Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளின்படி தாம் ஆணையாகக் கேட்டிருந்த பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கெ தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவைத் தந்திருப்பதாக இந்தத் தேர்தல் வெற்றியின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தேர்தல் காலத்தில் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்கள் ஆதரவாளர்களுக்கிடையே பகிரப்பட்ட அறிக்கை ஒன்றின்படி போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசை விட இந்தியாவையே நோக்கி எழுப்பப்படுவதால் தமிழர்கள் இந்த விசாரணைகள் பற்றி அதிக எதிர்பார்ப்புகளுடன் இருக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. இலங்கையிலிருக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சாராத சில தமிழ் உணர்வாளர்களின் தகவலுக்கேற்ப, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய மத்திய அரசிற்குமிடையே போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய புரிந்துணர்வு ஒன்று எட்டப்பட்டிருப்பதாகவும், அதற்கமைய இந்தியாவை நோக்கியே பெரும்பாலும் நீட்டப்படும் போர்க்குற்றச் சாட்டுக்களை தேசியக் கூட்டமைப்பு கைவிடுவதென்றும், அதற்குப் பிரதியுபகாரமாக 13 ஆம் திருத்தச் சட்டத்தை வேறு பெயரில் தூசிதட்டி மீண்டு சிங்கள அரசை சமர்ப்பிக்க தாம் உதவுவதாகவும் இந்தியா கூறியிருக்கிறது.

கொழும்பிலுள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்திற்கேற்ப பெரும்பாலான தமிழர்கள் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் பங்குபற்றவில்லை என்றும், இத்தேர்தல் தொடர்பில் அதிக ஈடுபாட்டுடன் அவர்கள் காணப்படவில்லை என்றும் கூறியிருப்பதுடன், இதற்கான காரணம் பெரும்பாலும் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் மீதான அதிருப்தியே என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் பற்றி மக்கள் அதிகம் கவனம் கொன்டிருப்பதாகவும் அவர்கள் தெர்வித்தனர்.

அண்மையில் சுமந்திரன் எம்.பி வெளியிட்ட கருத்துக்கள் பற்றி தமிழகத்திலும், இலங்கையிலும் அதிக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொல்ல இவர் யாரென்றும், யார் சார்பாக இவர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டார் என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சாராத சில தமிழுணர்வாளர்கள் அண்மையில் கொழும்பிலுள்ள மேற்குலக ராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது, தமிழரை இலங்கைத் தீவுக்குள் தனியான தேசிய இனமாக அங்கீகரித்தாலும்கூட , நடைபெற்றது ஒரு இனவழிப்புப் போர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனராம்.அத்துடன் தமிழருக்குச் சிங்களவரிடமிருந்து சுதந்திரம் வேண்டுமென்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவர்கள், தமிழர்பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், தமிழர் கலாச்சாரம் மீதான திட்டமிட்ட அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் பற்றி அறிந்துகொள்வதில் எந்தவித நாட்டாமும் காட்டவில்லை என்றும் கருதப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவர் இப்படி நடப்பது இயற்கைதான் என்கிற கருத்தையே கொண்டிருக்கின்றனர்.சிலர் உண்மையிலேயே நடப்பவற்றை புரிந்துகொண்டாலும்கூட, தமிழர்க்கான சுதந்திரத்துக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இந்திய இருந்துவருவதை அறிந்துள்ளதால் வெளிப்படையாக இந்தியாவுக்கு எதிராக நடந்துகொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

தமிழ்நெட்டில் வந்த முழுமையான கட்டுரையைப் படிக்க

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34225

  • Replies 56
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இந்திய ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்துவதன் மூலம் எதனையும் பெற முடியுமா என்ற விசப் பரீட்சையில் மீண்டும் இறங்கி இருக்கிறார்.

தமிழ் மக்கள் முன் இருந்த ஒரே தெரிவு.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு. காரணம்.. அது புலிகள் ஏற்படுத்திய அமைப்பு. அது மக்களின் உரிமைக்காக நேர்மையோடு உழைக்கும் என்ற எதிர்பார்ப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும்.. பிற அரசியல் கட்சிகள் போல.. தேர்தல் களத்தில் ஒன்றும்.. அரசியல் களத்தில் இன்னொன்றும் செய்யுமாக இருந்தால்.. மக்கள் மீண்டும் ஒரு திடமான முடிவை எடுப்பார்கள்.

சம்பந்தன் தனக்கு போட்டியாக எந்த அரசியல் சக்தியும் இல்லை என்ற காரணத்திற்காக தமிழ் மக்களின் 35 ஆண்டு கால போராட்ட நியாயங்களை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டால் அதன் விளைவு மிகக் கடுமையானதாக அமைவதோடு தமிழினத்தின் பேரழிவுக்கே அது உதவி நிற்கும்..!

சந்தர்ப்பங்களை தவறவிடுவது தமிழ் தலைமைகளின் வரலாறு. சம்பந்தன் அதற்கு விதிவிலக்கு இல்லைப் போலும்.

சம்பந்தனை.. கூட்டமைப்பை.. கட்டுப்படுத்தும்.. கேள்வி கேட்கும் பலத்தை புலம்பெயர் மக்கள் தமது ஒற்றுமையான செயற்பாட்டின் மூலம் உறுதிப் படுத்திக் கொண்டாலே அன்றி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. விடுதலைப்புலிகளின் ஸ்தானத்தில் வைத்து.. எமது உரிமைகள் தொடர்பில் நம்ப முடியாது. விடுதலைப்புலிகள் கொள்கைக்காக மக்களுக்காக உயிர் விட்டவர்கள். சம்பந்தன் போன்றவர்கள்.. அரசியலுக்காக மக்களின் உரிமைகளை விலை பேசக் கூடியவர்கள்..!

இதில் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும்... சிங்கள.. இந்திய ஆளும் வர்க்கங்களின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை மன்னிக்கவோ.. தமிழீழக் கொள்கையைக் கைவிடவோ.. எனி தமிழ் மக்கள் தயார் இல்லை..! இந்தச் செய்தியை தமிழ் மக்கள் சார்ப்பாக சம்பந்தனிடம் சமர்ப்பிப்பது நன்று. சம்பந்தன் இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொண்டு.. அதன் வழி ஒரு இடைக்கால தீர்வை நோக்கி பயணிப்பாராக இருந்தால்.. அதனை ஏற்றுக் கொள்ளலாம். மற்றும்படி.. ஒன்றுபட்ட இலங்கை.. இனப்படுகொலை மன்னிப்பு.. இவற்றின் மூலம் தமிழ் மக்களின் சாவுகளின் மீது நின்று இனத்தை விலை பேச சம்பந்தனோ.. கூட்டமைப்போ முயன்றால்... அதன் முடிவை தமிழ் மக்களே தீர்மானிக்கவும் செய்வார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளின்படி தாம் ஆணையாகக் கேட்டிருந்த பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கெ தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவைத் தந்திருப்பதாக இந்தத் தேர்தல் வெற்றியின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இதற்காகவா வட்டுக்கோட்டை ஆணை, அறுபது வருட போராட்டமும், உயிர்த்தியாகங்களும், வலிகளும், இழப்புகளும், அழிவுகளும்...? ம்..காலம் திரும்பாது. :wub:

சம்பந்தர் இந்திய ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்துவதன் மூலம் எதனையும் பெற முடியுமா என்ற விசப் பரீட்சையில் மீண்டும் இறங்கி இருக்கிறார்.

தமிழ் மக்கள் முன் இருந்த ஒரே தெரிவு.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு. காரணம்.. அது புலிகள் ஏற்படுத்திய அமைப்பு. அது மக்களின் உரிமைக்காக நேர்மையோடு உழைக்கும் என்ற எதிர்பார்ப்பு.

நீங்க ஓவரா உணர்ச்சிவசபடுறீங்க பங்காளி! ஆயுதபோராட்டத்திலீடுபட்ட புலிகளே இந்தியவர்க்கத்தின் உறவை எவ்வழியிலாவது புதுபிக்க வேண்டி நின்றார்கள் என்பதே வரலாறு!

அதற்கு காரணம், வேற வழியே இல்லை என்பதுதான்!

அவர்களே அப்டினா, இந்த முன்னாள் அகிம்சை,அகத்தி கீரை சூப் கேசுகள் எம்மாத்திரம்?

அப்புறம் என்ன புலிகள் ஏற்படுத்திய அமைப்பு ,அது மக்களின் உரிமைக்காக , நேர்மையாக உழைக்கும் என்ற எதிர்பார்ப்பா? அட சும்மாபோங்க நீங்க கீச்சு கீச்சு மூட்டிகிட்டு, .........

புலிகளில் இருந்தவர்களே நேர்மையாக இல்லை இப்போல்லாம்!

ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் சம்பந்தன் தீர்வு கேட்கலாம். பிழை இல்லை.

அவர் ஈழம் என்று சொல்லி பேசமுடியாது.

ஒரே நாட்டுக்குள் என்ன தீர்வு வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதுதான் வேன்டும் என்று உலகநாடுகளிடம் சொல்ல வேண்டும்.

தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஆகவே உந்த அரசியல்வாதிகளின் பேச்சுக்களில் அதிகம் நாட்டம் கொள்ளத்தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் சம்பந்தன் தீர்வு கேட்கலாம். பிழை இல்லை.

அவர் ஈழம் என்று சொல்லி பேசமுடியாது.

ஒரே நாட்டுக்குள் என்ன தீர்வு வேண்டும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதுதான் வேன்டும் என்று உலகநாடுகளிடம் சொல்ல வேண்டும்.

இதைதான் இப்ப அவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது வக்களித்த மக்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் வெற்றி மமதையில் சம்பந்தர் தன் இந்திய விசுவாசத்தைக் காட்ட ஆரம்பிக்கின்றார்.வேறு தெரிவு இன்றி கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்தார்களே ஒழிய அவர்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து அல்ல. கூட்டமைப்பை ஆதரிக்காவிட்டால் டக்ளசும் மகிந்தவும் போட்டியின்றி வென்றிருப்பார்கள்.பேர்க்குற்ற விசாரணை மீதான அழுத்தங்கள் குப்பைக் கூடையில் போடப்படும் என்று அஞ்சியே மக்கள் கூட்டமைப்பை தேர்வு செய்தார்கள்.ஆனால் சம்பந்தரோ போர்க்குற்ற விசாரணையை தூக்கிக் குப்பைக் கூடையில் எறியத் தயாராகின்றார்; என்றால் டக்ளசே வென்றால் சிறிது அபிவிருத்தியாவது மிஞ்சும்.சம்பந்தரின் பேட்டி தமிழ்மக்களை ஜனநாயகப் பாதையில் இருந்து விலகவே தூண்டும்.இந்த முறை 46வீத வாக்களிப்பானது அடுத்த தேர்தலில் குறைய வாய்ப்புண்டு.நடந்த போர்க்குற்றத்திற்கான நீதியையே தமிழ்மக்கள் கோரிநிற்கிறார்கள்.அது இந்தியாவைப் பாதித்தால் என்ன சிறிலங்காவைப் பாதித்தால் என்ன எமக்கு வேண்டுவது நீதி.அதன் மூலமான உலக நாடுகளின் உதவியுடனான சர்வதேச வாக்கெடுப்பு.சம்பந்தருக்கு நான் சவால் விடுகிறேன்.வரும் மாகாணசபைத் தேர்தலில் சுயநிர்ணயக் கோரிக்கையைக் கைவிடுகிறோம்.ஓன்றுபட்ட இலங்கைகைக்குள் தீர்வுகாண விரும்புகிறோம்.போர்க்குற்ற விசாரணையைக் கைவிடுகிறோம் என்று தேர்தல் விஞஞாபனத்தில் அறிவித்துச் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? தமிழ் மக்களின் கையறு நிலையைச் சம்பந்தர் தன் இந்திய எசமான விசுவாசத்திற்குப் பாவித்தால் அது தமிழ்மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.ஆக வேதாளம் பழையபடி முருங்கைமரம் ஏறுகின்றது.

Edited by புலவர்

//சம்பந்தன் தனக்கு போட்டியாக எந்த அரசியல் சக்தியும் இல்லை என்ற காரணத்திற்காக தமிழ் மக்களின் 35 ஆண்டு கால போராட்ட நியாயங்களை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டால் அதன் விளைவு மிகக் கடுமையானதாக அமைவதோடு தமிழினத்தின் பேரழிவுக்கே அது உதவி நிற்கும்..!//

கல்லில நார் உரிக்கின்ற வேலை போல தமிழ்க் தேசியக் கூட்டமைப்பை வைத்து ‘தமிழீழம்’ எடுக்கிறது. இலங்கை வரலாற்றில் புலிகளின் காலத்தில்தான் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மட்டும் அல்ல இராணுவ ரீதியாகவும் பலமாக இருந்தார்கள். முக்கியமாக 2002/6 காலத்தில் தமிழ் மக்களால் அடைக்கூடிய அரசியல் இலக்காக இருந்தது ‘உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வே’ அன்றி தனித் தமிழீழம் அல்ல என்பதை நாம் முதலில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். எமது புலிகளின் தலைமை அக்காலப்பகுதியில் ‘தமிழீழம்’ என்பற்கு ஒரு இடைக்கால மாற்று தீர்வு யோசனையை முவைத்திருந்தால் இன்று இலங்கையில் ஏற்பட்டதுபோல் ’மகிந்த சகாப்தம்’ ஒன்று உருவாகியிருக்க வாய்பே இல்லை.

பலவீனமான சிங்கள தலைமைகள் தோன்றுங்காலங்களில் தான் தமிழ் மக்களாகிய நாம் எமது தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்யக் கூடிய ‘தமிழீழம்’ எனும் இலக்கை நோக்கி நகர வேண்டும். இப்போது சிங்கள தலைமை மிகப்பெரும் பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் மிகபலமாக இருக்கும் காலம். ‘பெளர்ணமி காலத்தில நண்டு பிடிக்க போகக்கூடாது’ என்பது எமது முன்னோரின் அனுபவ மொழி. அதன் அர்த்தம் அமாவாசைக்கு காத்திருந்து வேண்டும் என்பதுதான். தமிழீழத்துக்கு நாம் காத்திருந்து காய்நகர்த்த வேண்டும்.

1987ல் உருவாகிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை இப்போது எம்வசம் இருந்திருந்தால் இன்று நடக்கும் அரசுடனான பேச்சு வார்தைகள் அதைவிட கூடிய் அதிகாரம்கள் கொண்ட ஒரு அமைப்பை தமிழர் கோருவதாகவே இருந்திருக்கும்,.

அதேபோல இன்று அரசும் கூட்டமைப்பு அடையும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் தமிழீழத்தை நோக்கி நாம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டிய தூரத்தின் அளவை மேலுல் குறைக்கும் ஒரு புத்திபூர்வமான அரசியல் உத்தியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

//சம்பந்தன் தனக்கு போட்டியாக எந்த அரசியல் சக்தியும் இல்லை என்ற காரணத்திற்காக தமிழ் மக்களின் 35 ஆண்டு கால போராட்ட நியாயங்களை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டால் அதன் விளைவு மிகக் கடுமையானதாக அமைவதோடு தமிழினத்தின் பேரழிவுக்கே அது உதவி நிற்கும்..!//

கல்லில நார் உரிக்கின்ற வேலை போல தமிழ்க் தேசியக் கூட்டமைப்பை வைத்து ‘தமிழீழம்’ எடுக்கிறது. இலங்கை வரலாற்றில் புலிகளின் காலத்தில்தான் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மட்டும் அல்ல இராணுவ ரீதியாகவும் பலமாக இருந்தார்கள். முக்கியமாக 2002/6 காலத்தில் தமிழ் மக்களால் அடைக்கூடிய அரசியல் இலக்காக இருந்தது ‘உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வே’ அன்றி தனித் தமிழீழம் அல்ல என்பதை நாம் முதலில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். எமது புலிகளின் தலைமை அக்காலப்பகுதியில் ‘தமிழீழம்’ என்பற்கு ஒரு இடைக்கால மாற்று தீர்வு யோசனையை முவைத்திருந்தால் இன்று இலங்கையில் ஏற்பட்டதுபோல் ’மகிந்த சகாப்தம்’ ஒன்று உருவாகியிருக்க வாய்பே இல்லை.

பலவீனமான சிங்கள தலைமைகள் தோன்றுங்காலங்களில் தான் தமிழ் மக்களாகிய நாம் எமது தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்யக் கூடிய ‘தமிழீழம்’ எனும் இலக்கை நோக்கி நகர வேண்டும். இப்போது சிங்கள தலைமை மிகப்பெரும் பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் மிகபலமாக இருக்கும் காலம். ‘பெளர்ணமி காலத்தில நண்டு பிடிக்க போகக்கூடாது’ என்பது எமது முன்னோரின் அனுபவ மொழி. அதன் அர்த்தம் அமாவாசைக்கு காத்திருந்து வேண்டும் என்பதுதான். தமிழீழத்துக்கு நாம் காத்திருந்து காய்நகர்த்த வேண்டும்.

1987ல் உருவாகிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை இப்போது எம்வசம் இருந்திருந்தால் இன்று நடக்கும் அரசுடனான பேச்சு வார்தைகள் அதைவிட கூடிய் அதிகாரம்கள் கொண்ட ஒரு அமைப்பை தமிழர் கோருவதாகவே இருந்திருக்கும்,.

அதேபோல இன்று அரசும் கூட்டமைப்பு அடையும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் தமிழீழத்தை நோக்கி நாம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டிய தூரத்தின் அளவை மேலுல் குறைக்கும் ஒரு புத்திபூர்வமான அரசியல் உத்தியாகும்.

உங்களின் கருத்துக்கே வருகிறேன்..

சம்பந்தன்.. இந்தியாவின் நலன் நாடி.. தமிழீழத்தைக் கைவிடுகிறார்.. இனப்படுகொலை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கைவிடுகிறார் என்று எல்லாம்... வைத்துக் கொள்வோம். அதன் பின்னர் இந்தியாவை கட்டுப்படுத்தக் கூடிய என்ன சம்பந்தனிடம் இருக்கும்..??!.

சம்பந்தன் எம்மிடம் மிஞ்சி இருக்கிற ஒன்றிரண்டு பேரம் பேசக் கூடிய காரணிகளையும் கைவிட்டு விட்டால்.. நாம் எப்படி ஒரு சாதாரண தீர்வைக் கூட வலியுறுத்திப் பெற முடியும்..???!

இது மந்திரத்தில் மாங்காய் பறிப்பதற்கு நிகரானது.

1987 மாகாண சபைகள் வடக்குக் கிழக்கிற்கு என்று மட்டும் உருவானவை அல்ல. நாடு பூராவும் உருவாகியுள்ளன. அவற்றினூடான அதிகாரங்களை சிங்கள மாகாண சபைகளே போதுமானது என்று சொன்னதாக நான் அறியவில்லை. மாறாக மாகாண சபைகள் வீணான செலவு என்றே சிங்கள மக்கள் நம்புகின்றனர்.

1987 வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபை என்பது தற்காலிகமானது. அந்த இணைப்பை சர்வசன வாக்கெடுப்பை நடத்தி நிரந்தரமாக்க இந்தியாவோ சிறீலங்காவோ அக்கறைப்படவில்லை. மாகாண சபைகளுக்கு எந்த பூரணமான அதிகாரங்களும் கிடையாது. அவை வெறுமனவே தமிழ் மக்களின் தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்க போடப்பட்ட தடைக்கற்கள் அவ்வளவே.

இன்று கிழக்கு மாகாண சபை இருக்கிறது. அதன் மூலம் கிழக்கு சிங்கள மயமாவதை தடுக்க முடிந்ததா..??! கிழக்கு அபிவிருத்தி பெற சிங்கள ஆளும் வர்க்கத்தை விஞ்சி எம்மால் செயற்பட முடிகிறதா..??! இல்லையே. இப்படியான ஒரு நிலையில்.. மாகாண சபைகளின் தேவை தான் என்ன..????????????????!

அதேபோல் வடக்கு மாகாண சபை இன்றியே சிங்கள அரசு தேர்த்தலை நோக்கிய அபிவிருத்திகளை (அதாவது வீதி போடுதல்.. பாடசாலைகளை மூடிவிட்டு திறத்தல்..) செய்யவில்லையா. இவற்றை செய்ய ஒரு மாகாண சபை என்ற அமைப்பு அவசியம் தானா..??! இதற்காகவா 1972 இல் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கிப் போராட வெளிக்கிட்டனர்.. இல்லையே. 1972 இல் இன்றைய நிலையை விட அதிக செல்வாக்கு தமிழ் மக்களுக்கு கொழும்பு சிங்கள ஆளும் தரப்பு மீது இருந்தது. அப்படி இருந்தும்.. ஏன் உரிமை என்று கேட்டு களம் இறங்கினர்..???!

மாகாண சபைகள் என்பவை தமிழ் மக்கள் கோரும் அடிப்படை உரிமைகளைக் கூட பூர்த்தி செய்யப் போதுமானதல்ல.

விடுதலைப்புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை. மாறாக.. அதற்கு மாற்றீடாக.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சித் தீர்வையே கோரினர். அதனை நோக்கிய பயணத்தில் ஓர் இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபையும் சர்வதேச ஆலோசனைகளின் நிமித்தம் முன் வைத்தனர்.

சம்பந்தன் தரப்பினர் ஆகக் குறைந்தது.. அந்த வரைபை ஒட்டியாவது தமது தேவைகளை முன் வைக்கலாம். அதுவும் இன்றி உள்ள ஒன்றிரண்டு பேரம் பேசக் கூடிய சர்வதேச கவனத்தை ஈர்க்கக் கூடிய காரணிகளையும் வேரறுக்கச் செய்துவிட்டு.. இந்தியா மீது எப்படி ஒரு அழுத்தத்தை பிரயோகித்து தமிழ் மக்கள் விரும்பும் ஆகக் குறைந்த தீர்வையாவது பெற முடியும்.

இன்று தமிழகத்தில்.. தி மு க.. சர்வசன வாக்கெடுப்பு மூலம் தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு வாழ விரும்புகின்ற தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கிறது. வை.கோ தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று சர்வதேச மத்தியஸ்தோடு ஒரு தேர்தலை வைத்துக் கேள் என்று கோரி இருக்கிறார். சீமான் அப்படி.

ஜெயலலிதாவோ.. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை வேண்டும்.. தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு சம உரிமையோடு வாழும் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் சம்பந்தனோ... போர்க்குற்ற விசாரணை அவசியம் இல்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள்.. 13வது திருத்தச் சட்டத்துக்குள் அதிகாரப் பகிர்வு கேட்கிறார்.

மகிந்தவோ.. காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது. அது மும்பை போன்று இங்கு குண்டுகளை வெடிக்கச் செய்யும் என்று இந்திய தரப்புக்கு ஆப்படிக்கிறார்.

இந்த நிலையில்.. சம்பந்தனின்.. இந்த விடாக்கண்டன் முயற்சி தமிழ் மக்களை சர்வதேச அரங்கில் நிற்கதியாக்கும் செயலையே செய்யும்.!

இதனை புலம்பெயர் மக்களும்.. தமிழ் அமைப்புக்களும் கவனமாகவும் அவதானமாகவும் கவனத்தில் எடுத்து.. எமக்குள்ள பேரம் பேசக் கூடிய காரணிகளை பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டு எமது விடுதலைக்கான தேவையினை நியாயப்பாட்டினை உலகம் ஏற்கச் செய்ய வேண்டிய பாதையில் பயணிப்பதே இன்றைய தேவை. இதை நாம் தவற விடுவோம் ஆனால்.. நிச்சயமாக எமக்கு எந்தத் தீர்வையும் யாரும் பெற்றுத் தரமாட்டார்கள். சிங்கள தேசத்துள் அடிமைகளாக வாழும் நிலையே எமக்கு மிஞ்சும். சம்பந்தன் சாகும் வரை வெள்ளை வேட்டியோடு.. சிங்கள நாடாளுமன்றக் கதிரைகளில் குந்தி எழுந்து விட்டு விடைபெறும் நிலையே தோன்றும். அதுவல்ல எமக்குத் தேவை. அதற்காக அல்ல.. இத்தனை ஆயிரம் இழப்புக்களும் துன்பங்களும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

//சம்பந்தன் தனக்கு போட்டியாக எந்த அரசியல் சக்தியும் இல்லை என்ற காரணத்திற்காக தமிழ் மக்களின் 35 ஆண்டு கால போராட்ட நியாயங்களை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டால் அதன் விளைவு மிகக் கடுமையானதாக அமைவதோடு தமிழினத்தின் பேரழிவுக்கே அது உதவி நிற்கும்..!//

கல்லில நார் உரிக்கின்ற வேலை போல தமிழ்க் தேசியக் கூட்டமைப்பை வைத்து ‘தமிழீழம்’ எடுக்கிறது. இலங்கை வரலாற்றில் புலிகளின் காலத்தில்தான் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மட்டும் அல்ல இராணுவ ரீதியாகவும் பலமாக இருந்தார்கள். முக்கியமாக 2002/6 காலத்தில் தமிழ் மக்களால் அடைக்கூடிய அரசியல் இலக்காக இருந்தது ‘உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வே’ அன்றி தனித் தமிழீழம் அல்ல என்பதை நாம் முதலில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

எமது புலிகளின் தலைமை அக்காலப்பகுதியில் ‘தமிழீழம்’ என்பற்கு ஒரு இடைக்கால மாற்று தீர்வு யோசனையை முவைத்திருந்தால் இன்று இலங்கையில் ஏற்பட்டதுபோல் ’மகிந்த சகாப்தம்’ ஒன்று உருவாகியிருக்க வாய்பே இல்லை.

பலவீனமான சிங்கள தலைமைகள் தோன்றுங்காலங்களில் தான் தமிழ் மக்களாகிய நாம் எமது தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்யக் கூடிய ‘தமிழீழம்’ எனும் இலக்கை நோக்கி நகர வேண்டும். இப்போது சிங்கள தலைமை மிகப்பெரும் பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் மிகபலமாக இருக்கும் காலம். ‘பெளர்ணமி காலத்தில நண்டு பிடிக்க போகக்கூடாது’ என்பது எமது முன்னோரின் அனுபவ மொழி. அதன் அர்த்தம் அமாவாசைக்கு காத்திருந்து வேண்டும் என்பதுதான். தமிழீழத்துக்கு நாம் காத்திருந்து காய்நகர்த்த வேண்டும்.

1987ல் உருவாகிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை இப்போது எம்வசம் இருந்திருந்தால் இன்று நடக்கும் அரசுடனான பேச்சு வார்தைகள் அதைவிட கூடிய் அதிகாரம்கள் கொண்ட ஒரு அமைப்பை தமிழர் கோருவதாகவே இருந்திருக்கும்,.

அதேபோல இன்று அரசும் கூட்டமைப்பு அடையும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் தமிழீழத்தை நோக்கி நாம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டிய தூரத்தின் அளவை மேலுல் குறைக்கும் ஒரு புத்திபூர்வமான அரசியல் உத்தியாகும்.

இதில் சில கருத்துக்களுடன் தங்களுடன் உடன்பட்டாலும்...

புலிகள் இறங்கிவரவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. அத்துடன் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

சம்பந்தருடைய கைவிரலது வீக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவர் முழுத்தமிழ்மக்களது பிரதிநிதியாவதற்கு இது போன்ற அறிக்கைகள் துணைநிற்காது. மாறாக தூரச்செல்லவைக்கும். நன்றி

Edited by விசுகு

//இன்று தமிழகத்தில்.. தி மு க.. சர்வசன வாக்கெடுப்பு மூலம் தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு வாழ விரும்புகின்ற தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கிறது. வை.கோ தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று சர்வதேச மத்தியஸ்தோடு ஒரு தேர்தலை வைத்துக் கேள் என்று கோரி இருக்கிறார். சீமான் அப்படி.

ஜெயலலிதாவோ.. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை வேண்டும்.. தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு சம உரிமையோடு வாழும் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்.//

தரை, கடல், வான் போதாதற்கு தற்கொடைப் படைகளென இராணு உச்ச பலத்தில் தமிழ் தேசியம் இருந்த காலத்தில் நாம் அடைந்த குறைந்த பட்ட அரசியல் இலக்கு என்ன?

அப்போதும் நெடுமாறன் ஐயா, வைகோ, சீமான், திருமாவளவன், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐநா சபை, மனி உரிமைகள் காப்புச்சபைகள், சனல்-4கள் இத்தியாதி இத்தியாதி ’2009 மே’ இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ன செய்து கிழித்தார்கள்? உலகமெங்கும் ஈழத்தமிழன் வாழும் நாடுகளெங்கும் மாதக்கணக்காக நாம் எழுப்பி அவலக்குரல் இன்னொரு கிரகம் வரை கேட்கக்கூடிய டெசிபல் அளவை தாண்டியும் எமக்கு உதவ முன்வந்தவர்கள் யார்?

’இப்ப கையில இருக்கிற காசுக்குதான் கடையில ஏதும் வாங்கலாம்’ என்ற நிலையில் தமிழர் அரசியல் இருக்கும் நிலையை நீங்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

’இந்த வண்டில் இவ்வளவு சுமையைதான் இழுக்கும்’ என்ற நிலையில் உள்ள கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களில் தலைப்பாரம் அனைத்தையும் நீங்கள் சுமக்க முற்பட்டால் அந்த வண்டில் தான் இழுத்திருக்கக் கூடிய சுமையையும் தமிழ் மக்களுக்கு எதிர்கால அரசியலில் மேலும் இன்னொரு சுமையாக இருக்கும்.

Edited by ராஜகுரு

தமிழீழத்துக்கு நாம் காத்திருந்து காய்நகர்த்த வேண்டும்.

1987ல் உருவாகிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை இப்போது எம்வசம் இருந்திருந்தால் இன்று நடக்கும் அரசுடனான பேச்சு வார்தைகள் அதைவிட கூடிய் அதிகாரம்கள் கொண்ட ஒரு அமைப்பை தமிழர் கோருவதாகவே இருந்திருக்கும்,.

அதேபோல இன்று அரசும் கூட்டமைப்பு அடையும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் தமிழீழத்தை நோக்கி நாம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டிய தூரத்தின் அளவை மேலுல் குறைக்கும் ஒரு புத்திபூர்வமான அரசியல் உத்தியாகும்.

உங்கள் கருத்துடன் சில விடயங்களில் ஒத்துப்போகிறேன்.

மாபெரும் தலைவனாலேயே முடியாமல் போய்விட்டது.

ஒரேயடியாக பெரிய விஷயத்துக்கு ஆசைப்படாமல் சிறிது சிறிதாக - இழப்புகளின்றி (இனியும் மக்களை இழக்க முடியாது) எமது இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

சம்பந்தன் போன்ற சந்தர்ப்பவாதிகள் எமக்கு தேவையில்லை. அதுசரி - அவருக்கு எத்தனை வயது? இன்னும் ஓய்வு எடுக்க மனமில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் இந்தியாவின் சுருக்கு கயிற்றில் கழுத்து நசிபட சொல்லும் வார்த்தைகள் இவை.

அதிகார வர்க்கங்கள் இப்படி நசித்தே தமது கொள்கைகளை ஆடாவடிதனங்களையும் அரங்கேற்றுவார்கள். அதற்கு சம்மந்தன் விதிவலக்கல்ல. இந்தியாவின் கொடிய முகத்தை நாம்தான் பரப்புரை செய்து வெளிகொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

எதையாவது கொடுத்தால் அதை வாங்க சம்மந்தாரால் முடியுமே தவிர. அவருடைய சொந்த பாவனைக்கு தண்ணீர் கூட அவர் சிங்களத்திடம் கேட்டு பெற முடியாது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

//இன்று தமிழகத்தில்.. தி மு க.. சர்வசன வாக்கெடுப்பு மூலம் தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு வாழ விரும்புகின்ற தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கிறது. வை.கோ தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று சர்வதேச மத்தியஸ்தோடு ஒரு தேர்தலை வைத்துக் கேள் என்று கோரி இருக்கிறார். சீமான் அப்படி.

ஜெயலலிதாவோ.. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை வேண்டும்.. தமிழ் மக்கள் சம அந்தஸ்தோடு சம உரிமையோடு வாழும் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்.//

தரை, கடல், வான் போதாதற்கு தற்கொடைப் படைகளென இராணு உச்ச பலத்தில் தமிழ் தேசியம் இருந்த காலத்தில் நாம் அடைந்த குறைந்த பட்ட அரசியல் இலக்கு என்ன?

அப்போதும் நெடுமாறன் ஐயா, வைகோ, சீமான், திருமாவளவன், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐநா சபை, மனிஉரிமைகள் காப்பு சைகள், சனல்-4கள் இத்தியாதி இத்தியாதி ’2009 மே’ இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ன செய்து கிழித்தார்கள்? உலகமெங்கும் ஈழத்தமிழன் வாழும் நாடுகளெங்கும் மாதக்கணக்காக நாம் எழுப்பி அவலக்குரல் இன்னொரு கிரகம் வரை கேட்கக்கூடிய டெசிபல் அளவை தாண்டியும் எமக்கு உதவ முன்வந்தவர்கள் யார்?

’இப்ப கையில இருக்கிற காசுக்குதான் கடையில ஏதும் வாங்கலாம்’ என்ற நிலையில் தமிழர் அரசியல் இருக்கும் நிலையை நீங்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

’இந்த வண்டில் இவ்வளவு சுமையைதான் இழுக்கும்’ என்ற நிலையில் உள்ள கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களில் தலைப்பாரம் அனைத்தையும் நீங்கள் சுமக்க முற்பட்டால் அந்த வண்டில் தான் இழுக்கக்கூடிய சுமையையும் தமிழ் மக்களுக்கு எதிர்கால அரசியலில் மேலும் இன்னொரு சுமையாக இருக்கும்.

கரும்புலிகள் என்பவர்கள்.. ஒரு இராணுவ தாக்குதல் யுக்தியின் வடிவம். அதன் தேவை என்பது இராணுவ பரிமானம் சார்ந்தது. அதற்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட முடியாது. புலிகளின் இராணுவ வியூகம் என்பது எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதனூடாக அவனிடம் பேரம் பேசக் கூடிய வலுவை கூட்டி நிற்பது என்பதுதான்.

இன்று சம்பந்தருடன் பேசுவதையே எள்ளி நகையாடி வருகின்றனர்.. ஆளும் சிங்களக் கட்சி அமைச்சர்கள். ஆனால் விடுதலைப்புலிகளோடு சர்வதேச மத்தியஸ்தத்தோடு சம பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தோடு பேசிய சிங்கள அரசு.. சம்பந்தனோடு அப்படிச் பேசவே தயார் இல்லை என்று கூறிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்கள் சார்பில்... சிங்கள மக்கள் சார்பில் சிங்கள அரசுக்கு சமனான தகுதியோடு பேச்சு மேடைகளில் உட்கார இடமளித்ததே அவர்களின் இராணுவ பலமே ஆகும். அதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேச்சுக்களின் போது.. ஒரு தரப்பாக உட்கார்ந்து பேசுவதிலும்.. சம தரப்பு என்ற நிலையில் பேசுவதற்கும் இடையில் வேறுபாடுண்டு. அந்த நிலையை எட்டுவதென்பதே பேச்சுக்களுக்கு முக்கியமான ஒன்று. இதுவரை விடுதலைப்புலிகள் மட்டுமே அந்த நிலையை எட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி வடக்குக்கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காக பேசக் கூடிய தனித்துவமான உரிமையையும் புலிகள் கொண்டிருந்தனர். அவ்வளவுக்கு மக்கள் நம்பிக்கையை அவர்கள் தக்க வைத்திருந்தனர். அதுவும் சம்பந்தனிடம் இல்லை.

இது அறியாமை. தமிழகத்தில் 1986 களிலும் 1991 களிலும் இருந்த நிலையை காட்டிலும் இன்றைய நிலையை உருவாக்க.... விடாது பாடுபட்டவர்களில் நீங்கள் சொன்ன அனைத்து தமிழக தலைவர்களின் பங்களிப்பும் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 35 வருட கால போராட்டத்தை தொய்வின்றி பல புதிய சந்ததிகளிடமும் நியாயபூர்வமாக முன்னெடுத்துச் சென்ற பெருமை இந்தத் தலைவர்களைச் சாரும். இன்று ஈழத்தமிழருக்காக சீமான் என்ற ஒரு இளைஞனின் பின்னால் தமிழக இளைஞர்களை திரட்ட முடிகிறது என்றால் அதற்குப் பின் புலமாக இந்தத் தலைவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள்.

தமிழக மக்கள் மத்தியில் ஈழத்தமிழரின் நியாயம் உணரப்படும் நிலையில் தான்.. அது சர்வதேசத்தின் பார்வையையும் பெறும். இன்று இந்திய விஜயம் மேற்கொள்ளும் ஒரு அமெரிக்க ராஜாங்க திணைக்கள அமைச்சர் ஈழப்பிரச்சனை தொடர்பாக தமிழக முதல் மந்திரியை சந்திக்கிறார் என்றால்.. அதற்கு காரணம்.. தமிழக மக்கள் கொண்டுள்ள ஈழ தமிழர் பற்றிய உணர்வேந்தலே. அந்த உணர்வேந்தலைச் செய்தவர்கள்.. செய்கிறவர்கள் இந்தத் தலைவர்கள். அதுவே அவர்கள் வெட்டிக்கிழித்த விடயங்களில் பெருமையானது.. முதன்மையானது.

இன்று சிங்களத்திற்கு ரகசிய இராணுவப் பயிற்சியும்.. ஒத்துழைப்பும் அளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தை தோலுரித்துக் காட்டுபவர்களும் இதே தலைவர்கள் தான். ஆக தமிழின அழிப்பில் இந்திய மத்திய ஆளும் வர்க்கம் கொண்டுள்ள நேரடி தொடர்பை இது முழு உலகிற்கும் வெளிக்காட்டி நிற்கிறது. இதில் இருந்து இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தை காப்பாற்ற துடிப்பவர்களில் இன்று தமிழகத் தலைவர்களை விட சம்பந்தன் முதன்மையாகி இருப்பது தான் மகா கொடுமை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால்.. தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய செயற்பட முடியவில்லை என்றால்.. காட்டிக் கொடுப்பதை விடுத்து.. சம்பந்தன் போன்றவர்கள் பொறுப்புக்களில் இருந்து விலகி.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியிலும்.. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் தேசிய உணர்வாளர்களிடம் செயற்பாட்டாளர்களிடம் அந்தப் பணியை கையளித்துச் செல்லலாம். அதைவிடுத்து ஏதோ அவரே தான்.. எமக்காக பாரம் தூக்க நாம் கோரி நிற்பது போன்ற வாதம் நியாயமானதல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் பலர் வெளியேற்றப்பட்டு.. மிதவாதிகளும்.. முன்னாள் தீவிர சிங்கள.. இந்திய ஆளும் வர்க்க ஆதரவாளர்களும் உள்வாங்கப்பட்டதில் இருந்து சம்பந்தனின் தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகள் சந்தேகத்தை உண்டு பண்ணியே உள்ளன.

போரை ஆதரித்த.. போர்க் குற்றத்தை மறக்க மன்னிக்கக் கோரிய.. ஆனந்த சங்கரி தொடங்கி இன்று பலரும்.. சம்பந்தனோடு கூட்டணி அமைத்திருக்க.. நாடு பூராவும் பொங்கு தமிழ் நடத்திய உறவுகள்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். இது சம்பந்தனின் அணுகுமுறைகள் குறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி நிற்கிறது.

சம்பந்தன் எமக்காக சிலுவை சுமக்கிறாரா.. எம்மை எமது துயரை வைத்து சில்லறை சேர்க்கிறாரா என்பது போகப் போகவே தெரியும். ஆனால் அதுவரை நாமும் வாழாதிருக்க முடியாது. புலம்பெயர் மக்கள் தேசிய தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றி தமக்கான தனி வழியிலும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதை அவர்கள் எவரை நம்பியும் கைவிடக் கூடாது. இதுவே என்னைப் பொறுத்தவரை நாம் யாரையும் நம்பி ஏமாறாதிருக்க சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் விருப்பமும், தாயகத் தமிழரின் விருப்பமும் வேறுவேறானவை என்று சம்பந்தர் சொன்னாலும், "இல்லையில்லை நாம் எல்லாம் ஒரே மாதிரித்தான் சிந்திக்கின்றோ, சம்பந்தர்தான் சந்தர்ப்பவாதமாகக் கதைக்கின்றார்" என்று கருத்துக்கள் வருகின்றன.

உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் தலைமையாக இருக்கமுனைபவர்களின் கட்டுப்பாட்டில் த.தே.கூ. இல்லையென்பதைத்தான் தமிழ்நெற் கட்டுரை காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் விருப்பமும், தாயகத் தமிழரின் விருப்பமும் வேறுவேறானவை என்று சம்பந்தர் சொன்னாலும், "இல்லையில்லை நாம் எல்லாம் ஒரே மாதிரித்தான் சிந்திக்கின்றோ, சம்பந்தர்தான் சந்தர்ப்பவாதமாகக் கதைக்கின்றார்" என்று கருத்துக்கள் வருகின்றன.

உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் தலைமையாக இருக்கமுனைபவர்களின் கட்டுப்பாட்டில் த.தே.கூ. இல்லையென்பதைத்தான் தமிழ்நெற் கட்டுரை காட்டுகின்றது.

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பது தாயகத்தில் தான் தனக்காக வழியில் பயணிப்பது என்பதாகவும்.. புலம்பெயர் மக்களுக்கு தமிழ் தேசிய முகத்தைக் காட்டிக் கொள்வதாகவுமே உள்ளது. இதன் மூலம்.. பொதுமைப்பாடான தமிழ் மக்கள் எல்லோரும் விரும்பக் கூடிய ஒரு இலக்கை அடைய முடியுமா என்பது கேள்விக் குறியே ஆகும். இந்த நிலையை போக்க.. கூட்டமைப்பு முன் வராது விட்டாலும்.. இது புலம்பெயர் மக்கள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் புதிய வியூகங்களை அமைக்கத் தூண்டும் என்றே நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது இன்றைய குறிக்கோள், போர்க்குற்றச்சாட்டுகளௌக்கான விசாரணைகக் கோருவதன் மூலம் மகிந்த அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னிறுத்தி அதனூடாக வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றினைக் கோருவதாக அமைதல் வேண்டும். இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் சுதந்திரமடைந்த தென் சூடான். வடக்கு சூடான் அதிபரைப் போர்க்குற்றவாளி என்று நிரூபித்ததன் மூலம் சர்வதேசத்தின் மத்தியஸ்த்தத்தில் தென்சூடானில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 99.8 % ஆன மக்கள் ஆதவுடன் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆகவே எம்மில் ஒரு பகுதியினர் சர்வஜன வாக்கெடுப்பு எனும் திசையில் நோக்கிப் ப்யணிக்கும்போது இன்னொரு பகுதியினர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு, ஒற்றையாட்சிக்குள் தீர்வு, பிளவுபடாத நாட்டிற்குள் தீர்வு என்று கோருவது எமது ஒட்டுமொத்த இனத்தின் கோரிக்கைகளையும் பலவீனப்படுத்துவதோடு, எமது இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.

போர்க்குற்ற விசாரணைகளென்றாலென்ன அல்லது தனிநாடு என்றாலென்ன நிச்சயம் இந்தியா எமக்குச் சார்பாக வரப்போவதில்லை. போர்க்குற்றங்களில் நேரடியாகத் தொடர்புகொண்ட நாடென்கிற வகையில் அது தன்னாலாமட்டும் இவ்விசாரனைகளுக்கான தடைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் எதிர்பார்க்கும் தனியான நாட்டிற்கு இந்திய ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

இந்தியா பிற்காலத்தின் நமக்கு எதிரியாக வந்துவிடக்கூடாதே என்கிற பயத்தில்த்தான் புலிகள் கூட இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எது நடந்துவிடக்கூடாது என்று பயந்தார்களோ அதைவிட மிக அழிவு தரும் வகையில் இந்தியா நடந்துகொண்டதுமட்டுமல்லாமல் பாரிய படுகொலை ஒன்றையும் நடத்தி முடித்திருக்கிறது. ஆகவே இந்தியாவுடன் நட்பாகப் போகவேண்டும் என்கிற தேவை இப்போது எமக்கில்லை.

இந்தியாவுடன் நட்புப் பாராட்டுவதற்காக எமது உரிமைகளையும், நடத்தப்பட்ட படுகொலைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டுமென்றால், நாம் போராடுவதில் எந்தப்பயனுமில்லை. சம்பந்தர் இன்று செய்ய நினைப்பது முற்றான சரணாகதி அரசியல். இலங்கை மற்றும் இந்திய மேலாதிக்கத்துக்கு வலைந்து கொடுத்து தருவதை ஏற்றுக்கொள்ளும் அரசியல். இதையேதான் நாம் வேண்டுமென்று நினைத்திருந்தால் இவ்வளவு காலமும் போராடியதிலும் 250,000 தமிழர்களைப் பலிகொடுத்ததிலும் எந்தவித அர்த்தமும் இருக்கப்போவதில்லை.

பலவீனமான சிங்கள அரசு ஒன்றிற்காக காத்திருப்பதென்பது பலமான அரசு ஒன்றிடம் சரணாகதியடைந்து அது தருவதை வாங்கிக்கொண்டிருப்பதாகது. ஒருமுறை இது போதும் என்று சொல்லி வாங்கிவிட்டோமானால் பின்னர் எதுவுமே செய்ய முடியாது.

ஆகவே தீர்வு எது என்பது தொடர்பாக கூட்டமைப்பு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று சொல்லுவதன்மூலம் இந்தியா தனது திட்டத்தை நிறைவேற்றப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கும், சங்கரிக்கும் அணுகு முறைகளில் வித்தியாசமே தவிர, கொள்கையளவில் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை!

காலத்தின் நீரோட்டத்தில் இந்தப் பிரச்சனை கரைந்து விடும் என்பது, இந்தியாவினதும் சம்பந்தனினதும் எதிர் பார்ப்பு!

இவர் போராட்டத்தைப் பின்னோக்கி நகர்த்துகின்றார்!

புலிகளின் போராட்ட வடிவம் சரியென நான் வாதிட வரவில்லை!

ஆனால் அவர்களது இலக்கு, அதில் அவர்கள் கொண்ட உறுதி, இறுதிவரை மாறியதில்லை!

கோல் அடிப்பதற்காகக் கோல் போஸ்டுக்களைத் தூக்கிக் கொண்டு திரியக்கூடாது!

பிரித்தானியரைக் கவுரமாக வெளியேறக் காந்தி, உதவிய மாதிரி போர்க்குற்றங்களில் இருந்து, சிங்களத்தையும் இந்தியாவையும், கவுரவமாகப் பாதுகாக்கவே சம்பந்தர் முயலுகின்றார்!

அறுபது ஆண்டு காலப் பகுதியில், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, போய் விட்ட தமிழினத்திற்கு, இனிச் சிங்களம் தானாக ஏதும் செய்யுமென்று நம்புவது முட்டாள் தனமேயன்றி வேறல்ல!!!

இப்படித்தான் முன்பு, புலிகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டால் இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தருமென்று மாற்றுக்கருத்தாளர்கள் மூலம் கதை பரப்பப்பட்டது. இப்போது யாரையும் காணோம். அதே பாணியில் மீண்டும் சம்பந்தன்.

கடந்த இரண்டரை வருடங்களில் அகதிகள் சம்பந்தமாக இவரின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் என்ன? அதைப் பற்றி இந்தியாவுடன் பேசி அவர்களின் புனர்வாழ்வுக்கு ஏதும் வழிகாட்டினார்களா? மனிதாபிமான நடவடிக்கைகளைக் கூட செய்யமுடியவில்லை. முடியாதென்பதுதான் உண்மை.

சிங்களத்தை எதிர்த்து அங்கு அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதென்பதும் தெரியும்.

கிடைத்த போர்க்குற்ற விசாரணை என்ற துருப்புச் சீட்டையும் விட்டுக் கொடுத்து விட்டு என்ன செய்வது. வெள்ளைக்கொடி விவகாரத்தில்தான் கொண்டு முடியும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பழுத்த கொழுத்த அரசியல் தலைவர் எண்டுறாங்கள் ஆனால் எல்லமே பூச்சியமாகவே இருக்கு!! என்ன காலக்கிரமத்தில் மக்களால் துக்கி எறியப்படலாம்.....

சம்பந்தர் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது முதலில் அவருக்கு நினைவுபடுத்த வேண்டும். தமிழகம் மேற்குலகம் என்பன இன்று கொழும்பு மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நிலைப்பாட்டில் உள்ளன. சனல் நாலின் தாக்கம் இன்னும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

ஆகக்குறைந்தது முதலில் 13க்கு அப்பால் (13+) காணி, காவல்துறை அதிகாரங்களுடன் ஒரு தீர்வை கொழும்பு முன்வைக்கவேண்டும். காங்கிரசை தமிழர்கள் நம்ப தயாரில்லை. எனவே டெல்லியில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில் டெல்லியுடன் ஒரு இணக்கத்திற்கும் வருதல் கூடாது.

அரசியல் மூலம் கொழும்போ இல்லை டெல்லியோ தமிழர் பிரச்னையை தீர்க்க இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை. எமக்கு முன்னால் உள்ள ஒரே ஆயுதம் 'போர்குற்றம்' அதை வைத்து ஒரு அரசியல் தீர்வு பெறாவிட்டால் நாம் என்றென்றும் அடிமைகள் தான்.

Edited by akootha

(ஆயுதப் போர் மூலமோ இல்லை) சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமோ சிங்களவர் எமக்கு எதையும் தரப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். சிங்களம் எந்தத் தீர்வுக்கும் வராத பட்சத்தில் சர்வதேசம் தலையிட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். மஹிந்த ஒரு சிறு அதிகாரத்தையும் தரப்போவதில்லை என்று சம்பந்தர் நம்புவதாகத் தெரிகிறது.

பிரிவினை கோரும் மனநிலையில் தாயகத்து மக்கள் தற்போது இல்லை. அதற்கான அக புறச் சு+ழல்கள் இல்லை என்பதை தாயக மக்கள் செவ்வவனனே புரிந்துள்ளார்கள். அந்தவகையில் இது சம்மந்தரின் தனிப்பட்ட ஒரு கருத்தல்ல மறாக இது ஒரு பொதுக் கருத்து. தாயக மக்கள் நெருக்கடியான நிலமைகளுக்கேற்ப வழைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்தையும் அவசியத்தையும் உணர்ந்துள்ளார்கள். வாழ்வின் தக்கவைப்பிலேயே இனத்தின் இருப்பு தொடரமுடியும். புலத்து மக்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. சுதந்திரமாக தேசீயம் என்று கூவ முடியும். பிரிவினைவாதம் பற்றி கதைக்க முடியும். புலத்து தமிழனின் நிலைப்பாடும் தாயகத் தமிழனின் நிலைப்பாடும் வேறுவேறானதாகிவிட்டது. இந்த வேற்றுமைகள் நாழுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும். புலம்பெயர் தமிழனின் பணம் இன்றைய காலகட்டத்தில் தாயகத்தில் பொருளாதரா ஏற்றதாழ்வை அதிகளவு ஏற்படுத்துகின்றது. ஐந்து லட்சம் பெறுமதியான வீடுகள் புலத்து தமிழர்களாகளால் ஐம்பது லட்சமாக உயர்த்தப்படும்போது வறிய மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களத்தால் நாடற்றவர்களாக தமிழர்களால் வீடற்றவர்களாக மறுபடி மறுபடி தமிழ் சிங்கள தேசீயவாதங்களால் நசுக்கப்படும் மக்களின் அவல வாழ்வு தொடரத்தான் செய்கின்றது. பொருளாதார ஏற்றதாழ்வுடைய இரண்டு தரப்பு எப்போதும் ஒரு பொதுக் கருத்துக்கு வரமுடியாது என்பது அடிப்படை. அது தவிர்ந்த அரசியல் சமூக முறண்பாட்டு நெருக்கடிகள் வேறானவை. புலத் தமிழனும் தாயகத் தமிழனும் ஒன்றாக பயணிப்பதற்கான அடிப்படை எதுவும் இல்லை.

சிந்தனைக்கு எடுக்க வேண்டியவை.

1. இந்த பேச்சு இதுவரை இந்தியாவிடமிருந்தோ, மிகவும் பிராதானமாக இலங்கையிடமிருந்தோ வரவில்லை. எதுவரை இலங்கை உரிமைகள் கொடுக்க உடன் படுகிறதென்பது தெரியாது.

2.எழுதிக் கையெழுத்து போட்ட 1987 ஒப்பந்ததை இந்தியாவிற்கு நடைமுறையாக்கமுடியவில்லை.

3.இந்தியா வெளியே இலங்கை தனது சொல்லை கேட்கும் என்று சொல்லவில்லை.

4. இந்த 13ம் திருத்தம்-மைனஸ் தீர்வையில் இலங்கை- சீனா-அமெரிக்கா-இந்தியா உறவுகளில் சமரசம் எற்படுள்ளதா?

5.கில்லாரி குறிப்பிட்ட தமிழர் பிரச்சனைகான அமெரிக்கவின் இரகசிய திட்டம் இதுவா அல்லது வேறொன்றா?

6. இதை முடிவாய் சம்பந்தர் ஏற்றாலும் இவருக்கும் இலங்கைகும் பேச்சுவார்த்தகளில் இணக்கம் ஏற்பட்டுவிட்டதா?

7. இந்தியாவின் போர்க்குறறபங்கு விடயத்தில் சம்பந்தர் என்னகூறுகிறார். இந்தியா(காங்கிரஸ்) ஏற்றுகொள்கிறதா? இந்தியா தான் செய்தது என்று சம்பந்தர் கூருகிறார? இல்லையேல் இதுவிடையமாக இந்தியா இவருக்கு ஏதாவது வகை நெருக்கடி கொடுக்கிறதா?

8.இந்தியா போர்க்குற்ற விசாரணையை முடக்குகிறதா? அல்லது அதை சாட்டி தமிழருக்கான தீர்வொன்றை முடக்குகிறதா?

அ) இதுவரையில் போர்குற்ற விசாரணக்கு TNA சேர்ந்துவரவில்லை. போர்க்குற்ற விசாரணைக்கு TNA வேண்டியதில்லை. அது தானக வரும்பொழுது அவர்களால் தடுக்கவும் முடியாது. விசாரணைக்கு குரல்கொடுத்து முன்னேடுப்பவர்கள் NGO களே. போர்க்குற்ற விசாரணை நடைபெறாவிட்டால் ஒருவருக்கும் நடந்தது தெரிய வராது. பேச்சுவார்த்தைகளில் இணக்கம் ஏற்படாது.

ஆ)இதை காரணம் காட்டி தமிழ்மக்களை தாயகம்-புலம்பெயர் என்று பிரிக்க கூடாது.

இ) இதை காரணம் காட்டி இந்தியாவைவிட மற்றய நாடுகள் வடக்கு-கிழக்குக்கு செல்லை இயலுமாயின் அது தாயகமக்களுக்கு நிவாரணமாக இருக்கும்.

ஈ) இந்தியாவின் போர்குற்றங்களை நாம் காப்பாற்ற வேண்டியதில்லை. தேவைப்படில் இந்தியாவை சாட்டாத விசாரணையை நாம் முன்னெடுக்க வேண்டும். BJP உதவியையும் நாடலாம். அது காங்கிரஸ் மீது பழிபோவதை தடுக்காது.

உ)சம்பந்தர் இந்தியாவைக்கொண்டு செயலளவில் எதையாவதை கொண்டுவரும்வரை நாம் போர்க்குற்ற விசாரணைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

ஊ). TGTE தனியான அமைப்பு. அது தனிநாட்டு கொள்கையை கைவிடவேண்டியதில்லை.

சம்பந்தர் விரும்பியோ விரும்பாமலோ

.கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் போர்குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் கூறியிருக்கிறார்கள் தமிழர்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.