Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனுஸின் கொலைவெறிக்கு பலிக்காடாவாகும் தமிழர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனுஸின் கொலைவெறிக்கு பலிக்காடாவாகும் தமிழர்கள்.

அந்தக்காலத்தில் சினிமா கதைகளும், காட்சிகளும் சமுதாயச்சீர்திருத்தங்களுக்காகவும் சமுதாயத்தைப் பிழையான பாதையில் கொண்டு செல்லாதவகையிலும் நுணுக்கமாக ஆராயப்பட்டு சினிமா தயாரிக்கப்பட்டு வந்தது. சமுதாயத்திற்கு நல்ல சிந்தனைகளைச் எடுத்துச் சென்றது.

இன்றைய சினிமாக்கள் சமுதாயத்தின் பண்பாடுகளை மறந்து, சமுதாயத்தை பிழையான சிந்தனைக்கு இழுத்துச் செல்லும் ஒரு வியாபார சிந்தனை உள்ள சினிமாக்களும் அத்துடன் ஒரு சிலரின் கைகளில் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஒரு இனம் அடையாளம் காணப்படுவது அதன் பண்பாட்டாலும், நன்நடத்தையாலும் தான். இன்றைய தமிழர் பண்பாட்டில் அதிக

ஆதிக்கம் செலுத்துவது சினிமாதான்.

அந்த ரீதியில் தான் தனுஸின் கொலைவெறிப்பாடல். இது இன்றைய இளைய தலைமுறையினரைக்கவர்ந்து அவர்களைப் பலிக்கடாவாக்கள் ஆக்கியிருக்கின்றது. இப்பாடலில் 90வீதம் ஆங்கில வார்த்தைகளும், ஒரு அர்த்தமில்லாத சமுதாயநலனுக்கு உதவாத நல்ல இசையமைந்த பாடல் தான்.

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோகலாமா? என்ற பாடல் இசையினால் அதிக மக்களின் மனங்களைப் பற்றிக்கொண்டது. இருந்தாலும் வாலி அவர்கள் அந்தப்பாடலுக்காக ஒரு நேரத்தில் கவலைப்பட்டவர்.

இந்தக் கொலைவெறிப்பாடலை யாரும் ஒரு ஏழையோ அல்லது வேறுயாருமோ எழுதி இசை அமைத்திருந்தால் இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புக்கிழம்பிப் பாடல் இல்லாது ஒழித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் எழுதியதும் இசை அமைத்ததும் தனுஸ் அல்லவா?

யார் எதிர்க்கமுடியும்? இருந்தாலும் ஏகப்பட்டவர்கள் விமரிசித்து இருக்கின்றார்கள்.

ஒருவருடைய எண்ணம், எழுத்து நடை என்பன அவர்கள் பரம்பரை வழிவந்தவையே. அதைத்தான் குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஒவ்வொருவருடைய செயல்களும் அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப அமைந்திருக்கும்

தனுஸின் இந்தப்பாடல் வெறும் பணம் பண்ணும் வேலைதான். இது சமுதாயத்திற்கு ஒவ்வாத ஒரு பாடல். இதனால் சமுதாயநலன் பேணும் நல்லவர்கள் சினிமாவிற்கு வரவேண்டும் என்றும் பண்புள்ளவர்கள் தான் எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப்பாடலின் இசையில் பலியாகி இப்பாடலை முணு முணுத்து இந்தக்கொலைவெறிக்கு பலிக்கடாவாக வேண்டாம் என்று அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

பழைய பாடல்களைப் படித்துப்பாருங்கள். ஒருவரியில் ஆயிரம் அர்த்தங்கள் சமுதாய நலனுக்கு உதவுவதாக இருக்கும்.

Edited by மோகன்
தலையங்க எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.

அப்படி எல்லாமே பழயதில்தான் இருக்கிறதென்று சொல்ல முடியாது. பழயதில் கெட்டவைகளும் இருக்கின்றன, புதியவைகளில் நல்லவைகளும் இருக்கின்றன. இது பணம் பண்ணும் வேலையே தவிர சமுதாயத்தைப் பாதிக்காது.

பாட்டில் சொற்கள் உதவாத வார்த்தைகள் தான்,

இசை கலக்க பட்ட விதம் நல்லாக இருக்கிறது.

இப்ப யார் அர்த்த பாட்டு கேட்கிறார்கள். இசையின் கலவைக்காகவே பெரும்பாலான பாடல்கள் வெற்றி பெறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பாடல்களை 20,30 வருடம் கழித்தும் கேட்டால்.... முதலைல் கேட்ட அதே... உணர்வு ஏற்படும்.

இப்படியான பாடல்களை ஆறுமாதம் கழித்து கேட்டால்... வாந்தி தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பெண்களைக் கவிஞர்கள்

இளந்தென்றலே என்றனர்

இன்று வாடி வாடி Cute

பெண்ணே என்கின்றனர்

நாளை எப்படியோ

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை (சரியோ தெரியாது?) என்ற மாதிரி தமிழ் சினிமா இசையின் தரம் குறைந்துள்ள நிலையில் ஓரளவு கேட்கக் கூடிய சுமாரான பாடல்களும் செம ஹிட்டாகத்தான் வாய்ப்புகள் அதிகம். தேர்வுகள் குறைந்துள்ள நிலையில், வத்தலோ தொத்தலோ இருப்பதற்குள் நல்லதை ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலை.

இதற்கு மாறாகவும் முன்பு நடந்தது. இளையராஜாவின் தரமான இசை உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் வந்த நல்ல இசையமைப்பாளர்களும் (ஷியாம், வைத்தி லக்ஸ்மன், சிவாஜி ராஜா, வி எஸ் நரசிம்மன், விஜய் ஆனந்த், தேவேந்திரன், அம்சலேகா.....) பெரிதாக பேசப்படவில்லை.

இதைத்தான் அதிஷ்டம் / காலம் என்பதோ தெரியாது.

தனுஸின் கொலைவெறிக்கு பலிக்காடாகும் தழிழர்கள்.

ஒருவருடைய எண்ணம், எழுத்து நடை என்பன அவர்கள் பரம்பரை வழிவந்தவையே. அதைத்தான் குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஒவ்வொருவருடைய செயல்களும் அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப அமைந்திருக்கும்

தனுசினுடைய பாடல் இருக்கட்டும் இவருடைய இந்தக் கருத்தில் யாழ் கள நிர்வாகம் உடன்படுகிறதா?இன்னும் எத்தனை நூற்றாண்டுக்கு இதை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாம் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும்.

வெற்றி பெறுவது என்பதே இன்றைய முதல் தேவை. அத்துடன் கலந்தது ஆதரவு. இவை இரண்டையும் அடைபவரே தாக்குப்பிடிக்கமுடியும்.

நான் ஆரம்பத்தில் சிறிதான M.S. விஸ்வநாதனின் ரசிகன்

அதன்பின் அன்னக்கிளியுடன் இளையராஜாவின் பரம விசிறி

ஆனால் றோஜா படத்திலிருந்து ரகுமானின் ரசிகன் நான்.

இதில் தமிழ் அல்லது தமிழ்ப்ண்பாட்டு இசை என்று பார்த்தால் அது மிகவும் கீழிறங்கியே வந்ததை பார்க்கலாம்.

ஆனால் எமக்குப்பிடித்துதானே தொடர்ந்தது. மற்றயவை வீழ்ச்சியடைந்தது தானே வரலாறு.

தற்போது எனது மகனது அறைக்குப்போனால் காரில் ஏறினால் ஒவ்வொரு நாளும் கேட்கும்பாடல்

காதல் என் காதல் அது

கண்ணீரில

போச்சு அது போச்சு

தண்ணீரில...............

அடிடா அவள

உதையடா அவள

விடுடா அவள..................

இது தான் போகுது

காலையில எழும்பினா ஒரே ஒப்பாரியாக்கிடக்கு...

எனக்கெண்டால் மண்மையால போகுது

ஆனால் பொடிக்கு பிடித்திருக்கே....

என் பிள்ளைக்கு மட்டுமல்ல நிழலியின் மகனுக்கும் பிடித்திருக்கே...

அப்போ நிற்கப்போவது யார்?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த தலையங்கமே பிழை .............பலிக்காடாகும் ...............பலிக்கடாவாகும் ................என வரவேண்டும்......பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக் காரணம் தாளலயமே...........கொலைவெறி எனும் சொல்லின் அர்த்தம் தேடப்படுகிறது .......

.என்.. அக்கா பேரன் கேட்கிறான்.(...எழு வயது .).what is kolaiveri mean .........??????.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கொலை வெறி என்னும் சொல்லை ஏற்கனவே இங்கு என் மக்கள் பாவிப்பதனைப்பார்த்திருக்கின்றேன்

எனவே அது பாடலுக்குள்ளும் வரும்போது அது அவர்களைக்கவர்ந்திருக்கிறது.

அத்துடன் அவர்கள் தற்போது பாவிக்கும் சொற்கள்

நானும் மனுசன்தானே

போய்த்தூங்கு...

ஆமா நீங்க யாரு (நான் ஏதாவது செய்யச்சொல்லி கேட்டால் இப்படி கேட்கிறார்கள்) :lol::D :D

உங்களுக்கும் தெரிந்தால் எழுதுங்கள்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பாடலும் சரி படமும் சரி மக்களுக்கு நல்ல விடயங்களை போதிப்பவையாக இருக்கவேண்டுமே தவிர கெடுத்து குட்டி சுவராக்கக்கூடாது

"எவன்டி உன்ன பெத்தான்?" "கையில கிடைச்சால் ..."என்ற

சிம்புவின் (எ)ருமையான் ரெக்னோ பாடலுக்கு

"கொலைவெறி" எசப்பாட்டு பாட வந்துட்டார் தனுஷ்.

வேறொன்றும் தனிப்பட்ட மோதல் இதில் இல்லை.

கண்களால் காதல் மொழி பேசியது போய்

பார்க்காமல் காதல் செய்த காலம் போய்

ஓடிப்பொய் கல்யாணம் செய்த காலம் போய் - இன்றையகாதல்

கொலைவெறியில் சுகம் காண நிக்குது.

நல்ல சீர்காழியின் பாடல்களெல்லாம் இருக்க ஏனப்பா இதையெல்லாம் கேட்கின்றார்கள் என்கின்றார் கட்டுரையாளர் ,அதுவும் சரிதான் என்றுதான் என்ரை வயசும் சொல்லுது .

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு" வாலி எழுதவில்லையே? பிறகேன் அவர் கவலைபட்டார் .

அது சினேகன் எழுதியது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை இப்ப என்ன பிரச்சனை என்றால் தனுஸ் எழுதின கொலைவெறி பாடலல்ல சொல்ல வாறது. தொழில்முறை கவிஞர்களாக இருப்பவர்கள் தமது பிழைப்புக்கு ஆப்பு வந்திட்டுது என்று தெரிந்து தான் எதிர்க்கிறார்களே தவிர கொலைவெறி சமுதாயத்தைச் சீடழித்திடும் என்று அல்ல. நாளைக்கு தனுஸை போல பலர் தாமாக எழுதி இசையமக்க வெளிக்கிட்டால் பலரோடை பிழைப்பிலை மண்ணள்ளி போட்டுடாங்களே என்று தான் இப்படியான எதிர்ப்புக்களே!?

பழையகாலப்பாடல்கள் போல இல்லை என்பது உண்மையென்றாலும் காலத்துக்கேற்றபாடல்களே தேவை. இந்த காலத்தில் ஒரு பெண்ணிடம் போய் மானே,தேனே, மொட்டே,மலரே என்றால் இது யாரோ பைத்தியகார ஆஸ்பத்திரியிலை இருந்து தப்பி வந்திட்டுது என நினைபாங்கள்.

புறாமூலம் தூதனுப்பி பின் கடிதம்,அதன் பின் ஈ‍மெயில் இப்ப குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம் நடக்கும் போது இன்னும் ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னரான பெருமைகளை பேசுகிறவர்கள் இன்னும் இந்த காலவோட்டத்தில் கலக்கவில்லை என்பது தான் திண்ணம். இன்னும் இந்த சமுதாயத்தின் சிந்தனைகளும்,செயற்பாடுகளும் ஜம்பது வருடங்கள் பின்னோக்கியே இருக்கின்றன. <_<:wub:

  • கருத்துக்கள உறவுகள்

கொள்வாரில்லாமல் கொடுப்பாரில்லை,இலக்கணத்திற்காக இலக்கியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலில் வரும் கொலைவெறி எனும் சொல் இளையவர்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இதனையே தனுசும் தனது பாடலில் புகுத்தி உள்ளார் "கொலைவெறி" எனும் சொல்லின் கருத்து பாடலிலோ அல்லது இளையவர்கள் பேசும் போதோ உண்மையில் பிரதிபலிக்கவில்லை.மகிந்த அரசுக்கு வேணுமானால் அச்சொட்டாக பொருந்தும்.

சில கவிஞர்களுக்கு பாடலின் வெற்றி பொறுக்க முடியவில்லை என்ற ஜீவாவின் கருத்தோடு உடன்பட வேண்டியுள்ளது.இப்பாடலை தமிழர்கள் பாடமாக்கினார்களோ இல்லையோ வடக்கு இந்தியர்கள் குறிப்பாக இளையவர்கள் ஒரு சொல்லும் விடாமல் மனனம் செய்து விட்டார்கள் என்றால் நம்பவா போகிறீர்கள்.இதனை பொறுக்க முடியாத வட இந்திய கவிஞரும் மனம் பொருமி இருக்கிறார்.

பாடலினால் தான் சமுதாயம் உருப்பட்டிருக்க வேண்டுமெனில் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் பாடலுக்கு எமது சமுதாயம் எங்கேயோ அல்லவோ போயிருக்க வேண்டும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரம் போ ஓரம்போ போ ருக்குமணி வண்டி வருது....வாங்கடா...வந்து இந்த????? இதுவும் ஒருகாலத்தில் சர்ச்சைக்குரிய பாடல்தான் :)

ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படியான பாடல்கள் வருவதும் பிரபலமாவதும் வழமை. அந்தக் காலத்தில் வந்த பாடல்கள் மட்டும் திறம் அல்ல. பல பாடல்களில் பெண்கள் டொடர்பாக, குடும்பம் தொடர்பாக, கணவனை தெய்வமாக போற்றுவது போன்ற படு பிற்போக்குவாத கருத்துள்ள பல நூற்றுக்கணக்கான பாடல்களை காட்டிலும் இப்படியான பல பாடல்கள் பரவாயில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டின் மெட்டு கேக்க நல்லாய் தானே இருக்கு. பிறகு ஏய்யா உங்களுக்கு தனுஷில் இந்த கொலைவெறி?

வடிவேலுவின் இந்த காமடியின் பின் கொலைவெறி என்பது சாதாரண டயலாக் ஆகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.