Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் மாணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சங்கீதா on 23/06/2011 in செய்தி

யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு சில மாதங்கள் கல்வி பயின்றார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான Sheffield பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று தனது இளநிலை பொறியற் கல்வியை (B.Eng.Electronic Engg) 2007 ம் ஆண்டு பூர்த்தி செய்து இங்கிலாந்து ரீதியான தெரிவான 18 முதல் மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இந்தச் சாதனைக்காக இவருக்கு Sie William Siemen Medal பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தனது முதுமாணிக் கல்வியை உலகளாவிய ரீதியில் திறமை வாய்ந்த இங்கிலாந்து cambrige பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று தொடர்ந்தார். இங்கு முதலில் Master Of Physicology in Electronic Engg மற்றும் Doctor Of Physicology in Electronics Engg என்ற உயரிய படடங்களையும் பெற்றுக் கொண்டார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது ஆராய்ச்சி கண்டு பிடிப்புக்கள் இங்கிலாந்து பத்திரிகைகளிலும் பல்வேறு ஆங்கில இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு Patients Inventer என்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் தற்போது கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கிரிக்கெட் கழக தலைவராகவும் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொறியியற் தொழில் நுட்ப இளைய வல்லுனர் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். இவரது கண்டு பிடிப்பான radio real time tagging system ஆனது பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்பான inteligent wireless passive sensor technology system விமான நிலையத்தில் பயனிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது. இவரது கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் பாதுகாப்பு சேவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

http://www.eelampress.com/2011/06/27654/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் மனமார்ந்த வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

சபேசனின் சாதனைகளை வாசிக்க மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் சபேசன்.....!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்.....!

தமிழன் எங்கும் எதிலும் உயரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புச் சாதனையாளனான யாழ் இந்துவின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்.

யாழ் இந்துவின் மைந்தர்கள் சாதனை புரிவது புதிய விடமல்ல என்றாலும்.. இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய கண்டிபிடிப்புக்கள் என்பது தமிழ் சமூகத்தை குறிப்பாக தாயக மக்களை வளப்படுத்தவும் பயன்பட வேண்டும். அதுதான் தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும். இவர்களுக்கு பல சிரமங்களின் மத்தியிலும் சிறந்த அடிப்படைக் கல்வியை வழங்கிய பாடசாலைகளே அதிகம் நன்றியோடு பார்க்கப்பட வேண்டியவை. :)

சிதம்பரநாதன் சபேசன் அவர்களுக்கு பாராடுக்கள்.

http://www.facebook.com/sabesan.sithamparanathan

புதிய சிந்தனைகளும், புதிய கண்டுபிடுப்புக்களுமே ஒரு இனத்தை நாட்டை முன்னேற்றும். அந்த வகையில் இந்த விடயத்தில் புலம்பெயர் / தாயக தமிழர்களையும் இந்த விடயத்தில் ஊக்குவிக்கும் வழிகளில் முதலிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரநாதன் சபேசன் அவர்களுக்கு பாராடுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரநாதன் சபேசன் அவர்களுக்கு பாராடுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்புச் சாதனையாளனான யாழ் இந்துவின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்.

யாழ் இந்துவின் மைந்தர்கள் சாதனை புரிவது புதிய விடமல்ல என்றாலும்.. இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய கண்டிபிடிப்புக்கள் என்பது தமிழ் சமூகத்தை குறிப்பாக தாயக மக்களை வளப்படுத்தவும் பயன்பட வேண்டும். அதுதான் தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும். இவர்களுக்கு பல சிரமங்களின் மத்தியிலும் சிறந்த அடிப்படைக் கல்வியை வழங்கிய பாடசாலைகளே அதிகம் நன்றியோடு பார்க்கப்பட வேண்டியவை. :)

இது சிங்களவனின் இன அழிப்பைவிட விட மோசமான துவேச வாக்கியங்கள்.

தமிழன்!!!!!!!! தங்களுக்குள்ளேயே...... படிச்ச பள்ளிக்கூடத்தையும் படிச்ச படிப்பையும் வைச்சு தராதரம் பாக்கேக்கையே தெரியுது இவையின்ரை வியாக்கியானங்கள் ....இதுகளுக்குள்ளை ஒற்றுமையும் பணியாரமும்.

சபேசனுக்குப் பாராட்டுகள்.

அதென்ன யாழ் மாணவன். தமிழ் மாணவனென்றே குறிப்பிடலாமே, அது நன்றாயிருந்திருக்கும். இதுவும் ஒரு பிரதேச வாதம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களுக்கு!!!

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனைச் சான்றோன் எனக் கேட்ட தமிழ் மண்!

  • கருத்துக்கள உறவுகள்

திரைகடல் ஒடியும் திரவியம் தேடவேண்டும்.................

அதை எங்கிருந்து வந்தோமோ அங்கேயும் ஒரு பகுதியையாவது சென்று சேர்க்க வேண்டும். எமை செதுக்கிய சிற்பிகளுக்கு செய்யும் தொண்டாக இருக்கபோவது அது ஒன்றுதான்.

சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன்.

சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன்.

யாழ் மாவட்ட செயலகத்தினால் 2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.இன்றைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 1500m ஓட்ட நிகழ்வில் 36ஆண்டு காலம் முறியடிக்கபடாதிருந்த சாதனையை குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன் இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.

குறித்த துரத்தினை 04 .20 00 வினாடிகளில் ஓடி முடித்தார். முன்னர் இருந்த சாதனை தூரம்(04 .20 02 )வினாடிகள் ஆகும். அது இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார் இவர் முன்னைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 5000m ஓட்ட நிகழ்வில் 11 செக்கன்கள் தாமதமாக வந்ததால் புதிய சாதனையை தவறவிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட விளையாட்டு நிகழ்வில் குடத்தனை வடக்கினை சேர்ந்த வீரர் ரவி ரஜிகரன்.1500m ,5000m , 10000m , ஓட்ட நிகழ்வில் தங்க பதக்கத்தை பெற்றுகொண்டார்.

“இவரின் சாதனையை ஒருமுறை அதை வாழ்த்தட்டும் இனிவரும் தலைமுறை”..

நன்றி (யாழ் நிருபர் )

http://www.pathivu.com/news/16993/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவனின் இன அழிப்பைவிட விட மோசமான துவேச வாக்கியங்கள்.

தமிழன்!!!!!!!! தங்களுக்குள்ளேயே...... படிச்ச பள்ளிக்கூடத்தையும் படிச்ச படிப்பையும் வைச்சு தராதரம் பாக்கேக்கையே தெரியுது இவையின்ரை வியாக்கியானங்கள் ....இதுகளுக்குள்ளை ஒற்றுமையும் பணியாரமும்.

கு.சாண்ணா இதில் பிரதேச வாதமும் இல்ல.. பள்ளிக்கூட வாதமும் அல்ல. எமது தாய் போல எமக்கு அறிவூட்டிய பள்ளிகளும் தாயே. அதன் மைந்தர்கள் புகழீட்டும் போது அது அந்தத் தாயை தான் அதிகம் போய் சேர வேண்டும். அதுவும் இடர் மிகு சூழலில் எல்லாம் தாழாது அவள் எங்களை உருப்படியான மனிதர்களாக உருவாக்கி விட்டுள்ளாள். அதற்கான நன்றியே இதுவாகும். ஒரு செய்தியைப் பார்க்கிற பார்வையில் தான் அதில் இருக்கும் விடயம் உணரப்படும். உங்கள் பார்வையில் இருக்கும் தவறை திருத்தி கொண்டாலே போதும்.. ஒற்றுமை தானே வளரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்குப் பாராட்டுகள்.

அதென்ன யாழ் மாணவன். தமிழ் மாணவனென்றே குறிப்பிடலாமே, அது நன்றாயிருந்திருக்கும். இதுவும் ஒரு பிரதேச வாதம்தான்.

யாழ் இந்துவின் மைந்தன் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது அங்கு கல்வி கற்ற கற்கும் எல்லோரையும் குறிக்கும் ஒரு சொல்.அது பிரதேசவாதமோ.. பள்ளி வாதமோ.. பெருமையோ அல்ல.. தாய் போன்று எமக்கு கல்வி அறிவூட்டிய பள்ளியை எக்காலத்திலும் நாம் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக் காலத்தில் இருந்து மாணவர்களிடையே வளர்க்கப்பட்ட ஒரு உணர்வு.

நீங்கள் அதை தவறாக உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புகழீட்டும் போது உங்கள் பெற்றோர் தான் அதிகம் மகிழ்வுறுவார்கள் பேசப்படுவார்கள். அந்தப் புகழுக்காக மொத்த இனத்தையும் புகழ முடியுமாக இருந்தாலும்.. பெற்றோருக்கு ஒரு தனியிடம் உண்டு. அது போல் தான் பள்ளியும். அதைச் சொல்வது பிரதேசவாதமோ பள்ளி வாதமோ ஆகாது. உங்கள் வாதப்படி நோக்கினால் மேற்படி செய்தியில் பல்கலைகழக வாதங்கள்.. நாட்டு வாதங்கள் என்று பலவற்றை இனங்காட்டலாம். :):D

Edited by nedukkalapoovan

சிதம்பரநாதன் சபேசன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

எனக்கும் இந்த பாடசாலையில் படித்த நண்பர்களுண்டு. அத்தனையும் தலைக்கனம் பிடித்தவர்கள். யாழ் இந்து என்றால் அவர்கள் வேறு யாருடனும் சேரமாட்டார்கள். அவர்களுக்கென்று ஒரு குரூப். அவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற நினைப்பு. ஏன் இது........?

என்ன நன்மை இதனால் எமக்கு??????

இதுவும் ஒருவகை எம்மவருக்கிடையிலான பிரிவுதானே........? :(:(:(:(

விசுகு அண்ணா நீங்கள் சொல்வது 100 க்கு 200% உண்மை. இதனை நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பல முறை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். இவ்வாறான தலைக்கனம் கூடிய ஜென்மங்களால் கல்லூரியின் தனிப்பட்ட புகழும்.. மாணவர்களின் சாதனைகளும் மக்களால் பார்க்கப்படும் பார்வையில் இரட்டை தன்மையை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

என்னைப் பொறுத்த வரை நான் இவற்றிற்கு எதிரானவன். இன்று வரை இந்தத் தலைக்கனங்கள் நடத்தும் பழைய மாணவர் சங்கங்கள்.. அமைப்புக்கள் எவற்றிலும் இணைய வில்லை. அவர்கள் நடாத்தும் நிகழ்ச்சிகளுக்கு போவதும் இல்லை. கல்லூரிக்கு உதவ வேண்டின் நேரடியாக கல்லூரி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு மட்டுமே உதவுவேன். எனது கல்லூரி எனக்கு தந்த நற்சான்றிதழ் மட்டுமே எனக்குப் போதும். இவர்களைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை. கல்லூரியின் தனிப்பட்ட நன்மதிப்பை கருத்தில் கொண்டு கல்லூரி வழக்கமான "நாம் இந்துவின் மைந்தர்கள்" என்ற அந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மட்டுமே எனக்கு உடன்பாடு உண்டு. அவை தலைக்கனம் பிடித்தவர்களால் தவறாக பயன்படுத்தப்படுவது வேதனை. :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

இந்தக்குறை பலருக்கும் இருக்கலாம். அதனாலேயே இங்குமுன்வைத்தேன். அதேநேரம் இப்பாடசாலையிலிருந்து எமக்காக உழைத்தோர், உயிர் கொடுத்தோர் பலருண்டு. அதுவும் எல்லோருக்கும் தெரியும்.

Edited by விசுகு

யாழ் இந்துவின் மைந்தன் என்று தான் குறிப்பிட்டுள்ளேன். யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது அங்கு கல்வி கற்ற கற்கும் எல்லோரையும் குறிக்கும் ஒரு சொல்.அது பிரதேசவாதமோ.. பள்ளி வாதமோ.. பெருமையோ அல்ல.. தாய் போன்று எமக்கு கல்வி அறிவூட்டிய பள்ளியை எக்காலத்திலும் நாம் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக் காலத்தில் இருந்து மாணவர்களிடையே வளர்க்கப்பட்ட ஒரு உணர்வு.

நீங்கள் அதை தவறாக உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புகழீட்டும் போது உங்கள் பெற்றோர் தான் அதிகம் மகிழ்வுறுவார்கள் பேசப்படுவார்கள். அந்தப் புகழுக்காக மொத்த இனத்தையும் புகழ முடியுமாக இருந்தாலும்.. பெற்றோருக்கு ஒரு தனியிடம் உண்டு. அது போல் தான் பள்ளியும். அதைச் சொல்வது பிரதேசவாதமோ பள்ளி வாதமோ ஆகாது. உங்கள் வாதப்படி நோக்கினால் மேற்படி செய்தியில் பல்கலைகழக வாதங்கள்.. நாட்டு வாதங்கள் என்று பலவற்றை இனங்காட்டலாம். :):D

நெடுக்கின் கருத்துக்கு எதிர்க்கருத்தல்ல என் கருத்து. இந்த விடயத்தலைப்பிற்கு முன்வைத்த கருத்து அது. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சிதம்பரநாதன் சபேசனுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

எனக்கும் இந்த பாடசாலையில் படித்த நண்பர்களுண்டு. அத்தனையும் தலைக்கனம் பிடித்தவர்கள். யாழ் இந்து என்றால் அவர்கள் வேறு யாருடனும் சேரமாட்டார்கள். அவர்களுக்கென்று ஒரு குரூப். அவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற நினைப்பு. ஏன் இது........?

என்ன நன்மை இதனால் எமக்கு??????

இதுவும் ஒருவகை எம்மவருக்கிடையிலான பிரிவுதானே........? :(:(:(:(

அவர் அவர் கல்வி பயின்ற பாடசாலைகள் அவர்களுக்கு வாழ்கையில் மறக்க முடியாதவை..............

எமக்கு எந்தளவு அறிவு உள்ளதோ அந்தளவை அள்ளி தந்தது அந்த பாடசாலைகளே ஆக அந்த பாடசாலைக்கு நன்றியுடன் கடைசிவரை யிருப்பது என்பது மற்றைய பாடசாலைகளை பழிப்பதென்றாகாது.

ஆனால் யாழை பொறுத்தவரை தமிழனை பொறுத்தவரை.............

கிணற்று தவழை வாழ்வே பெரும்பாண்மையினருக்கு. அந்த சமூதாயத்திற்குள் கிணற்று தவளைகளாக கிடந்த ஒரு இருவரை இழிந்து ஆவதற்கு ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த சமூதாயத்தையும் வெளியே கொண்டுவந்து வெளியுலகை காட்டினாலே அவர்களால் உண்மைகளை புரியமுடியும்.

முள்ளிவாய்காலின் இறுதியில் ஆடுமாடுகளை போல் சாய்த்து சென்று முள்ளுகம்பி வேலிக்குள் எல்லோரையும் அடைத்தான். அதற்குள் இருந்து விடுதலை ஆன எத்தனை பேர் நாங்கள் மனிதர்கள் என்று உணாந்தார்களோ தெரியாது............. அல்லது இன்னமும் நாங்கள் சாதியில் கூடியவர்கள் என்ற கூத்தை திரும்பவும் அதே மண்ணில் அரங்கேற்றி விட்டார்களாவும் தெரியாது. இது கிணற்று தவளை நிலையே தவிரே வெறுன்றும் இல்லை. சனல்4 தொலைகாட்சி தாழ்ந்த சாதியினருடன் எங்களையும் இணைத்து மக்கள் என்று ஒரே விதமாக காட்டிவிட்டார்கள் என்று வழக்கு போடுவார்ககளோ என்றும் தெரியாது (ஆனால் அதுக்கு வக்கில்லை என்பது எங்களுக்கு தெரியும்).

யாழ் பள்ளி நிலமைகளும் அப்படிதான்............

பருத்துறை காட்லி பற்றி அவர்கள் கேள்ளிபடட்டது கூட இல்லை என்பது எனக்கு தலைவிறைப்பை பல தடவை உண்டுபண்ணியிருக்கிறது.

தமிழனில் பெரும்பாண்மை நான் படித்தவன் என்பதை பாறைசாற்வே படித்தார்கள் அறிவுக்காக படித்தவர்கள் மிக சிலரே அவர்களுடைய உழைப்புகள் எமது மண்ணில் என்றும் நிலதை;திருக்கின்றது. மற்றையவர்கள் ஒ ஒ ஐசே என்று எதையோ வாய்வலிக்க பேசுவதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன் ஆனபடி எதையும் ஆக்குவதற்கு அடிப்படை அறிவு வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.