Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்றிரவு அமரத்துவமடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-07-06 21:51:16]

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

ஈழத் தமிழ் சமூகத்திலிருந்து தலைசிறந்த அறிஞரும்; சமூக அரசியல் விமர்சகரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான கார்த்தேகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது அகவையில் இன்று கொழும்பில் காலமானார்

மே மாதம் 10 ம் திகதி 1932 ம் ஆண்டு கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி அவர்கள் ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட அவர் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில்' தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கிய இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில்; ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண சமூகத்தை புரிந்துகொள்வது பற்றி,

இலங்கைத் தமிழர் - யார், எவர்? - யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு -

தமிழில் இலக்கிய வரலாறு -இலக்கணமும் சமூக உறவுகளும் -

மதமும் கவிதையும் -

தமிழ் கற்பித்தலில் உன்னதம் - சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் -

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி என்பன அவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்களுக்கு அப்பால்

ஒரு தமிழ் அறிவாளியின் இழப்பு

ஆழ்ந்த அனுதாபங்கள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தமிழ் கதைப்பதே, தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதே கேவலம் என்ற இன்றைய வாழ்வுச் சூழ்நிலையில் பேராசிரியர் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. கதைகள், நவீனங்கள் என்ற பொதுத் தளத்தில் பணியாற்றாது தமிழ் மொழியியல் தமிழ் சமூகவியல் என்ற பரந்த பரப்பில் நின்று தமிழுக்கு பேராசிரியர் ஆற்றிய பணி ஈடுயிணையற்றது.

பேராசிரியர் அவர்கள் மேடைகளில் உரையாற்றுவதை பல முறை கேட்டு இருக்கின்றேன். மொழியியல் சமூகவியல் பற்றிய அறிவு அறவே இல்லாத ஒருவருக்கு கூட மிக தெளிவாக விளங்கும் வண்ணம் அவற்றை உரைப்பதிலும் மிகவும் தேர்ந்தவர்

பேராசிரியரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தின் துயரில் மானசீகமாக பங்கு கொள்கின்றேன்

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எவ்வளவு கற்றாலென்ன,மேதையாயிருந்தாலென்ன, தமது சுயதம்பட்டங்களை காப்பதற்க்காக என்றைக்கு செம்மொழி மகாநாட்டுக்கு ,எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறந்து ,அதனை மறைக்க எண்ணிய கருணாநிதிக்கு செம்பு தோக்கினாரோ, அன்றிலிருந்து காலம் இவரின் இழப்பை ஒரு சராசரி மனிதனின் இறப்பாகவே பதிவு செய்யும்!

தமிழ் இலக்கிய உலகத்திற்கு இவரின் இழப்பு பேரிழப்பாகும்!

சாய்ந்தது

தமிழ்

இழப்பு

தமிழிற்கு

வார்த்தையில்லை

எனக்கு

சாந்தி

ஓம்

சாந்தி

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1. Being a Tamil and Sri Lankan

http://tinyurl.com/5vtukeg

2. Lutesong and Lament: Giving Voice to a Generation

http://tinyurl.com/6z7t46b

3. Sri Lankan Tamil Society and Politics

http://tinyurl.com/6cdq5jx

4. Studies in Ancient Tamil Society

http://tinyurl.com/67vxpa2

5. The Tamil Film as a Medium of Political Communication

http://tinyurl.com/6ho6crl

6. அரங்கு ஓர் அறிமுகம்

http://tinyurl.com/678gdeh

7. இலக்கணமும் சமூக உறவுகளும்

http://tinyurl.com/5rrfxw7

8. இலங்கைத் தமிழர் - யார், எவர்

http://tinyurl.com/66gjsbr

9. கற்கை நெறியாக அரங்கு

http://tinyurl.com/69s5ydj

10. சங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்

http://tinyurl.com/5s4qvns

11. சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

http://tinyurl.com/6x4uwgp

12. சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள்

http://tinyurl.com/5uwuk7l

13. தமிழில் இலக்கிய வரலாறு

http://tinyurl.com/64khu7t

14. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

http://tinyurl.com/6dqnckd

15. தமிழ் கற்பித்தலில் உன்னதம்

http://tinyurl.com/62dg2ax

16. தமிழ் கற்பித்தல்

http://tinyurl.com/63tb5de

17. தமிழ்ச் சமூகமும் - பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும்

http://tinyurl.com/689qlml

18. தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்

http://tinyurl.com/6anjwj4

19. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

http://tinyurl.com/66zensz

20. திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு

http://tinyurl.com/6hz628o

21. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

http://tinyurl.com/6duwgyf

22. பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

http://tinyurl.com/5umnugj

23. மதமும் கவிதையும்

http://tinyurl.com/6l6cfnu

24. யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்

http://tinyurl.com/6cllj5t

25. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு

http://tinyurl.com/6jdxtex

26. யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை

http://tinyurl.com/6kxj9cf

  • கருத்துக்கள உறவுகள்

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேராசிரியருக்கு கண்ணீர் அஞ்சலிகள்...அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”

“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”

  • கருத்துக்கள உறவுகள்

தலை சிறந்த தமிழ்ப் புத்திஜீவியும், தமிழ் அறிவாளரும் ஆன பேராசிரியர் சிவத்தம்பியின் இழப்பு, நிரப்ப முடியாத வெற்றிடமாகும்!

இவரைத் தனிப் பட்ட முறையில் தெரியும்!

இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆனாலும் இவரது கடைசிக் கால நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஆனாலும் இவரது கடைசிக் கால நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததுடன், தற்போதைய காலத்தில் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும் பெருமைப்பட்டேன். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து ஒராண்டுக்குள் கருணாநிதி கூட்டிய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாரோ.... அன்றே, இவர் தன்னை தாழ்த்தி கொண்டார். குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழிக்கும்.. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆற்றிய பங்களிப்புக்காக இவரை நினைவுகூற முடிகின்ற போதும்.. கொழும்புக்கு இடம்பெயர்ந்த பின் இவரிடம் காணப்பட்ட குழப்பகரமான நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் இவர் தொடர்பான நல்லெண்ணத்தை கணிசமாக குறைத்துவிட்டுள்ளது.

இருந்தாலும்.. ஒரு தமிழ் சான்றோன் என்ற வகையில் அன்னாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300sivathambi.jpg

தமிழ்கூறும் நல்லுலகின் இலக்கிய விமர்சகரும் திறனாய்வாளரும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி, சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தெஹிவளை வெண்டவற் பிளேஸில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்றிரவு 8.00 மணியளவில் காலமாகியுள்ளார்.

இவரது உடல் அன்னாரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பண்டிதரும் சைவப்புலவருமான த.பி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்த சிவத்தம்பி, ரூபாவதி நடராஜாவை திருமணம் செய்தார். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நன்கு அறியப்பட்டவராகவும் விளங்கியவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கரவெ ட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்ற இவர் தனது இடை நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலேயே ஆரமபத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு முனைவர் (கட.ஈ) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

தொடர்ந்து, தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டுவரை பணிபுரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு, பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இலங்கையர் கோன் எழுதிய “விதானையார் வீட்டில்’ தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆக்கங்கள்

பல்வேறு துறைகளிலும், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்கு புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலை என பல்துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்ஷிய சிந்தனைப்போக்குடைய இவர் யாழ்ப்பாண சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

இவர் பற்றிய படைப்புக்கள்

தமிழ் அரசின் திரு வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில் கரவையூற்று எனும் தலைப்பில் யாழ்ப்பாணம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவருடைய நூல்கள்

இலங்கைத் தமிழர் யார், எவர்? , யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு , தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும் , மதமும் கவிதையும் , தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு), பண்டைத் தமிழ்ச்சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி உள்ளிட்ட பல்வேறான நுõல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரது மரணச் செய்தியைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் முக்கியஸ்தர்கள் மற்றும் நம் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் அன்னாரது இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததுடன், தற்போதைய காலத்தில் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும் பெருமைப்பட்டேன். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து ஒராண்டுக்குள் கருணாநிதி கூட்டிய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டாரோ.... அன்றே, இவர் தன்னை தாழ்த்தி கொண்டார். குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிறியின் கருத்தே எனதும்.என்றாலும் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேன்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியரி சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி துன்பத்தில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்தினரின் சோகத்தில் பங்கெடுத்துக் கொண்டு அவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்

எங்கள் ஈழத்தின் மோசிகீரனே! மன்னன் கவரி வீசுவான்; சென்றுவருக

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-08 16:50:38| யாழ்ப்பாணம்]

ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி தமிழ் நெஞ்சங்களை ஆழ்ந்த வேதனையில் மூழ்கடித்துள்ளது. ஈழத்தமிழர்களின் தமிழ் மொழிக்கான பணி என்ன?அந்தப் பணியைச் செய்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவுசார் காத்திரம் எத்தன்மையது என யாரேனும் வினவினால், அந்த வினவல் அத்தனைக்கும் நாம் சுட்டிக்காட்டக் கூடியவராக விளங்கியவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்றால் அதில் மிகைப்படுத்தல் எதுவும் இல்லை.

ஈழத்துத் தமிழ்ச் சிறப்பின் அடையாளமாக விளங்கிய அவரின் தமிழுக்கான அர்ப்பணிப்புக்கள் என்பதற்கப்பால், தமிழினத்தின் அவலங்கள், உரிமைப் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் ஆழமான கருத்தியலைக் கொண்டிருந்தமை, பேராசிரியர் சிவத்தம்பி என்ற பெயருக்கு உலகளாவிய பெருமையையும், புகழையும் கொடுத்ததெனலாம்.

தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக-நுண்கலைத் துறையின் வளர்ச்சிக்காக- நாடகப் பாரம்பரியத்தின் எழுச்சிக்காக-ஈழத்தமிழினத்தின் வரலாற்றுக்காக-எங்கள் கிராமங்களின் பண்பாட்டுக் கோலங்களை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தன்வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

அவரின் உயிர்பிரியும் வரை தமிழுக்காக வாழ்ந்த அவர், ஈழத்தமிழினத்தின் சால்புமிக்க சான்றோனாக, ஒப்புரவாளராக, ஒழுக்கத்தின் உத்தமராகத் திகழ்ந்தார்.

தமிழ் மொழிக்கான அவரின் அர்ப்பணிப்புகள் ஏராளம் எனப் பட்டியல் இடப்படுகின்ற அதேநேரம், எம் இனம் தொடர்பில் அவர் கொண்டிருந்த நியாயத்துவங்கள், யதார்த்தங்கள், உணர்வுபூர்வமான சிந்தனைகள் வெளிவராமல் போனமைக்கு இலங்கை நாட்டில் இருக்கக் கூடிய அபாயமான சூழமைவே காரணம் எனலாம்.

இலங்கை நாட்டில் சிங்களவர் தரப்பிலும் தமிழர் தரப்பிலும் கருத்துச் சுதந்திரத்துக்கு இடம்கிடைத்திருக்குமாயின் தமிழ்ச் சான்றோனாகிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் சிந்தனைகள் அரசியல் பரப்பிலும், இனப்பிரச்சினைக்கான தீர்விலும் காத்திரமான வகிபங்கை கொண்டிருக்கும் என்பது சர்வநிச்சயம்.

என்ன செய்வது அறிவியலுக்கும் அறிஞர்களுக்கும் இம்மியும் இடம்கொடுக்காத இலங்காபுரியில் சிவத்தம்பி போன்ற மாபெரும் அறிஞர்கள் மெளனமாக இருப்பதையே புத்திசாலித் தனமாகக் கருதியமை தவிர்க்க முடியாததே.

எதுவாயினும், எங்கள் ஈழத்து மோசிகீரனார் பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஈழத்தில் தமிழ் ஆட்சி புரிந்திருந்தால், நிச்சயம் மன்னன் கவரி வீசியிருப்பான்.

ஓ! நாங்களோ நாடற்றவர்கள்-வீடற்றவர்கள். என்செய்வோம். பேராசிரியப் பெருமகனே! தமிழ் மன்னன் வருங்கால் கவரி வீசி உம் தமிழ்ப் பணிக்கு அஞ்சலி செய்வான். அதுவரை இதயம் வெதும்பி உதிரம் கொதித்து கண்ணீர் சொரிந்து விடை தந்தோம். சென்று வருக.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20641

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தம்பி அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள், அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. :(:(

sympathy12.gif

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிஞன் சிவத்தம்பி ஜயா அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி!!!

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பேரறிஞர் பேராசிரியர் அவர்கட்கு…..

உங்களுக்கு எங்கள் அஞ்சலி !!!

அந்த மாபெரும் கல்வி தந்தை தந்த தரமான கல்வி எங்கள் வாழ்வில் அவரை நினைவு கூறும்.

நீங்கள் மறைந்தாலும் எம் தமிழ் வாழும்வரை எம்மோடு வாழ்வீர்!!!

அஞ்சலியுடன் …ஈழ இணையம்eelamwebsite.com

Edited by puthiyavan28

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.