறு ஆடுகள்

கொஞ்ச கோழிக்குஞ்சுகள்

அம்பது பொயிலைக்கண்டு

ஆயிரம் மிளகாய்க்கண்டு

அங்கையங்கை கொஞ்ச பயித்தங்கொடி,புடலங்கொடி,பாவக்காய் பந்தல் வேலிக்கரையிலை பூசணிக்காய்க்கொடி அங்காலை சுரைக்காய் அப்பிடியே மிளகாய்க்கீரையும் தக்காளியும் அதுக்குப்பக்கத்திலை கத்தரிக்காயும் அதுக்குபக்கத்திலை நிக்கிற வாழைமரத்துக்கு நேரை கிடக்கிற துரவுப்புட்டியிலை நிண்டு பாக்க தெரியிற வயலும் தென்னங்காணியும் பனங்காணியும் தெரியுற அழகே தனியழகு.

:D

ம்ம்.. நினைச்சால் நல்லாத்தான் இருக்கு. ஆனா கோழிக்குஞ்சுகளத்தான் பிடிக்கேல்ல.

ஒவ்வொரு தோட்டமும் ஒவ்வொரு வாசம். புகையிலத்தோட்டம் ஒரு வாசம். மிளகாத்தோட்டம் ஒரு வாசம். வெங்காயத்தோட்டம் ஒரு வாசம்.

அப்பிடியே தென்ன மரங்களுக்காலயும் பனைகளுக்காலயும் வாற காற்ற

வெறுங்காலோட நிண்டு கண்ண மூடிக்கொண்டு மெதுவா இழுத்து விட வேண்டியது தான்.

இங்க ஒண்டும் சரிவராவிட்டால் ஊருக்குப் போய் மண்ணைக் கிண்டலாம். (சிங்களவன் இரக்கப் பட்டு விட்டனென்றால்..) Plan B.

ஆயிரம் மிளகாய்க்கண்டு

அங்கையங்கை கொஞ்ச பயித்தங்கொடி,புடலங்கொடி,பாவக்காய் பந்தல் வேலிக்கரையிலை பூசணிக்காய்க்கொடி அங்காலை சுரைக்காய் அப்பிடியே மிளகாய்க்கீரையும் தக்காளியும் அதுக்குப்பக்கத்திலை கத்தரிக்காயும் அதுக்குபக்கத்திலை நிக்கிற வாழைமரத்துக்கு நேரை கிடக்கிற துரவுப்புட்டியிலை நிண்டு பாக்க தெரியிற வயலும் தென்னங்காணியும் பனங்காணியும் தெரியுற அழகே தனியழகு.

ஊருக்கு திரும்பி போகும் நிலை வந்தால் ஆத்தங்கரைக்கு பக்கத்தில் மரக்கறி தோட்டமும் பழத் தோட்டமும் செய்ய ஆசை. நிலா கால இரவுகளில் அதைப் பார்த்து ரசிக்க ஆசை. அது ஒரு கனவு. அந்த சுகம் எதிலும் வராது.

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கடவுளே!

இஞ்சையும் இரண்டு சீவன் என்ரை பக்கம் நிக்கினம்.

எல்லாருக்கும் டாக்குத்தர் எஞ்சினியர் எக்கவுண்டன் எண்டுதான் ஆசை.

தோட்டக்காரனாக ஒருத்தருக்கும் ஆசையில்லை போலை கிடக்கு

ஓ அது பட்டிக்காட்டு வேலையோ?????????????

மூண்டு நேரமும் மூக்குமுட்ட வாய்க்குருசியாய் கொட்டுறதெல்லாம் வானத்திலையிருந்து வருதாக்கும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே!

இஞ்சையும் இரண்டு சீவன் என்ரை பக்கம் நிக்கினம்.

எல்லாருக்கும் டாக்குத்தர் எஞ்சினியர் எக்கவுண்டன் எண்டுதான் ஆசை.

தோட்டக்காரனாக ஒருத்தருக்கும் ஆசையில்லை போலை கிடக்கு

ஓ அது பட்டிக்காட்டு வேலையோ?????????????

மூண்டு நேரமும் மூக்குமுட்ட வாய்க்குருசியாய் கொட்டுறதெல்லாம் வானத்திலையிருந்து வருதாக்கும். :lol:

கு.சாண்ணா.. தோட்டம்.. வயல் தொழில் அல்ல. ஜீவனோபாயம். அதை எல்லோரும் செய்யத் தெரிஞ்சிருக்கனும். அதை ஒரு தொழிலால என்னால இனங்காண முடியல்ல. அது எல்லோருக்கும் அவசியம்.

நாங்க நகரில வாழ்ந்திருந்தாலும்.. ஊரில கிராமத்துக் காத்தும் எங்க மேல பட்டிருக்கு. வேளாண்மை எமது (மனிதனின்) பாரம்பரியம்..! எங்க கிட்டையும் தோட்டம் வயல் எல்லாம் இருக்கு. இப்ப கண்ணிவெடி விதைச்சிருக்கு.. நெல்லில்ல.. புகையிலையும் இல்ல.. மிளகாயும் இல்ல.. வெங்காயமும் இல்ல..! எருக்கலை வளர்ந்து நிற்குதாம்..! தோட்டத்திற்கு என்று கட்டி வைச்ச வீட்டையும் உடைச்சு ஆமிக்காரன் சென்ரி கட்டி வைச்சிருக்கானாம்.

கன்றுக்குட்டி.. ஆட்டுக்குட்டி.. கோழிக்குஞ்சு.. வாத்துக்குஞ்சு என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் ஊரில தை மாசியில.. பனிக்குள்ள... காலையில.. மயிர் சிலிர்க்க நிற்குங்கள்.. ஆட்டுக்குட்டிகள். அதுகளை பிடிக்க ரெம்ப ஆசை. நல்ல மிருதுவா இருக்கும்..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே!

இஞ்சையும் இரண்டு சீவன் என்ரை பக்கம் நிக்கினம்.

எல்லாருக்கும் டாக்குத்தர் எஞ்சினியர் எக்கவுண்டன் எண்டுதான் ஆசை.

தோட்டக்காரனாக ஒருத்தருக்கும் ஆசையில்லை போலை கிடக்கு

ஓ அது பட்டிக்காட்டு வேலையோ?????????????

மூண்டு நேரமும் மூக்குமுட்ட வாய்க்குருசியாய் கொட்டுறதெல்லாம் வானத்திலையிருந்து வருதாக்கும். :lol:

என்ன இப்டி சொல்லிப்போட்டீங்கள்.நான் ஒரு துன்டு நிலத்துக்கு நாயாய் அலையிறது எனக்கெல்லோ தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய விருப்பம் கலைத்துறை.எனது தாயின் ஆசை நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.

எதுவும் நடக்கவில்லை. வெளி நாட்டிற்கு வந்து செய்யாத வேலையில்லை.

தற்சமயம் சமையல் வேலை.செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிப்பவன் :lol:

தொடர்ந்தும் அதையே செய்ய விரும்புகின்றேன்.

வீட்டிலே அம்மம்மா வாத்தியார் அப்பா வாத்தியார் அம்மாவும் வாத்தியார் அக்கா இரண்டு பேர் வாத்திமார் :)

அண்ணையும் வாத்தியார் தம்பியும் வாத்தி. அதை விட ஐந்தாறு மாமிமார் மச்சாள்மார் என்று உறவுகளில் பல பேர் வாத்திமார் :huh:

அதனாலோ என்னவோ எனக்கு வாத்தியார் வேலையும் பிடிக்கும்.

இப்போது யாழில் வாத்தியார் வேடம் :wub:

என்ன இப்டி சொல்லிப்போட்டீங்கள்.நான் ஒரு துன்டு நிலத்துக்கு நாயாய் அலையிறது எனக்கெல்லோ தெரியும்.

டிஸ்கி; சஜீவன் அண்ணா அச்சுவேலியில் பத்துப் பதினைந்து பரப்புத் தோட்டக்காணி இருக்கின்றது. வெங்காயம் திராட்சை என்று நல்லாக விளைச்சல் தரும். விருப்பம் என்றால் சொல்லுங்கள் நல்ல விலைக்குத் தரலாம். :lol:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

."செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிப்பவன் " .பாராட்டுக்கள் .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சாண்ணா.. தோட்டம்.. வயல் தொழில் அல்ல. ஜீவனோபாயம். அதை எல்லோரும் செய்யத் தெரிஞ்சிருக்கனும். அதை ஒரு தொழிலால என்னால இனங்காண முடியல்ல. அது எல்லோருக்கும் அவசியம்.

நாங்க நகரில வாழ்ந்திருந்தாலும்.. ஊரில கிராமத்துக் காத்தும் எங்க மேல பட்டிருக்கு. வேளாண்மை எமது (மனிதனின்) பாரம்பரியம்..! எங்க கிட்டையும் தோட்டம் வயல் எல்லாம் இருக்கு. இப்ப கண்ணிவெடி விதைச்சிருக்கு.. நெல்லில்ல.. புகையிலையும் இல்ல.. மிளகாயும் இல்ல.. வெங்காயமும் இல்ல..! எருக்கலை வளர்ந்து நிற்குதாம்..! தோட்டத்திற்கு என்று கட்டி வைச்ச வீட்டையும் உடைச்சு ஆமிக்காரன் சென்ரி கட்டி வைச்சிருக்கானாம்.

கன்றுக்குட்டி.. ஆட்டுக்குட்டி.. கோழிக்குஞ்சு.. வாத்துக்குஞ்சு என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் ஊரில தை மாசியில.. பனிக்குள்ள... காலையில.. மயிர் சிலிர்க்க நிற்குங்கள்.. ஆட்டுக்குட்டிகள். அதுகளை பிடிக்க ரெம்ப ஆசை. நல்ல மிருதுவா இருக்கும்..! :D:)

விவசாயம் தொழில் இல்லையெண்டதை இப்பதான் கேள்விப்படுறன். :)

ரைம் பாஸிங்குக்காக கக்கூஸ் கிடங்கு அகலத்துக்கு கிடக்கிற நிலத்துண்டிலை ஒரு புடலங்கொடியையும் பூசணிக்கொடியையும் இரண்டு கொச்சிக்காய்கண்டும் இரண்டு தக்காளிக்கண்டும் வைச்சிட்டு "ஜீவனோபாயம்" எண்ட சொல்லை பாவிக்கிறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ.

நெடுக்கரே!

எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு எல்லாம் செய்ய வெளிக்கிட்டால் ????????

இந்த உலகம் எங்கை போய் முடியும்?

இப்பவே கன நாடுகள் துண்டைக்காணோம் துணியக்காணோம் எண்டமாதிரி முழுசிக்கொண்டு திரியினம் :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை குடும்பத்திலை அம்மா பக்கம்(மானிப்பாய்) எல்லாம் வாத்திமார் அப்பரின்ரை பக்கம் தோட்டம் (இணுவில்) இதிலை நாங்கள் இரண்டும் இல்லாமல் வேறை வேலை செய்யவேண்டும் எண்டது அப்பர் அம்மாக்கு விருப்பம்;..ஆனால் எனக்கு வாத்தியாய் அதுவும் தமிழ் வாத்தியாய் வரவேண்டும் எண்டு விருப்பம் இருந்தது இதை அம்மாவிட்டை சொல்லி திட்டும் வாங்கியிருக்கிறன் அம்மா என்னட்டை சொன்னது நீ பட்டதாரி படிப்பபு பொறியியல்லை முடிக்கவேண்டும் இல்லாட்டி மாடு மேய்க்கத்தான் போவாய் எண்டார்...நான் அம்மாவிட்டை சொன்னது பட்டதாரியோ படாத தாரியோ வாத்தியானால் பிள்ளையள் மாடு இரண்டையும் சேத்தே மேய்க்கலாமெண்டன்.('இரண்டும் ஒண்டுதானே) ஆனால் அப்பர் அம்மா நினைச்சதும் நடக்கேல்லை நான் நினைச்சதும் நடக்கேல்லை..மற்றபடி என்னை சகோதரங்களிலை 3பேர் வாத்தி ஒருத்தர் பொறியிலாளர் ஒருத்தர் தோட்டக்காரர். நான் மட்டும் விசுவாசமான எடுபிடி (ஒரு உணவகத்தை நிருவகிக்கும் பொறுப்பு ஒரு வெள்ளைக்கார முதலாளி என்னை நம்பி ஒப்படைச்சிருக்கிறான்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.