Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி

Featured Replies

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி

13-berlusconi-with-pascale300.jpg

ரோம் கடைசி வரை தனது கட்டில் விளையாட்டை நிறுத்தவில்லை பெர்லுஸ்கோனி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி.

தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பின்னர் அவர் ஒரு இளம் பெண்ணுடன் அன்றைய இரவைக் கழித்துள்ளார்.

அவரது பெயர் பிரான்செஸ்கா பாஸ்கர். இவர் பெர்லுஸ்கோனியின் கட்சியைச் சேர்ந்தவர். இவருடன் ஏற்கனவே பெர்லுஸ்கோனியை இணைத்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன.

அன்றைய இரவு ஏழரை மணியளவில் பெர்லுஸ்கோனியின் வீட்டுக்கு பாஸ்கல். அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றார்.

இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதுகுறித்து பாஸ்கலிடம் சில செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று பட்டென்று கேட்டாராம். இதைக் கேட்டதும் செய்தியாளர்களுக்குத்தான் ரொம்ப வெட்கமாகிப் போய் விட்டதாம்.

இதுவரை பிரதமர் என்ற பதவிக்குள் கட்டுப்பட்டிருந்தார் பெர்லுஸ்கோனி. எனவே இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரெய்லர்தான்.

இனிமேல்தான் மெயின் பிக்சரே வரப் போகிறது, இனிமேல்தான் அவர் ஓவராக ஆடுவார் என்று இத்தாலியர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்

  • Replies 83
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான்....

ரோம் பற்றி எரியும் போது.... பிடில் வாசிக்கிறது என்று சொல்வார்கள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை

என்ன செய்திருப்பார்கள்.. வேர்ல்டு எக்கனாமிய பத்தி டிஸ்கசன் செய்து இருப்பார்கள்.. பத்திரிகை நிருபர்களுக்கு விவஸ்தை கிடையாது.. :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவருக்கு ஓட்டு போட வில்லை.அதால அவர் என்ன செய்தால் எனக்கென்ன. :)

எப்ப எங்களுக்கு இப்படியான விசயங்கள் புதினம் இல்லாமல் போகுதோ அப்பதான் நாங்கள் எங்களைப்பற்றி யோசிப்போம் :(

  • கருத்துக்கள உறவுகள்

இதை எந்தத் தளத்தில் செய்தியாக போட்டார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்திருப்பார்கள்.. வேர்ல்டு எக்கனாமிய பத்தி டிஸ்கசன் செய்து இருப்பார்கள்.. பத்திரிகை நிருபர்களுக்கு விவஸ்தை கிடையாது.. :) :)

:lol: :lol: :icon_mrgreen:

இதைத்தான்....

ரோம் பற்றி எரியும் போது.... பிடில் வாசிக்கிறது என்று சொல்வார்கள். :D:lol:

யார்.....

பெர்லுஸ்கோனியா பிரான்செஸ்காவா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா :lol:

ரதி, நீங்கள் ஒரு வளரும் எழுத்தாளர்! உங்கள் கருத்துக்களை, சிறுவர்கள் (குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்) வாசிக்கக் கூடும்!

'படுப்பது' என்பது ஒரு நல்ல தமிழ் வார்த்தை அல்ல! இதை தரமான எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் உபயோகிப்பது, மனதிற்குக் கவலையைத் தருகின்றது!

மற்றது எழுதுவது உங்கள் உரிமை! இதே கருத்தை வேறு வகையான வார்த்தைகளால் சொல்ல முடியும்!

தமிழ் ஒரு வளமான மொழி! அதில் வார்த்தைகளுக்கா பஞ்சம்!

ஏதோ கள உறவு, என்ற வகையில் சுட்டிக் காட்டினேன்! எனது வரம்புகளைக் கடந்து விட்டேன் என நீங்கள் கருதினால் மன்னித்து விடுங்கள்!

தனி மடலில் தான் தெரியப் படுத்த நினைத்தேன்!

ஆனால் பல கள உறவுகள், இந்த வார்த்தையை உபயோகிப்பதை, அவதானித்ததால் , இங்கு பதிந்தேன்!

நன்றிகள்!!!

மன்னிக்க வேண்டும் புங்கையூரான் "படுப்பது" என்பது பொதுவான வார்த்தை என்பதாலேயே அப்படி எழுதினேன்...இனி மேல் நீங்கள் சொல்வதை கவனத்திலெடுத்து அப்படி எழுதாமல் தவிர்க்கிறேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி

இதற்கெல்லாம் மன்னிப்பா, ரதி!

நீங்களும் எங்கள் வீட்டுப் பிள்ளை தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"படுப்பது" கூடாத அல்லது கெட்டவார்த்தையல்ல என நினைக்கின்றேன். "பெண்ணோடு படுப்பது" எனும் சொல்தான் அங்கே கொஞ்சம் நாகரீகமில்லாமல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் படுப்பது என்பது கெட்டவார்த்தையல்ல ஆனால் அது பேச்சுத் தமிழில் கெட்டவார்ததையாக பார்க்கப்பட்டது அவ்வளவுதான். அப்படிப்பார்தால் கீழே உள்ள பாடல் எவ்வளவு மோசமான அர்த்தங்களை கொண்டிருக்கும். என்பதை எண்ணிப்பாருங்கள்

படுப்பது என்பது கெட்டவார்த்தையாக இருந்தால் இப்படி ஒரு பாடலை எழுதியிருப்பார்களா??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

"படுப்பது" கூடாத அல்லது கெட்டவார்த்தையல்ல என நினைக்கின்றேன். "பெண்ணோடு படுப்பது" எனும் சொல்தான் அங்கே கொஞ்சம் நாகரீகமில்லாமல் இருக்கின்றது.

'படுப்பது" கெட்ட வார்த்தையே அல்ல, கு.சா!

அது வரும் இடம் தான், அதற்குக் கெட்ட பேரைக் கொடுக்கின்றது!

கொடுத்து வச்சவன் ... எழுபது தாண்டியும் ..!!!

384589_215700831833235_206493956087256_536188_703535261_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த இந்தப் பதிவில் ரதி என்ற கருத்துக்கள உறவு தவறான அர்த்தப்படுத்தலுக்கு என்று பாவித்த சொல்லாடலை நியாயப்படுத்த எங்களின் உணர்வுகள் பூராவும் பரவி இருக்கும் தன்னிகரற்ற தியாகங்களைச் செய்த மாவீரர்களின் நினைவுப் பாடலை பாவித்திருப்பதை வன்மையாக எதிர்ப்பதோடு இந்தப் பாடலை தயவுசெய்து இதில் இருந்து நீக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்க வினவிக் கொள்கின்றேன்.

ரதி என்ற கருத்துக்கள உறவுக்கு.. இந்தச் சொல்லாடல் தொடர்பாக போதிய அளவு விளக்கம் பிற தலைப்பொன்றில் சமீபத்தில் வழங்கப்பட்டும்.. அவர் வேண்டும் என்றே தான் இச்சொல்லை இப்படியான சந்தர்ப்பங்களுக்கு பாவித்து வருகிறார். சில சொற்கள்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பொருள் தரவல்லது என்பதால்.. இந்த மயக்க நிலையை வேறு சிலரும்.. தங்களின் மட்டமான சிந்தனைகளை சிதற விட பயன்படுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்த நடவடிக்கைகளை யாழ் கள உறவுகள் தாமாக முன் வந்து கைவிடுவதே அவர்களுக்கு சிறப்பு. இன்றேல்... இவர்கள் மீதான அனைத்து வித நன்மதிப்பையும் இவர்கள் தாங்களாகவே இழக்கச் செய்வதாக கருத வேண்டியது தான். :(:rolleyes::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன செய்கிறது எனக்கு உங்கள் மாதிரி அறிவை கடவுள் கொடுக்கவில்லையே அத்தோடு இந்த சொல்லாடலில் எனக்கு அவ்வளவு ஆசை அது தான் திரும்ப,திரும்ப எழுதினேன்...இந்த கருத்துகளத்தில் நீங்கள் உட்பட மற்றவர்களின் நன் மதிப்பை பெற வேண்டும் என்கிறதிற்காக நான் கருத்து எழுதுவதில்லை...உங்களுக்கு என் மேல் கோபமிருக்கும் அது உங்கள் தப்பு இல்லை கூல் டவுண் :lol::D:icon_idea:

இந்தச் சொல்லாடல் வேறுபாட்டை உணர.. படிப்பறிவு அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால்.. இயற்கையான பகுத்தறிவே போதும். அது இல்லாதவங்கள.. எப்படி மனுசங்க என்று கருத முடியும். அப்படி மனுசங்களா கருத முடியாதவங்க கூட எது சொன்னாலும்.. பிரயோசனம் இல்ல.

நான் உங்களுக்கு இந்தத் தலைப்பில் புத்திமதி சொல்லேல்ல. இந்தத் தலைப்பில் குறித்த பதம் கையாளப்பட்டுள்ளதன் நோக்கத்தை நான் உணர்ந்த வகையில் சொல்லி இருக்கிறேன். மற்றும்படி உங்களை எல்லாம் திருத்தவோ.. வழிநடத்தவோ.. என் நன்மதிப்பை யாரும் சம்பாதிக்கச் செய்யவோ.. எனக்கு எந்த வித அவசியமும் இருப்பதாக நான் உணரவில்லை. என் மூளையில் குற்றமாக உணரப்பட்டதை சுட்டிக்காட்டினேன். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளே அவர்களுக்கான நாளைய இயற்கையின் பிரதிபலனாக அமையும். அவ்வளவும் தான். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் படுப்பது என்பது கெட்டவார்த்தையல்ல ஆனால் அது பேச்சுத் தமிழில் கெட்டவார்ததையாக பார்க்கப்பட்டது அவ்வளவுதான். அப்படிப்பார்தால் கீழே உள்ள பாடல் எவ்வளவு மோசமான அர்த்தங்களை கொண்டிருக்கும். என்பதை எண்ணிப்பாருங்கள்

படுப்பது என்பது கெட்டவார்த்தையாக இருந்தால் இப்படி ஒரு பாடலை எழுதியிருப்பார்களா??

தவறில்லை, சாத்திரியார்!! வார்த்தை சரியாகவே கையாளப் பட்டு இருக்கின்றது!

மிருகங்கள், பறவைகளுக்கு, இந்தப் படுப்பது என்ற வார்த்தை கையாளப் படுவது வழமையாக இருந்துள்ளது!

கோழிகள் மரத்தில் படுக்கின்றன! புலிகள் ஒன்றாகப் படுக்கின்றன!

மேலுள்ளவற்றில், வார்த்தைக் கையாள்கையில் தவறில்லை!

ஆனால் நீ குரங்கோடு படுத்தாய்! என்று கூறும் போது அதன் அர்த்தம் பூரணமாக மாறிப் போய் விடுகின்றது!

நீ குரங்கோடு உறங்கினாய்! என்று கூறும்போது அதில் முந்தைய வசனத்தின் தாக்கம் அவ்வளவு தெரியவில்லை அல்லவா?

நெடுக்கர் கூறுவது போல, தமிழ் வார்த்தைகளின் கருத்துக்கள், அவை வரும் இடங்களைப் பொறுத்து, வேறு வேறு அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்!

இன்னொரு உதாரணம்!

'போற்றி மான் நான்முகனும் காணாத ******''

இதில் விடு பட்ட வார்த்தை ' தாமரைப் பூ' என்ற கருத்தில் வருகின்றது!

இதே வார்த்தையைத் தனியாகப் பாவித்துப் பாருங்கள்!

அதன் அர்த்தமே வேறாகி விடுகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம்...நான் பள்ளிக்கூடம் போகேல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் நெடுக்கின் கருத்தே எனதும்.

ரதி இது போன்ற சொற்களை வேண்டுமென்றே இங்கு பதிகிறார். இது போன்ற சொற்களை அவர் இங்கு பாவித்தபோது அதை ஊக்கிவித்தவர்களே அதற்கு காரணம். அவரை சிலரின் வஞ்சக புகழ்ச்சிக்குள் சிக்குண்ட அப்பாவியாகத்தான் நான் பார்க்கின்றேன். அத்துடன் அவர் போல் எழுதுமாறு மற்றவர்களையும் தூண்டிவருவது கவலைக்குரியது. வயதுக்கு வந்தவர்களுக்கு ஒருமுறை இருமுறைதான் சொல்லமுடியும். அதற்கு மேல் அவர்கள் வளரும் வளரப்போகும் இடங்களைப்பொறுத்தது.

இல்லை இது சாதாரணம் என்று மீண்டும் மீண்டும் ரதி இங்கு எழுதுவாராக இருந்தால்.....

ரதி தனது வீட்டில் தாய் தகப்பன் சகோதரங்களுக்கு முன்னாலும் இதுபோன்ற சொற்களைப்பாவிப்பவராக இருக்கவேண்டும். எனவே எமது எல்லையுடன் நாம் நிறுத்தவேண்டியதுதான். நன்றி.

Edited by விசுகு

இந்த திரியின் தலைப்பே ஒரு பெண் கூட உல்லாசம் ..சம்பந்தமானது அதை ஒட்டி கருத்து எழுதும் போது

இப்பிடியான சொல்லாடல்கள் தான் பேச்சு வழக்கில் பாவிப்பார்கள்..(படுப்பது ) அதையே தான் அவரும் பாவித்துள்ளார்.. புங்கையூரான் சுட்டி காட்டியதுக்கு அவர் மன்னிப்பும்கேட்டு விட்டார் அதுக்கு பிறகும் ஏன் ?

கருத்து எழுதுவது ஒரு ஜில் மால் திரிக்கு அதுக்குள்ள அப்பிடி எழுதிட்டார் இப்பிடி எழுதிட்டார் ..

ஒரு சிலருக்கு தொழிலே குற்றம் கண்டு பிடிப்பது என்று ஆகி விட்டது..

இதுக்குள்ள ஏன் அம்மா அப்பா சகோதரங்களை இழுப்பான் அதுகளை முதலில

நிறுத்துங்க..

உங்களுக்கு எல்லாம் மஜா மல்லிகா பாணி எழுத்துகள் தான் சரி போல இருக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விரசமாகப் பல ஆண்கள் யாழ் களத்தில் எழுதுவார்கள்.. அது எல்லாம் பிரச்சினை இல்லை.. ஆனால் "படுப்பது" (உடலுறவைக் குறிக்கும் சொல்) என்று ரதி என்ற பெண்ணின் பெயரில் எழுதினால் தாங்காது நமது பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரங்களின் காவலர்களுக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு போகத்தேவையில்லை கிருபன்

நீங்கள் இங்கு அப்படியான சொற்களைப்பாவிப்பது இல்லை. ஏன்???

அது போன்ற திரிகளுக்கோ அல்லது பதங்களை பாவிக்கவேண்டாம் என்றோ சொல்லவில்லை. தமிழில் அதற்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. என்றுதான் சொல்கின்றோம். அத்துடன் ஆண் பெண் வித்தியாசமில்லை. நீங்கள் எழுதியிருந்தாலும் நான் இப்படித்தான் சுட்டிக்காட்டியிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விரசமாகப் பல ஆண்கள் யாழ் களத்தில் எழுதுவார்கள்.. அது எல்லாம் பிரச்சினை இல்லை.. ஆனால் "படுப்பது" (உடலுறவைக் குறிக்கும் சொல்) என்று ரதி என்ற பெண்ணின் பெயரில் எழுதினால் தாங்காது நமது பண்பாடு, விழுமியங்கள், கலாச்சாரங்களின் காவலர்களுக்கு,

ஒருவர் "படு" வை எழுதுவதால்.. பண்பாடு.. விழுமியம்.. கலாசாரம்.. பழுதாப் போகிடும் என்று மற்றவங்க நினைக்கிறாங்க என்று நீங்க நினைக்கிறீங்க போல.! அதுவே தப்பு. ஒரு கூட்டம் கெடுக்கிறது என்பதற்காக.. கெட்டுப் போகக் கூடிய ஒன்றாக இல்லை.. ஒரு இனம் சார்ந்த வரலாற்றியல் அடிப்படையில் பிறக்கும் பண்பாடும்.. விழுமியமும்.

ஆனால் இங்குள்ள பலரின் கருத்து.. அது அடிப்படை கருத்துப் பகிர்வு நாகரிகத்திற்குள் சகிக்கக் கூடிய ஒன்றாக இல்லை என்ற உணர்தலையே இனங்காட்டுகிறது. அதனால் தான் தவிர்க்கச் சொல்கிறார்களே ஒழிய.. றோட்டில ஆயிரம் பேர் ஆயிரம் வகையில தூசணம் பேசுவான்.. அதுக்காக மற்றவன் தன்ர தனி மனித ஒழுக்கம்.. சமூகப் பண்பாடு.. கலாசாரம்.. விழுமியத்தை தொலைச்சிடுவானுன்னு பயப்பிடுவது கூட ஒரு வகை அறியாமையே..! அதேபோல்.. உள்ளது உங்கள் குற்றச்சாட்டு. :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.