Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டையைப் போடலாமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதாவது ஒரு கடைக்குப் போறீங்கள் அது தமிழ் கடையாகவும் இருக்கலாம் அல்லது வேற்றினத்தவரின் கடையாகவும் இருக்கலாம்... அந்த கடையில் பொருட்களை வாங்கிய பின் உங்களுக்கு மிகுதி காசை தரும் போது எந்த கடையிலாவது யாராவது உங்களுக்கு தர வேண்டிய மிச்சக் காசிலும் பார்க்க கூடத் தந்திருக்கிறார்களா?...அப்படித் தந்தால் அந்த காசை திருப்பி கொடுப்பிர்களா அல்லது நீங்களே ஆட்டையைப் போட்டூடுவீர்களா? :) [உண்மையை சொல்லவும்]

நான் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கினேன்[அந்த கடையில் பொருட்கள் சரியான விலை வேற வழி இல்லை அந்த கடைக்குத் தான் போக வேண்டும் பக்கத்தில வேற தமிழ் கடை இல்லை]...பொருட்களின் விலை எல்லாமாக சேர்த்து கிட்டதட்ட £9.59 வந்தது.நான் £10.00 தாளைக் கொடுத்தேன் அங்கு நின்ட பெடியன் எனக்கு மிச்ச காசாக திருப்பவும் என்னொரு £10.00 தாளையும் 41 பென்ஸ்சையும் தந்தான்.நான் ஒன்டும் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் :D அப்படி வந்ததிற்கு முக்கிய காரணம் வேலையில் நிற்பவர்கள் தங்கட வேலையில் கவனமாய் இருக்க வேண்டாமா...அவன் தன்ட காசைப் போட்டுக் கட்டினால் தான் அவனுக்குப் புத்தி வரும் அடுத்த தரம் பிழை விடாமல் காசை கவனமாய்ப் பார்த்துக் கொடுப்பான்...இதை மாதிரி அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு உள்ளதா :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடியனும் என்ன பிளானிலை காசை கூடத்தந்தானெண்டு ஆருக்குத்தெரியும்? :D

இந்தக்காலத்திலை ஆரை எப்பிடி நம்புறது?

நான் மீண்டும் கொடுத்து விடுவேன்

சின்ன வயதில் ஒரு சம்பவம்

என் மாமா ஒரு கடை வைத்திருந்தார் (அவருக்கு மிக அழகான ஒரு மகள் இருந்தார்).. அவரின் கடையில் நின்ற ஒரு வாண்டு என் புத்திக் கூர்மையை பரிசோதித்து பார்த்து மாமாவுக்கு சொல்ல வேண்டும் என்று பாண் வேண்டிய பின் வந்த மிச்ச காசில் ஒரு ரூபாயை குறைத்து தந்தான் (அவனுக்கும் மாமாவின் மகளின் ஒரு கண் இருந்ததோ தெரியவில்லை). என் மர மண்டைக்கு இலகுவாக கூட்டல் கழித்தல் போன்ற கணக்கு போடுதல் வராது (Arithmetic) எனவே அவன் ஒரு ரூபாய் குறைவாகத் தந்ததை கவனிக்கவில்லை. நான் பேசாமல் வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்த பின், மீண்டும் அவன் என்னைக் கூப்பிட்டு.. ஹி ஹி ஹி.. "என்னத்துக்கு ஸ்கூல் இற்கு போறாய் இந்தச் சின்னக் கணக்கு உனக்கு தெரியேலையே என்று நக்கல் அடித்தான்"... எனக்கு பெரிய கவுரவு குறைச்சலாக போயிட்டு... இவன் மாமாக்கு வேற போட்டு கொடுத்தால் அவர் மகள் என்ன நினைப்பால் என்ற கவலையில கண்ணில் தண்ணி வராத குறை...

பின்னேரம் மீண்டும் மாமா கடைக்கு போய், "உங்கள் கடை பெடியன் எனக்கு ஒரு ரூபாய் கூடத் தந்துட்டான் ...இப்படியானவனை கடையில் வைத்திருந்தால் கடைசியில் நீங்கள் நட்டம் அடையப் போறியள்" என்று போட்டு கொடுத்த பின் தான் நிம்மதியாக இருந்தது. அப்படி போட்டுக் கொடுக்கும் போது அந்தப் பெடியனின் கண்ணில் தெரிந்த கோபத்தை நினைக்க இப்பவும் பயமாக இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் போன பல கடைகளில் எனக்கு கூடுதலாகப்பணம் தந்திருக்கிறார்கள்.

அநேகமாக திருப்பிக்கொடுத்துவிடுவேன்.

ஆனால் சிலர் அக்கறையில்லாமல் தொலைபேசியில் கதைத்தபடி அல்லது மரியாதைக்குறைவாக வாடிக்கையாளருடன் நடந்தால் அல்லது அரட்டை அடித்தபடி வேலை செய்து காசு தந்தால் திருப்பிக்கொடுக்கமாட்டேன்.

எனது மக்கள் பக்கத்தில் நின்றால் ஏன் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்தி நான் அந்த பணத்துக்கு ஆசைப்படவில்லை அத்துடன் நீங்களும் இது போன்று வேலை செய்ய பழகக்கூடாது என்று சொல்வேன்.

ஆனால் எனது கடையில் எவர் பணத்தை கூடச்செலுத்தினாலும் மறந்துவிட்டுச்சென்றாலும் பல நாட்களின் பின் என்றாலும் அப்பணம் திருப்பிக்கொடுக்கப்படும். இது நியாயமான தொழில் ஸ்தாபனம் என்ற பெயரைத்தங்க வைப்பதற்காக.

சிறிய, தனிப்பட்டவர்களால் நடத்தப்படும் கடை என்றால் திருப்பி கொடுப்பேன்.

பெரிய கடைகள் ( departmental stores, franchises) என்றால் எனது பணப்பெட்டிக்குள் போட்டுவிடுவேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காசாளரை பொறுத்தது.அன்பாக வணக்கம் சொல்லி தனது கடமையை செய்பவராக இருந்தால் கட்டாயம் காசை திருப்பி கொடுப்பேன். "என்ன நீயொரு பிஸ்தாவோ என ஒரு தினிசு பார்வையோடு" :D பாராமுகமாக வேலை செய்பவர் எனில் கட்டாயம் காசு திருப்பி கொடுக்கவே மாட்டேன்.

ஆட்டையைப் :rolleyes::):D

Edited by nunavilan

கடைகளில் மிகுதி தரும்பொழுது அதிகமாக தரப்பட்டால் திருப்பி கொடுத்துவிடுவேன்

ஆனால் நான் பல தடவைகள் அவசரத்தில் குறைவாக வாங்கி ஏமாந்திருக்கிறேன்

அது என் தலைவிதியோ தெரியவில்லை

பொதுவாக தற்போதைய காலத்தில் வியாபாரிகள் பலர் ஏமாற்றுப் பேர்வழிகள்

மிகுதி கொடுக்கும்பொழுது தவறுதலாக அதிகம் கொடுப்பவர்கள் பெரும்பாலும்

ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்க சந்தர்ப்பம் இல்லை

ஆனால் மிகுதி கொடுக்கும் பொழுது குறைவாகக் கொடுப்பவர்கள்

நிச்சயம் ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தான் இருப்பார்கள்

முன்பு சில தடவை ஆட்டையப் போட்டிருக்கிறேன். அன்று முழுக்க மனம் குறு குறுக்கும். நிம்மதியிராது.

அதன் பின்பு யாரும் காசு கூடத்தந்தால் திருப்பி கொடுத்து விடுவேன்.

ஆனா போன வருடம் பெரிய சுப்பர் மார்கெட் ஒன்றில் நான் வாங்கிய ஒரு பெறுமதி கூடிய பொருளுக்கு பணம் வசூலிக்கவில்லை. அதற்குரிய பணத்தை ஊருக்கு கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு அனுப்பி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பிக் கொடுத்துவிடுவேன்..! :unsure: தெரிந்தால் மானம் போய்விடுமே என்கிற ஒரே காரணத்துக்காக..! :lol:

ஆட்டையைப் :unsure::unsure::unsure:

ஆட்டையைப் போடுதல் என்றால் தமிழகத்தில் ஏமாற்றுதல்/கவர்ந்து செல்லல் என்று பொருள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பிக் கொடுத்துவிடுவேன்..! :unsure: தெரிந்தால் மானம் போய்விடுமே என்கிற ஒரே காரணத்துக்காக..! :unsure:

ஆட்டையைப் போடுதல் என்றால் தமிழகத்தில் ஏமாற்றுதல்/கவர்ந்து செல்லல் என்று பொருள்..! :lol:

நன்றி இசை.புரட்சி "ரைட்டு" போடுவதை விட்டு இவற்றை சொல்லி தரலாமில்ல. :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை.புரட்சி "ரைட்டு" போடுவதை விட்டு இவற்றை சொல்லி தரலாமில்ல. :unsure::unsure:

நீங்க கேட்பது தெரியுது தோழர் ....

ஜில்பான்ஸ் - வாய் வார்தை மன்னன் செயலில் ஒன்றும் இருக்காது

அல்லகை- என்னேரமும் ஜால்ரா ... ஆமாம் போட்டு கொண்டிருப்பவன்

எடுப்பு சோறு- ஆமாம் போட்டு எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுபவன்

அல்பம்- கஞ்சன்

தொல்பம் -விடாகண்டன்..

கும்மியடித்தல்- உதவாத வேலைக்கு ஒன்று கூடுதல்...

இணையவழி தமிழ்...

டிஸ்கி - பின்குறிப்பு

கவுஜ- கவிதை என்ற பெயரில் சகட்டு மேனிக்கு கிறுக்குவது....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கடைகளில் விலைகளை (cash register-இல்) பதிவு செய்யும் போது கதைத்துக் கொண்டு இருந்தாலும், கவனமாகவே இருப்பேன் அத்துடன் பற்றுசீட்டையும் கேட்டு வாங்கிக் கொள்வேன்.

கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது கடை முதலாளியே. அதேவேளை வாடிக்கையாளர்களை முகம் சுளிக்கவிடாமல் சமாளிப்பது கடையில் வேலை செய்பவர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் பொருட்களின் விலைவாசி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பது எனது கருத்து.

வேலை செய்பவர்கள் முகம் சுளிக்காமல் வாடிக்கையாளர்களை மரியாதையுடன் சமாளிப்பவர்களாக இருந்தால், எவ்வளவு காசு கவனக் குறைவாகத் தந்தாலும் திருப்பிக் குடுத்து விடுவேன். பாவம், நாள் முடிவில் முதலாளியிடம் கணக்குக் காட்டும் போது காசு குறைவாக இருந்தால் காசாளரின் கணக்கில் இருந்து தான் முதலாளி எடுத்துக் கொள்ளவார் என்று நினைக்கிறேன். அதனால் பாதிக்கப்படுவது அங்கு வேலை செய்பவர்கள் தான். (வேலை செய்பவர்கள் சிடுமூஞ்சிகளாக இருந்தால், எடுக்கும் பொருட்களை திருப்பி வைத்துவிட்டு வந்து விடுவேன்.)

தெரிந்தும் நாம் ஒருவரிடம் இருந்து எமக்கு சொந்தமில்லாததை எடுத்தோமானால், அன்றைய நாள் முடியும் முன்ரரே எம்மிடமிருந்து அதை விட அதிகமாக போய்விடும் என்று எனக்கு சொல்லி வளர்த்திருந்தார்கள். கீழே இருந்து காசு எடுத்தாலும் எனது தந்தையார் கோவிலுக்குப் போடும் படி அல்லது தானம் பண்ணச் சொல்லித்தான் சொல்லுவார்.

என்னைப் பொறுத்தவரைக்கும், எனக்குச் சொந்தமில்லாததை என்னால் அனுபவிக்க மனச்சாட்சி உறுத்தும்! அதே மாதிரி என்னிடமிருந்து யாரும் அவர்களுக்குச் சொந்தமில்லாததை எடுத்தால், அவர்களுக்கும் மனசாட்சி உறுத்தவேண்டும் என்றே நினைப்பேன்.

அந்தப் பணத்தை அடுத்தமுறை அதே ஆளிடம் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள், உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு அதிகமாகும். அதே நேரம், உங்களுக்கும் உங்களை நினைத்து பெருமையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப் போல செய்வேன்.

நல்ல பிகரு நின்றிச்சு என்றால்.. இம்பிரஸ் பண்ண திரும்பிக் கொடுப்பன்... ஆனா அது இம்பிரஸ் ஆகாது என்றதும் எனக்கு தெரியும்... அதனால் அவை பார்க்க.. தொண்டுநிறுவன பெட்டிக்க போட்டிடுவன்.

முறாய்க்கிறது நின்றால்.. வாங்கிக்கிட்டு நடையைக் கட்டிடுவன்..!

எனக்கு காசை விட.. சாப்பாடு வாங்கப் போற இடங்களில் காசு வாங்காமல் அள்ளித் தந்திடுவார்கள். நானும் சில சந்தர்ப்பங்களில் மறந்து போய் போயிடுவன்.. பல சந்தர்ப்பங்களில்.. நமக்கு இயற்கை அளிக்கும் அன்ன தானம் என்று நினைச்சுக்குவன். :unsure: :unsure:

அதேபோல நம் கிட்டையும் கடைக்காரங்க ஆட்டையை போட்டிருக்காங்க.. அதையும் நினைச்சுப் பார்க்கனுமில்ல..! :unsure: :unsure:

சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப் போல செய்வேன்.

நல்ல பிகரு நின்றிச்சு என்றால்.. இம்பிரஸ் பண்ண திரும்பிக் கொடுப்பன்... ஆனா அது இம்பிரஸ் ஆகாது என்றதும் எனக்கு தெரியும்... அதனால் அவை பார்க்க.. தொண்டுநிறுவன பெட்டிக்க போட்டிடுவன்.

முறாய்க்கிறது நின்றால்.. வாங்கிக்கிட்டு நடையைக் கட்டிடுவன்..!

எனக்கு காசை விட.. சாப்பாடு வாங்கப் போற இடங்களில் காசு வாங்காமல் அள்ளித் தந்திடுவார்கள். நானும் சில சந்தர்ப்பங்களில் மறந்து போய் போயிடுவன்.. பல சந்தர்ப்பங்களில்.. நமக்கு இயற்கை அளிக்கும் அன்ன தானம் என்று நினைச்சுக்குவன். :lol::unsure:

அதேபோல நம் கிட்டையும் கடைக்காரங்க ஆட்டையை போட்டிருக்காங்க.. அதையும் நினைச்சுப் பார்க்கனுமில்ல..! :unsure: :unsure:

'மாற்றான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானா வளரும்' என்று நினைக்கிறாங்கள் போல... :unsure::D

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைகளில் விலைகளை (cash register-இல்) பதிவு செய்யும் போது கதைத்துக் கொண்டு இருந்தாலும், கவனமாகவே இருப்பேன் அத்துடன் பற்றுசீட்டையும் கேட்டு வாங்கிக் கொள்வேன்.

கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது கடை முதலாளியே. அதேவேளை வாடிக்கையாளர்களை முகம் சுளிக்கவிடாமல் சமாளிப்பது கடையில் வேலை செய்பவர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் பொருட்களின் விலைவாசி அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பது எனது கருத்து.

வேலை செய்பவர்கள் முகம் சுளிக்காமல் வாடிக்கையாளர்களை மரியாதையுடன் சமாளிப்பவர்களாக இருந்தால், எவ்வளவு காசு கவனக் குறைவாகத் தந்தாலும் திருப்பிக் குடுத்து விடுவேன். பாவம், நாள் முடிவில் முதலாளியிடம் கணக்குக் காட்டும் போது காசு குறைவாக இருந்தால் காசாளரின் கணக்கில் இருந்து தான் முதலாளி எடுத்துக் கொள்ளவார் என்று நினைக்கிறேன். அதனால் பாதிக்கப்படுவது அங்கு வேலை செய்பவர்கள் தான். (வேலை செய்பவர்கள் சிடுமூஞ்சிகளாக இருந்தால், எடுக்கும் பொருட்களை திருப்பி வைத்துவிட்டு வந்து விடுவேன்.)

அதெரிந்தும் நாம் ஒருவரிடம் இருந்து எமக்கு சொந்தமில்லாததை எடுத்தோமானால், அன்றைய நாள் முடியும் முன்ரரே எம்மிடமிருந்து தை விட அதிகமாக போய்விடும் என்று எனக்கு சொல்லி வளர்த்திருந்தார்கள். கீழே இருந்து காசு எடுத்தாலும் எனது தந்தையார் கோவிலுக்குப் போடும் படி அல்லது தானம் பண்ணச் சொல்லித்தான் சொல்லுவார்.

என்னைப் பொறுத்தவரைக்கும், எனக்குச் சொந்தமில்லாததை என்னால் அனுபவிக்க மனச்சாட்சி உறுத்தும்! அதே மாதிரி என்னிடமிருந்து யாரும் அவர்களுக்குச் சொந்தமில்லாததை எடுத்தால், அவர்களுக்கும் மனசாட்சி உறுத்தவேண்டும் என்றே நினைப்பேன்.

அந்தப் பணத்தை அடுத்தமுறை அதே ஆளிடம் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள், உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு அதிகமாகும். அதே நேரம், உங்களுக்கும் உங்களை நினைத்து பெருமையாக இருக்கும்.

குட்டியின் இந்தக் கருத்து உண்மை தான் நாங்கள் ஒருத்தரை ஏமாற்றினால் எங்களுக்கு அதிலும் பார்க்க இரு மடங்காய் நட்டமாகும்.

பிறர் பொருள் நஞ்சு, இப்பிடித்தான் சொல்லி வளக்கினம் பெற்றோர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கினேன்[அந்த கடையில் பொருட்கள் சரியான விலை வேற வழி இல்லை அந்த கடைக்குத் தான் போக வேண்டும் பக்கத்தில வேற தமிழ் கடை இல்லை]...பொருட்களின் விலை எல்லாமாக சேர்த்து கிட்டதட்ட £9.59 வந்தது.நான் £10.00 தாளைக் கொடுத்தேன் அங்கு நின்ட பெடியன் எனக்கு மிச்ச காசாக திருப்பவும் என்னொரு £10.00 தாளையும் 41 பென்ஸ்சையும் தந்தான்.நான் ஒன்டும் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் :huh: அப்படி வந்ததிற்கு முக்கிய காரணம் வேலையில் நிற்பவர்கள் தங்கட வேலையில் கவனமாய் இருக்க வேண்டாமா...அவன் தன்ட காசைப் போட்டுக் கட்டினால் தான் அவனுக்குப் புத்தி வரும் அடுத்த தரம் பிழை விடாமல் காசை கவனமாய்ப் பார்த்துக் கொடுப்பான்...இதை மாதிரி அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு உள்ளதா :huh:

நேர்மையாக இருந்திருந்தால் 10 பவுண்ஸைக் கொடுத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கடைப் பொடியன் கவனமாக இல்லையென்று சாட்டிப் பணத்தைக் கையாடக்கூடாது. கடை பூட்டும்போது "சோட்" வந்தால், முதலாளி கடைப்பொடியனின் சம்பளத்தில்தான் பிடிப்பார் என்று தெரியும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாரிடமும் ஆட்டையைப் போட்டதில்லை, என்னிடம் போட்டிருக்கிறார்கள்! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தும் நாம் ஒருவரிடம் இருந்து எமக்கு சொந்தமில்லாததை எடுத்தோமானால், அன்றைய நாள் முடியும் முன்ரரே எம்மிடமிருந்து அதை விட அதிகமாக போய்விடும் என்று எனக்கு சொல்லி வளர்த்திருந்தார்கள். கீழே இருந்து காசு எடுத்தாலும் எனது தந்தையார் கோவிலுக்குப் போடும் படி அல்லது தானம் பண்ணச் சொல்லித்தான் சொல்லுவார்.

என்னைப் பொறுத்தவரைக்கும், எனக்குச் சொந்தமில்லாததை என்னால் அனுபவிக்க மனச்சாட்சி உறுத்தும்! அதே மாதிரி என்னிடமிருந்து யாரும் அவர்களுக்குச் சொந்தமில்லாததை எடுத்தால், அவர்களுக்கும் மனசாட்சி உறுத்தவேண்டும் என்றே நினைப்பேன்.அந்தப் பணத்தை அடுத்தமுறை அதே ஆளிடம் திருப்பிக் கொடுத்துப் பாருங்கள், உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு அதிகமாகும். அதே நேரம், உங்களுக்கும் உங்களை நினைத்து பெருமையாக இருக்கும்.

குட்டி வளரவே போவதில்லையா..??? :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக இருந்திருந்தால் 10 பவுண்ஸைக் கொடுத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கடைப் பொடியன் கவனமாக இல்லையென்று சாட்டிப் பணத்தைக் கையாடக்கூடாது. கடை பூட்டும்போது "சோட்" வந்தால், முதலாளி கடைப்பொடியனின் சம்பளத்தில்தான் பிடிப்பார் என்று தெரியும்தானே.

உண்மையாகவே அவன் தெரியாமல் பிழை விட்டால் என்ன செய்கிறது பாவம் என காசை திருப்பிக் கொடுக்கலாம் ஆனால் ஜொல்லு விட்டுக் கொண்டு கதைத்து கொண்டு இருப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கூடாது :huh:

என்னில் ஒரு கெட்ட பழக்கம் மிகுதியை அப்படியே பில்லுடன் சுருட்டி பொக்கெற்றுக்குள் தள்ளிவிடுவேன்

எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அப்ப கூடவோ குறையவோ யார்கண்டார்.பெரிய தொகையான விடயம் என்றால் எண்ணிப்பார்ப்பேன் அதுவும் அவர்கள் கையோட எண்ணும் என்று சொல்லுவதால்.

வாழ்க்கையை இப்படி பல பிழையான விதத்தில் வாழ்ந்துவிட்டேன்.தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என தொடர்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அவன் தெரியாமல் பிழை விட்டால் என்ன செய்கிறது பாவம் என காசை திருப்பிக் கொடுக்கலாம் ஆனால் ஜொல்லு விட்டுக் கொண்டு கதைத்து கொண்டு இருப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கூடாது :D

அவனை ஜொள்ளு விட வைக்கத் தக்கமாதிரி கதை கொடுத்து அவனது கவனத்தைக் குலைத்தது மாதிரி இருக்கின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் திருப்பி கொடுத்து விடுவேன்.சில வேளை எங்களை பரிசோதிக்கவும் அப்படி செய்யலாம். :D

குட்டி வளரவே போவதில்லையா..??? :lol:

வளர்ந்தவையள் என்னத்தை அண்ண பெருசா சாதிக்கினம்? :lol:

வளர்ந்தும் வளராமல் இருப்பது வையகத்துக்கு நல்லது. :D கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் என்று தான்... (stand out from the crowd) :D

உண்மையாகவே அவன் தெரியாமல் பிழை விட்டால் என்ன செய்கிறது பாவம் என காசை திருப்பிக் கொடுக்கலாம் ஆனால் ஜொல்லு விட்டுக் கொண்டு கதைத்து கொண்டு இருப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கூடாது :D

ஜொள்ளு விடுபவனாக இருந்திருந்தால், தவறை சுட்டிக் காட்டி இருக்கலாம்... (அடுத்தமுறை ஜொள்ளு விடாமல் அவதானமா இருந்து காசைத் தந்து இருப்பான்) அவன்ட ஜொள்ளுத் தாங்க ஏலாமல் வாங்கினது மாதிரி தெரிய இல்லை... :D நீங்கள் கதை குடுத்து அவன் தடுமாறினது மாதிரி சாடையா தெரியுது... :D அப்படி இல்லாடி சந்தோசம் :)

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.