Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2018721180suhasini.jpg

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

அழகான கதாநாயகர்களை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி.

நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகை சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் சுஹாசினி கூறுகையில், நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அழகான நடிகையை மட்டும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கதாநாயகர்கள் அழகாக உள்ளனரா என்று எவரும் பார்ப்பதில்லை. நடிகர்கள் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற அழகான கதாநாயகர்களை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=22108

  • Replies 102
  • Views 9.6k
  • Created
  • Last Reply

ஏன் இந்த வேண்டாத வேலை? இதுக்குள்ள பெயர் வேற குறிப்பிட்டு சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுஹாஸினி!!

05-mani-suhasini200.jpg

சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே... தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் "ஏன், எதுக்கு, என்னாச்சி..." டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!

அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டவும் செய்வார், வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும்.

ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்). அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ஹை ஸ்டைல் காட்சிகள் அதில்).

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். அனால் சுஹாஸினியை சிடி வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.

"இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.

ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான்", என்றார் சுஹாசினி.

"அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா... மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்..." என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.

http://tamil.oneindia.in/movies/news/2011/01/5-suhasini-mani-rathnam-veppam-audio-launch.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவரை நடிகையாக ஏற்றுக்கொண்ட அதே பக்குவத்துடன் அழகில்லாத நடிகர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரவிந்தசாமியும், அஜீத்தும் அழகென்றால் மணிரத்தினத்தை விட்டுப்போட்டு அவர்களுடன் போய்ச் சேரலாமே???

சுஹாசினி என்னதான் தப்பா சொல்லிட்டா?

நானு ரொம்ப நேசிக்குற ,,

ரகுனாதன் சகோதரம் என்னைய அடிச்சாலும் பரவாயில்ல..........

உண்மைய சொல்லணும்போல ஆசை........!

நானு காட்டப்போற .........இவங்க முகத்த பாருங்க...

இந்த கப்பிள்ஸ பார்த்தா,,,

டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மூடு வருமா?

Virudhagiri%2BTamil%2BMovie%2B_2_.jpganbesivam3.jpgSivaji%20The%20Boss_222.jpgஆனா ஆணுங்களுக்கு மட்டும்,,, அவங்க பேர்த்தி வயசு உள்ள.......

கியூட் கேர்ள்ஸ் ,, ரொமான்ஸ் பண்ண..சினிமாவுல கேக்குது!!

.

என்னுடைய Business Card அச்சடிக்க ஒரு Printer இடம் போனேன். அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. Card Design களைப் பற்றி விளங்கப் படுத்துவதற்காக அவள் ஒரு படத்தைக் காட்டினாள். உன் பார்வை எங்கே செல்கின்றது பார்த்தாயா என்றாள். என் பார்வை அப்படத்தில் உள்ள ஒரு பிரகாசமான பகுதியை நோக்கிச் சென்றது.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

ஆக, தமிழ் சினிமா ஹீரோக்கள் ஹீரோயின்களை உயர்த்துறதுக்காக தங்களையே தியாகம் செய்யினம்..! அப்பிடியா? :lol:

ரஜனியைப் பார்க்க கண்ணுக்கு வலியாகவும், ஷிரேயா கண்ணுக்கு இதமாகவும் இருக்கலாம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை நடிகையாக ஏற்றுக்கொண்ட அதே பக்குவத்துடன் அழகில்லாத நடிகர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரவிந்தசாமியும், அஜீத்தும் அழகென்றால் மணிரத்தினத்தை விட்டுப்போட்டு அவர்களுடன் போய்ச் சேரலாமே???

:)

.

என்னுடைய Business Card அச்சடிக்க ஒரு Printer இடம் போனேன். அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. Card Design களைப் பற்றி விளங்கப் படுத்துவதற்காக அவள் ஒரு படத்தைக் காட்டினாள். உன் பார்வை எங்கே செல்கின்றது பார்த்தாயா என்றாள். என் பார்வை அப்படத்தில் உள்ள ஒரு பிரகாசமான பகுதியை நோக்கிச் சென்றது.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

அதை தான் எந்த ஒரு ஆணும் செய்வார்.  

நீங்கள் கலாசார பாடம் எடுக்காமல் உண்மையை  கூறி உள்ளீர்கள்.

உண்மைதான் நடிகைகள் தங்கள் வயதுக்கு ஏத்த கணவன் மாரை தேர்வு செய்ய வேண்டும் அப்ப தான் வாழ்க்கை இனிக்கும் . . இயக்குனரை கட்டுவேன் நடிகரை கட்டுவேன் என்று அடம் பிடித்து அடுத்தவள் புருஷனை ஆட்டையை போட வேண்டாம். உ+ம் ராதிகா, நயன்தாரா ஸ்ரீதேவி இப்பிடி பலர். சுகாசினிக்கும் மணி க்கும் எத்தினை வயசு வித்தியாசம் எண்டு சொல்ல முடியுமோ??? தமிழ் சினிமாவில் முதலில் தமிழர்கள் நடிக்க வேண்டும்.

கெளதம் மேனனின் படங்களில் வரும் கதாநாயகர்கள் தமிழ் அல்லாத பெயருடன் கறுப்பு நிறம் இல்லாமலும், ஆங்கிலப் பெயர்களை கொண்டும் காணப்படும்; அதே நேரத்தில் அவரின் வில்லங்கள் தூய தமிழ் பெயர் கொண்டு கருப்பு நிறத்தில் காணப்படுவர்

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

  • கருத்துக்கள உறவுகள்

சுகாசினி தனது முகம் அழகா என்று கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

அவவுக்கு தான் ஒரு ஜெனோலியா, அமலா பால், சினேகா என்ற நினைப்பு.

சிலவேளை ஆபிரிக்க ஆண்களை அழகு என்டு சொல்கிறாவோ

அறிமுக படுத்திட்டாலும் உங்காளு(மணிரத்தினம்) இருட்டுக்குள்ள தானே படம் எடுப்பார்.. ^_^

கெளதம் மேனனின் படங்களில் வரும் கதாநாயகர்கள் தமிழ் அல்லாத பெயருடன் கறுப்பு நிறம் இல்லாமலும், ஆங்கிலப் பெயர்களை கொண்டும் காணப்படும்;

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

என்னாது ,,,

கத நாயகர்கள் பேரு தமிழ்ல இல்லாம, ஆங்கிலமா?? எப்போ எங்கே??

மின்னலேல வர்ற மாதவன் ..பேரு ராஜேஷ் .சிவகுமார்??அது?

காக்க காக்க சூர்யா ... பேரு அன்பு செல்வன்... அந்தபேரு?

வாரணமாயிரம் சூர்யா நேம்.. கிருஷ்ணன் .. அது?

அப்புறம்..வி.தா.வருவாயா.. கார்திக்??? சிம்பு?

ஆமா .........

எதையுமே பொதுமேடைலகூட வெளிப்படையா பேசுறாரு அவரு..!

நம்மாளுங்க,,ஆளையாளு முகம் பார்க்கமுடியாத,,,இணையதளத்துலகூட சொதப்புவாங்களே?!

தமிழ்விரோதபுத்தி,, நம்மளவிட சுஹாசினிகிட்டயா ,, ஜாஸ்தியா இருக்கு? :)

தமிழ்சிறி:

சுகாசினி தனது முகம் அழகா என்று கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

அவவுக்கு தான் ஒரு ஜெனோலியா, அமலா பால், சினேகா என்ற நினைப்பு.

சூப்பரு........

நாங்கமட்டும் ...சுஹாசினி கருத்துமேல கோவம் வந்தாகூட...

ஜெனிலியா,,,அமலா பால்.. சினேஹா போலவா இவன்னு ,,

கொலவெறியோட சண்டை ஆரம்பிச்சுக்குவோம்...

ஆனா அவமட்டுமில்ல ,,, ஐ மீன்....சின்ன வயசு பொண்ணுங்க எல்லாமே,,,,

கோவம்வந்தா கூட,,, விஜயகாந்த்,, ரஜினி ...மட்டுமா பேரழகனா ஏத்துக்கணும்,,,?!!

உண்மை பேச விரும்பாத ...

நீங்க மனசு மயங்கும் ,,,மெளனகீதமா சிறி? :)

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

நிழலி, உங்களிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைப் பிரயோகங்களை எதிர்பார்க்கவில்லை. :(

ஆனா அவமட்டுமில்ல ,,, ஐ மீன்....சின்ன வயசு பொண்ணுங்க எல்லாமே,,,,

கோவம்வந்தா கூட,,, விஜயகாந்த்,, ரஜினி ...மட்டுமா பேரழகனா ஏத்துக்கணும்,,,?!!

சுகாசினி சின்ன வயது கதாநாயகர்களைத் தேடவில்லை. அவர், நிறத்தில் வெள்ளையானவர்களைக் குறிப்பிடுகிறார். அது தான் தவறு. இளவயது கதாநாயகர்கள் பலர் உள்ளனரே? அரவிந்த சாமி ஒன்றும் வயதில் குறைந்தவர் இல்லை. இப்போதுள்ள "இளம்" நாயகர்களில் வயது கூடியவர் அஜித் தான்.

ஆஹா 'Eas சகோதரம்... நீங்களுமா?

எப்போ ஆவது கருத்து எழுதுறீங்க,,, எதிர்த்து நான்,,, ஏதாச்சும் சொன்னா...

வாய் காட்டுறாரு அறிவிலி என்னு சொல்லுவீங்களா?

ஒண்ணே ஒண்ணுமட்டும் மனசில ஒதைக்குது...

சுஹாசினி சொன்னது தப்புன்னு.... எந்த பொண்ணாச்சும் வந்து...

சொல்லணுமே..யாழ்ல!

அப்போதானே... சூர்யாவுக்கு ஜோடியா பறவைமுனியம்மாவ போட்டா,,,

அது எவ்ளோ தப்புன்னு நாம புரிஞ்சுக்கலாம்! :)

ஆஹா 'Eas சகோதரம்... நீங்களுமா?

எப்போ ஆவது கருத்து எழுதுறீங்க,,, எதிர்த்து நான்,,, ஏதாச்சும் சொன்னா...

வாய் காட்டுறாரு அறிவிலி என்னு சொல்லுவீங்களா?

உங்கள நான் அப்படி சொல்வேனா சகோதரம்? :lol:

வயதான கதாநாயகர்கள் வேணுமின்னு நான் கேட்கல.

அவங்க சொல்லவந்த முறை சரியில்லை.

அவங்க அழகுன்னு சொன்னவங்க எல்லாம் வெள்ளையா இருக்கிறதால வந்த பிரச்சனை.

அழகுக்கும் வெள்ளைக்கும் முடிச்சுப்போடுவது சரிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிழலி கூறியதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. சுகாசினி சார்ந்த சமூகமும் பத்திரிக்கைகள் அடங்கலாக மீடியாக்கள் கலைஞர்கள் அனைவருமே தமிழர் விரோதப் போக்கினைக் கடைப்பிடிப்பவர்கள். இவரின் சிறிய தகப்பன் கமலகாசன் மவுன ராகம், குருதிப்புணல் போன்ற படங்களின் மூலம் தான் எவ்வாறு தமிழருக்கு விரோதமானவர் என்பதைக் காட்டியுள்ளார். இவரது கணவர் மணிரத்தினம் ரோஜா மும்பாய் போன்ற படங்களினூடாக தனது தீவிர இந்திய தேசியவாத விசுவாசத்தை முன்னிறுத்தியிருக்கிறார். சுகாசினி கூட பலமுறை தமிழக மக்களை தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். குஷ்பு விடயத்தில் இவர் எடுத்துக்கொண்ட போக்கு இவரை சிலகாலம் தலைமறைவாக இருக்கும்படி ஆக்கியது. இப்போது மீண்டும் முருக்கை மரம் ஏறியிருக்கிறார்.

அவர் சொல்லும் கதாநாயகர்களைப் பாருங்கள், அஜித், எம்.ஜி.ஆர், அரவிந்தசாமி....இவர்களுள் எவர் தமிழர். எம்.ஜி ஆரை விடுங்கள். அவர் வித்தியாசம், ஆனால் தமிழின விரோதப் போக்குடைய அஜித் போன்றவர்களை இவர் தூக்கிப் பிடிப்பதேன்??

இவர் அழகான நடிகர்கள் என்று கூறுவதன் அர்த்தம் வெள்ளைத்தோல் என்பதுதானே?? தமிழனுக்கு ஏது வெள்ளைத்தோல்?? தமிழர் எப்போதுமே கறுப்புத்தான். தமிழகத்திலுள்ள பிராமணர்களுக்கு மட்டுமே வெள்ளைத்தோல்.

எத்தனையோ தரமான தமிழ் நடிகர்கள் இருக்கிறார்களே?? அது இவரின் கண்ணுக்குத் தெரியவில்லையா???

அண்மையில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வந்த கருத்துக்கணிப்பொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இப்போது தமிழகத்து ரசிகர்கள் சாதாரணமான, நாளாந்த வாழ்க்கையில் தாம் காணும் கதாப் பாத்திரங்கள் போன்ற நடிகர்களையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதிக பணம் செல்வழித்து மும்பய் இறக்குமதிகள், ஆந்திர, கேரள இறக்குமதிகளை விட தமிழகத்து நடிகர் நடிகைகள் நடித்த குறைந்த் பட்ஜெட் படங்கள் நன்றாக ஓடுகின்றன.

இன்னும் ராம ராவண சிக்கலில் வாழ்ந்துவரும் இந்திய பிராமனண இனம் தமிழர்களை இன்னும் இராவணன்களாகப் பார்ப்பதனால்த்தான் இந்தப் பிரச்சினையே.

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுக படுத்திட்டாலும் உங்காளு(மணிரத்தினம்) இருட்டுக்குள்ள தானே படம் எடுப்பார்.. ^_^

:lol: :lol: :lol:

உப்படியே பிராமணனைத் திட்டுவதிலேயே காலம் தள்ளுங்கோ, உறுப்படியா எதுவும் நடக்காது, பிராம்ணனைத் திட்டுடுவது ஈழத் தமிழனின் வங்குரொத்து நிலையையே காட்டுகிறது

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

அந்தப்படத்திலை எனக்கு புடிச்சகட்டம் கமலின்ரை கராட்டி அடி......புரூஸ்லி கமலிட்டை பிச்சைவாங்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

மெளனராகம் கமலின் படமா இல்லையே?...கார்த்திக்,மோகனின் படமல்லவா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது மௌனராகம் இல்லை புன்னகை மன்னன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.