Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்?

Featured Replies

வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்]

யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை.

வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து என்ன பயன்? ஆகையால் நாங்கள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று யாரேனும் கூறிக்கொள்ளலாம் . ஆனால் அதனை ஒரு தக்க பதிலாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று முன்தினம்கூட பிரித்தானியத் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். யாழ்.ஆயரும் நிலைமைகளை தெளிவாக அவர்களிடம் எடுத்துக் கூறியிருந்தார்.நல்ல விடயம்.

எனினும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர்கள் இந்து சமயத் தலைமைகளை சந்திக்கவில்லை. சிலவேளைகளில் இன்னும் பத்து பன்னிரண்டு வருடங்களில் இலங்கையில் இந்து சமயம் என்பதை கத்தோலிக்கமாக மாற்றி விடுவோம். ஆகையால் இந்து சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் விட்டு விட லாம் என்ற நினைப்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் அங்ஙனம் நடந்து கொண்டனரா? அல்லது யாழ்ப்பாண அரச அதிபர் இந்து சமயத் தலை மைகள் பற்றி தெரியாமல் அல்லது நினைப்பில் கொள்ளாமல் விட்டு விட்டாரா? என்ற கேள்வி இந்துக்களிடையே எழுந்துள்ளது.

தென் பகுதிக்கு விஜயம் செய்யும் வெளி நாட்டுக் குழுக்கள் மரியாதைக்கேனும் பெளத்த பீடாதிபதிகளை சந்திக்கின்றனர். அவ்வாறு அவர்களை சந்திக்க தவறினா லும் கூட இந்த நாட்டின் ஆட்சி அதி காரம் பெளத்த பீடங்களின் காலடிகளில் கட்டுண்டு இருப்பதால் அதுபற்றி அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை.

நிலைமை இதுவாக இருக்க, வட பகுதிக்கு வருகின்ற வெளிநாட்டுக் குழுக்கள் வடக்கின் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து சமயத் தலைமைகளை சந்திக்காமல் தனித்து கத்தோலிக்க தலைமையை மட்டும் சந்தித்து விட்டுச் செல்கின்றன.எப்படி இருக்கிறது நிலைமை? இந்து சமயம், மக்கள், அதன் சமகால நிலை மைகள்; அதுபற்றி எல்லாம் கதைக்கவும் பேச வும் யார் உள்ளனர்? இதை இவ்விடத்தில் கூறும்போது சிலர் விவாதித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல முடியும்.

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல் லுங்கள். கத்தோலிக்க மதத் தலைமையைச் சந்தித்தால் இந்து மதத் தலைமைகளைச் சந் திக்கக் கூடாதா? முதலில் இங்குள்ள சமயவாதத்தை நீக்கிக் கொள் வோம். அதன் பின்னர் இனவாதத்தை கண்டிப்போம். அப்போதுதான் இறைவனும் எமக்கு உதவுவான்.

http://www.valampuri...ws.php?ID=26459

  • கருத்துக்கள உறவுகள்

சந்தித்தால் போல பிராமணர்களால் என்னத்தை பெரிதாக செய்து விட முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் என்று -யாரை சந்திக்க சொல்லுகிறீர்கள்? உண்மையில் எங்களுக்கு ஒரு நிறுவன மயப்பட்ட ஒரு மத கட்டமைப்பு கிடையாது. நல்லூர் ஒரு பக்கம் என்றால், பெருமாள் கோவில் ஒரு பக்கம், இப்படி எல்லா கோவில்களும் தனித்தனியே உள்ளது. இந்து சமய அமைச்சர் தீண்டத்தகாதவர், அவரோடு சேர்ந்தவர்களும் ஜனாதிபதிக்கு மலைபோடுவதும் ஆராத்தி எடுப்பதும்தான் வேலை.

இலங்கை சைவக்குருமார் சங்கம் ஒன்றை தொடங்கி அதில் இருந்து செயற்பாடுகளை தொடங்கலாம்.

என்னவென்றால் யார் இவர்களுக்குரிய அந்தஸ்தை கொடுப்பார்கள். சில காலத்திர்ற்கு முன்பு, நான் அறிந்த வகையில் மக்களோடு வேலை செய்யும் பலரும் இணைத்து ஒரு கடிதம் எழுதி கூட்டமைப்பிடம் கொடுத்தால், அதற்க்கு பதில் சொல்ல கூடமைப்புக்கு தேவையில்லையாம். கூடமைப்பில் உள்ளவர்கள், அரசியில்வாதிகளாக இருக்கட்டும், ஆனால் அவர்கள் சிவில் சமூகம் என்று பலர் இணைத்த அமைப்புக்கு பதில் சொல்ல தேவையில்லை என்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதே போலத்தான் இப்படி என்று ஏதும் நிறுவனமாக்கினால் நடக்கும்

இதுதான் உண்மை, எங்களையே நாங்கள் மதிக்காத போது, அது குருமாராய் இருக்கட்டும் அல்லது சிவில் சமூகமாய் இருக்கட்டும்,- வெளியார் வந்து கனம் பண்ணுவது என்பது சாத்தியப்படாது.

சிலவேளை ரதி அக்கா சொல்லுகிற மாதிரி " பிராமணர் என்ன கிழிக்ப்போகினம்" என்று நினைப்பது அனைவருக்கும் நல்லதாக இருக்கும்.

முதலில் இந்து சமயம் என்பதில் இருந்து சைவசமயம் என்று வாருங்கள். (சிறியில் இருந்து திருவுக்கு வாருங்கள்)

ஈழத்தில் உள்ள எல்லா சைவக்கோயில்களையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவாருங்கள்

எல்லாவற்றையும் தமிழ்மொழியில் செய்யுங்கள்

அனைத்துத் தரப்பு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிர்வாகத்திலும் கேயில்களிலும் அதிகாரி பூசாரியாக்குங்கள்.

சமயத்தை வைத்து மேலாண்மையை நிலைநாட்டுவதில் இருந்தும் கலாச்சார அடக்குமுறைகளை மேற்கொள்வதில் இருந்தும் திருத்தி சமயத்தை ஆன்மீகப்பாதைக்குள் கொண்டுவந்து மக்களை ஆதரிக்கவும் நல்வழிப்படுத்தவுமாக மாற்றுங்கள்

பின்னர் யாரும் புறக்கணிக்கப்போவதில்லை

பிரிட்டிஸ்காரனுக்கு இந்தச் சமயம் எப்படிப்பட்டது என்னென்ன ஒடுக்குமுறைகளை செய்தது என்று நாவலர் காலத்துக்கு முன்பே தெரியும். அதேபோல் இந்தியாவில் இந்து சமயம் என்ன செய்கின்றது என்றும் உலகத்துக்கு நன்கு தெரியும். தீண்டாமையால் வதைபடும் மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க பல நூறு அமைப்புகள் இருக்கின்றது. கர்நாடக தேவதாசிகள் வாழ்வை மீட்பதில் இன்னும் பல அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

எது சமயம் எது வரையறை என்ன கொள்கை என்ன கோட்பாடு என்ன செய்கின்றோம் என்று எந்த வரையறையும் இல்லாமல் வெளிநாட்டுக்காரன் வந்து எந்தப் பூசாரியை சந்திக்கவேண்டும் என எதிர்பார்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

சைவ மதத்தலைவர்களை மேற்குலக இல்லை கீழைத்தேய அரசியல் கலக்காமல் இருப்பதே நல்லது . இது அவர்கள் தெரியாமல் செய்யும் நன்மை.

புத்த மதத்திலும் அஸ்கிரிய பீடம் (மற்றையது தெரியவில்லை) என்று பிரிவுகள் உள்ளன (தேரவாத, மாகன்யா ). இஸ்லாமிய மதத்திலும் சுனி , சியா பிரிவுகள் உள்ளன. கிறிஸ்தவ மதத்தில் பல பல பிரிவுகள் உள்ளன. இதனால் மதம் அரசியலில் கலந்து பல சண்டைகள் / யுத்தங்கள் உலகில் நடந்துள்ளன , நடக்கின்றன, நடக்கும்.

சைவமதம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்துவிடட்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சுகனின் பதிவு, மிகவும் முக்கியமான விடயத்தைச் சொல்லி நிற்கின்றது!

இந்து மதம், என்கின்ற விறகுக் கட்டில், ஒரு சுள்ளி மட்டுமே சைவம்!

வேதங்கள் எமது மதத்தின் அடிப்படை என்பதும் தவறு!

வேதங்களில் வரும், உருத்திரன் என்பதே 'சிவன்' என்று எம்மை நம்ப வைக்கப் படுகின்றது!

இதே போல 'ஸ்கந்தா' எனப்படும், ஐயப்பன்' போன்று பிறந்த ஒருவரை, கந்தன் என்று எம்மை, நம்ப வைக்கப் படுகின்றது!

அகூதா, சொல்வது போல, மதத்தைத் தனியே விட்டுவிடுவோம்!

இது வரை, எமது அழிவுக்கு, அது துணை போனது போதும்!

Edited by புங்கையூரன்

சைவசமயம் அரசர்களால் வளர்க்கப் பட்டது. மற்ற சமையங்கள் அமைப்புக்களால் அல்லது அரசர்களுடன் இணைந்த அமைப்புக்காளால் வளர்க்கப் பட்டிருக்கின்றன. தமிழும் அரசர்களால் வளர்க்கப் பட்டது(மற்றைய மொழிகள் எப்படி வளர்க்கப் பட்டன என்பது சரியாகத்தெரியாது) இவற்றுக்கு தமிழரின் பொது அமைப்புக்கள் பொறுப்பெடுக்காது. யாராவது விரும்பும் தனி மனிதர்கள் இவற்றை வளர்க்கலாம். எதிர்வளத்தில் மொழியிலும், மதத்திலும் ஜனநாயகத்தன்மை வந்தது மக்களின் இயல்பால். தமிழர்கள் எல்லோருமே தான் சொல்வது சரி என்று நினைப்பதால் இறுதியில் மற்றவர் சொல்வதும் சரி என்று ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே இந்துகளைப்பிரதிநிதிப் படுத்த அவர்கள் ஒருவகைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் பா.உ.களால் மட்டும்தான் முடியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயம் இந்து சமயத்தின் ஓரங்கமாக இருக்கலாம்.இலங்கையை பொறுத்த வரையில் அரசியலில்

பிராமணர்கள் (ஐயர்) தம்மை நானறிந்த வரை எப்போதுமே மூக்கை நுழைப்பதில்லை.அன்றியும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. சமயத்தோடு தமது எல்லையை வரையறுத்துக் கொள்வார்கள்.

புத்தமத பிக்குகள் தமிழ் குழந்தைகளை தாரில் போடுவதில் இருந்து பாராளுமன்றத்தில் தனிக்கட்சி கொண்டவர்கள் வரை தமது எல்லைக்கோடை எல்லை இல்லாமல் செயற்படுபவர்கள்.

கிறிஸ்தவ பாதிரியாரை மேற்குலகம் தமது மதத்தவர்கள் என்பதால் (இனம் எதுவாயினும்) நம்பிக்கைக்கு உரியவர்களாக கருதி அவர்களை சந்திக்கிறார்கள்.

ஆக ஒரு இனத்த்துக்காக பிரதிபலிப்பவர்களை சந்திக்கலாம் என மேற்குலகம் நினைத்திருக்கக் கூடும்.இப்படியான நுணுக்கங்கள் வெள்ளையருக்கு நிறையவே தெரியும்.

  • தொடங்கியவர்

வட அயர்லாந்தில் நீண்ட காலமாக பிரித்தானியா அரசு ஒரு 'பயங்கரவாத' சண்டையை பிடித்தது. சின் பெய்ன் என்ற அந்த அமைப்புக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான முக்கிய பிரச்சனை - மதம்.

பல காலனித்துவ நாடுகளிலும் தமது மதத்திற்கு மாறியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அதை ஒரு வியாபாரமாக மாற்றினார்கள். இன்று உலகத்திலேயே மிக செல்வந்த நிறுவனமாக கத்தோலிக்க மத அமைப்பு (வத்திக்கான்) உள்ளது. உலகின் மிகப்பலம் வாய்ந்த நபரை, அமெரிக்க சனாதிபதியை தெரிவு செய்வதில் இந்த மதம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மொத்தத்தில் மேற்குலக கிறிஸ்தவ மதம் கூட ஒரு 'மதம் பிடித்த' மதம் தான்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வட அயர்லாந்தில் நீண்ட காலமாக பிரித்தானியா அரசு ஒரு 'பயங்கரவாத' சண்டையை பிடித்தது. சின் பெய்ன் என்ற அந்த அமைப்புக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான முக்கிய பிரச்சனை - மதம்.

பல காலனித்துவ நாடுகளிலும் தமது மதத்திற்கு மாறியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அதை ஒரு வியாபாரமாக மாற்றினார்கள். இன்று உலகத்திலேயே மிக செல்வந்த நிறுவனமாக கத்தோலிக்க மத அமைப்பு (வத்திக்கான்) உள்ளது. உலகின் மிகப்பலம் வாய்ந்த நபரை, அமெரிக்க சனாதிபதியை தெரிவு செய்வதில் இந்த மதம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மொத்தத்தில் மேற்குலக கிறிஸ்தவ மதம் கூட ஒரு 'மதம் பிடித்த' மதம் தான்.

உண்மை தான், அகூதா! மதங்களின் பெயரால் நடந்த சண்டைகளும், உயிர்க் கொலைகளும் மிகவும் அதிகம்!

வட அயர்லாந்திலிருந்து, மத்திய கிழக்கூடாக, இந்தோனேசியாவில் உள்ள 'ஆச்சே' வரையும் இது நீள்கின்றது!

சதாம் உசையினின், ஐம்பதினாயிரம் விசேட படையினர், பாலைவனத்தில் நிலையெடுத்து இருந்தபோது, மூன்று நாட்கள் இரவு பகலாகக் குண்டு மழை பொழிந்து B-52 விமானங்கள் மூலம், பங்கர்களுக்குள்ளேயே, சமாதி கட்டியது அமெரிக்கா!

அதற்கு முன்பு, 'குற்றவுணர்வு' மேலுந்த , பாப்பாண்டவரிடம் ஆலோசித்தார், சீனியர் புஷ்!

பாப்பாண்டவர் கூறியதும், 'கீதோபதேசம்' கூறிய பதிலும், ஒன்று தான்!

வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்]

யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை.

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல் லுங்கள். கத்தோலிக்க மதத் தலைமையைச் சந்தித்தால் இந்து மதத் தலைமைகளைச் சந் திக்கக் கூடாதா?

http://www.valampuri...ws.php?ID=26459

ஆமா எமக்கு என்ன தீர்வு பெரிசா கெடைச்சிட்டுதுன்னு,,,

மதவாதத்தை கைல எடுக்குறீங்க?

ஏரியா ஏரியாவா சண்டை புடிச்சாலும்,,, தமிழீழத்தில் எப்போதுமே ,,,

இருக்காமபோனது,,, இந்து கிறிஸ்தவ சண்டைதான்...

ஐ மீன் மதவாதம்.....

வலம்புரியோ/ இல்ல வையாபுரியோ.........

---- ... உங்க பரபரப்புக்கு... ஏண்டா இப்பிடி எல்லாம், பிளவை உருவாக்குறீங்க?

பெயரளவில்தான் ,, வித்யாசப்பட்டாலும்,,,

மனசு அளவில்/ மத அளவில்...

எப்போ---நாங்க இப்பிடி கேணைத்தனமா எல்லாம் சிந்திச்சோம்?

----.

என்னதான் இந்து & இந்து...... இரண்டு இந்துக்களுக்கு பொறந்தாலும்.....

தன் மகனுக்கு சார்ள்ஸ் அன்ரனின்னு தான் பெயர் வைச்சாரு எங்க தலைவர்!

அந்த அண்ணன் ,, இனத்துல... இப்பிடி எல்லாம் ---!!

அநாகரீகமாகவும் ஒருமையிலும் எழுதியவை நீக்கப்பட்டுள்ளன. உணர்ச்சிவசப்பட்டாலும் களவிதிகளையும் கொஞ்சம் கணக்கெடுக்கவும்: நிழலி

Edited by நிழலி

தமிழ் இந்து மத தலைவர்களுக்கு ஆன்மீகத்தைத்தவிர வேறு ஒண்டும் தெரியாது.. இந்தக்கூட்டத்துக்கு சமஸ்கிருதத்தில் பாட்டுப்படிக்க மட்டும்தான் தெரியும்.. முப்பது வருச பிரச்சினையில் எந்த ஒரு தமிழ் பூசாரியையாவது தமிழர்சார் பத்திரிகைகள் கூட்டங்களில் பார்த்திருக்கிரீர்களா? இவர்கள் வலம் வருவது எல்லாம் சிங்களவனின்ட டீவியுலும், தமிழ் துரோகிக்கூட்டங்களின் வெப்சைட்டுக்களிலும்தான்... காசை குடுத்தால் கடவுளுக்கும் கண்ட கடைப்புளிக்கும் மிடில்மான் வேலைபாப்பார்கள்....

எமக்குள்ள சாபங்களில் இதுகளும் ஒண்டு..

இந்து/சைவ சமயத்தில் பிழை கண்டுபுடிக்கவில்லை, இலங்கை தமிழ் இந்து சமய பூசாரிகளில்தான் இந்த கருத்து..

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயத்திற்கும் இந்து மதத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கவில்லை..! ஆதிசங்கரர் சைவம் வைணவம் மற்றும் எல்லாவற்றையும் இணைத்து இந்து சமயம் ஆக்கினார் என்று முன்பு படித்த ஞாபகம்..!

இந்து மதம் மனித வரலாற்றில் பழைய மதமாக கிட்டத்தட்ட ஒத்துகொள்ளப்பட்டுள்ளது..

இந்துமதத்தை நாலு பெரியமதங்களை சேர்த்து உருவாக்கினார்கள்.. இதில் சைவம் மூத்தது..இதுவும் ஒத்துகொள்ளப்பட்ட ஒண்டு..  

இதில் இருந்து என்ன தெரிகிறது?  ஆதியிலேயே தமிழர்கள் சொந்த சமயத்தையும் கோட்டைவிட்டு விட்டு  நிக்கிறார்கள் எண்டு.. கெட்டகேட்டுக்கு ஒரு அறப்படிச்சது எழுதுது..... வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்'' எண்டு.... :lol:   ''

Edited by Panangkai

அமெரிக்கன் " ஓமக்குச்சி " முந்தி அடிக்கடி யாழ் போய் ஒராளைச் சந்தித்துப் பேசி வந்தார். கடைசியில தமிழருக்கு நடந்த்தது...???

இந்து குருமாரின் வேலை இறைவனை பூசை செய்வது மட்டுமே. அரசியல் அல்ல.

சைவர்கள் / இந்துக்களுக்கு இப்படியானவர்கள் தான் தேவை.

http://en.wikipedia.org/wiki/Arunachalam_Sabapathy

இங்கு சுகனின் கருத்தும் அறிவிலியின் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியவைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பல அங்கத்தவர்கள் எப்போதுமே

நெற்றியில் விபூதி சந்தனத்துடன் வலம் வருவதால்

அவர்களையே சமயத் தொண்டாற்றுபவர்கள்

என்று நினைத்து விட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பல அங்கத்தவர்கள் எப்போதுமே

நெற்றியில் விபூதி சந்தனத்துடன் வலம் வருவதால்

அவர்களையே சமயத் தொண்டாற்றுபவர்கள்

என்று நினைத்து விட்டார்களோ?

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

"பலம் இருக்கும் இடத்தில் மரியாதை தானாக வரும்"

புலம்பெயர் தேசங்களில் மேற்குலக அரசியல்வாதிகள் எல்லா சிறுபான்மை மத வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்கிறனர். அப்பொழுது அந்த ப்பண்பாட்டை மதிக்கின்றனர்.

கூட்டமைப்பின் பல அங்கத்தவர்கள் எப்போதுமே

நெற்றியில் விபூதி சந்தனத்துடன் வலம் வருவதால்

அவர்களையே சமயத் தொண்டாற்றுபவர்கள்

என்று நினைத்து விட்டார்களோ?

:D :D :D :D

இந்து / சைவ சமயத்தைச் சேர்ந்த பெரும்பாலான குருமார்கள் தற்போது ஆன்மீகத்தை விட காசு சேர்க்கும் ஒரு வியாபாரத் தலமாக ஆலயங்களை மாற்றி வரும் நிலையில், மக்கள் நலன்களில் அக்கறையற்றவர்களாகவே உள்ளனர். அவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் திறனற்று இருப்பதால் நாகரீகமாக மதவெறியை வெளிப்படுத்தப் பழகிய மேலைத்தேய அரசுகள் நாசூக்காக கிறீஸ்தவ பாதிரிகளை மட்டும் சந்திப்பது இலகு படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில வேளைகளில் கிறீஸ்தவ பாதிரிகள் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி தெளிவாக கதைத்துள்ளனர், சில வேளைகளில் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கான சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கவும் மிகத் தெளிவாக கதைத்துள்ளனர். எனவே அவர்களின் உள்நோக்கம் என்னவென்று விளங்குவது சிரமமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட, இந்துக்களான இந்திய தூதுவர்களே இந்துக்களை ஓரம்கட்டி வழிகாட்டி விட்டநிலையில், கிறிஸ்தவ வெளிநாட்டு தூதுவர்கள் எதற்காக இந்து மத தலைவர்களை சந்திக்க வேண்டும்?

Edited by Jude

  • தொடங்கியவர்

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட, இந்துக்களான இந்திய தூதுவர்களே இந்துக்களை ஓரம்கட்டி வழிகாட்டி விட்டநிலையில், கிறிஸ்தவ வெளிநாட்டு தூதுவர்கள் எதற்காக இந்து மத தலைவர்களை சந்திக்க வேண்டும்?

இந்தியா அரச மதம் என்ற ஒன்றை உத்தியோகபூர்வரீதியாக கொண்டிராத நாடு. நேபாளம் மட்டுமே உலகில் உள்ள ஒரே ஒரு இந்துமத நாடு. மேற்குலக நாடுகள் 'மதம்' கொண்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாடசாலைகள் எல்லாம் (அதிகமானவை) இந்து(யாழ் இந்து,மானிப்பாய் இந்து,கொக்குவில் இந்து) பாடசாலை என்ற பெயரை கொண்டுள்ளன ஏன் சைவ பாடசாலை என்ற பெயர் வைக்கப்படவில்லை...ஒரு வேளை கிறிஸ்தவ பாடசாலைகள் உருவாகப்போகுது என்ற பயத்தில இந்தியாகாரன் இந்து பாடசாலையை யாழில் அறிமுகப்படுத்தி விட்டானோ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாடசாலைகள் எல்லாம் (அதிகமானவை) இந்து(யாழ் இந்து,மானிப்பாய் இந்து,கொக்குவில் இந்து) பாடசாலை என்ற பெயரை கொண்டுள்ளன ஏன் சைவ பாடசாலை என்ற பெயர் வைக்கப்படவில்லை...ஒரு வேளை கிறிஸ்தவ பாடசாலைகள் உருவாகப்போகுது என்ற பயத்தில இந்தியாகாரன் இந்து பாடசாலையை யாழில் அறிமுகப்படுத்தி விட்டானோ?

யாழ் இந்து மகளீர் கல்லூரியின் பாடசாலை கீதத்தில் வந்தே மாதரம் என்று வருகிறது. அத்துடன் ஆரம்பகால பாடசாலை அதிபர்களின் பெயர்களைப் பார்த்தால் தெலுங்குக்காரர்கள் போல இருக்கின்றது. இணுவில் போன்ற இடங்களில் சைவப்பிரகாச வித்தியாசாலை இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.